Advertisement

அத்தியாயம் 3

     மிகப்பெரிய தொழில் குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் நிரஞ்சன்., அவர்களது தொழில் சாம்ராஜ்யத்தை அறியாதவர்கள் எவருமில்லை, ஏனெனில் வங்கிகளுக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக லோன் பைனான்ஸ் என்று பலவகைகளில் பண விஷயங்களில் பெயர் பெற்றது அவர்களது குடும்பம்., அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவன். தான் தனியாக தொழில் தொடங்க தந்தையிடம் கேட்கும் போது., அவர் குடும்ப தொழிலை கவனிக்கும்படி வற்புறுத்த., அவன் மறுக்க., இவன் ஆசைப்பட்டது டெக்ஸ்டைல் தொழிலில் பிராண்டட் கம்பெனி ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம்., அவனது கம்பெனியில் கிடைக்காத துணி வகைகளே இல்லை எனலாம் .,என்னும் அளவிற்கு தொடங்க வேண்டும் என்று யோசித்திருந்தான்.,

            பெண்களுக்கான உடை., ஆண்களுக்கான உடை., மற்றும் உள்ளாடைகள் ., குழந்தைகளுக்கான உடைகள்., என அனைத்தும் ஒரே பிராண்டில் கிடைக்கவேண்டும். அப்படிப்பட்ட தொழிலை உருவாக்க வேண்டும் டெக்ஸ்டைல் துறையில் என்று ஆசைப்பட்டான்.

         டிசைனிங் டெக்ஸ்டைல் இரண்டும் சேர்ந்து படித்திருந்தால் தொழில் தொடங்க முனைந்தான்., அவன் தந்தையோ இவனுக்கு பண உதவி செய்ய மறுத்து விட்டார். பண உதவி செய்தால் தானே., அந்த தொழிலை தொடங்குவான் என்ற எண்ணம் அவருக்கு., ஆனால் அவரை மிஞ்சி கண்டிப்பாக தொழில் தொடங்கி விட வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு.,

    படிப்பதெல்லாம் தன் தாயை கெஞ்சி அம்மாவை ஐஸ் வைத்தே துறை சார்ந்த படிப்பை முடித்துக் கொண்டான். அவன் ஆசைப்பட்ட படிப்பை அவன் அம்மாவின் உதவியோடு படித்து முடித்த பின்னர்., குடும்ப தொழில் பார்க்க அவன் தந்தை கூப்பிடும் போது இவன் ஆசைப்பட்ட தொழிலை தான் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இவன் விலகி இருந்தான்.

     அதற்காக மேற்கொண்டு இன்னும் இந்த துறையில் நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு இப்பொழுது இரண்டு வருடங்களாக கல்லூரியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். அதை பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ள உதவும் என்ற எண்ணத்தோடு அதைப் பற்றிய மேற்படிப்புகள் ஏதாவது இருக்கிறதா என்ற எண்ணத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தான்.,

     ஆனால் மேற்கொண்டு படிக்க வேண்டிய அவசியமே இல்லை என்ற  அளவிற்கு அவனுக்கு அத்துறையை சார்ந்து நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருந்தான். அவன் அப்பா வேதாச்சலம் சிறந்த பைனான்சியர் தென்னிந்தியாவில் அவரைத் தெரியாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு அனைத்து துறை சார்ந்தவர்களுக்கும் பணம் உதவி செய்யும் அளவிற்கு வசதி வாய்ந்தவர்.அவன் அம்மா  பெரியநாயகி சிறந்த இல்லத்தரசி மற்றும் சேவை மனப்பான்மை உள்ளவர்., ஒரு தங்கை., ஒரு தம்பி., என இவனுக்கு கீழே இருவர் உண்டு.,

          சொந்தபந்தங்கள் குடும்பம் என்று பெரியவர் வகையில் சொந்தம் இருந்தாலும் அவர்களுக்கென தனி குடும்பமாகவே இருந்தனர். இவன் டெக்ஸ்டைல் பிசினஸ் ஆசைப்படவும், கோயம்புத்தூரில் இருக்கும் பெரியநாயகியின் அண்ணன் அவனை வீட்டோடு மருமகன் ஆக்க ஆசைப்பட்டார். சொத்திற்கு சொத்தும் வரும் வீட்டோடு தொழிலை கவனிக்க ஒரு மருமகனும் ஆயிற்று என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. அது தெரிந்த பின்னர் நிரஞ்சன் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க தொடங்கினான்.

             அந்த விஷயத்தில் அவனுக்கு பிடிக்காத எதையும் செய்யக் கூடாது என்று., அவன் அப்பா இவனுக்கு சார்பாக பேசினார்.ஏனெனில் நாயகியின் அண்ணனை பற்றி நிரஞ்சன்  அப்பாவிற்கு நன்றாக தெரியும் அதனாலேயே அவன் கல்லூரியில் வேலை பார்ப்பதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அவனது உழைப்பு அருமை அவனுக்கு தெரியட்டும் என்ற எண்ணத்தோடு விட்டிருந்தார். அவன் வாங்கும் சம்பளம் அவனுடைய செலவுக்கே பத்தாது என்பது அவரும் அறிந்த விஷயம் தான்., இருந்தும் அதை கண்டுகொள்ளவில்லை அவன் படிக்கும் காலத்திலேயே மாணவர்களுக்கான ஹாஸ்டல் வெளியே இருந்த போதிலும்., அவனுக்கு கார் என்று சகல வசதிகளோடு அங்கு தனியே ஒரு வீட்டை எடுத்துக் கொடுத்திருந்தார் அதில் தான் தன் நண்பர்களோடு தங்கியிருந்தான்.,

     அவனது குடும்பம் இந்த சூழ்நிலையில் இருக்க .,மகிமாவின் குடும்பம் வித்தியாசமான சூழ்நிலை வாய்ந்தது பெரிய கூட்டுக் குடும்பத்தில் இருந்து வந்தவள் மகிமா., அப்பா பெரியப்பா அத்தை தாத்தா பாட்டி என குடும்பத்தில் அனைவரும் இருந்தனர்., அம்மாவின் ஊரும் அருகில் தான் என்பதால் அங்கும் பெரிய குடும்பம்தான்., எனவே இவளுக்கு கட்டுக்கோப்பாக வளர்க்கப்பட்டிருந்தாள். துருதுரு என்று இருந்தாலும் அவள் உடைகளும்., அவளுடைய நடை உடை பாவனைகள் எதுவும் எல்லை மீறாத அளவிற்கு வளர்த்து இருந்தனர்.  அவளுடைய துறுதுறுப்பு., சுறுசுறுப்பு சேட்டை எல்லாம் ஒரு அளவோடு தான் இருக்கும் அளவுக்கு மீறி எதையுமே செய்ய மாட்டாள். அநாகரிகமாக எதிலும் நடந்து கொள்ள மாட்டாள்., ஏனெனில் அப்படிப்பட்ட குடும்பத்தில் தான் அவள் பிறந்திருந்தால் அவளுக்கு அப்பாவின் தங்கை மகனை முடிக்க வேண்டும் என்று பேசி கொண்டிருந்தார்கள். ஆனால் இவளுக்கு அவனை கண்டால் பிடிக்கவே பிடிக்காது அவன் வேலை எதுவும் செய்யாமல் ஊரில் சுற்றிக் கொண்டிருப்பவன்.,

     அவனுடைய அப்பா ஊர் தனக்காரர்., அதுமட்டுமன்றி அவர்களுக்கு இயந்திர உதிரிபாகங்கள் விற்கும் இரண்டு மூன்று கடைகள் இருந்தன.  வெளியே நிறைய நில புலன்களும்., அதைத்தவிர ஆங்காங்கு வீடுகளும் கடைகளும் கட்டி வாடகை க்கு விட்டு இருப்பதால் அதிலிருந்து வரும் வருமானமே அவர்களுக்கு தேவைக்கு அதிகமாகவே இருந்தது.  அவளுடைய அத்தை வீட்டில்…

    அவளுடைய அப்பாவும் பெரியப்பாவும் பொருத்தவரை இருவரும் சேர்ந்து கூட்டாக தொழில் நடத்துபவர்கள். மொத்த சரக்குகளை எடுத்து அதை இங்கு சில்லரை வர்த்தகத்தில் வியாபாரிகளுக்கு விற்று கொண்டிருக்கும் மொத்த வியாபாரிகள் அவர்கள்., அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவள் தான் மகிமா., அவளுக்கு உடன்பிறந்தோர் ஒரு அண்ணன் மட்டும் தான். அவளுடைய பெரியப்பாவிற்கு இரண்டு பெண்களும் ஒரு பையனும் உண்டு., அத்தைக்கு அவன் ஒரு பையன் மட்டும் இருக்கிறான் வேறு பிள்ளைகள் கிடையாது.

      நிரஞ்சன் பார்த்தவுடனே தெரியும் அளவிற்கு வசதியான வீட்டு பையன் என்று தெரியும் அளவிற்கு அவன் உயரமும் அதற்கேற்ற உடல் வாகு நிறமும் அவனை எப்பொழுதும் அனைவரிடத்திலும் தனித்து காட்டும்., ஆனால் அவனோ.,  மகிமா அவள் தோழியிடம் சொன்னது போல அவன் சாமியார் போல தான் இருப்பான். ஏனெனில் அவன் வசதியைப் பார்த்து கல்லூரியில் படிக்கும் போதும் சரி., பள்ளியிலும் சரி., அவர்கள் சொந்ததிலும் சரி பெண்கள் அவனிடம் வலியவந்து பேசுவதும், சிரிப்பதும் அவனிடம் வித்தியாசமாக பழகுவதையும் அவன் உணர்ந்திருந்ததால் அனைவரிடமும் எப்பொழுதும் தள்ளி தான் இருப்பான். அதைத்தான் இப்போதும் கடைப்பிடித்து கொண்டிருக்கிறான்.

    ஏனோ அவனுக்கு அது போல பழகும் பெண்களும் பிடிப்பதில்லை, அது போல மார்டன் என்ற பெயரில் வித்தியாசமாக உடை அணிவதையும் அவன் விரும்புவதில்லை, அவனுடைய எதிர்பார்ப்பு குடும்பப்பாங்கான குத்து விளக்கு போன்ற பெண் என்ற நினைப்பில் தான் இருப்பான். நண்பர்களும் வீட்டில் உள்ளவர்களும் கூட சொல்வார்கள் எப்படி இப்படி இருக்க என்று கேட்பார்கள். ஏனெனில் வசதியான வீட்டில் பிறக்கும் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்., இப்பொழுதெல்லாம் என்று அறிந்து அவனை ஒரு வித்தியாசமாக தான் நினைப்பார்கள். ஆனால் அவனுடைய நினைப்பு என்னவென்று அவன் தந்தையும் தாயும் அறிவார்கள்., ஏனெனில் அவனைப் பொருத்தவரை இப்போதெல்லாம் நிறைய நடைபெறும் விஷயங்களே அவனை இவ்வாறு சிந்திக்க தூண்டியது., அதை ஒருமுறை அவன் வீட்டிலும் சொல்லி இருக்கிறான், அவன் தங்கையை கூட உடை விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடாக தான் வைத்திருப்பான்.

  மகிமா கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்ததற்கு ஏற்ப அடக்கத்துடன் அழகு பதுமையாக தான் இருந்தாள். அவள் அப்பாவின் பாட்டியைப் போல., அப்பாவைப் பெற்ற அம்மாவை பெற்ற பாட்டியைப் போல அழகு.

     அவள் அப்படி ஒரு தனி அழகு அது அனைவருமே சொல்லும் விஷயம், அப்படித்தான் அவளும் இருந்தால் அது போல தோற்றம் உயரத்திற்கேற்ப உடம்பு வாக்கும், நீளமான முடியும் ,அவளை அழகாக எடுத்துக் காட்டும் சந்தனத்தை அரைத்து வைத்தது போன்ற நிறத்தோடு, பெரிய கண்களும் ஆப்பிள் முகம்,உதட்டுச்சாயம் எதுவும் இல்லாமலே சிவந்த உதடுகள் ,அழகு நிலையம் சென்று புருவம் திருத்த வேண்டிய அவசியமே இல்லாமல் திருத்தமான புருவதோடு அழகு தேவதையாகவே இருந்தாள் . அவளுக்கு மாடர்ன் உடை வீட்டில் போட அனுமதி கிடையாது. வெளியில் வந்து படிக்க வந்திருப்பதால் ஜீன்ஸ் குர்தி என்ற அளவிலேயே இருக்கும். டி-ஷர்ட் போட அனுமதி கிடையாது. அவள் அண்ணன் அதற்கு சம்மதிக்கக் கூடாது என்று வீட்டில் சொல்லிவிட்டான். மற்றபடி கலாச்சாரத்தை மாற்றாத அளவிற்கு பார்ப்பவர்கள் கண்ணை உறுத்தாத அளவில் உடைகள் அவளுக்கு வாங்கிக் கொடுத்திருந்தார்கள்., எவ்வளவு தான் துறு துறுப்பான பெண்ணாக., இருந்தாலும் கலாச்சாரம் என்று வரும் போது அவளுடைய உடை விஷயத்தில் வீட்டினர் பேச்சை என்றுமே மீறியதில்லை..

     நான்காம் வருட தொடக்கத்தில் இருக்கும் போது அவர்களுக்கான டிரஸ் டிசைனிங் காம்பெடிஷன் ஒன்று நடந்தது. அப்பொழுது அவர்களுக்கு முதல் நாள் வரைய மட்டுமே அனுமதி, அதை வரைந்து யாரிடமும் காட்டாமல் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு எப்படிப்பட்ட துணி வேண்டும் என்று அவர்களே தேர்வு செய்ய வேண்டும். அப்படி தேர்வு செய்து அதை எடுத்து அவர்களே அப்படிப்பட்ட டிசைனில் தைத்து கொடுக்க வேண்டும். கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு இப் போட்டி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு அவர்களுடைய உடை அவர்களது பெயர் வகுப்பு ஆகியவற்றோடு கல்லூரியில் உள்ள டிசைனிங் விழாவில் காட்சிக்கு வைக்கப்படும். அதுமட்டுமல்ல அதிலுள்ள மிகச்சிறந்த உடைகளை தேர்ந்தெடுத்து காட்சிக்கு வைக்கப்படும். அவர்களுடைய உடையை காண வெளியிலுள்ள மாடலிங் கம்பெனி டிரஸ் டிசைனிங் கம்பெனியில் இருந்து ஆட்கள் வருவார்கள் என்று சொல்லியிருந்தனர்.

     எனவே அதற்குரிய ஏற்பாடுகளில் மாணவ-மாணவிகள் அனைவரும் தயாராக இருந்தனர். பத்து நாள்களுக்குள் அவர்களால் முடிந்த அளவு டிரஸ் டிசைனிங் தரவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். ஒரு உடை என்று இல்லை அவர்களால் முடியும் என்றால் பெண்களுக்கான உடை , ஆண்களுக்கான உடை, குழந்தைகளுக்கான உடை, என்று எத்தனை முடியுமோ அத்தனை வடிவமைக்கலாம்., அவர்கள் வரைந்து முடித்த உடைகளை தைத்து பார்வைக்கு வைக்கலாம் என்று தெரிவித்திருந்தால், பத்து நாட்களும் ஒருவருக்கொருவர் படங்களையோ இல்லை தேர்ந்தெடுக்கும் துணிகளையும் பற்றி வெளியில் சொல்லக்கூடாது. கடைசி நாள் பார்க்கும் போதுதான் தெரியும் என்ற அளவில் அவர்களுக்காக பிரித்து கொடுக்கப்பட்டிருந்தது..

   எனவே அந்த வேலை மும்முரத்தில் மகிமா மிக உற்சாகமாக இருந்தாள்., ஏனெனில் அவளுக்கு வரைவது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று அதுவும் விதவிதமாக வரைந்து பார்ப்பது மிகவும் பிடிக்கும். அதற்கேற்றார்போல நகைகள் வரைவதும் அவளுக்கு பிடிக்கும் எனவே அதையும் தயார் செய்து கொண்டிருந்தாள். வரையப்பட்ட வரைபடங்களையும் அந்த உடைகளோடு அருகில் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள், எனவே அதற்கான படங்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் போட்டியில் உள்ள மாணவ-மாணவிகளிடம் தெரிவித்திருந்தனர்.

  போட்டியில் கலந்து கொள்ளாத மாணவர் மாணவிகள் மற்றவர்களுக்கு உதவி செய்யலாம்., ஆனால் அப்படி உதவி செய்யும் நிலையில் யாருமே இல்லை., ஏனெனில் அவர்கள் வகுப்பில் உள்ள அத்தனை பேருமே கலந்து கொள்ள முடிவு செய்திருந்தனர் ,  இதில் வந்து இறுதி தகுதியை பெறும் நபரை தேர்ந்தெடுக்கும் நிறுவனம் பெரிய நிறுவனங்களில் இருந்து வருவதால்., தங்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து இருந்தாலும் இதில் அவர்களுக்கான பெயரும் புகழும் கிடைக்கும் என்ற எண்ணம் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இருந்தது.

      தங்களுக்கான திறமை இப்பொழுது தான் வெளியே வரப் போகிறது.,  என்ற எண்ணத்தோடு மும்மரமாக செய்தனர்.  இவர்களுடைய ஜூனியர் மாணவர்களை உதவிக்கு அழைத்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருந்தனர். மற்றவர்கள் உதவிக்கு அழைத்தால் இவள் யாரையும் அழைக்கவில்லை ஜூனியர் மாணவி ஒருத்தியிடம் தையல் பகுதிக்கு போகும்போது மட்டும் உன் உதவியை கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்லியிருந்தால்., அந்த பெண்ணும் சரி என்று சொல்லி இருந்ததால் அதற்கு மேல் எதுவும் செய்யவில்லை., எப்பொழுதும் அவளுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து தேவையானவற்றை செய்து கொண்டே இருப்பாள்.

       அன்றும் அப்படித்தான் உடைகளோடு வைக்க வேண்டிய படத்தை ஷாட்டில் வரைந்து கொண்டிருக்கும்போது அவ்வழியே கடந்து சென்ற நிரஞ்சன் கண்ணில் அந்த டிசைன் பட்டது .,அவள் வரைந்து இருந்ததையே ஒரு நிமிடம் அவளுக்குப் பின் நின்று பார்த்து ரசித்து விட்டு சென்றான். ஏனெனில் அந்த அளவுக்கு அந்த உடை பார்த்த உடனே கண்ணை கவரும் வண்ணம் அமைந்திருந்தது.,மார்டன் என்று சொன்னாலும் அதில் ஒரு சின்ன தப்பான பார்வை கூட பார்க்க முடியாத அளவிற்கு மிக அழகாக இருந்தது அந்த உடை..

   பார்ப்பதற்கு கிறிஸ்தவ மதத்தில் திருமண பெண்கள் போடும் முழுநீள உடை போல இருந்தாலும்., அதிலும் சற்று வித்தியாசமாக கை பகுதிகளிலும் இடுப்பிலும் பூக்கள் பெரிய பெரிய அளவில் வருமளவிற்கு வைத்து வரைந்திருந்தாள். அதுபோலவே கழுத்தில் பூக்கள் கொண்ட ஆன்ட்டி ஜூவல்லரி ஒன்றையும் வரைந்து வைத்திருந்தாள். அது இன்னும் அழகாக இருந்தது அதுபோலவே உருவ பொம்மைக்கு காதிலும் அதுபோலவே வரைந்திருந்தாள்.

     போட்டி முடிய இன்னும் 4 நாட்கள் இருந்த நிலையில் நிதானமாக உடைக்கான துணிகளை தேர்ந்தெடுக்க தொடங்கியிருந்தாள். அதே வண்ணத்தில் குழந்தைக்கான உடையும் தயார் செய்திருந்தாள்., இரண்டு உடையும் பார்க்கும்போது அம்மாவும் மகளும் போட்டிருப்பது போல இருக்கும்., அவர்களுக்கு என கொடுக்கப்பட்ட பொம்மையில் அந்த உடையை போட்டு தயார் செய்து வைக்கவேண்டும் என்று சொல்லியிருந்ததால்., இவளால் ஒரு குழந்தைக்கான உடையும்., ஒரு பெரிய பெண்ணுக்கான உடையும் மட்டுமே தயார் செய்ய முடிந்திருந்தது. எனவே அதை மட்டும் தயார் செய்து தைத்து பொம்மைக்கு போட்டதோடு அல்லாமல் அதுபோன்ற அணிமணிகள் செய்ய முடியாத சூழலில்., தெர்மாகோலில் நகைசெய்து அது போன்ற டிசைனில் நகை செய்தால் எப்படி இருக்குமோ அப்படி செய்து அவர்கள் கொடுத்த உருவ பொம்மைக்கு அணிவித்து இருந்தால் அது இன்னும் பார்ப்பதற்கு அழகாக இருந்தது., அது அவளுக்காக கொடுத்து இருந்த அறையில் வைத்து பூட்டி வைத்திருந்தால், மறுநாள் காலை நேரம் பார்வைக்கு வைக்க வேண்டும் அப்பொழுதுதான் மாணவ மாணவியருக்கு என கொடுக்கப்பட்ட இடத்தில் அவருக்கான  கொடுக்கப்பட்ட உருவ பொம்மையில் அவர்கள் தைத்த உடையை அணிவித்து பார்வைக்கு வைக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள்..

     அந்தந்த இடங்களில் அவர்களுக்கான பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது அதை செய்து முடித்து தனது செல்போனில் புகைப்படம் எடுத்து பார்க்கும் போது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உணர்ந்தாள்., அவளுடன் உதவி செய்த ஜூனியர் பெண் அக்கா ரொம்ப அழகா இருக்கு., கண்டிப்பா இந்த தடவை நீங்க தான் வின் பண்றீங்க என்று சொன்னாள்., அப்பொழுது அவள் சொன்னாள் நான் இதை வின் பண்றதுக்காக செய்யல என்னாலயும் செய்ய முடியும்., அதற்காக செஞ்சி காமிச்சேன் அவ்வளவுதான். எனக்கான வேலையில நான் சேரனும் அதுக்கு என்ன பண்ண முடியுமா அது தான் இப்ப பாக்கணும் கடைசி வருஷம் வந்தாச்சு., இன்னும் படிக்கணும் எனக்கு இந்த ஒரு தடவை தான் இந்த மாதிரி காம்பெடிஷன் எல்லாம்., இதுக்கு அப்புறம் இந்த மாதிரி காம்பெடிஷன் நான் சேர மாட்டேன் என்று சொல்லி இருந்தாள்.

   அது போலவே மறுநாள் பார்வைக்கு வைக்கும் போது அனைவருமே ஒரு நிமிடம் அவளது தயாரிப்பில் உருவான உடையை ஆர்வமாக பார்த்துவிட்டு சென்றனர். நிரஞ்சனோ வந்து வாய்விட்டு பாராட்டிவிட்டு சென்றான். அது அத்தனை அழகாக இருந்தது வந்தவர்களும் பார்த்தவுடன் வியந்து போயினர். அந்த உடையை கல்லூரி நிர்வாகம் எடுத்துக்கொண்டது கல்லூரியில் பார்வைக்கு வைக்கும் பொருட்டு யாரும் எதிர்பார்க்காத வண்ணம் முதல் பரிசு இவளுக்கே கிடைத்தது., ஏனெனில் அனைவரும் விதவிதமாக உடை தயாரித்து இருந்தாலும் சிலரின் உடை பொம்மைக்கு போட்டிருக்கும்போது கண் கூசச் செய்யும் அளவில் இருந்தது. எனவே அதையெல்லாம் தேர்வாளர்கள் மாடனுக்கு தகுந்தது தான்., ஆனால் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இது போல உடையை யோசிப்பதே பெரிது என்று சொல்லிவிட்டு இவளுடைய உடை மற்றும் அதே நேரத்தில் கண் கூச செய்யுமளவுக்கு இல்லாமல் கண்ணைப் பறிக்கும் அழகில் இருப்பதால் முதல் பரிசு பெறுகிறது, என்று சொல்லி சென்றனர். அதில் வகுப்புத் தோழர் தோழிகள் அனைவருக்கும் சந்தோஷப்பட்டாலும், அவளை பிடிக்காத இரு பெண்களுக்கு மட்டும் மனதிற்குள் கடுப்பு ஏறிக்கொண்டே இருந்தது.

      இந்நிலையில் அவளும் எப்பொழுதும் போல வகுப்பில் போட்டி சண்டை என்று அனைத்து பிரச்சினைகளோடு நாலாவது வருட முடிவை நெருங்கி விட்டனர்.., இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் வகுப்பில் மாணவ மாணவிகள் அனைவரும் சேர்ந்து சுற்றுலா செல்லலாம் என்ற முடிவோடு., கல்லூரி நிர்வாகத்தினர் பேராசிரியர்கள் மாணவ மாணவிகளை அழைத்துக் கொண்டு சென்று வருமாறு கூறிக் கொண்டிருந்தனர்.

Advertisement