Advertisement

அத்தியாயம் 2

          காலையில் வழக்கம் போல் அவள் கல்லூரிக்கு ஹாஸ்டலில் இருந்து வந்து வகுப்பில் அமர்ந்து சற்று நேரத்திற்கெல்லாம் அவளை பிரின்ஸிபல் அழைப்பதாக சொல்லவும்.,  வகுப்பில் அனைவரும் நிரஞ்சன் சார் கம்ப்ளைன்ட் பண்ணியிபாரு என்று பேசிக் கொண்டிருக்கும் போதே., அவளை பிடிக்காத இருவர் மட்டும் சிரித்துக்கொண்டனர்.

       அவள் அருகில் அமரும் தோழியோ., பயந்து போய் “தைரியமா பேசு என்ன சொன்னாலும் யோசிச்சு பதில் சொல்லு, வழக்கம் போல டக்குனு பேசாத” என்று சொன்னாள்.

      இவளோ “தைரியமா இரு  எதுக்கு பயப்படனும்., பேசாமல் இரு நான் பாத்துக்குறேன்., பாவம் டி சிசி நேற்று தூங்கி இருக்க மாட்டாரு.., இவளை எப்படி மாட்டி வைக்கலாம் ன்னு  யோசிச்சுட்டே இருந்துருப்பாரு.,  இன்னைக்கு நிம்மதியா தூங்குவாரு., விடு போய் திட்டு வாங்கிட்டு வரேன்”  என்று சொல்லிவிட்டு சாதாரணமாக போனாள்.

        தோழியோ வாசல் வரை கூட வந்தவள்., “ஏண்டி உனக்கு கொஞ்சம் கூட பயமே இல்லையா., திட்ட போறாங்க, திட்டு வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு போற”.,

       “பிரின்சி பற்றி நமக்கு தெரியாதா., எது சொன்னாலும் தலையை தலையை ஆட்டி விட்டு ஓகே சார்., ஓகே சார்., நான் அப்படியே இருப்பேன் அப்படின்னு சொல்லிட்டா ஓகே சொல்லிட போறாரு.., என்ன இந்த சிசி பக்கத்திலேயே இருந்து ஏதும் போட்டு கொடுத்தா தான் பிரச்சனை பெருசாகும்., உள்ள அது வேற உட்கார்ந்திருக்கும் சரி.,  நான் போயிட்டு வரேன் நீ எதுக்கு.,  அங்க பின்னாடியே வர்ற., கிளாசுக்கு போ”., என்று அவளை விரட்டி விட்டு இவள் மட்டும் பிரின்சி ரூமுக்கு வாசலில் சென்று நல்ல பிள்ளையாக கதவை தட்டி பெர்மிஷன் கேட்டுக் கொண்டு உள்ளே சென்றாள்..,

    அறையின்  உள்ளே சிசி இவளை முறைத்தபடி பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவள்., பொதுப்படையாக குட்மார்னிங் சார் என்று மட்டும் சொல்லிவிட்டு., கூப்பிட்டிங்களா சார் என்று மட்டும் சொன்னாள்.  முகத்தில் துளிகூட பயத்தை காட்டவில்லை மனதிற்குள் சின்ன பயம் இருக்கத்தான் செய்தது. பக்கத்திலேயே இருக்காறே மனுசன் என்ன எல்லாம் போட்டு கொடுக்க போறாரோ தெரியலையே.,

         அய்யயோ அவர் பார்வையில் கண்டு பிடிக்க முடிய மாட்டேங்குது என்று மனதிற்குள் யோசித்துக்கொண்டே நின்றுகொண்டாள். நிரஞ்சன் பார்வை அவளை துளைப்பது போல உணர்ந்தாலும் கண்டுகொள்ளாதது போல பிரின்சிபலை மட்டும் பார்த்து நின்றாள்.

   அவரோ “மகிமா நீ நல்ல ஸ்டுடென்ட் ன்னு  நினைச்சேன்., நல்ல படிப்ப ன்னு சொன்னாங்க., அதான் டிரஸ் டிசைனிங் எல்லாம் நல்லாயிருக்கும் ன்னு சொல்றாங்க.., ஆனா நீ நிரஞ்சன் கிளாஸ் கட் அடிச்சிட்டு வெளியே போறியா மே.., கிளாஸில் தினமும் பனிஷ்மென்ட் வாங்குறயாமே,  அப்படி எல்லாம் இருக்கக் கூடாது. எல்லாரையும் ஒன்று போல் ரெஸ்பக்ட் கொடுக்கனும்.,  நீ ஏதோ மரியாதை குறைவாக நடந்து கிற மாதிரி பேசுறாங்க.., வாட் ஸ் யூவர் பிராப்ளம் மகிமா”..? என்று கேட்கவும்

      மனதிற்குள் ஓ ஓஹோ இந்த மனுஷன் கதையே திருப்பிட்டாரே என்ன செய்ய முடியும்..,      “சார்.., நான் கரெக்டா தான் சார் இருப்பேன்,  ஆனால் எனக்கு சில சமயம் சார் நடத்துவது சரியா புரியாது., அதனால தான் அவங்க கேள்வி கேட்கும் போது என்னால பதில் சொல்ல முடியல.., சார் வேற எழுப்பிவிட்டு கேள்வி கேப்பாங்களா சில சமயம் பயத்தில் சொல்ல வராது என்று சொன்னாலும்., அவங்க திருப்பி அதிலிருந்து கொஞ்சம் கேட்கும்போது எனக்கு பதில் சொல்ல வர மாட்டேங்குது சார்” என்று நல்ல பிள்ளையாக பவ்யமாக பதில் சொல்லவும்..,

    நிரஞ்சனோ “அடிப்பாவி என்னமா நடிக்கிறா” என்று நினைத்துக்கொண்டான்.

      இவளோ போட்டுக் கொடுக்குறீங்க.., வெளியே வாங்க., உங்களுக்கு என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். “நான் மரியாதை கொடுக்காம எல்லாம் இல்ல சார்.., எல்லாரையும் போல தான் சார் நானும் இருக்கிறேன் சார்., சில சமயம் பனிஷ்மென்ட் கொடுத்து வெளியே அனுப்பி இருக்காங்க  சார்”..,

       “கொடுக்கிற ஒர்க் செய்யலைன்னா எப்படியும் பனிஷ்மென்ட் கிடைக்கும் சொல்றது தான்.., சரி நேத்து எங்க போன மகிமா  இவர் கிளாஸ் இருந்த ஹவர் ல.., நீ கிளாஸ் ல  இல்ல ன்னு சொல்லி கம்ப்ளைன்ட் வந்து இருக்கு.., சரி மத்த நாளெல்லாம் விடு., உனக்கு புரியல அவர் கொஸ்சன் கேட்டாரு பனிஷ்மெண்ட் வந்துருச்சு எல்லாம் சரி ஓகே விடு.., நேத்து எங்க போன ஒன் ஹவர் கிளாஸ் இருக்கும் போது எங்க போன” என்று கேட்கவும்..,

     “எனக்கு உடம்பு சரியில்லை சார்., நான் வந்து ஹாஸ்டல் போக பெர்மிஷன் கேட்டு., டிபார்ட்மெண்ட்ல சொல்லிட்டு போனேன்”., என்று சொல்லவும்

          “உங்க டிபார்ட்மெண்ட்  நான் கேட்டேன்”…

   ‘அய்யோ என்ன சொன்னாருன்னு தெரியலையே’…  மனசுக்குள்ள நினைத்துக் கொண்டு இருந்தாள்.

   “இனிமேல் இந்த மாதிரி உன் மேல எந்த கம்பளைண்ட் ம் வரக்கூடாது.., நீ நல்ல ஸ்டுடென்ட் நினைச்சேன்., ஆனா நீ இப்படி சேட்ட பண்ற ஸ்டூடண்ட் ஆ இருக்க..,  நீ ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல வாலு தனம்  பண்றதுக்கு.., அதனால உன் சேட்டை எல்லாம் குறைச்சுட்டு படிப்பில் கொஞ்சம் கான்சன்ரேட் பண்ணு.., எல்லா சப்ஜெக்ட்லயும் நல்ல மார்க் வாங்குற நீ நிரஞ்சன் சப்ஜெக்ட்ல மட்டும் மார்க்கு கம்மியா வாங்குற யாமே ஏன் படிப்பில கன்சன்ட்ரேஷன் இல்லைனு அர்த்தமா.., இல்லை வேணும்னே படிக்காமல் இருக்கிறாயா” என்று கேட்கவும்..,

      “நோ சார் இந்த தடவை கண்டிப்பா நல்ல மார்க் வாங்குவேன் சார்” என்று சொன்னாள்.

    “இந்த முறை மார்க் குறைந்தா.., அப்பவும் உங்க கிட்ட தான் கம்பளைன்ட் வரும் சார்” என்று நிரஞ்சன் சொல்லவும்..

     “அதுக்கு நீங்க தான் மார்க் போடனும்” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்..

   அதன் பிறகும் சில பல அறிவுரைகளை பிரின்ஸ்யிடம் வாங்கிக்கொண்டே அதன்பிறகு பெர்மிஷன் வாங்கி வெளியே வந்தாள்., வந்தவள் நேராக வகுப்பிற்கு சென்று தோழியிடம் “என் காதில் ஏதாவது இரத்தம் வருதா பாருடி.” என்று கேட்கவும்..,

     “எரும மாடு திட்டு வாங்கிட்டு வந்துட்டு காதுல ரத்தம் வருதா பாருங்கிற.,  நான் கேட்கிறன், உனக்கு கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லையா”.., என்று கேட்டாள்

        “அட நீ வேற இங்க ஒரு பேச்சு பேசுற இந்த மனுஷன்., அங்க ஒரு பேச்சு பேசுறாரு இன்னிக்கு எத்தனாவது ஹவர் அவரோடது.,  இன்னைக்கு பாரு என்ன வச்சு கிளாஸ்ல செய்வார்” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

           “உன்னை எத்தனை தடவை வச்சு செஞ்சாலும்., நீ அவரை பதிலுக்கு வச்சு செய்ற இல்ல.., மனுஷன கண்டா இந்த பக்கம் ஓடி போயிரு.,  இல்லாட்டி கிளாஸ்ல எப்படி கொஸ்டின் கேட்டாலும்,  தெரிஞ்சா ஆன்சர் பண்ற, தெரியலனா அப்படி மரம் மாதிரி நிக்கிறே, பின்ன அவரும் அப்படித்தான் கொஸ்டின் கேப்பாரு., கம்ப்ளைன்ட் பண்ணுவாரு”., என்றாள்.

     “அட நீ வேற., அவர் இன்னிக்கி எழுப்பிவிட்டு எத்தனை கொஸ்டின் கேட்க போறாரு ன்னு மட்டும் பாரு”.., என்று சொல்லிக்கொண்டு இருந்தாள்.

   அதுபோல அன்றைய  மற்றைய வகுப்புகள் முடியவும்., மதிய உணவிற்கு பிறகு., முதல் ஹவர் நிரஞ்சன் உடைய வகுப்பாக இருக்க.., அய்யய்யோ சாப்பிட்டு வந்து இருக்கேன்., நல்ல தூக்கம் வரும் இந்த ஆளு வேற எழுப்பி விடுவாரே என்று வருத்தத்தோடு அமர்ந்திருந்தாள். அதுபோலவே வந்தவுடன் வகுப்பை நடத்த தொடங்கிய நிரஞ்சன் சற்று நேரத்திற்கெல்லாம் கேள்வி கேட்க தொடங்கினான். இன்று ஏனோ அனைவரிடமும் கேள்வி கேட்டவன் அவளிடம் மட்டும் எந்த கேள்வியும் கேட்கவில்லை., மனதிற்குள் ரொம்ப சந்தோஷம் நிம்மதியா தூங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.,

       ஆனால் சற்று நேரத்தில் புதுவித டிசைன் பற்றி சொல்லி., அதை வகுப்பின் முன் இருக்கும் ரைடிங் போர்டில் வரைந்து போட சொன்னான் நிரஞ்சன்., மகிமா என்ன செய்வதென்று முழிக்கவும்,

     “அது தான் எப்பவும் வரைந்து கொண்டே இருப்பியே இப்ப வா” என்று சொன்னான்.

“ பேப்பரில் வரைவது  என்றால் தனக்கு எளிதாக இருக்கும் என்றும்., போர்டில் வரைவது சற்று கடினம்” என்று சொல்லும் போது.,

    “ படிக்கிறது பத்தாது டிசைனிங் பேப்பரில் மட்டும் வரைவது போதாது.,  நீ ஒரு இடத்துக்கு வேலைக்கு போனா போர்டில் வரைஞ்சு காமிக்கணும்.,  அப்ப தான் இந்த டிசைனிங் அ வந்து மீட்டிங்ல அக்செப்ட் பண்ணுவாங்க..,  அந்த டிசைனை சும்மா நான் பேப்பரில் மட்டும் தான் வரைவேன் ன்னு சொல்ல முடியாது., கம்பெனி ல பேப்பரை எல்லாத்தையும் காமிச்சிட்டு இருக்க முடியாது”., என்று  சத்தம் போட்டு விட்டு வேண்டும் என்றே குறிப்பிட்ட டிசைனை சொல்லி அதை வரைய சொல்லவும்., திடீர் என்று சொன்னதால் சற்று யோசித்து நிதானமாக வரைந்தால் ஆனாலும் ஒரு வழியாக வரைந்து முடித்தாலும்., அதிலும் சிறு சிறு குறைகளை அவன் கண்டுபிடித்து அதையும் இப்படி செய்ய வேண்டும்., அப்படி செய்ய வேண்டும்., என்று ஒன் ஹவர் கிளாஸில் 20 நிமிடங்களை இவளை குறை சொல்வதற்கும்., திட்டுவதற்கும்., உபயோகப் படுத்திக் கொண்டான். ஆனால் பார்ப்பவர்களுக்கு அவள் செய்த தவறை சுட்டிக்காட்டுவது போல இருந்தாலும்., எப்பொழுதும் இவளிடம் கேள்வி கேட்டு ஒரு வழியாக்கும் அவனைப்பற்றி தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்., இவன் வேண்டுமென்றே அவளை கேள்வி கேட்டு ஒரு வழி ஆக்குகிறான் என்று..

    ஒரு வழியாக அன்றைய வகுப்பு முடிந்து அனைவரும் கிளம்பவும்., இவளும் தோழியோடு ஹாஸ்டலை நோக்கி நடக்கத் தொடங்கும் போது சற்று தள்ளி நிரஞ்சன் தன்னுடைய காரை நோக்கி  போவதை பார்த்தவள்., “இப்ப எல்லாம் இவருக்கு என்ன பாவம் பண்ணுனேன்., என்ன போட்டு ஏன் இந்தப் பாடு படுத்துறாரு., என்ன கண்டா மட்டும் ஏன் இப்படி கொஸ்டின் கேட்கிறாரு”., என்று தனியே தோழியிடம் புலம்பிக் கொண்டு வந்தவள்.,

        அவன் காரை எடுத்துக்கொண்டு தங்கள் பின்புறம் பக்கவாட்டில் வருவது தெரியாமல், “வர வர இந்த சிசி தொல்ல தாங்கல டி கிளாஸ்ல” என்று சொல்லிக் கொண்டு இருந்தாள்.,

       அவள் தன்னை தான் சொல்கிறாள் என்று அவனுக்கு புரிந்தாலும் அது என்ன சிசி அதற்கு அர்த்தம் என்னவாக இருக்கும்., என்று யோசித்துக்கொண்டே அவள் அருகில் காரை மெதுவாக கொண்டு செல்வது போல் சென்று “யாரை பத்தி பேசிட்டு போற” என்று கேட்கவும்.,

      “ஒன்னுமே இல்ல, யாரையும் சொல்லல”, என்று சொல்லி விட்டு அவள் வேகமாக செல்வதை பார்க்கும் போதே அவள் கண்ணில் தெரிந்த குறும்பில் அவனுக்கு புரிந்தது. அவள் கண்டிப்பாக தன்னை தான் சொல்லி விட்டு செல்கிறாள், ஏதோ பேர் வைத்து விளையாடுறா என்று மனதிற்குள் நினைத்தாலும் ஏன் தனக்கும் அவளை கண்டால் அப்படி கோபம் வருகிறது., என்று

      தன்னை பற்றி சுய அலசலில் ஈடுபடத் தொடங்கினான். ஆனாலும் அவனுக்கு ஏனோ  ஒரு சேட்டை பிடித்த பிள்ளையை பார்த்தால் அடிக்கத் தோன்றும் வாத்தியாரின் மனநிலையிலேயே அவன் இருந்தான். சிலருக்கு குழந்தைகள் துருதுரு என்று இருந்தால் பிடிக்காது., சிலருக்கு துறுதுறு என்று இருக்கும் குழந்தைகளை மிகவும் பிடிக்கும்., அது இரு வேறுபட்ட மனநிலைகள் உள்ளவர்களை போலதான் அவனும், அவனுக்கு இவளுடைய துறுதுறுப்பும் குறும்பும் பிடிக்காமல் போனதால் தான் இப்படி ஒரு நிலைமை என்று நினைத்து கொண்டான்.

     ஹாஸ்டலுக்கு சென்ற அவள் எப்போதும் போல மற்ற வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, தன் படிப்பில் கவனத்தை செலுத்த தொடங்கினாள். ஏனெனில் அவளுக்கு எது செய்வதாக இருந்தாலும் திருந்த செய்ய வேண்டும் என்ற எண்ணம்  அதிகமாக உண்டு., அவன் சொன்னது போல இன்று நிறைய மாற்றங்கள் செய்து விதவிதமான உடைகளுக்கான மாடல் படங்களை வரைந்து கொண்டிருந்தாள்.

   மூன்றாவது வருட கடைசியில் தான் அவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ நடக்கும் அதற்கான ஏற்பாடுகளும் கல்லூரியில் நடந்துகொண்டிருந்தது. அதில் இதுபோல டிசைன்களை வரைந்து காமித்து தான் உள்ளே இன்டர்வியூ உள்ளே செல்ல முடியும்., மற்றவர்களுக்கு எழுத்து மூலம் பரிட்சை வைத்து பார்ப்பார்கள் என்றால்., இவர்களுக்கு மட்டும் வரைவதின் மூலமும் அவர்கள் சொல்லும் மாடல் வரைந்து காட்டுவதை கொண்டும் தான் அவர்களுடைய திறமை நிர்ணயிக்கப்படும்…

     அவளுடைய மூன்றாம் வருட படிப்பு இப்படியே தான் சென்றது., எப்பொழுதும்  நிறைந்திருக்கும் வேலை, படிப்பு ப்ராஜெக்ட் என்று., அவளுக்கும் எப்பொழுதும் ப்ஸியாக ஒடிக் கொண்டிருப்பது போலவே உணர முடிந்தது.  அடிக்கடி திட்டு .,மார்க் விஷயம் என்று அவனுடைய பாடத்தில் மட்டும் இவளுக்கு எப்பொழுதும் பிரச்சினை தான்.

     மூன்றாம் வருட இறுதியில் மும்பையில் புகழ்பெற்ற கம்பெனியில் இவளுடைய உடைகளின் மாடல்கள் பிடித்திருப்பதாக சொல்லி தேர்வு செய்யப்பட்டால் வேலைக்கு., அது புகழ்பெற்ற மாடல் கம்பெனி நான்காம் வருட படிப்பு முடிந்த பிறகு அவர்களுடைய மார்க் மற்றும் அவர்களுடைய திறமை மறுபடியும் பரிசோதிக்கப்பட்டு., மீண்டுமொரு பரீட்சையின் மூலமே தேர்வு செய்யப்படுவார்கள்., என்றும் சொல்லிவிட்டு சென்றனர். ஆனால் இவள் இப்பொழுது உள்ள தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், பின்பு இன்னொரு முறை இதுபோல இன்னொரு தேர்வை இந்திய அளவில் பங்கேற்று அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தங்கள் கம்பெனிக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்று அப்பெரிய கம்பெனி சொல்லிவிட்டு சென்றது.

    மும்பையில் மாடல் அழகிகளுக்கும்., சினிமா நட்சத்திரங்களுக்கும், உடைகள்  உருவாக்கும் பெரிய கம்பெனி தான் அது., அங்கு நட்சத்திரங்களுக்கான உடைகளை தயார் செய்யும் நிறுவனமாக அது இருந்தது.  எனவே அத்துறையில் உடைகளின் அமைப்புகளின் தோற்றத்தில் நல்ல முறையில் கொண்டு வரவேண்டியது அங்கு உடை அமைப்பாளராக இருப்பவரின் கடமை ஆகிறது.

    இப்பொழுது கல்லூரி வாரியாக கல்லூரியிலிருந்து தேர்வு செய்யப்பட்டிருந்தால்., வேறு யாரும் அந்த கம்பெனிக்கு தேர்வாகவில்லை. அவள் மட்டுமே தேர்வாகி இருந்தாள்.  ஆனால் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து விட்டால்., அவர்களுடைய பெயர் மற்றும் அவர்களுடைய உடை அமைக்கும் திறன் அனைத்தும் வெளிஉலகிற்கு தெரிவது மட்டுமல்லாமல்., அவர்களுடைய வருமானமும் அதிகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமே..

     அக்கல்லூரியில் இருந்து அவள் மட்டுமே தேர்வு ஆகி இருந்ததால் கல்லூரியில் பார்க்கும் அனைவரும் அவளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நிரஞ்சன் வகுப்பில் வைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தான்., “இன்னொரு முறை பரீட்சை இருக்கிறது., இதில் தேர்வானது முக்கியமல்ல அதிலும் முயற்சி செய்ய வேண்டும்., உன் விளையாட்டு தனங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு படிப்பில் கவனத்தை செலுத்து” என்று அப்போதும் அறிவுரை சொன்னதோடு மட்டுமல்லாமல் அவளுக்கு எப்பொழுதும் போல கேள்விக் கணைகளைத் தொடுக்க தொடங்கினான். துணிகளை தேர்வு செய்யும் முறைகளையும் எந்த துணியில் எது போல உடை அமைக்க வேண்டும்.,  என்ற முறைகளையும் பற்றி திரும்பவும் கேள்வி கேட்க மகிமா தன் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்…..

Advertisement