Advertisement

அத்தியாயம் 13

        சென்னைக்கு சென்ற பிறகு திருமண வேலைகள் வேக வேகமாக நடந்தது.., சென்னைக்கு வந்து இருபதாவது நாளில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது…

    அவன் மும்பையிலிருந்து வரும் முன்னரே திருமணத்திற்கான தேதியை வேதாச்சலம் குறித்து விட்டார்.., அப்படி அவர் கூறும் போது நாயகி அதில் விருப்பமின்மை தெரிவிக்கும் போது நிரஞ்சன்  சகோதரியும் சகோதரனும் அவர்கள் அம்மாவிடம் சண்டைக்கு சென்றனர்.., எப்படி நீங்க அண்ணனுக்கு பிடித்த பொண்ண கல்யாணம் பண்ண சம்மதிக்காம இருக்கீங்க… அண்ணன்  இத்தனை நாளா கல்யாணம் ன்னு ஒரு விஷயத்தைப் பற்றி யோசிக்காமல் போயிருச்சு.., இப்பவும் அண்ணனுக்கு 31 வயசு ஆயிடுச்சு.., இன்னும் நீங்க கல்யாணத்தை பத்தி யோசிக்காம., உங்களுக்கு பிடிச்ச பொண்ணு தான் கல்யாணம் பண்ணனும்  நினைச்சா.., ஆனா கடைசி வரைக்கும் கல்யாணம் பண்ண மாட்டான்., நினைக்காதீங்க.., வீட்டை விட்டு வெளியே போய் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்குவான்.., அதுக்கு நீங்க சம்மதிச்சே கல்யாணம் நடக்கிறது., எவ்வளவோ நல்லது என்று சொல்லவும் வேறு வழியின்றி அவர் அமைதியானார்.

       திருமணம் பத்திரிக்கைகள் அடித்து நேரில் சென்று கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்துவிட்டு., மற்றவர்களுக்கு அலுவலகத்தில் உள்ள ஆட்கள் மூலமாக கொடுத்தனுப்பினர். மற்றவற்றை கொரியரில் அனுப்பி எவ்வளவு வேகமாக ஏற்பாடுகளை செய்ய முடியுமோ அவ்வளவு வேகமாக ஏற்பாடுகள் நடந்தது.., 20 நாளில் கல்யாணமா என்று கேட்டவர்களுக்கு அவர்களே பதில் சொல்லிக் கொண்டிருந்தனர்.., பணம் இருந்தால் 10 நாளில் கூட எல்லா ஏற்பாடும் பண்ணி கல்யாணம் வைக்க முடியும் போல…, என்று சொல்லும் அளவிற்கு மிகப்பிரம்மாண்டமாக திருமண ஏற்பாடுகளை வேதாசலம் செய்து வைத்திருந்தார்..

    மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த பிறகு., அவளை அலுவலகம் அழைத்து சென்று அவளுக்கு என அவன் தயார் செய்து வைத்திருந்த அலுவலக அறையை காட்டினான்..இங்கும் அவள் வேலை செய்ய தான் போகிறாள் என்பதே அவளுக்கு இன்னும் ஒரு திருப்தியாக இருந்தது..

    முதல்நாள் ரிசப்ஷன்., மறுநாள் திருமணம் என்று அனைத்து ஏற்பாடுகளும் வேக வேகமாக நடந்தது..

          மகிமா வின் வீட்டிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது ஆனால் மகிமா வீட்டிலிருந்து யாரும் வரவில்லை என்றவுடன்.., மகியின்  அண்ணன் மட்டும் வந்து சென்றான்.., கல்யாணம் அவ்வளவு சிறப்பாக நடந்ததை பார்த்து அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.., தன் தங்கையின் வாழ்வு சிறந்து விடும் என்று நினைத்தான்.., ஏனெனில் அவள் வாழ்வில் மிகவும் அக்கறை எடுத்து அவளுக்கான வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என்று பிரார்த்தனையோடு இருந்தவன்., அந்த குடும்பத்தில் அவன் மட்டுமே மற்றவர்கள் அவளுக்கான வருடா வருடம் திதி கொடுத்துக் கொண்டிருக்க.., ஆனால் அவன் மட்டும் அவள் வாழ்வு சிறக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தான் அது போல கல்யாணம் சிறப்பாக நடக்க மிகவும் சந்தோஷத்துடன் அவன் ஊர் திரும்பினான்..

      திருமணம் முடிந்து மதியத்திற்குள் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு சரியாக மூன்று மணி அளவில் எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்பு என்று சொல்லவும்..,

    அவன் அப்பாவிடம்., அவன் அம்மா “பார்த்துக்கோங்க.., திருமணம் முடிந்த உடனே தனியா போக போறான்” என்று சொல்லவும்..,

    அவன் அப்பாவிடம் “நான் வெளியே போறேன் பா…, ஒரு வாரத்துல திரும்பி வருவேன்” என்று சொல்லி விட்டு .,

    “கல்யாணமான உடனே வா ஹனிமூன் கிளம்பு வாங்க” என்று சொன்னதற்கு..,

       “கண்டிப்பா., பா  என்று சொல்லிவிட்டு… ஒரு வாரத்தில் வந்துருவேன் நம்புறேன்.., ஒரு வேளை கூட ஒரு வாரம் ஆனாலும் ஆகும்” என்று சொல்லவும்..,

   நிரஞ்சனுடைய அப்பா.., “டேய் வெட்கமே இல்லையா டா…, அப்பாட்ட வந்து சொல்ற” என்றதற்கு

    அவனும் சிரித்துக் கொண்டே “பக்கத்து வீட்டுக்காரன் ட்ட போயா சொல்றேன்.., எங்கப்பா ட்ட நான் சொல்லிட்டு போறேன்” என்று சொல்லி சிரித்தபடி கிளம்பினான்.

     அவளிடம் உனக்கு தேவையான உடைகளை எடுத்துக் கொள் என்று சொல்லி அவள் சேலையை எடுத்து வைக்கவும்… வேண்டாம் என்று சொல்லிவிட்டு சுடிதார் ., ஜீன்ஸ் குர்தி என்று மட்டுமே எடுத்து வைத்தான்.., இரண்டு சேலைகளை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு வாரத்திற்கு தங்கும் அளவிற்கு இருவருக்குமான உடையை சூட்கேசில் அடைத்து கொண்டு கிளம்பினான்..

     சரியாக நாலு மணி அளவில் மைசூர் செல்லும் விமானத்தில் கிளம்பி செல்ல.., ஏன் என்று இவள் கேட்கும்போது வா சொல்றேன் என்று மட்டுமே சொன்னான்.,, அது சென்று சேர்ந்த உடன் அங்கிருந்து மூன்று மணி நேர பயணத்தில் வயநாட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டான்.. சரியாக இரவு 10 மணி அளவில் எல்லாம்.., வயநாட்டில் அவர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரிசார்ட்டில் வந்து சேர்ந்தனர்..

    வந்து சேரும் சேரும் வரை அவன் எதுவும் சொல்லவில்லை.., அவளும் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.,  இருவரும் திருமண அலைச்சல் மற்றும் திருமண விழாவில் நின்று சோர்ந்து போய் இருந்ததால்., விமானத்தில் வரும் போது தவிர மற்றபடி வரும் பயண நேரங்களில் எல்லாம் பாதி நேரம் தூங்கி கழித்ததாள் மகிமா.., ஒரு வழியாக அவர்கள் தங்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்..

     அந்த ரிசார்ட்டில் அவர்களுக்கான காட்டேஜ் புக் செய்யபட்டிருந்தது..,, தனியாக சிறு வீடு போல் இருந்த இடத்தில் அவர்களுடைய உடைமைகளை வைத்து விட்டு.., அதன் பிறகு குளித்து உடை மாற்றி விட்டு.  இரவு உணவை அங்கு உள்ள உணவகத்தில் முடித்துவிட்டு வந்து அமர்ந்தனர்..,

        “ஏன் உடனே  வந்தோம்” என்று கேட்கும் போது…

        அவன் சொன்னது “என் வாழ்வின் தொடக்கம் இங்கிருந்து தான் ஆரமித்தது., எனவே எனக்கு இங்கே தான் என் வாழ்க்கையை தொடங்க வேண்டும்  அதனால்தான் அந்த முடிவோடுதான் திருமணமான அன்றே உன்னை இங்கு அழைத்து வந்தேன்” என்று சொன்னவுடன்

        அதற்கு அவள் “ஏன் நாளைக்கு வந்தா என்ன.., நாளைக்கு வந்து ஸ்டார்ட் பண்ணி ட்டா போச்சு” என்று சொல்லவும்…

      அவன் சொன்ன பதிலோ “நான் ஏற்கனவே சொல்லிட்டேன் இல்ல என்னால சினிமா டயலாக் மாதிரி எல்லாம் அப்படி இப்படின்னு டயலாக் விட எல்லாம் முடியாது.., அதுக்கு அப்புறம் கொஞ்சம் நம்மளோட கண்டிஷன் தளர்த்திக்கலாம் ன்னு எல்லாம் என்னால கேட்க முடியாது…, அதுதான் உடனே உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன்.., என்னோட வாழ்க்கை உன் கூட அப்படின்னு நான் முடிவு பண்ணதும்.., என்னோட வாழ்க்கை உன் கூட தொடங்கிய இதே இடத்தில் இருக்கணும் அப்படிங்கிற அதுக்காக நான் உன்னையும் கூட்டிட்டு வந்தேன்”…,  என்று சொல்லவும் மிகவும் சந்தோஷமாக உணர்ந்தால்..

       அங்கு அவர்களுடைய வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்கியது..,  அவன் கையில் அவனுக்குள் மொத்தமாக அடங்கி போனாள் மகிமா..,  ஐந்து வருட காத்திருப்பில் அவர்களது வாழ்க்கை ஒருவருக்கொருவர் காதல் சொல்லாமல் ஒருவருடைய அன்பை ஒருவர் உணர்ந்து கொண்டு தொடங்கப்பட்ட வாழ்க்கை நிறைவாக உணர்ந்தனர் இருவரும்.., வாழ்க்கையில் யாருக்கு எங்கே யார் துணையாக அமைவார் என்று அறியாத பாதையில்..,  காதல் சொல்லாமலேயே அவர்களுக்கு உண்டான காதல் தெளிவாக விளங்கும் அளவிற்கு  ஒரு வாழ்க்கையை வாழத் தொடங்கினர்..

    அவனுடைய ஐந்து வருட காத்திருப்பை., அந்த அங்கிருந்த ஒரு வாரத்திற்குள் வாழ்ந்து விடத் துணிந்து அவளோடு ஐக்கியமாகி போனான்..,  இடையிடையே கிடைத்த நேரங்களில் வெளியே சுற்றிப் பார்த்தாலும்., அவர்களுடைய வாழ்வு சிறப்பாகவே தொடங்கியது..,  இருவரும் ஒருநாள் ஒதுக்கி..,அதே பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லி அங்கிருக்கும் சுற்றுலா வழிகாட்டி இடம் கேட்டு அம் மலை கிராமத்திற்கு சென்று சேர்ந்தனர்..,

     ஐந்து வருடங்கள் கழித்து மலை கிராம மக்களைப் பார்க்கும்போது அதில் ஒரு சிலருக்கு இவர்களை அடையாளம் தெரிந்து இருந்தது.., இவனும் அதற்குள் மலையாளம் கற்றிருந்தான்., ஓரளவுக்கு அவர்களோடு  பேசினான்., அவளுக்கு ஹிந்தி மட்டும் தான் எக்ஸ்ட்ரா தெரியும் இப்பொழுது…,  அவள் அவன் பேசுவதை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தாள்.., அன்று முழுவதும் அவர்களோடு இருந்துவிட்டு அம் மலை கிராம தேவதையின் இடம் வணங்கி.., முதன்முதலில் இதே இடத்தில் வைத்துதான் இவளை என் மனைவி என்றேன் இப்போது அவளை நிஜமாக என் மனைவி ஆக்கிக் கொண்டு இங்கு வந்திருக்கிறேன்.., என்று கடவுளிடம் நன்றி செலுத்திவிட்டு அவ்விடத்தைவிட்டு கிளம்பி வந்தனர்..

         வரும் வழியில் உங்களை காலேஜ் படிக்கும் போது சாமியாரு.., ன்னு கிண்டல் பண்ணியிருக்கோம்.. என்று சொல்லி அவனுக்கு வைத்த பெயர் பற்றியெல்லாம் சொன்னாள்.., பழைய கதைகள் எல்லாம் பேசிக்கொண்டனர்…,

     மிகவும் அன்னியோன்யமான தம்பதியாக வாழத் தொடங்கினர்…  ஒருவேளை அவர்களுடைய ஐந்து வருட காத்திருப்பின் பயனோ என்னவோ அவர்களுடைய வாழ்க்கையில் புரிதல் நன்கு இருந்தது…,  இருவரும் ஒரே துறையில் சாதிக்க நினைப்பவர்கள் என்பதாலோ என்னவோ அவர்களுடைய தொழிலும் மிகவும் ஏற்றம் உடன் இருந்தது..

     அவனுடைய தங்கை அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்து மூன்று மாதம் அங்கு இருந்துவிட்டு.., அவள் புகுந்த வீட்டிற்கு செல்வதற்குள் மகிமாவுடன் நெருங்கிவிட்டாள்..,

     இப்பொழுதெல்லாம் மகிமா வேதாச்சலத்தை அப்பா என்றே அழைக்கிறாள்., அவரும் சந்தோஷமாக தன் வீட்டு மருமகளை தன் மகளாகவே பார்த்துக் கொண்டார்.., ஆனால் நாயகி மட்டும் அவ்வப்போது முகத்தை திருப்பிக் கொண்டாலும்..,

      இவள் தன் மேல் உயிரையே வைத்து., தன்னை பூ போல தாங்கும் தன் கணவனுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டாள்..,  அவர் முகத்தை திருப்பிக் கொண்டு போனாலும்., இவள் செய்வதை செய்துவிட்டு ஒதுங்கி கொள்வாள்.., நிரஞ்சன் எதற்கெடுத்தாலும் இவளிடம் கேட்டு செய்யும் அளவிற்கு வந்திருந்தான்..

     வேதாச்சலத்தின் உத்தரவின் பேரில் குடும்பம் பிரியாமல் ஒரே குடும்பமாக இருந்தனர்.., திருமணமாகி ஐந்து மாதங்களில் தாயாகப் போகும் செய்தி கிடைத்தது..,  அதன் பிறகு நாயகிக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் சமையல்காரர்களிடம் வாய்க்கு ருசியாக இருக்கும் படி செய்ய சொல்வதில் தவறவில்லை…,

       வேதாச்சலம் அவள் மனநிலை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சொல்லி அவருக்கு தெரியாத தொழிலான டெக்ஸ்டைல் துறையிலும் அந்த வயதிலும் தொழிலைக் ஏற்றுக்கொள்ள தயாரானார்..,  ஏன் என்று கேட்டதற்கு “மகன் தொழில்  என்று அலைந்து கொண்டிருந்தால் மருமகளை ஒழுங்காக கவனிக்க மாட்டான்.., அதனால் நானும் தொழிலை கற்றுக் கொண்டால் நான் சில நேரங்களில் தொழிலை பார்த்துக் கொண்டால்., அவன் அவன் மனைவியோடு நேரம் செலவழிக்க முடியும்” என்று சொன்னார்..,

       “அது எல்லாம் வேண்டாம் பா.., அப்படி என்றால் நான் அவளை இங்கு அழைத்துக் கொள்கிறேன்..,  அவளும் ஆரம்ப கட்ட உடல் நிலை சரியான பிறகு அலுவலகத்திற்கு வரட்டும் அப்படி என்றால் தான் அவளும் அவள் வேலையில் கவனம் செலுத்துவாள்” என்று சொல்லி விட்டான்.., இப்போது மும்பை வேலைகளை பார்க்க முடியாததால் இடையிடையே நிரஞ்சன் போய் பார்த்துக் கொள்வான்.., அப்படி இல்லை என்றால் நிரஞ்சன் தம்பி போய் பார்த்து விட்டு வருவான்.,

    அவனுக்கு இப்போது சில விஷயங்களை இத்தொழிலில் சொல்லிக் கொடுத்திருந்தால் மகிமா..

          மாதங்கள் செல்லச் செல்ல அவள் மனநிலையும் சந்தோஷமாக இருக்கும்படி குடும்பத்தினர் பார்த்துக்கொண்டனர்..,  ஏழாம் மாதம் ஊர் கூட்டி வளைகாப்பு சிறப்பாக செய்தனர்..

     அவனுடைய ஐந்து வருட தவ வாழ்க்கையும்…, இவளுடைய ஐந்து வருட தனிமை வாழ்க்கையும்.., போக்கும் பொருட்டு அவர்களுடைய நெருக்கம் அதிகரித்து இருந்தது.., அவர்களுடைய நெருக்கத்தை அதிகப்படுத்துவதற்கு என அவர்களுடைய வாரிசும் விரைவில் வரப்போகிறது என்ற சந்தோஷமே அவர்களுக்கு மன நிம்மதியும்.., மன மகிழ்ச்சியும் கொடுத்தது..,

     வாழ்விலும் தொழிலிலும் முன்னேற என்றுமே குடும்பம் தடை கிடையாது என்பதை அவர்கள் அனுபவித்தனர்.., குடும்பம் என்பது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதும்.., ஒருவருக்காக ஒருவர் செய்வதிலும்., ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வதிலும் தான் அமைகிறது..

        டாக்டர் சொன்ன தேதிக்கு இரண்டு நாள் முன்பாக நிரஞ்சனின் மகன் பிறந்து வந்தான்.., அப்படியே நிரஞ்சனின் பிரதி பிம்பமாக.,  இருந்த குழந்தையை பார்த்த பிறகு நாயகிக்கும் வேதாசலத்திற்கும் குழந்தையை கீழே விட மனமில்லாமல் கையிலே வைத்துக் கொண்டு இருந்தனர்..,

    அவர்களுக்கு இவனை முதன் முதலில் தூக்கிய ஞாபகம் தான் இப்போது வந்தது.., அதன் பிறகு நாயகியின் நடவடிக்கையில் மாற்றம் இருந்தது., குழந்தையை பசி ஆற்றுவதற்கும் சில சமயங்களில் மட்டுமே மகிமாவிடம் விடுவாள்..,  மூன்று மாதங்கள் வரை மட்டுமே மகிமாவிடம் குழந்தை இருந்தான்.,  அதன் பிறகு பசியாற்றுவதற்கு மட்டுமே அவளிடம் கொண்டுவந்து விடுவாள்.., மற்றபடி எப்போதும் நாயகியின் கையிலும் வேதாசலத்தின் மாரிலும் தான் அவன் தூக்கம் இருக்கும்..,  அல்லது விளையாட்டு இருக்கும்…

        ஒரு விடுமுறை நாள் என்று அனைவரும் வீட்டில் இருக்க நிரஞ்சன்  தங்கையும் அவள் குடும்பத்தோடு வந்திருந்தாள்.,  அவன் மகன் அவன் அம்மாவின் மடியில் விளையாடிக் கொண்டிருந்தவன் சற்று நேரத்திற்கெல்லாம் வேதாசலத்தின் மார்பில் சாய்ந்து விளையாடிக் கொண்டே அவர் தட்டிக் கொடுக்க அவன் தூங்கத் தொடங்கினான்..

    அப்போது தான் நிரஞ்சன் கேட்டுக் கொண்டிருந்தான்.., அப்பா இதெல்லாம் அநியாயம் தெரியுமா..,  என் பிள்ளையே என் கையில கூட தர மாட்டேங்கறீங்க பா.., எப்பவும் நீங்க ரெண்டு பேரும் தான் வச்சிருக்கீங்க.., அவ கிட்ட பிடிங் டைம்ல மட்டும் தான் கொடுக்குறீங்க என்று கேட்கவும்…

     “ஏண்டா உன் பொண்டாட்டி கம்ப்ளைன்ட் பண்ணாளா”.. என்று நாயகி கேட்க…,

      “அப்படிலாம் இல்ல நான் சும்மா தான் கேட்டேன்., அவள் ஒண்ணுமே சொல்லலை” என்று சொல்லவும்.. அம்மாவிற்கும், மகனுக்கும் இடையே இப்பொழுது சற்று சமாதானம் வந்திருந்தது…

    வேதாசலம் தான் சொன்னார்…, “எங்களுக்கு கல்யாணம் ஆகி நான்கு வருஷம் குழந்தை இல்லாமல் நாலு வருஷம் கழிச்சுத்தான்., நீ பொறந்த நீ பிறக்கும் போது எங்க கையிலே எப்படி உன்னை கொடுத்தார்களோ.., நீ எப்படி இருந்தியோ.., அப்படியே இருக்காண்டா., உன் பையன் அப்படி இருக்கும் போது எங்களால் எப்படி அவனை கீழே விட மனசு வரும்…,  எங்க ரெண்டு பேருக்கும் உன்ன பொறந்தப்போ தூக்கி வளர்த்த ஞாபகம் தான் வருது.., இப்பவும் எங்க ரெண்டு பேருக்கும்  சந்தோஷமா தான்… அப்படி இருக்கும் போது..,  எப்படி டா எங்களுக்கு கீழே விட மனசு வரும்” என்று கேட்கவும்.., அவனும் சேர்ந்து நான் தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டான்…

   மகிமாவோ., அவன் தந்தையிடம் செல்லம் கொஞ்சுவதை, கண்களில் குறும்பு மின்ன பார்த்திருந்தாள்…

  நிரஞ்சனின் தங்கையும்., தம்பியும் ஒரே கிண்டலாகப் பேச அங்கு ஒரு சந்தோஷமான குடும்ப சூழ்நிலை நிரம்பி இருந்தது..

எல்லாம் வல்ல இறைவன் அருளால் அனைத்து குடும்பங்களும் சந்தோஷத்துடன் வாழ இறைவனை பிரார்த்திப்போம்.

Advertisement