Advertisement

கல்லூரியில் தன்னை திட்டி தண்டனை கொடுத்து., தினமும் நிற்க வைத்து வகுப்பை விட்டு வெளியேற்றிய அதே நிரஞ்சன் தான்., ஆனால் ஏனோ அவனுடைய நினைவுகள் அந்தக் காட்டில் தொடங்கி இன்றுவரை அவனை பற்றிய நினைவுகளோடு தான் இருக்கிறாள்.., இதை எப்படி அவனிடம் சொல்வது என்ற யோசனையோடு நினைச்சுப்பேன் என்று மட்டும் ஒரே வார்த்தையில் முடித்து விட்டாள்.

       “என்கிட்ட கேக்க மாட்டியா மகி அதேமாதிரி.., உன் நினைவுகள் மட்டும் தான் என்னை முழுதாக பிடிச்சு வச்சிருக்கு என்று சொல்லவும்.., அவனை நிமிர்ந்து அவன் கண்ணை பார்க்க அவனும் அவள் கண்ணை உற்றுப் பார்த்தபடி.., தினம் தினம் ஒவ்வொரு நிமிஷமும் உன் ஞாபகம் தான் உன்னை மாதிரி நினைச்சுப்பேன் ஒரே வார்த்தையில் என்னால சொல்ல முடியாது.., எப்படி சொல்லணும் தெரியல என்று சொல்லி.., இடதுபக்க நெஞ்சைத் தொட்டு காட்டி இங்க வலிக்குதுடி” என்று கண்களில் கண்ணீர் தேங்க கூறியவன்..,

“ இன்னைக்கு என் கெளரவத்தை காப்பாற்றுவதும் தூக்கிப் போட்டு உடைக்கிறதும்., உன் கையில தான் இருக்கு அதற்கான பொறுப்பை உன் கையில் ஒப்படைத்து இருக்கேன்”.., என்று சொல்லவும்.., அவள் அவனை நிமிர்ந்து பார்க்க அவள் கண் கலங்கி இருந்தது..,

     “என்ன சரிதானே” எனச் சொல்லவும்.., அவன் எதற்கு கேட்கிறான் என்று தெரியாமலேயே தலையை ஆட்டினாள்., அவன் பங்க்ஷன் முடியட்டும் அதுக்கப்புறம் நான் இங்க வரேன்.., ஏன் என்று அவள் பதில் கேள்வி கேட்க.., “பதில் பேசக்கூடாது என்னோட கௌரவம் உன் கையில் தான் இருக்கு என்று மறுபடியும் ஒரே வார்த்தையில் சொல்லவும்”.., அவள் அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை.., “எழுந்தவன்  திரும்பவும் அவள் அருகில் அமர்ந்து கொண்டு., மறுபடியும் நெஞ்சைத் தொட்டுக் காட்டி அஞ்சு வருஷமா வலியோட கஷ்டப்படுறேன்., என் வலியை குறைக்க உன்னால் மட்டும் தான் முடியும்…, அது தான் இப்ப உன்னோட வேலை” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்று விட்டான்  அவனை அவள் விழிகள் பின்தொடர்ந்தன.

       வந்து வீட்டினர் உடன் அமர்ந்தவன்., அவன் தம்பி தங்கை அருகே அமர்ந்து அவர்கள் இருவருக்கும் மகிமா அமர்ந்திருந்த இடத்தை சுட்டிக் காட்டினான்., இருவரும் அவளை திரும்பி பார்த்துவிட்டு அவனுடைய தங்கையும் தங்கை கணவனும் அவனுக்கு கையைப் பிடித்து குலுக்குவதை பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.., தம்பியோ அங்கிருந்து திரும்பி பார்த்தவனுக்கு சரியாக தெரியாததால் என்னவோ எழுந்து நின்று அவளைப் பார்த்து விட்டு அமர்ந்து கொண்டான்.., இவளுக்கு இவன் ஏன் இப்படி பண்ணுகிறான் என்று யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தாள் சற்று நேரத்தில் நிகழ்ச்சியும் தொடங்கியிருந்தது..

    டெக்ஸ்டைல் துறையில் சாதித்தவர்கள் பற்றிய பேச்சுகள் ஓடிக்கொண்டிருந்தது.., உடை வடிவமைப்பு விஷயத்திலும் தொழில்துறையில் எப்படி இந்த துறை முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை பற்றியும்., நம் நாட்டில் ஏற்றுமதி-இறக்குமதி பற்றியும் நிறைய பேசி முடித்த பின்பு விருதுகளை பற்றியும்.,  விருது பெற்றவர்களின் பெயர்களும் வாசிக்கப்பட்டது.., நிறைய கம்பெனிகள் விருதுகளை வாங்கிய போது புதிதாக தொடங்கப்பட்ட கம்பெனி ஐந்து ஆண்டுகளில் வெற்றி பெற்றிருப்பதாகவும் அதற்கான விருதை வாங்கப் போவதாக அறிவித்து நிரஞ்சன் கம்பெனி பிராண்டட் ஐட்டம் பற்றி பேசி அதற்கான விருதுகள் பற்றி சொல்லவும் அவனுடைய கம்பெனிக்கு அந்த ஆண்டு மூன்று விருதுகள் கிடைத்தது முதலாவதாக புதிய கம்பெனிக்கான அறிமுக விருது ஒன்றும்., பிராண்டட் பொருட்களை தயாரிப்பதில் திறமையான கம்பெனி என்றும்.,  அவன் கம்பெனியில் ஆடை வடிவமைப்பு சிறப்பாக இருப்பதால் அதற்கென தனி விருதும் அறிவிக்கப்பட்டது..,

            அதற்காக நிரஞ்சன் மேடை ஏறி அவன் தன்னுடைய விருதுகள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு அங்கு நன்றி தெரிவிக்கும் போது.., அவன் தெரிவித்தது இதில் மற்றவையெல்லாம் என்னுடைய உழைப்பு என்றாலும்..,  இதில் உள்ள ஆடை வடிவமைப்பு என்னுடைய சைலன்ட் பிசினஸ் பார்ட்னர் அவர்களுக்கு சொந்தமானது.., அதுமட்டுமன்றி இந்த விருதை வாங்க தகுதியான வரும் அவர் தான் என்று சொல்லிக்கொண்டிருந்தான்..,

      யார் அந்த சைலன்ட் பார்ட்னர் என்று மேடையில் அறிவிப்பாளர் கேட்கவும்.., கண்டிப்பாக இன்று விருது விழா முடிவதற்குள் அறிமுகப் படுத்துகிறேன் என்று சொல்லி விட்டு கீழே இறங்கி விட்டான்..,

         அதன் பிறகு உடை வடிவமைப்பாளர் விருது பற்றி அறிவிக்கும் போது., அதில் இந்திய அளவில் சிறந்த உடை வடிவமைப்பாளர் என்ற விருது அவளுடைய புகழ் பற்றி சொல்லி., இதுவரை அவர் தன்னை வெளிக்காட்டிக் கொண்டதில்லை என்பதை சொல்லி.., மகிமாவிற்கு வழங்கப்பட்டது.., அப்போது மேடை ஏறும் போது தான் வேதாச்சலம் பார்த்துக் கொண்டு மகனைப் பார்த்து பெருமையாக சிரித்தார்.., நாயகிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது…

     நாயகியின் மனதிலோ ஏற்கனவே அழகா இருப்பா கொலு கொழுன்னு இருந்தா.., இப்ப கொஞ்சம் மெலிந்த மாதிரி இருக்கு.., ஆனா இன்னும் அழகாகி விட்டாலே என்று நினைத்துக்கொண்டாள்..

         அவள் அவளுக்குரிய அவார்டை வாங்கி விட்டு கீழே இறங்க முயற்சிக்கும் போது.., அங்கு உள்ள அறிவிப்பாளர் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு அனைவருக்கும் நன்றி என்று சொல்லிவிட்டு.., “என் வாழ்க்கையில் நான் இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் என்னை எதிரியாக நினைத்தவர்கள் தான்.., என்னை வேண்டாம் என்று ஒதுக்கியவர்கள் தான்.., அவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும்,என்ற வெறியோடு உழைத்ததன் பயன் இன்று இந்த விருது வாங்கி இருக்கிறேன்”., என்று மட்டும் சொன்னாள்.

      அதேநேரம் அறிவிப்பாளர் மறுபடியும் அவளிடம் கேள்வி கேட்க “இதுவரை சினிமா துறையிலும் சரி., மாடல் அழகிக்கு உடை வடிவமைத்து கொடுத்தாலும் சரி., நீங்கள் மூன்று முறை விருது பெற்ற போதும் உங்களை இதுவரை வெளிப்படுத்திக் கொண்டது கிடையாது.., இந்த முறையும் நீங்கள் வர முடியாது என்றுதான் சொன்னதாக கேள்வி.., ஆனால் கண்டிப்பாக இந்த முறை நீங்கள் வந்தே ஆகவேண்டும் என்று சொன்ன ஒரே காரணத்திற்காக தான் வந்திருப்பதாகவும் கேள்வி.., இதைப்பற்றி நீங்கள் சொல்ல விரும்புவது” என கேட்கும் போது…

     “என்னை அறிமுகப்படுத்துவது என்னுடைய திறமைகள் ஆக இருக்க வேண்டுமே ஒழிய.., நான் யாரென்று தெரிந்த பிறகு என் திறமைகள் தெரிவதை.., நான் விரும்பவில்லை” என்று மட்டுமே அறிவித்தாள் அதன் பிறகே நிறைய பேருக்கு தெரியும்..  படங்களில் ஆடை வடிவமைத்திருக்கிறாள்  மாடல் அழகிக்கு இவள் வடிவமைக்கும் உடைகள் செல்கிறது.., என்று அத்தனையும் கண்ணை உறுத்தாத வகையிலும்.,இருக்கும்.., இவளுடைய உடை வடிவமைப்பு யாரும் முகம் சுளிக்கும் வண்ணத்தில் இருக்காது என்பது அதன் சிறப்பு…

        அதே நேரம் வேகமாக மேடை மேல் ஏறி வந்த நிரஞ்சன் மைக்கை வாங்கி.. “நான் சொன்ன என்னுடைய சைலண்ட் பிசினஸ் பார்ட்னர் இவங்க தான் இவங்களோட டிசைனிங் தான் என்னோட கம்பெனில போய்கிட்டு இருக்குது.., இவங்க  என்னோட பிசினஸ் பார்ட்னர் மட்டுமில்லாம வருங்கால என்னோட லைப் பார்ட்னர் என்று அனைவருக்கும் அறிமுகப்படுத்த”.., அங்கு பலத்த கரகோஷம் ஒலித்தது…, அவள் அதை எதிர்பார்க்கவில்லை என்பது அவள் அவனை திரும்பி அவன் முகத்தைப் பார்த்திலே தெரிந்தது…, ஆனாலும் அவன் அதை கண்டு கொள்ளாத வகையில் அவள் தோளில் கைபோட்டு சேர்த்து அணைத்துக் கொண்டான்.., அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அவன் சொன்ன என் கவுரவத்தை காப்பது உன் கையில் இருக்கிறது என்ற வார்த்தைக்கு அர்த்தம் இதுதான் என்பது அதன் பிறகு தான் புரிந்து கொண்டாள்..

  அவன் தம்பியும் தங்கை., தங்கை கணவன்.,அப்பா என அனைவரும் சந்தோஷமாக கைத்தட்ட நாயகி மட்டும் முறைத்துப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார்.., அதேநேரத்தில் அறிவிப்பு மேடையில் இருந்தவர் நீங்கள் “எளிஜ்பில் பேச்சிலர்.., உங்களை சுற்றி உங்களுக்காக  பெண் கொடுக்க தயாராக பல தொழிலதிபர்கள் காத்திருக்கிறார்கள் என்று இன்று தான் பேசிக் கொண்டிருந்தோம்…,அதற்குள் உங்களுடைய லைஃப் பார்ட்னர் ஐ அறிவித்து விட்டீர்கள்” என்று சொல்லவும்…,

        “இது இன்னைக்கு எடுத்த முடிவில்லை., அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி மகிமாவிற்கும் எனக்குமான திருமணப் பேச்சுவார்த்தை அப்போதே தொடங்கிவிட்டது.., எங்களுடைய வாழ்க்கையில் நாங்கள் சாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஐந்து வருடங்கள் எங்களுடைய தொழிலில் நாங்கள் நிலை பெற எடுத்துக்கொண்ட காலகட்டம் .., இந்த ஐந்து வருடத்தில்  என்னிடம் யார் கேட்டிருந்தாலும் இதைத்தான் சொல்லி இருப்பேன்.., எனக்காக என் மகிமா காத்துக் கொண்டிருப்பாள் என்று.., அதுபோல அவளிடம் யாரும் கேட்டிருந்தால் அவளும் இதைத்தான் சொல்லியிருப்பாள்.., ஏனெனில் எங்களுக்கான திருமணப் பேச்சுவார்த்தை முன்பே முடிந்துவிட்டது”.., என்று சொல்லவும் மறுபடியும் பலத்த கரகோஷம் எழுந்தது..,

     அவன் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வாயை மூடி அமைதியாக நின்றாள்.., அனைவரும் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டு அவன் கையணைவிலே மேடையிலிருந்து இறங்கி வரவும்.., கீழே இருந்தவர்கள் கூப்பிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.., அவன் அவளை வா என்று அழைத்துக் கொண்டு அவன் அப்பா இருந்த இடம் சென்றான்..

Advertisement