Advertisement

அத்தியாயம் 11

      டெல்லியில் நடக்கும் விருது வழங்கும் விழா மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது…  டெக்ஸ்டைல் துறையில் இந்தியாவில் உள்ள சிறந்த வல்லுநர்கள் அனைவரும் வரும் இடமாதலால் அவ்விடத்தில் அமரும் வசதி கூட அழகாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..  மேடைக்கு கீழே அமர்ந்து இருந்து பார்க்கும் இடம் அழகான சிறு வட்ட மேசைகளோடு ஒரு வட்ட மேசையில் நான்கு இருக்கை என போடப்பட்டு.., அங்கு வருபவர்கள் ஏற்கனவே எத்தனை பேர் வருவார்கள் என கணக்கிட்டு இருந்ததால் அதற்கு தகுந்தார்போல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

     மாலை 4 மணி அளவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால்.,  மதியத்திற்கு மேலே அனைவரும் வரத்தொடங்கினர்., மகிமா மதிய நேரம் தான் மும்பையில் இருந்து கிளம்பினால் சரியாக விழா ஆரம்பிப்பதற்கு சற்று முன் தான் வந்து அந்த விழா நடக்கும் அரங்கத்திற்குள் நுழைந்தாள்.., அதற்கு முன்னே நிரஞ்சன் குடும்பத்தினர் வந்து அங்கு அமர்ந்திருந்தனர்.., அவள் வருவதை யாரும் பார்க்கவில்லை., அவள் வந்து நுழைந்த அடுத்த பத்து நிமிடத்திற்குள் அவன் இருக்கும் இடத்தை கண்டு கொண்டாள்.,  அவன் குடும்பத்தாரோடு அமர்ந்திருப்பதைப் பார்த்த உடன்  அன்று அவன் தந்தையின் பேச்சினால் குடும்பத்தோடு இணைத்துக் கொண்டார்கள் என்ற எண்ணம் வந்தது..,  அவன் அம்மா பேசிய பேச்சுகள் நினைவு வந்தாலும் எதையும் கண்டுகொள்ளாமல்., அவள் இருப்பதே தெரியாத வண்ணம் ஒரு ஓரத்தில் போடப்பட்டிருந்த மேஜையை சுற்றி அவளோடு வந்தவர்களுடன் அமர்ந்துவிட்டாள்…,

   அவ்வப்போது அவன் இருக்கும் இடத்தை திரும்பியும் பார்த்துக் கொண்டாள்..,  அவள் பார்ப்பது அவனுக்கு தெரியாத வண்ணம்..,  அவனின் தோற்றத்தில் தான் எவ்வளவு மாற்றங்கள் என்று நினைத்துக்கொண்டாள்..,

     இன்னும் சற்று நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கிவிடும் என்ற சூழ்நிலையில் அதுவரை மற்றவர்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவன் பேசும் போது சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே தான் இருந்தான்..,,  அப்படி ஒருமுறை கவனிக்கும் போது அவள் அமர்ந்திருந்த இடத்தை கண்டு கொண்டான்.., அங்கிருந்தே சற்று நேரம் இமைக்க மறந்து அவளை பார்த்துக் கொண்டே இருந்தான்.., தோற்றத்தில் மாற்றம் என்று சொல்வதை விட அவள் முகத்தில் பழைய குறும்புத்தனம் எதுவும் திரும்பி வரவில்லை..,  பொறுப்பு அதிகரித்திருப்பது அவள் முகத்திலேயே தெரிந்தது.,  பார்த்தவுடன் பொறுப்பான பெண் என்று சொல்லி விடுமளவிற்கு அவளிடம் மாற்றம் இருந்தது..,  சிறுபிள்ளைத்தனமான முகம் இல்லை வாழ்க்கையில் நமக்கு அனுபவங்கள் அடித்து சொல்லி கொடுக்கும் பாடங்களில் நாம் அதிகமாகவே கற்றுக் கொள்கிறோம்..,  அப்படி கற்றுக் கொண்டதால் தான் அவளும் அவ்வளவு பொறுப்பான பெண்ணாகத் தெரிந்தாள்..,

     அவளுடைய உடை வடிவமைப்பு மும்பை பிரபலங்கள்.., பிரபலங்கள் மட்டுமல்லாமல் மாடல் அழகிகள் மத்தியிலும் மிகப் பிரபலம் சினிமா துறையிலும்  பிரபலமடைந்த ஆடை வடிவமைப்பாளர் என்று அடித்துச் சொன்னாலும் நம்ப முடியாத அளவிற்கு அவள் இருந்தாள்…

     ஏதோ வித்தியாசமாக தலை பிண்ணியிருந்தாள் போல முடியின் அடர்த்தியும் நீளமும் நன்றாகவே தெரிந்தது..,  அழகான சில்க் காட்டன் புடவையில் அம்சமாக இருந்தாள்., இவனுக்கோ பார்த்தவுடன் அவளை அப்படியே கடத்திக் கொண்டு போய் விட்டால் என்ன என்று தோன்றியது.., மீண்டும் அதே  காட்டுக்குள் அவளோடு சென்று விடவேண்டும் என்ற எண்ணமும் வந்தது…,

          காதில் அணிந்திருந்த ஆன்டிக் மாடல் ஜிமிக்கி அதற்கேற்றார்போல் கழுத்தில் அணிந்திருந்த சிறு மாலை., கையில் அணிந்திருந்த வளையல் எல்லாம் ஒரே விதமாக இருந்தது.., இவனால் பார்த்த விழியை திருப்ப முடியவில்லை.., ஏனோ இப்போதே அவளை கையோடு இழுத்துக்கொண்டு சென்று விட மாட்டோமா என்று தோன்றியது..,  யாருமில்லா தனித்தீவில் அவள் மட்டும் உடன் இருக்க மனம் ஆசை கொண்டது.., ஏனோ எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடி விட வேண்டும் என்ற எண்ணமும் அந்த சமயத்தில் தான் தோன்றியது..

   அதே நேரம் அவனை நினைத்து அவனே சிரித்துக்கொண்டான்.., அவளை பார்த்தாலே கல்லூரியில் எழுப்பிவிட்டு தண்டனை கொடுத்த நான்  இன்று அவளோடு தனியே எங்காவது போக வேண்டும் என்று நினைப்பது பற்றி நினைத்துக் கொண்டான்..

    அவன் தம்பி இவன் தன்னால் சிரித்துக் கொள்வதை கண்டுகொண்டு என்ன அண்ணா தனியா சிரிக்கிற என்கவும்.., கவனிக்கிறார்கள் என்ற எண்ணத்தோடு பார்வை வேறு புறமாக மெதுவாக திருப்பி கொண்டவன் சும்மா என்று மட்டும் சொன்னான்…

       இல்லையே ஏதோ விஷயம் இருக்கே என்று அவன் தங்கை மறுபடி கேள்வி கேட்கவும்.., விஷயத்தை எல்லாரும் தெரிஞ்சுக்கும் போது தெரிஞ்சுக்கோங்க என்றபடி அமைதியாக இருந்தான்.., சற்று நேரத்தில் நிகழ்ச்சி தொடங்க இருப்பதை அறிவித்தனர்.., அப்படி இருக்கும் போதே மெதுவாக எழுந்து சென்றவன்., அவள் இருக்கும் இடத்தில் போய் அவள் அருகில் அமர்ந்தான் அருகில் யாரோ அமர்வது போல் இருக்க., திரும்பி பார்த்தவள் அவன் முகத்தை விட்டு சற்று நேரத்திற்கு பார்வையை அகற்றவே இல்லை.., அவனும் அப்படித்தான் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.,..

     இருவருக்கும் கண்கள் கலங்கியது அவரவர் உணர்ந்தாலும்., அவள் இமை சிமிட்டி கண்ணீரை அடக்கிக் கொண்டதை அவனும் உணர்ந்தான்..,

     அதன் பிறகு சாதாரணமாக அவளிடம் பேச தொடங்கி “ஏன் எனக்கு போன் பண்ணவே இல்ல., என்கிட்ட உன் போன் நம்பர் கிடையாது., உன்னோட அட்ரஸ் டீடைல்ஸ் எதுவும் கிடையாது.., பட் உன்கிட்ட என்னோட அட்ரஸ் உண்டு., போன் நம்பர் உண்டு எல்லாம் உண்டு., ஆனால் நீ ஒரு போன் கூட பண்ணல இல்ல”.., என்று கேட்கவும்

            அவள் சிரித்துக்கொண்டே பேச்சை மாற்றும் விதமாக.,, “லைஃப் எப்படி போயிட்டு இருக்கு, பிசினெஸ் எப்படி போகுது”, என்று சாதாரணமாக விசாரிக்கவும்..

     “பேச்சை மாத்துற ஏன்” என்று கேட்கவும்.,

     அவனை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தவள் “ஏற்கனவே நிறைய பிரச்சனை அன்னைக்கு ஒரு நாளிலேயே.., அதுக்கப்புறம் நான் உங்ககிட்ட பேசினாலோ இல்ல., நீங்க என்னோட பேசினாலும் அது உங்க வீட்ல மேற்கொண்டு வேற பிரச்சினை வந்துறக்கூடாது அப்படிங்கறது தான் பேசலை” என்று சொல்லிவிட்டு.., அவன் குடும்பத்தினர் அமர்ந்திருந்த பகுதியை திரும்பி பார்த்துவிட்டு  “நீங்கள்  உங்க குடும்பத்தோட இருக்கணும்னு நினைச்சேன்.., அதுதான் ரீசன்., சரி இப்ப சொல்லுங்க” என்று அவன் பிசினஸ் சம்பந்தமாக பேசவும்..,

          அவன் அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்துவிட்டு “மகி நான் ஒன்னு கேப்பேன் எனக்கு உண்மையை சொல்லணும்”.., என்று கேட்கவும்

        “கேளுங்க” என்றாள்

     “நீ என்னை எப்பவாது நினைச்சியா.., இந்த அஞ்சு வருஷத்துல,, எப்பவாச்சும்  என்ன பாக்கணும் இல்ல.., என்னோட பேசணும் இல்லை., ஏதாவது முக்கியமான விஷயம் என் கிட்ட ஷேர் பண்ணனும்., அப்படின்னு உனக்கு என்னைக்காவது அது தோணி இருக்கா மறைக்காமல் உண்மையை சொல்லணும்”.., என்று கேட்கவும்.,

          அவள் சற்றுநேரம் குனிந்தபடி அமைதியாக அவள் கைவிரல் நகங்களை ஆராய்ச்சி செய்வது போல் பார்த்துக் கொண்டே இருந்தவள் நிமிர்ந்து நினைச்சிருக்கேன்.. என்று மட்டுமே சொன்னாளே ஒழிய எப்போதெல்லாம் நினைத்தேன் என்று சொல்லவில்லை.., ஏனென்றால் அவன் ஞாபகம் அவளுக்கு தினம் தினம் வந்து அவளை கஷ்டப்படுத்தி கொண்டு தான் இருந்தது. அன்று நடந்த சம்பவத்திற்குப் பிறகு அவளுக்கு சந்தோஷமோ துக்கமோ கண்டிப்பாக அவன் நினைவு வரும் ஏனென்றால் அந்த அன்று நடந்த பிரச்சனையில் அவளுடைய அம்மா அடிக்க.., கீழே  விழ போகும் போது தன் அண்ணன் கூட தாங்கி பிடிக்காத சூழ்நிலையில் இவன் மட்டும் தான் தாங்கிப் பிடித்து தன்னை அவனோடு சேர்த்து பிடித்து இருந்தான். அது போல தான் அந்த ஒரு நாள் முழுவதும் காட்டிற்குள் இருக்கும் போது அவளை அப்படி பார்த்துக் கொண்டான்.., கிடைத்த தனிமையை தவறான முறையில் பயன்படுத்த நினைக்கும் மக்களிடையே தன்னை பத்திரமாக பாதுகாத்து ஒரு பாதுகாவலனாக, அவனை தினமும் யோசிப்பாள். அதே நேரம் அவன் கை அணைப்பு கொடுத்த பாதுகாப்பையும் இதத்தையும் ., ஏனோ அவளால் மறக்க முடியவில்லை..,

Advertisement