Advertisement

அத்தியாயம் 10

         டெல்லிக்கு கிளம்பும் நாளன்று வேதாச்சலம் நிரஞ்சனை அழைத்து பேசத் தொடங்கினார்.., “உன்கிட்ட கேட்கணும் உட்காரு பா” என்று அருகே அமர வைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார்.., “நீ எதனால் இந்த முடிவுக்கு வந்தேன்னு தெரிஞ்சுக்கலாமா.., அந்த பொண்ணு ஃபேமிலிய விட்டு பிரிந்து இருக்கா ங்கிற பரிதாபத்திலா..,  உனக்கு அவ மேல இந்த பிரச்சினை வந்ததாலா இல்ல.., உண்மையிலேயே உனக்கு அந்த பொண்ண பிடிக்குமா”.. என்று கேட்டவுடன்..,

      “ஏம்பா என் மேல நம்பிக்கை இல்லையா”., என்று கேட்டதற்கு

   “இல்லப்பா பரிதாபத்தில் வர்றது நல்ல வாழ்க்கையா இருக்க முடியாது.., எனக்கு தெரிஞ்சு இந்த வாழ்க்கை பரிதாபத்தில் ஆரம்பிக்கிறத அந்த பொண்ணும் விரும்பாது.., அதனால் தான் கேட்கிறேன்., எந்த ஒரு பொண்ணுமே தனக்கு வரும் கணவன்.., தன் மேல அன்பா இருக்கணும்.., அப்படின்னு தான் எதிர்பார்ப்பா.., நீ பரிதாபத்தில் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்கிற மாதிரி யோசிச்சி இருந்தேனா தயவு செய்து அதை விட்டுட்டு” என்று சொல்லவும்…,

         “உண்மை   தான் அப்பா., எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருச்சு எப்படி சொல்றதுன்னு தெரியல.., ஏதோ ஒரு விதத்தில் என் மனசுக்குள் நுழைந்தா ன்னு.., நான் வந்து இப்ப பீல் பண்ணறேன்.., ஏன்னா நான் காலேஜ்ல அவளுக்கு கிளாஸ் எடுக்க போகும் போது.., எனக்கு அவளைப் பார்த்தால் என்னவோ தெரியல கோபம் வரும்.., இந்த சேட்ட பண்ற புள்ளைங்கள அடிக்கணும் போல இருக்கும் தெரியுமா…,  சேட்ட பண்ற பிள்ளைகளை பார்த்தா கிள்ளி வைக்கனும் கை துருதுருன்னு இருக்கும் பாருங்க…, அப்படி ஒரு ஃபீல் தான் வரும்.., அந்த மாதிரிதான் எனக்கு அவளைப் பார்த்ததும்..,  வேணும்னே எழுப்பிவிட்டு கொஸ்டின் கேட்பேன்”.., அப்படின்னு சொல்லி காலேஜில் உள்ள மற்ற விஷயங்கள் எல்லாம் நிரஞ்சன் சொல்லவும்…,

     “அப்புறம் எப்படிப்பா உனக்கு அந்த பொண்ணு மேல காதல் வந்துருச்சி” கேட்டார் வேதாசலம்…

      அதைத்தான் நானும் அந்த பள்ளத்தில் உருளும் போது யோசிச்சது…  “எனக்கு  அந்த இடத்தில் கண்டிப்பா வேறு யாரும் இருந்திருந்தால் நான் இந்தளவுக்கு ஓடிப் போய் தூங்க போயிருப்பேன்னா..,  இல்ல கீழ அவ கூட சேர்ந்து போய் உழுந்து காப்பாத்தணும் அப்படிங்கிற மாதிரி எனக்கு தோனி இருக்குமா அப்படிங்கறது எனக்கு தெரியல..,  அவளை தள்ளிவிட்ட அந்த செகண்ட் என் மனசு பட்டபாடு என்னால இன்னும் பீல் பண்ண முடியுது பா., அப்ப நான் கீழே அந்த காட்டுக்குள்ள போனதுக்கு அப்புறம் அவளை என் பக்கத்திலேயே வச்சுக்கணும் அப்படிங்கற மாதிரி எனக்கு ரொம்ப ஃபீல் பண்ணனேன்.., அவளை என்ன விட்டு விடவே கூடாது.., அவ என்கூடவே இருக்கணும் அப்படிங்கிற மாதிரி எல்லாம் மனசு கிடந்து அடித்துக்கிட்டது…  அந்த நேரத்துல நான் நெனச்சது வந்து நம்ம குடும்பத்துக்கு ஒத்துவருமா அப்படின்னு யோசிச்சு எல்லாம் யோசிச்சேன் ஃபேமிலி சிட்டுவேஷன் இலிருந்து எல்லாம் யோசிச்சேன் அந்த பொண்ணு வளர்ந்த விதம் வேற., நம்ம வீட்டில் உள்ளதெல்லாம் வேற பழக்க வழக்கம் எல்லாம் வேற அந்த பொண்ணு வீட்ல ரொம்ப டிரடிஷனல்.., அதுமட்டுமில்லாம மாடன் பார்ட்டி ஃபங்ஷன் அந்த மாதிரிலாம் கிடையாது நம்ம வீட்டுப் பழக்கம் அம்மா லேடீஸ் கிளப் அது இதுன்னு எக்கச்சக்கம் போவாங்க…, நம்மோட பழக்க வழக்கங்கள் எல்லாம் வேற அம்மா சமையல்கட்டு பக்கம் போனதே கிடையாது.., இந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கு.., ஆனா அவங்க வளர்ந்த விதம் வேற மாதிரி இருக்கும்.., இதெல்லாம் யோசிச்சிட்டு சரி பார்க்கலாம் நம்ம மனசை நம்மளால கண்ட்ரோல் பண்ண முடியாதா அப்படின்னு தாம்பா யோசிச்சேன்.., சத்தியமா இந்த அளவுக்கு அவளை வந்து என் மனசுக்குள்ள ஏத்துப்பேன் நான் எதிர்பார்க்கவே இல்லை”      .

“அந்தக் காட்டுக்குள்ள இருக்கும்போது தோணுது இதுதான் பா…, எல்லாரும் சரி அவங்க மனசுல கல்யாணத்துக்கு முன்னாடி யாரையாவது பார்த்து இவங்கள கல்யாணம் பண்ணிட்டா லைஃப் நல்லா இருக்கணும் யோசிக்காமல் இருந்து இருக்க மாட்டாங்க.., யோசிச்சி இருப்பாங்க இல்ல.., எல்லாரும் அதுக்காக கல்யாணம் பண்ணிட்டு வாழலாமல்லா இருக்காங்க.., சோ நம்மளும் இத இந்த காட்டுக்குள்ளே மறந்துட்டு போகணும்.., அப்படின்னு நினைச்சு தான் அதுக்கு அப்புறம் அத பத்தி யோசிக்க கூடாது அப்படின்னு…,  மைண்ட் டைவர்ட் பண்ணுவதற்காக என எல்லாமும் பண்ணி பாத்துட்டேன்.., ஆனா நாங்க வந்து சேர்ந்தது அப்புறம் நார்மலா எங்க ரெண்டு பேத்தையும் ரெண்டு பேர் வீட்லயும் நார்மலா எடுத்துக்கிட்டு இருந்தா.., ஒருவேளை நானும் அதெல்லாம் மறந்துட்டு என்னோட லைஃப் இந்த ஸ்டேட்டஸ் இந்த சரவோன்டிங் ல உள்ள பொண்ணு ன்னு நீங்க பார்க்கிற மாதிரி லைப் ல  செட்டில் பண்ணி இருப்பேனோ என்னவோ தெரியல…, அன்னைக்கு அம்மா பேசின பேச்சு லைஃப்ல மறக்கவே முடியாது.., ஒரு அம்மாவா அவங்க வந்து என் மேல நம்பிக்கை வைக்கலை., என்ன தப்பா தான் பார்த்தாங்க.., அவங்க என்ன தப்பா  பார்க்கும் போது எப்படிப் அந்த பொண்ணோட அம்மா அப்பாவுக்கு என் மேல நம்பிக்கை வரும்.., அந்த பொண்ண வந்து அவங்களால ஏத்துக்க முடியும்… அவங்க குடும்ப கவுரவம் அது இதுன்னு பேசினாலும் அட்லீஸ்ட் பொண்ணு கூட தள்ளியாவது இருந்திருப்பாங்க.., இப்ப பாருங்க ஒரேடியா தலைமுழுகிட்டோம் ன்னு சொல்லி இருக்காங்க.., காலேஜ் புரபசர் எவ்வளவோ பேசிப் பார்த்து இருக்காங்க…, அவளோட பிரெண்ட்ஸ்., ஏன் பிரின்ஸ்பல் கூட போன்ல கூப்பிட்டு பேசிட்டு இருக்காரு.., எந்தவித ரெஸ்பான்ஸ் ம் கொடுக்கல.., என்னால ஒரு பொண்ணோட லைஃபே கொஸ்டின் மார்க் ஆகிப் போய் நிக்குது அப்படி இருக்கும்போது நான் எப்படிப்பா நிம்மதியா இருக்க முடியும்”…,

“ அதுதாண்டா கேட்கிறேன் அந்த கில்டி கன்ஸ்கியஸ் ல தான்.., அவளை கல்யாணம் பண்ணிக்க போறியா” என்று நான் கேட்டேன்..,

  “கண்டிப்பா இல்லப்பா., எனக்கு அவளை பிடிக்கும்.., நான் வந்து மறந்துட்டு வேற கல்யாணம் நீங்க பார்க்கிற பொண்ணு அப்படிங்கற மாதிரி கல்யாணம் பண்ணனும் அப்படின்னு தான் நினைத்திருந்தேன்.., என எல்லாருக்கும் ஃபர்ஸ்ட்   லவ் ன்னு ஒன்று இல்லாமல் எல்லாம் யாருக்கும் இருக்காது…, அப்படித்தான் நினைச்சேன்.., ஆனா எனக்கு அப்படி கிடையாது.., நான் மனசுல ஆசை பட்ட லைப் தான் எனக்கு கிடைக்கப் போகுது.., அப்படி கிடைக்கும் போது நான் அதை ஏத்துக்கணும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்”…,

      “சரிடா நீ சொல்றதெல்லாம் சரி…, இப்போ அந்த பொண்ணுக்கு உன்னை பிடிக்குமா”..,

     “கண்டிப்பா என்ன பிடிக்கும் பா  அவளுக்கு.., கண்டிப்பா அந்த இடத்துல என்ன தவிர வேற யார் இருந்தாலும் அவ அவங்க கூட நின்றிருக்க மாட்டாள்.., என்னால் அதை பீல் பண்ண முடிஞ்சிடுச்சு…, எனக்கு இப்போ ஒரே ஒரு மனக்குறை தான்பா அவ கண்ணுல எப்பவும் ஒரு குறும்பு இருக்கும்.., ஒரு துறுதுறுப்பு இருக்கும்… அது இப்ப மிஸ்சிங்…,  அவங்க வீட்ல உள்ளவங்க உதறிட்டு போயி.., நம்ம அம்மா தப்பா பேசிட்டு வந்ததுக்கு அப்புறம் நான் பார்த்தேன்.., காலேஜ்ல அவளை பார்த்த இரண்டு நாள் நான் காலேஜிலிருந்து இருந்திருக்கேன்.., இரண்டு நாள் அவளை பார்க்க தான் செஞ்சேன்.., அவன் முகத்திலிருந்த உயிர்ப்பு இல்ல..,  அவ கண்ணுல இருந்த உயிர்ப்பும் துறுதுறுப்பும் செத்துப்போச்சு.., எனக்கு இப்போ அவள கல்யாணம் பண்ணிட்டு திருப்பி அதே மாதிரி அவளை மாத்தி காமிக்கணும்.., அப்படிங்கற ஒரு ஆசை”..,

        “இல்லடா பொண்ணுங்க பொறுப்பா மாறிட்டாங்க  னா அந்த பழைய அந்த குறும்பு, துறுதுறுப்பு அதெல்லாம் வராது”..

         இல்லப்பா அட்லீஸ்ட் அந்த கண்ணுல அந்த உயிர்ப்பை  கொண்டு வரணும்.., அவ  சிரிக்கும் போது அவ கண்ணும் சேர்ந்து சிரிக்கும்.., அவ கோபப்படும் போது கூட அந்த கண்ணு எப்பவும் சிரிச்சு ட்டே இருக்கும்.., வெளியேதான் கோவமா பேசுவா ஆனா  கண்ணு சிரிக்கிறது காட்டிக் கொடுக்கும்.., நல்ல பிள்ளை மாதிரி சின்சியரா கிளாஸ் கவனிப்பா  ஆனா இந்த கண்ணுல ஒரு சிரிப்பும் கிண்டலும் இருக்கும்.., எனக்கு அந்த பழைய மகிமா வேணும்பா.., அதுக்காகவாவது நான் அவளை கல்யாணம் பண்ணி அவளை பழையபடி மாத்திடணும்”..

      “அது மட்டும் இல்லப்பா.., தனியா இருந்த இந்த டைம் ல நான் பீல் பண்ணுனது.., அவ தான் என்னோட உலகம் ன்னு…,  என் மனசு முழுக்க அவ நிறைஞ்சி  இருக்காப்பா”…

      “சரிடா நீ லவ் பண்றேன் னு சொல்ற அந்த பொண்ணு உன்னை ஏற்றுக் கொள்ள என்ன பண்ணுவ”

    “எனக்கு தெரியும் அவளை எப்படி ஏத்துக்க வைக்கணும்னு.., கண்டிப்பா ஏத்துப்பா”

    “சரி நீ முடிவு பண்ணிட்ட மருமகள் ன்னு.., உங்க அம்மா ஏத்துக்கணும்”

          அம்மா எப்படியும் இருக்காங்க…, நான் அவங்க ட்ட கேட்க போறதே கிடையாது எப்ப என்ன நம்பாம அத்தனை பேர் முன்னாடி தப்பா பேசி ஒரு பொண்ணோட லைஃப் கெட்டுப் போவதற்கு காரணமாக இருந்தார்களோ.., அப்பவே நான்   முடிவு பண்ணிட்டேன் பா அவள தான் கல்யாணம் பண்ணனும்னு…, அவங்க சம்மதிக்கிறாங்க.. சம்மதிக்காம இருக்கிறதெல்லாம் ரெண்டாவது விஷயம்., அவதான் என் லைஃப் பார்ட்னர்.., அதுல நான் எந்த விதத்திலும் என்ன மாத்திக்க மாட்டேன்.., நீங்க கேட்ட நாளா உங்ககிட்ட சொல்றேன் அவ்வளவுதான் பா…, உங்களுக்கு பிடிக்காது ன்னாலும் இந்த கல்யாணம் நடக்கத்தான் செய்யும்.., நான் கல்யாணம் கண்டிப்பா பண்ணிக்க தான் செய்வேன் அவ்வளவுதான்…, தப்பா நினைக்காதீங்க.., நான் உங்க கிட்ட பர்மிஷன் கேட்கல இன்ஃபர்மேஷன் தான் சொல்லுறேன்…,

       “சரிடா ஒன்னும் பிரச்சனை இல்ல..  நான் வீட்ல பேசுகிறேன்.., நீ மருமக ட்ட கேட்டு சம்மதம் வாங்க வழியை பாரு…, எனக்கு மனசுல அன்னைக்கே தோணுச்சு டா ஏதோ ஒன்னு இருக்குன்னு”…

         “அப்பா அப்படி எல்லாம் கிடையாது பா.., அன்னைக்கு எல்லாம் ஒன்னும் கிடையாது.., ஆனா அன்னைக்கு அம்மா பேசும் போது எனக்கு தோணுனது என்னமோ உண்மைதான்…, பேசாம இவள கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிக்கலாம் யோசிச்சேன்.., ஆனா அந்த பொண்ணோட படிப்பு.., வேலையில் ஸ்டெடியா நான் இல்ல.., அவ எங்க இருக்கா ன்னு எனக்கு தெரியும்., ஆனா நான் அவட்ட காட்டிக்கல.., கண்டிப்பா சம்மதிப்பா.., கண்டிப்பா கல்யாணம் நடக்கும்” என்று சந்தோஷமாக சொல்லவும்…

      சந்தோஷமாக சொல்லிவிட்டு எழுந்தவனை  கட்டியணைத்து நீ சந்தோஷமா இருந்தா.., எனக்கு அதைவிட வேற என்னடா வேணும்.., என்று சொல்லி ஒரு தந்தையாக அவர் அவரது குணத்தை காட்டினார்..,

      அப்போது தான் நிரஞ்சன் புரிந்து கொண்டான் அப்பாவை சரியாக புரிந்து கொள்ளவில்லையோ என்று… ஆனாலும் மிக மகிழ்ச்சியாகவே உணர்ந்தான்.. டெல்லிக்கு செல்ல குடும்பத்தோடு தயாராகினர்.

Advertisement