Advertisement

அத்தியாயம் 9

       நிரஞ்சன் வீட்டில் காலை உணவிற்காக அமர்ந்திருந்த போது நாயகியோ.., வேதாச்சலத்திடம் “நான் சொன்னதை அவன் கிட்ட கேளுங்க”.., என்று சொல்லி நினைவுபடுத்திக் கொண்டிருந்தார்.., வேதாசலம் அதில் தலையிடும் எண்ணமே இல்லாதவராக அமைதியாக காலை உணவு எங்கே கைவிட்டு போய்விடுமோ..,  என்ற எண்ணத்தோடு உண்பது போல தட்டை தவிர எதிலும் கவனம் செலுத்தவில்லை..

         “நான் உங்ககிட்ட தான் சொல்றேன்.., காது கேக்குதா இல்லையா”.., என்ற அவளுடைய முணு முணுப்பு சத்தமாக கூட வரவில்லை.., ஏனெனில் அவர்களுக்கு எதிராக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நிரஞ்சனின் கவனம் எங்கிருக்கிறது என்று யாராலும் சொல்ல முடியாது.., சாதாரணமாக சாப்பிடுபவன் போல் இருக்கிறான்., என்று தைரியமாக பேச தொடங்கினால்., அவனுடைய கவனம் முழுவதும் பேச்சிலிருந்து இருக்கும்..,

        போகும் போது மனதை நோகடிக்கும் கலை கற்றவன் போல வார்த்தைகளை விளாசி விட்டு சென்று விடுவான்.., அதற்கு பயந்து முனுமுனுக்க.., நாயகி கேட்ட போதும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை..,  திருமணமாகி வேறு வீட்டிற்கு சென்றிருந்த அவன் தங்கை பிரசவத்திற்காக வீட்டிற்கு வந்து இருந்தவள் அம்மாவின் முனு முனுப்பை  பார்த்துவிட்டு கண்டு கொள்ளாதவளாக தன் கணவனுக்கு போன் செய்வதற்காக எழுந்து சென்று விட்டாள்.., இப்பொழுது நாயகி முனுமுனுப்பு சற்று வேகமாகவே வந்தது.., நான் சொல்றதை யாராவது இந்த வீட்ல காதுல வாங்குகிறீர்களா என்று சத்தமாகவே சொல்லவும்..,  நிரஞ்சன் தம்பியோ தனக்கும் நாயகிக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல எழுந்து சென்று விட்டான்.

     நிரஞ்சனோ உணவு முடித்து கைகழுவ எழுப்பவும்..,  நாயகி வேதாச்சலத்திடம் சொல்வது போல சத்தமாகவே சொன்னாள்.., “பொண்ணு வீட்டுக்காரங்க கிட்ட  என்ன பதில் சொல்வது என்று கேட்கவும்”..,  வேதாச்சலம் நிமிர்ந்து நாயகியை பார்த்த பார்வை உனக்கு இன்னைக்கு இருக்கு.., நீ தொலைஞ்ச என்ற பார்வை மட்டுமே., இருந்தது..,

     ஏனெனில் வேதாச்சலம் தொழிலில் எவ்வளவு தான் முன்னேறி பெரிய மனிதனாக இருந்தாலும்..,  அவரது மகனாக நிரஞ்சன் இப்பொழுது இருக்கும் உயரம் சற்று அதிகம் தான் அவனுடைய ஐந்து வருட கடுமையான உழைப்பு.., அவரிடம் வட்டிக்கு கடன் வாங்கித்தான் தொழில் தொடங்கினான்.., உழைப்பை மட்டுமே தவமாக ஏற்று செய்தவன் போல அவனுடைய கவனம் வேறு எதிலும் சிதறாமல் தொழிலில் மட்டும் கவனத்தை செலுத்தி அதன் பயனாக அப்பணத்தை வட்டியும் முதலுமாக திருப்பி இருந்தான்..,

     அவன் அப்பா ஆகியவர் எவ்வளவோ சொன்னார்..,  “இதெல்லாம் உன்னோட பணம்.., இதை ஏன் எனக்கு திருப்பிக் கொடுக்க வேண்டாம்” என்று சொன்னதற்கு..,

      “இல்லப்பா இது என்னோட தொழில்., என்னோட சொந்த தொழிலா இது  இருக்கணும்.., இதுல வந்து நான் கடன்காரனாக விரும்பல.,  அது அப்பாவா இருந்தாலும்,  இது என்னோட உழைப்பு என்னோட உழைப்பில் யாரும் நாளைக்கு உரிமை கொண்டாடக்கூடாது.., அப்பாவா இருந்தாலும்., என் தம்பியா இருந்தாலும்., என் தங்கச்சியா இருந்தாலும்.., இல்ல நீங்க கட்டிக்கிட்ட உங்க பொண்டாட்டியா இருந்தாலும்.., என்னோட தொழில் உரிமை கொண்டாடுற ரைட்ஸ் யாருக்கும் கிடையாது.., அது மட்டும் இல்ல  இதுல ஒரு சைலன்ட் பார்ட்னர் இருக்காங்க.., அவங்களும் எனக்கு மட்டும் உரிமையான இந்த சொத்தை  நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று அனைவரும் முன்னிலையில் தான்  சொல்லியிருந்தான்…

        அப்பொழுதுதான் அப்பா கேட்டார்.., “யாருடா அந்த சைலன்ட் பார்ட்னர்.., எனக்கு தெரியாம என்று.,  நீ சொல்லவே இல்லையே பிசினஸ் ஆரம்பிக்கும் போது கூட என்று சொல்லும் போது அது பார்ட்னருக்கே தெரியாதுப்பா.., இனிமேல் தான் பார்ட்னர் பார்த்து சொல்லணும் என்று சொல்லி விட்டு., இது என்னோட தொழில், அதனால நான் கடன் வாங்கினேன்.., இப்ப வட்டியும் முதலுமா திருப்பிக் கொடுத்துட்டேன்..,  நாளைக்கு இந்த தொழில்  என்னால உருவாச்சு.., இந்த குடும்பத்துக்கு சொந்தம் அப்படினு யாரும் உரிமை கொண்டாட கூடாது.., இது எனக்கானது என்று சொல்லி வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்திருந்தான்.,

          இந்த ஐந்து வருட உழைப்பில் அவனுடைய கம்பீரம் கூடியிருந்தது.., முகத்தில் ஒரு கடினத்தன்மை வந்திருந்தது.,  யாரிடமும் எதுவும் பேசாத அவனுடைய கம்பீரம் அவனை தனியாக எடுத்துக் காட்டியது.., கல்லூரியில் அவன் விரிவுரையாளராகப் பணியாற்றிய போது கூட அவனை சாமியார் என்று சொன்ன மாணவமணிகள் இப்பொழுது பார்த்தால் சிடுமூஞ்சி சாமியார் என்று சொல்லி விடுவார்கள்..,

      ஏற்கனவே அதற்கேற்றார் போல மகிமா தான் படிக்கும் காலத்தில் அவனை சிடுமூஞ்சி சிங்காரம் என்று அழைத்தது., அவனுக்கு தெரியாது இப்பொழுது பார்த்தால் கண்டிப்பாக சிடுமூஞ்சி சாமியார் என்றே பெயர் வைத்து விடுவாள்.., அந்த அளவிற்கு அவனிடம் ஒரு கடின தன்மை இருந்தது.., யாருக்கும் புரியாத விதமாகவே மௌனமாக இருந்தான்.., கஷ்டம் என்று வருபவர்களுக்கு உதவுவதில் சிறந்தவனாக இருந்தான்., அவனிடம் வேலைபார்க்கும் தொழிலாளிகளுக்கு அவர்கள் மனம் குளிர தாராளமாக செய்தான்., எந்த சூழ்நிலையிலும் யாரையும் மனதை கஷ்டப்படுத்தும் அளவிற்கு அவனுடைய நடவடிக்கை அலுவலக விஷயங்களில் இருக்காது.., அதனால் அலுவலகத்திலோ அவனுடைய டெக்ஸ்டைல் மில்லோ மாடல் உடைகள் தயாரிக்கும் டிசைனிங் ஷெக்சனிலோ., அவனை அனைவருக்கும் பிடிக்கும் ஏனெனில் அவன் அனைவரிடமும் தன்மையான முறையிலேயே நடந்து கொள்வான்., அவன் கம்பெனிக்கு தேர்ந்தெடுத்த பெயர்.., சிறந்த பெயர் பெற்ற பிராண்டாக மாறி இருந்தது.., அது முழுக்க முழுக்க அவனுடைய உழைப்பு.,  அவனுடைய சொத்து என்ற எண்ணம் மட்டுமே அவனுக்கு இருந்தது.., அதில் யாரும் உரிமை கொண்டாடுவதை அவன் விரும்பவில்லை..,  அவன் அப்பாவின் தொழிலான பைனான்ஸ் பிசினஸை அவன் தம்பியின் வசம் ஒப்படைக்க சொல்லிவிட்டான்.., எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை நான் உருவாக்கிய தொழில் மட்டும் எனக்கு போதும்.. என்றான்..,

  அது மட்டுமல்லாமல் அவனுடைய தொழிலை எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அவனுக்கு இல்லை..

    ஒரு அண்ணனாக தங்கையின் கல்யாணத்திற்கு அனைத்தும் செய்தான்.., ஆனாலும் அவனிடம் விலகல் தன்மை வந்திருந்தது.., இந்த ஐந்து வருடத்தில் அவன் குடும்பத்தில் இருந்து சற்று விலகி இருந்தது போல தான் அனைவருக்கும் தோன்றியது.., அவன் தொழில் அவன் வேலை என்று இருப்பான் ஒழிய அனாவசியமாக யாரிடமும் பேச மாட்டான்.., வீட்டில் முக்கியமாக அவன் அம்மாவிடம்., என்று வயநாட்டில் இருந்து பிரச்சனையோடு கல்லூரிக்கு வந்து., கல்லூரி வேலையை விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தானோ..,  அந்த நிமிடத்திலிருந்து அவன் அம்மாவிடம் பேசுவதை விட்டு விட்டான்.., எதுவாக இருந்தாலும் அப்பாவிடம் தான்.,

    தான் தொழிலை தொடங்க வேண்டும் என்று முதன்முதலாக அவரிடம் போய் கேட்கும் போது எனக்கு கடனாக கொடுங்கள்.., உங்கள் பணத்தை வட்டியோடு திருப்பித் தந்து விடுவேன் என்று சொல்லும் போது அவன் விளையாட்டுக்கு சொல்கிறான் என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தார்., ஆனால் அவன் முழுமூச்சாக இறங்கி வேலை செய்து அப்பணத்தை அவன் பேசியபடி திருப்பி தருவான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.., அப்போது தான் வேண்டாம் என்று சொன்னதற்கு முடியாது என்று சொல்லி விட்டான்.., சொத்தில் உனக்கு சேர வேண்டியதில் கழித்துக் கொள்ளலாம் என்று சொன்னதிற்கு கூட., எனக்கு சொத்து வேண்டாம் என்று சொல்லிவிட்டான்..  அப்போதுதான் முதன்முதலாக அவருக்கும் சிறு பயம் வந்தது.., இவன் மொத்தமாக விலகி செல்கிறான் என்று..

      ஐந்து வருடத்தில் ஒரு நாள் கூட அவள் நினைவில்லாமல் அவன் இருந்ததில்லை.., அப்பொழுதெல்லாம் யோசிப்பான்.., எப்படி அவளை  கல்லூரி காலத்தில் எப்பொழுதும் எழுப்பி கேள்வி கேட்டு தண்டனை கொடுத்து.., அவளை கண்டாலே சுறுசுறுவென்று இருந்தது.., நேர்மாறாக எப்படி இப்படி மாறிப் போனேன் என்று யோசித்துக் கொள்வான்..,  அவ்வப்போது அவளைப் பற்றிய தகவல்களையும் விசாரித்து அறிந்து கொள்வான்., ஆடை வடிவமைப்பு உலகில் தனி நிலையில் இருந்தாலும் அவள் தன்னை இதுவரை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்பதை அவன் அறிந்து தான் இருந்தான்…

     அது போல அவனுடைய விலகலை கண்ட வேதாச்சலம் தான் பயந்து போனார்…  அவரின் மன திருப்திக்காக மட்டுமே அவன் வீட்டில் தங்கி இருக்கிறான், என்பது நாயகியும் அறிந்த உண்மை தான் உடன் பிறந்தவர்களாக இருந்த தம்பியும் தங்கையும் பாசத்தால் அவனை கட்டி வைக்க முயற்சி செய்தனர்., ஆனாலும் அவனுடைய கோபம் எதற்கு என்று அவர்களுக்கு புரிந்தாலும் யாரும் வாயைத் திறந்து பேசவில்லை..,

      அவன் வீட்டில் அறவே உணவு உண்பதை தவிர்க்க ஆரம்பித்தபோது முதல்முதலாக வேதாசலமும் அவனுடைய உடன் பிறந்தவர்களும் சேர்ந்து., ஒரு நேர உணவை மட்டும் வீட்டில் உண்ண வைத்தனர்..,  அது எப்பொழுதும் காலை உணவாக இருந்தது மதியமும் இரவும் வெளியில்தான் சாப்பிடுவான்.

    முன்பெல்லாம் கல்லூரி வேலை பார்க்கும் போது உடை உடுத்துவதில் அதிக அக்கறை காட்டுவான்.., அவனுடைய உடை எப்பொழுதும் நேர்த்தியாக இருக்கும் இப்பொழுதும் நேர்த்தியாக அணிந்தாலும் அதில் ஒரு தனித்தன்மை இருக்க தொடங்கியிருந்தது.., அவன் அணிவதெல்லாம் காட்டன் ஷர்ட்..  ஜீன்ஸ் அப்படி இல்லை என்றால்., இது போல அவனுடைய கம்பெனிகளில் தயாரிக்கப்பட்ட காட்டன் வகைகள் இப்படியே அணிந்தான்.., ஆனாலும் அதில் ஒரு நேர்த்தி இருந்தது.., முன்பு இருந்தது போல் இல்லாமல் அவன் முகத்தில் இப்போது தனித்துவம் நிறைந்த முகமாக அவன் பெற்றோருக்கு தோன்றியது.., முன்பெல்லாம் நீட்டாக தினமும் ஷேவ் செய்து அடர்த்தியான மீசையுடன் பார்க்க அம்சமாக இருக்கும் மகன்.., இப்பொழுது தாடி வைத்துக்கொண்டு பார்ப்பதற்கு வேறு விதமாக இருந்தான்…

    ஏண்டா இப்படி இருக்க சேவ் பண்ணல.., பாக்குறதுக்கு என்னவோ மாதிரி இருக்கு என்று கேட்டதற்கு.., நல்ல தான் இருக்கு என்று சொல்லி விட்டு போய்விட்டான்.., அது அவன் முகத்திற்கு ஒரு முரட்டுத்தனத்தை இன்னும் அதிகப்படுத்தி காட்டியது, போல வேதாச்சலம் உணர்ந்தார்..,

     சுற்றி ஆட்கள் இருக்க,  தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இவன் இருக்க.., யாரும் இல்லாமல் தனி தீவில் அவள் இருக்க.., வாழ்க்கை அவர்களுக்கென என்ன வைத்திருக்கிறது என்று தெரியாமலேயே இரண்டு பேரும் அவர்களின்  தொழிலை துரத்தி  ஓடிக்கொண்டிருந்தனர்..,

       அப்போது தான் நாயகி காலை நேர உணவின் போது இப்படி கேட்டுவிட்டு வேதாச்சலம் முறைத்து பார்க்க எதற்கு என்று தெரியாமல் பயந்து கொண்டிருந்த போது..,

   அவனும் பதிலுக்கு வேதாச்சலத்திடம் பதில் சொல்வது போல சொல்லிக் கொண்டிருந்தான்.., அப்போது அவன் பதில் சொல்ல தொடங்கியவுடன் அவனது தம்பியும் தங்கையும் இவன் என்ன பேசுகிறேன் என்பதில் கவனமாக இருந்தனர் வீட்டில் உள்ள அனைவருமே..

   “பொண்ணு வீட்ல சொல்லியாச்சா ன்னு கேளுங்கப்பா..,  நான் ஒரு நாள் புல்லா காட்டுக்குள்ள ஒரு பொண்ணோட இருந்துட்டு வந்தேன்னு.., சொல்லியாச்சா ன்னு  கேளுங்க அது மட்டுமில்லாமல்., நாளைக்கு அவளை பார்த்தேன் னா அவ பின்னாடி போறதுக்கு கூட வாய்ப்பு இருக்கிறது..  இப்பவே சொல்லிடுங்க..  நாளைக்கு  ஒரு பொண்ண கல்யாணம் பண்ணறேன்னு சொல்லிட்டு.., அந்த பொண்ண விட்டுட்டு இன்னொருத்தி கூட போயிட்டான் அப்படி ன்னு பேச்சு வரும்.., அப்பா இப்பவே சொல்லிடறேன் அவளை என்னைக்கு பார்க்கிறேனோ அன்னைக்கு அவளை கையோட கூட்டிட்டு தான் வருவேன்..,  வர மாட்டேன்னு சொன்னா தூக்கிட்டு வந்து விடுவேன்” என்று சொல்லவும்..,

      வேதாச்சலமோ  மகனே நீ இதுக்கு தானே இத்தனை நாள் இப்படி அமைதியா இருந்தியா என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்..,  தங்கையும் தம்பியும் சூப்பர் இத்தனை நாள் இதுதான் விஷயமா என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டனர்..,

   தங்கையோ ஒரு படி மேலே போய் “பொண்ணு அழகா இருப்பாங்களா என்ன என்று வேறு கேட்க” நாயகியிடம் இருந்து ஒரு முறைப்பை பரிசாக பெற்றுக் கொண்டாள்.

   “அழகுங்கிறது மனசில் இருந்து வரணும்.., வெளித்தோற்றத்தில் இருந்து வரக்கூடாது. அவ மனசு மட்டும் இல்ல., ஆளும் அழகு தான்…, எப்படின்னு பார்த்தாலும் அவ ரொம்ப அழகு.., அவ மேல தப்பு இல்லன்னு சொல்லியும் கேட்காத அவளோட பெத்தவங்க.., அவ மேல தப்பு இருக்குற மாதிரி அவ மேல பழிய போட்ட இதோ இங்க நிக்குற பெரியவங்க…,இவங்க எல்லாம் இருக்கும் போது எப்படி அவ நிம்மதியா இருக்க முடியும்.., இந்த மாதிரி வாய்க்கு வந்ததை பேசுற ஆள்களுக்கு மத்தியில் இருப்பதை விட அவ தனியா இருப்பது எவ்வளவோ மேல் தான் தனியா போயிட்டா போல.., நான் கம்பெனி ஆரம்பிக்கும் போது அவளுக்கு பத்திரிக்கை கொடுக்க ட்ரை பண்ணேன்.., அவ எங்க இருக்கா எந்த அட்ரஸ் ல இருக்கா ன்னு தெரிஞ்சும் எனக்கு காலேஜ் புரபசர் அட்ரஸ் தரல.., கேட்டதுக்கு இல்லப்பா என்கிட்ட இல்ல ன்னு சொல்லிட்டாங்க..  ஆனா அவ கிட்ட என்னோட அட்ரஸ் இருக்குனு எனக்கு தெரியும்.., என்னோட அட்ரஸ் அவ கைக்குப் போய் அவகிட்ட இருந்து எனக்கு ஒரு கிப்ட் வந்துச்சு.., நான் இன்னைக்கு இந்த நிலைமைக்கு எல்லாம் முன்னேறி இருக்க., ஒரு வகை ல அவ அனுப்புன அந்த கிப்ட்  தான் காரணம்”.. என்றான்..

      “அப்படி என்னடா உலகமகா கிப்ட் எங்களுக்கு தெரியாம” என்று அவனிடம் நேரடியாக நாயகி பேச முயற்சிக்கவும்.., அவன் பார்த்த ஒற்றைப் பார்வையில் அவள் வேகமாக வேதாசலத்தை பார்த்து திரும்பி கொண்டாள்..

        “அதை எல்லாம் இங்க யார்கிட்டயும் சொல்ல  அவசியமில்லை…  சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லிக்கிறேன், என்று சொல்லிவிட்டு அப்பா ரொம்ப அவசரமா கேட்டீங்களே என்னோட சைலன்ட் பார்ட்னர் யாருன்னு அதையும் நான் அன்னைக்கு சொல்லுகிறேன் உங்களுக்கு” என்று சொன்னான்..,

       அப்போது தான் அவன் தம்பி வாயை திறந்து எப்போது என்று கேட்கவும்.., அவன்  பங்ஷனுக்கு டெல்லிக்கு வர்றவங்க வாங்க என்று சொன்னான்., அந்த முறை டெக்ஸ்டைல் துறையில் சிறந்த புது டெக்ஸ்டைல் துறைக்கான அவார்டும்.., பிராண்டட் கம்பெனியில் பெஸ்ட் பிராண்டட் துணிகளை தயாரிக்கும் நிறுவனத்திற்கான அவார்டும்.., அழகான டிசைன் கொண்ட பெஸ்ட் டிசைனர் அவார்டும்…  அவனுடைய கம்பெனிக்கு கிடைத்திருந்தது.., அதை தவிர அவனுக்கு வந்த தகவல்படி மகிமா அங்கு வருவாள் என்று அவன் எதிர்பார்த்திருந்தான்… ஏனெனில் பெஸ்ட் டிரஸ் டிசைனர் அவார்டு மகிமாவிற்கு கிடைக்கப் போவதாக அவனுக்கு ஏற்கனவே தகவல் வந்திருந்ததால் அவன் அதை எதிர்பார்த்தே வீட்டில் உள்ளவர்களை அங்கு அழைத்தான்.

     அப்போதுதான் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியும் டெல்லியில் அவார்ட் பங்க்ஷன் இருக்கிறது என்றும் அவனுடைய கம்பெனி முதல் முறை டெக்ஸ்டைல் துறையில் அவார்டு வாங்கி இருப்பதும்..,  இவன் யாரிடமும் எதுவும் சொல்ல வில்லை ஏன் அவன் தந்தையிடம் கூட  எதுவும் சொல்லவில்லை.., “பொதுப்படையாக அவார்ட் பங்ஷனுக்கு எல்லாரும் வாங்க என்னோட அஞ்சு வருஷ உழைப்பு.., என்னோட கனவு, என்னுடைய லட்சியம், எல்லாம் நிறைவேறி இருக்கு.., அது மட்டுமில்லாம அங்கு தான் சில முக்கியமான அறிவிப்புகளை நான் கொடுக்கப் போறேன்” என்று சொல்லிவிட்டு சென்றான்..

     அவனின் தங்கையோ “கண்டிப்பா போறோம்”  என்று சொல்லவும்…  அவளுடைய அம்மாவோ எங்க கிளம்பறே என்று சொல்லவும்..  “ஏம்மா ஏழாவது மாத ஆரம்பத்திலேயே வளைக்காப்பு போட்டீங்க இல்ல.., பிரசவத்திற்கு டைம் இருக்கு.., நான் கண்டிப்பா போவேன்.., நான் என் வீட்டுக்காரருக்கு போன் பண்ணி இப்பவே ப்ளைட் டிக்கெட் போட சொல்றேன்”., என்று சொல்லவும்..

         அவள் தம்பியும் “நானும் வருவேன் அண்ணன் ஏதோ முக்கியமான அறிவிப்பு கொடுக்கப் போறான்.., அது கண்டிப்பா சூப்பரான விஷயமாக இருக்கும் அதனால நானும் வருவேன்”.., என்று சொல்லி விட்டு “அப்பா நீங்க வாரீங்களா இல்லையா” என்று கேட்க தொடங்கினான்..

     அவன் ஏதோ முக்கியம் சொல்லிட்டான்., அப்புறம் தெரிஞ்சுக்காம எப்படி இருக்கிறது., கண்டிப்பா இருப்பேன் என் புள்ளையோட உத்வேகம்., இந்த அஞ்சு வருஷத்துல அவனோட முன்னேற்றம்., எல்லாத்துக்கும் காரணம் எதோ இருக்கு.., அது அன்னைக்கு தெரிய போகுது.., என்று சந்தோஷத்தோடு அவரும் வருவதாக சொன்னார்”

   நிரஞ்சனின் தங்கைதான் “அம்மா வர்றதா இருந்தா இப்பவே சொல்லுங்க எல்லாருக்கும் சேர்த்து டிக்கெட் போடுவோம்..  இல்லாட்டி உங்களை விட்டுட்டு போய்டுவோம்” என்று சொல்லிவிட்டு பின்பு அவளையும் சேர்த்து இழுத்துக் கொண்டு செல்வதாக சொல்லி அவர்களுக்கான டிக்கெட் போடுவதைப் பற்றி ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் வேதாச்சலம்.., அவர்களுக்கான முக்கியமான திருப்பம் அங்கு இருப்பது தெரியாமல் நாயகி தானும் டெல்லி போவதை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்…

Advertisement