நதியை அழைத்தவள்,

“டிபன் எல்லாம் இருக்கு நதி.பால் காய்ச்சி அந்த பிளாஸ்க்ல வச்சிருக்கேன். நாங்க எல்லாம் சாப்பிட்டுட்டோம். நீயும் குமரனும் சாப்பிட்டு தூங்குங்க. நான் காலையில வரேன். அம்மாவும் அப்பாவும் இன்னைக்கு அண்ணா வீட்ல தூங்கிப்பாங்க” என்றவள் ராணியையும் அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

“அக்கா தேங்க்ஸ்க்கா” என்ற குமரன் தீபாவை அணைத்துக் கொள்ள,

“போடா டேய்..!” என்று சிரித்தவள்,

“இதே மாதிரி எப்பவும் சந்தோஷமா இருடா குமரா”  என்றபடி சென்றவளை சிரிப்புடன் பார்த்திருந்தான்.

அவர்கள் அனைவரும் செல்லவும் நதி தான் முழித்துக் கொண்டு நின்றாள்.

அவளின் முழியைப் பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது.

“சாப்பிடலாமா?” என்றவனுக்கு தலையை மட்டும் அசைத்தாள். அவனே அனைத்தையும் எடுத்து வைக்க,

“நீங்க இருங்க உதய், நான் எடுத்து வைக்கிறேன்” என்றாள் நதி.

“இதுல என்ன இருக்கு? வா சாப்பிடலாம்” என்றவன் அவளுக்கு தட்டில் வைத்துக் கொடுத்து விட்டு தானும் சாப்பிடத் தொடங்கினான்.

அவள் சாப்பிடாமல் தட்டையே அளந்து கொண்டு இருக்க,

“என்னாச்சு நதி?” என்றான்.

“இல்ல, நரேனும் மகதியும் என்ன பண்ணிட்டு இருப்பாங்கன்னு யோசிச்சேன். எப்பவும் ஒன்னாத்தான் சாப்பிடுவோம். சில நேரம் அப்பா எங்க மூணு பேருக்கும் ஊட்டி விடுவார். இப்ப என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு தெரியலை.” என்றவளுக்கு கண்கலங்க,

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கால் பண்ணி பேசுனேன். அவங்க அப்பவே சாப்பிட்டு தூங்கப் போய்ட்டாங்க. மாமா தான் சொன்னார். வேணும்னா நீயும் கால் பண்ணி பேசுமா” என்றான் குமரன்.

“இருக்கட்டும் உதய், நான் மார்னிங் பேசிக்கிறேன். இப்போ பேசினா அப்பறம் அவங்க ஞாபகமாவே இருக்கும்” என்றாள்.

“இப்ப மட்டும் என்ன? இப்பவும் அவங்களைத் தானே யோசிச்சுட்டு இருக்க?” என்றான்.

“உங்களுக்கென்ன தெரியும். நீங்க அப்படி இருந்து பார்த்தாதான் தெரியும்” என்றாள் மூக்கு விடைக்க.

“ஐ அன்டர்ஸ்டேன்ட் யுவர் பீலிங்க்ஸ். ஆனா என்ன பண்றது? தீபா அக்கா மேரேஜ் முடிஞ்சு போனப்ப நானும் இப்படித்தான் பீல் பண்ணேன். ஆனா, எல்லாரும் எல்லார் கூடவும் கடைசி வரைக்கும் இருக்க முடியாது இல்லையா? இந்த உண்மையை நாம ஏத்துகிட்டு தான ஆகணும். கடைசி வரைக்கும் ஒண்ணா இருக்குற ஒரே உறவு கணவன்-மனைவி உறவு தான” என்றான்.

“நல்லா பேசுறிங்க” என்றாள் சிரிப்புடன்.

“பார்க்குற வேலை அப்படி. பஞ்சாயத்து பேசி பேசி இப்படி ஆகிட்டேனோ என்னவோ?சில சமயம் என்ன நினைக்கிறேன்னு வார்த்தைகள்ல எக்ஸ்பிரஸ் பண்ணத் தெரியாது. அதுக்காக பீலிங்ஸ்சே இல்லாம பேசுறேன்னு நினைச்சுடாத” என்றவன்,

அவள் முன் இருந்த தட்டை எடுத்து அவளுக்கு ஊட்ட,

“என்ன பண்றிங்க? நானே சாப்பிட்டுக்கிறேன்” என்றாள் வேகமாய்.

“அதான் இவ்வளவு நேரம் நீ சாப்பிட்ட லட்சனத்தைப் பார்த்தேனே? வாயைத் திறடி” என்று மிரட்ட, வேறு வழியின்றி வாங்கிக் கொண்டாள். கர்ம சிரத்தையாய் தனக்கு ஊட்டிக் கொண்டிருக்கும் கணவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளையும் சாப்பிட வைத்தவன் தட்டை எடுத்துக் கொண்டு எழுந்து செல்ல, அவள் உணவுப் பாத்திரங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு சென்றாள்.

அவன் தட்டைக் கழுவிக் கொண்டிருக்க,

“நீங்க ஏன் பண்றிங்க? நான் கழுவி வச்சிருப்பேன்ல” என்றாள்.

“இதுல என்ன இருக்கு நதி? சாப்பிட்ட தட்டை கழுவுறதுல என்ன கௌரவம் வேண்டி கிடக்கு?”  என்றவன்,

“பால் குடிக்கிறயா? என்றான்.

“எனக்கு பால் பிடிக்காதுங்க” என்றாள் மெதுவாய்.

“ஆனா, எனக்கு வேஸ்ட் பண்ணா பிடிக்காது” என்றவன் மொத்த பாலையும் குடித்திருந்தான்.

“அதை நான் தான் ரூம்க்கு கொண்டு வந்து குடுக்கணும். தீபா அண்ணி அப்படித்தான் சொல்லிட்டு போனாங்க” என்றாள் சிரிப்புடன்.

“இந்த சினிமா ஸ்டைல் எல்லாம் எதுக்கு. குடிக்கிறதை எங்க குடிச்சா என்ன?” என்றான்.

“நீங்க ஒரு யுனிக் பீஸ்னு தெரியாம போய்டுச்சு” என்றாள்.

“அதான் இப்ப தெரிஞ்சிடுச்சே. இனியும் எதெதுல யுனிக்னு தெரிய வச்சுடுவோம். நீ ரூம்க்கு போ நதி. நான் கேட்டெல்லாம் சாத்திட்டு வரேன்” என்றவன்  அனைத்தையும் சாற்றிவிட்டு அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு அறைக்குள் வர,வந்தவனை இமைக்காமல் பார்த்திருந்தாள் தீராநதி.

“என்ன மேடம் பார்வையெல்லாம் பலமா இருக்கு” என்றவன், சட்டையின் முன் இரு பட்டன்களையும் கழற்றி விட்டபடி அமர்ந்தான்.

“ஒவ்வொரு நேரமும் ஒரு மாதிரி இருக்கீங்க” என்றாள்.

“எப்படி?” என்றவன் அவள் கால்களைத் தூக்கி தன் மடிமேல் வைத்துக் கொள்ள,

“அய்யோ என்ன பண்றிங்க?” என்றவள் பதறினாள்.

“இப்ப என்ன பண்ணிட்டேன்னு இப்படி  பதட்டப்படுற நதி” என்றவன் அவள் கால்களில் இருந்த வெள்ளிக் கொலுசை கழற்றியிருந்தான்.

“கொலுசை எதுக்கு கழட்டுறிங்க?” என்றாள் புரியாமல்.

“ம்ம் சத்தம் வரக் கூடாதுன்னு தான்” என்றான் நமட்டுச் சிரிப்புடன்.

“உதய்” என்றவளின் முகம் குங்குமமாய் சிவக்க,

அவனோ தன் பாக்கெட்டிலிருந்து தங்க கொலுசை எடுத்து அவள் கால்களில் மாட்டிக் கொண்டிருந்தான்.

அவனின் செய்கையில் விழி விரித்தவளை அந்த கணம் அப்படியே ஆகர்ஷித்திருந்தான் குமரன்.

“எதுக்கு உதய் இதெல்லாம்? தங்க கொலுசு கால்ல போடக் கூடாதுன்னு சொல்லுவாங்க” என்றாள் அவனையே பார்த்தபடி.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. உனக்குப் போட்டுப் பார்க்கணும்னு ஆசை. அதான் வாங்கி வச்சிருந்தேன்” என்றான் அவள் பாதங்களை வருடியபடி.

“இதை எப்போ வாங்குனிங்க? ரொம்ப செலவாகியிருக்கும்” என்றாள் கவலையாய்.

அவளின் பேச்சு அவன் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. அவன் வேறு ஒரு உலகத்தில் இருந்தான்.

“உதய்” என்றாள்.

“உதய் உதய்ன்னு சொல்லி என்னை உதைக்கிற?” என்றான் சிரிப்புடன்.

“சட்டென்று தன் பாதங்களை உருவிக் கொண்டவள், நீங்க தான் காலைப் பிடிச்சு இழுத்திங்க? இப்போ என்னை சொல்றிங்க?” என்றவள் அவனை முறைத்தாள்.

அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டவன்,

“சரி சொல்லு நதி, கொலுசு பிடிச்சிருக்கா?” என்றான் கண்களில் காதலைத் தேக்கி.

“கொலுசை விட அதை போட்டு விட்டவரைத் தான் ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள்.

“இங்க எல்லாம் ஓகேவா உனக்கு?” என்றான்.

“ஏன் அப்படி கேட்குறிங்க?” என்றாள் கேள்வியாய்.

“இல்ல, வீடு ஓகே வான்னு கேட்டேன். இல்லைன்னா கொஞ்சம் பெரிய வீடா பார்த்து போய்க்கலாம்” என்றான்.

“எதுக்கு சொந்த வீட்டை விட்டுட்டு வாடகை வீட்டுக்கு போகணும்?” என்றாள் கேள்வியாய்.

“குவாட்ரஸ் இருக்கு. அங்க போறதுன்னாலும் போகலாம்” என்றான்.

“இப்ப எதுக்காக இதையே கேட்டுட்டு இருக்கீங்க உதய்?” என்றாள் புரியாமல்.

“நீ உள்ள வந்த உடனேயே  உன் பார்வையே சொல்லுச்சே. அதான் கேட்டேன்” என்றான்.

“நான் அப்படி எல்லாம் நினைக்கலை உதய். பர்ஸ்ட் டைம் வந்ததால அப்படி பார்த்தேன்” என்றாள் புரிய வைக்கும் நோக்குடன்.

“சிட்டில, மெயின் ஏரியால  பிளாட் ஒன்னு பார்த்து அட்வான்ஸ் போட்ருக்கேன் நதி. இப்போதைக்கு அதை முடிச்சுட்டு, ப்ரோமோஷன் வந்த உடனே அதுல பெரிய வீடா கட்டிக்கலாம்” என்றான்.

“இப்பவும் கமிட்மெண்ட்ஸ் பத்தி தான் பேசணுமா?” என்றவளை இழுத்து அணைத்துக் கொண்டவன்,

“உன்கிட்ட சொல்லணும்னு தோணிச்சுடி. அதான் சொன்னேன்” என்றவனின் அணைப்பில் இருந்து விடுபட்டவள்,

“ஹப்பா, இதென்னா உங்க கை இவ்வளவு ஹார்டா இருக்கு. நீங்க பிடிச்சாலே வலிக்குது உதய்” என்றவளைப் பார்த்து சிரித்தவன்,

“என்னடி கட்டிப் பிடிச்சதுக்கே இப்படி சொல்ற?இன்னும் என்னென்ன?” என்று அவன் சொல்ல வருவதற்குள் அவன் வாயை அடைத்தவள்,

“போதும், தெரியாம சொல்லிட்டேன்” என்றாள்.

“தெரியாமக் கூட இனிமேல் சொல்லக் கூடாது” என்றவன்,

“உனக்கு டயர்டா இருந்தா தூங்கு நதி. இன்னைக்கே எல்லாம் நடக்கனும்னு எதுவும் இல்ல” என்றான்.

“ஆமாங்க! எனக்கும் செம்ம டயர்ட். நானே எப்படி சொல்றதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். நீங்களே சொல்லிட்டிங்க. குட் நைட் உதய்” என்றவள் அவனுக்கு முதுகு கட்டி படுத்துவிட்டாள்.

விளக்கை அணைத்துவிட்டு அருகில் படுத்தவனுக்குத் தான் உறக்கம் பறிபோனது.

‘உனக்குத் தேவை தான்டா? ஓவர் நல்லவனா பெர்பார்ம் பண்ணா இப்படித்தான்’ என்று மனசாட்சி நக்கல் அடிக்க,

‘நான் எங்க பெர்பார்ம் பண்ணேன். நிஜமாவே அவ பேஸ் டயர்டா தான் இருந்தது’ என்றான் பதிலாய்.

‘இருந்துச்சுல்ல, இப்ப கம்முன்னு தூங்கு’ என்று அதட்டியது மனம்.

தூங்காமல் கிடந்தவனின் அவஸ்தைகளைப் கண்டும் காணாமல் பார்த்திருந்தவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“நதி” என்றான் மெதுவாய்.

“என்னங்க?”

“டயர்ட் போயிடுச்சா?” என்றான்.

“படுத்து பத்து நிமிஷம் கூட ஆகலை. அதுக்குள்ள எப்படி டயர்ட்னஸ் போகும்?” என்றாள் இதழ் மடக்கிய சிரிப்புடன்.

“அவளின் இடையில் கையிட்டு அவளைத் தன்னோடு இழுத்துக் கொண்டவன்,நான் வேணும்னா வழி சொல்லவா?” என்றான்.

“எப்படி?”

“ மைனசும் மைனசும் சேர்ந்தா பிளஸ்ன்ற மாதிரி  டயர்டும் டயர்டும் சேர்ந்தா பிரஷ் ஆகிடும்” என்றான் குமரன் சிரிப்புடன்.

“பர்ஸ்ட் நைட் அன்னைக்கு இப்படி ஒரு தத்துவத்தை யாரும் சொல்லியிருக்க மாட்டாங்க உதய்” என்றாள்.

“அதனாலென்ன? நான் சொல்றேன்” என்றான்.

“யோவ் காக்கிச்சட்டை, கடமைக்கு அப்பறம் தான் கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம். ஆனா உங்ககிட்ட கண்ணியமும் கட்டுப்பாடும் மட்டும் தான் இருக்கு. கடமையைக் காணோமே?” என்றாள் அவன் விழி நோக்கி.

“பொண்டாட்டியே சொன்னதுக்கு அப்பறம் கடமையை செய்யாம விட்டா, அது காவல்துறைக்கே வந்த களங்கம்டி” என்றவன் மேற்கொண்டு அவளை பேசவிடவில்லை.

அவளின் மனச்சிறைக்குள் நுழைந்து, இதழ்களைப் பூட்டி, ஆடைகள் கலைந்து ஆலிங்கனம் கொண்டு, சூழல்கள் உணர்ந்து,சுமைகளைப் பகிர்ந்து கொண்டு, ஆசைகள் கலந்து, அன்பில் நிறைந்து அளவில்லாத காதலில் தவழ்ந்து கொண்டிருந்தனர் இருவரும்.

இவ்வளவு நேரம் அப்படி அமைதியாகப் பேசியவனா என்று அவளே திகைக்கும் அளவிற்கு அவனின் செயல்கள் இருக்க, அவளை முழுமையாகத் தன்பால் ஈர்த்திருந்தான் குமரன்.

எவ்வளவு மென்மையாக நடந்து கொள்ள அவன் முயன்றாலும்,அவனையும் மீறி அவன் முரட்டுத்தனம் வெளிப்பட,  அவன் முரட்டுத் தனத்தில் கொஞ்சம் பயந்து தான் போனாள் தீராநதி.

நள்ளிரவு வரை அவன் வாயில் இருந்து வந்தது எல்லாம் நதி மட்டும் தான். பேசிப் பேசியே அவளை சிவக்க வைத்திருந்தான் குமரன்.

கூடல் முடிந்து தன்னை அணைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தவனைத் தான் பார்த்திருந்தாள் நதி. அவனை ரசித்துக் கொண்டிருந்தவளை, உணர்ந்தானோ என்னவோ கண்களைத் திறந்தவன்,

“மேடம் என்ன அப்படி பார்க்குறிங்க? தூக்கம் வரலையா? நான் வேணும்னா தூங்க வழி சொல்லவா?” என்று கண் சிமிட்ட,

“ஆத்தி, நான் தூங்கிட்டேன் உதய்” என்றபடி தனக்குள் புதைந்தவளைப் பார்த்து சிரித்துக் கொண்டான் குமரன்.