காலையில் கண் விழித்த அகன் கண்டது தன்னை மொத்தமாய் ஆக்கிரமித்திருந்த யுகந்தாராவைத் தான். தன்னை இறுக்கி அணைத்தபடி தன் மேலேயே படுத்து உறங்கிக் கொண்டிருந்தவளை ஏனோ விலக்கும் எண்ணமே வரவில்லை அகனுக்கு.
நடு இரவில் நடந்ததெல்லாம் அவனுக்கு நன்றாகவே ஞாபகம் இருந்தது. தன் நிலை கண்டு அவள் பரிதவித்தது, அதன் பிறகான அவளின் அனுசரணைகள், அவளின் அரவைணைப்பு என்று அனைத்தும் நினைவடுக்கில் உலா போக, உறங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்தவனின் முகம் கனிந்தது. அவளின் கள்ளம் கபடமில்லா முகத்தை ரசித்தபடியே மீண்டும் சற்று நேரம் உறங்கிப் போனவன், சற்று தாமதமாகவே கண் விழித்திருந்தான். அப்போதும் அவள் உறக்கத்தில் இருக்க,அவளின் உறக்கம் கலைக்க விரும்பாதவன், அவளைத் தன்னில் இருந்து இறக்கி, மெத்தையில் படுக்க வைக்க முயற்சி செய்தான்.
அகனின் முயற்சியில் உறக்கம் கலைந்தவளுக்கு, அகனின் ரசனையான பார்வை கண்ணில் பட,
“டேய் சிலுக்கு ஜிப்பா, காலையிலயே இப்படி கனவுல வந்து என்னை கரெக்ட் பண்ண பாக்குறியா? இதுக்கெல்லாம் அசர மாட்டா இந்த தாரா” என்று தன் போக்கில் புலம்ப, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவன்..
“என்ன ஸ்டாப்.. நான் ஏன் இறங்கனும்?” என்று புரியாமல் குழம்பியவளுக்கு அப்போது தான் அவள் இருக்கும் நிலையே உரைத்தது.
“ஆத்தி”என்றவள் சட்டென்று அவனிலிருந்து விலக முயற்சிக்க, அவனோ அவளை இடையோடு பிடித்துக் கொண்டான்.
“விடுங்க அகன்” என்றவள் நெளிய ஆரம்பிக்க,
“டாக்டரம்மா இவ்வளவு நேரமும் இந்த பொசிஷன்ல தான் தூங்குனிங்க. இப்போ மட்டும் என்ன புதுசா வெட்கமெல்லாம்?” என்றான்.
“அது..! நைட்..” என்று தயங்கியவளுக்கு அப்போது தான் நினைவு வந்தது. இரவு அவனை விடாமல் தான் அணைத்திருந்ததும், அவன் அவள் அணைப்பில் அடங்கியிருந்ததும். ஞாபகம் வந்தவளுக்கு முகம் குப்பென்று சிவக்க,
“சாரி அகன்..! அது..” என்று விளக்கம் சொல்ல முற்பட்டவளின் இதழ்களை சிறைப் பிடித்திருந்தான் அகன் கார்த்திகேயன். அவனின் இதழ் தீண்டலில் வசம் இழந்தவள், பலமின்றி மீண்டும் அவன் மேலேயே விழ, அது அவனுக்கு மேலும் வசமாகிப் போனது.
அவனின் முத்தத்தில் கிறங்கியிருந்தவளின் காதருகில் கேட்ட அவனின் ‘யுகா’ என்ற அழைப்பில் அவள் முகம் நிமிர்த்தி அவனைப் பார்க்க,
“இல்ல, உங்க அப்பா இத்தனை நாள் எந்த கடையில அரிசி வாங்குனார்? இந்த கனம் கணக்குற?” என்றான் இதழோரம் தோன்றிய சிரிப்பை அடக்கியபடி.
அவனின் கேள்வி முதலில் புரியாமல் சற்று திகைத்தவள், அதன் அர்த்தம் புரிந்த பின்னர்.. அவனைத் தீயாய் முறைத்தவள்,
“ஏன் கனமா இருந்தா தாங்க மாட்டிங்களா?” என்றாள்.
“யார் சொன்னா? லைப் லாங் இப்படியே தாங்கிக்க நான் ரெடி தான்” என்றான் ஆழ்ந்த குரலில்.
“அது.. அந்த பயம் இருக்கணும்” என்றபடி எழுந்தவளைக் கண்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
“மார்னிங் இப்படி பிரீ ஷோ கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கலை” என்றான் முன் சிகையை கோதியபடி. அவன் செய்கை அவளுக்கு ரசிக்கும் படியாக இருக்க.. அவனை உள்ளுக்குள் ரசித்திருந்தாள்.
“என்ன ஷோ? யாரோட ஷோ?” என்றவள் அசுவாரஸ்யமாக தன்னைப் பார்க்க, புடவை தன் போக்கில் விலகி இருப்பதை அப்போது தான் கவனித்தாள்.
“அச்சோ” என்றபடி வேகமாக உடையை சரி செய்தவளைப் பார்த்து அவன் நமட்டு சிரிப்பு சிரிக்க,
அவனை வியப்பாய் பார்த்தவள்,“எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு அகன். இப்படி ஸ்டேஜ்ல இருக்குறவங்களுக்கு அவங்க அந்த டைம்ல எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு அவங்களுக்கே தெரியாது. பட் நீங்க எப்படி உங்களை இப்படி கண்ட்ரோல் பண்றிங்க? இது சாதாரண விஷயம் கிடையாது” என்றாள் யுகா.
“அது மட்டுமே காரணமில்லைன்னு உங்களுக்கும் தெரியும் அகன். ஆனா உங்க மனசுல என்ன இருக்குன்னு நீங்க சொன்னாத்தான் இதுல இருந்து நீங்க முழுசா ரெக்கவர் ஆக முடியும்” என்றாள் யுகா கவலையாக.
“அது எனக்கும் தெரியும் யுகா” என்றான் உணர்வற்ற குரலில்.
“தெரிஞ்சும் ஏன் நீங்க எந்த ஸ்டெப்பும் எடுக்கலை அகன். இதோட இம்பேக்ட் என்னன்னு உங்களுக்கு தெரியுதுதானே?” என்றாள்.
“ம்ம்” என்றவன்,
“இந்த ஒரு சிச்சுவேஷன்ல தான் என் அம்மா என் கூட இருக்குற மாதிரி பீல் பண்றேன். அதை இழக்க விரும்பலை. சோ அதை எனக்கு நானே கண்டினியூ பண்ணிக்கிறேன், அவ்வளவு தான்” என்றவனை அதிர்ச்சியாய் பார்த்தாள்.
சரி பண்ணக் கூடிய ஒரு வியாதியை அவனின் இந்த ஒரு காரணத்திற்காக நிலைமையின் தீவிரத்தை அவனே கூட்டிக் கொள்வதைக் கண்டு அவளுக்கு உள்ளுக்குள் பயமாக இருந்தது. வெளியே சொல்லவில்லை என்றாலும் அது அவள் கண்களில் தெரிய,
“இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன் அகன்” என்றவள் யோசனையுடன் குளியல் அறைக்குள் செல்ல, செல்லும் அவளையே நிதானமாய் பார்த்திருந்தான் அகன்.
குளித்து விட்டு கீழே வந்தவளைத் தான் ஆராய்ச்சியுடன் பார்த்திருந்தனர் வசந்தியும், மகியும்.
“என்ன சித்தி, என்னமோ இந்த கார்த்தி நைட் அப்படி கத்துவான் இப்படி கத்துவான்னு சொன்னிங்க. ஒரு சத்தமும் கேட்கலையே? பர்ஸ்ட் நைட் நல்ல படியா முடிஞ்சிடுச்சு போலயே?” என்றாள் மகி.
“அது தான் எனக்கும் புரியலை மகி. அவன் நைட் எப்படி கத்தி இருக்குறவங்களை பயமுறுத்துவான் தெரியுமா? நானே அத்தனை தடவை பயந்திருக்கேன். நைட் எப்படியும் கத்துவான், இந்த தாரா அரண்டு போய் வெளிய ஓடி வருவான்னு நானும் எதிர்பார்த்துகிட்டே இருந்தேன். கடைசி வரைக்கும் அப்படி ஒன்னு நடக்கவே இல்லையே?” என்றார் வசந்தி.
அவர்களின் பேச்சு தாராவின் காதிலும் விழத்தான் செய்தது. அவர்களிடம் பேசும் மனநிலையில் அவள் இல்லை. அகன் சொன்ன விஷயமே அவள் மனதை குடைந்து கொண்டிருந்தது. தேவையில்லாத யோசனைகள் மனதிற்குள் வந்து போக, வாழ்க்கையில் ஒரே நாளில் நிறைய மாற்றங்கள் நடந்துவிட்டதைப் போன்ற எண்ணம் அவளுக்கு. டைனிங் டேபிளில் சோர்வுடன் தலை சாய்த்து படுத்துவிட்டாள்.