Advertisement

இத்தனை பிரச்சனைக்கும் காரணமானவளோ அங்கு எதுவும் நடக்காததைப் போல கீழே சிதறிக்கிடந்த தோசையை சுத்தம் பண்ணிக்கொண்டிருந்தாள்.

ராம் சோபாவில் உட்கார்ந்தவாறே மகன் தட்டிவிட்ட தோசையை சுத்தபண்ணி கொண்டிருந்த மனைவியை தான் வெறித்துக்கொண்டிருந்தார்.

அவரின் கண்களில் அத்தனை வலி தெரிந்தது.

கணவன்,மகனின் ஒருநாள் வருமானமே லட்சத்தை தொடும். ஆனால், அத்தனைக்கும் உரிமையானவளோ அந்த வீட்டில் ஒரு வேலைக்காரியை போல்    சாதாரண பழைய நூல் சேலை அணிந்து, கைகளில் கண்ணாடி வளையல்,  கழுத்தில் மஞ்சள் கயிறு, நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு. இதுவும் திருமணமானவள் என்பதற்காக மட்டுமே… 

சுந்தரமூர்த்தி மனைவி இல்லாததால் பத்து வருடம் தவவாழ்க்கை வாழ்ந்தார் என்றால் அவரின் மகளோ எல்லாம் இருந்தும் முப்பது வருடங்களாக தவவாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள்., அவளின் இந்தக்கோலத்திற்கு காரணம் கணவனும்,மாமியாரும்தான் என ஊரில் உள்ளவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர் என்பது தெரிந்தாலும் தன்னை மாற்றிக்கொள்ள முடியாமல் கடந்தகாலத்தையும், நிகழ்காலததையும் சேர்த்து குழப்பிக்கொண்டிருக்கிறாள். 

லலிதாவின் பிறந்த வீட்டினர் இது எதுவும் தெரியாமல் ஊரில் உள்ளவர்கள் சொல்வதை உண்மையென நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

 லலிதா அன்று தான் எடுத்த சுயநலமான முடிவிற்கு தனக்குதானே  முப்பது வருடங்களாக தண்டனை கொடுத்துக்கொண்டிருக்கிறாள். ஆனால், அந்த தண்டனை அவளுக்கு மட்டுமா???

 அதனை என்று உணர்வாளோ???

எப்போதும் போல் மனைவியின் பாராமுகம் ராமை உடைந்துபோகவே செய்தது. ‘ஒரு பார்வை தன்னை காதலாக பார்க்கமாட்டாளா?’ என முப்பது வருடமாக ஏங்கிக்கொண்டிருக்கிறார்.

உசுருக்கு உசுரா காதலித்து கரம்பிடித்தவள்…, அவளை நேசிக்கும்போது அவளின் அமைதியான குணத்தை பார்த்தே நேசிக்க ஆரம்பித்தவர், ஆனால் இன்று மனைவியை நேசிக்க காரணமாக இருந்த அவளின் அமைதியான குணமே அவரை தினம் தினம் உயிருடன் கொன்று கொண்டிருக்கிறது. 

என்று தீரும் அவரின் வலி… 

மனைவி அந்த இடத்தை சுத்தம் பண்ணிவிட்டு செல்லும் வரை பார்த்துக்கொண்டிருந்தவர் மாடியிலிருந்த மகனின் அறையிலிருந்து வந்த சத்தம் கேட்டதும் எழுந்து மகனின் அறைக்கு ஓடினார்.

அவனின் அறைக்கு வந்தவனுக்கு கோபம் கோபம் மட்டுமே… அவனுக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்தே இன்றுவரை அவன் எதிர்பார்த்தது நடக்கவில்லைங்ற கோபம் நெஞ்சுக்குள் கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டிருக்கிறது. அதனை அணைக்க வழிதெரியாமல் தவித்தவன் அறையிலிருந்த பொருட்களை எல்லாம் தள்ளிவிட்டு உடைத்தெறிந்த பின்னும் அவனின் கோபம் அடங்குவதாய் தெரியவில்லை…

கீழே உடைந்துக்கிடந்த கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தை பார்த்ததும் ஆத்திரம் கண்ணை மறைக்க அதனை எடுத்து தன்னை காயபடுத்திக்கொள்ள  போனவனை ஓடிவந்து தடுத்த ராம்.., அவனை தன்புறம் திருப்பி ஓங்கி ஓர் அறைவிட்டார். 

சத்தம் கேட்டதும் மாடிக்கு ஓடிவந்த ராம் மகனின் அறை இருந்த கோலத்தை பார்த்து அதிர்ந்துவிட்டார். அதிலும் அவன் செய்ய இருந்த காரியம் அவரை நிலைக்குலைய வைத்துவிட்டது. அந்த கோபத்தில் மகனை திரும்பவும் அறைந்துவிட்டார்.

அவர் அறைந்ததும் தான் சுயநினைவிற்கு வந்தான்., தந்தையை பார்த்ததும் அவரை இறுக கட்டி அணைத்துக்கொண்டு தான் ஒரு ஆண்மகன் என்பதையும் மறந்து கதற ஆரம்பித்தான்.

மகனின் அறையில் சத்தம் கேக்கவும் தட்டை சிங்கில் போட்டுவிட்டு கணவனின் பின்னாலையே ஓடிவந்த லலிதா மகனின் கோபம் கண்டு இடிந்துபோயிவிட்டாள். எல்லாம் தன்னால் தான் என்ற குற்ற உணர்ச்சி அவளை மேலும் காயப்படுத்தியது.., அறையின் வாயிலில் நின்றவள் அப்படியே கதவில் சாய்ந்தாள்.

அதில் சத்தம் கேட்டு தந்தையின் அணைப்பிலிருந்து வெளிவந்து வாயிலை பார்த்தவனின் அடங்கிருந்த கோபம் திரும்பவும் ஏற ஆரம்பத்தது.

“எதுக்கு வந்திங்க? நா செத்துட்டேனா இருக்கறேனானு பாக்க வந்திங்ளா? உங்கள பாத்துட்டே இருந்தா கூடியசீக்கரம் அதுவும் நடந்துரும். அப்பவாவது ஒரு சொட்டு கண்ணீர் எனக்காக விடுவிங்ளா?” அவனின் குரலில் அத்தனை வலி.

கத்தியில்லாமல், ரத்தமில்லாமல் உயிரை அறுக்க முடியுமா??? ரகுநந்தனின் வலிமிகுந்த வார்த்தை அவனை பெற்ற இருவரையும் உயிருடன் இதயத்தை அறுத்தது., இருவம் அதிர்ந்துபோய் இருப்பதைக்கூட கண்டுக்கொள்ளாமல் அறையை விட்டு வெளியே சென்றான்.

மகன் வெளியபோனதை பார்த்ததும் சுயநினைவு வந்தவர் மனைவியை பார்த்து “எனக்குனு இருக்கறது அவன் ஒருத்தன்தான். எங்களுக்கு நல்லது செய்யனும்னு நினைச்சினா என்ற மகனை விட்டு விலகியே இரு லதாமா … உனக்கு இது சாதாரண விசயம்தான் தயவு செய்து எனக்காக இத மட்டும் பண்ணு லதாமா… உன்ன கெஞ்சி கேட்டுக்குறேன்…” என்றார்  ராம்.

 இத்தனை வருடங்கள் கழித்து மனைவியிடம் அவர் பேசிய பெரிய வாக்கியம்… பேசிய அவராலையே அதை தாங்கமுடியவில்லை எனும்போது கேட்ட லலிதாவின் நிலை???

கணவன் பேசிய வார்த்தை லலிதாவை உயிருடன் மரிக்கச்செய்தது அவரும் சாதாரண பெண்தானே எத்தனை நாள் வலிக்காத மாதிரி நடிக்க முடியும். கணவனின் சந்தோசத்திற்காக அன்றே எந்தபெண்ணும் செய்யத்துணியாத காரியத்தை கணவனின் சந்தோசமான வாழ்க்கைகாக ஒத்துக்கொண்டவர்.., அன்று அவர் எடுத்த முடிவால் கணவனின் வெறுப்புக்கு காரணமாகி இன்றுவரை ஒரே வீட்டில் கணவன் மனைவி வசித்தாலும் தனி தனி தீவுகளாகவே வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.

அப்படிபட்டவர் இன்று கணவனே நீ எங்களை விட்டு விலகி இரு என்று சொல்லுவதை கேட்டதும் விழிகளில் பல கேள்விகளை தாங்கியவாறே உயிரற்ற பார்வையால் கணவனை பார்த்தார்.

மனைவியின் பார்வை அந்த கணவனையும் கொன்றது. உயிருக்கு உயிராக காதலித்து கரம்பிடித்தவர், மனைவி சொன்ன ஒற்றை வார்த்தைக்காக அவரைவிட்டு விலகி நின்றவர், மனைவியின் மேல் கோபமிருந்த போதுமே அவரை விட்டு விலகாதவர், இன்றுவரை நெஞ்சில் மனையாளை  சுமந்துக்கொண்டு தன்னவளைத்தவிர வேற ஒரு பெண்ணை கனவில் கூட நினைக்காமல் வாழ்பவர்.

ஸ்ரீராமன் கூட சீதை பத்தினி என தெரிந்தும் மற்றவர்கள் சொன்னதுக்காக தீக்குளிக்க வைத்தவர் அதன்பின்னும் கற்பவதியான மனையாளை கானகம் அனுப்பியவர், அவர்க்கு காதல் மனைவியை விட ராஜ்ஜியமும், பிரஜைகளும் மட்டுமே முக்கியமாக தெரிந்தனர். அவர்களுக்காக கட்டியவளை தள்ளிவைக்க முடிந்தது., ஆனால் அவரின் நாமத்தின் பாதியை கொண்ட ராம் பெற்றோர் ,உற்றவர்களிடம் மட்டும் காதலுக்காக போராடமால் தன்னவளிடமும் கூட போராடி அவரை பிரியவிடாமல் தன்னருகே வைத்திருப்பவர். காதலில், கட்டியவளை பாதுகாப்பதில் ஸ்ரீராமனை விடவே ஒரு படி மேலானவர்தான் இந்த ராமகிருஷ்ணன்.

தன்னவளின் விழிகளில் வந்துபோன உணர்வை படிக்க முயன்றபோது மகனின் கோபம் கண் முன்னாடி வந்து முதலில் மகனை பார்க்கசொல்லி மனம் தூண்ட மனதில் ஏறிய பாரத்துடன் மகனின் பின்னால் சென்றவர் வாசலில் பைக்கில் அமர்ந்து அவருக்காக காத்துக்கொண்டிருந்தவனின்  பின்னால் ஏறி அமர்ந்தார்.

மகனுடன் சென்றாலும் மனையாளின் உயிரற்ற பார்வையே அவரின் நினைவடுக்கில் வந்து அவரை கொல்லாமல் கொன்றது., எதோ தவறு செய்வதை போல் அவரின் மனது சொல்லிக்கொண்டே இருந்து. அதனை ஆராயவிடாமல் மகனின் நினைவு முன்னுக்கு வந்து தடுத்தது.

அப்போதே அவரின் மனதை  ஆராய முனைந்திருந்தால் உயிர் பிரியும் வலியை அனுபவித்திருக்க நேர்த்திருக்காதோ?

அவனும் எதுவும்சொல்லாமல் வண்டியை ஸ்டார்ட் பண்ணி  இலக்கில்லாமல் பெட்ரோல் தீரும்வரை ஓட்ட ஆரம்பித்தான்.

அவனுக்கு மனது பாரமாக இருந்தால் லாங்ட்ரைவ் பைக்கில் செல்வான் இதை பழக்கிவிட்டது ராமகிருஷ்ணன் தான்.., அவனின் ஐந்தாவது வயதில்  தந்தையும் மகனும் சேர்ந்து தொடங்கிய பழக்கம் இன்றுவரையிலும் தொடர்கிறது.

சிறுவயதிலே மகன் சோர்வாக இருந்தானென்றால் மகனை அழைத்துக்கொண்டு லாங் ட்ரைவ் போகும் இடம் எதுவென்றே முடிவுபண்ணாமல் பைக்கில் கூட்டிச்செல்வார்., அவன் பெரியவனானதுக்கப்பறம் துக்கமோ ,சந்தோஷமோ எதுவாகினும் தந்தையை அழைத்துக்கொண்டு செல்ல ஆரம்பித்தான்.

ரகுநந்தனுக்கு தந்தை, குரு, வெல்விசர், நண்பன் எல்லாம் சேர்ந்த ஒரு உறவு என்றால் அவனின் அப்பா தான்..

அவருடைய உலகம் அவனென்றால் அவனின் உலகம் அவர்தான்.

வீட்டிலிருந்து வண்டி எடுத்தவன் நாமக்கல்லில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் செலுத்த ஆரம்பத்தவன் திருச்செங்கோடு வந்ததும் பைக்கிலே மலை ஏற ஆரம்பித்தான்.

 அர்த்தநாரீஸ்வரர்…  அண்டசராசரங்கள் அனைத்திலும் உள்ள புல், பூண்டிலிருந்து மனித உயிர்கள் வரை உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் ஆண் இல்லையேல் பெண்ணில்லை… பெண்ணில்லையேல் ஆணில்லை என்ற தத்துவத்தை உணர்த்த தன் உடலில் பாதியை மனைவியான பார்வதிக்கு அளித்து உலகை காத்துக் கொண்டிருக்கும் அர்த்தநாரீஸ்வரர்.

அர்த்தநாரீஸ்வரரை வணங்கிவிட்டு சன்னிதானத்திலே சிறிதுநேரம் அமர்ந்திருந்துவிட்டு மனம் அமைதியானதும் கீழே இறங்க ஆரம்பித்தனர்.

அதுவரையிலும் தந்தை மகனுக்கிடையில் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. இருவருமே அந்த நேரத்தை உள்வாங்க ஆரம்பித்தனர். ஒருதள்ளுவண்டி கடையில் சாப்பிட்டு விட்டு ஈரோடு செல்லும் சாலையில் இரவு  பயணிக்க ஆரம்பித்தனர். ஈரோடு வந்ததும் வீட்டிலிருந்து ட்ரெஸ் எதுவும் எடுத்துவராததால் துணிக்கடையில் ஒரு செட் துணி மட்டும் எடுத்துக்கொண்டதும் கிளம்ப ஆரம்பித்தனர். இந்தமுறை தந்தை வண்டி ஓட்ட மகன் அவரின் பின்னால் அமர்ந்து வந்தான்.

இறுதியாக அவர்கள் சென்று நின்ற இடம் கொடைக்கானல். அங்கையே லாட்ஜில் ரூம் எடுத்துக்கொண்டு அன்று மீதி இரவை கழிக்க முடிவு செய்து அறைக்கு வந்தனர்.

அறைக்குள் நுழைந்ததும் அங்கிருந்த கட்டிலில் ‘தொப்பென்று’ விழுந்தான் ரகு., சாயந்திரம் இருந்த மனநிலைக்கு எதிர்பதமாக இப்போது இருந்தான்.

மகனின் பின்னால் வந்த ராம் அவன் முகத்தில் இருந்த தெளிவை பார்த்ததும் நிம்மதியானவர் பேக்கிலிருந்து ஒரு டவலை மட்டும் எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்று முகம் கழுவிவிட்டு வந்து பெட்டில் கால்நீட்டி சாய்ந்து அமர்ந்தார்.

கட்டிலின் குறுக்காக படுத்திருந்தவன் அடுத்த நொடி அவரின் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டவன் “லவ் யூ ப்பா… குட்நைட்…” என்றான்.

எப்போதும்போல மகனின் குழந்தைதனமான செயலில் புன்னகைத்தவர் அவனின் தலைமுடியை கோத ஆரம்பித்தார்., அவரின் செய்கையில் நிம்மதியாக கண்ணயர்ந்தான் அந்த  ஆடவன்…

மடியில் சிறுகுழந்தையாக உறங்கும் மகனை பார்த்தவாறே அவரும் துயில் கொண்டார்.

வீட்டில் மகன் பேசிய வார்த்தையிலிருந்து வெளிவருவதற்குள்ளாகவே கணவன் பேசிச் சென்ற வார்த்தை அவளின் உயிர் வரை சென்று தாக்கியது. நெஞ்சு அடைப்பதை போல் உணர்ந்தாள்… அந்த நொடி தன்னையே வெறுத்தவள் உயிர் இருந்தும் உயிரற்ற உடலாக அவள் தங்கிருந்த அறைக்கு வந்தவள்  இத்தனை நாள் யாருக்கும் தெரியாமல் பொக்கிசமாக பாதுகாத்து சேலைகளுக்கு நடுவில் ஒளித்துவைத்திருந்த  கணவனும், மகனும் சேர்ந்திருந்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டு சுவரில் சாய்ந்து அமர்ந்தவளின் விழிகள் புகைப்படத்தில் இருந்தவர்களை வெறிக்க ஆரம்பித்தது.

அவளின் நிலையை கண்டுக்கொள்ள அந்தவீட்டில் யாரும் இல்லை. அன்று இரவு முழுவதும் அதே நிலையில் கிடந்தாள்.., அவளுடைய மாமியாரும் மருமகளின் மேல் இருந்த கோபத்தால் அவளை கண்டுக்கொள்ளாமலே விட்டுவிட்டார்.

Advertisement