Advertisement

அத்தியாயம். 25

ரகுநந்தன், அலமேலு மங்கை ஷர்மியின் நிச்சயதார்த்தம் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. விடிந்தால் திருமணம் என்ற நிலையில் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் மண்டபத்தில் தான் இருந்தனர்.

 ரகுநந்தனின் கல்லூரி நண்பர்களும் திருமணத்திற்கு வந்திருந்தனர். அவர்களுக்கு தனிமை வேண்டும் என்பதற்காக மண்டபத்திற்கு அருகிலிருந்த ஹேட்டலில் அறை எடுத்து அவர்களை தங்க வைத்திருந்தான்.

 

அன்று இரவு அவர்கள் பேஜ்லர் பார்ட்டி கேட்க்கவும்  பார்ட்டிக்கு அரேஞ் செய்துக் குடுக்க நிச்சயதார்த்தம் முடிந்ததும் சென்றிருந்தவன் இரவு 1 மணி வரையிலும் வராமல் இருக்கவும் அவனுக்காக லலிதா மண்டப வாசலிலே காத்திருந்தார்.

ரகுவின் நண்பர்கள் எல்லாரும் சென்னையில் ஐடி துறையிலே வேலை பார்ப்பதால் அவர்களுக்கு குடி என்பது ஒரு சாதாரண விசயம். வாரம் முழுவதும் உழைப்பவர்களுக்கு அந்த ஒரு நாள் பப், பார்ட்டிக்கு செல்வது குற்றமாக பார்க்கபடுவதுமில்லை. அப்படி பட்டவர்கள் பேஜ்லர் பார்ட்டி கேட்க்காமல் இருந்ததால்தான் அதிசயம்.

இப்போது ரகு அங்கு தான் இருந்தான். நண்பர்கள் குடித்து விட்டு போதையில் எதாவது செய்து விட்டால் அவ்வளவு தான் தன் தந்தையின் வேறொரு முகத்தை பார்க்க வேண்டுமென்பதாலே நண்பர்களுக்கு காவலாக அவர்கள் உறங்கும் வரை ஹோட்டல் அறையிலே காத்திருந்தான்.

ரகுவை குடிக்க வைக்க அவனது நண்பர்கள் எல்லா வழியிலும் முயன்று கொண்டிருந்தனர். கெஞ்சி,கொஞ்சி, மிரட்டியும் பார்த்துவிட்டனர். ம்கூம் எதற்கும் அசையாமல் அமர்ந்திருந்தான்.

ரகுவின் நண்பர்களில் சதிஷ் மட்டுமே ராசிபுரத்தை சேர்ந்தவன்., அவனும் ரகுவை போல சொந்த ஊரிலே தந்தையின் தொழிலை செய்வதாலையோ என்னவோ மரியாதையை இழக்கும் காரியத்தை அவ்வளவு எளிதில் செய்ய மாட்டான். மற்ற நண்பர்களின் பிடிவாதத்தால்  குடித்திருந்தான். அதுவும் போதையில் தன்னை மறக்காத அளவுக்கே குடித்திருந்தான். மற்றவர்களெல்லாம் போதையில் தன்னை மறந்து ஏதேதோ கிறுக்குதனங்களையெல்லாம் செய்யவும், ரகு போராடி அவர்களை உறங்க வைக்க முயன்று கொண்டிருந்தான்.

சதிஷ் அவனைத்தான் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

ரகு ஒருவழியாக நண்பர்களை உறங்க வைத்து விட்டு சதிஷிடம் வந்தவன் “என்ன மச்சா என்ன அப்படி பாக்கற?”என்றான்.

ரகுவை பிடித்து தன்னருகில் அமரவைத்தவன் “எப்படிடா உன்னால மட்டும் இவ்வளவு கன்ட்ரோலா இருக்க முடியுது…?”

நண்பன் எதை கேட்கிறான் என்பதை புரிந்து கொண்ட ரகு, “அப்பா…” ஒரே வார்த்தையில் பதல் அளித்தான்.

“அப்பாவா…?” சதிஷ் நம்ப முடியாமல் கேட்டான். ராம் ரகுவிடம் ஒரு நண்பனை போல் பழகுவது சதிஷிற்கும் தெரியும். அதனால் வந்த ஆச்சர்யமே இது.

ரகுவும் தன் தந்தையை தான் நினைத்து கொண்டிருந்தான். ராம் அவனிடம் பேசாமல் இருந்த நாட்களை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா என்ன? 

ரகு கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்போது நண்பனின் பிறந்தநாள் அன்று முதல் முறையாக ஏதோ ஒரு ஆர்வத்தில் குடித்து விட்டான். இதுவரையிலும் எதையும் தந்தையிடம் மறைக்காத ரகு அன்று தான் குடித்ததையும் மறைக்கவில்லை.

ஆனால், ராம் மகன் சொன்னதை கேட்டு கோபபடவில்லை திட்டவில்லை, அது தவறென்று கூறவும் இல்லை.

 மகன் சொன்னதை அமைதியாக கேட்டவர் “நீ வளர்ந்துட்ட கண்ணா., இனி உனக்கு சரி எது, தவறு எதுனு நா சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. உன் விருப்பம் போல செய் கண்ணா…” நிதானமாக கூறிவிட்டு போனை அணைத்தவர்தான் அதன் பிறகு மகனிடம் கிட்டத்தட்ட ஒரு மாதம் பேசுவதையே நிறுத்தி விட்டார்.

அன்று ராம் கோபபட்டிருந்தால் திரும்ப குடித்திருப்பானோ என்னவோ…, ஆனால், அவரின் அமைதிதான் அவனை கொன்று விட்டது. அவன் செய்த தவறை உணர ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது. அதன் பிறகு தந்தைக்கு பிடிக்காத விசயத்தை கனவில் கூட செய்ய அவன் நினைக்கவில்லை.

“அப்பாவுக்கு தண்ணியடிப்பது புடிக்காது மச்சா… அவர்க்கு பிடிக்காத ஒண்ண எனக்கு செய்ய விருப்பமில்லை.”

“உங்க அப்பா ரொம்ப குடுத்து வச்சவர்டா…” 

“இல்லை மச்சா…, அவர் மாதிரி ஒரு அப்பா கிடைக்க நாந்தான் குடுத்து வச்சிருக்கனும். சரி மச்சா நீ தூங்கு நா மண்டபத்துக்கு போறேன் அப்பா எனக்காக காத்துட்டு இருப்பார்…” என்று கூறியவன் எழுந்து அறையை விட்டு சென்றான்.

வெளியே போகும் அவனைத்தான் ஆச்சர்யம் விலகாத விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சதிஷ்.

திருமண மண்டபத்திற்கு வந்து காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு உள்ளே வந்தவன் இன்னும் தூங்காமல் விழித்திருந்த தன் தாயை பார்த்ததும் அவரிடம் சென்று “இன்னும் தூங்காம இங்க என்னம்மா பண்றிங்க?” என்றான்.

“உனக்காகத்தான் காத்திருந்தேன் கண்ணு…”

அவர் முகத்தில் தெரிந்த கவலையை பார்த்து “ஏம்மா? என்னாச்சு?” கேட்டான்.

“உன்ற அப்பா மாடிக்கு போய் ரொம்ப நேரமாச்சு கண்ணு இன்னும் கீழ வரவே இல்லை.”

“அப்பா எனக்காக காத்துட்டு இருந்துருப்பார்ம்மா. நீங்க போய் தூங்குங்க. நா அவர கூட்டிட்டு வரேன்…” என்றவன் மாடிக்கு செல்லும் படியில் ஏற போனான்.

மகனிடம் சொன்ன பிறகுதான் லலிதாவிற்கு மனம் நிம்மதியானது. இனி கணவனை மகன் பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதியுடன் உறங்கச் சென்றார்.

 இன்னும் கணவன் மனைவி இருவருக்குள்ளும் இயல்பான பேச்சு வார்த்தை வரவில்லை… லலிதா மட்டுமே மாறியிருக்கிறார். ராம் இன்னும் அதே நிலையில்தான் இருக்கிறார். ராம் மனைவியின் மாற்றம் தனக்கானதில்லை என நம்புகிறார்., 

லலிதாவிற்கு கணவனிடம் நெருங்கவே பயம். அந்த பயமே கணவனை விட்டு அவளை விலக்கி வைத்திருக்கிறது.

மொட்டை மாடிக்கு செல்ல படியேறப்போனவனை அங்கு மறைந்து நின்றிருந்த ஒரு உருவம் அவனின் கரத்தை பற்றி இழுத்தது.

அதில் ஒரு நொடி தடுமாறியவன் பின் எச்சரிக்கை உணர்வு தலை தூக்க ஸ்கூல் படிக்கும்போது கற்றுக்கொண்ட தற்காப்புக்கலையின் உதவியால் அந்த உருவத்தை ஒரு சுழற்றில் தன் பிடியில்  கொண்டு வந்து கழுத்தை வளைத்து சிறை பிடித்தவன் முகம் மறைத்திருந்த சால்வையை விலக்கினான்.

சால்வையை விலக்கியதில் அந்த உருவம் யாரென தெரிந்ததும் அவனின் இதழ்கள் புன்னகையில் விரிந்தன.

அந்த உருவத்துக்கு சொந்தக்காரியானவள் திடீரென அவன் சுழற்று சுழற்றி தன்னை சிறை பிடித்ததில் மிரண்டு போய் விழிகள் இரண்டும் மூடிக்கொண்டது. மூடிய விழிகளுக்குள் கருவிழிகள் நர்த்தனம் ஆட உதடுகள் பயத்தில் “முருகா காப்பாத்து…” என் முனுமுனுத்துக் கொண்டிருந்தது., உடலோ அவனின் பிடிக்குள் நடுங்கத் தொடங்கி விட்டது.

அவனைப் பயமுறுத்த வந்தவள் இறுதில் அவன் பிடிக்குள் பயந்துபோய் நின்றாள்.

அவளின் பயத்தைப் பார்த்தவனுக்குச் சிரிப்பு வரவும், சிரித்துக்கொண்டே அவளைச் சிறை பிடித்திருந்த கையை விலக்கிக்கொண்டு “ஏய் குட்டிப்பிசாசு இந்த அர்த்த ராத்திரியில் இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” என்றான்.

அவனின் சிரிப்பும், பேசிய வார்த்தையிலும் தெளிந்தவள் சினம் தலை தூக்க இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு அவனை முறைத்தவாறே “ரத்தக்காட்ரி ஒண்ணு வரும் அதுகூட டூயட் பாடலாம்னு வழிமேல் விழி வச்சி காத்திருக்கிறேன் மாமா…” நக்கலாகக் கூறினாள்.

அவளின் கோபத்தில் முகம் சிவந்து கிடந்ததைப் பார்த்துச் சிரித்தவன் “ரத்தக்காட்டேரியும், பிசாசும் குடும்பம் நடத்தறப்ப கரடி மாதிரி நா நின்னா நல்லாவா இருக்கும்? நீங்க உங்க ரொமேன்ஸ்ச கன்டினிவ் பண்ணுங்க. நா போறேன்…” அவளை மேலும் வெறுப்பேற்றி விட்டு ஒரு அடி எடுத்து வைத்தான்.

அவன் பேசியதில் கடுப்பானவள் “டேய்ய்ய்ய்ய் மாமாமாமாமா…” எனக் கத்தினாள்.

அதில் அதிர்ந்தவன் அதே வேகத்தில் திரும்பி “டேய்யா?… ஏன்டி நா உன்ன கட்டிக்க போரவன்டி இப்பவாவது கொஞ்சம் மரியாதை குடுடி…”

“ஆமாடா உனக்கெல்லாம் என்ன டா மரியாதை வேண்டி கிடக்குது. இங்க ஒருத்தி அம்புட்டு ஆசையா உனக்காக காத்திருந்தா நீ பேய்கூட ரொமேன்ஸ் பண்ண சொல்லிட்டு போவ…”

அவள் வேகமாகக் கத்தவும் அவளின் வாயைப் பொத்தியவன் “ஏன்டி இம்புட்டு சத்தமா பேசற? எல்லாரும் எந்திருச்சி வந்தர போறாங்க…” என்றான்.

அவன் கையை எடுத்து விட்டவள் “வந்தால் வரட்டும் எனக்கென்ன… நீதா என்ன வர சொன்னேனு சொல்லுவேன் மாமா…” சாதாரணமாகத் தோளை குலுக்கியவாறே கூறினாள்.

அவளின் பதிலில் அவன் தான் அரண்டு போனான். அவனுக்குத்தான் தெரியுமே அவளின் குடும்பம் மொத்தமும் அவள் சொன்ன அனைத்தையும் கண்ண மூடிக்கொண்டு நம்புமே…, பத்தாததுக்கு அவன் அப்பத்தா வேர இவ என்ன சொன்னாலும் அததா நம்பும்…” அதை நினைத்தவனுக்குக் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.

அவள் கத்திய சத்தம் கேட்டு நாளை நடக்க இருக்கிற திருமணத்திற்குச் சமைக்கக் காய்களை வெட்டி வைத்துக் கொண்டிருந்த சமையல் செய்ய வந்தவர்களில் இருவர் அவர்கள் இருக்கும் இடம் நோக்கி வந்தனர்.

 

ஆள் வரும் அரவம் கேட்கவும் அவளை இழுத்துக் கொண்டு படியின் கீழ்  மறைவாக வந்து நின்றவன் “ஏன்டி உன்னெல்லாம் பெத்தாங்ளா? இல்லை செஞ்சாங்ளாடி?” அவன் கேட்டதும்,

“அந்த டவுட்டு எனக்கும் இருக்கு மாமா. சரி வாயேன் போய் லச்சுமாகிட்டையும், முருகேசன்கிட்டையும் கேட்ருவோம்…”அவனின் கையை பிடித்து இழுத்தாள்.

அதில் அரண்டவன் “எதே இன்னேரத்துல போய் மாமாவையும், அத்தையும் எழுப்பி கேக்க போறியாடி…”

“எஸ் மாமா.. நீதானே சந்தேகம் கேட்ட… அதான் உன்ற டவுட்ட கிளியர் பண்ணலாம்னு…”

“ஆத்தா மகமாரி என்ன ஆள விடு…” கையெடுத்துக் கும்பிட்டவன் “ஏன்டி இப்படி என்ன போட்டுப் பாடா படுத்தர? முடியலடி இப்பவே கண்ண கட்டுது. இதுல உன்ன வாழ்க்கை முழுசும் எப்படிதா வச்சி சமாளிக்க போறேனோ…” அவன் பாட்டுக்கு பொலம்பவும்,

“அது உன்ற தலையெழுத்து மாமா… அதுக்கு நா ஒண்ணும் செய்ய முடியாது.”

“அது உண்மைதான்டி. இல்லைனா ஊர்ல எத்தனையோ பொண்ணு இருக்க உன்ன கல்யாணம் பண்ண சரினு சொல்லிருப்பனா…?”

“ரொம்ப கவலைப் படாத மாமா… உன்ன நா கண்கலங்காம பாத்துக்கறேன்…”

“எது? நீ என்ன கண்கலங்காம பாத்துக்கற? இதெல்லாம் கேக்கனும்னு என்ற நேரம்டி…,”

“சரி இன்னேரத்துல தூங்காம பேய் மாதிரி ஏன்டி சுத்திட்டு இருக்க?”

“எல்லாம் உன்னாலதான் மாமா…”

“நா என்னடி பண்ணேன்.?”

“நா உனக்காக எம்புட்டு ஆசையா நிச்சியத்துக்கு மேக்கப் போட்டிருந்தேன்…, ஆனா நீ ஒரு ஆசையா ஒரு பார்வைகூட என்ன பாக்கல…, நா உன்ற மேல செம்ம கோவத்துல இருக்கேன் மாமா…”

“எதே… இந்த சுவத்துக்கு சுண்ணாம்பு பூசின மாதிரி மூஞ்சி புல்லா வெள்ளையா பூசிருந்தியே அதையா மேக்கப்புனு சொல்றடி? அவனும் சிரிக்காமல் கலாய்த்தான்.

Advertisement