Advertisement

மகனின் கேள்வில் ஆடிபோயிவிட்டான் ஐந்து வயது குழந்தை தந்தையிடம் கேட்க்கும் கேள்வியா இது? கோபம் வர “உனக்கு இது எல்லாம் ஆரு கண்ணா சொன்னாங்க?”

“விச்சு மாமா தான் ப்பா. அம்மா தான் உனக்கு கண்ணாலம் பண்ணி வைக்க சொன்னாங்ளாம்? ஏப்பா அம்மாவுக்கு உன்ன புடிக்காதா? ஆனா எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும்ப்பா…”

“அப்பாவுக்கும் உன்ன ரொம்ப புடிக்கும் கண்ணா. நீ இல்லாம அப்பாவால இருக்க முடியாதுடா கண்ணா. அப்பா சொல்ற நம்பற தானே?” 

“அப்போ ஏ மாமா அப்படி சொன்னாங்கப்பா…”

“ஆரு என்னவேனாலும் சொல்லட்டும் கண்ணா. அப்பாவுக்கு உன்னையும் அம்மாவ மட்டும்தான் புடிக்கும். உங்களை விட்டு அப்பா ஆரையும் கண்ணாலம் பண்ணிக்கமாட்டேன்” ராமின் குரலில் அத்தனை உறுதி இருந்தது.

மகனை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தவனின் மனம் கோபத்தில் தீயாக பற்றி எரிந்துக்கொண்டிருந்தது. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த ராம் தன் அக்கா புருசனை பார்த்த பார்வையில் அத்தனை வெறுப்பு தெரிந்தது.

வெளி திண்ணையில் அமர்ந்திருந்த விஸ்வநாதன்  மகனை தூக்கிக்கொண்டு வந்த மச்சானின் முகத்தை பார்த்ததுமே அவனுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்பதை புரிந்துக்கொண்டான். அவனையறியாமலே மனதில் எழுந்த பயத்தினால் முகமெல்லாம் வேர்க்க ஆரம்பித்துவிட்டது.

  

அக்கா புருசனை கோபத்துடன் முறைத்து பார்த்தவன் மகனை இறக்கி கீழே விட்டுவிட்டு “கண்ணா நீ போய் விளையாடு” மகனை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தவன் “லலிதா…” இரண்டாவது முறையாக மனைவியை முழுபேர் சொல்லி அழைத்தான்.

 கூப்பிட்டான் என்பதை விட கோபத்தில் கத்தினான் என்றே கூற வேண்டும்.

சமையலறையில் வீட்டுமாப்பிள்ளைக்காக சமைத்துக்கொண்டிருந்தவள் கணவனின் கத்தலில் பயந்துப்போய் ஓடிவந்து அவனின் முன்னால் நின்றதுதான் தாமதம் ராம் அடித்த அடியில் அடுத்த நொடி தரையில் கிடந்தாள்.

அப்போது தான் மாட்டுக்கு தீனிபோட்டுவிட்டு திரும்ப வீட்டிற்கு வந்த ராசப்பன் மகனின் மிருகத்தனமான செயலை பார்த்து அதிர்ந்துப்போய் “டேய் ராம்?” கத்திவிட்டார்.

ராசப்பனின் கத்தலுக்கு துளியும் அசராமல் அவரை திரும்பி பார்த்தவன் “இதுல நீங்க தலையிடாதிங்ப்பா…” அவரின் வாயை அடைத்துவிட்டான்.

மாமனாரின் பின்னால் வந்த விஸ்வநாதனுக்கு லலிதா அடிவாங்கியதை பார்த்ததும் மனதில் அத்தனை சந்தோசம் தான் நினைத்தது இம்புட்டு சீக்கரம் நடக்கவும் மனதில் ஆனந்தக் கூத்தாடினான். 

கீழே விழுந்த சில நொடிக்கள் கழித்துதான் கணவன் அடித்ததையே உணர்ந்தாள். கண்களில் கண்ணீருடனே “மாமா…” என்றழைத்தான்.

அவளின் மாமா என்ற அழைப்பு ராமிற்கு மேலும் கோபத்தைத்தான் தூண்டியது. 

“ச்சீசீ… இன்னொரு தடவை மாமானு சொன்ன அறைஞ்சி பல்ல கழட்டிபோடுவேன்.” அவனின் அருவெறுப்பான பார்வை லலிதாவை உயிருடன் கொன்றது.

“கட்டுன புருசனை இன்னொருத்திக்கூட பங்கு போட்டுக்க உனக்கு வேணும் னா ஈசியா இருக்கலாம். ஆனா என்னால முடியாது என்ற வாழ்க்கையில திருமணம் என்பது ஒரு முறைதான்., என்ற மனசு மட்டுமில்லை உடம்பும் உனக்கு ஒருத்திக்கு மட்டும்தான் சொந்தம். ஏங்கூட இருக்க புடிக்கலைனா தாராளமா போ. நா உன்ன தடுக்கமாட்டேன். ஆனா எனக்கு கண்ணாலம் பண்ணி வைக்கற உரிமை உனக்குனு இல்லை வேற ஆருக்கும் கிடையாது. அதையும் மீறி பண்ண நினைச்சிங்ன்னா என்ன உசுரோடவே பார்க்கமுடியாது” என கடைசி வார்த்தை சொல்லும்போது தந்தையையும் அக்கா கணவனையும் பார்த்தவாறே தான் கூறினான்.

அவன் வார்த்தையிலிருந்த அழுத்தமே ராசப்பனை நடுங்கச் செய்துவிட்டது., மகனின் முடிவை கேட்டபிறகு மூச்சு விடக் கூட முடியாமல் நின்றார்.

லலிதாவிடம் கூறியவன் விஸ்வநாதனின் முன் அதே கோப விழிகளுடன் வந்து நின்று அடிக்க கை ஓங்கிவிட்டான். 

அவனின் கோபத்தை பார்த்து மிரண்டவன் அடிக்க கை ஓங்கவும் பதறிப்போய்  “மாப்பிள்ளை…” கத்திவிட்டான்.

கையை ஓங்கிய ராம் அடிக்காமல் கீழே போட்டவாறே “ச்சீசீ உன்னெல்லாம் அடிக்கக்கூட எனக்கு அருவெறுப்பா இருக்கு.  என்ற அப்பாவையும், என்ற பொண்டாட்டியையும் தூண்டிவிட்டதுக்கு உன்ன இங்கேயே வெட்டி பொதைக்கற அளவுக்கு கோபம் வருது. உன்னோட எண்ணம் தெரிஞ்சும் இம்புட்டு நாள் நா அமைதியா இருந்தேனா என்ற கூட பொறந்தவளுக்காகத்தான்… இந்த ஒரு தடவை உன்ன மன்னிச்சி விடறேன் இனி என்ற வாழ்க்கையில உன்ற மூஞ்சியக்கூட பாக்க நா விரும்பலை. ஒழுங்கா என்ற வூட்ட வுட்டு ஓடிப்போயிடு…”

“என்ன மாப்பிள்ளை உன்ற அக்கா புருசன்ங்கற மரியாதை இல்லா நீ பாட்டுக்கு பேசிட்டே போற?” 

“உனக்கெல்லாம் மரியாதை ஒரு கேடாக்கும்? இப்பவும் என்ற அக்காவுக்காகத்தான் உன்ன உசுரோட விடறேன். ஒழுங்கா ஓடிபோயிடு…”

“என்ன மாமா உங்க மகன் வாய்க்கு வந்ததெல்லாம் பேசறான் நீங்க தட்டிகேக்காம வேடிக்கை பாத்துட்டு நிக்கறிங்க? இதுதான் வீட்டுமாப்பிள்ளைக்கு மரியாதை குடுக்கற லட்டசனமா?”

“நீங்க கோபபடாதிங்க மாப்பிள்ளை… நா அவன்கிட்ட பேசறேன்.”

“அப்பா நா வேனும்னா உங்க மாப்பிள்ளை இனி இந்த வூட்டுக்குள்ள வரக்கூடாது

 அப்படி வந்தா நா என்ற மகனை கூட்டிட்டு வெளியபோயிடுவேன்” கோபமாக தந்தையிடம் கூறிவிட்டு திரும்பிய ராம் வாசல் படியில் நின்ற மகனை பார்த்ததும் குழந்தையிடம் சென்றான்.

குழந்தையின் அருகில் சென்றவன் கையை நீட்டியதும் தந்தையிடம் தாவி கட்டிக்கொண்டான் ரகு.

மகனை கைகளில் அள்ளிக்கொண்டவன் “அப்பாக்கூட வரியா கண்ணா…”

குழந்தையும் “சரி” என தலையாட்டியதும் அங்கிருந்த யாரையும் கண்டுக்கொள்ளாமல் தங்கள் இருவருக்கும் உடையை எடுத்து வைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

கிளம்பி போகும் மகனை தடுத்த ராசப்பன் “எங்க கண்ணு போற?” என்றார்.

மனைவியை பார்த்தவன் “எனக்கு நிம்மதி வேணும் ப்பா… நா இனி இங்க வரதும் வராததும் உங்க கைலதான் இருக்கு” என்று கூறியவன் மகனுடன் கிளம்பி சென்றுவிட்டான்.

மகனா? மகளா என்று வரும்போது ராசப்பனுக்கு மகனே முதன்மையாக தெரியவும் விஸ்வநாதனை பார்த்து “நீங்க கிளம்புங்க மாப்பிள்ளை. என்ற மகளுக்கு உண்டான சீர் வீடுதேடி வந்துடும். இனி இங்க வர வேண்டாம்…” என்றுவிட்டார்.

மாமனாரிடமிருந்து இப்படி ஒரு பதிலை விஸ்வநாதன் எதிர்பார்க்கவே இல்லை. அந்த கோபத்தில் வீட்டுக்கு வர சொல்லி என்ன அசிங்கப்படுத்துறீங்களா மாமா? இனி நீங்களே வர சொன்னாலும் நா வரமாட்டேன்..” என்றவன் கிளம்பி போய்விட்டான்.

பொன்னுதாயி சாயிந்திரம் வீடு வரும்வரையிலும் மாமனார், மருமகள் இரண்டுபேரிடமும் எந்த மாற்றமில்லை. இடிந்துபோய் அமர்ந்திருந்தனர். வீட்டிக்கு வந்தவர் வீட்டின் அமைதியை பார்த்து கேட்கவும், ராசப்பன் மகனுக்கு பொண்ணு பார்த்தது முதற்கொண்டு இன்று நடந்தது வரை அனைத்து உண்மையையும் கூறிவிட்டார்.

அவ்வளவுதான் மகன் ஆடிய ருத்ர தாண்டவத்தை விட மனைவி ஆடிய காளி அவதாரத்தில் வாயை திறக்கக்கூட பயந்துப்போய் அமர்ந்துவிட்டார்.

திரும்ப ராம் வீட்டிற்கு வர ஒருவாரம் ஆகிவிட்டது. அந்த ஒரு வாரமும் வீடு வீடாகவே இல்லை. அவன் வந்த பிறகும் எந்த மாற்றமும் இல்லை. மனைவியை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டான். மகன் மட்டுமே உலகமாக மாற்றிக்கொண்டான். லலிதாவும் தன் கூட்டுக்குள் சுருங்கிக்கொண்டாள்., குழந்தையும் அதன்பிறகு தாயை விட்டு விலக ஆரம்பித்தவன் விவரம் தெரியும் வயது வந்ததும் தாயை முற்றிலுமாக வெறுத்து ஒதுக்கிவிட்டு ஹாஸ்ட்டலில் சேர்ந்துவிட்டான். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த ஒரு உறவும் தள்ளிபோனதும் இன்னும் விரிசல் விழுந்துவிட்டது. 

லலிதாவும் வெளி உலகத்தை துறந்து வீட்டுக்குள்ளையே தன்னை முடக்கிக்கொண்டாள். ராம் எல்லாத்தையும் மறக்க தொழிலில் முழுவதுமாக இறங்கிவிட்டான் அதன் பிறகு தொழிலில் அசுர வளர்ச்சி கண்டான்.

கோதை மட்டுமே அப்பப்ப பொறந்த வீட்டுக்கு வந்து செல்வாள். அதுக்கூட அவளின் பிடிவாதத்தினால் மட்டுமே. விஸ்வநாதனால் பிள்ளைகளை மட்டுமே தடுக்க முடிந்தது மனைவியை தடுக்க முடியவில்லை.

ராசப்பனும் சிலகாலம் மட்டுமே உயிருடன் இருந்தார். பேரனின் பன்னிரண்டாவது வயதில் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றுவிட்டார்.

காலம் மாறினாலும் ராம், லலிதாவின் வாழ்க்கையில் எந்தமாற்றமும் இல்லை.

தோட்டத்து வீட்டில் பழைய நினைவுகளில் மூழ்கி தன்னை தொலைத்திருந்த ராமகிருஷ்ணன் சட்டைபையில் வைத்திருந்த போன் அடிக்கும் சத்தம் கேட்டதும் தான் பழைய நினைவுகளிலிருந்து மீண்டார். ஆனாலும், போன் அழைப்பை ஏற்று பேச தோன்றாமல் கட்டில் படுத்திருந்தார்.

மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு  வந்து கொண்டிந்த ரகுநந்தனின் நினைவெல்லாம் தன் தந்தையிடமே இருந்தது. கார் ஓட்டிக்கொண்டே அப்பாவின் போனுக்கு அழைத்துக்கொண்டே வந்தான். மற்றவர்களெல்லாம் இரு குடும்பமும் இணைந்த மகிழ்ச்சியில் பேசிக்கொண்டே வந்து கொண்டிருந்தனர். 

வீட்டு வாசலில் காரை கொண்டுவந்து நிறுத்தியவன் “அப்பத்தா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நா போயிட்டு வந்துடறேன் நீங்க அவங்கள பாத்துக்கோங்க…” என்றவன் அம்மாவிடமும் சொல்லிக்கொண்டு தன் அப்பாவை தேடி சென்றுட்டான்.

 தொடரும்…

Advertisement