Advertisement

அத்தியாயம்.13

அப்பாவிடம் தலையாட்டிவிட்டு வீட்டின் கொல்லைப்புறம்  ஓடிவந்தவள்  அங்கிருந்த கல்லில் அமர்ந்து கால்களை குறுக்கி அதில் முகம் புதைத்துக் கொண்டாள்.

அவள் எழுந்து வரவும் லஷ்மியும் அங்கிருந்து அவளின் பின்னால் வந்தவள் லலிதா அமர்ந்திருப்பதை பார்த்ததும் அருகில் வந்து அவளின் தலையை மெல்ல கோதிவிட்டாள்.

அதில் தலை நிமிர்ந்தவள் தன் எதிரில் நின்றிருந்த அண்ணியை பார்த்தாள்.

லலிதாவின் கண்கள் கலங்கிருப்பதை பார்த்தது

 லஷ்மி பதறிப்போய் “என்னடி ஆச்சு ஏ அழற?” என்றாள்.

“பயமா இருக்கு அண்ணி…” லலிதா அகிலாண்டத்தை நினைத்து கூறினாள்.

லஷ்மியோ திருமணத்தை நினைத்து பயப்படுகிறாள் என தவறாக நினைத்துக்கொண்டவள் “இதுக்கு போயா பயப்படுவ… நா என்னமோ ஏதோனுல நினச்சிட்டேன்…” என்றவாறே கொழுந்தியாவின்  அருகில் அமர்ந்தாள்.

“இதுக்கலாம்  பயந்தா என்னாகறது டி. இன்னும் நாம எத்தனையோ பாக்கவேண்டி இருக்கு… இப்படி எதுக்கெடுத்தாலும் பயப்படாத புரியுதா…? உன்ற அத்தையே மாமியாரா வரப்போறாங்க… ராஜாவும் ரொம்ப நல்லபையன் சின்ன வயசுல இருந்தே உன்ற மேல பாசம் வச்சிருக்கான்.  உன்ற மேல பாசம் வச்சிருக்க மாமியாரும், புருசனும் கிடைக்க போறாங்க… இதுக்கு மேல உனக்கு என்ன வேணும்? எத நினைச்சும் பயப்படாம சந்தோசமா இரு டி…” 

லஷ்மி பேசிக் கொண்டிருக்கும்போதே  கணவனின் குரல் கேக்கவும் “உன்ற அண்ணன் கூப்டறாங்க நா போறேன் நீ எழுந்து மூஞ்சை கழுவிட்டு வா…” என்று கூறிவிட்டு சென்றாள்.

‘என்ன மன்னிச்சிடுங்க அண்ணி… என்னால ராஜா மாமாவ கண்ணாலம் பண்ணிக்க முடியாது. இத எல்லார்கிட்டயும் சொல்ல பயமா இருக்கு… சொன்னா செத்துருவேனு சொல்லி மிரட்டறாங்க… நா என்ன பண்ணுவேன்’ மனதில் நினைத்தவாறே அழுதவள் சிறிது நேரம் கழித்து கண்ணீரை துடைத்துக்கொண்டு எழுந்து யாருக்கும் தெரியாமல் ராமை பார்க்கச் சென்றாள்.

நெல் வயலுக்கு தண்ணி கட்டிக்கொண்டிருந்தவன்  தூரத்தில்  லலிதா வருவது தெரியவும் ஆச்சர்யபட்டவாறே அவளை நோக்கி சென்றான்.

அருகில் சென்றவன் அவளின் முகம் அழுததில் சிவந்திருக்கவும் பதறிப்போய்  “லதாம்மா என்னாச்சு டா…” என்றான்.

அவன் கேட்ட நொடி அவனை கட்டிக்கொண்டு வீட்டில் நடந்தது அத்தனையும் சொல்லியவள் “எனக்கு பயமா இருக்கு மாமா… அப்படியே செத்துபோயிறலாம்னு தோணுது மாமா…” என்றவாறே அவனின் மார்பில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.

எப்போதும் அவன் அவளின் கையை பிடிச்சாவே கூச்சப்பட்டு கையை விலக்கிகொள்ளபவள் இன்று யாரைபத்தியும் கவலை படாமலே தன்னைக் கட்டிக்கொண்டதில் வியப்பு கலந்த ஆச்சரியத்தில் இருந்தவன் அவள் சொன்னதை கேட்டதும் கோபம் கொண்டு அவளை தன்னிலிருந்து பிரித்து அவளின் கையை பிடித்து  மோட்டார் ரூமிற்கு இழுத்துச்சென்றான்.

அவளும் எந்த மறுப்பும் சொல்லாமல் அவன் இழுத்த இழுப்பிற்கு கூடவே சென்றாள்.

மோட்டார் ரூம்  வந்ததும் அவளின் கையை விட்டுவிட்டு  ரூமை திறந்து வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து வந்தவன் அவளின் கையில் திணித்து “குடிச்சிட்டு மீதிய எனக்கும் குடு லதாமா…” குரலில் கோபமோ ஆத்திரமோ எதுவுமில்லாமல் சாதாரணமாக கூறினான்.

அவன் கையில் மருந்து டப்பாவை திணித்ததுமே உடல் நடுங்க பயத்துடன் அவனை  பார்த்தாள்.

அவள் குடிக்காம நிக்கவும் “ஏ லதாமா குடிக்காம நிக்கற சீக்கரமா குடிச்சிட்டு குடு… உன்றக் கைய காலம் முழுசும் பிடிச்சிட்டு ஒன்னா வாழனும் நினச்சிருந்தேன்., நீதா செத்துப்போறேனு சொல்ற வாழ்க்கையில் தான் உன்றக்கூட வரமுடியலை சாகறதுலையாவது ஒன்னா உன்ற கூட வரேன்…” என்றான்.

அவனின் வார்த்தையை கேட்டதும் மருந்து பாட்டிலை தூக்கி எறிந்துவிட்டு கதறியவாறே அவனை இறுக அணைத்துக்கொண்டாள்.

“ச்சீசீ… ஒழுக்கங்கெட்ட நாயே… இந்த வயசுலையே உனக்கு ஆம்பள சுகம் கேக்குதாடி…” அவர்களின் பின்னாலிருந்து ஆக்ரோசமான குரல் வந்தது.

ராமை கட்டிக்கொண்டு அழுதவள் ஆக்ரோசமான குரல் கேக்கவும் தலையை நிமிர்த்தி பார்த்தவள் ராமின் பின்னால் நின்றிருந்த அவனின் தந்தை ராசப்பனை பார்த்ததும் அவரின் கண்களில் தெரிந்த அருவெறுப்பான பார்வையும், காது கூசும் வார்த்தை கேட்டு உடலும் மனமும் அவமானதில் பற்றி எரிய  ராமை விட்டு விலகி பின்னால் நகர்ந்தாள்.

தண்ணி கட்டிக்கொண்டிருந்தவர் மகன் வந்து தண்ணி கட்டிக்கொண்டு  சாப்பிட வீட்டுக்கு போக சொல்லவும்.., வீட்டுக்கு போய் சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு திரும்ப வயலுக்கு வந்தவரின் பார்வையில் மகன் ஒரு பெண்ணின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு மோட்டார் ரூமை நோக்கி சொல்லவும் அவரும் அவர்களின் பின்னே வந்தவர் மகன் பேச்சை கேட்டதும் ஆடிப்போயி விட்டார். 

அதிலும் அந்த பொண்ணு தன் ஜென்ம விரோதியின் மகள் என தெரிந்ததும் ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வந்தது.  பல்லை கடித்து கொண்டு நின்றவர் அவள் மகனை  கட்டிக்கொண்டு நிக்கவும் வார்த்தைகளை நெருப்பாக கக்கினார். 

திரும்பி நின்றிருந்தவன் தன் பின்னால் இருந்து வந்தக் குரல் தந்தையுடையது என தெரிந்தாலும் துளிக்கூட அதிராமல் அவரை திரும்பியும் பார்க்காமல் தன்னை விட்டு பயத்தில் பின்னால் சென்றவளின் கையை பிடித்து இழுத்து தன் அணைப்பில் திரும்ப கொண்டு வந்த பின்தான் தன் தந்தையை பார்த்தான்.

அவன் தந்தையை பார்த்த போதும் கூட பயமோ, பதட்டமோ எதுவுமில்லை. அழுத்தமான பார்வை. என்னவளை நீங்க எப்படி அந்த வார்த்தை சொல்லலாம்? என்ற கேள்வி பார்வை மட்டுமே.

மகனின் அழுத்தமான பார்வையே அவரை ஒரு நிமிடம் திகைக்க வைத்தது. இருந்தும் அவர் ஈகோ அவரை பேசத் தூண்டியது.

“ஓடுகாலி பெத்த நாய் நீ… உனக்கு என்ற மகன் கேக்குதோ? உனக்கு ஆம்பளை சுகம் வேணும்னா வேற எவன்கிட்டையாவது போக வேண்டியது தானேடி…” என்றவர் அவளை தன் மகனிடம் இருந்து இழுத்து கீழே தள்ளிவிட்டு அவளை அடிக்க போயிவிட்டார்.

தந்தை பேசியதிலே அருவெறுப்பானவன் திடீரென்று அவர் தன் பிடியிலிருந்து இழுத்து கீழே தள்ளிவிட்டு அடிக்கப்போகவும் அவரின் கையை  தடுத்து பிடித்தவன் “இனி ஒரு வார்த்தை பேசுனிங்கனா உங்க மகனை மொத்தமா இழக்க வேண்டியது வரும்ப்பா…” என்றான்.

“என்னடா இந்த ஒழுக்கங்கெட்ட நாய்க்காக உன்ன பெத்தவனையே எதிர்த்து பேசுவியாடா…?”

“அவ ஒழுக்கங்கெட்ட நாயினா நா ஆருங்ப்பா? நாந்தான் அவள காதலிக்க வச்சேன். நீங்க அவளை  சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் எனக்கும் சேரும்ப்பா…” 

அவன் தந்தையிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே கிணற்றில்  ‘தொப்’ என  விழுகும் சத்தம் கேக்கவும்,

   

ஏதோ தோன்ற லலிதா இருந்த இடத்தை பார்த்தவன் அவள் அங்கு இல்லை என்றதுமே அடுத்த நொடி மின்னல் வேகத்தில் ஓடிசென்று கிணத்திற்குள் குதித்திருந்தான்.

ராசப்பனுக்கு ஒரு நிமிடம் அங்கு நடப்பதை புரிந்துக்கொள்ளவே தேவைபட்டது. மகன் கிணத்துக்குள் குதித்ததை பார்த்ததும் அவரும் கிணத்தை நோக்கி ஓடினார்.

கிணத்துக்குள் குதித்தவள் நீச்சல் தெரியாததால் ரெண்டுமுறை உள்ளே சென்று விட்டு மேல வந்தவளின் தலைமுடியை பிடித்து இழுத்து கிணற்றின் சுவரின் அருகில் கொண்டு வந்தவன் படியில் அவளை தூக்கி அமரவைத்து தானும் கீழிருந்த படியில் நின்றவாறே அவளை தூக்கி தோளின் மேல் போட்டுக்கொண்டு  மேலே ஏறி வந்ததும் அவளை தரையில் படுக்கவைத்து குடித்திருந்த தண்ணியை வெளியேற்றினான்.

குடித்திருந்த மொத்த தண்ணி வெளியேறியதும் மெல்ல கண்களை திறந்தாள். அவள் கண்ணை திறந்ததும் கண்கள் சிவக்க கோபத்துடன் ‘பளார்’ என அவளின் கன்னத்தில் தன் கரத்தை இறக்கியிருந்தான். 

ராசப்பனே மகனின் கோபத்தில் ஒரு நொடி அதிர்ந்துவிட்டார்.

அவன் அடித்ததில் கண்கள் கலங்க கன்னத்தில் கை வைத்தவாறே அவனை மிரட்சியுடன் பார்த்தாள்.

கோபத்தில் அடித்தவன் அவள் கண்கள் கலங்கியதை பார்த்ததும் அவளை இழுத்து அணைத்துக்கொண்டு “ஏ லதாம்மா இப்படி பண்ண? நீ இல்லைனா நா மட்டும் உசுரோட இருப்பேனா? இனி சாகறதா இருந்தா சொல்லிடு ரெண்டு பேரும் சேர்ந்தே செத்துபோயிடலாம்” என்றவாறே கதறிவிட்டான்.

அவள் கிணத்தில் விழுந்ததும் அவன் உயிர் அவனிடம் இல்லை. தண்ணியிலிருந்து மேலே தூக்கிவந்து அவளை தரையில் கிடத்தும்போது உணர்வே இல்லாமல் துவண்டு போய் கிடந்தவளை பார்த்தவன் உயிரோடு மறித்துவிட்டான். அவள் கண்களை திறந்ததும்தான் போன உயிர் திரும்ப வந்தது. ஒரு நொடியில் மரண பயத்தை காட்டிவிட்டாளே என்கிற கோபத்தில் அவளை அடித்துவிட்டான். பின்புதான் அவள் கண்கலங்குவதை பார்த்ததும் இழுத்து அணைத்துக்கொண்டு மனதின் பாரம் நீங்க கதற ஆரம்பித்தான்.

ராசப்பன் மகன் கதறியவாறே அவளிடம் சொன்ன வார்த்தையை கேட்டதும் உடைந்துவிட்டார். அதற்குமேல் மகன் அழுவதை சத்தியமாக அவரால் பார்க்க முடியவில்லை. 

அவரின் மனதிற்கு நன்றாக புரிந்துவிட்டது. இனி தன் கையில் எதுவுமில்லை என்று. அப்படியே எதாவது பண்ணப்போனால் மகன் தங்களுக்கு இல்லாமல் போயிவிடுவான் என்பதை உணர்ந்தவர் அங்கிருந்து மெல்ல வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

“என்ன எதுக்கு மாமா காப்பாத்துனிங்க? நா ஒழுக்கங்கெட்டவ… நா உங்களுக்கு வேண்டாம் மாமா. என்ன விடுங்க நா போயிடறேன்.” 

அவளை கட்டிக்கொண்டு கதறிகொண்டிருந்தவன் அவள் சொன்ன வார்த்தையில்  அவளை விட்டு விலகி எழுந்தவன் எதுவும் பேசாமல் தலையை அழுந்தக்கோதி தன் கோபத்தை கட்டுபடுத்த முயன்றான்.

முடியாமல் போகவும் அங்கிருந்த கல்லை தன் காலால் எட்டி உதைத்தான்.

அவன் கல்லில் காலை உதைத்தும் பெருவிரல் நகம் பேந்து ரத்தம் வந்தது.., அதனைக்கூட உணராமல் கோபத்துடன் திரும்ப கல்லை உதைக்கபோனான்.

அவன் கோபத்துடன் எழுந்ததுமே பயத்தில் அவனை பார்த்து கொண்டிருந்தவள் அவன் தன்னையே காயபடுத்திக்கொள்ளவும் எழுந்து ஓடிப்போய் அவனின்  காலின் அருகில் அமர்ந்து காலை பிடித்தவாறே “என்ன மாமா பண்றிங்க? கால்ல ரத்தம் வருது.” 

அவளை விட்டு தள்ளிப்போய் நின்றவன் “எனக்கென்ன ஆனா  உனக்கென்ன  லதாமா? அதான் என்ன விட்டு போறேன்னு சொல்லிட்டல… போ… ஏங் கண் முன்னாடி நிக்காத லதாமா.”

“ப்ளீஸ் மாமா… நிறைய ரத்தம் வருது… கால காட்டுங்க.” என்றவாறே அவனின் அருகில் மீண்டும் வந்தாள்.

“கிட்ட வராத லதாமா.” கோபத்துடன் அதே காலில் திரும்பவும் கல்லை எத்தினான். பாதி பேந்திருந்த நகம் இப்போது முழுவதும் பேந்து ரத்தம் அதிகமாக வெளியேர ஆரம்பித்தது. 

தன்னவன் தன்னையே காயபடுத்திக்கொள்வதை தாங்கமுடியாமல் கதற ஆரம்பித்தாள்.

“ஐயோ நிறைய ரத்தம் வருது மாமா. கால காட்டுங்க மாமா. இனி நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன். இனி நீங்களே போக சொன்னாலும் உங்களை விட்டு போகமாட்டேன் மாமா. என்ன நம்புங்க மாமா…” கெஞ்ச ஆரம்பித்தாள்.

அவளின் கதறல் அவனின் உயிர் வரை சென்று தாக்கியது.பின் எதுவும் பேசாமல் அவளின் அருகிலே வந்து மண்டியிட்டு அமர்ந்தவாறு கண்ணீரை துடைத்து விட்டான்.

அவளுக்கு அவனின் அந்த செய்கையே போதுமானதாக இருந்தது. அவனின் கோபம் போய்விட்டது என்பதை உணர்ந்தவள் வேகமாக எழுந்து நின்று அவனின் கையை பிடித்து “என்றக்கூட வாங்க மாமா…” என்றவாறே அவனை கூட்டிச்சென்றாள். இல்லை இல்லை அவனை இழுத்துச்சென்றாள்.

தண்ணி ஓடும் பம்செட்டுக்கு வந்தவள் இங்கையே உட்காருங்க மாமா… என்றவள் ஓடிப்போய் காயத்தில் வைத்து கட்ட கிணத்துபூண்டு செடியை தேடி பிடிங்கிக்கொண்டு வந்தவள் அவனின் ரத்தம் வந்த காலை தண்ணீரில் கழுவிவிட்டு கொண்டு வந்திருந்த செடியிலிருந்து இலையை பறித்து உள்ளங்கையில் வைத்து கசக்கி அதன் சாறுடன் காயத்தில் வைத்து தாவணியை கிழித்து கட்டுபோட்டுவிட்டுக் கொண்டிருந்தவளை தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

பதற்றம், பயம், கண்ணீர் என பலவகை உணர்வுகள் அவள் முகத்தில் மாறி மாறி வந்து கொண்டிருந்ததை வெறித்துகொண்டிருந்தவன் அந்த நொடியே முடிவெடுத்து விட்டான். இனி அவளை விட்டு அவளுக்காக கூட பிரியக்கூடாதென்று முடிவெடுத்தவன் அதனை செயலாற்ற அவளிடம் உறுதி கேட்டான்.

“நா என்ன சொன்னாலும் கேப்பேனு சொன்னியே அது உண்மைதானே லதாம்மா…? இல்லை என்ற கோபத்த குறைக்கறதுக்காக சொன்னியா?”

தரையில் அமர்ந்து காயத்திற்கு மருந்துவைத்து கட்டிக்கொண்டிருந்தவள் அவனின் கேள்வியில் தலை நிமிராமலே “நெசமாத்தானுங்க மாமா உங்க மேல சத்தியமா நீங்க என்ன சொன்னாலும் கேப்பேன் மாமா. மறுத்து பேசமாட்டேன்” என்றாள்.

“அப்போ என்றக்கூட எழுந்து வா லதாமா…” என்றவன் அவளின் கையை பிடித்துகொண்டு சென்றான்.

அவன் இழுத்த இழுப்பிற்கு கேள்வியே கேக்காமல் சென்றாள்.

Advertisement