Advertisement

மனதிற்குள் ‘பொண்ண பெத்து வச்சிருப்பிங்கனு பாத்தா பொறுக்கிய பெத்துவச்சிருக்கிங்ளே மாமா’ மனதிற்குள் மாமனை அர்ச்சித்தான்.

அவன் வாயை முடியதும் அவனின் உள்ளங்கையில் முத்தம் வைத்தாள்.

அதில் மிரண்டவன் அவள் வாயிலிருந்து கையை எடுத்துவிட்டான்.

அவன் கையை எடுத்ததும் “ஏ மாமா நா சொல்லி முடிக்கறதுக்குள்ள வாய மூடிட்ட இப்ப பாரு எல்லாரும் நம்மல தப்பா பாக்கறாங்க…”

‘அடியே நா வாய மூடலைன்னா இன்னும் கேவலமா பாத்துருப்பாங்கடி…’

“நா என்ன சொல்ல வந்தேனா நானும் மாமாவும் கொடைக்கானல் போய் மூனுநாள்  ஒன்னா சுத்தலாம்னு போனா என்ற மாமனார்க்கு எப்படியோ உண்மை தெரிஞ்சு அங்க வந்துட்டார். அப்பறம் அவரும் எங்ககூடவே இருந்துட்டாரா… அதுல மாமாவுக்கு வருத்தம்…”

‘இன்னும் கொஞ்சநேரம் இவள இங்க விட்டு வச்சா எங்க குடும்ப மானத்தையே வாங்கிடுவா போல’ என நினைத்தவன் அவளின் கையை பிடித்தவாறே “மாமா நாங்க வெளிய இருக்கோம் நீங்க பேசிட்டு வாங்க…” அவளை இழுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான்.

லஷ்மி வெளியே போகும் மகளை  பார்வையாளே எரித்துக்கொண்டிருந்தார். அவரின் மனதில் கோபம் கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டிருந்தது. மகள் மட்டும் தனியாக சிக்கினால் கொன்றுவிடுமளவுக்கு அத்தனை கோபம்.

அவளின் கையை பிடித்து வெளியே இழுத்துக்கொண்டு வந்தவன் சிறிது தூரம் வந்ததும் அவளின் கையை விட்டுவிட்டு  தலையை கோதிக்கொண்டே மூச்சை இழுத்துவிட்டான்.

‘அப்பா கொஞ்சநேரத்துல என்னையே பதறவச்சிட்டாளே இந்த ராட்சசி… ஒருநாளுக்கே என்ன தலையால தண்ணி குடுக்க வைக்கறா… இதுல வாழ்நாள் முழுசும் வரப்போறாங்றத நினச்சா இப்பவே தலை சுத்துதே…’ தன்னையறியாமலே அவளுடனான தாம் வாழப்போகும் வாழ்க்கையை நினைத்து புலம்பியவன், பின்பு அவளிடம் “ஏன்டி அப்படி சொன்ன?”  என்றான்.

 அவனின் அருகில் நெருங்கி தந்தையிடம் பண்ணதை அவனிடமும் செய்ய சட்டை  பட்டனை தொட வரவும், பதறிப்போனவன் சுற்றிலும் பார்த்தவாறே “ஏய் எதுவா இருந்தாலும் ஒரு அடி தள்ளியே நின்னுப்பேசு” என்றான்.

அவன் சுற்றிலும் பார்ப்பதை பார்த்ததும் “ஏ மாமா ஆள் இல்லாதப்ப பக்கத்தல வந்தா ஓகேவா…” 

“நீ அறைதான் வாங்கப்போற டி முதல்ல நா கேட்டதுக்கு பதில் சொல்லு டி?” என்றான்.

“சரி சரி கோபபடாத மாமா சொல்றேன்… எப்படியும் நீ லவ்வ சொல்லப்போறதில்லைனு தெரிஞ்சிபோச்சு அதான் இந்த சான்ஸ்ச நானே யூஸ்பண்ணி கொஞ்சுண்டு பொய் சொல்லிக்கிட்டேன்…”

“எது நீ சொன்னது கொஞ்சுண்டு பொய்யா? அடியேய் நீ வாயத்திறந்தா அத்தனையும் பொய்யாத்தான் டி வருது இதுல கொஞ்சுண்டு பொய் சொன்னேனு நாக்கூசாம ஏங்கிட்டையே பொய் சொல்ற?” 

“அது எப்படி நாம ஆறு வருசமா லவ் பண்றோம்…?, காலேஜ் கட்டடுச்சுட்டு ஊர் ஊரா சுத்துனோம்…? இதெல்லாம் கூட பொறுத்துப்பேன்டி ஆனா கடைசில சொன்னப்பாரு அததான்டி என்னால தாங்க முடியலை… இதுல என்ற அப்பாவையும் இழுத்துவிடற?”

“என்ன மாமா ரொம்பத்தான் குதிக்கற… என்ற அத்தபையன் கண்ணாலம் பண்ணாம அரைக்கிழவனா சுத்திட்டு இருக்கானே சரி போனா போகுது நாம வாழ்க்கை குடுப்போம்னு பாவபட்டு வாழ்க்கை குடுக்க நினச்சா ரொம்பத்தான் முறுக்கிக்கிட்டு திரியற?”

அவளை நெருங்கியவாறே “என்ன சொன்ன திரும்ப சொல்லுடி” என்றான்.

அவளும் அவன் கைக்கு சிக்காமல் நகர்ந்துக்கொண்டே “என்ன  கண்ணாலம் பண்ணிக்கலைனா நீ கடைசி வரைலும் சன்னியாசியாத்தான் சுத்தனும் மாமா” என்றவாறே ஓடிவிட்டாள்.

அவள் சென்ற திசையை பார்த்தவாறே  ‘ராட்சசி கொஞ்சநேரத்துல என்ன மொத்தமா மாத்திட்டாளே…’ மனதிற்குள் நினைத்தவன் புன்னகைத்தவாறே லலிதா இருந்த அறைக்கு சென்றான்.

அவர்கள் வெளியே சென்றதும் எல்லாருடைய முகத்தையும் பார்த்த அகிலேஷ் “ஷர்மி சும்மா சொல்றா பெரியப்பா… அவ லவ் பண்ணது முதல்ல ரகு மச்சானுக்கே தெரியாது. இப்போ கொஞ்சநாளாதான் தெரியும். ஷர்மிதான் மச்சான் மேல உசுரையே வச்சிருக்கா அவர் கிடைக்கலைனா கல்யாணம் பண்ணிக்கவே கூடாதுங்ற முடிவுல இருக்கா… அதான் இன்னைக்கு வாய்ப்பு கிடைக்கவும் எப்படியாவது அவர கல்யாணம் பண்ணிக்கோணும்னு பொய் சொல்லிட்டு போறா…” என்றான்.

தமிழரசன் “அறிவு இருக்கா இல்லையாடா? இத ஏன்டா எங்ககிட்ட முன்னாடியே சொல்லலை? சொல்லிருந்தா ஷர்மிம்மா மனச மாத்திருப்போம்ல? இந்த அளவுக்கு வளரவிட்டு இப்போ வந்து சொல்ற?”

தம்பி கேட்ட கேள்விதான் முருகேசன் மனதிலும் ஓடியது.

அண்ணனின் முகத்தை பார்த்தவாறே லலிதா “ஏனுங்ண்ணா என்ற மகன் உன்ற பொண்ணுக்கு பொருத்தமானவன் இல்லைனு நினைக்கறிங்ளா?”

“அப்படிலாம் இல்லடா குட்டிமா… மாப்பிள்ளைக்கு என்ற பொண்ண புடிக்கலைங்றப்போ எப்படிம்மா?”

லலிதா, “மாமா ரகுவோட மனசுல இருக்கறது தெரியாம அத்தைக்கிட்ட சொல்லிருக்க மாட்டாங்கண்ணா… நீங்க கவலைபடாதிங்க ரகுக்கு மருமகளை புடிச்சிருக்கு…”

“ஆமா முருகேஷா என்ற பேரனுக்கு புடிக்கலைனா அவன் இம்புட்டு நேரம் உன்ற மக பேசற அத்தனையும் கேட்டுட்டு இருந்துருக்கமாட்டான். இப்போ நீயும்தானே பாத்த அவனும்தான் உன்ற மகக்கூட என்ற கால்ல விழுந்தான். அதலாம் அவனுக்கு உன்ற மகளை பிடிச்சிருக்கு… நீ எதையும் யோசிக்காத நாம வூட்டுக்கு போனவுடனே நல்ல நாள் பாத்து புள்ளைங்களுக்கு கண்ணாலத்த பண்ணிவச்சிப்போடலாம்.”

“முருகேசனுக்கும் லஷ்மிக்கும் அவரின் வார்த்தையை கேட்டதும்தான் மனம் நிம்மதியானது.  மகள் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கும்போது பெத்தவங்களுக்கு அதைவிட வேற என்ன சந்தோசம்  வேண்டும்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே உள்ளே வந்த மகளைதான் முறைத்துக்கொண்டிருந்தார் லஷ்மி. 

‘ஆத்தி லஷ்மி காளி அவதாரம் எடுத்து நிக்குதே கைல சிக்குன உன்ன பொலி போட்ரும்டி ஷர்மி’ மனதிற்குள் நினைத்தவள் ஒன்னும் தெரியாதவளை போல முகத்தை வைத்துக்கொண்டு தன் தாத்தாவின் அருகில் போய் நின்றுக்கொண்டாள்.

டாக்டரை பார்த்து பேசிவிட்டு சிகிச்சைக்கு உண்டான பணத்தை கட்டி முடிச்சிட்டு சிறிது நேரம் கழித்து உள்ளே வந்த ரகுவை பார்த்ததும் முருகேசன் “ஷர்மிம்மா சின்ன புள்ள மாப்பிள்ள… எதோ விளையாட்டுதனமா சொல்லிபுடிச்சி நீங்க தப்பா எடுத்துக்காதிங்க மாப்பிள்ளை…” என்றார்.

ரகு புரியாமல் பார்க்கவும் அகிலேஷ் “நா பெரியப்பாகிட்ட சொல்லிட்டேனுங் மச்சான்… உங்க மேல தப்பில்லைனு”

“ஓஓஓ… பரவாலைங் மாமா நா தப்பா எடுத்துக்கலை” என்றவன் மனதிற்குள் ‘இன்னும் இவள சின்னபுள்ளைனு நம்பிட்டு இருக்காரே என்ற மாமா… அவ பேசறதெல்லாம் கேட்டா என்னாவாறோ’ என்றுதான் நினைத்துக்கொண்டான்.

பெண்பிள்ளைகளை பெற்ற எல்லா தந்தைகளுக்கும் தன் மகள் எவ்வளவு வளர்ந்தாலும் அவர்கள்  கண்ணுக்கு சிறுகுழந்தையாகத்தான் தெரிவர். அதற்கு முருகேசன் மட்டும் விதிவிலக்கா என்ன?.

தன் அண்ணனிடம் சகஜமாக முறை சொல்லி அழைத்து பேசும் மகனைதான் பார்த்துக்கொண்டிருந்தாள் லலிதா… தன்னை ஒதுக்கினாலும் தன் பிறந்த வீட்டு ஆட்களிடம் சகஜமாக பேசுகிறானே என நினைத்து நிம்மதிக்கொண்டாலும் தன்னையும் இதேபோல் என்றாவது ஒருநாள் ஏற்றுக்கொள்வானா? என்ற ஏக்கத்துடன் பார்த்தாள்.

மாமனுக்கு பதில் கூறியவன் உள்ளூணர்வு உந்த தன் தாய் இருந்த பக்கம் பார்வை திருப்பியவனின் விழிகளில் தன்னை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் தாயை பார்த்ததும் அவரிடம் சென்றவன் “நா டாக்டர்கிட்ட பேசிட்டேன் உங்கள வீட்டுக்கு கூட்டிப்போகலாம்னு சொல்லிட்டாங்கம்மா…” என்றான்.

மகன் தன்னிடம் வந்ததையே நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்தவள் அவன் பேசியதை கேட்டதும் அவளையறியாமலே கண்களில்  கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

“உன்ன ஒரே ஒரு தடவை தொட்டுபாக்கட்டுமாப்பா…”  மகன் எதாவது சொல்லிவிடுவானோ என்ற பயத்துடன் தான் கேட்டாள்.

தாயின் அருகில் பெட்டில் அமர்ந்தவன் அவரின் கண்ணீரை துடைத்துவிட்டவாறே “என்னம்மா ஏங்கிட்டப்போய் இதலாம் கேக்கறிங்க? நா உங்க பையன்ம்மா…”

“அவர் ஆசையாக மகனின் முகத்தை வருடிபார்த்தவாறே அவனின் நெற்றியில் ரொம்ப வருடங்களுக்கு பிறகு முத்தமிட்டாள்.

தாயின் ஸ்பரிசத்தில் நெகிழ்ந்தவன் அவர் தந்த முத்தம் மனதை குளிர்வித்தது.., எத்தனை வயதானாலும் பிள்ளைகளுக்கு தாயின் அன்பான ஒற்றை இதழ் முத்தம் சுகம்தானே…

    அதனை ரசித்தவன் “நா உங்களை ரொம்பவே காயபடுத்திட்டேன் சாரிம்மா…” 

“அம்மாவ நீதான் மன்னிக்கனும் ரகு… அம்மா மேல உனக்கு கோபம் போயிடுச்சா ரகு?”

“ம்ம்… போயிடுச்சும்மா…”

தாய்,மகன் பாசம் அங்கிருந்தோரின் மனதை நெகழச் செய்தது.

பொன்னுதாயி, “வூட்டுக்கு போனவுடன் என்ற பேரனுக்கும், மருமகளுக்கும் சுத்திப்போடனும் ஏங்கண்ணே பட்ருச்சு” என்றார்.

ஷர்மி, “ஏனுங் அம்மாச்சி உன்ற பேரனுக்கும் மருமகளுக்கும்தா சுத்திப்போடுவியா எனக்கு சுத்திப்போடமாட்டியா?” என வம்பிழுத்தாள்.

“உனக்கில்லாததா ராசாத்தி… நீ வரப்போற நேரம்தா என்ற மகன் குடும்பமே ஒன்னா சேந்துருக்கு…”

“ஓஓஓ… நீ அப்படி வர… ம்ம் இதுவும் நல்லாதான் இருக்கு அம்மு…”

“அதென்னக்கண்ணு அம்முனு கூப்டற? ஆயானு கூப்படனும், இல்லைனா அம்மச்சினு கூப்டனும் நீ ரெண்டுமே இல்லாம வேற மாதிரி கூப்டற…”

“அவரின் தோளில் கை போட்டவாறே “அதுவந்து அம்மு அம்மச்சிய சுருக்கிட்டேன்… அததான் செல்லமா அம்முனு கூப்பிடறேன்… நல்லாருக்கா அம்மு?”

“நீ எப்படி கூப்பிட்லாலும் இந்த கிழவிக்கு சந்தோசம் தான் கண்ணு…”

அவரின் கன்னத்தில் முத்தமிட்டவாறே “தேங்ஸ் அம்மு… உன்ன எனக்கு ரொம்ப புடிச்சிடுச்சு… இனிமே நாம ரெண்டுபேரும் ப்ரண்ட்ஸ் ஓகேவா அம்மு?”

“சரி ராஜாத்தி… என்ற குலத்தைய தழைக்கவைக்க வந்த ராஜாத்தி நீ… நீ என்ன சொன்னாலும் எனக்கு சம்மதம்தான்…”

அவர்களின் பேச்சை கேட்டு மற்றவர்களெல்லாம் சந்தோசபட்டார்களென்றால் ரகு மட்டும்  ‘இவ சும்மாவே ஆடுவா இதுல அப்பத்தா சலங்கைய வேற கட்டிவிடுது…’ பின்னாடி நடக்கபோவதை அறிந்தவாறே இப்போதே புலம்ப ஆரம்பித்தான்.

வரும்போது இருந்த பதட்டம் எதுவும் இல்லாமல் சந்தோசமான மனநிலையுடன் வீட்டிற்கு கிளம்பினார்.

தோட்டத்து வீட்டில் ஒரு ஜீவன் இவர்கள் நிலைக்கு முற்றிலும் மாறாக இதயம் உடைந்து அந்த வலியில்  துடித்துக்கொண்டு  தனது கடந்த காலத்தில் மூழ்கிருந்தது.

Advertisement