Advertisement

அத்தியாயம்.9

தளர்ந்த நடையுடன் செல்லும் தந்தையை பார்த்து கொண்டு நின்றிருந்தவனின் கைகளை பற்றியவாறே “மாமா…” என்றழைத்தாள்

அவள் அழைத்த மறு நொடி கோபத்துடன் அவள் பற்றிருந்த கையை உதறியவன் “ஏய்…!” என உருமியவாறே விரல் நீட்டி எச்சரித்தான்.

அவன் கையை உதறியதிலே பயந்துப்போய் ஒரு அடி பின்னால் நகர்ந்து நின்றவள் அவனின் உக்கரமான தோற்றத்தை பார்த்து மிரண்டு போய்விட்டாள்.

இதற்கு முன்னாடியும் அவளிடம் கோபபடுபவான்தான்  அந்த கோவம் அவளை பாதித்ததே இல்லை. ஆனால் இப்போது அவன் பார்க்கும் பார்வையில்கூட கோபம் தீயாக அவளை சுட்டது.

அவனின் கோபத்தில் மிரண்டு போய் நின்றவளின் விழிகள் கலங்க அவனை ஏறிட்டாள். அவளின் கண்ணீர் கூட அவனின் கோபத்தை தனிக்க முடியவில்லை…

“ஆருக்கு ஆருடி மாமா? உங்க அத்தையே என்ற அப்பாவ வேண்டாம்னு சொன்னதுக்கப்பறம் எந்த உரிமையில என்ன மாமானு கூப்ட்ட?”

“கண்டிப்பா தாத்தா அத்தைய எங்க வூட்டுக்கு கூட்டி போறதுக்கு சம்மதிச்சிருக்க மாட்டாங்க … உங்க அப்பா எதோ தப்பா புரிஞ்சிக்கிட்டாங்கனு நினைக்குறேன் மா…”

அவள் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அவளின் கழுத்தில் கையை வைத்து நெறிக்க போய்விட்டான் பின் தான் இருக்குமிடம் நினைவு வந்து அவளின் கழுத்திலிருந்து கையை எடுத்தான்.

“ச்சே…” தலையை கோதி கோபத்தை குறைக்க முயன்றவனால் முடியாமல் போனது.

“இன்னொரு முறை மாமானு கூப்பிட்டேனா உன்ன கொன்றுவேன்டி…”

அவன் சொன்னதில் ரோசம் வர கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு “நா அப்படித்தா சொல்வேன் என்னடா பண்ணுவ?” அவனின் முன்னால் சிலிர்த்துக்கொண்டு நின்றவள்,

“மாமா… மாமா… மாமா…  இன்னுமும் சொல்லுவேன் இதுக்கு மேலேயும் சொல்வேன் உன்னால முடிஞ்சத பண்ணு மாமா… எதோ கோபத்துல இருக்கியேனு கொஞ்சம் அடங்கிப்போனா ரொம்பத்தான் துள்ளற… உன்ற மிரட்டலுக் கெல்லாம் பயப்படற ஆள் நா இல்லை மாமா…” என அவனையே ஒரு நிமிடம் அதிர வைத்துவிட்டு ஹாஸ்பிட்டலை நோக்கி சென்றாள்.

திமிராக பேசிவிட்டு போனவளை பார்த்து பல்லை மட்டும்தான் அவனால் கடிக்க முடிந்தது. ‘பொண்ணா இவ ராட்சசி… ராட்சசி… எனக்குனு வந்து வாச்சிருக்கா பாரு…’ மனதிற்குள் அவளை திட்டிக்கொண்டு அப்பத்தாவை கூட்டி வர உள்ளே சென்றான்.

லலிதா இருந்த அறைக்கு வந்தவள் உள்ளே நடந்த பேச்சை கேட்டதும் அறைக்குள் நுலையாமல் வெளியே நின்றுவிட்டாள்.

அவளின் பின்னால் வந்த ரகு அவளை தாண்டி உள்ளே போகவும் அவனின் கையை எட்டி பிடித்து தன் அருகில் இழுத்து நிற்க வைத்தவள் “நா சொன்னதுக்கு அம்புட்டு கோபபட்ட மாமா இப்போ நீயே கேளு…” என்றாள்.

முதலில் அவள் இழுக்கவும் ஒன்றும் புரியாமல் அவளை பார்த்தவன் அவள் சொன்னதை கேட்டதும் முறைத்து பார்த்தான்.

“என்ன மாமா உனக்கு எப்பபாத்தாலும் என்ன சைட் அடிக்கறதே வேலையா போச்சு…” 

அவன் இன்னும் உக்கரமாக முறைக்கவும் “சரி சரி அப்படி பாக்காத மாமா எனக்கு வெக்கம் வெக்கமா வருதுல” வெக்கபடற மாதிரி நெளிந்தாள்.

அதில் கடுப்பானவன் அவளை திட்ட ஆரம்பிக்கும்போது உள்ளே கேட்ட குரலில் அப்படியே நின்றுவிட்டான்… அவனாலும் அதனை நம்பமுடியவில்லை.

ரகு கோபபட்டு வெளியே போனதும் ஷர்மியும் அவன் பின்னால் சென்ற பிறகு பகையால் பேசாமல் இருந்த இரு குடும்பமும் ரொம்ப வருடம் கழித்து ஒன்றாக சேர்ந்த அந்த நிமிசம் யாரு முதலில் பேசுவது என்ற தயக்கத்துடன் நின்றனர்.

 அதனை முதலில் உடைத்த இந்து, ராமை பார்த்து “அண்ணா அதான் டாக்டர் அண்ணிக்கு ஒன்னுமில்லைனு சொல்லிட்டாங்ல அப்பறம் ஏன் சோகமா இருக்கிங்க? நீங்க இப்படி இருந்திங்னா அண்ணி தனக்கு எதோ பெரிய நோய் வந்துருச்சுனு பயப்பட மாட்டாங்ளா…?” என்றார்.

பொன்னுதாயி “அதான் பாரு கண்ணு அப்போத்ல இருந்து  இவன் எதையோ பறிக்குடுத்தமாதிரியே உட்கார்ந்துருக்கான்…” இந்துவிடம் கூறினார்.

சுந்தரமூர்த்தி குடும்பத்திற்கு இதுவே போதுமானதாக இருந்தது. அவர்கள் ஹாஸ்பிட்டல் கிளம்பி வரும்போதுக்கூட மனதில் ‘அவர்கள் பேசுவார்களோ? என்னவோ? என்ற பயத்துடனே தான் வந்தனர்.

இந்துவின் கேள்விக்கு பொன்னுதாயி சகஜமாக பதில் கூறியதே போதுமானதாக இருந்தது.

 சிறிது நேரத்திலே இந்துவும்,லஷ்மியும், பொன்னுதாயுடன் குடும்ப விசயங்களை பேசுமளவுக்கு நெருங்கிவிட்டனர்.

ஆண்கள் பெண்கள் அளவுக்கு சகஜமாக பேசமுடியாமல் தடுமாறிகொண்டு ராமகிருஷ்ணனின் அருகில் அமர்ந்திருந்தனர். ராமும் அவர்கள் பேசாத போது தான் எப்படி பேசுவதென்று அமைதியாக அமர்ந்திருந்தார்.

இந்து, “பெரியம்மா அக்கா எப்படி இருக்காங்க? எப்போ வெளிநாட்ல இருந்து வராங்க?”

“அவ நல்லாருக்கா கண்ணு ரொம்ப வருசம் கழிச்சி ரெண்டாவது பேத்தி குழந்தை உண்டாகிருக்கா… அதான் அவளை பாத்துக்க புருஷனும் பொண்டாட்டியும் அங்கேயே போயிட்டாங்க…”

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது நர்ஸ் வந்து லலிதா கண்விழித்ததை சொல்லி செல்லவும், லலிதாவை பார்க்க அனைவரும் எழுந்து சென்றனர்.

கண்விழித்த லலிதா ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்கவும் அப்படியே படுத்திருந்தவர் கதவு திறக்கும் சத்தம்கேட்டதும் கணவனை மட்டும் எதிர்பார்த்து வாயிலை பார்த்தவர் அங்கு வந்தவர்களை பார்த்ததும் நம்மபமுடியாமல் கண்களை தேய்த்துக்கொண்டு திரும்ப பார்த்தார்.

அவரின் பலவருட கனவு இன்று நிஜமாகி தன்முன்னால் உயிர்கொண்டு நிற்பதை அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியுடன் பார்த்துவிட்டு படுத்திருந்தவர் வேகமாக எழுந்தார்.

“டேய் பாத்துடாம்மா…” தங்கை வேகமாக எழுந்திருப்பதை பார்த்து நாலே எட்டில் அவரை அனுகி பிடித்துக்கொண்டார் முருகேசன்.

அவர்களை பார்த்த சந்தோசத்தில் இருந்தவருக்கு அண்ணனின் பாசமான குரல் அவரை தன்னிலை இழக்கச்செய்தது.தன் பக்கத்தில் நின்று தன்னை பிடித்து அமரவைத்த அண்ணின் இடுப்பை அணைக்க கையை கொண்டுபோனார்.

அதனை பார்த்த தமிழரசு பதறிப்போய் அவரின் அருகில் வந்து கையை படித்தவாறே “அக்கா கையில ட்ரிப்ஸ் ஏறுது…” என்றார்.

கண்களில் கண்ணீருடன் தம்பியை பார்த்தவர்  “டேய் தம்பி நா அண்ணாவ கட்டி பிடிச்சிட்டு அழணும்டா… கைய விடேன்…” குரலில் கெஞ்சலுடன் கேட்டார்.

அவரின் கெஞ்சலான அழுகுரல் கேட்டு அங்கிருந்தவர்களையும் அசைத்துதான் பார்த்தது.

அகிலேஷ் ஓடிச்சென்று அங்கிருந்த நர்ஸ்சை கூட்டி வந்து ட்ரிப்சை ரீமுவ் பண்ணிவிட்டு சென்றதும் லலிதா தன் அண்ணனை கட்டிக்கொண்டு கதற ஆரம்பித்து விட்டார். பல வருடங்களாக சேர்த்து வைத்திருந்த கண்ணீரை எல்லாம் தன் குடும்பத்து ஆட்களை பார்த்ததும் மொத்தமாக கொட்டிவிட்டார்.

வந்ததிலிருந்து ராம் கதவின் ஓரத்தில் நின்றவாறே  தன்னுடன் வாழ்ந்த இத்தனை வருடங்களில் அவர் கண்டிராத மனைவியின்  உணர்வுகளை தன் மாமனார் வீட்டு ஆட்களை பார்த்ததும் வந்து போவதை வலி நிறைந்த விழிகளால் பார்த்துக் கொண்டிருந்தார்.

கல்யாணம் ஆகி இத்தனை வருடங்களிள் மனைவி சிரித்து அவர் பார்த்ததே இல்லை கண்ணீர் கூட கல்யாணம் ஆன சில வருடங்களில் பார்த்திருக்கிறார். ஆனால், இன்று சந்தோசம், கண்ணீர் பின் கெஞ்சல், சிரிப்பு கொஞ்சல் என அனைத்தும் மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது.

‘முப்பத்து வருடங்களாக தன்னால் குடுக்க முடியாததை வந்த சிறிது நேரத்திலே அவர்களால் தன்னவளுக்கு குடுக்க முடிகிறதென்றால் தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தான் என்ன?’ அவரின் மனமே அவரிடம் கேள்வி எழுப்பியது.

அண்ணன், தம்பி, அண்ணிமார்கள், தம்பியின் மகன் எல்லாரிடமும் பேசிமுடித்துவிட்டு இறுதியாக தந்தையை பார்த்ததும் “அப்பா…” தன் மொத்த உயிரையும் தேக்கி தந்தையை அழைத்தாள். 

அவர் பதில் ஏதும் கூறாமல் மகளின் தலையை மெல்ல வருடிக்குடுத்தார். அந்த ஒரு மெல்லிய வருடலிலே அவரின் மொத்தபாசமும் தெரிந்தது.

அதில் மொத்தமாக உடைந்தவள் அவரை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அழுது முடித்ததும் அவள் கேட்ட வார்த்தை அங்கிருந்த மொத்த பேரையும் அதிர வைத்துவிட்டது.

“நம்ப வீட்டுக்கு என்னையும் கூட்டிட்டு போயிடறிங்ளாப்பா? கண்ணீருடனே தந்தையை பார்த்து ‘சரினு சொல்லுங்கப்பா’  என கெஞ்சலை  விழிகளில் தேக்கி கேட்டாள்.

ராமோ மனைவியின் வார்த்தையை கேட்ட அந்த நொடி வாழ்க்கையில் தோற்றுப்போனதை உணர்ந்தார்.., தோற்றுப்போன வலியுடன் மனையாளை ஒருமுறை பார்த்தவர் பின் அங்கு நிக்க மனமில்லாமல் செவிகளில் தன்னவள் கேட்டவார்த்தை திரும்ப திரும்ப ஒலிக்க சுற்றுபுறம் மறந்து நடக்க ஆரம்பித்தார்.

மகள் கேட்டதும் சுந்தரமூர்த்தி மருமகனை தான் பார்த்தார். மருமகனின் விழிகளில் வந்துப்போன வலி, நா உனக்கு தேவையே இல்லையா ங்ற கேள்வி? பின் வெற்றுபார்வை  பார்த்துவிட்டு அங்கிருந்து அகன்றதை தான் பார்த்தவரால் மருமகனின் மன நிலையை புரிந்துக்கொள்ள புடிந்தது.

பொன்னுதாயிக்குமே மருமகளின் பேச்சு அதிர்ச்சியை தான் தந்தது… அவருக்கு மகன் மருமகளின் மேல் எத்தனை அன்பு வைத்திருக்கிறான் என்பதை இத்தனை வருடங்களாக பார்த்துக் கொண்டிருப்பவராயிற்றே… மருமகளை பிரிந்தால் மகன் என்னாவான் என்ற பயம் மனதில் தோன்றியது.., அந்த நொடி அவர் மனதில் மருமகளின் பிறந்தவீட்டு ஆட்கள் வராமலே இருந்திருக்கலாமே என்று சுயநலமாக யோசிக்க வைத்தது. எல்லாமே சில நொடிதான் மகன் வெளியே போனதை பார்த்ததும் மருமகளின் மேல் ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வந்தது. அவர் அந்த கோபத்தில் திட்ட ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சுந்தரமூர்த்தி மகளை கண்டிக்க ஆரம்பித்தார்.

மருமகன் வெளியே போன நிலையை பார்த்தவர் மகளை தன்னிலிருந்து பிரித்து அவளின் முகம் பார்த்து “உனக்கும் மாப்பிள்ளைக்கும் என்ன சண்டை கண்ணு?”

 என்னனு சொல்வாள் பேசியே பலவருடங்கள் ஆகிற்றே நேற்றுதான் மகனுக்காக கணவன் தன்னிடம் பேசினார் என்றா? அதுவும் மகனின் நிம்மதிக்காக தன்னை விலக சொன்னதையா? இத்தனை வருடங்கள் கழித்து கணவன் கேட்டதை செய்ய உங்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறேன் என்பதையா? எதுவும் சொல்ல தோன்றாமல் வெறும் அழுகை மட்டுமே அவளிடமிருந்து வந்தது.

பெட்டிலே காலை குறுக்கிவைத்து அதில் முகம் புதைத்து அழுதுக்கொண்டிருக்கும் தங்கையின் நிலையை முருகேசனால் பார்க்கவே முடியவில்லை. அவரின் கண்களிலும் கண்ணீர். 

பிறந்ததிலிருந்தே பாசத்தை கொட்டி வளர்க்கபட்டவள்… ஒற்றை பெண்வாரிசு என்பதால் அவளை எப்போதும் கண்கலங்க விட்டதில்லை.

அதிலும் லலிதா பயந்த சுபாவம்… அத்தனை செல்லமாக பொத்தி பொத்தி வளர்த்தார்கள். தமிழரசு கூட அக்காவை அப்பப்ப வம்பிழுப்பார். ஆனால், முருகேசன் ஒரு சொல் கடிந்து பேசமாட்டார். அத்தனை பாசம் தங்கையின் மேல் இப்போ எப்படி மகளை இளவரசி மாதிரி பாத்துக்கொள்கிறாரோ அதேபோல் தான் தங்கையையும் பார்த்துக்கொண்டார்…

திடிரென அவள் காதலித்தவனை கல்யாணம் பண்ணிக்கொண்டு கழுத்தில் தாலியுடன் கோவிலில் நின்றபோது அதை பார்த்தவரால்  அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை… அதன் தாக்கமே தங்கை பிரிந்து இத்தனை வருடங்கள் இருந்துவிட்டார். 

ஆனால், இன்று தங்கை தன் கண்முன்னாலே கதறிக்கொண்டிருக்கிறாள்… தன்னால் எதும் செய்யமுடியாத கையாலாகாத்தனத்துடன் வேடிக்கை பார்க்கும் நிலையை அறவே வெறுத்தார்.

அப்பவும் மனது கேக்காமல் “அப்பா குட்டிமாவ நம்ம வீட்டுக்கே கூட்டிபோயிடலாம்ப்பா…” என்றார்.

“கூட்டிபோய் வச்சி எத்தனை நாளைக்கு சோறுபோடுவ முருகேசா…?”

“என்னப்பா இப்படி கேக்கறிங்க? அவ என்ற கூடப்பொறந்தவப்பா… அவளுக்கு சோறு போட முடியாத அளவுக்கா நா இருக்கேன்?” அவரின் வார்த்தையில் தன் தந்தை நம்பவில்லையே என்கிற ஆதங்கம்.

“உன்றக்கூட பொறந்தவதான் இல்லைனு சொல்லல? ஆனா இப்போ அவ இன்னொருத்தனுக்கு சொந்தமானவ… நீ எந்த உரிமையில கூட்டிப்போய் உன்ற வீட்ல வச்சிக்க நினைக்கற? மாப்பிள்ளை வந்து சொன்னாரா என்னால என்ற பொண்டாட்டிய பாத்துக்கமுடியாது நீங்க கூட்டிப்போங்கனு? கொஞ்சநேரத்துக்கு முன்னாடி அவர் இருந்த நிலைய நீயும்தானே கண்ல பாத்த? அப்ப கலங்காம வேடிக்கை பாத்த நீ உன்ற தங்கச்சி  அழுதவுடனே மனசு பதறுதா…?”

“உன்ற தங்கச்சி முப்பது வருசமா ஒருத்தனோட வாழ்க்கையவே அழிச்சிட்டு இருந்துருக்கா அத உன்னால கேக்கமுடியலை…” சுந்தரமூர்த்தியின் வார்த்தைகள் மகனை வாயடைத்துப்போக வைத்தது.

“எனக்கு இதலாம் தெரியாதுப்பா… ஊருக்குள்ள வேற மாதிரி சொன்னதை நம்பிட்டேன்ப்பா…”

“உன்ற தங்கச்சி பாசம் கண்ண மறச்சிடுச்சு முருகேசா… அதான் உனக்கு மத்தவங்க சொல்றத நம்ப தோனிருக்கு…”

தந்தையின் பேச்சு முருகேசனை மட்டுமில்லாமல் லலிதாவையும் தாக்கியது.

“என்ன மன்னிச்சிடுங்கப்பா…” என்றாள்.

“ஏங்கிட்ட எதுக்கு கண்ணு மன்னிப்பு கேக்கற? தண்டனைய உன்ற புருசனுக்கு குடுத்துபோட்டு என்றகிட்ட மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியாகிடுமா கண்ணு…?”

சுந்தரமூர்த்தி பேச ஆரம்பிக்கும்போதே வந்த ரகுவை ஷர்மி வெளியவே தடுத்து நிற்க வைத்ததால் உள்ளே நடந்த அத்தனை பேச்சுவார்த்தையையும் கேட்டு திகைத்துப்போய் நின்றிருந்தான் ரகு. தன் அப்பாவுக்காக பேசும் தாத்தாவின் பேச்சை நம்பமுடியாமல் கேட்டுக்கொண்டிருந்தான். இத்தனை நாள் அவரின் மேல் இருந்த வெறுப்புக்கூட எங்கோ சென்று ஒளிந்துக்கொண்டது.

“காதலிக்கறப்ப பெத்தவங்களையும், கூடப்பொறந்தவங்களையும் நினைக்கறதும் இல்லை.., அவங்கமேல நம்பிக்கை வைக்கறதும் இல்லை.., கல்யாணம் பண்ணதுக்கப்பறமாவது புருசனுக்காக வாழ்வனு பாத்தா  அதுவுமில்லை.., புகுந்தவீட்டையும், கட்டுனவனையும் நினைக்காம பொறந்தவீட்ட பத்தியே நினைக்கறது.., எப்போதா உன்ற பக்கத்துல இருக்கறவங்களோட அருமைய புரிஞ்சுக்குவ கண்ணு…?” 

அவரின் கேள்வி சாட்டையாய் சுழன்று லலிதாவை தாக்கியது.

அவள் அழுதுக்கொண்டே “நா ரொம்ப கெட்டவப்பா… அம்மாவையும் கொன்னுட்டேன்… என்னால அவருக்கும் நிம்மதி இல்லை… உங்களுக்கு தெரியுமாப்பா என்ற மகன் என்ன அம்மானு கூப்பிட்டு 25 வருசம் ஆகிடுச்சு… எங்கையில பச்ச தண்ணிக்கூட வாங்கி குடிக்கமாட்டான். என்ன பாக்கக்கூட பிடிக்காது… நேத்து  நா கூட இருந்தா செத்துப்போயிருவேனு சொல்றான்ப்பா… ரொம்ப வலிக்குதுப்பா… செத்துபோயிடலாம்னு தோனும்… ஆனா சாக பயமா இருக்குப்பா… சாகறதுக்கு ரொம்ப தைரியம் வேணுமாப்பா? ஏம்ப்பா என்ன கோழையா வளர்த்திங்க?”

மகள் தந்தையிடம் கேக்கும் கேள்வியா இது? சுந்தரமூர்த்தி இடிந்துப்போய் மகளின் அருகிலே அமர்ந்துவிட்டார். என்ன பதில் சொல்வார்?

அங்கிருந்த அனைவருமே லலிதாவின் பேச்சை கேட்டு அதிர்ந்துவிட்டனர். அடுத்து என்ன பேசறதுனு தெரியாமல் குழம்பி நின்றனர்.

வெளியில் நின்றிருந்த ரகுவின் நிலையோ அதைவிட மோசம். தன்னுடைய வார்த்தை அம்மாவை எத்தனை காயபடுத்திருக்கிறது என்பதை இன்றுதான் உணர்ந்தான். இத்தனைநாள் தான் பேசிய அனைத்தையும்    எந்த உணர்வையும் காட்டாமல் கேட்டுக்கொண்டிருந்தவரின் மனதிற்கும் இத்தனை வலி இருந்திருக்கிறது என்பதை அவரின் வாயாலையே கேட்கும்போதுதான் தன் தவறு புரிந்தது.

ஐந்து வயது வரையிலும் அம்மாவின் முந்தானையை பிடித்துக்கொண்டு சுற்றித் திரிந்தவன் யாரோ ஒருத்தரின் பழிவெறி பிஞ்சு குழந்தையின் மனதில் தாயின் மீது வெறுப்பு வளர காரணமாயிற்று.அது வளர்ந்து இன்று  தாயின் முகத்தை பார்க்கக்கூட பிடிக்காத அளவுக்கு நிற்கிறது…!! 

Advertisement