Advertisement

வாசு டூர் முடித்து வந்து சேர்ந்தார்.. இயல்பான நாட்கள் தொடங்கியது.

மிர்த்திக்கா அந்த ஒருநாளுக்கு பிறகு அதிகமாக யோகியிடம் அழுதாள். பேசும் போதெல்லாம் ‘நாம தப்பு பண்ணிட்டோம் பயமா இருக்கு..’ என நிறைய அழுதாள்.

யோகி, நிறைய சமாதானம் செய்தான்.. அவளுக்கு பிடித்த லட்டு, கார பொறி.. கைக்கு வளையல் என நிறைய வாங்கி கொடுத்தான்.  இரவில்.. ‘படி டி.. நீ எதையும் யோசிக்காத.. நான் பார்த்துக்கிறேன்’ என பேசி பேசி அடுத்த பத்து நாட்களில் அவளை படிப்பில் மட்டும் கவனம் செலுத்தும் படி செய்தான்.

மிர்த்திக்காவும் படிப்பில் கவனம் செலுத்தினாள். அதிகமாக மேலே வருவதில்லை. அதில் யோகிதான் வாடி போனான் சில நேரங்களில். ஆனாலும், அவள் முன்போல அழவில்லை என்பதால்.. சற்று சமாதானம் செய்துக் கொண்டான்.

ஒருமாதம் கடந்தது.

மிர்த்திக்காவிற்கு காலாண்டு தேர்வுகள் தொடங்கியது. படிப்பு படிப்பு படிப்புதான். 

யோகி, விளையாட சென்று வந்தான். இரண்டு நாட்கள் சென்று.. ஊர் வந்து சேர்ந்தான். அன்று கல்லூரிக்கு செல்ல வேண்டும். மிர்த்திக்காவிற்கு அழைத்து, தான் வந்துவிட்டதை சொன்னான்.. எக்ஸாம்க்கு ஆல் தி பெஸ்ட் சொல்லி.. வைத்தான்.

மிர்த்திக்கா பஸ்க்கு நிக்கவும்.. நேரில் பார்த்தான் யோகி. மிர்த்திக்காவிற்கு முகம் பிரகாசமானது அவனை பார்த்ததும். யோகி அருகில் வந்து “படிக்கிறேன் படிக்கிறேன்னு.. என்ன டி.. இப்படி ஆகிட்ட.. நல்லா சாப்பிட்டு” என கடிந்தபடி.

மிர்த்திக்கா அதற்கும் புன்னகையித்தாள்.. என்னமோ ஜீவனில்லை கண்ணில்.. யோகிக்கு அவள் எக்ஸாம் காரணமாக.. அந்த யோசனையில் இருக்கிறான் என எண்ணி.. “நீதான் ஸ்கூல் ஃபஸ்ட்.. பயப்படாத, அப்போ நானெல்லாம் எப்படி நிக்கணும்.. போடி.. சிரி.. மைன்ட் ட, ப்ரீயா.. விடு” என்றான். 

மிர்த்திக்கா எல்லாவற்றும் தலையாட்டினாள்.. சிரித்தாள் அவனின் பேச்சில். பஸ் வரவும்.. கிளம்பினாள் பெண்.

யோகியும் பஸ் ஏறினான். பஸ்ஸில் நண்பர்கள் எல்லோரும்.. இந்தமுறை தோற்று வந்ததால்.. கலாய்க்க தொடங்கினர். ஜாலியாக சென்ற பேச்சுக்களும் கலாட்டாக்களும்.. எங்கோ ஓரிடத்தில் வாய் தகராறாக மாறியது. யோகி அப்போதே “மச்சி டேய்.. என் விஷயத்தை பொதுவில் நீ ஏன் பேசற.. நான் விளையாடறேன்.. படிக்கிறேன் அத மட்டும் பேசு.. மதத்தை நீ பேசாத. “ என விரல் நீட்டி மிரட்டியவன் கல்லூரி ஸ்டாப்பிங்கில் இறங்கி.. தன்போல முன்னே சென்றுவிட்டான்.

ஆனால், யோகியின் மனநிலை உணராத நண்பர்கள் படை.. மீண்டும் மீண்டும் கிண்டலில் இறங்கியது. மதியம் லஞ்ச் டைமில்.. யோகியின் பொறுமை பறந்தது.. அதிகாமா மீண்டும் மீண்டும் தன் பர்சனல் பற்றி பேசியவனை சேரை தூக்கிக் கொண்டு அடித்தே விட்டான் யோகி.

அடி வாங்கியவனோ.. கீழே விழுந்து.. அவன் மேல் டேபிள் விழுந்து.. கையிலும்.. தோள்பட்டையிலும் நல்ல அடி.. ரத்தம் வர தொடங்கிவிட்டது.

கல்லூரியே அடுத்த அரைமணி நேரத்தில் கலவரமானது. யோகியை ஸ்டாப் ரூமில் இருக்க வைக்க சொல்லி.. கல்லூரி முதல்வர் சொல்லிவிட்டார்.

மருத்துவமனையில் சேர்த்தனர்.. அடிபட்ட மாணவனை. அவர்கள் பெற்றோர் வந்தனர்.. முதல்வர், யோகியின் பெற்றோருக்கும் தகவல் சொல்லி வர சொன்னார்.

இருதரப்புக்கும் சமரசம் பேசினார்.. முதல்வர். அடிபட்ட மாணவனுக்கு.. கை உடைந்துவிட்டது.. தோளிலும் அடி என்பதால்.. அந்த சிகிச்சையில் சிக்கல் இருந்தது.

அடிபட்ட பையனின் பெற்றோர்.. பேச்சு வார்த்தைக்கு ஒத்துழைக்கவில்லை. அவர்களுக்கு.. திமிராக கைகட்டி நிற்கும் யோகியை பார்க்க பார்க்க கோவம் வந்தது. அவனை அடிபதற்கே சென்றுவிட்டனர். முதல்வரின் சமாதானத்தை கூட கேட்டுக் கொள்ளவில்லை. ரெங்கன்தான் நிலையிழந்து போனார். அவர்கள் எழவேயில்லை. அட்வகேட் வருகிறார் என காத்திருந்தனர்.

ரெங்கன், பேச முடியாமல் அமர்ந்திருந்தார். 

முதல்வர் ‘மருத்துவமனை போங்க.. கம்ப்ளைன்ட் பத்தி.. காலையில் பேசிக்கலாம்.. படிக்கிற பசங்க..’ என்றார். 

அதுவும் சரியாக இருக்க.. அடிப்பட்ட பையனின் பெற்றோர்.. யோகியை முறைத்துவிட்டு.. வெளியே சென்றனர்.

யோகி இந்த இரவு சேஃப். யோகியின் கோச்.. ரெங்கனிடம் ‘அவனை ஊரை விட்டு உடனே அனுப்பிடுங்க சேஃப்பான இடத்திற்கு.. அவங்க கண்ணில் படவேண்டாம்.. அவன் இப்போதான் நல்லா விளையாடுறான்.. அந்த பையன் சரியானதும் வரட்டும்.. பார்த்துக்கலாம்..’ என்றார். முதல்வர் ஆமோத்தார். அந்த அடிப்பட்ட பையனை பார்ப்பதற்கு மருத்துவமனை சென்றார்.

ரெங்கன்.. சீனிவாசனுக்கு போன் செய்தார். நடந்ததை சொன்னார். சீனிவாசன், மருமகனை உடனே கூட்டிக் கொண்டார் தன்னிடத்திற்கு. யோகிக்கு, வேறு ஏதும் யோசிக்க முடியவில்லை.. ‘இங்கிருதால்.. தன் எதிர்காலமே இல்லை என தோன்ற.. பயந்தான் முதலில். அவன் பேசினான் அதுவும் தன்னுடைய பர்சனல் பற்றி பேசினான்.. அதை எப்படி வெளியே சொல்ல முடியும்’ என தலையில் பாரம் ஏறிக் கொண்டே இருந்தது.

அவனின் மாமா அழைத்தார் “மருமகனே.. கார் அனுப்பியிருக்கிறேன்.. நமக்கு தெரிஞ்ச வண்டி.. இப்போதீக்கு, இங்க வாங்க.. அடுத்த நான் அப்பாகிட்ட பேசிக்கிறேன்.. கிளம்புங்க” என்றார்.

யோகிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. மிர்த்திக்காவிற்கு இந்த விஷயம் தெரிந்தால் என்னவாகும் என யோசனை. அவள் அழுவாள்.. படிப்பு பாதிக்கும்.. நான் விளையாட வெளியூர் சென்றதாக இருக்கட்டும் என எண்ணி.. அவளுக்கு செய்தி அனுப்பாமல் கிளம்பினான்.

மிர்த்திக்காவிற்கும் விஷயம் ஏதும் தெரியாது. அந்தவாரம் பரிட்சை முடிந்தது. மற்ற வகுப்பிற்கு எல்லாம் விடுமுறை. பெண்ணவளுக்கு பள்ளி இருந்தது. அன்று காலையிலிருந்து பெண்ணுக்கு ஏதும் உடல்நிலை சரியில்லை. 

பள்ளிக்கு சென்றுவிட்டாள். பள்ளிக்கு சென்று வகுப்பில் இருக்கும் போதே பெண்ணுக்கு மயக்கம் வந்துவிட்டது. அவளின் அப்பாவை அழைத்து அனுப்பிவிட்டனர் வீட்டுக்கு.

வாசு, வீடு வரும்போதே.. தங்களுக்கு தெரிந்த மருத்துவரிடம் மகளை காட்டினார்.

அப்போதுதான் அந்த தந்தையிடம்.. பற்றி எரியும் நெருப்பு பிழம்பு வானத்திலிருந்து  இடியென மண்ணில் விழுவது போல.. அவரிடம் சொல்லப்பட்டது ‘உங்களது படிக்கும் மகள் கர்ப்பமாக இருக்கிறாள்’ என.

தந்தைக்கு அந்த மருத்துவரின் மொழி புரியாதது போல அப்படியே அமர்ந்துவிட்டார். மிர்த்திக்கா தன் தந்தையின் பக்கத்தில் அமர்ந்திருப்பதை உணர்ந்து நடுங்கிக் கொண்டே கீழே குனிந்துக் கொண்டாள்.. அப்படியே தன் மூச்சு நின்றுவிடாத என இருந்தது பெண்ணுக்கு.

வாசுவிற்கு ஏதும் பேச முடியாத நிலை.. அமைதியாக மகளை அழைத்துக் கொண்டு.. வீடு வந்தார். வீட்டினுள் வந்ததும்.. எங்கும் கொட்ட முடியாத கோவத்தை மகளிடம் காட்டினார்.. தான் அணிந்திருந்த பெல்ட் எடுத்து மகளை அடிக்க தொடங்கினார் வாய் திறந்து ஏதும் கேட்டவோ திட்டவோ.. தெரியவில்லை முடியவில்லை.. அந்த கதியற்ற தந்தைக்கு. பெண்ணை வளர்க்க தெரியவில்லை என்ற கோவம்.. இவ்வளவு தூரம் வந்துவிட்டதே என்ற.. எண்ணம் தன்னையே தன்னால் மன்னிக்க முடியாத கோவம்.. அடுத்து என்ன என தெரியாத கோவம்.. என் மகளா இப்படி என்ற கோவம். இப்படி எல்லாம் சேர்ந்து.. மகள் மீண்டும் மயக்கமாகும் அளவிற்கு அடித்தார்.

மிர்த்திக்கா அழுதாள்.. மன்னிச்சிடுங்க ப்பா என்றாள்.. வலியை தாங்கவே முடியவில்லை ஓடினாள்.. டேபிளின் கீழ் ஒளிந்துக் கொண்டாள்.. அடி முகத்தில் தலையில் என எல்லா இடத்திலும் பட்டது. தந்தையின் இன்னொரு முகத்தை அந்த நாள் தொட்டு பார்த்தாள் பெண்.

அடித்து ஓய்ந்து அமர்ந்தார் வாசு.

பெண்ணவள்.. கூனி குறுகி.. டேபிளின் கீழே அமர்ந்துக் கொண்டாள். நடுக்கம் குறையவில்லை.. காலத்தின் சில ஷனங்கள்.. நாழிகைகள்.. கொடுமையானவை. வாசு மிர்த்திக்காவின் காலநாடியில்.. அந்த கொடுமையான நாழிகைகள் முடியாமலேயே தொடர்ந்தது அடுத்தநாள் வரை.

ஜெகன் விளையாடி வந்து நின்றான். அக்கா கீழே படுத்திருப்பது.. அப்பா கிட்செனில் நிற்பது. என எல்லாம் ஒருமாதிரி இருந்தது. அப்பா கோவமாக இருக்கிறார் என புரிந்தது. அக்காவிடம் வந்து பேசினான்.. மிர்த்திக்கா ‘எனக்கு காய்ச்சல் பக்கத்தில் வராதே’ என்றாள் அழுத்துக் கொண்டே. ஜெகன் தந்தை கொடுத்த உணவை உண்டு உறங்கினான். 

பெண்ணவளை உண்பதற்கு அழைக்கவில்லை வாசு. மிர்த்திக்கு, பசிதான். ஆனால், தான் செய்த தவறு.. புரிய உண்பதற்கு கூட மனதில்லை.. அதிலும் தந்தை அப்படி அடித்தது வேறு நடக்கவே சிரம்மப்பட்டாள். நடு இரவில் பசி பெண்ணுக்கு. தானே எழுந்து.. பாத்ரூம் சென்று வந்தாள். சாதம் ரசம் இருந்தது உண்டாள்.

வாசு அப்போதுதான் ‘என்ன செய்வது’ என தங்களின் மருத்துவரிடம் கேட்டார். அவரின் ஆலோசனை பேரில்.. கர்ப்பத்தை கலைப்பது நல்லது என முடிவெடுத்தனர். எங்கே உங்களுக்கு தெரிந்த இடம் என கேட்டு.. அந்த ஊரில் உள்ள மருத்துவருக்கு அழைத்து பேசினார். ‘சின்ன பெண்.. தெரிந்தவர்கள்.. பிரச்சனை வர கூடாது உதவுங்கள்..’ என்றார். மீண்டும் மருத்துவர்.. வாசு கேட்ட ஊரில் ஒரு மருத்துவரை பரிந்துரைத்து.. நேரம் எல்லாம் சொல்லி முடித்தார்.

வெளியே சத்தம்.. பெண் எழுந்துவிட்டாள் என வாசு வந்தார்.. அவர்தான் மருத்துவர்.. மற்றும் என்ன செய்வது என தனக்கு மிகவும் நெருக்கமான நண்பனிடம் கேட்டுக் கொண்டிருந்தார். 

பெண் உண்டு முடித்து அமரவும், வாசு “யார் கூட பழகின.. ஸ்கூல் அப்புறம் வீடு.. எங்க தப்பு நடந்தது” என்றார் விசாரணையான குரலில்.

மிர்த்திக்கா “அப்பா.. யோகி ப்பா” என்றாள்.

வாசு நெற்றியை நீவிக்  கொண்டார். நிற்கவே முடியவில்லை பெண்ணால்.. கைகளில் ஆங்காங்கே லேசாக காயங்கள் வீக்கங்கள் தெரிய தொடங்குகிறது. சின்ன விடிவிளக்கின் ஒலியில்.. பெண்ணின் தேகம் கருப்பதை பார்க்கிறார் தந்தை. கன்னத்தில்.. தான் அடித்த தடம்.. இப்போது நிறம் மாற தொடங்கி பச்சையும் சிவப்புமாக தெரிகிறது. ஆனாலும், தன் பெண் யோகி என பெயர் சொல்லவும்.. இன்னும் இன்னும் அந்த யோகியின் மேலும் எழுகிறது.

அமைதியாக மீண்டும் உள்ளே சென்றுவிட்டார். மீண்டும் தன் நண்பனுக்கு அழைத்து பேசினார். அந்த நண்பர்.. இப்போது எதையும் பேசிக் கொள்ளாத.. பெண் விஷயம்.. அமைதியாக இரு.. என சொல்லி வாசுவை அமைதிபடுத்தினார். தான் பெற்றவள்.. இப்படி நிற்கிறாள்.. வாசுவிற்கு அப்படி ஒரு கோவம்.. அவனை கொன்று போடும் வெறி.. ஆனால், விஷயம் வெளியே தெரிந்துவிடும்.. என்ன செய்வது. ரகசியங்களை தாங்குவதுதான் வாழ்க்கை.

ஆக மறுநாள் மாலையில் பழனி செல்லுகிறோம் என சொல்லி.. வாசுவும் மிர்த்திக்காவும்.. ஜெகனை விட்டுவிட்டு.. கிளம்பினர். துணைக்கு என.. சுசீலா அத்தையை வைத்துவிட்டு சென்றனர். 

(கடையில் இருப்பவர்கள் அப்போது வெளியூர் சென்றிருந்தனர். எனவே, சுசீலா அக்கா, அப்போது, தன் மகன் குடும்பத்தோடு வெளிநாடு செல்லுவதால்.. தங்கள் வீட்டில் மேலே உள்ள ஒற்றை அறையில் தனியாக இருபதாக ஏற்பாடு. கீழே இருக்கும் வீட்டை வாடகைக்கு கொடுத்திருந்தனர். அந்த நேரத்தில்.. வாசு, உதவியாக சுசீலா அக்காவை அழைக்க.. சந்தோஷமாக வந்தார் அவர்.)

மறுநாள் காலையில் மருத்துவமனையில் சேர்ந்தனர்.. சத்தமில்லாமல் மிர்த்திக்காவிற்கு சிகிச்சைகள் தொடங்கியது. சின்ன பெண்ணுக்கு.. அந்த வயதில் அந்த வேதனையும் வலியும் தேவையில்லைதான். ஆனால், வாழ்க்கை யாரை விட்டது. எல்லோருக்கும் ஒரே தராசுதான்.

வாசுவிற்க்கு அந்த ஊரில் நண்பர் இருந்தார். அவரின் மனைவி, மிர்த்திக்காவை கவனித்துக் கொண்டார். மருத்துவமனையில் மூன்று நாட்கள் இருந்தனர்.

மிர்த்திக்காவிகவிற்கு பயமாக இருந்தாலும் யோகி இருக்கிறான் என நம்பி.. எல்லாவற்றியும் ஏற்றாள். இந்த வயதில் நாங்கள் செய்தது தவறு.. இந்த வலி எனக்கு வேணும் என ஏற்றுக் கொண்டாள்.

அதன்பின் வீடு வந்தனர். ஒருவாரம் பெண்ணவள் பள்ளி செல்லவில்லை.. அப்பன்டீஸ் ஆபரேஷன் என மெடிக்கல் செர்ட்டிபிகேட் கொடுத்துவிட்டார் பள்ளிக்கு.

ஆனால், மிர்த்திக்காவிற்கு விடையே கிடைக்கவில்லை. யோகி தன்னை பார்க்கவே இல்லை. அழைக்கவும் இல்லை. போன் அவளிடமிருந்து பறிக்கப்பட்டது தந்தையால். எனவே, திருட்டுத்தனமாக.. அவனின் போனுக்கு அழைத்தாள் ஒருநாள் ‘அவன் போன் சுவிட்ச் ஆப்’. எந்த துடுப்பும் இல்லை.. வாழ்க்கை எனும் கடல் சீறிக் கொண்டு நிர்க்கிறது. அப்படியே நகர்ந்தது அவளின் நாட்கள். 

ஒருமாதம் சென்று யோகியின் விஷயம் எல்லாம் ஜெகன் மூலமாக தெரிந்தது பெண்ணுக்கு. மீண்டும் அழுகை.. ஏமாற்றம்தான். ‘ஏன் போன் செய்து சொல்லலை..’ என கோவம்.

வாசுவிற்கு யோகியின் விஷயம் ஊரிலிர்ந்து வந்த அன்றே தெரிந்துவிட்டது. தங்களின் எண்ணை மாற்றிவிட்டார். அப்படியே தொலைந்து போகட்டும் என எண்ணிக் கொண்டார். பெண்ணிடம் போன் எடுக்க கூடாது என சொல்லிவிட்டார். 

 மிர்த்திக்காவிடம் பேசவில்லை தந்தை. ஆனால், தவறை நேர் செய்து தந்தார். அதன் தாக்காம்தான் இன்றுவரை தொடருகிறது வாசுவிடமும் மிர்த்திக்காவிடமும். 

 

Advertisement