Advertisement

நீ என் அலாதி நேசம்!

9

இந்த வருடம் தொடங்கியது முதல்.. யோகிக்கு நிறைய போட்டிகள் இருந்தது கபடியில் அதனால் யோகியின் கவனம் எல்லாம் விளையாட்டில்தான் இருந்தது. வார இறுதியானால் வெளியூர் சென்றிடுவான் விளையாடுவதற்காக. இதனால், மிர்த்தியோடு பேசுவது என்பது குறைந்தது.

மிர்த்திக்காவிற்க்கு படிப்பது நிறைய இருப்பதால்.. அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. அதிகமாக மிர்த்தியின் உணவை, யோகி உண்பதில்லை. காரணம் அவன் நிறைய வெளியூர் சென்றுவிடுவதால். அதனால், ஊரிலிருந்து வந்ததும்.. யோகி செய்தி அனுப்புவான் ‘நான் வந்துட்டேன்…நாளைக்கு காலேஜ் வரமாட்டேன்.. நீ லஞ்ச் கொடுத்து விட்டுடு.. ஜெகன் கிட்ட’ என ஒரு செய்தி அனுப்புவான். மிர்த்தி புன்னகைத்துக் கொள்வாள். அப்படியே நடக்கும்.

இந்த இரண்டு மாதங்களும் இவர்கள் நிலை இப்படிதான் இருந்தது. நாட்கள் ஆக ஆக.. இருவரும் தேட தொடங்கினர்.. மனதால். என்னமோ, கண்ணால் பார்ப்பதே அரிதானது போல தோன்றம். இரண்டு நாட்களுக்கு ஒரு தரம் நேரம் கிடைக்கும் போதுதான் போனில் பேசிக் கொண்டனர்..  போனில் பேசிக் கொண்டாலும்.. என்னமோ ஒட்டமுடியாதது போல ஒரு தோற்றம்.

மிர்த்திக்காவிற்கு தொடர்ச்சியாக தேர்வுகள் வகுப்புகள் என அந்த வாரம் சென்றது. யோகியின் அணி.. மாவட்ட அளவிலான போட்டில் வென்றது. எனவே, யோகி இந்த வாரம் கோப்பையோடு வீடு வந்தான்.

ஒரு மாலை நேரத்தில் வந்து சேர்ந்தான். முதலில் தன்னவளுக்குதான் அழைத்தான். இன்னும் மிர்த்திக்கா, பள்ளியிலிருந்து  வரவில்லை. எனவே, யோகி சற்று உறங்கினான்.

மிர்த்திக்கா பள்ளியிலிருந்து வந்து.. யோகியின் அழைப்பை பார்த்தாள். நாளைக்கு வருவதாகத்தான்.. சொல்லியிருந்தான். அதனால், பேசுவதற்காகதான் அழைக்கிறான் என எண்ணி.. இரவில் அழைக்கலாம் என படிப்பதற்கு அமர்ந்தாள். நேரமாக படித்து முடிக்கலாம் என.

எண்ணியதாலோ என்னமோ.. கவனம் சிதறியது. ஜெகன் அருகே அமர்ந்து அக்காவிற்கு இணையாக படிக்கவும். பெண்ணவளுக்கு.. சற்று நேரம் சென்றுதான் கவனம் வந்தது. முழு மனதோடு.. படிக்க தொடங்கினாள்.

இரவு உணவு சமைப்பதற்கு என.. கடையில் வேலை செய்யும் அம்சா அக்கா மேலே வந்தார். இன்று மாவு இருந்ததால்.. ‘தோசை சட்னி போதும் அத்தை’ என மிர்த்திக்கா சொல்லிவிட்டு ஹாலில் அமர்ந்து படிக்க தொடங்கினாள்.

ஜெகன்.. அறையில் இருந்தான். டிபன் ரெடி செய்து வைத்துவிட்டு.. தனக்கும் தன் வீட்டுக்காரருக்கும் எடுத்துக் கொண்டு அம்சா அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டார்.

கடை இன்னும் அடைக்கவில்லை. வாசுவிற்கு, கோவிலில் விழா நாள் என்பதால்.. இரவில் நெடு நேரம் கூட்டம்.. அதன்பின் கணக்கு பார்த்து வருவதற்கே.. நேரம் எடுக்கும். அதனால், பெண்ணவளுக்கு.. ஒரு எண்ணம்.. அப்பா வருவதற்குள்.. யோகியிடம் பேசி முடித்து விடலாம் என எண்ணி.. அவனிற்கு அழைத்தாள்.

யோகி, அவள் எப்போதடா அழைப்பாள் எனத்தான் காத்திருந்தானே.. அவள் அழைப்பை ஏற்று.. “லட்டு.. எவ்வளோ நேரம்.. நான் வீட்டுக்கு வந்தேடேன்.. மேல வரியா” என்றான்.

மணி அப்போது 9:30.

மிர்த்திக்கா “ஹு..ஹூ.. எப்போ வந்தீங்க.. நான், பேசத்தான் கூப்பிறீங்கன்னு நினைச்சேன். நாளைக்கு நிறைய டெஸ்ட் இருக்கே.. முடியுமா தெரியலை.. அப்பாவேற எப்ப வருவாரோ..” என்றாள்.. குரலில் ஒரே பரபரப்பு எப்படியே பார்த்திட வேண்டும் என பரபரப்பு.. ஆனால், பேசும் பொருளில் எப்படி முடியும் என்ற பரிதவிப்பு பெண்ணுக்கு.

யோகிக்கும் அவளின் நிலை புரிய “அதெல்லாம் பார்த்துக்கலாம்.. அதெல்லாம் கடை மூடுவதற்கு.. பதினோரு மணியாகும். உனக்கு கிப்ட் வாங்கி வந்திருக்கேன். எனக்கு.. நல்லா ரைட்டு போனேன்னு.. ஒரு ஷீல்ட் கொடுத்திருக்காங்க.. வா லட்டு.. ஜஸ்ட் டென் மினிட்ஸ் டி” என்றான் அவளை எப்படியாவது பார்த்திட வேண்டும் என ஆர்வமாக எல்லாம் சொன்னான்.

மிர்த்திக்கும் ஆசை தொற்றியது “சரி சரி வரேன்” என்றவள் போனை வைத்துவிட்டு.. ஜெகன் அறையை பார்த்தாள். அவன் படித்து முடித்து எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் மிர்த்தி “சாப்பிடுறியா ஜெகா” என்றாள்.

ஜெகன் “கொஞ்ச நேரம் ஆகும்.. மிர்த்தி” என்றான்.. இப்போதெல்லாம் ஜெகன் அக்காவென எப்போதாவதுதான் அழைப்பது.

மிர்த்திக்கா “ம்.. நான் மேல இருக்கேன்” என்றாள்.

ஜெகன் ஏதும் சொல்லாமல் கேம் விளையாட அமர்ந்தான்.

மிர்த்திக்கா மேலே வந்தாள். யோகி அவளிர்காக அவள் வீட்டு மொட்டை மாடியிலேயே நின்றான். அவனின் முகம் வென்று வந்தவனின் கர்வமான புன்னகையில் மின்னியது. இரு கைகளையும் பின்னால் கட்டிக் கொண்டு.. அவள் எதிரே கர்வமாகவே நின்றான்.

மிர்த்தி அமைதியாக “எப்படி இருக்கீங்க..” என்றாள்.. அவனின் முழங்கையில் எதோ அடிபட்ட தடயம்.. பார்த்தவள், தன் வார்த்தையை இன்னும் கூர்மையாக்கி “என்னாச்சு.. அடிபட்டுச்சா..” என்றாள்.. பார்வை அவனுக்கு அடிபட்ட இடத்திலேயே நிலைத்திருந்தது.. சிராய்ப்பும்.. அது காயும் நிலையையும் சொல்லியது.. அந்த காயம். 

யோகி “விடு.. என்னோட இரண்டு கையிலும் இரண்டு பொருள் இருக்கு.. நீ முதலில் எதை பார்க்க ஆசைப்படுற..” என்றான்.. முகத்தில் ரசனையான ப்பாவம் வந்திருந்தது இப்போது.

மிர்த்திக்கா “ம்.. ரைட்” என்றாள்.

யோகி, தன் வலது கையை பின்னிலிருந்து எடுத்தான்.. அதில் அவனுக்கு என கொடுக்கப்பட்ட கௌரவம் இருந்தது. ம்.. ‘பெஸ்ட்  ரைடர்’ என மின்னும் எழுத்துக்கள் இருந்தது.

மிர்த்திக்காவிற்கு, அதை பெருமை பொங்க காட்டினான். அவளும் “ஹய்யோ.. சூப்பர்.. எத்தனை மேட்ச் போனீங்க.. இப்போதான் கிடைச்சிருக்கு.. காங்க்ராட்ஸ்..” என்றாள்.. அவனிடமிருந்து கோப்பையை வாங்கிக் கொண்டு.. தன் வலக்கையை நீட்டினாள்.

யோகி அழகாக பற்றிக் கொண்டு அவளின் பாராட்டை ஏற்றுக் கொண்டான். அடுத்த நொடியே “இந்த கையை பார்க்க வேண்டாமா” என்றான்.

மிர்த்தி ஏதும் சொல்லாமல் நின்றாள்.

யோகி தன் இடது கையை பின்னிலிருந்து எடுத்து அவள்முன் நீட்டினான். அதில் சின்ன பாக்ஸ் இருந்தது. எதோ நகை கடையின் பேர் அதில் இருந்தது. மிர்த்திக்கா பயந்து போனாள்.. எதற்கு இவ்வளோ விலை உயர்ந்த பொருள் என.. ஆனாலும் கண்கள் ஆச்சர்யத்தில் ஒளிர்ந்தது.

யோகி “எடுத்து பாரேன்” என்றான் குரலில் அத்தனை காதல்.

மிர்த்திக்கா “நீங்க வின் பண்ணதுக்கு எனக்கு கிஃப்ட்டா” என்றாள் அந்த பாக்ஸ்சை கையில் வாங்கிக் கொண்டு.

மிர்த்திக்கா அதை திறக்க.. அதில் அழகான இரண்டு தங்க மோதிரம்.. மிர்த்திக்கா “ஹய்யோ மோதிரமா” என்றாள்.

யோகி “ம்கூம்.. இல்ல இல்ல.. சரியா பாரு” என்றான்.

மிர்த்திக்கா “வளையல்ன்னா சொல்ல முடியும்.. இது மோதிரம்தான்” என்றாள்.

யோகி இப்போது அந்த மோதிரத்தை அவளிடமிருந்து வாங்கினான்.. இரண்டும் ஒன்று போலவே இருந்தது.. இவளின் கைவிரல் அளவைவிட சின்னதாக.. தடிமனான வேலைபாடுகள் ஏதுமில்லாத மெல்லிய வளையம். அந்த பொன் வளையத்து எடுத்துக் கொண்டே கீழே.. தன்னவளின் பாதம் அருகே அமர்ந்தான்.

மிர்த்திக்கா “என்ன.. என்ன யோகி. ஏன்” என ஏதேதோ என்ன செய்கிறான் இவன்.. என பேச. 

யோகியோ பொறுமையாக.. அவளின் வலது பாதத்தை.. தன் கையால் தொட்டு தூக்க.. பெண்ணவளுக்கு பேச்சு நின்று போனது.

யோகி இன்னும் அழுத்தமாக.. அவளின் பாதத்தை எடுத்து தன் தொடையில் வைத்துக் கொண்டான்.. தான் வாங்கி வந்திருந்த தங்க மோதிரத்தை மெட்டி அணியும் விரலில் அணிவித்தான். பின் இடது பாதம் எடுத்து அதே போல.. அந்த மோதிரத்தை மெட்டியாக அணிவித்தான். அமர்ந்த படியே “லட்டு.. எப்படி இருக்கு” என்றான்.

மிர்த்திக்கா மூச்சடைத்து நின்றாள் எனலாம்.

யோகி அவளின் பாதத்தை கீழே வைத்துவிட்டு, அப்படியே அமர்ந்தான் “என்ன.. ஏதாவது பேசு” என்றான்.

மிர்த்திக்கா “எதுக்கு.. யோக்கி” என்றாள்.

யோகி “என்ன எதுக்கு.. மெட்டி போட்டிருக்கேன் டி” என்றான் உதடுகள் இறுக.. என்னமோ அவன் வசம் அவன் இல்லை.. அது அந்த உதடுகளின் இறுக்கத்தில் பெண்ணவளுக்கு புரிந்தது.

மிர்த்திக்கா அமைதியாகவே நின்றாள்.

யோகி “நீதான்.. பயப்படுறீயே..” என கேட்டு அவளின் முகம் பார்த்தான். கல்லூரியில் ஒரு பெண் தன்னை பற்றி கம்ப்ளைன்ட் செய்ததற்கு இவள் ஒருவாரம் பேசவில்லையே. அதை சொன்னான்.

ஆனால், அவளிடம் என்ன விதமான பாவம் என தெரியவில்லை.

யோகியும் அமைதியாகிவிட்டான்.

சற்று நேரம் சென்று மிர்த்திக்கா அவனோடு அமர்ந்தாள் “பயமா இருக்கு.. என்ன நடக்க போகுது தெரியலையே..” என்றாள்.

யோகி “ஏன் பயம்..” என்றான்.

மிர்த்திக்கா “நாம இப்போதான் படிக்கிறோம்.. இவ்வளோ வேணுமா” என்றாள்.

யோகி, பெண்ணவளின் தோளில் சாய்ந்தான் “ஹேய்.. எப்போவாக இருந்தாலும்.. நான்தானே மெட்டி போட போறேன், இது என்னோட காசு.. முதல் முதலாக உனக்குத்தான் ஏதாவது வாங்கனும்ன்னு எண்ணம்.. இப்படி யுனிக்கா வாங்கினேன். வேறு ஒண்ணுமில்ல.. பயப்படாத. இதை பத்திரமாக வைச்சிக்கோ.. கல்யாணத்தப்ப.. மெட்டியாக இதைதான் நான் போடுவேன். ம்.. லவ் யூ.” என்றான்.. நிதானமாக நிமிர்ந்து அவள் முகம் பார்த்து.

பெண்ணவளுக்கு உடல் சிலிர்த்து. அதை உணர்ந்தவன் தோளோடு அவளை அணைத்துக் கொண்டான்.

சற்று நேரத்தில் கீழே வந்தாள் பெண். அந்த மெட்டியை பத்திரப்படுத்திக் கொண்டாள்.

!@!@!@!@!@!@!@!@!@!@!@!@!

மறுநாள் வாசு டூர் கிளம்பினார். கடையில் வேலை செய்யும் அம்சா அக்கா.. அவரின் கணவர் இருவரையும் பிள்ளைகளுக்கு துணைக்கு வைத்துவிட்டு, வாசு நண்பர்களோடு பாண்டிசேரி சென்றார். மூன்று நாட்கள்.

யோகி நல்ல மனநிலையில் இருந்தான். அன்றைய நாள் கல்லூரிக்கு சென்றான். கல்லூரியில் முதல்வர் அழைத்து பாராட்டினார். இப்படி நிறைய பாராட்டுகள்.. மாலையில் நண்பர்கள் ட்ரீட் என அவனை அழைத்து சென்றனர். யோகி இரவு வீடு வந்தான். லேசாக ட்ரிங்க்ஸ் எடுத்திருந்தான். அமைதியாக வீடு வந்து உறங்கிவிட்டான்.

மறுநாள் யோகியும் மிர்த்தியும் நேரமாக மொட்டைமாடி வந்துவிட்டனர். இருவருக்கும் பேச்சுகளை தாண்டி அந்த மெட்டியே மனதில் நின்றது. மிர்த்திக்கா கனவுகளை கண்ணில் சுமந்துக் கொண்டு.. “நாம எப்போ வளருவோம்” என்றாள்.

யோகி “ஏன் டி, நீயும் என் தோளுக்கு தானே இருக்க.. நானும் இதோ பாரு.. பனைமரம்ன்னு கூப்பிடுற அளவுக்கு வளர்ந்திருக்கேன்.. எவ்வளோ வளருவது.” என்றான் சிரியாமல்.

மிர்த்திக்கா அவனின் தலையில் கொட்டிவிட்டு.. “எவ்வளோ அறிவு” என்றாள்.

யோகி தன் டி-ஷர்ட்டில் இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டவன் “அறிவாளி கூட இருக்கேனே அது போதுமே” என்றான். அவனின் காதலியோ தன் கன்னம் சிவக்க வெட்கம் கொண்டு.. அவனை அடித்தாள்.

யோகி “சீக்கிரமா படிக்கணும்.. வேலைக்கு.. வேண்டாம் மிர்த்தி.. இப்படியே, இந்த ஊரிலேயே நிறைய மக்களை பார்த்துகிட்டு.. அப்பா கூட கடையில் ஹெல்ப் செய்துகிட்டு.. நிறைய விளையாடனும்.. அப்போ அப்போ.. நாம ட்ரவல் பண்ணனும்..” என்றான் அவளின் தோளில் சாய்ந்துக் கொண்டு.

மிர்த்திக்கா “நானெல்லாம் வொர்க் போவேன் ப்பா.. போதும் இந்த ஊர், போர் அடிக்குது. சென்னை பெங்களூர் போய்டுவேன். நீங்க வேணும்ன்னா இங்கேயே இருங்க” என்றாள்.

யோகி “நான் என்னடி பண்ணுவேன் தனியா இங்க..” என்றான் சீரியஸ்சான குரலில்.

மிர்த்திக்கா “தாடியோடு.. பரதேசம் போங்க” என்றாள் விளையாட்டு குரலில்.

யோகி இப்போது அவளை இழுத்து தன் மடியில் போட்டுக் கொண்டான் “அஹ.. இதுக்குதான் பத்தாவதுதிலிருந்து உன் பின்னாடியே வரேனா.. நீ எங்க போனாலும் உன் பின்னாடியே வருவேன்..” என்றான் பெண்ணவளின் நெற்றியில் தன் விரல்களால் கோலமிட்டுக் கொண்டே.

மிர்த்திகாவிற்கு இமைகள் தன்போல மூடிக் கொண்டது. யோகியின் பார்வை அவளின் கவிழ்ந்த இமையில் முகாமிட.. விரல்கள் அவளின் இமையின் பாதையை வருட.. பெண்ணவள் சிணுங்க தொடங்கினாள். 

யோகிக்கு, அந்த ஒளி.. அழைப்பாக தோன்றியது.  தன்மடி மீதிருந்தவளை தன் முகம் நோக்கி தூக்கினான்.. தன் கால்களை மடக்கி. பெண்ணவள் கண்களை இன்னும் இறுக்கமாக மூடிக் கொண்டாள்.. யோகி தன் மீசையால் அவளின் உதடுகளை தீண்ட.. அவளுள் சர்வமும் உயிர் பெற்றது. அவனுடைய வறண்ட இறுகிய உதடுகள்.. மலர் வாசம் கொண்டவளை தீண்ட.. உயிர் பெற்ற ஆசைகள்..  உருக தொடங்கியது பெண்ணுள். காமம் இல்லா காதல் உலகில் இல்லவே இல்லை. அத்தோடு.. அது தவறும் கூட.. ம்.. பொரும்பான்மை இல்லாதது. காமத்தோடு கூடிய காதல்தான் அழகு. தூரத்திலிருந்து அவளின் நெற்றி பொட்டினையும்.. பேசும் போது உதடு கடிக்கும் நாசூக்கையும்.. தன்னவன் அருகே வரும் போது உணரும் வியர்வை வாசனையும்.. காதலின் ரசனை மிகுந்த பக்கங்கள்.. அவை காதலை அழகாக்கும்.. தன் துணையை அழகாக்கும்.. ஈர்க்க வைக்கும்.. துணைக்கு கர்வத்தை கொடுக்கும்.

அந்த நிலையில் இப்போது யோகி. யோகியின் எடையில்லா காதல் மனம்.. அவளின் உருகி வழியும் காதலை.. முத்தக் காற்றுக் கொண்டு தனக்குள் வாங்கிக் கொண்டான். காதல் நிரம்பிய தேகமாக.. காம நிரம்பிய மூச்சாக மாறியது இருவரின் உயிரும்.

நீண்ட மாலை நேரம் முடிந்து இரவு நேரம் வந்தது. இருவருக்கும் தீரவில்லை மற்றோருவரிடம் தேடல். யோகிக்கு போனில் அழைப்பு வரவும்தான் நிகழ் காலத்திற்கு வந்தான். யோகிக்கு நண்பன் அழைத்திருந்தான். அதை பார்த்துவிட்டு. ஆப்செய்து அருகே போட்டான்.

மிர்த்திக்கா, அவனின் சின்ன அலமாரி போன்று இருந்த இடத்தில் உடைகளை மாற்றிக் கொண்டிருந்தாள்.

யோகிக்கு இன்னமும் அவளின் அழகு ஈர்த்தது “லட்டு.. “ என்றான்.

மிர்த்திக்கா திரும்பி பார்க்கவில்லை. 

சற்று நேரம் சென்று உடைகளை அணிந்து கொண்டு அமர்ந்தாள்.. பருவ வயதில் எழும் அனைத்து உணர்வுகளுக்கும் விடை கிடைத்த தருணம்.. இருவருக்கும் பேச்சுக்கள் வரவில்லை.. பெண்ணவள், யோகியின் அருகே அமர்ந்து அவனின் தோள் சாய்ந்துக் கொண்டாள். எப்போதும் அவன்தான் அவளின் தோள் சாய்வான். இன்று.. அவள் சாயவும்.. யோகி அவளின் தலை கோதி கொடுத்தான்.

மிர்த்திக்கா “நாம தப்பு பண்றோம் யோகி..” என்றாள்.. கண்ணில் நீர் வழிந்தது.

யோகி “ஹேய்.. ஒருநாளில் ஒன்னும் ஆகாதாம்.. அதெல்லாம் பயப்படாத. இனி நான் இப்படி செய்ய மாட்டேன்.. கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்தான். அதெல்லாம் விடு.. லட்டுக்கு என்னோட எல்லாமே தெரியும்.. என்னை விட்டு போய்ட மாட்டியே” என்றான்.. ஆழமான குரலில்.

மிர்த்திக்கா சிரித்தாள் “உல்ட்டாவாக கேட்க்கிறீங்க” என்றாள்.

யோகி “ஹேய்.. பதில் சொல்லு” என்றான்.

மிர்த்தி “நீங்கதான் சொல்லணும்” என்றாள்.

யோகி “எனக்கு லட்டு மட்டும்தான். எங்க அம்மாவை விட.. அப்படி சொல்ல கூடாது, ஆனால்.. உண்மை லட்டு.. உன்னை எப்போதும் எனக்குள்ளதான் வைச்சிப்பேன். பாரேன், கல்யாணம் ஆன பின், கண்டிப்பா நீ ஆசை படுவதெல்லாம் செய்துக்க டா.. எனக்கு சொல்ல தெரியலை.. பிடிச்சதெல்லாம் செய்துதரேன். ம்..” என்றான்.

மிர்த்திக்கா ஏதும் பேசாமல் கேட்டுக் கொண்டாள்.

யோகி அவளின் உச்சியில் முத்தம் வைத்தான் “நான் இருக்கேன் டி, பார்த்துப்பேன். நீ எப்போதும் போல இரு.. ஒண்ணுமில்ல” என்றான்.

அப்போதும் அமைதிதான் அவளிடம்.

யோகி “மிர்த்தி” என சொல்லி தோளோடு அணைத்தான்.

மிர்த்திக்கா “ம்..” என்றாள்.

யோகி “என்னை பாரு..” என்றான்.

மிர்த்திக்கா அவனை பார்க்கவும்.. யோகி “நான் இருக்கேன் மிர்த்தி” என்றான்.

மிர்த்திக்கா “ம்.. லவ் யூ” என்றாள்.

யோகி அவளை மீண்டும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

நாம் காதலில் தேவதைகள்தான்.. ஆனால், அதே காதல் தனிமையோடு சேரும் போது  நம்மை சாத்தானாக்கி விடுகிறது.

!@!@!@!@!@!@!@!@!@!@!@!

 

போலீசில் கம்ப்ளைன்ட் கொடுப்போம் என நின்றனர்,  

Advertisement