Advertisement

என் அலாதிநேசம்!

7

நாட்கள் தேர்வில் வந்து நின்றது. முதலில் யோகிக்குதான், தொடங்கியது அரசு தேர்வுகள். மிர்த்தி, ஜெகனிடம் சின்ன டப்பாவில் பாயசம் கொடுத்துவிட்டாள். போனில் குறுஞ்செய்தி காலையிலேயே அனுப்பிவிட்டான்  பெண்ணுக்கு.. யோகிதான் பாயசம் வேண்டும் என்றிருந்தான். அதனால், காலை நேரத்தில் மெனக்கட்டு அவனுக்காக.. நேரம் ஒதுக்கி.. செய்து அனுப்பினாள். 

ஜெகன் அதை சேர்ப்பித்து விட்டான். யோகி, அவசரமாக என்றாலும் அதை உண்டுவிட்டு.. பெண்ணவளுக்கு  செய்தி அனுப்பி இருந்தான்  “தேங்க்ஸ் டா.. அம்மா இங்கதான் இருக்காங்க..” என அனுப்பி இருந்தான்.

யோகியின் செய்தியில் மிர்த்திக்கும் அம்மாவின் நினைவு வந்தது.. ஒருமாதிரி சொல்லிக் கொள்ள முடியாத கோவம்.. வருத்தம் ஏமாற்றம்.. நீண்ட நாட்கள் சென்று.. யோகியின் வார்த்தையில் வந்து சேர்ந்தது பெண்ணுக்கு. அதிலேயே மூட் அவுட். பொறுமையாக கிளம்பினாள் பள்ளிக்கு. மதியம்தான் பள்ளி.

இயல்பான நாட்கள் இல்லை இருவருக்கும்.. அதிகமாக பேச கூடாது என மிர்த்தி ஆர்டர், அதனால் மாலையில் பேசுவதில்லை. இரவில் அவன் உண்ணும் போது மட்டுமே.. அழைப்பான். மிர்த்தியும் தவறாமல் பேசுவாள். ஜெகன்தான் “யாருக்கு அக்கா.. போனில்” என்றான் ஒருநாள்.

ஜெகன் “யோகி.. டா” என்றாள் மறைக்காமல்.

ஜெகனுக்கு பெரிதாக ஏதும் தெரியவில்லை.. ஜெகன் “எக்ஸாம் முடிஞ்சிதுச்சா.. கொடு நானும் பேசறேன்” என வாங்கி பேசினான். இப்படியே நாட்கள் கடந்தது.

இன்று, மிர்த்திக்கும் பரீட்சை தொடங்கியது. யோகி, வாசலில் வந்து நின்றான்.. அவளோடு சென்று பஸ் ஏற்றிவிட்டுதான் வந்தான். அவர்களுடன் பாதி தூரம் ஜெகன் சென்றான்.. பின் நண்பனின் வீடு பார்க்கவும் உள்ளே சென்றுவிட்டான். யோகிக்கு இன்னமும் தேர்வுகள் மீதமிருந்தது.

யோகிக்கு, மாலையில் அவள் வந்ததும் வீட்டிற்கே வந்துவிடுவான் “எப்படி எக்ஸாம் செய்த.. ஒகேவா” என கேட்டு கொண்டு சற்று நேரம் இருப்பான்.. பிறகுதான் வீடு வருவான். 

தேர்வுகள் தொடங்கியதில் அவனுக்கு இது ஒரு வாய்ப்பு அவளை நேரில் பார்க்க.. வாசு அப்போதுதான் சமயபுரத்தில் கடை ஆரம்பித்திருந்த நேரம் அதனால், அலைச்சல்.. வேலை என இருந்தது, மற்றபடி சமையலுக்கு என கடையில் வேலை செய்யும் பெண் ஒருவரை பெரும்பாலும் சமைத்து வைக்க சொல்லிடுவார். அதனால், பிள்ளைகள் கவலை இல்லை. அத்தோடு யோகி மிர்த்தி ஜெகன் மூவரும் பெற்றோரை பொறுத்தவரை ஒரே வீட்டு பிள்ளைகள். அதனால், பெரிதாக பேச்சு.. போக்குவரத்து பற்றி ஆண்கள் கவனிக்கவில்லை.

யோகிக்கு இறுதி பரீட்சையின் போது.. அவனின் பாட்டிக்கு உடல்நலமில்லாமல் போக, மருத்துவமனையில் சேர்த்தனர். ஒருவாரம் அவரும் போராடினார். பின் இயற்கை எய்திவிட்டார்.

யோகிக்கு இந்த துக்கமெல்லாம் பெரிதாக இல்லை. அவன் எப்போதும் போல.. அதைவிட அதிகமாக விளையாட சென்றுவிட்டான். 

பரிட்சை முடிந்ததும் காலை நேரமாக எழுந்து கிரௌண்ட்க்கு சென்றிடுவான். பின், வந்து குளித்து உண்டு.. பதினோரு மணிக்கு.. கிரிக்கெட் அல்லது கபடி என ஏதேனும் ஒன்றை விளையாடிக் கொண்டு மதியத்தில் எங்கேனும் ஹோட்டலில் உண்டுக் கொண்டு.. மாலையில் மீண்டும் ஒன்றுகூடி விளையாடி.. இரவில் தெருக்கடையில் உண்டு.. பதினோரு மணிக்குதான் வீடு வருவான். 

மிர்த்திக்கு எக்ஸாம் நடந்துக் கொண்டிருந்தவரை.. அவளை தொந்திரவு செய்யவில்லை. அவளுக்கு, எக்ஸாம் முடிந்ததும் அவ்வபோது அழைத்து பேசினான். 

மிர்த்தி ஜெகன் இருவரும் விடுமுறைக்கு என முதலில் அத்தை வீட்டுக்கு சென்றுவிட்டாள். அடுத்த பத்து நாட்கள் தன் பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டாள்.. தன் அம்மாவின் பிறந்தவீட்டிற்கு. அங்கே தாத்தா சித்தி என ஒரே ஊரில் இருப்பதால் அங்கே பத்து நாட்கள். ஆக மிர்த்திக்காவிற்கு சற்று மாற்றம் வந்திருந்தது, கொஞ்சம் நாட்கள் பொறுப்புகள் இல்லாமல்.. சின்ன பெண் போல.. தன் சொந்தங்களோடு இனிமையாக பொழுதை கழித்தாள். எப்படி எங்கு இருந்தாலும்.. எதோ ஒருநேரம் யோகியும் மிர்த்தியும் பேசிக் கொண்டனர்.

யோகிக்குதான், இந்த நாட்கள் அவள் இல்லாமல் கடக்க கடக்க.. ஒருமாதிரி சலிப்பாக இருந்தது. வண்ணங்கள் தொலைந்த வானவில் போன்று அவனுக்கு எண்ணம்.. மிர்த்தி இருந்தாள் “யோகி, பொரியல்.. யோகி படிச்சிட்டியா.. எனக்கும் ஜெகனுகும் அந்த கடையில் நூடுல்ஸ்.. இந்த கோவில் ப்ரசாதம் ஜெகன்கிட்ட கொடுத்து விட்டிருக்கேன்.. ஆமாம் ஏன் இன்னிக்கு விளையாட போகலை.. எங்கையாவது விழுந்திட்டியா” என அத்தனை கேள்விகள்.. அதில் அத்தனை அக்கரைகள்.. ம்.. அம்மா மாதிரி என எண்ணிக் கொள்வான் யோகி.

அவள் பக்கத்து வீட்டில் இருக்கிறாள் என்பதே எதோ பலம் போல உணர்ந்தவன் இப்போது.. அவள் இல்லாமல் தடுமாறினான். தினமும் விளையாட.. நண்பர்களோடு அரட்டை அடிக்க.. என செல்லுகிறான், ஆனால், வேகமில்லை எதிலும். வானவில்தான் ஆனால், வண்ணமில்லை என எதோ குழப்பம் அவனுள். 

தினமும் மிர்த்தியோடு பேசுகிறான்.. அதிகமாக பேச அவனிற்கு ஆசைதான். இந்த குழப்பத்தை எல்லாம் அவளிடம் கொட்டி விளக்கம் கேட்க வேண்டும்.. அவள் தரும் பதிலை கண்மூடி ஏற்க வேண்டும் என தெளிவும்தான். ஆனால்.. வேண்டாம் ஏதாவது அவள் மறுத்துவிட்டாள் என எண்ணம். அதனால் பேச கூடாது என எண்ணிக் கொண்டான்.

மிர்த்தி விடுமுறை முடிந்து வந்து சேர்ந்தாள். யோகிக்குதான் அவள் வருகிறாள் என்றதிலிருந்து ஆனந்தம். அவளுக்கு பிடித்த லட்டு வாங்கிக் கொண்டு மாலையில் நேரமாக தன் வீடு வந்து சேர்ந்தான். 

மிர்த்தி தனது சித்தி சித்தப்பாவோடு ஊரிலிருந்து வந்திருந்தாள். நீண்டநாட்கள் சென்று அவர்கள் இங்கே வந்திருந்தனர். வாசு எப்போதும் போல உபசரித்தார். மிர்த்தியின் சித்தி பல்லவிக்கு, அக்கா இல்லாமல் அந்த வீடே நன்றாகவே இல்லை.. ‘எப்படி இவர்கள் கண்மணி இல்லாமல் இருக்கிறார்கள்’ எனத்தான் தோன்றிக் கொண்டே இருந்தது. காலம் அப்படிதானே.. சிலநேரங்களில் வதைக்கும் வல்லமை கொண்டதுதானே.

பட்டுகோட்டைதான் அவர்களின் ஊர். இரவு உணவு உண்டுதான் கிளம்பினர். பிள்ளைகள் இருவரையும் மாரியாரிடம் விட்டு வந்திருப்பதால்.. இரவே கிளம்பினர். ஜெகன், சித்தி பல்லவியை விடவேயில்லை.. நன்றாக ஒட்டிக் கொண்டான். சத்தமில்லாமல் அழகை கூட வந்தது சிறுவனுக்கு.. அம்மாவின் ஏக்கம்.. சொல்ல தெரியவில்லை. அமைதியாக  டிவி பார்த்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.

யோகி, இரவு மொட்டைமாடிக்கு  வா என செய்தி அனுப்பியிருந்தான். எனவே, மிர்த்தி அவனுக்கு மிஸ்டு கால்.. சமிக்கையில்.. தான் மொட்டை மாடி வருவதாக சொல்லிவிட்டு மேலே வந்து சேர்ந்தாள்.

பெண்ணவளுக்கு ஆர்வம்.. இதயம் படபடவென வேகம் கொண்டு துடித்தது.. தினமும் பேசுகிறோம்.. என தோன்றி தன்னை தானே சமாதானம் செய்துக் கொள்ள எண்ணினாலும்.. அது முடியாத  ஓரு பரபரப்பு.. கண்கள்.. அவன் வீட்டு மாடியையே பார்த்துக் கொண்டிருந்தது.

யோகி, சந்தோஷமாக அவளிற்கு வாங்கிய இனிப்போடு மேலே வந்தான். அவள் இங்கேயே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவன் அப்படியே மறைந்து நின்றுக் கொண்டான் கதவின் பின்.

பத்து நிமிடம் சென்றும் யோகி வராததால்.. மிர்த்தி.. போன் எடுக்க கீழே சென்றாள்.

யோகி இப்போது தன் வீட்டு மொட்டை மாடியின் சன் ஷேடோவில் இறங்கி.. அவள் வீட்டு மாடிக்கு ஏறினான். 

பெண்ணவள் போனில் அழைத்துக் கொண்டே மேலே வர.. யோகி அவள் மேலே வரும் நேரம்.. அந்த இருளில்.. அந்த கட்டிடத்திற்கு பின் நின்றுக் கொண்டு “மி..ர்த்..தி” என ரகசியமாக அழைக்க.. மிர்த்திக்கு முதலில் வந்தது பயம். லேசாக நடுங்கிக் கொண்டே அவன் வீட்டு மொட்டை மாடியை எட்டி பார்த்தாள். யாருமில்லை.. பின்  தன் மாடியை சுற்றி பார்க்க.. யாரோ பின் பக்கம் இருப்பதற்காக அசைவுகள் காதில் கேட்க்க.. பின்தான் அது யோகியின் குரல் என புரிந்தது பெண்ணுக்கு. ரகசியமும் சந்தோஷமும் சேர்ந்த புன்னகை. இதயம் மீண்டும் அதிக படபடப்பு கொண்டது.. பெண்ணுக்கு. 

யோகியின் குரல் கேட்கவும் அழைப்பை துண்டித்துவிட்டு.. குரல் வந்த இடம் நோக்கி சென்றாள் பெண். யோகி இப்போது முன்பக்கம் வந்து “மிர்த்தி” என்றழைக்க.. அவனை கண்டுக் கொள்ளும் புன்னகையில் இதழ்கள் விரிய.. முன்பக்கம் வந்தாள். யோகி பின்னால் சென்றான். மிர்த்திக்கு அவன் செல்லுவது புரிய.. மிர்த்தி அமைதியாக அந்த திட்டு சுவர் முன் சென்று வேடிக்கை பார்ப்பது போல நின்றுக் கொண்டாள்.

யோகி “மிர்த்தி.. பயந்தாங்கோலி..” என்றான். அப்படியே நின்றாள் பெண். யோகி அதன்பின் தாமதிக்கவில்லை.. அவளின் அருகில் சென்று நின்றுக் கொண்டான் தோள்கள் உரச.. மிர்த்தி புன்கையோடு திரும்பினாள் அவன் பக்கம்.. யோகிக்கு, உடலெல்லாம் அதிர்ந்து அடங்கியது அவள் உரசி.. தன்னை பார்த்த நொடி. இதுவரை முகத்திலிருந்த புன்னகை இன்னும் மலர.. இதயம் வேகமெடுத்து.. அந்த ஷனத்தில்.

இதுவரை அவளுக்கிருந்த படபடப்பு எல்லாம் அவனின் ஒழிந்து விளையாட்டில் கரைந்திருக்க. அவனை பார்த்ததும்.. எதார்த்தமாக மிர்த்தி “ஹேய்.. என்ன யோகி இது இவ்வளோ முடி.. அய்யோ பூச்சாண்டி மாதிரி இருக்க..” என்றவள் சட்டென.. அவனின் சிகையில் கை வைத்து.. பறற்றினாள்.

அவள் உச்சி தொட்ட வேளையில்.. உடல் சூடாகி.. யோகிக்கு தொண்டை குழியில் எதோ நெருடல். இழுத்த மூச்சு காற்று வெளியே வரவேயில்லை.. இதயம் அந்த காற்றை வைக்க இடமில்லாமல் தடுமாறி வேகமாக துடிக்க.. மிர்த்தி “யோகி..” என்றாள். 

யோகிக்கு, அனிச்சையாய் இதயம் தாங்கா காற்று.. அவள் தன் சிகையிலிருந்து கை எடுத்ததும்.. விடுதலை பெற.. பெருமூச்சு அனிச்சையாய் வாலிபனிடம் வர.. ஏதும் பேசமுடியாமல் அந்த சாலையை நோக்கி திரும்பிக் கொண்டான், யோகி.

மிர்த்தியும் அமைதியானாள்.. இருவருக்கும் ஒரே உணர்வு.. ஒரே பாஷை.. மௌனம். பேசினால் தீராது என புரிந்ததால் இந்த மௌனமா.. இல்லை, பேச கூடாது என்பதால் வந்த மௌனம். இருவருக்கும் தங்களின் நிலையை சொல்லிக் கொள்ளவேண்டிய தேவை இல்லை.. அதனால் வந்த மௌனம். 

யார் கலைப்பது இதை என தெரியாமல் ஐந்து நிமிடம் செல்ல.. எங்கிருந்தோ இதை பார்த்துக் கொண்டிருந்த எரி நட்சத்திரம்.. மின்னல் வேகத்தில் விழுந்தது. 

மிர்த்தி அதை பார்த்தும் “யோகி.. விஷ் வாங்கிக்க.. நாம எப்போதும் பிரெண்ட்ஸ்சா இருக்கணும்.. அல்லி, முல்லை, தாமரை.. ரோஜா மல்லி..” என சொல்லி யோகியின் கையை பற்றிக் கொண்டாள் மிர்த்தி.

யோகியும் அப்படியே அந்த சின்னதாக தெரிந்த நட்சத்திரத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.. புன்னகையோடு. இவள் போல பரவசமெல்லாம் இல்லை.. ஆனால், முந்தைய தொடுதலில் இருந்த படபடப்பு இல்லாமல்.. ஆனந்தமாக உள்வாங்கிக் கொண்டான் அவளின் தொடுகையை.

மிர்த்தி இப்போது பற்றியிருந்த அவனின் கையிலிருந்து தன் கையை எடுத்துக் கொண்டு.. யோகியை திரும்பி பார்த்துக் கொண்டே நின்றாள், அவன் ஏதாவது பேசுவானா என.

யோகி அதை உணர்ந்து “எப்படி இருக்க..” என்றான்.

சின்ன பெண்ணாக குதூகலம் அவளுள் பொங்கி பெருக.. தன் ஸ்கர்ட்டை இருபக்கமும் பற்றிக் கொண்டு.. “எப்படி இருக்கேன்” என்றாள் அமைதியான குரலில்.

Advertisement