யோகி “நான் நல்லாவே இல்ல..” என்றான்.

மிர்த்திக்கு கண்கள் கலங்கியது. இதயம் நடுங்குகிறது அவளுக்கு அவனின் வார்த்தையில். அமைதியாகவே இருந்தாள்.

மீண்டும் யோகியே “பிரெண்ட்ஸ் எல்லோரும் கேட்க்கிறாங்க.. ஏன் அவ கூட பேசலைன்னு. எனக்கும் காரணமே தெரியலையே.. இப்போதான் யோசிச்சேன். அந்த வைஷூ அக்கா இருக்கும் போது நான் உன்கிட்ட பேசினேன் அதுக்கு அப்புறம்தான் என்கூட நீ பேசலை. ஆனால், எனக்கு படிக்க முடியலை.. தயவு செய்து சொல்லிடு.. என்ன ஆச்சு, யாராவது ஏதாவது சொன்னாங்களா..” என்றான்.

மிர்த்திக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை, என்ன கேட்க்க முடியும் எதை பேசி முடித்துக் கொள்ள முடியும்.. காலையில் மாலையில் அவன் முகம் காணவே எனக்கு பிடிக்குது.. அவன் அழைத்தால்.. எடுக்காமல் இருக்க முடியவில்லை.. என யோசித்துக் கொண்டே இருந்தாள்.

யோகி அவள் பேச விரும்பவில்லை என எண்ணிக் கொண்டு  “மிர்த்திம்மா.. ப்ளீஸ்” என்றான் தழுதழுத்த குரலில்.

மிர்த்திக்காவிற்கு அந்த குரலையும் அழைப்பையும் கேட்டதும்.. சர்வமும் அவனிடம் மண்டியிட தயாரானது.. இதுவரை இழுத்து பிடித்திருந்த பிடிவாதமும் விடுபட மிர்த்தி “உன்னை பார்க்க வந்தானா.. யோகின்னு..’ அண்ணி கேட்டாங்க. எனக்கு பயமா இருக்கு யோகி.. எல்லோரும் நம்மை எப்படி பார்க்கிறாங்க” என்றாள்.

இருவருக்கும் யோசனை..  சிறிது இடைவெளி விட்டு “நாம என்ன தப்பா பண்றோம் யோகி எனக்கு புரியலை.. அந்த அண்ணி பார்வையே சரியில்ல” என்றாள் தான் மட்டுமே இதுவரை குழம்பிக் கொண்டிருந்த சந்தேகத்தை அவனிடம் சொல்லி, கலங்கினாள் பெண்.

யோகி அப்படியே அமர்ந்தான்.. தன் நண்பர்களும்.. ஒரு மாதிரி குரலில்தான் கேட்டனர்.. ‘என்னடா.. இங்கே நடக்குது! சண்டையா ஏன் பேசறதில்லை..’ எனதான் கேட்டகிறார்.. ஆனால் ‘அது என்னமோ எனக்கு பிடித்திருக்கிறது.. ஆமாம் சண்டை.. என சொல்லித்தான் இருக்கிறேன் நண்பர்களிடம்.. ஆனால், வைஷூ அக்கா எதுக்கு அப்படி கேட்டாங்க’ என யோசித்தான்.

மிர்த்திக்கா அழுவது கேட்க்கிறது.. இப்போது யோகி “மிர்த்தி, நாம எதுக்கு இதையெல்லாம் யோசிக்கனும்.” என்றான் சின்ன இடைவெளி.

மீண்டும் யோகியே “அவங்க வருவதற்கு முன்பே.. நாம பிரெண்ட்ஸ். அவங்க சும்மா கேட்டிருக்கலாம்.. அதுக்கு எனக்கு பனிஷ்மென்ட் தருவியா..” என சொல்லி நிறுத்தினான்.

மிர்த்தி மூக்கு உறுஞ்சிக் கொண்டே “நான் எங்கு பனீஷ் செய்தேன்..” என்றாள்.

யோகி அவள் பேசிவிட்டாள் என்பதில் “என்கிட்டே பேசலை நீ.. எனக்கு எக்ஸாம் வருது.. நான் படிக்கவா வேண்டாமா.. எனக்கு டென்ஷன்தான் வருது.. அடுத்தவங்களை பார்க்காத மிர்த்தி.” என்றான் புரியவைக்கும் குரலில்.

மிர்த்தி “யோகி எனக்கு மட்டும் எக்ஸாம் இல்லையா” என்றாள்.

யோகி அவளை இடைமறித்து “சரி, இதை கேளு.. நம்ம அம்மாக்கள் பிரெண்ட்ஸ்.. நாமும் பிரெண்ட்ஸ். ப்ளீஸ் மொட்டமாடிக்கு வா.. கொஞ்சம் பார்க்கணும்.. வா” என்றான் அதே கட்டை குரலில்.

மிர்த்திக்கும் அதே ஆசை.. போன் பேசிக் கொண்டே மேலே வந்தாள்.. கடை முன்பக்கம் இருப்பதால்.. மாடி படியிலேயே.. சாமான்கள் எல்லாம் இருக்கும்.. குடோனாகதான் வீடு இருக்கும்.. அதனால், படியில் பெரிய பெரிய மூட்டைகளில் எல்லாம் சாமான்கள் இருந்தது. மிர்த்தி.. போனை காதில் வைத்து அழுத்திக்  கொண்டே.. அப்படியே கால் வைத்து மேலே ஏறினாள். 

யோகி அங்கே அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்றிருந்தான்.. மிர்த்திக்கா வந்து சேர்ந்தாள். அழுத கண்கள்.. புன்னகை இழையோடிய உதடுகள்.. சிவந்து உப்பிய கன்னம்.. இதெல்லாம் சேர்ந்த முகம் எதோ சுமக்க முடியாத ஆனந்தத்தை சுமந்துக் கொண்டது போல.. அப்படியே அவனை பார்த்தாள் பெண்.

யோகி போனை காதிலிருந்து எடுத்து விட்டு அவள் தன்னை நோக்கி வருவதையே பார்த்திருந்தான்.. விளையாட்டு வாலிபன். ம்.. அப்படிதான் தோற்றம்.. வளர்ந்து நெடியவனாக.. நின்றான். விளையாடி ஓடி ஆடியதில் அழுத்தமான வலிமையான கால்கள்.. கூர்மையான கண்கள்.. அரும்பு மீசை கொஞ்சம் முரட்டு தனத்தைதான் கொடுத்திருந்தது.. அவனின் முகத்திற்கு. ஆனால், இப்போது அவளை பார்த்ததும் கூர்மையான கண்களும் இறுகிய உதடுகளும்  சற்று ஆசுவாசம் கொண்டது. தளர்ந்து கைகளை கட்டிக் கொண்டான்.. ம்.. அந்த நான்கடி ஆகாச இடைவெளியை தாண்டும் எண்ணம் வந்துவிட்டது இப்போது, அதனால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள.. கைகளை கட்டிக் கொண்டான். ‘அவளை பார்க்க வேண்டும்.. எப்போதும் போல.. அவளோடு பழக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே.. அந்த உண்மையான கள்ளமில்லா பார்வை.. அவனின் கண்ணில் சின்ன நேர்மையை கொடுத்திருந்தது.. அந்த கள்ளமில்லா பார்வை பெண்ணவளை ஈர்த்தது.

இருவருக்கும் எதிரே இரண்டு திட்டு சுவர்.. அருகருகே நெருக்கமான வீடுகள்தான். மனதில் திடமிருந்தால் தாவி ஏறி அடுத்த வீட்டிற்கு சென்றிடும் தூரம்தான், அது.

அதனால் யோகி போனில் பேசாமல் அப்படியே எதிரில் இருப்பவளிடம் பேசினான் “ப்பா.. ரொம்பதான் கோவம் வருது உனக்கு.. யாரோ என்னமோ கேட்டாங்கன்னு, என்னை பனீஷ் பண்ற நீ..” என சொல்லி தன் கைகளை அந்த சுவரில் ஊன்றினான்.

மிர்த்தி “எதிர் வீட்டு அண்ணி… புரியுதா, நீ எதுக்கு அப்போது கோவிலுக்கு வந்த..” என்றாள் இன்னமும் தீராத கோவத்தோடு.

யோகி “மிர்த்தி விடு, சொல்லு என்ன சமைச்ச.. டென் டேஸ் உன்னோட லஞ்ச் மிஸ்.. என் பிரெண்ட்ஸ் எல்லாம் கேட்ட்க்கிறாங்க.. என்ன டா சண்டையான்னு” என்றான் சிரிக்காமல் சீரியஸ் குரலில் சொன்னான்.

மிர்த்தி முறைத்த பார்வையாக பார்த்தாள்.

யோகி “எல்லாரும் தான் கேட்க்கிறாங்க நமக்குள்ள என்னான்னு.. அதுகெல்லாம் பதில் சொல்ல முடியுமா.. உனக்கு என்ன தோணுது..” என்றான்.

மிர்த்திக்கா “தெரியலை யோகி..” என சொல்லிக் கொண்டே  இருக்க அவளின் முகம் இயல்பாய் புன்னகையை இழந்தது.

யோகிக்கு அதை பார்க்க முடியவில்லை தனது கையை கட்டிக் கொண்டு தன் வீட்டின் திட்டு சுவரில் அமர்ந்தான்.. போனை காதில் வைத்து பேச தொடங்கினான்.. அவளும் போனை காதில் வைத்துக் கொண்டாள்.. யோகி “எல்லா பிரெண்ட்ஸ்க்கும் எப்போதும் என் மேல ஒரு பரிதாபம் உண்டு. அதனால், நான் எது பேசினாலும் சட்டென்னு சரி சொல்லிடுவாங்க.. ஒத்து போகிடுவாங்க. எனக்கு யாரிகிட்டவும் தேடி போய் பேசணும்.. வெயிட் பண்ணனும்ன்னு இல்லை.. அது என்னமோ ஒருமாதிரி இருக்கும். ஆனால், நீதான்  என்னமோ என்னை சரியா பார்க்காரா மாதிரி, ம்.. என்னை தேட வைக்கிற.. சண்டை போடுற.. கேள்வி கேட்க்கிற.. முறைக்கிற.. அப்புறம் ஒரே ஒரு கேர்ள் பிரின்ட்..” என சொல்லி இமைக்காமல் பார்த்தான் அவளையே. பெண்ணிற்கும் கண்களை இமைக்க தோன்றவில்லை.. எதிர்த்து திட்டவோ கேள்வி கேட்கவோ தோன்றவில்லை.

யோகி சுதாரித்து “இல்ல, கொஞ்சம் புதுசா இருக்கு. ப்ளீஸ் இதுக்கு என்ன பேர் வேண்டுமாலும் இருக்கட்டும்.. நீ எப்போதும் போல இரு.. நானும் சரியா இருக்கேன்.. ம்..” என்றான், சாந்தமான குரலில் நல்ல வாலிபனாக.

மிர்த்தி “அய்யோ எனக்கு ஏதும் புரியலை..” என்றாள்.

யோகி “என்ன!..” என்றான் கொஞ்சம் டென்ஷன் ஆன குரலில்.

மிர்த்தி அமைதியானாள்.. என்ன பேசுவது தெரியவில்லை.. யோகி ஏதேதோ சொல்றான்.. அதெல்லாம் நமக்கு இருப்பது போலதான் இருக்கு.. என தோன்ற அமைதியானாள்.

யோகி அவளின் தடுமாறிய முகம் கண்டு “ஏய்.. ஒண்ணுமில்ல டி, பிறந்ததிலிருந்து என்னை தெரியும் உனக்கு.. இதில் எப்படி பயம்  வரும். அதெல்லாம் பெருசான பிறகு.. யோசிக்கலாம். ம்.. நீயும் படிக்கனும், நானும் படிக்கணும்.. ப்ளீஸ்.. ஹெல்ப் பண்ணு” என்றான்.

மிர்த்தி “அய்யோ நீங்க போய் படிங்க.. நான் என்ன புக் எடுத்தா வைத்திருக்கிறேன்” என்றாள்.

யோகி “ம்.. எதையோ எடுத்து வைச்சிருக்க. “ என்றான் சின்ன குரலில்.

மிர்த்தி “என்ன.. கேட்கலை.. போங்க போய் படிங்க” என்றாள்.

யோகி போனை கையிலிருந்து எடுத்துவிட்டான் “ம்..” என கைகட்டிக் கொண்டு நின்றான்.

மிர்த்தி போன் பேசவில்லை அவன் எனவும், போனை காதில் வைக்கும்படி சைகை செய்தாள். யோகி மாட்டேன் என தலையாட்டினான்.

மிர்த்தி சத்தமாக “எனக்கு வேலை இருக்கு.. ஜெகன் வந்திடுவான்.. பேசுங்க” என்றாள்.

யோகி ஏனோ அழுத்தமாக நின்றான்.

மிர்த்தி சைகையில் ‘போறேன்’ என சைகை செய்தாள்.

யோகி ‘போககூடாது’ என உதடு மட்டும் அசைத்து வேண்டாம் என்பதாக தலையசைத்தான்.

மிர்த்தி ‘புரியலை’ என சைகை செய்தாள்.

யோகி அப்படியே பார்த்திருந்தான். முகத்தில் குறும்பான புன்னகையும்.. கண்களில் எதோ யோசனையும் இருந்தது.

மிர்த்தி திரும்பி நடக்க.. யோகி “மிர்த்தி” என சத்தமாக அழைத்தான்.

மிர்த்தி போனை காதில் வைக்க.. அவனும் போனை காதில் வைத்தான்.. மிர்த்திக்குதான் பேச வரவில்லை. யோகி “யாரை பத்தியும் நினைக்காத, நான் பார்த்துக்கிறேன்” என்றான் அழுத்தமாக.

மிர்த்திக்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை.. “ம்.. நான் கீழ போறேன்” என்றாள்.

யோகி “ம்.. ஜெகன் கிட்ட சட்னி கொடுத்துவிடு” என்றான்.

மிர்த்தி “ம்..” என சொல்லி திரும்பி நடந்தாள்.

இருவரும் கீழே வந்தனர்.. , பயம் காணாமல் போகியிருந்த்து.. மற்றபடி நாங்கள் அப்படி இல்லை. நான் எங்கள் இருவரும் பேசுவதை பற்றி கவலைப்பட கூடாது.. பிரெண்ட்ஸ் நாங்க. இப்போது படிக்கணும் அதான் முக்கியம்.. என தெளிவு வந்திருந்தது. 

யோகிக்கு, மனது ரெக்கை கட்டி பறந்தது.. தான் என்ன சொன்னாலும் அவள் செய்வது.. அவளும் தன்னை தேடியிருக்கிறாள்.. என கண்ணில் மின்னியது எல்லாம்.. அவனிடம் உறுதியை தந்தது..  எனக்கும் அவளுக்கும் நடுவில் நெடுங்கால் பந்தம் வரபோகிறது என உணர்ந்தான், யோகி. அது அவனுக்கு பலத்தை தந்தது. என்னமோ அவள் இருந்தால்.. எல்லாம் நடந்திடும் என்ற எண்ணத்தை தந்தது.. அமைதியாக படிக்க அமர்ந்தான்.

 இது எதோ புரியா உணர்வு..

இதை புரிந்திட முயன்றிடும் பொழுது..

ஒரு பனிமலை.. ஒரு எரிமலை..

ஒன்றாய் கைகோர்த்து சிரிக்கும்..”