Advertisement

நாட்கள் வேகமாக கடந்தது.

முழாண்டு தேர்வு நடந்து முடிந்தது. ஜெகனுக்கு மட்டுமே விடுமுறை. யோகிக்கும் மிர்த்திக்கும் சிறப்பு வகுப்புகள் நடந்தது. அதனால் பள்ளி பத்து நாட்களின் விடுமுறைக்கு பிறகு.. தொடர்ந்து முழுநேரம் இயங்கியது. யோகிக்கும் மிர்த்திக்கும் நேரங்கள் நிரம்ப கிடைத்தது.. பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்துக் கொண்டு.. இருவரும் படபடக்கும் மனதோடு பேசிக் கொள்வது அவ்வளவு பிடித்தது அவர்களுக்கு.

தினமும் இருவரும் இந்த நேரத்திகெனவே காத்திருந்தனர். பளபளக்கும் அடர்ந்த சிகை அவனின் நெற்றியில் புரள.. அரும்பு மீசையும் அதன் கீழே அழுந்த மூடிய உதடுகளில்.. தானாக வந்து அமர்ந்துக் கொள்ளும் அழகு புன்னையோடும்  குட்மோர்னிங்.. என புன்னகை முகமாக சொல்லிக் கொண்டே.. யோகி.. முன்னோக்கி கைகாட்ட.. அழகாக அவனுக்கு முன் நடந்தாள் மிர்த்தி. 

நடையில் வயதிற்கே உண்டான துள்ளல் வந்திருந்தது.. பெண்ணவளிடம். முகம் மினுமினுக்க அந்த பயணத்தை ரசித்தாள். பக்கவாட்டில் யோகி அமர்ந்திருக்க.. ஜன்னல் வழி காற்று.. அவளின் முன்னுச்சி முடிகளை கலைக்க.. மிர்த்தி “யோகி இன்னிக்கு கேரட்பீன்ஸ் பொறியல்.. இந்தாங்க..” என ஒரு சின்ன சில்வர் டப்பாவை எடுத்து கொடுத்தாள்.

யோகிக்கு மதியம் வரை அதை பொறுத்திருந்து சாப்பிடும் எண்ணமில்லை போல.. உடனே அந்த டப்பாவை திறந்து உண்ண தொடங்கினான். “ம்.. நல்லா இருக்கு டா..” என சொல்லிக் கொண்டே நான்கே நிமிடத்தில் முடித்துவிட்டான்.

மிர்த்தியிடம் அந்த டப்பாவை கொடுத்துவிட்டான். மிர்த்தி ஒன்றும் சொல்லாமல் முறைத்தபடி வாங்கி வைத்துக் கொண்டாள்.

யோகி “என்ன.. இத்துணுண்டு கொண்டு வந்தால் எப்படி பத்தும்..” என்றான் கைகளை துடைத்துக் கொண்டு.

மிர்த்தி “அதுக்காக அண்டாவிலா கொடுக்க முடியும்” என ஒழுங்கு காண்பித்தாள்.

யோகி “பார்த்து.. வாய் வலிக்க போகுது” என்றான். பின் “இன்னிக்கு எனக்கு கபடி மேட்ச் இருக்கு ஈவ்னிங்.. நாளைக்கு அக்கௌன்ட்ஸ்ல டெஸ்ட்.. எப்படியோ ரெண்டும் ஒரே நேரத்தில்தான் வருது.” என்றான்.

மிர்த்தி “ஓ.. மேட்ச்க்கு போறீங்களா.. மாமாகிட்டாயே சொல்றேன்.” என்றாள்.

யோகி சிரித்தான் “நீ எப்படி சொல்லுவ.. “ என்றான்.

மிர்த்தி “ஏன்.. வீட்டுக்கு வந்துதான்” என்றாள்.

யோகி “அம்மா இருந்தவரை.. நீ வீட்டுக்கு வந்து நான் பார்த்திருக்கேன். இப்போவெல்லாம் நீ வரதேயில்ல” என்றான், எதோ குரலில் ஒரு ஏக்கம் இருந்தது.

மிர்த்தி அமைதியாகினாள் புன்னகையோடு. எப்படியோ இருவருக்கும் நடுவில் அன்னைகளின் பேச்சு வந்துவிடுகிறது.  

முயன்று யோகி பேச்சை மீண்டும் தொடங்கினான்.

மதியம் இப்போதெல்லாம் மிர்த்தியின் உணவுதான் யோகிக்கு இறங்குகிறது. அவள் காலையில் ஏதேனும் சிறியதாக கொண்டு வந்து கொடுப்பது போதவில்லை போல.. மதியம் பெல் அடித்ததும் வந்துவிடுவான்.. மிரித்தியின் வகுப்பிற்கு. அவளின் உணவை வாங்கிக் கொண்டு தன் உணவை அவளிடம் கொடுத்து சென்றிடுவான். 

மிர்த்திக்கு, அவனின் வீட்டு சமையல் கொஞ்சம் பிடிக்கவே செய்கிறது.. தங்களின் உப்பு சப்பில்லாத சமையலை விட அந்த சமையல் அண்ணா.. சமையல் இவளுக்கு பிடிக்கவே செய்தது. ஆனால், யோகிக்கு என்னமோ இவளின் சமையல்தான் பிடிக்கிறது என வாங்கி செல்லுகிறான்.

யோகி, மாலையில் பள்ளி முடித்து வரும் போது கேண்டீன் சென்று அவளுக்கும் தனக்கும் என ஏதும் ஸ்னாக்ஸ் வாங்கிக் கொண்டுதான் பேருந்தில் ஏறுவான். 

பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் அவளின் முன்னும் பின்னும்.. அவளை ரசித்துக் கொண்டும்.. பேசிக் கொண்டும் நடப்பது இருவரும் ஒரு வழக்கமாகியது இப்போதும். பள்ளி பேருந்தில்.. இவர்கள் இருவரையும் மற்ற பிள்ளைகள் அதிகம் தொந்திரவும் செய்வதில்லை. பார்வையிலும் பேச்சிலும் நெருக்கம் கூடி போனது.

மிர்த்திக்கு அந்த இரண்டுமாதம் சென்றதே தெரியவில்லை. பழையபடி பள்ளி தொடங்கியது. இப்போது ஜெகனும் வந்து சேர்ந்துக் கொண்டான் இவர்களோடு. இப்போது யோகியோடு ஜெகன் அதிகமாக ஒட்டுவதில்லை.. அவனுக்கென தனி நட்பு வட்டம் கிடைத்துவிட்டது. அதனால், இவர்களின் உலகம் எந்த வகையிலும் பாதிக்கபடவில்லை.

அன்னைகள் இறந்தபிறகு.. இந்த இரண்டு பிள்ளைகளும் இவ்வளவு சிரித்து மகிழ்ந்தது இந்த நாட்களில்தான். 

அடுத்தடுத்த நாட்களில் எப்போதும் போல நாட்கள் சுழன்றது. 

இன்று நான்குநாட்கள் சேர்ந்தார் போல விடுமுறை. இரண்டு நாட்களுக்கு மேல் கடந்தது. அதற்குமேல், யோகியால் மிர்த்தியை நினைக்காமல் இருக்க முடியவில்லை. மிர்த்தியை பார்க்க வேண்டும்.. பேச வேண்டும் போல இருந்தது. 

காலையிலிருந்து அவளின் நினைவே அவனுக்கு. மிர்த்திக்கு அவ்வபோது, யோகி பற்றி தோன்றினாலும், வீடு வேலை அவளை முழுமையாக நினைக்கவிடவில்லை. எனவே, அவளுக்கு பெரிதாக தாக்கவில்லை அவன் நினைவு.

யோகிக்கு, மதியம் உண்ணும் போதும்.. அவளின் உணவு நினைவே. தன்னிடம் அவளின் போன் நம்பர் இல்லையே என நொந்துக் கொண்டே கடையின் வாசலில் அமர்ந்து அந்த மாலை பொழுதை கடத்திக் கொண்டிருந்தான். 

தேவதை போல.. இப்போது மிர்த்தி, அவள் வீட்டு வாசலில் வந்து நின்றாள். எதிர் வீட்டு அக்கா யாரோ வர.. இருவரும் சேர்ந்து கோவில் செல்ல.. முன்னே நடந்தனர்.

யோகிக்கு, அவளை பார்த்ததும் தொண்டை குழி அடைத்துக் கொண்டது. அவளோ அமர்ந்திருக்கும் தன்னை கண்டுகொள்ளவில்லையே என கோவமும் வந்தது. யோசிக்காமல் அவளின் பின்னே தானும் செல்ல தொடங்கினான்.

மிர்த்தியோடு செல்லுவது, புதிதாக எதிர் வீட்டு அண்ணன் முத்துவிற்கு திருமணம் நடந்திருந்தது. அவரின் மனைவி.. வைஷ்ணவி. இருவரும், தெரிந்தவர்கள் மூலமாக சுவாமியை பார்ப்பதற்கு என வரிசையில் நிற்காமல்.. நடந்தனர் கோவில் உள்ளே.

யோகி அவர்களின் பின்னோடு நடந்தான். சற்று தூரம் சென்றதும்.. ஏதும் தெரியாதவன் போல.. ஒரு சன்னதி முன்.. அவர்களின் எதிரே கைகூப்பி.. நின்று வணங்கிக் கொண்டிருந்தான். 

மிர்த்தி வணங்கி விட்டு நிமிர.. எதிரே  பார்த்தவள் “ஹேய் யோகி” என்றாள் ஆச்சர்யமாக.

யோகி அலட்டிக் கொள்ளாமல் “நீ எங்க இங்க” என்றான். காலையிலிருந்து அவளை பார்க்கவில்லையே என என்னோ கோவமும் வருத்தமும் அவனுக்கு.

மிர்த்தியின் முகம் வாடி போனது.. அவனின் புன்னகையில்ல முகம் பார்த்து. மிர்த்தி “வைஷூ அண்ணி கூட வந்தேன். நீ எங்க இங்க” என்றாள் அதற்குள் வைஷூ வந்துவிட.

வைஷ்ணவி “ஹேய்.. யோகி நீயும் கோவிலுக்கு எல்லாம் வருவியா, உங்க அண்ணன் வரமாட்டேனுட்டார். வா..” என்றார்.

மிர்த்தி “என்ன.. வா..” என்பதாக புருவம் உயர்த்தினாள், யோகியிடம்.

யோகிக்கு அவளிடம் பேசவேண்டும் போல இருந்தது. அந்த அக்கா வேற இருக்காங்க.. என எண்ணிக் கொண்டே.. யோகி “நான் பிரெண்ட்ஸ் கூட வந்தேன். நீங்க போயிட்டு வாங்க, நான் இங்கேயே வெயிட் பண்றேன்” என்றான்.

வைஷ்ணவி திரும்பி நடந்தார்.

யோகிக்கு, அவளை பார்த்துவிட்ட நிம்மதி. ஆனால், பேச முடியாத கடுப்பு.. ஒருமாதிரி அவளை முறைத்தான். உடன் வந்தவர் திரும்பி சென்றிடவும்..  யோகி “உன் நம்பர் கொடு” என்றான், மிர்த்தியிடம்.

வைஷ்ணவி இன்னும் மிர்த்தி வராமல் இருப்பதால்.. திரும்பி பார்த்து “மிர்த்தி” என்றாள்.

மிர்த்தி அவசர அவசரமாக தன் எண் சொல்லிவிட்டு ஓடினாள்.

யோகி புன்னகையே செய்யாமல் நின்றாள்.. மிர்த்தி இரண்டு எட்டு எடுத்து வைத்தவள் திரும்பி வந்து “என்ன யோகி சிரி” என்றாள்.

யோகி “நீ போ முதல்ல” என காய்ந்தான் காரணமே இல்லாமல்.

மிர்த்திக்கு படபடக்க தொடங்கியது.. மனது. ஓடினால் வைஷூ அண்ணியை நோக்கி. அவரோடு சென்று சேர்ந்துக் கொண்டாள். யோகி திரும்பி நடந்தான்.

வைஷ்ணவி “என்ன சொல்றான் யோகி. உன்னை பார்க்க வந்தானாமா” என்றார் அதிராமல்.

மிர்த்தி அதிர்ந்து போனாள் அப்பட்டமாக.

Advertisement