Advertisement

நீ என் அலாதிநேசம்

27

யோகிக்கு, மிர்த்தி திருச்சி சென்றது தெரியாது.

அவனின் கோவம் அவனுக்கு.. அலுவலகம் சென்றுக் கொண்டிருந்தான், காரில்.

மிதமான ஒலியில் “போ நீ போ…” என பாடல்.

யோகி இந்த பாடல் கேட்பது உண்டுதான்.. எப்போதாவது.. அவளிடம் பேசவேண்டும்.. அவளை மனமும் உடலும் தேடுகிறது எனும்போது.. பாடலை தேடுவான்.. எல்லாம் பாஸ்ட் பீட்தான். நிதானம் மெலடி.. எல்லாம் அவன் அதிகம் ரசிப்பதில்லை.. அதற்கு அவனுக்கு பொறுமையும் இல்லை. ஏனென்றால்.. பொறுமையை அவன் மிர்த்திக்கும் தனக்குமான காதலில் மட்டுமே கொட்ட வேண்டி இருந்தது. அதனால், மற்றவற்றில் பொறுமை பறந்தது போல. இப்போது பாஸ்ட் பீட் பாடல்கள் அவனின் காரை நிறைத்தது.

யோகிக்கு, இன்று கேஸ்கட் பார்த்து நாளை தன் சீனியருக்கு குறிப்பெடுத்துக் கொடுக்க வேண்டும். அதிகம் வேலை என இல்லை. எனவே, சற்று தாமதமாக கிளம்பினான். மூளைக்கு வேலையில்லாததால்.. மனம் தன் வேலையை தொடங்கியது. ‘ம்.. அவளிடம் அப்படி பேசியிருக்க கூடாது’ என்பதிலேயே நின்றது. ‘பார்த்துட்டு வந்திடலாமா.. ஈவ்னிங் போய் பார்க்கணும்..’ என ஒருவழியாக மனம் அவனுக்கு புத்தி சொல்லிக் கொண்டிருந்தது போல.. கார் மிதமான வேகத்தில் லாவகமாக செலுத்திக் கொண்டே.. பாடல் வரிகளை ரசித்தான்.. 

“இதுவரை உன்னுடன் வாழ்ந்த 

என்நாட்கள் மறுமுறை வாழ்ந்திட 

வழியில்லையா..

இருளிலே தேடிய 

தேடல்கள் எல்லாம் 

விடியலை காணவே 

விதியில்லையா.. 

போ நீ போ..” என இசைக்க.. 

யோகி.. மீண்டும் அதே வரிகளை ரிவைண்டு செய்து மீண்டும் போட்டு.. இந்த முறை தாளம் போட்டுக் கொண்டே வந்தான். அந்த நான்கு வரிகளை மீண்டும்.. நான்குமுறை கேட்டான். மனதில் வலிதான் அதிகமாகியது.. ‘என்னை நினைக்கிறாளா பாரு.. நான்தான் அவளையே நினைச்சிகிட்டு அவஸ்த்தைப்படுறேன்’ என திட்டிக் கொண்டே.. பாடலை ஆப் செய்தான்.

!@!@!@!@!@@!@!@!@

மிர்த்தி, இன்று காலையில் குளித்து சாமி முன் அமர்ந்து கொண்டாள் நீண்ட நேரம். வேண்டுதலா இல்லை நன்றியா என தெரியவில்லை, நீண்ட நேரம் அமர்ந்திருந்தாள்.

காமாட்சி குளித்து, தம்பி வாங்கி அனுப்பிய மசால் தோசையை உண்டு விட்டு, தன் மாத்திரைகள் விழுங்கி… தன் மகளுக்கு போன் செய்து பேசி என நேரம் கடந்த பின்புதான் மிர்த்திக்கா எழுந்து வந்தால் ஹாலுக்கு.

அத்தை “என்னடி.. இன்னும் ஏன் கடவுளை போட்டு பாடாபடுத்துற.. முதலில், அந்த பையன் வீட்டுக்கு கூப்பிடு.. ராகுகாலம் இப்போதுதான் முடிந்தது.. நல்ல நேரத்தில் பேசிவிடலாம். இன்னிக்கு உன் அப்பன்கிட்டவும் பேச சொல்லலாம். நீ இருக்கும் போதே அவர்களை இங்க வந்து உறுதி செய்துக்க சொல்லலாம். எத்தனை வேலை இருக்கு எங்களுக்கு. நீ என்னமோ போய் சாமி ரூமில் உட்கார்ந்துகிட்டு.. இன்னமும் வேண்டிக்கிட்டே இருக்க.. கிடைச்ச வரத்தை முதலில் அனுபவிப்பியா” என்றார் கிண்டலாக.

மிர்த்திக்கா புன்னகைத்தபடியே “ம்.. அத்த நீ ரொம்ப மாறிட்ட, அதுவும் சூப்பரா..” என்றாள்.

அத்தை “ஆமாம், மாறிட்டேன். போடி, வெட்டிஞாயம் பேசாமல், நீ முதலில் அவங்க வீட்டுக்கு பேசு.. நான் பேசுறேன். சீக்கிரம் போன் போடு” என்றார்.

மிர்த்திக்கு யோகியிடம்தான் முதலில் சொல்ல வேண்டும் என எண்ணம்..  அதனால், யோசித்தாள்.. யோகிகிட்ட பேசிட்டு, வீட்டுக்கு பேசிக்கலாம் என இரண்டு நிமிடம் அமைதியாகினாள் பெண்.

அத்தை “நீ யோசிச்சிகிட்டே இரு.. உங்க அப்பன் வந்து திரும்பவும் ஏதாவது சொல்லபோறான் பாரு. இப்படி அப்படின்னு பேசி வைச்சிருக்கோம் உன் அப்பன் கிட்ட.. என்னமோ தயங்கி தயங்கி நிறக்கற நீயி. என்ன என்ன வேலை செய்திருக்க நீயி.. அவனைத்தான் கல்யாணம் செய்துப்பேன்னு அடம்பிடிச்சி.. பொண்ணு பார்க்க வந்தவனை பயந்து ஓடவிட்டு.. சென்னைக்கு போய் வேலையை பார்த்து.. தனியா இருந்து.. உங்க அப்பனையும் என்னையும் இப்படி கழுத்தில் கத்தி இல்லாத குறையாக மிரட்டி.. அவனைத்தான் கல்யாணம் செய்துக்குவேன்னு  இந்த இரண்டு வருஷமா தவமிருந்தவதானே டி நீயி.. இப்போ எதுக்கு இப்படி மசமசன்னு நிக்குற.. போன் போடு டி” என சத்தம் போட்டார்.

மிர்த்திக்கா, இதெல்லாம் நான் செய்யவில்லை என்ற பார்வை பார்த்து “அத்த.. நான் அவர்கிட்ட இன்னும் சொல்லலை.. கோர்ட் போயிருப்பார். மதியமாக பேசிக்கலமா” என்றாள்.

அத்தை “என் தம்பி.. ஒரு மாதிரி தலையைதான் அசைத்திருக்கான். நேரம் கொடுத்த.. அவன் நிறைய யோசிச்சிடுவான். சீக்கிரம் பேசி முடிவு செய்திட்டா உனக்கு நல்லது” என்றார் சலிப்பாக.

உண்மைதான் என மிர்த்திக்கும் புரிந்தது. தன் போன் எடுத்து.. தமிழரசிக்கு அழைத்தாள் பெண். முறையாக நலம் விசாரித்து.. “திருச்சி வந்திருக்கேன் சித்தி. என் அத்தை உங்ககிட்ட பேசணும்மாம்” என சொல்லி காமாட்சி அத்தையிடம் போனை கொடுத்தாள் மிர்த்தி.

காமாட்சி ‘அவங்க பேரென்ன சொன்ன மிர்த்தி’ என சத்தமாக மிர்த்திக்காவிடம் கேட்டுக் கொண்டே சைகை பாஷையில் ‘கீழே போய்  உன் அப்பாவை கூட்டி வா’ என சைகை செய்தார்..  மிர்த்திக்காவும் தலையசைத்து கீழே சென்றாள்.

இப்போது அத்தை போனில் “வணக்கம்.. நான்தான் காமாட்சி, மிர்த்தியோட அத்தை. அவ அப்பாவோட அக்கா” என தன்னை முதலில் அறிமுகம் செய்துக் கொண்டு பேச்சை தொடங்கினார். 

காமாட்சி அத்தைக்கு பேசவா சொல்லி தரனும்.. தெளிவாக.. ‘நேத்துதான் மிர்த்தி வந்து தன்னிடம் சொன்னால்.. இன்று தம்பி சம்மதம் சொல்லிவிட்டான், நீங்க வாங்க.. உறுதி செய்துக்கலாம். வெள்ளிகிழமை நாள் நல்லா இருக்கு.. மாப்பிள்ளை தம்பிடமும் கலந்து பேசி சொல்லுங்க.. இருங்க.. என் தம்பி வாசு வந்துட்டான்.. அவன்கிட்டவும் ஒரு வார்த்தை பேசிடுங்க’ என ஒன்றுமே நடக்காதது போல காமாட்சி அத்தை எல்லாம் பேசிவிட்டார். 

தம்பியிடம் பேசு போனை கொடுத்து பேசு என்றார். 

வாசு கொஞ்சம் தடுமாறினார் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.. எப்படி ஆரம்பிப்பது எனவும் தெரியவில்லை.. இரண்டு நிமிடம் அமைதிதான் அவருக்கு. 

காமாட்சி “பொண்ணு வாழ போற இடம் ப்பா.. நேரில் வாங்க பேசிக்கலாம்ன்னு கூப்பிடு” என்றார் சின்ன குரலில்.

வாசு தொண்டையை சரி செய்துக் கொண்டு “க்கும்… அன்னிக்கு பிள்ளைகள் என்கிட்டே எதுவும் சொல்லலை. கொஞ்சம் சங்கடமாகிப் போச்சு.” என நிறுத்தினார் என்ன பேசுவது என தெரியாமல்.

தமிழரசி “விடுங்க அண்ணா, என் வீட்டுக்காரார் இருந்திருந்தால்.. எல்லாம் சரியாக செய்திருப்பார். நானும் அன்னிக்கு பசங்க சொன்னதும் கேட்டாமல் கொள்ளாமல் வந்துட்டேன். இப்போதான் காமாட்சி அக்கா சொன்னாங்க.. உங்களுக்கு சம்மதம் தானேங்க அண்ணா” என்றார்.

வாசு “ம்.. வாங்க.. நேரில் வாங்க பேசிக்கலாம்” என்றார்.

தமிழரசி “எப்படிங்க அண்ணா முறை.. தட்டு மாற்றுவது போல வந்திடவா” என்றார்.

வாசு “ம் ம்.. வாங்க, எனக்கு சமம்தம்தான். எல்லாம் கலந்து பேசிக்கலாம் வாங்க” என்றார் திடமான குரலில்.

அப்பாடா தமிழரசிக்கு இப்போதுதான் திருப்தியானது. அவரும் “நான் என் தம்பி குடும்பத்தை கூட்டி வந்திடுறேன் முறை எல்லாம் செய்ய.. நிச்சய புடையை எடுத்துட்டே வந்திடுறோம்..” என தானும் அழுத்தி சொன்னார். பின் தானே “சரிங்க அண்ணா சந்தோஷம். காமாட்சி அண்ணாகிட்ட கொடுங்க” என சொல்லி.. காமாட்சியிடம் பேசினார் தமிழரசி.

மிர்த்திக்கா, டைனிங் ஹாலில் அமர்ந்து எல்லாம் கேட்டுக் கொண்டே உண்டுக் கொண்டிருந்தாள்.

வாசு “சந்தோஷமா..” என்றார், முகத்தில் புன்னகையில்லை.. தெளிவில்லை.. இறுக்கமாகவே இருந்தது. 

தந்தையின் வார்த்தையையும் உடல்மொழியையும் பார்த்த பெண்ணுக்கு.. சங்கடமாகவே இருந்தது.. ஏதும் பேசவில்லை பெண், உணவில் கவனம் போல அமர்ந்துக் கொண்டாள்.

காமாட்சி அத்தைதான் “ம்.. எங்களுக்கு சந்தோஷம்தான்.. உனக்குத்தான் அப்படி இல்ல போல. எல்லாம் சரியாதான் நடக்குது. போ.. உன் மச்சானுக்கு சொல்லு.. நான் சொன்னால்.. ஏதாவது சொல்லுவார். ஜெகனுக்கு போன் போட்டு நாளைக்கே வரசொல்லு.. வேலை இருக்குல்ல.. நாமும் மாப்பிள்ளைக்கு நிச்சய ட்ரெஸ் எடுக்கணும்.. மோதிரம் செயின் ஏதாவது போடணும். ஜோசியர்கிட்ட சொல்லி வைக்கனும். இரண்டு குடும்பத்திற்கும் ஏதுவாக நாள் பார்க்க சரியாக இருக்கும். ஜெகனை வர சொல்லு. மிர்த்தி.. ஜெகனுக்கு போன் போடு டா.. நானும் பேசறேன்” என்றார் காமாட்சி அத்தை.. தன் தம்பிடமிருந்து பதில் வராது என்பது போல.. கடைசி வார்த்தைகளை மிர்த்தியிடம் சொன்னார்.

மிர்த்தி, அத்தைக்கு ஏதும் பதில் சொல்லவில்லை, தந்தையை பார்த்தாள்.

வாசுக்கு மகளின் முகம் இன்னமும் வாடி இருப்பதை பார்த்ததும் “என்ன மிர்த்தி, இன்னும் என்ன..” என்றார் கேள்வியாக.. ஆனால், இன்னமும் அவரின் குரலும்.. இறுகியே இருந்தது.

மிர்த்தி “ம்..” என்றாள்.

காமாட்சி “நீயும் கொஞ்சம் சாதாரனமா இரேன் வாசு. அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைச்சி தருகிற நீயும் சந்தோஷமா இருக்கனுமில்ல. அப்பாக்கு இதில் விருப்பமில்லையோன்னு அவளுக்கும் தோனுமில்லா நீ இப்படி இருந்தால்..” என்றார்.

வாசு “அப்படி எல்லாம் இல்லை, அதான் பேசியாச்சில்ல.. சந்தோஷமா இருக்க சொல்லு அக்கா. என்ன மிர்த்தி, அதான் நினைத்ததை நடத்திகிட்டேயே. அப்புறம் என்ன..” என்றார் அதட்டலாக.

மிர்த்தி அப்படியே அமர்ந்திருந்தாள்.

காமாட்சி “இது என்ன இப்படி மிரட்டுறா மாதிரி பேசுற.. இது எதோ கட்டாய கல்யாணம் மாதிரி கேட்க்கிற.. போடா.. உனக்கு மககிட்ட பேச கூட தெரியலை.” என்றார்.

வாசு “எதோ ஒன்னு சந்தோஷமா இருக்க சொல்லு அக்கா.. என்ன வேண்டுமோ வாங்கிக்க.. வெளியதெருவுக்கு போக சொல்லு.. வேண்டியதை வாங்கிக்கட்டும்.. செய்துக்கட்டும்.. அவ ஆசைப்பட்டு கேட்டதுதானே நடக்குது.. சந்தோஷமாக இருக்கனுமில்ல” என்றார்.

மிர்த்தி “உங்களுக்கு ஒகேதானே அப்பா” என்றாள் கண்ணில் தேடலோடு.

வாசு “எல்லாம் ஓகேதான். போ.. அத்தையோட போ.. என்ன வேண்டுமோ வாங்கிக்க.. என்ன செய்யணும் ஏதுன்னு, தம்பியும் நீயும் பேசி முடிவு பண்ணுங்க. அக்கா.. பார்த்துக்க” என்றவர், தன் பெட்டிலிருந்து.. கட்டாக பணம் எடுத்து, மிர்த்தியிடம் கொடுத்தார்.

மிர்த்தி “இருங்கப்பா” என்றவள் கைகழுவிக் கொண்டு வந்தாள். பணத்தினை வாங்கிக் கொண்டாள்.

தந்தை “போதுமா பாரு.. பத்தலைன்னா, எவ்வளோ வேண்டுமோ கேளு டா..” என்றார்.

மிர்த்தி ஏதும் சொல்லாமல் அந்த தொகையை வாங்கிக் கொண்டாள்.

தந்தை “சமயபுரம் கிளம்பறேன்” என்றவர். தன் அக்காவை பார்த்து “ஜெகன் கிட்ட கேளுக்கா.. பிள்ளைகளுக்கு என்ன வேணுமோ செய்து கொடு.. மச்சானை நான் கார் வைச்சி கூட்டிட்டு வரேன். நீ நிம்மதியா வேலையை பாருக்கா.. வரேன்” என பொதுவாக சொல்லியவர், கீழே செல்ல எத்தனித்தார்.. பின் திரும்பி பெண்ணை பார்த்து “மிர்த்தி, செலவு கணக்கு எழுதி வைச்சிடு டா..” என்றார்.

மிர்த்தியும் காமாட்சியும் கண்களால் எதோ சேதி பேசிக் கொள்ள.. காமாட்சி “ம்.. அவன் கணக்கில் கணக்கா இருப்பான்.. எழுதி வைச்சிடு” என்றார் மருமகளிடம் சிரித்துக் கொண்டே.

வாசு அதையெல்லாம் காதில் வாங்காமல் கீழே சென்றுவிட்டார்.

பின் இரு பெண்களும்.. ஜெகனிடம் பேசி.. மீண்டும் தமிழரசிக்கு பேசி.. என்ன செய்யலாம்.. எப்போது வருவீர்கள் என எல்லாம் கேட்டுக் கொண்டு. காமாட்சி நிச்சய விழாவை ஏற்பாடு செய்ய தொடங்கினார்.

மிர்த்திக்கா, யோகியிடம் தானாக விஷயத்தை சொல்லவில்லை. யோகிக்கு, தமிழரசிதான் அழைத்து பேசி விஷயத்தை சொன்னார். யோகி ‘என்னது மிர்த்தி அங்க போயிருக்காளா’ என தொடங்கி எல்லாம் அதிர்ச்சி. கலவையான உணர்வுகள் அவனுள்.. எப்படி தமிழரசியின் பேச்சிக்கு பதில் மொழிவது என தெரியவில்லை.. எல்லாம் கேட்டுக் கொண்டான்.

மாலையில் வீடு வந்து தமிழரசி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் தலையை மட்டுமே ஆட்டினான்.. ம் தமிழரசி “என்ன நிச்சய புடவை நாமே எடுத்திடலாமில்ல.. கேட்டியா மிர்த்திகிட்ட.. என்ன சொன்னாள்” எதற்கும் பதில் இல்லை.. யோகிக்கு அவள் அழைத்து சொல்லவில்லை என்றாலும் சந்தோஷம், ஆனால், தானாக அழைக்கவில்லை. என்னமோ யூகிக்க தெரியாத உணர்வு.. நடப்பதை வேடிக்கை பார்ப்பவன் போல.. எல்லாவற்றையும் பார்த்தான்.

வேலைகள் நடந்தது.

வெள்ளியன்று காலையில் மிர்த்திக்காவின் வீட்டில் யோகி நடுநாயகமாக அமர்ந்திருக்க.. எதிரே மிர்த்திக்கா அமர்ந்திருந்தாள். இருவருக்கும் மனதில் நிலைத்த நிம்மதி என்ற பாவம். மற்றபடி.. காதல் சந்தோஷம்.. அதை ஊருக்கு தெரிவிக்கும் பொலிவு.. களிப்பு.. கொண்டாட்டம்.. இப்படி எந்த ஆர்பாட்டமும் இல்லை.

எல்லோருக்கும் வாசு என்ற வில்லன் மீதே கண். அதனால், இவர்களின் அமைதி பெரிதாக தெரியவில்லை. மேலும்.. அவர்கள் பேசி சிரித்து.. என ஏதும் எங்கும் யாரும் பார்த்ததில்லை. அதனால், ஏதும் தெரியவில்லை. ஜெகனுக்கு கவனிக்க நேரமில்லை.

நெருங்கிய உறவுகள்.. அக்கம்பக்கத்தினர் என வாசு வீடு நிறைந்திருந்தது.. சந்தோஷ முகளால்.

காமாட்சி அவரின் கணவர் முன்னின்று எல்லாம் செய்தனர். நல்ல நேரத்தில்  தாம்பூலம் மாற்றிக் கொண்டனர். 

யோகி வீட்டார் மோதிரம் எடுத்து தந்தனர்.. யோகி அப்போதுதான் அவள் எதிரே இருப்பதை இப்போதுதான் பார்ப்பது போல பாவித்து அவளின் கண்களை பார்த்தான்.. மிர்த்தியும் இந்த பார்வைக்ககதானே எல்லாம் செய்தாள்.. தன்னவனின் பார்வையை உள் வாங்கிக் கொண்டாள்..

யோகி தன் கையை நீட்டினான்.. அவள் விரல்களை வேண்டி.. பெண்ணவள் அதை உணராததது போல அவனின் கண்களையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

யோகிக்கு பெண்ணவளின் எண்ணம் புரிந்தது போல.. தானாக அவளின் விரல்களை எடுத்து.. தான் வாங்கிவந்த மோதிரத்தை அணிவித்தான்.. கூடவே “எல்லாம் நீயே செய்துட்ட.. இதுக்கு மட்டும் நானா” என்றான்.

மிர்த்திக்காவிற்கு பாதிதான் காதில் கேட்டது. அவனின் அடக்கிய  புன்னகை முகம்.. அந்த அழுத்தமான பிடிப்பு எல்லாம்.. அவனின் காதலை சொல்ல.. அமைதியாக தானும் தன்னவனுக்கு மோதிரம் அணிவித்தாள். பின் இருவரையும் ஒருங்கே அமரவைத்து ஆரத்தி சுற்றிதான் எழவிட்டனர் பெரியவர்கள்.

மதியம் உணவு இங்கேதான். அதனால், உறவுகள் எல்லாம் பேசிக் கொண்டிருந்தனர்.

மிர்த்திக்கா தனது அறையில் இருந்தாள். அவளை சுற்றி.. அவளின் அத்தை பெண்.. நிவி.. என பெண்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

யோகி, தன் சொந்த ஊர் வந்ததால்.. நிச்சயம் முடிந்ததும்.. கீழே வந்துவிட்டான்.. அக்கம்பக்கத்தினர் பார்த்து பேச தொடங்கிவிட்டான்.

பெரியவர்கள் திருமணநாள் குறித்தனர்.

மதியம் உண்பதற்காக ஜெகன் போனில் அழைக்கவும் வந்தான் மேலே.

வாசு, மாப்பிள்ளையை வா என அழைத்ததோடு சரி. அதன்பின் எல்லாம் ஜெகன்தான். யோகியும் கண்டுக் கொள்ளவில்லை.. ‘பெண்ணை மட்டும் கொடு மாம்ஸ் போதும்’ என எண்ணிக் கொண்டு.. அவரின் பக்கமே திரும்பவில்லை.

யோகியையும் மிர்த்தியையும் சேர்த்து அமர்ந்தினர் உண்பதற்கு. எதோ அரெஞ்ச் மேரேஜ் போல.. இருவரும் தயங்கி தயங்கி அமர்ந்தனர். அன்றைய நாளில்.. நல்லவிதமாக எல்லாம் நடந்தது.

 

Advertisement