Advertisement

நீ என் அலாதிநேசம்!

23

மிர்த்திக்கா ஒரு சின்ன காபி ஷாப்பில் ஜெகனுக்காக காத்திருந்தாள். மனது முழுக்கவும் மீண்டும் நடுக்கம்.. ‘இந்தமுறை என்ன நடக்கும்.. அப்பா அடிப்பாரா, மாறியிருப்பார்.. என எண்ணினேனே.. இல்லையா, அதே கோவம்தான் யோகி மேல் இருக்கிறதா?.. என்ன செய்ய.. எனக்கு யோகி தானே வேண்டும். இந்தமுறை அப்பாகிட்ட சொல்லிடனும்..’ என எண்ணும் போதே உடல் நடுங்குகிறது. யோகி எவ்வளவுதூரம் அவளின் மனதில் காதலோடு நெருங்கி பிணைந்து இருக்கிறானோ.. அதே அளவு தந்தை.. கோவத்தோடு சரிபாதி அவளின் மனதில் நிற்கிறார்.

மிர்த்திக்கா, ஒரு ஜூஸ் வாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள். போனினை சைலைண்டில் போட்டிருந்தாள். ஆனாலும், தந்தையின் அழைப்பு அந்த திரையில் ஒளிர்ந்துக் கொண்டே இருந்தது. மனது அதே பதை பதைப்பில் இருந்துக் கொண்டே இருந்தது.

ஜெகன் வந்து சேர்ந்தான். அக்காவின் முகத்தை பார்த்தான்.. பாவமாக இருந்தது. பழைய அக்காவை பார்ப்பது போலே இருந்தது.. “அக்கா, கவலை படாத.. யோகி வந்திடுவார்” என்றான்.

மிர்த்திக்கா “அப்பாகிட்ட எப்படிடா.. பேசுவது.. பயமா இருக்கு.. அடிச்சிட்டா.. யோகியை ஏதாவது செய்திட போறார் டா. நீ அமைதியா இருந்திருக்கலாம்” என்றாள் அழுகையும் ஆற்றாமையும் போட்டி போடும் குரலில்.

ஜெகன் “ஆமாம்.. உன் யோகியை அடிக்கிறாங்க.. அவரே அடியாள் வக்கீல்.. அவரை அடிக்கிறாங்க. நீ புலம்பாத.. நீ தைரியமா பேசு.. எனக்கு யோகிதான் வேணும்ன்னு சொல்லு. சென்னை தாண்டி ஊருக்கு வரமாட்டேன்னு சொல்லு. அடிக்க மாட்டார், அடிச்சாலும் வாங்கிக்க.. என்ன இப்ப..” என அக்காவை திடப்படுத்திக் கொண்டிருந்தான்.

அப்போது சர்வர் வந்து “ஆர்டர் இருக்குங்களா” என்றார்.

ஜெகன் நிமிர்ந்து யாரென பார்த்தான்.. பின்தான் அவரின் கேள்வி புரிய.. அக்கா அழகாக வாங்கி வைத்திருந்த அந்த ஜூஸ் பார்த்தான். ஆனால், அவனுக்கு நல்ல பசி.. மேலும் இது சிற்றுண்டிகள் மட்டுமே கிடைக்குமிடம்.. என்ன செய்வது என நோட்டமிட்டான்.. பின் “இல்ல.. பில் கொடுத்திடுங்க” என்றவன் அந்த ஜூஸ் எடுத்து மடமடவென தானே குடித்தான்.. பில் வந்ததும் செலுத்திவிட்டு கிளம்பினர் இருவரும்.

இருவரும் மீண்டும் ஒரு உணவகத்திற்கு சென்றனர். மிர்த்திக்கா அதனை பார்த்துவிட்டு “டேய்.. எனக்கு பசிக்கலை  டா..” என்றாள்.

ஜெகன் அவளோடு பார்க்கிங் நோக்கி வண்டியை செலுத்திக் கொண்டே “உன் யோகி இன்னும் கிளம்பவில்லை.. இப்போவே வீட்டுக்கு போன.. உன்னை பேக் பண்ணிடுவார் உன் அப்பா. வா சாப்பிடலாம், ஒரு ஒன்ஹௌவர்.. டைம் போக்கிடும். அதற்குள் மாம்ஸ் கிளம்பிடும். அப்புறம் மெதுவா போகலாம்.” என்றான்.

அந்த நேரத்தில், வாசு அழைத்தார்.. மகனை. ஜெகன் வண்டியை நிறுத்திவிட்டு “பாரு அப்பா கூப்பிடுறார்.” என்றான் அக்காவிடம்.

மிர்த்திக்கா “என்ன டா சொல்ல போற” என்றாள்.

ஜெகன் “தெரியலை” என, அமருவதற்கு இடம் தேடினான் கண்களால். ஜெகன் என்னமோ சாதரணமாக இருந்தான். எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை.. முன்போல பயமில்லை போல அப்பாவின் மேல்.. எல்லாம் சம்மதித்திடுவார் என அசால்ட்டாக இருந்தான் மகன். 

நல்ல கூட்டம்.. ஹோட்டலில், ஜெகனின் போன் அலறிக் கொண்டே இருந்தது. ஜெகன் அக்காவோடு ஒரு இடம் தேடி அமர்ந்தான்.

மிர்த்திக்காவின் முகமே தெளியவேயில்லை.. “எனக்கு எதுவும் வேண்டாம்.. அப்பாகிட்ட பேசு டா” என்றாள்.

ஜெகன் மும்முறமாக மெனு கார்ட் பார்த்துக் கொண்டிருந்தான்.

மிர்த்திக்காவிற்கு தம்பியை பார்த்து கோவமே வந்தது “டேய், அப்பாகிட்ட பேசுடா முதலில்” என்றாள்.

ஜெகன் தனக்கொரு பிரியாணி சொல்லிவிட்டு.. அக்காவை பார்த்தான். மிர்த்திக்கா விழித்தால்.. பின்தான் அவன் உணவு கேட்பது புரிய.. “தயிர்சாதம்” என்றாள். 

ஜெகன் முறைத்தான் அக்காவை.. பின் அக்காவிற்கும் ஒரு பிரியாணி சொல்லி அந்த சர்வரின் வேலையை பார்க்க அனுப்பினான்.

ஜெகன் தந்தைக்கு அழைத்தான்.. அவரோ பக்கத்தில் அமர்ந்திருக்கும் மகளுக்கு கேட்க்கும் வண்ணம் “எங்க டா இருக்க” என ஹைபிச்சில் கேட்டார்.

ஜெகன் “ஏன் அப்பா.. ஆபீசில்” என்றான், இயல்பாக பொய் பேசினான்.

வாசு “மிர்த்திக்கா போன் செய்தால் எடுக்கவில்லை. நீ ஏதாவது சொன்னியா” என்றார்.

ஜெகன் “எதை பற்றி” என்றான், ஒன்றுமே தெரியாதவன் போல.

வாசு “டேய் தோலை உரிச்சிடுவேன்.. உன் அக்கா எங்க “ என்றார்.

ஜெகன் “அப்பா எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு வேலை இருக்கு” என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டான்.

மிர்த்திக்கா, தம்பியின் முகத்தையே பார்த்திருந்தாள்.

ஜெகன் “ஒண்ணுமில்லை அக்கா, நீ சாப்பிடு..” என்றான்.

மிர்த்திக்காவிற்கு உணவு இறங்குமா என்ன.. ஏதேதோ யோசனையில் நாலு பருக்கைகளை வாயில் போடுவது மெல்லுவதுமாக இருந்தாள்.

ஜெகன் உண்டான்.. அக்காவின் பாதி உணவினையும் உண்டான்.

இப்போதுதான் யோகி அழைத்தான் மிர்த்திக்காவிற்கு. பெண்ணவள் அழைப்பை ஏற்றாள். யோகி “எங்க இருக்க.. சாப்பிட்டியா” என்றான்.

மிர்த்திக்கா “ம்.. நீங்க என்ன செய்யறீங்க” என்றாள்.

யோகி “நானும் அத்தையும் கிளம்பிட்டோம்.. வந்திடுவோம். ஜெகனோட வீட்டுக்கு போ” என்றான் ஆனாலும் தன்னவளின் குரல் எதோ போலிருக்க.. அவனால் அழைப்பை துண்டிக்க முடியவில்லை.

மிர்த்திக்கா “ம்..” என்றாள்.

யோகி தொண்டையை சரி செய்துக் கொண்டு “என்ன டா.. சாப்பிட்டியா” என்றான்.

மிர்த்திக்கா இப்போது கலவரமான குரலில் “ம்.. அப்பா ஏதாவது பேசினாலும்.. நீங்க கொஞ்சம் அமைதியாக இருங்க.” என்றாள் சின்ன குரலில்.

யோகி “சரி.. தைரியமா இரு.. வந்திடுவோம்” என்றான்.

மிர்த்திக்கா “ம்..” என்றாள்.

அழைப்பை துண்டித்தனர்.

யோகி, தன் அத்தையிடம் “அத்தை நாம் மட்டும் போவோம் முதலில் அதன்பிறகு சூழ்நிலை பார்த்து சித்தப்பாவை வர சொல்லலாம் அத்தை. இப்போது வாசு அங்கிள் எப்படி பேசுவார் என்ன ஏதுன்னு தெரியாதில்ல..” என்றிருந்தான். அதனால் இருவர் மட்டும் வாசுவிடம் பேசி.. எப்போது பெண் கேட்டு வரலாம் என விவாதிக்க கிளம்பி வந்தனர். அதனால் எந்த ஏற்பாடும் இல்லை. 

ஜெகன், பார்க்கிங் வந்திருந்தான். வண்டி எடுத்துக் கொண்டு.. இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

வாசு, உண்ணாமல் இங்கும் அங்கும் நடந்துக் கொண்டிருந்தார். மகனும் மகளும் ஒன்றாக வருவதை பார்த்தும்.. கொஞ்சம் அசந்து போனார்.. சுதாரித்து சோபாவில் அமர்ந்தார்.

மிர்த்திக்கா பேக் வைத்துவிட்டு.. “அப்பா சாப்பிட்டீங்களா” என்றாள்.. குரல் என்னமோ போலிருந்தது. தந்தை கவனித்தார். ‘உண்ணவில்லை’ என தலையசைத்தார்.

மிர்த்திக்கா, உணவு எடுத்து வைத்தாள்.. 

வாசு ஏதும் சொல்லாமல் உண்டார்.

ஜெகன், லாப்டாப் எடுத்து அமர்ந்துக் கொண்டான் ஹாலிலேயே.

உண்டு முடித்து வாசு.. மகளிடம் “கிளம்பலாம்.. நீ ட்ரெஸ் எடுத்துக்க” என்றார்.

ஜெகனும் மிர்த்திக்காவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

வாசு “என்ன முழிக்கிற” என்றார், மகளை பார்த்து.

மிர்த்திக்கா “அப்பா என்னாச்சு எதுக்கு ஊருக்கு” என்றாள்.

வாசு “அதான் சொன்னேனே” என்றார்.

மிர்த்திக்கா “அப்பா.. வந்து.. அது வந்து ப்பா” என எதோ சொல் வந்தாள்.

வாசு “ஒரு அடி விட்டால்.. தூர போய் விழுந்திடுவ ராஸ்கல்” என்றவர் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டார். 

பெண்ணவள் இரெண்டெட்டு பின் சென்றாள்.. 

ஜெகன் “அப்பா.. மிர்த்தி பாவம்” என்றாள்.

வாசு மகனை  பார்த்து “வாயை மூடுடா..” என்றார். மகளிடம் திரும்பி “இரண்டு பேரும் சேர்ந்து.. என்னை ஏமாத்தியிருக்கீங்க. உன்னை நம்பி வேலைக்கு அனுப்பின்னேன்.. அன்னிக்கு கல்யாணமே வேண்டாம்ன்னு சொன்ன.. உனக்கு பார்த்து பார்த்து செய்த நான் முக்கியமில்ல.. அவன்தான் வேணும். ம்.. முடியாது, நான் உயிரோட இருக்கும் வரை நடக்காது. நீ கிளம்பு..  போதும் நீ வேலை பார்த்த அழகு.” என்றார்.

மிர்த்திக்கா “அப்பா.. இருங்க ப்பா.. கொஞ்சம் நான் பேசுவதை கேளுங்க ப்பா..” என்றாள்.

வாசு “என்ன கேட்கனும்… என்கிட்டே நீ என்ன சொல்லிட்டு வந்த.. வேலைக்குன்னுதானே சொன்ன” என பேசிக் கொண்டிருக்கவே.. அழைப்பு மணி ஒலித்தது.

 

 

Advertisement