Advertisement

நீ என் அலாதிநேசம்!

21

யோகிக்கு, மனது சந்தோஷத்தில் திளைத்திருந்தது.. காதல் கைசேர்ந்த நிலை. வாசு அங்கிள் பார்த்து பேச வேண்டும் என்பது அடுத்த பெரிய கடினமான வேலை என்றாலும்.. இது நேசம் கைகூடிய நாட்களாக அவனை நிம்மதியாக வேலை செய்ய வைத்து. மதியம் சாப்பிட்டீங்களா என்ற அவளின் குறுஞ்செய்தி.. அவனின் அன்றைய நிதானத்தை தக்க வைத்து.. அதிகமாக வேலை செய்வதற்கு.. போதுமானதாக இருந்தது. 

ஜெகன் வந்து சேர்ந்தான் சென்னைக்கு. அந்த வார இறுதியில் மிர்த்திக்காவும் ஜெகனும் திருச்சி சென்று தந்தையை பார்த்து வந்தனர்.

மிர்த்திக்கு, இயல்பாக நாட்கள் சென்றது. மனது அலைபாயாமல் அமைதியாக இருந்தது.. வேலை.. வீட்டு வேலை.. அதை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை யோகியோடு பேசுவது என.. ஒரே ரிதத்தில் வாழ்க்கை சென்றது.

யோகிக்கு, கோர்ட்.. வெளியூர் பயணம்.. என நாட்கள் கடந்தது. பார்க்க வேண்டும் மிர்த்தியை என தோன்றினாலும்.. முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான். இருவரும் பார்த்துக் கொள்வதை தவிர்த்தனர். தாங்களாக நேரம் ஒதுக்கி.. அலைபேசியில் பேசிக் கொண்டனர். 

நிவி, முதல் வருடம் மருத்துவம் முடித்து இரண்டாம் வருடம் தொடங்கியது. யோகியும் நிவியும் முன்போல அமர்ந்து பேசுவது உண்பதோ இல்லை. நிவி முழுவதுமாக யோகியை தவிர்த்தாள். மேலும், நண்பர்களோடு அதிகமாக வெளியே செல்ல தொடங்கினாள். யோகியிடம் கேட்பதோ சொல்லுவதோ இல்லை. அன்னையிடம் மட்டுமே சொல்லுவது.. அனுமதி கேட்பது என்பதே இல்லை.. அதையும் மீறி தமிழரசி ஏதாவது “இப்போதானே டா.. போயிட்டு வந்த.. அடுத்த வாரம் போகலாமே” என்றால் கூட நிவி கையில் கிடைப்பதை கீழே போட்டு உடைத்து ரகளை செய்தாள்.

தமிழரசி பேசுவதே இல்லை.. மகளுக்கு உடம்பு முடியாமல் போகிடும் என்று அமைதியாகிவிட்டார். தமிழரசி, தன் பெரிய மகளிடம் பேசினார்.. நிவி பற்றி.

ஆத்மிகா, நிவியிடம் போனில் பேசினாள்.. “அம்மாகிட்ட அப்படி பேசாத என்ன பிரச்சனை” என பொறுமையாக.. கேட்டும் பார்த்தாள்.

நிவி “எனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே.. யாரு அம்மா ஏதாவது சொன்னாங்களா” என திருப்பி அக்காவையே கேள்வி கேட்டாள்.. ஆத்மிகா “அம்மாவை நீதானே பார்த்துக்கணும். அம்மாகூட பேசறதே இல்லைன்னு சொல்றாங்க நிவி.. என்ன ஆச்சு” என்றாள்.

நிவி “எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கதான் எனக்கு பிரச்சனை பிரச்சனைன்னு சொல்றீங்க” என காய்ந்தாள்.

 ஆத்மிகா அமைதியானாள்.

நிவி போனை வைத்துவிட்டாள்.

என்னமோ முரண்.. தன் பிள்ளைகள் பற்றி கூட விசாரிக்கவில்லை. முன்பெல்லாம் அவளே அழைத்து பேசுவாள்.. அப்படி ஏதும் பேச்சுகள் இந்த இரண்டு மாதத்தில் அழைக்கவில்லை.. தமக்கைக்கும், தங்கையை பற்றி பயம் பற்றிக் கொண்டது. 

ஆக, எல்லோருக்கும் நிவி.. இந்த போக்கிற்கு காரணம் யோகிதான் என எண்ணம். யோகியின் புறக்கணிப்பை மனதில் வைத்து இப்படி ஆகிவிட்டால்.. என எண்ணிக் கொண்டனர்.

நாட்கள் கடந்தது.

யோகியிடம், தமிழரசி பெண்ணின் நிகழ்வுகளை சொல்லுவதற்கே இரண்டு மாதம் ஆகிற்று. யோகி, தமிழரசியின் கண்ணில் படுவதேயில்லை. அதிகமாக வெளியூர் பயணம்.. அலுவலகத்தில் தங்கி வேலை பார்ப்பது என யோகி பிஸி. நிவி இப்போதெல்லாம் அழைப்பதேயில்லை. அதனால், தமிழரசிக்கு செய்தி அனுப்பி விடுகிறான். எனவே, நிவியிடம் அவனால் பேசவே முடியவில்லை. மேலும், என்னவென சொல்லுவது தன் நிலையை என யோசனை வேறு அவனுக்கு.

யோகிக்கு, தமிழரசி சொல்லுவது எல்லாம் புரிகிறது. ஆனால், அவன் கண்ணில் இதெல்லாம் தென்படவில்லை.. இல்லை, இதையெல்லாம் கவனிக்க நேரம் இருக்கவில்லை. வேலைதான் பிரதானமாக இருந்தது. நிவியிடம் பேசுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தான், யோகி.

அப்படி ஒருநாள் அமைந்தது.

யோகி அன்று அலுவலகம் செல்லவில்லை. நிவியை கல்லூரியில் விடுவதற்கு கார் எடுத்தான்.

நிவி “ஏன், நான் போய்கிறேன்” என்றாள். மாமா என்ற அழைப்பு கூட வரவில்லை அவளிடமிருந்து.

யோகி “இல்ல, வா” என அவளின் கை பற்றி இழுத்தான்.

நிவி “தொடாதீங்க சொல்லிட்டேன்” என்றாள் கோவமாக எரிச்சலாக சத்தமாக கத்தினாள்.

யோகி அப்படியே விட்டுவிட்டான்.. தமிழரசி வேறு பார்த்துக் கொண்டிருந்தார். அதனால் யோகி “சரி, வா.. நான்தான் இன்னிக்கு உன்னை ட்ரோப் பண்ணுவேன்” என சொல்லி.. காரில் சென்று அமர்ந்துக் கொண்டான்.

தமிழரசி அதட்டினார் “ஏன் நிவி.. அடுத்தவர்களை புரிஞ்சிக்காமல் இருக்க. அதோடு உன்னையும் நீ அழிச்சிக்கிற.  இப்படி எந்த நேரமும் கடுகடுன்னு இருக்க.. வயசு பிள்ளைக்கு உண்டான பேச்சு சிரிப்பு ஏதாவது இருக்கா பாரு..  இப்போ உனக்கு அண்ணன் அப்பா மாமா என அவன் உன்னை வளர்த்தவன்.” என்றார் பொறுமையாக.

நிவி “அம்மா… போதும். மாமாதான் தப்பு பண்றார். நீ பேசறது எதோ சீரியல் டைலாக் மாதிரி இருக்கு” என்றாள்.. பாக்வுடன், சோபாவில் அமர்ந்துக் கொண்டு. யோகியோடு செல்லமாட்டேன் என அமர்ந்துக் கொண்டாள்.

தமிழரசிக்கு சங்கடமாக போகிற்று “அவன் வயசு என்னான்னு தெரியுமா.. இப்படி உன்கிட்ட பேசனும்ன்னு என்ன இருக்கு, அவனுக்கு. அவனை அப்பா பார்த்துகிட்டார். அதுக்காக அவனை அடிமையாக்கனும்மா. அவன், எப்படி எல்லாம் பார்த்துகிட்டான் உன்னை. உன்மேல வைச்சிருப்பது அன்பு டி.. நீதான் வயசு கோளாறுல.. ஏதேதோ ஆகிட்ட.. “ என கடைசி வார்த்தையை தனக்குள் முனகிக் கொண்டவர்.. மகளை இன்னும் அதிகமாக முறைத்துக் கொண்டு “யோகி, சொல்றதை கேளு. இன்னும் உனக்கு பக்குவம் இல்லை எல்லாத்தையும் புரிந்துக் கொள்வதற்கு. அம்மா மேல் மரியாதை இருக்குன்னா.. கொஞ்சம் கண்ணை திறந்து பாரு.. உன்னை சுற்றி என்ன நடக்குது. அம்மா எப்படி இருக்கேன்னு பாரு.. அக்கா.. அக்கா பிள்ளைகள் என்ன செய்யுதுன்னு சுற்றி இருப்பவர்களையும் பாரு.. கொஞ்சம் அமைதியா அடுத்தவங்க மனசையும் பாரு” என்றார் நிதானமான குரலில்.

நிவேதித்தா அமைதியாக இருந்தாள். ;அப்போ மாமா தப்பு பண்ணலையா.. நான்தான் தப்பு பண்றேனா’ என அமைதியாக இருந்தாள்.

கல்லூரிக்கு நேரம் ஆகிக் கொண்டே இருந்தது.

தமிழரசி பேசி முடித்துவிட்டேன் என்பதாக உண்பதற்காக சென்றுவிட்டார்.

நிவிக்கு என்னமோ மனது குழப்பமானது. இப்போது யோகி ஹார்ரன் ஒலிக்கவிட்டான்.

மூன்றாவது ஹார்ரன் ஒலிக்கும் போது எழுந்து சென்றாள் சின்ன பெண் நிவேதித்தா. 

யோகி, அமைதியாக காரினை செலுத்தினான். அலுவலகம் செல்லுவது போலதான் குளித்து ரெடியாகி வந்திருந்தான். உண்ணவில்லை.. காலை காபி கூட குடிக்கவில்லை. ஜாக்கிங்.. விளையாட செல்லுவது.. உடலை பேணுவது என்பதெல்லாம் இப்போது காணாமல் போகியிருந்தது அவனிடம். வேலை வேலைதான் எப்போதும். 

நீண்டநாளாக தமிழரசி சொல்லிக் கொண்டே இருக்கிறார்.. நிவியை பற்றி. இன்று அவனுக்கு வேலை இல்லை.. விடுமுறை என சொல்லியிருந்தார் நம்பி. அதனால் இந்த விஷயத்தை பேசிட வேண்டும் என ஒரு முடிவோடு காலையில் கிளம்பினான்.

அவளின் கல்லூரிக்கு அருகில் இருந்த காபி ஷாப்பில் காரினை நிறுத்தினான். நிவி “காலேஜ் போகனும்” என்றாள்.

யோகி “வா.. டூ ஹௌர்ஸ் கழிச்சி போயிக்கலாம்” என்றான்.

நிவி “என்ன.. காலையில் எதுக்கு இங்க..” என்றாள்.

யோகி “வா நிவிம்மா” என்றான்.

ஒன்றும் பேச முடியாமல் நிவி யோகியோடு சென்றாள்.

யோகி அமைதியாக அமர்ந்து காபி குடித்தான். அவளுக்கு ஒரு மில்க்ஷேக் ஆர்டர் செய்திருந்தான்.

நிவி பொறுமை இழக்கும் நேரத்தில்.. தன் போனில் இருந்த மிர்த்திக்காவின் பத்தாம் வகுப்பு புகைப்படத்தை காட்டினான், யோகி.

யோகி “இவள்தான் நீ கேட்ட yoladdu” என்றான்.

நிவியின் பார்வை கிண்டலாக ஆராய்ந்தது அந்த புகைப்படத்தை “சரி, சந்தோஷம்.” என்றாள்.. நான் எண்ணியது சரிதான் எதோ மாமா லவ்.. ம்.. அப்படி என்ன என்னைவிட இந்த பெண்.. என மனதில் அந்த நேரத்தில் ஒரு எண்ணம். முகத்தில் அதை பிரதிபலிப்பது போல கிண்டல் சிரிப்பு.

யோகி, அந்த சின்ன பெண்ணின் சிரிப்பை உள்வாங்கிக் கொண்டே.. “நான் என் அம்மா இறந்ததிலிருந்து.. இவளைத்தான் அதிகமா பார்த்திருக்கேன். இவள் கையில்தான் அதிகம் சாப்பிட்டிருக்கேன்.. இவளைத்தான் அதிகமா காயம் செய்திருக்கேன்.. ம்..” என தலையை கோதிக் கொண்டான்.

மீண்டும் அவனே “நான் காலேஜ் படிக்கும் போது.. பசங்க கூட அடிதடி.. அந்த பையன் போலீஸ் அது இதுன்னு போக.. மாமா என்னை இங்கே கூப்பிட்டுகிட்டார். அவள்கிட்ட சொல்லாமல் வந்துட்டேன். அப்புறம் எல்லாம் உனக்கு தெரியும்.. எங்க லவ் அவங்க அப்பாக்கு தெரிஞ்சு.. எங்க அப்பாகிட்ட மிரட்டி இருக்கார். மாமாக்கு கூட இது தெரிந்திருக்கலாம். நானும் அவளுக்கு கால் செய்யலை. என்னமோ தெரியலை எனக்கு கோவம், அவள் என்னை தேடவேயில்லைன்னு. அவங்க அப்பாக்கு எங்க விஷயம் தெரிந்தது எனக்கு தெரியாதில்லை.. போன் எல்லாம் வாங்கி வைச்சிட்டராம். ம்.. அதைவிடு, இப்போ போன வருஷம்தான் எதேச்சையாக பார்த்தேன் அவளை.” என சொல்லி.. நன்றாக அந்த சின்ன குஷன் சேரில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டான்.

நான்கு நிமிடம் கடந்தது இன்னமும் தொண்டையை சரி செய்ய முடியவில்லை யோகியினால்.. நிறைய உண்மைகளை விழுங்க வேண்டி இருக்கிறதே.. ஒரு பெருமூச்சு விட்டு “இங்கே சென்னையில் இருப்பது அப்போதான் தெரியும்.. அப்புறம் எங்க என்னான்னு பார்த்தால்.. என்னை அவள் வெறுத்துட்டா போல.. பேசவேயில்லை. அப்புறம் இப்போதான் கொஞ்சநாளாக நாங்க பேசி சமாதானம் ஆகியிருக்கோம். நானும் அவளும் பக்கத்து பக்கத்து வீடு.. ஒரே ஸ்கூல்.. ம்.. இதெல்லாம் உனக்கு தெரியாதில்ல. உன் மாமா ஒன்னும் நல்லவன் எல்லாம் இல்லை.. ஒரு பெண்ணை.. சின்ன வயசிலேயே லவ் அது இதுன்னு சொல்லி டார்ச்சர் பண்ணி.. சொல்லாமல் கொள்ளாமல் சென்னை வந்து.. அவள் எனக்கு போன் செய்யலைன்னு, நானாக நினைத்துக் கொண்டு.. ச்ச.. நிறைய மிஸ்டேக்ஸ். க்கும்.. நீ நினைக்கிற மாதிரி நான் ஹீரோ எல்லாம் இல்லை.. அடிதடி.. பாவம் மிர்த்திக்கா.. அப்பாவை மதிக்கவே மாட்டேன்.. இப்படி நிறைய ட்ராபாக் இருக்கு.” என சொல்லி தன் தலையை கோதிக் கொண்டான்.

நிவியின் முகத்தில் கிண்டலான ஒரு புன்னகை.

யோகி “புரியுதா” என்றான்.

நிவிக்கு என்ன புரிந்ததோ “நீங்களும் ரவுடிதான்.. ம்..” என்றாள் ஒருமாதிரி குரலில்.

யோகிக்கு சங்கடமாகி போனது.. சின்னவள்முன் நாம் இறங்கிவிட்டோமோ என.. தலையை குனிந்துக் கொண்டான். 

நிவி “ஆனால், என் மாமா என்னை திட்டினதே இல்லை.. அன்னிக்கு தவிர. சாரி மாமா.. நீங்க லவ் பண்ணுவீங்க.. அதுவும் இவ்வளோ லாங் இயர் லவ் இருக்கும்ன்னு எனக்கு தெரியாது. சாரி.” என்றாள்.

யோகி “நிவிம்மா.. எனக்கு நீ முக்கியம் டா.. நீ சின்ன பெண், ஏதாவது தவறாக இன்னும் நீ யோசிக்க கூடாதில்ல. சாரி எல்லாம் வேண்டாம். நீ படி.. ஜாலியா இரு.. ஏன் இந்த சின்ன தலைக்குள்  இப்போவே இத்தனை டென்ஷனை எடுத்துக்கிற.. காலம் வரும் போது.. நாங்களே நல்ல மாப்பிள்ளையா பார்ப்போம்.. ம்..” என்றான்.

நிவி “மாம்ஸ்.. அதெல்லாம் முடியாது, நான் லவ் மேரேஜ்தான். நீங்க மட்டும் லவ் பண்ணுவீங்க.. அதெல்லாம் முடியாது” என்றாள் சின்ன குரலில்.

யோகி “கொன்றுவேன்.. ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பாரு. என் லவ்வுக்கே.. தாவு தீர்ந்து போகுது.. இதில் உனக்கு வேறையா. படிக்கிற.. நாங்க சொல்ற பையனை கல்யாணம் செய்துக்கிற” என்றான் விளையாட்டான மிரட்டலில்.

நிவி ஏதும் சொல்லவில்லை அமைதியானாள்.

இரண்டு நிமிடம் சென்று “மாமா போட்டோ காட்டுங்க” என்றாள்.

யோகி “என்ன” என்றான்.

நிவி “உங்கள் லவர் போட்டோ” என்றாள் கிண்டலாக.

யோகி “அடி.. பேச்சை பார்” என்றான் கண்களை விரித்து.

நிவி “இப்போதைய போட்டோ” என்றாள்.

யோகி புன்னகையோடு போன் எடுத்து மிர்த்தியும் தானும் இருக்கும் புகைப்படத்தை காட்டினான்.

நிவி “அழகா இருக்காங்க. ரொம்ப இன்னொசன்ட் போல.. நீங்க, போய் காலில் விழுந்தீங்களா..” என அவன் முகத்தை பார்த்து உதடு பிதுக்கியவள் “வொர்த்தான்.” என்றாள்.

யோகி கண்களை விரித்து நிவியை பார்த்தான். நிவி சூப்பர் என தன் விரல்களை அசைக்க. யோகி “தேங்க் யூ.. அவள் அப்படிதான்.” என்றான் ரகசிய புன்னகையோடு.

நிவி “மாமா இப்படி சிரிக்காதீங்க.. அப்புறம் திரும்பவும் அப்பா கூட போய்ட போறாங்க” என்றாள் கிண்டலாக.

யோகி தன் போனினை அவளிடமிருந்து பிடுங்கிக் கொண்டு “அதெல்லாம் போக மாட்டா..” என்றான்.

நிவி “அஹ.. ன்” என ராகம் இசைத்தாள்.

இருவரும் மீண்டும் எதோ ஆர்டர் செய்து உண்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தனர்.

நிவி இன்று விடுமுறை.. மீண்டும் மாமாவோடு வீடு வந்து சேர்ந்தாள். 

யோகி, அவளை வீட்டில் விட்டு.. வெளியே கிளம்பிவிட்டான்.

யோகிக்கு, இத்தனை நாட்கள் மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம் இறங்கிய உணர்வு. மிர்த்தியை பார்க்க வேணும் என எண்ணிக் கொண்டான். துரைக்கு, அடுத்தவாரம்  திருமணம்.. அதனால், அவன் வேறு வீடு பார்த்திருக்கிறான். அவன் இருந்த வீடு இப்போது வேறு சில நண்பர்கள் இருக்க.. அங்கே வந்து சேர்ந்தான் யோகி.

மாலையில் அவள் அலுவலகம் சென்று அவளை பிக்கப் செய்தான். அவளின் கையால் காபி குடித்துவிட்டு.. அதன்பின்தான் வீடு வந்தான்.

Advertisement