Advertisement

நீ என் அலாதிநேசம்!

20

மிர்த்திக்காவிற்கு, யோகியின் கோவம் புரிந்தாலும்.. தந்தையிடம் சொல்லாமல் இவ்வளவு தூரம் செய்ததே பயம் சங்கடம் அவளுக்கு. அதனால், தந்தையிடம் சொல்லிவிட வேண்டும் என எண்ணிக் கொண்டாள் பெண்.

ஜெகனுக்கு அழைத்து முதலில் பேசினாள் மிர்த்திக்கா. நடந்தவைகளை சொல்லினாள். ஜெகன் “ஏன் அக்கா, என்கிட்டே சொல்லல” எனதான் கேட்டான்.

மிர்த்தி சமாதானம் செய்தாள். “நீ இப்போதானே போயிருக்க.. அடுத்த மாசம் வாதிட போற, அதான் டென்ஷன் செய்ய வேண்டாம்ன்னு சொல்லலை.” என்றாள். 

ஜெகன் “தப்புதானே அக்கா.. இந்த நேரத்தில் இவ்வளோ நடந்திதிருக்க.. என்ன பண்ணுவ நீ” என்றான் முதலில்.

தம்பியிடம் உண்மையை சொன்னால் மிர்த்திக்கா “யோகி வந்தார் டா.. பயப்பதா டா” என நடந்தவைகளை விவரமாக சொன்னாள் தமக்கை. 

ஜெகன் “அக்கா.. உணமையாகவா.. உனக்கு கோவம் போயிடுச்சா.. அவர் ஹெல்ப் செய்தாரா” என அதிசயமாக எல்லாம் கேட்டுக் கொண்டான். ஜெகன் “சரிக்கா.. அப்பாகிட்ட பார்த்து பேசு.. என்னையும் திட்ட போறார்” என அக்காவை திட்டிக்  கொண்டு போனை வைத்தான்.

உண்மையாக மிர்த்திக்கு தம்பியின் பயம் புரிகிறது. ஆனால், யோகிதான் இருக்காரே என மனதுள் சொல்லிக் கொண்டாள் இயல்பாக. 

இரவே, மிர்த்தி, தன் தந்தைக்கு அழைத்தாள். நடந்ததை சொன்னாள். 

வாசு “தம்பி வேற ஊருக்கு போயிருக்கான்.. அப்படி என்ன அவசரமாக வீடு வேணும்ன்னு கேட்பது.. பொம்பள  புள்ள தனியா இருக்குதேன்னு கூடவா நினைக்க மாட்டாங்க.. இரு நாளைக்கே நான் வரேன்” என பேசிக் கொண்டேதான் போனார். மகள் மேல் கோவம் இருந்தாலும் பாசம் இருக்கவே செய்தது.

மிர்த்திக்கா “அப்பா.. அதெல்லாம் இல்ல, நானும் வீடு பார்த்துட்டேன்” என சொல்லி.. வீட்டு உரிமையாளரின் நிலையை விளக்கினால் பெண்.

வாசு “என்னமோ போம்மா.. நல்ல இடமா விசாரிக்க வேண்டாமா.. நான் வந்து பார்த்துட்டுதான் இந்த வீட்டை காலி பண்ணனும். ஜெகனும் ஒரு வார்த்தை என்கிட்டே சொல்லவேயில்லை” என்றார்.

மிர்த்திக்காவிற்கு பயம் பிடித்துக் கொண்டது “அப்பா.. ஜெகனோட பிரெண்ட்ஸ் வந்து பார்த்துட்டாங்க.. எல்லாம் சரியாகத்தான் இருக்கு.. நீங்க வந்து பாருங்க.. நான் பேக்கர்ஸ் & மூவர்ஸ் சொல்லிட்டேன்.. அவங்க நாளைக்கு வந்து பாக் பண்ணுவாங்க.. எந்த வேலையும் இல்லை, நீங்க பொறுமையாக வந்தால் போதும்” என்றாள்.

வாசுவிற்கு புரிகிறதுதான்.. பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள் என.. ஆனால், கொஞ்சம் வலிக்கிறது.. தான் இல்லாமல் பிள்ளைகள் எல்லாம் பார்த்துக் கொள்கிறார்கள் என.. அதன் தாக்கத்தில் அவர் அமைதியானார்.

மிர்த்திக்கா “அப்பா..” என்றாள்.

வாசு “சரி ம்மா.. அலையாத.. நான் வந்திடுறேன்” என்றார்.

மிர்த்திக்காவிற்கு தன் அப்பாவிடம் சொல்லியதும்தான் நிம்மதியாக இருந்தது. வேலைகள் நிறைய இருந்ததால்.. தேவையானதை எடுத்து வைக்க தொடங்கினாள் பெண்.

யோகி வீடு வந்து சேர்ந்திருந்தான்.

மிர்த்திக்கா இரவில் அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள் ‘அப்பாகிட்ட சொல்லிட்டேன்’ என.

யோகி பதில் அனுப்பவில்லை.

வாசு, கார் எடுத்துக் கொண்டு வந்திருந்தார்.. டிரைவர் அங்கே கடையில் வேலையில் இருக்கும் பெண்மணி என நால்வருமாக வந்தனர். பெண்ணுக்கு எந்த வேலையும் வைக்கவில்லை வாசு. மாலையில் வந்து சேர்ந்தார்.. எடுத்து வைக்கும் ஆட்களோடு தான் கூட்டி வந்தவர்களையும் சேர்த்து வேலை செய்ய வைத்தார்.

மிர்த்தி, தந்தை ஊரிலிருந்து கிளம்பியது.. சென்னை வந்து சேர்ந்தது.. என அதையும் செய்தியாக யோகிக்கு அனுப்பினாள் பெண். இரவு சாமான்கள் எடுத்து சென்றதையும் அவனுக்கு செய்தியாக தெரிவித்தாள்.

வாசு, உண்டுவிட்டு உறங்க சென்றார். சென்றமுறை.. பிள்ளைகள் சென்னை வரும் போது.. இப்படி எந்த நிகழ்வுகளும் இல்லை.. வாசு வரவேயில்லை. ஒருமுறை இரு பிள்ளைகளும் வற்புறுத்தி அழைத்தால் வந்துவிட்டு.. இரவே கிளம்பிவிட்டார்.

மறுநாள் ஞாயிறு காலையில் பால் காய்ச்சினாள் மிர்த்திக்கா. வாசு நல்ல நேரம் என்பதால்.. அதிகாலையிலேயே பூஜைகளையும் செய்தார்.. சத்தமாக “என் பொண்ணுக்கு கல்யாண பாக்கியத்தையும் கொடுத்திடு டா.. அரங்கா” என வேண்டிக் கொண்டார்.

மிர்த்திக்காவிற்கு இந்தமுறை கன்னங்கள் சிவந்து போனது.. ஆனாலும் “அப்பா.. தம்பிக்கு ப்ரோமோஷன் கிடைக்கனும்ன்னு வேண்டிக்கோங்க..” என நினைவுப்படுத்தினாள்.

வாசுவும் அதையும் சொல்லி வேண்டிக் கொண்டார். முன்போல இல்லாமல் இருவரும் சகஜமாக பேசிக் கொண்டனர்.

மிர்த்தி.. அப்போதே போட்டோ எடுத்து.. யோகிக்கும் ஜெகனுக்கும் வாட்ஸ்அப் அனுப்பினாள். 

யோகிக்கு, ஆரம்பத்தில் கோவம் வந்தாலும்.. அரைமணி நேரத்திற்கு ஒருமுறை.. அவளின் செய்தியை எதிர்பார்க்க தொடங்கிவிட்டான், இந்த இரண்டுநாட்களில்.

மதியம் உண்டு முடித்து.. வேலைக்கு என வந்தவர்கள்.. “ஊர் சுற்றி பார்த்துவிட்டு.. இரவு பஸ் ஏறிக்கிறோம் அண்ணா” என சொல்லி கிளம்பிவிட்டனர். 

வாசு அவர்களுக்கு காசு கொடுத்து “ஒருநாள்தான் லீவ் சொல்லிட்டேன்.. அடுத்தநாள் வேலைக்கு வந்திடனும்” என அனுப்பி வைத்தார்.

தந்தையும் மகளும் மாலையில் வடபழனி கோவில் சென்றுவிட்டு.. அப்படியே பெண்ணின் வற்புறுத்தலின் பேரில்.. மெரீனா பீச் சென்றனர் இருவரும். 

வாசு “வேலையில் ஏதும் கஷ்ட்டம் இல்லையே ம்மா.. “ என ஆரம்பித்தார்.

உப்பு காற்று முகத்தில் மோத.. தன் முன்னுச்சி முடிகளை சரி செய்துக் கொண்டே.. தந்தையிடம் நீண்ட வருடங்கள் சென்று.. மிர்த்திக்கா தயக்கமில்லாமல் பேச தொடங்கினாள். தந்தை ஏதும் புண்படும்படி பேசவில்லை.. எப்படி சமைக்கிற.. நேரம் இருக்கா.. வெளிய எங்காவது தம்பியை கூட்டி போக சொல்லு டா.. என்பது போன்ற பொதுவான விஷயங்களை பேசினர்.

இரவு உணவினை முடித்துக் கொண்டு வீடு வந்தனர்.

அதிகாலையில் தானே கார் எடுத்துக் கொண்டு வாசு கிளம்பிவிட்டார். மிர்த்திக்கா “நாளை போகலாம்” என சொல்லியும் கேட்கவில்லை.

வாசு.. “வேலை இருக்கு டா.. ம்மா.. நான்வேற நாலுபேரை கூட்டி வந்துட்டேன்.. பசங்க தனியா சமாளிப்பாங்க.. ம்.. நீ பார்த்து பத்திரமா இரு” என சொல்லி நல்ல மனநிலையில் விடைபெற்றார் தந்தை.

மிர்த்திக்கா, அலுவலகம் கிளம்பி சென்றாள். 

பஸ்சில் அமர்ந்துக் கொண்டு.. அப்போதே யோகிக்கு அழைத்தாள். இந்த இரண்டு நாளும் மெசேஜ்தான் செய்வது.. இன்று தந்தை ஊருக்கு சென்றுவிட்டதும்.. உடனே பேசியாக வேண்டும் என்பது போல எண்ணம் பெண்ணுக்கு அதனால், அழைத்தாள்.

யோகி, எடுக்கவில்லை.. போனை பார்த்துவிட்டு கீழே வைத்துவிட்டான்.. ‘அதான் அவளின் அப்பா இருக்காரில்ல.. பார்த்தகட்டும்’ என எண்ணிக் கொண்டு இந்த இரண்டுநாளும் அவள் அழைக்காததில் ஒரு சிறுபிள்ளை கோவம். எடுக்கவில்லை.

அடுத்து பத்து நிமிடத்தில் ஒரு வாட்ஸ்அப் செய்தி “அப்பா ஊருக்கு கிளம்பிட்டார்.. ப்ளீஸ் யோகி அட்டென் கால்” என இருந்தது.

யோகிக்கு, ஒருமாதிரி அப்செட் மனநிலை.. ‘அப்பா இல்லைன்னால் தான் கூப்பிடுவாள்’ என தோன்ற அவளின் அழைப்பை ஏற்கவில்லை. ஒருமாதிரி இருந்தான், அலுவலகம் கிளம்பிவிட்டான்.

மிர்த்திக்காவும் அதற்குமேல் அழைக்கவில்லை.

மீண்டும் இரவில் அவனுக்கு அழைத்தாள்.. யோகி “நான் ஆபீஸ்சில் இருக்கேன்.. டிஸ்டர்ப் பண்ணாதே” என பதில் சொல்லிவிட்டான். மிர்த்திக்காவின் முகம் வாடித்தான் போனது. ‘வேலையில் இருக்கான்’ என சமாதானம் செய்து கொண்டாள்.

அந்த வாரம் முழுவதும் வாட்ஸ்அப் மட்டும் செய்தாள். அதுவும் இரவில் ‘என்ன பண்றீங்க.. சாப்பிட்டீங்களா’ என பொதுவாக. வேறு ஏதும் கேட்கவில்லை. பயமாக இருந்தது. 

மிர்த்திக்கு, பேசினால் தானே.. ஏதாவது பதில் சொல்ல முடியும்.. என எண்ணிக் கொண்டாள். யோகியின் அன்றைய செய்கையையும் நினைவுப்படுத்திக் கொண்டாள்.. எதோ அவன் மனதில் ஓடுகிறது.. வேலை முடித்து பேசும் போது.. கோவமாக இருந்தால் பேசிக்கலாம் என எண்ணிக் கொண்டே அந்த வார இறுதியில் தனியாகவே இருந்தாள்.

ஜெகன் அழைத்து பேசினான்.. வாசு அழைத்தார். 

மறுவாரம் தொடங்கியது. மிர்த்திக்கா, யோகிக்கு செய்தி கூட அனுப்பவில்லை.. பதிலே இல்லாதவனிடம் என்ன பேசுவது என புரியவில்லை.. ஒரு யோசனையோடு அந்த பஸ் பயணம் சென்றது.

அலுவலகத்தில் யாரோ பிறந்தநாள் என இனிப்பு கொடுக்கவும்.. மிர்த்திக்காவிற்கு.. யோகியின் நினைவு வந்தது.. ம்.. நாளை அவனின் பிறந்தநாள். அவன் மேலிருந்த எல்லா வருத்தமும் அந்த நொடியே பறந்து போனது போல.. சின்ன புன்னகை வந்து அமர்ந்துக் கொண்டது. அன்றைய நாள்.. அழகாவே கடந்ததாக எண்ணிக் கொண்டாள்.

நாளை விடுமுறை சொல்லிவிட்டுதான், அலுவலகத்திலிருந்து கிளம்பினாள் பெண். பஸ் விட்டு இறங்கி அவனுக்கு.. ஒரு ஷர்ட் எடுத்துக் கொண்டாள். வீடு வந்தாள்.. ஜாமூன் செய்தாள். இரவு உணவினை முடித்துக் கொண்டு.. விழித்தே இருந்தாள், எப்போதடா மணி பனிரெண்டு ஆகுமென.

சரியான நேரத்தில் அவனுக்கு அழைத்தாள் பெண். யோகி நல்ல உறக்கத்தில் இருந்தான். பிறந்தநாள் என்பது எப்போதும் கொண்டாடுவர். என்னமோ இந்தமுறை.. சீனிவாசன் இறப்பின் காரணமாக யாருக்கும் நினைவில்லை. நிவி கூட மாமாவிடமிருந்து தூரமாக இருப்பதால்.. யோகியின் பிறந்தநாளை மறந்துவிட்டாள்.

யோகிக்கு, மனம் பதறித்தான் போனது.. அவசரமாக போன் எடுத்து பார்க்க.. மிர்த்தியின் அழைப்பு.. கொஞ்சம் பதட்டத்துடன்தான் ஆன் செய்தான் “மிர்த்தி.. என்ன ஆச்சு” என்றான்.

மிர்த்தி ரகசிய குரலில் “ஹாப்பி பர்த்டே.. மை பாய்.. மை லவ்..” என்றாள்.

யோகி “என்ன” என்றான் அதட்டலாக. சட்டென அவளின் வாழ்த்து காதில் விழவும் சந்தோஷம், அதே சமயம்  ஒனுமில்லையே என்ற பரிதவிப்பும் சேர.. அதட்டினான்.

மிர்த்தி அமைதியாகிவிட்டாள்.. அவனின் குரலின் ஓசையில்.

யோகி, அவளின் அமைதியில்.. அவள் சொன்ன வாழ்த்து புரிய.. மனம் அமைதியானது.. “நீ பேசுறது கேட்கலை.. வீடியோ கால் வா” என்றான் அதே அதட்டல் குரலில்.

மிர்த்திக்கா கட் செய்துவிட்டாள்.. ‘ஃப்ராட்’ என திட்டினாள். ஆனாலும் லைட் ஆன் செய்தாள்.. முகத்தை கண்ணாடியில் பார்த்துவிட்டு.. வீடியோ கால் செய்தாள்.

யோகி அவள் அழைத்ததும்.. லைட் போட்டு அமர்ந்துக் கொண்டே அட்டென் செய்தான். முகம் கனிந்து இருந்தது.. “என்ன சொன்ன” என்றான்.

மிர்த்திக்கா புன்னகை முகமாகவே “ஹாப்பி பர்த்டே..” என்றாள்.

யோகி, நன்றாக கட்டிலில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டு “ஞாபகம் இருக்கா” என்றான், கண்டிப்பாக தொலைத்த நேசத்தை.. கண்டுக் கொண்ட குரல் இப்போது.

பெண்ணவள் அமைதியானாள்.

யோகி “வேற என்னமோ சேர்த்து சொன்னியே” என்றான்.. காதலாக.

மிர்த்திக்கா “இதுதான் சொன்னேன்.. உங்களுக்குத்தான் சரியா கேட்கலையே..” என்றாள்.

Advertisement