Advertisement

மிர்த்திக்கா “ஜெகன் இல்லாததால்.. எ..னக்கு ஹெல்ப் பண்ணுவீங்கன்னு உங்களை கூப்பிட்டேன். பரவாயில்ல. நானும் வித்யாவும் ஆப் பார்த்து போய்ட்டு வந்தோம் இன்னிக்கு. நா..ன் பார்த்துக்கிறேன். உங்களுக்கு வேலை இருந்தால் பாருங்க..” என்றாள்.

யோகிக்கு வலிதான்.. ‘இதைவிட என்ன வேலை.. என்தான் சொல்ல நினைத்தான்..’ என்னமோ டைலாக் வரவில்லை அமைதியாகிவிட்டான். 

மிர்த்தி “ஜெகன் கிட்ட இன்னும் சொல்லலை.. அவனும் டென்ஷன் ஆகிடுவான். நான் வீடு பார்த்துட்டு சொல்லிக்கிறேன்” என்றாள்.

யோகி தன் தலையை கோதிக் கொண்டான் ‘எல்லாத்தையும் நீயே தனியாகவே பார்க்கனுமா’ என தனக்குள் கேட்டுக் கொண்டான். அவளிடம் கேட்க மனது வரவில்லை.. அவளின் பேச்சிற்கு பதில் சொல்லவில்லை.

மிர்த்திக்கா “என்னாச்சு.. பதிலே காணோம்” என்றாள்.

யோகி “சாப்பிட்டியா..” என்றான் கரகரப்பான குரலில்.

மிர்த்திக்கு இத்தனை நேரமிருந்த கோவம்.. தடுமாற்றம் எல்லாம் காணாமல் போகிற்று.. ஒருமாதிரி மனது அடங்கி போனது அவனின் இந்த விசாரிப்பில். போன் எடுத்ததும்.. ஒரு காதலின் குரலைதான் எதிர்பார்த்தாள் பெண்.. ஆனால், அவனோ விசாரணைதான் செய்தான். 

மிர்த்திக்கா “க்கும்.. இல்ல” என்றாள் கொஞ்சம் தழைந்த குரலில்.

யோகி “சாப்பிட்டு தூங்கு.. ஏதாவதுன்னா கூப்பிடு, ஒருதரம் நான் எடுக்கலைன்னா.. மறுபடியும் கூப்பிடு.. ம்” என்றான் அழுத்தம் திருத்தமாக.

மிர்த்திக்கா ஏதும் பதில் சொல்லவில்லை.

யோகி “குட் நைட்” என்றான்.. “வைக்கிறேன்” என்றான்.

மிர்த்திக்கா அழைப்பை துண்டித்தாள்.

யோகிக்கு, உணவு வந்தது. உண்டு முடித்தான். துரையும்.. என்னடா ஆச்சு.. ஏன் இப்படி இருக்க என கேட்டான் பதில் இல்லை.. எதோ யோசனையோடு உண்டு முடித்தான் யோகி.

உறங்கும் முன் தன் நண்பனிடம்.. “வீடு வேண்டும் துரை.. சேஃப்பான இடமாக வேண்டும்.. அவளுக்குத்தான்.” என சொல்லி, அவளுக்கு நடந்தவைகளை சொன்னான்.. ஜெகன் ஊரிலில்லை.. “நான் நாளைக்கு அவள் கூட போறேன்.. நீ எதாவாது வீடு இருந்தால் சொல்லு.. நாளைக்கு நீ பார்த்துக்க” என்றான்.

துரை “இருந்தாலும்.. ஒருவார்த்தை நாம பேசி பார்த்தால் என்ன.. ஒருமாசம் டைம் கேட்ப்போம்” என்றான்.

யோகி “இல்ல டா.. அவங்க அப்பாக்கு விஷயம் போகிட போகுது. விடு, ஏதாவது பார்க்கலாம்” என்றான்.

துரை ஏதும் சொல்லவில்லை.

மறுநாள் காலையில் எட்டு மணி இருக்கும்.. யோகி மிர்த்திக்காவின் வீட்டு காலிங் பெல் அடித்துவிட்டு நின்றான்.

மிர்த்திக்கா இரவு சரியாக உறங்கவில்லை.. அத்தோடு, இன்று அலுவலகம் செல்ல வேண்டாம்.. தானே போய் தேடலாம்.. வித்யாவிற்கு இன்றும் பெர்மிஷன் தரமாட்டாங்க.. என எண்ணிக் கொண்டு பொறுமையாக எழுந்து அப்போதுதான் காபி குடித்துக் கொண்டிருந்தாள்.

அழைப்பு வந்ததும் யாரென பார்க்க.. யோகி நின்றிருந்தான் வாசலில். உரைந்த நிலையில்.. தன் உடையை கூட பார்த்துக் கொள்ளாமல் கதவை அவசரமாக திருந்தாள் பெண்.

யோகி, தலையை கோதிக்கு கொண்டு.. உள்ளே வந்தான். தன்னவளை பார்த்தான்.. பேன்ட் டி-ஷர்டில் இருந்தாள். ரசிக்கவும் முடியவில்லை.. ரசிக்காமல் இருக்கவும் முடியவில்லை.. சிலிம் ஆகிட்டா என சட்டென பார்வையை மாற்றிக் கொண்டு சோபாவில் அமர்ந்தான்.

டேபிளில் காபி அப்படியே இருந்தது. மிர்த்தி “எ..ன்ன இப்போ” என்றாள்.

யோகி “என்ன..” என்றான்.

மிர்த்தி “இல்ல, என்ன இந்த நேரத்தில் வந்திருக்கீங்க..” என்றாள்.

யோகி “என்ன பார்க்கிற, வீடு பார்க்க போகனும்மில்ல.. போ கிளம்பு” என்றான்.

மிர்த்திக்கா அசந்துதான் நின்றாள்.. அப்படியே நின்றாள்.

யோகி அவள் வைத்திருந்த காபி பார்த்து “என்ன இது டீயா..” என எடுத்து முகர்ந்து பார்த்தான் “காபி.. இப்போதான் எழுந்தியா..” என சொல்லி ஒருமிடறு பருகினான்.

மிர்த்திக்கா “அது என்னோடது” என்றாள்.

யோகி நிமிர்ந்து பார்த்து “எழுதியா வைச்சிருக்கு” என்றான், பின் “சுகர் அதிகா இருக்கு..” என்றான். பின் “சூடா ஒரு காபி கொடேன்” என்றான், முகம் இறுக்கமாகவே இருந்தது.

மிர்த்திக்கா உள்ளே சென்று காபி கலந்து கொண்டு வந்து கொடுத்தாள். அடுத்து பெண்ணவளுக்கு என்ன செய்வதன்றே தெரியவில்லை.. ஒருமாதிரி பரபரப்பானாள்.. மாவு இருந்தது.. காய் என்ன இருக்கு என பார்த்தாள். எதோ குடைந்துக் கொண்டிருந்தாள்.

யோகி அவளின் பின்னால் வந்து நின்றான்.. இயல்பான குரலில் “என்ன நின்னுட்ட.. குளி கிளம்பு.. எதோ ஆப் வைச்சிருக்கேன்ன்னு சொன்ன.. எடு.. பார்க்கலாம். சாப்பாடு வெளிய பார்த்துக்கலாம்” என்றான்.

மிர்த்தி அவனையே இமைக்காமல் பார்த்து “உங்க கூடவா போகணும்.. இல்ல, வரணும்” என்றாள்.

யோகி “ஏன்” என்றான் இறுக்கமாக.. முகமே மாறி போனது போல தெரிந்தது பெண்ணுக்கு.

மிர்த்திக்கா பார்வையை தாழ்த்திக் கொண்டு “ஒண்ணுமில்ல” என்றவள் எழுந்து தன் அறைக்கு சென்றாள்.

யோகி போன் பேசிக் கொண்டும்.. நியூஸ் பார்த்துக் கொண்டும் அமர்ந்திருந்தான்.

மிர்த்திக்கா அரைமணி நேரத்தில் வந்தாள். மீண்டும் கிட்சென் சென்றாள்.

யோகி “கிளம்பலாம் மிர்த்தி” என்றான்.

மிர்த்தி “பத்து மணியாவது ஆகணுமில்ல.. சாப்பிட்டு போலாம்” என்றாள். நேற்று வைத்திருந்த சாம்பார் எடுத்து சூடு செய்தாள். தோசை வார்த்தாள்.

அவனுக்கு உணவு வந்தது கையில். யோகி தட்டினை வாங்கிக் கொண்டு அவளையே பார்த்தான்.. இருவருக்கும் பேச ஆசை.. அதிலும் பழைய கதை பேச ஆசை. ஆனாலும் பயம்.. எங்கே இந்த நிலையும் கெட்டிடுமோ என.. மிர்த்தியால் அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை.. மிர்த்தி கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள்.. யோகி அப்படியே அவளையே பார்த்திருந்தான்.

பின் அவன் தட்டோடு எழுந்து கிட்சென் சென்றான்.. தட்டினை வைத்துவிட்டு.. கைகழுவிக் கொண்டான். அடுப்பின் அருகில் அந்த மேடையில் அமர்ந்துக் கொண்டான்.. தட்டினை அருகில் வைத்து உண்ண தொடங்கினான். காதல் கொண்ட மனங்கள் இத்தனை நாட்கள்.. தங்களை தாங்கே தேடியலைந்தது.. இந்த நொடி கண்டுக் கொண்டதை.. உறுதி செய்துக் கொண்டிருந்தது.. மௌனத்தால்.

தோசைகள் வந்து கொண்டே இருந்தது.. சாம்பார் தீர தீர நிரம்பிக் கொண்டே இருந்தது. கண்கில்லை உண்டவனுக்கும்.. சமைத்தவளுக்கும்.. வயிறு நிறைந்ததும்.. தொண்டை அடைத்து அவனுக்கு.. எத்தனைநாள் ஆகிற்று.. இந்த ருசியும்.. இந்த அன்பும் கண்டு என எண்ணிக் கொண்டே கைகழுவிக் கொண்டு தட்டினை கழுவி வைத்தான். ஏதும் பேச பயம். அமைதியாக வந்து அமர்ந்துக் கொண்டான்.

மிர்த்திக்கா அங்கேயே உண்டாள்.

யோகி “எங்க போன்.. எடு, எந்த ஏரியா” என கேட்டான்.

மிர்த்திக்கா தட்டோடு வெளியே வந்தாள்.. போன் தன் அறையில் இருப்பதை காட்டினாள். அவனும் எடுத்து வந்து எங்கு.. எந்த பக்கம் தூரமா என பார்த்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் இருவரும் கிளம்பினர்.

மிர்த்திக்காவிற்கு அவன் டூ வீலர் பார்த்ததும் பயம்.. அவனிடம் கணங்களால் ‘ஏன் வண்டி’ என கேட்டாள்.

யோகி அலட்டிக் கொள்ளாமல், தன் புருவம் உயர்த்தினான் ‘ஏன் கூடாது’ என்பது போல.

மிர்த்திக்கா அவனிடமிருந்து பார்வையை மாற்றிக் கொண்டாள்..

யோகி “ம்.. உட்கார்” என தானும் அமர்ந்துக் கொண்டு அவளையும் அமர சொன்னான்.

பெண்ணவளின் மனதில் பயம்.. ஆனாலும், முன்போல பயமில்லை.. காலையில் அவன் வந்து நின்றதும்.. அவளின் எல்லா கோவங்களும் காற்றில் கரைந்துக் கொண்டிருந்தது.. அடுத்தடுத்து.. அவனின் நடவடிக்கைகள்.. ‘ம் இப்படிதான் என் யோகி, இப்படிதான். எனக்கு தெரியும்.. வந்திடுவான்.. என்னை விடமாட்டான்’ என அவன் குறித்த தன் எண்ணங்களுக்கு வழு சேர்த்துக் கொண்டாள்.

 இப்போதும் அவனின் இயல்பான குரல்.. அந்த பயத்தை இன்னும் குறைந்து போக செய்துக் கொண்டிருந்தது.. அமைதியாக வண்டியை பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.

யோகி அவளின் முகத்தை பார்க்கும் படி கண்ணாடியை அட்ஜெஸ்ட் செய்து.. தன்னை அவள் பிடிக்காததிற்கு புன்னகைத்தான். மிர்த்திக்கா.. அதை கண்டும் காணாமல் நேராக பார்த்தாள்.. இருவரின் பயணமும் மீண்டும் தொடங்கியது.

இன்று இந்த பயணம் புதிதாக இருந்தது.. அவனை ஒட்டிக் கொண்டு.. அவனை பற்றிக் கொண்டு.. என ஒரு பயணம். மனதில் பயமிருந்தாலும் சில்லுன்னு ஒரு காற்று.. “ம் உட்கார்” என அவன் சொன்னதில். ‘என் முடிவு சரியானதே..’ என நூறாவது முறையாக தனக்குள் சொல்லிக் கொண்டாள் இப்போது.

 “பேரன்பே காதல்..

உள்நோக்கி ஆடுகின்ற ஆடல்..

சதா ஆறாத தேடல்..

ஏதேதோ சாயல் ஏற்று திரியும் காதல்..

ஓ.. ஓ..

சிருங்காரம் நீ..

ஆங்காரம் நீ..

ஓங்காரம் நீ..” 

Advertisement