Advertisement

மிர்த்திக்கா திரும்பிக் கொண்டு நடந்தாள். யோகி, அவளின் இடக் கையை  பிடித்தான்.. மிர்த்திக்காவிற்கும் அவனின் வார்த்தைகள்.. இந்த அழுத்தமான பிடி இரண்டும் சேர்ந்து தாக்காத்தை கொடுத்திருக்க.. அவளால் நகர முடியவில்லை.. “போடா.. நீ போயிடு.. “ என்றாள்.

யோகி “எங்க போக.. சொல்லேன்..” என்றான் அவளின் முகத்தை நிமிர்த்தி..

மிர்த்திக்காவின் பார்வை கோவமானது இப்போது.. “நீ இல்லை.. எப்போதும், என்னோட இருந்ததில்லை.. நான் உன்னை பார்க்க மாட்டேன் திரும்பவும் நீ என்னை விட்டு போயிடுவ.. நான் இப்படியே பழகிக்கிறேன்..” என்றாள்.. கண்ணில் பயம் அப்பட்டமாக தெரிந்தது.

யோகிக்கு தாங்கவே முடியவில்லை.. “இல்ல இல்ல எங்கயும் போகமாட்டேன். இப்படி பேசாத..” என சொல்லிக் கொண்டே அவளின் கன்னம் பற்றினான்.. மீண்டும் “இனிமேல் எங்க போக..” என்றவன் அவளின் பயந்த பார்வையை பார்த்து.. “உணமையாகவே என்னை பிடிக்கலையா.. இல்ல, நான் உன் கூட இல்லாததால் கோவமா..” என்றான்.

மிர்த்திக்கா அமைதியானாள்.. 

யோகி பெண்ணவளின் கைபிடித்து சோபாவில் அமர வைத்தான்.. மிர்த்திக்காவும் உதறவில்லை அவனை, கண்ணில் நீர் தளும்பி நிற்கிறது.. பெண்ணவளுக்கு. ‘அவனை தேடவில்லை.. அவன் வரமாட்டான்’ என மனதுள் கடந்த அரைமணி நேரம் முன்வரை சொல்லிக் கொண்டேதான் இருந்தாள் பெண். ஆனாலும், இப்போதும் வந்து நின்று பேசுபவனிடம் எதிர்த்து பேசி ஒதுங்க முடியவில்லை அவளால். சொல்லபோனால்.. அவளால், அவளோடே போராட முடியவில்லை போல.. அமைதியானாள்.

யோகி அவளிடமிருந்து தன் கைகளை எடுத்துக் கொண்டான்.. அவளை தீண்டாமல்.. “இங்க பாரேன்..” என்றான் தன் கைகளை காற்றில் அசைத்து.

பெண்ணவள் தன் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டிருந்தாள்.

மீண்டும் யோகியே “அப்போது  என்ன நடந்திருக்கும்ன்னு என்னால் யூகிக்க முடியுது. ஆனால், மிர்த்தி” என சொல்லி அவளின் கண்களை பார்க்க முயன்றான். அவள் நிமிரவில்லை எனவும் யோகியே தொடர்ந்தான் “என்னோட தப்புதான். என்னை மன்னிக்கமாட்டியா..” என்றான் பரபரப்பாக.

மிர்த்திக்கா நிதானமானாள் “நானும்தானே தப்பு. நான் யார்கிட்ட போய் மன்னிப்பு கேட்க்க.. அப்பா என்னை மன்னிக்கவேயில்லை தெரியுமா” என்றாள்.. இப்போது கண்ணீர் இல்லை.. அவனிடம் பேசிட வேண்டும் என்ற நிதானம் வந்திருந்தது போல.

யோகி அமைதியானான்.. அவள் பக்கம் திரும்பி அமர்ந்துக் கொண்டான்.

மிர்த்திக்கா “ம்.. எத்தனை அடி தெரியுமா.. அப்பா எப்படி மாறி போனார் தெரியுமா.. நரகம்ன்னா என்னான்னு அப்போதான் தெரிந்தது. என்னை என் அப்பா மன்னிக்கவேயில்லையே” என்றாள்.. அவனின் கண்களை நேரே பார்த்து.

யோகி “மாமா அடிச்சாரா” என்றான்.. அதிர்ந்த குரலில்.

மிர்த்திக்கா “அஹ.. நீ எங்கையோ போயிட்ட.. அதன்பிறகு.. எனக்கு உடம்பு சரியில்லாமல் போயிடுச்சி.. என்னான்னு தெரியலை.. டாக்டர்கிட்ட போனால்.. நீ பெர்க்னநெட் சொல்லிட்டாங்க யோகி” என அவனை பார்த்தாள். ஆண் அவனால்.. அவளின் பார்வையை தாங்கி எதிர்கொள்ள முடியவில்லை.. பெண்ணவளுக்கும் அப்படியே.. அவனை மட்டுமே குற்றம் சொல்ல முடியவில்லை.. இருவரின் பார்வையும் ஒரே சமயத்தில் கீழ் நோக்கி சென்றது. இருவராலும் தங்களை தாங்களே பார்த்துக் கொள்ள முடியவில்லை.. அன்றைய சிறுபிள்ளைகள் இல்லைதான்.. ஆனாலும் தவறை சரியென சாதிக்கவும் விரும்பவில்லை இருவரும்.. பழைய நினைவுகள் இருவரையும் பேச வைக்கவில்லை.

மிர்த்திக்காவே “எனக்கு என்ன நடந்ததுன்னு தெரியலை.. என்னமோ உடம்பு முடியலை.. எதுவும் சாப்பிட முடியலை.. கண்ணை திறக்க முடியலை.. எனென்னமோ. அன்னிக்கு ஸ்கூலில் ரொம்ப முடியலை. அப்போதான் ஹாஸ்ப்பிட்டல் போனோம்.” என சொல்லி நிறுத்திக் கொண்டால் பெண்.

சற்று இடைவெளி விட்டு சீரான குரலில் “அன்னிக்கு அப்பா என்னை எப்படி அடிச்சார் தெரியுமா.. பெல்ட்தான்.. டேபிள் அடியில் போயிட்டேன்.. உன்னை, நினைக்க கூட எனக்கு பயமா இருந்தது அந்த நேரத்தில்.. அப்பா என்னை எவ்வளோ கேவலமாக பார்த்தார் தெரியுமா” என சொல்லி அமைதியானாள்.

யோகிக்கு உடலில் மெல்லிய நடுக்கம் பரவியது.. வாசு மாமா இப்படி பெண்ணிடமே நடந்துக் கொண்டார் எனவும்..  அவனுள் அவமானம் பரவியது.. என்னை என்னவென நினைத்திருப்பார்.. என எண்ணிக் கொண்டான் தனக்குள்.. தன் அப்பாவிடம் அப்படி மிரட்டி பேசியது சரியே என தனக்குள் எண்ணிக் கொண்டான்.

மிர்த்திக்கா “அன்னிக்கே, எங்கையோ கூட்டிட்டு போயிட்டார்.. காலையில் என்னமோ செய்தாங்க என்னை. DNC பண்ணாங்க. என்னென்னமோ நடந்தது.. அதிலிருந்து அப்பா, என்னை பார்ப்பதேயில்லை.. சரியா பேசுவதில்லை.. எனக்கு போன் அலவ்டு கிடையாது. அவர்தான் எல்லா இடத்துக்கும் கூட்டி போவார்.. தோணும் போதெல்லாம் அடிப்பார். என்னால் ஜெகனும் நிறைய அவஸ்த்தைபட்டான்.” என சொல்லி தன் விரல்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் பெண். கண்ணில் கண்ணீர் நின்றிருந்தது.. முகத்தில் வெறுமைதான் பெண்ணிடம்.

யோகிக்கும் என்ன செய்வது என தெரியவில்லை.. சட்டென ஐந்து நிமிடத்தில் கடகடவென சொல்லிவிட்டாள் தான் கேட்க்க நினைத்ததை.. ஆனால், அவள் அனுபவித்ததை.. அவனுக்கு ஏற்க முடியவில்லை. அப்பாவிடம் அடி.. மருத்துவமனை.. போன் இல்லாமல்.. அவளை தந்தையே நம்பாமல்.. என அவள் சொல்லிய விஷயங்களை உள்வாங்க.. அவனின் இருதயத்தின் அளவு போதவில்லை.. தவிக்கிறான். இருவருக்கும் நடுவில் போதுமான இடைவெளி.. அருகருகே அமர்ந்திருந்தனர். ஆனாலும், இன்னும் தொட்டுக் கொள்ள விரல்கள் எத்தனிக்கவில்லை.. யோகிக்கு, தான் செய்த தவறின் அளவும் ஆழமும் புரிந்தது.. பெண்ணவளுக்கு கடந்து வந்த பாதையின் தூரம் புரிந்தது. மனது மரத்து போகிவிட்டது இருவருக்கும்.

நீண்ட நிமிடங்கள் கடந்தது. மிர்த்திக்கா எழுந்து உள்ளே சென்றாள்.. யோகிக்கு அவளை பார்க்க கூட தெம்பில்லை.. அப்படியே தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.

மிர்த்திக்கா பிரிட்ஜ்ஜில் இருந்து ஒரு பாட்டில் நிறைய குளிர்ந்த நீர் எடுத்து வந்து யோகியிடம் நீட்டினால்.. யோகி அதை வாங்காமல்.. அமர்ந்திருந்தான்.

மிர்த்திக்கா அவன் அருகே அமர்ந்தாள் “யோகி, என்னை பாரேன்” என்றாள் திடமான குரலில் பெண்.

யோகிக்கு குற்றம் செய்தவனின் மனநிலை.. கண்கொண்டு தன்னவளை பார்க்க முடியவில்லை.. தன் வலது கையால் தலையை கோதிக் கொண்டு.. உணர்வுகளை துடைத்துக் கொண்டது போல.. தன் முகத்தையும் துடைத்துக் கொண்டு.. நேர்கொண்டு அவளை பார்க்க முயன்றான்.. ம்.. இரண்டு நொடிகளுக்கு மேல் அவனால் அவளை பார்க்க முடியவில்லை.

மிர்த்திக்கா “யோகி, அதெல்லாம் முடிந்து போச்சுங்க.” என்றாள்.

யோகிக்கு அந்த வார்த்தை.. ரணம் கண்ட மனதை சரியாக தாக்கியது.. ‘ம்.. முடிஞ்சு போச்சுதான். ஆனால், என்னை இப்போதுதான் தாக்கியது.’ என பெருமூச்சு எழுந்தது அவனுள், நிமிர்ந்து அமர்ந்தான்.

மிர்த்திக்கா “ஏன் யோகி, எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான்..  உண்மையாகவே நீ என்னை தேடினியா.. நான் சென்னை வரலைன்னா.. நீ என்னை தேடியிருப்பியா. ம்..” என்றாள், அதிகாரமாக இல்லை, முன்பெல்லாம் அவனிடம் தென்படும் அந்த யாசகத்தின் குரல் இப்போது பெண்ணவளிடம் வந்திருந்தது.

யோகிக்கு அன்று போல இன்று.. சொல்ல முடியவில்லை.. ‘உன்னை தேடி வந்திருப்பேன்’ என சொல்ல முடியவில்லை. ‘என்னிடம் சொல்லிடு.. நான் தாங்கிக் கொள்கிறேன்’ என்றவனால்.. தாங்க முடியவில்லை போல.. எங்கோ வெறித்து பார்த்து அமர்ந்திருந்தான்.. நேசத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டவனின்.. மொழிகள் பறிபோகிற்று இப்போது. 

மிர்த்திக்காவிற்கு யோகியை பார்க்கவே சங்கடமாக இருந்தது. தன்னவனிடம்.. இத்தனைநாள் விலகி இருந்து தண்டனை இதற்குதான் என சொல்லிவிட்டாள்.. ஆனால், அவனின் வலி கொண்ட முகத்தை பார்க்க முடியவில்லை பெண்ணவளால். 

நேசத்தின் வலி.. அவனின் வலி அவளுக்கு புரியும்தானே “சரி சரி.. நீங்க கிளம்புங்க, நேரம் ஆகிடுச்சு.. சொல்லுன்னு கேட்டிங்க சொல்லிட்டேன்.” என ஒன்றுமில்லா குரல் இப்போது அவளிடமிருந்து வந்தது. எழுந்துக் கொண்டாள்..  அவன் அருகிலிருந்து.

அவளுக்கு அவன் சங்கப்படுவதை பார்க்க முடியவில்லை.. அவனை சங்கடபடுத்த வேண்டும் என எண்ணம் இருந்ததுதான். ஆனால், இப்படி ஓய்ந்து போய்.. ஒன்றுமில்லாமல் அமர்ந்திருப்பதை பார்க்க என்னமோ போலிருக்க.. அவனை கிளப்பினாள் பெண்.

யோகி இன்னும் நன்றாக நிமிர்ந்து விட்டத்தை பார்த்து சோபாவில் தன் தலையை சாய்த்துக் கொண்டான்.

மிர்த்திக்காவிற்கு அவனை விரட்டவும் முடியவில்லை.. அவனை தேற்றவும் முடியவில்லை.

மிர்த்திக்கா “ சா..ரி.., நான் மட்டும்தான் கஷ்டப்பட்டேன்னு சொல்றதுதான் இத்தனைநாள் என் நோக்கமாக இருந்தது, யோகி.  நீ என்னை மறந்திருப்ப.. என்னை தேடி வரமாட்டன்னுதான் எனக்கு எண்ணம். ஆனால், நீங்க இப்படி இருப்பதை பார்க்கும் போது.. என்னமோ மாதிரி இருக்கு யோகி, நீ கிளம்பு. நாம அப்புறம் பேசலாம். எல்லோரும் என்ன நினைப்பாங்க.. க்கும், உன்னை வீட்டில் தேடுவாங்க தானே.. ம்” என்றாள்.. என்னமோ அந்த குரலில் இப்போது நேசத்தின் சாயல். 

யோகி தன் தலையை நிமிர்த்தி பெண்ணவளையே பார்த்தான் 

“நீர் வழியே மீன்களை போல்..

என் உறவை நான் இழந்தேன்..

நீ இருந்தும் நீ இருந்தும் 

ஒரு துறவை.. நான் அடைந்தேன்..

ஒளி போக்கும் இருளே..

வாழ்வின் பொருளாய்..

வலி தீர்க்கும் வழியாய்..

வாஞ்சை தர வா..”

யோகி “மிர்த்தி” என்றான்.

மிர்த்திக்காவினால், என்னமோ அங்கே நிற்க முடியவில்லை. அவனை பார்க்க முடியவில்லை.. தனதறைக்கு சென்றுவிட்டாள். யோகி ஓய்ந்து போனான்.

ம்.. பைத்தியம்தான் அவளுக்கு ‘நானாக தேடும் போது.. நீ கிடைப்பதில்லை.. அதனால், நீ கிடைக்கும் போது.. உன்னை காயம் செய்வேன். ஆனால், நீ சங்கடப்பட்ட கூடாது’ எனத்தான் அவளின் எண்ணம் இப்போது. இன்னமும் உன்மீது வெறுப்புதான் எனக்கு.. என அவனை வார்த்தைகளால் வதைத்தால் பெண்.

யோகி அந்த அறையை வெறித்து பார்த்துக் கொண்டே எழுந்து நின்றான். நீண்ட பெருமூச்சு.. இன்னும் அவள் கதவை திறக்கவில்லை என. 

நொடிகள் கடந்தது.. யோகி, தனக்கு பேச அதிகாரமில்லை என உணர்ந்தான்.. தன் உடைகளை சரி செய்துக் கொண்டே நின்றான். இன்னும் அவள் வரவில்லை.. 

யோகி சத்தமாக அவள் இருந்த அறையின் வாசலில் நின்று “என் நம்பரை.. பிளாக்’கிலிருந்து எடுத்துவிடு.. நான் இப்போ கூப்பிடுவேன்” என்றான்.. அதிகாரமாக.

அங்கேயே கதவின் பின்பக்கமே காவலிருந்த மிர்த்திக்கு.. வலது கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது.. ஆனந்தத்தில். மெதுவாக கண்ணில் நீர் நிற்க.. அவனின் எண்ணினை.. அன்ப்லாக் செய்தாள்.

யோகி, வாசல் வந்தான்.. அந்த கதவை இழுத்து சத்தம் வரும் படி அடித்து சாற்றிக் கொண்டு.. கிளம்பிவிட்டான்.

மிர்த்திக்காவும் அந்த சத்தம் கேட்டுதான் வெளியே வந்தாள்.

Advertisement