Advertisement

வாசு அமைதியாக இருந்தவர் பெண் பதில் சொல்லவில்லை எனவும் திருப்தியானார் போல.. “என்னமோ அக்கா.. அவங்க இஷ்ட்டபடி நடக்கட்டும்.. அவள் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.. நைட் கிளம்பனும்ன்னு சொன்னான் ஜெகன்.. நீயும் படு..” என்றவர் எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

ஜெகன், கீழே  கடையில் அமர்ந்துக் கொண்டான்.

காமாட்சி “பாரு.. தம்பி எப்படி வருத்தபடுறான்னு.. சீக்கிரம் கல்யாணம் செய்துக்க மிர்த்தி.” என்றவர் எழுந்து மிர்த்தியின் அறைக்கு சென்றார் உறங்க.. மிர்த்தி அங்கேயே அமர்ந்துக் கொண்டாள்.

இது வேலைநாட்கள்.. சென்ற வார சனி ஞாயிறு தொடங்கி மிர்த்தி இங்கேதான் இருக்கிறாள். ஜெகன் நேற்றுதான் வந்தான். மிர்த்தி இன்றோடு நான்காம் நாள் விடுமுறை. அதனால் இரவே கிளம்புவதாக ஏற்பாடு. மிர்த்தி அமராமல் சாமான்களை எடுத்து வைத்து ஒழுங்கு செய்ய தொடங்கினாள். தந்தை முன்போல கோவமாக இல்லை.. என்பதே அவளுக்கு போதுமானதாக இருக்கு.. அவரின் தூதுகளை பெரிதாக்கவில்லை பெண்.

இரவு, பிள்ளைகள் இருவரும் கிளம்பினர்.. வாசு தனியானது போல அமர்ந்துக் கொண்டார். 

மிர்த்திக்காவிற்கு, யோகிதான் மனமுழுவதும் நிறைந்திருந்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால், இத்தனை நாள் எங்கே போனார்.. இப்போது வந்திருக்கும் அவனை எப்படி ஒப்புக் கொள்ளுவது.. என ஒரு கோவம். அதை அவனுக்கு சரியாக புரியவைக்க தெரியவில்லை பெண்ணுக்கு. 

இரவு உணவு முடித்து விட்டு.. ஜெகனும் மிர்த்தியும் பஸ் ஏறிவிட்டனர். மிர்த்திக்கு, பயணத்தில் எப்போதும் அவன் நினைவுதான். அதிலும் இப்போது அவனை பார்த்த பிறகு வந்த முதல் பயணம்.. எனவே, அவன் மாலையில் அழைத்திருதான்.. அதை மனதில் ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தாள். மனம் அவனைதான்  சுற்றியது. 

யோகிக்கு தினசரி வேலைகள்தான் அலுவலகத்தில் இந்த வாரம் முழுவதும். அதனாலோ என்னமோ பெண்ணவளின் எண்ணம் அதிகமாக எழுந்தது அவனுள். செய்தி அனுப்பினால்.. அவள்தான் பதிலே அனுப்பவதில்லையே.. என காத்திருக்க தொடங்கினான். அவனுக்கு எப்போதும் பொறுமை சற்று குறைவுதான். ஆனால், மிர்த்தியிடம் இப்போதெல்லாம் அவனின் கோவமும் அவசரமும்.. அன்பும் கூட எடுபடவில்லை..  என தனக்குதானே சொல்லிக் கொள்கிறான் யோகி. 

யோகி, என்னமோ வாரத இறுதியில் கூட வீட்டில் நிற்கமாட்டான், நண்பர்களோடு விளையாட சென்றிடுவான் இத்தனை வருடங்களில். சுறுசுறுப்பு அவனிடம் எப்போதும் இருக்கும். யோகி, ஓரிடத்தில் அமர்ந்ததில்லை. ஆனால், இந்த நாட்களில்  எங்கும் செல்ல பிடிக்கவில்லை.. அவனுக்கு. அவள் அழைத்துவிடமாட்டாளா.. இல்லை, நாமே சென்று பார்த்துவிடலாமா என யோசித்துக் கொண்டே தனதறையில் அமர்ந்து விடுகிறான். முகத்தில் புன்னகை இல்லை.. கண்ணில் எதையோ தொலைத்த பாவம் அவளை குறித்து சிந்திக்கும் போது.

யோகிக்கு, மிர்த்தி தூரமாக கண்ணில் படாமல் இருந்த போது கூட.. நம்பிக்கையாக இருந்தான். திருமணம் எனும் போது.. நல்ல நிலைமையில் சென்று.. வாசு அங்கிளிடம் பெண் கேட்டு அவளை மணந்துக் கொண்டுவிடலாம் என நம்பிக்கையாக இருந்தான். ஆனால், இப்போது எல்லா நம்பிக்கையும் கரைந்து காற்றோடு சென்றுக் கொண்டிருந்தது. அவளுக்கும்.. எனக்கும்.. எப்படி எல்லாம் சரியாகும் என யோசிக்கத் தொடங்கிவிட்டான். அந்த நினைவு நெருடலோடு கூடிய பயத்தை கொடுத்தது அவனிடம். 

யோகிக்கு, அலுவலகம் இயல்பாக சென்றது. ஆனால், அவனின் ஆழ்மனது, அவளை தேடிக் கொண்டே நாட்களை கடத்தியது.

யோகிக்கு, இன்று ஒரு வழக்கு.. புதிதாக வந்திருந்தது. அதுவும், அவனின் சீனியர்க்கு நாட்கள் இல்லை எனவும்.. அலுவலகத்தில் நிறைய சீனியர்கள் இருந்தும்.. இவனிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. ம்.. நம்பிக்கு, யோகியின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வந்துவிட்டிருந்தது. 

யோகிக்கு, அது பெரிய வழக்கு. முதலில் தயங்கினான். ஆனால், தன்னை நம்பி முழுமனதாக ஏற்றுக் கொண்டான். தன்னவளிடம் இதை முதலில் பகிந்துக் கொள்ள வேண்டும் அந்த ஷணமே தோன்றிவிட்டது அவனுக்கு. இதுவரை இரண்டு கேஸ் அவன் வசம் உண்டு. அது அமைந்ததும்   தன் நண்பர்களோடு வெளியே சென்றான். தனது தொடக்கத்தை ஆனந்தமாகவே கொண்டாடியிருக்கிறான். ஆனால், இப்போதுதான் தன்னவளை பார்த்துவிட்டதனாலோ என்னமோ அவளின் முகம்தான் முதலில் வந்து அவனிடம். பிரபலமான வழக்காக இருக்கும் என அவனுக்கு ஒரு எண்ணம். அவனின் அடுத்த அட்சீவ்மென்ட் போல உணர்ந்தான். 

யோகி, குறிப்பெடுப்பதில் தேர்ந்தவன். நிறைய பழைய வழக்குகளை நேரம் கிடைக்கும் போது படித்துக் கொண்டிருப்பான். ஒரு கேஸ் என்றால்.. அதில் அடி நுனி தேடாமல்  அமைதியாகமாட்டான். அதற்காக நேரம் காலம் பாராமல் அலுவலகமே கதி என கிடப்பான். அவனின் பேச்சும் அப்படிதான் பக்கம் பக்கமாக இருக்காது.. அதனால், பொய்யை கூட.. உண்மையென நம்பும் அளவு.. நேர்த்தியாக பேசிடுவான். எனவே, தன் சார்ப்புதாரர்களுக்கு  ஒரு நம்பிக்கை தெரியும் அவனின் போக்கில். நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்பதை அவன் தன் கண்களில் எப்போதும் காட்டியதில்லை. எனக்கு தெரியும் என்ற பார்வைதான் அவனின் பலம். அது எதிராளியை ஆட்டங்கான செய்திடுகிறது பலநேரம்.

இன்று, மாலை நேரமாக வீடு வந்தான். நிவியிடம் தன் சந்தோஷத்தை பகிர்ந்துக் கொண்டான். தமிழரசியும் ‘அப்படியா.. அவரோட கேஸ்சா’ என கேட்டுக் கொண்டார். எல்லாம் பேசி முடித்தனர். யோகி தனதறைக்கு சென்றான்.

குளித்து முடித்து ஒரு புன்னகையோடு போன் பார்க்க தொடங்கினான். யோகி, அவளின் dp பார்த்துவிட்டு.. அப்படியே அமர்ந்திருந்தான். அன்று அவளோடு பேசியதோடு சரி, அதன்பின் கிட்டத்தட்ட மாதங்கள் கடந்திருந்தது. ஏதும் பேசவில்லை அவளிடம். அவளை அழைக்கவே தயக்கமாக இருந்தது. நேரில் செல்ல அதைவிட சங்கடமாக இருந்தது.

யோகி, மிர்த்திக்காவிடம் பேச வேண்டும் என.. எண்ணி, இப்போது  அழைத்தான் அவளை. 

மிர்த்திக்கா அப்போதுதான் கிளம்பிக் கொண்டிருந்தாள்.. சென்னைக்கு. வீட்டில் இருப்பதால்.. அவன் பெயர் போன் திரையில் பார்க்கவும் பதட்டமாகியவள்.. அக்கம் பக்கம் பார்த்துவிட்டு.. உடனே அவனின் அழைப்பை ஏற்றாள், கட் செய்யவோ.. ஆப் செய்யவோ இல்லை. உடனே அழைப்பை ஏற்று சின்ன குரலில் பதட்டமாக “என்ன” என்றாள்.

யோகி “எங்க மீட்டிங்கா” என்றான், அவளின் ரகசிய குரல் கேட்டு.

மிர்த்திக்கா சுற்றலும் பார்வையை சுழற்றிவிட்டு “இல்ல.. ஊரில் இருக்கேன், இப்போ கூப்பிடாதீங்க” என்றாள்.

யோகி “ஒ.. சரி, ஆனால் கண்டிப்பா உங்கிட்ட பேசணும்.. நைட் கூப்பிடுறேன்” என்றவன் “ஒருநிமிஷம்.. உங்க அப்பா எப்படி இருக்கார்” என்றான்.

மிர்த்திக்கா “ஏன்.. பழசெல்லாம் மறந்துடுச்சா..” என்றாள் ஒருமாதிரி குரலில்.

யோகி “இல்லடி எதையும் மறக்கலை.. என்னாச்சு” என்றான் ஓய்ந்த குரலில்.

மிர்த்திக்கா “ஏன் உனக்கு மாமா இல்லையா” என்றாள் கேள்வியாக.

யோகி “அஹ.. ங்.. ஏய் நானெங்க இல்லைன்னு சொன்னேன். நீ என்ன நினைக்கிறேன்னு தெரியலையே டி.. முடியலை டி.. இப்போ நான் என்ன பேசணும்.. கேட்கனும்..” என்றான் தன் நிலையிறங்கி யாசித்தான்.

மிர்த்திக்காவிற்கு எல்லாம் புரிகிறது. அவனை தேட வைக்கிறோம் என தெரிகிறது, இருந்தும் அவனின் யாசிப்பை கணக்கில் எடுக்காமல் “என்ன முடியலை.. அவரை பேசும் போது சரியாக பேசுங்க” என்றால் வீம்பாக.

யோகி “நானென்ன மரியாதை இல்லாமலா பேசினேன். சரி, என் மாமா எப்படி இருக்கார்” என்றான் லேசாக குரலில் வெட்கமும் சிரிப்பும் கலந்து.

மிர்த்திக்கா “ம்… நல்லா இருக்கார்.. சரி, அப்புறம் பேசறேன்” என்றவள்.. போனை வைத்துவிட்டாள்.

யோகிக்கு, அவளின் பேச்சில் தன்மீதே சந்தேகம் வந்தது, என்னதான் சொல்றா இவள்.. நான் மாமாவை என்ன திட்டவா செய்தேன்.. மரியாதை இல்லாமலா பேசினேன். படுத்தறா.. எனக்கு ஒரு நல்ல விஷயம் கிடைச்சிருக்குன்னு சொல்ல கூப்பிட்டால்.. கடுகடுன்னு இருக்கா..’ என தனக்குள் புலம்பிக் கொண்டே அமர்ந்தான். எத்திசை புகுவது என தெரியவில்லை.. அவளிடம். திக்கற்றுதான் தவிக்கிறான்.

“பின்னோக்கி காலம்.. 

போகும் எனில் உன் மன்னிப்பை 

வேண்டுவேன்..

கண்ணோக்கி நேராய் 

காணும் கணம் என் பிழையெல்லாம் 

களைவேன்..”

Advertisement