Advertisement

ஜெகன் எண்ணிற்கு அழைத்தான் யோகி. ஜெகன் அழைப்பை ஏற்கவும்.. யோகி “எங்க இருக்க..” என கேட்டுக் கொண்டே லிப்ட்திற்காக காத்துக் கொண்டிருந்தான்.

ஜெகன் “ஆபீஸ்சில் அண்ணா..” என்றான்.

யோகி “நான் இப்போ உன் அப்பார்ட்மெண்டில்தான் இருக்கேன்.. மிர்த்தையை பார்க்க வந்தேன்.. நீ சீக்கிரம் வா” என சொல்லி அழைப்பை துண்டித்தான்.

ஜெகனுக்கு யோசனை. இப்போது இவரு இந்த நேரத்திற்கு எதுக்கு வந்திருக்கார்.. என எண்ணிக் கொண்டே நின்றான். ஜெகனுக்கு 11 to 11 வொர்க். எனவே, இன்னும் நேரம் ஆகும் அவன் கிளம்ப. திரும்பவும் யோகிக்கு அழைத்தான், யோகி எடுக்கவும் “ஏன் அண்ணா, ஏதாவது முக்கியமான விஷயமா” என்றான்.

யோகி “ஏன் டா.. சும்மா வந்தேன் அவளை பார்க்க.. நீயிருந்தால்.. கதவை திறப்பன்னு கூப்பிட்டேன்.” என்றான்.

ஜெகன் “வேற ஒன்னுமில்லையே..” என்றான். பின் “இன்னும் இரேண்டுமணி நேரம் ஆகும் அண்ணா.. நீங்க பாருங்க அண்ணா” என பேசி அழைப்பை வைத்தான்.

மிர்த்தி, யோகியை பார்த்ததும் கதவை திறக்க கொஞ்சம் யோசித்தாள்தான். ஆனாலும், அதிகமாக அவனை காத்திருக்க வைக்காமல் கதவு திறந்துவிட்டாள்.. “எதுக்கு வந்தீங்க.. இன்னும் நீங்க மாறவேயில்லையில்ல” என்றவள் திரும்பிக் கொண்டு சென்று சோபாவில் அமர்ந்தாள்.

யோகி பொறுமையாகவே கதவை சாற்றி விட்டு.. உள்ளே வந்து அமர்ந்தான். 

மிர்த்திக்கா அமைதியாக இருக்க முயன்றால் முடியவில்லை.. “எதுக்கு வந்தீங்க.. இங்கயும் என் பெயரை கெடுக்காமல் போகமாடீங்க. எங்க அப்பாவிடம் இன்னும் என பெயரை ரிப்பேர் ஆக்கணும்” என எழுந்தவள்.. என்ன செய்வது என தெரியாமல் அங்கும் இங்கும் நடந்தாள்.

யோகி அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.. என்னமோ அதற்காகத்தான் வந்தவன் போல.

மிர்த்தி அவனின் அமைதி பார்த்து.. அவனுக்கு எதிர் சோபாவில் அமர்ந்தாள் “என்ன பேசணும் உங்களுக்கு” என நிமிர்ந்து அமர்ந்தாள்.. எதோ இன்டர்வியூற்கு வந்தவள் போல.

யோகி இரண்டு நிமிடம் ஏதும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. மிர்த்தி “ச்சு..” கொட்டி அவனின் பார்வையை தவிர்க்க நினைத்தாள்.

யோகி, எட்டி அவளின் விரல்களை பிடித்தான்.. மிர்த்தி உதற முயன்றாள். யோகி இப்போது அந்த பெரிய சோபாவில் அவளின் அருகே நெருங்கி அமர்ந்தான். அவள் தனி சோபாவில் அமர்ந்திருந்தாள்.

யோகி அவளின் வலது கையை அவள் உதற உதற இறுக்கி பிடித்தான்.. அவளின் முகத்தையே பார்த்தான்.. எதையோ தொலைத்த நிலைதான் அவனால் உணர முடிந்தது. பொறுமையான குரலில் “என்னடா படிச்ச” என்றான், அமைதியான குரலில்.

மிர்த்திக்கு அவன் கைபிடித்தது தொட்டு.. தொண்டை அடைத்தது. உதற ஒருமனம் நினைத்தாலும்.. தன்னவனின் அந்த கதகதப்பும்.. அந்த பிடியின் இறுக்கமும்.. அவளை இம்சித்தது. இப்போது இவனின் கேள்வியில் இன்னும் இம்சைதான் அவளுக்கு. 

மிர்த்தி “என்னவாக இருந்தால் என்ன..” என்றாள், அவனின் பிடியை உதறுவதை நிறுத்தியிருந்தாள்.

யோகி அவளின் கையை விரல்களோடு சேர்த்து பிடித்துக் கொண்டே.. “நான் அட்வகேட்.. ஜஸ்ட் இப்போதுதான் சிக்ஸ் மன்தாக ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன். உனக்கு இந்த ஜாப் ஓகேவா” என்றான்.

மிர்த்திக்கா அமைதியாக இருந்தாள்.

யோகி “நான் ஊருக்கு திரும்பி வந்திருப்பேன் லட்டு. என்ன நடந்துதுன்னு தெரியலை.. மாமா இங்கேயே படின்னார்.” என சொல்லி அவளின் முகம் பார்த்தான்.

மிர்த்தி அமைதியானாள்.. அவன் பேசுவதை கேட்க தொடங்கினாள்.

யோகியே தொடர்ந்தான் “மாமா என்னை காலேஜ்ஜில் சேர்ந்துக்க சொல்லிட்டார், ஊரில் நிலைமை சரியில்லைன்னு. அப்பாவும் என்னை வந்து பார்த்து ‘என்ன டா வேலை பார்த்து வைச்சிருக்க.. இனி ஊரில் தலைகாட்ட முடியாதபடி பண்ணி வைச்சிருக்கேன்னு’ திட்டினார். எனக்கு அப்போவெல்லாம் ஒன்னும் புரியலை. நிறைய பிரச்சனை செய்தேன். அப்பாவை திட்டினேன். நீங்க ஏன் எல்லோருக்கும் பயப்படுரீங்கன்னு. ஆனால், நான் உனக்கு செய்ததுதான்னு எனக்கு இப்போ தோணுது டா.. க்கும்.. என்ன நடந்தது மிர்த்தி” என்றான்.

மிர்த்தி அமைதியாகவே இருந்தாள்.

யோகி “ஏன் ஏதும் சொல்லமாட்டியா” என்றான் நிதானமான குரலில்.

மிர்த்தி  ஏதுமே பேசவில்லை.

யோகி “வந்த புதிதில் ரொம்ப கஷ்ட்டமா இருந்தது. உனக்கு கால்ஸ் செய்துகிட்டே இருப்பேன். கொஞ்சநாள் சுவிட்ச் ஆப்ன்னு வந்தது. அப்புறம், நாட் இன் யூஸ்ன்னு வந்தது. எதிர்த்த வீட்டு.. மகேஷ்கிட்ட கேட்டேன், அவன் சொன்னான் நீயும் உங்க அப்பாவும் பழனி போயிருக்கீங்கன்னு.. சொன்னான். அப்செட் ஆகிட்டேன். என்னை தேடவேயில்லையா நீன்னு.. ஒருமாதிரி இருந்தது” என சொல்லிக் கொண்டிருக்க.. மிர்த்தி தனது கையை அவனிடமிருந்து உருவிக் கொண்டிருந்தாள்.

யோகிக்கு அவளின் கையை விட மனதில்லை.. அவளுடன் என்ன பேசினாலும் நெருங்க முடியவில்லையே  தன்னால்.. என இயலாமைதான் வந்தது அவனுக்கு. அவள் தன்னிடமிருந்து கையை உதறிக் கொள்ள கொள்ள.. யோகி “என்ன டி பண்ணேன்.. கைதானே பிடிச்சிருக்கேன். கொஞ்ச நேரம் டி..” என சொல்லி அவளின் கையோடு தன் கையை கோர்த்துக் கொண்டான். அவளின் சில்லேன்றிருந்த விரல்கள் கதகதப்பாகின.

மிர்த்திக்கு முகம் கோணியது.. ஆனாலும் அவன் அதையெல்லாம் பெரிதாக்கவில்லை. யோகியே மீண்டும் “சாப்பிட்டியா” என்றான்.

மிர்த்தி பதில் சொல்லவில்லை.

யோகி “எப்படி இருந்தா தெரியுமா என் மிர்த்தி.. நான் கேட்காமலே பொரியல் கொண்டு வந்து கொடுப்பா.. என் கண் பார்த்தே நான் சாப்பிட்டனா இல்லையான்னு கண்டுபிடிச்சிடுவா.. இப்போ அதெல்லாம் காணோம்” என்றான் ஓய்ந்த குரலில்.

மிர்த்திக்கா இப்போது “எப்போதும் உங்களை பற்றி மட்டுமே நான் நினைக்கணுமா.. அஹ.. உங்களுக்கு நான் செய்தது எல்லாம் எப்படி இருக்கு. நீங்க எனக்கு செய்தது எப்படி இருந்ததுன்னு தெரியுமா” என்றாள்.

யோகி “சாரி” என்றான்.

மிர்த்திக்கா கையை உதறினாள். யோகியும் இறுக்கி பிடிக்காமல் விட்டு விட்டான்.

பெண்ணவள் எழுந்துக் கொண்டாள்.

யோகிக்கு அவளிடம் எப்படி பேசுவது என தெரியவில்லை.

மிர்த்திக்கா கிட்சென் சென்றாள்.. அங்கிருந்தே “இன்னிக்கு அரிசி உப்புமா.. கத்தாரிக்காய் கொஸ்த்து.. சாப்பிடுறீங்களா” என்றாள்.

யோகியின் கண்கள் ஒளிர்ந்தது. பதில் சொல்லாமல் எழுந்து அவளின் அருகில் சென்றான்.. மிர்த்தி அவனுக்கு உணவு எடுக்க தொடங்கினாள்.

யோகி  அவளின் அருகே நின்று “மிர்த்தி, ஏதாவது சொல்லு.. பேசு.. உன்னை கட்டிக்கணும் போல இருக்கு.. ப்ளீஸ் அலோ பண்ணு” என்றான்.

மிர்த்தி திரும்பி நின்று “உங்ககிட்ட எதை சொல்லி, என்ன பண்ண போறீங்க.. அத்தோட உங்களுக்கு நான் கொடுத்த இடம் முடிஞ்சு பலகாலம் ஆகிடுச்சி.. அம்மா இல்லாதவர் அதான் சாப்பாடு போடுறேன்.. சாப்பிட்டு கிளம்புங்க..” என்றவள்.. திரும்பி நின்று உணவு எடுக்க தொடங்கினாள்.

யோகிக்கு அவளின் பேச்சு சங்கடத்தைதான் கொடுத்தது “தப்பு செய்துட்டேன்தான் அதுக்காக அப்படியே இருப்பேன்னு நினைக்காத” என்றவன் அவளை பின்னிலிருந்து அணைத்துக் கொண்டான்.. ஆவேசமாக. 

மிர்த்தி திமிறினாள்.. “யோகி.. விடுங்க யோகி” என்றாள்.

யோகிக்கு அவளின் பேச்சுகளும் செய்கைகளும்  எந்த பாதிப்பையும் தரவில்லை.. அவனோ அவளின் சுவாசத்தில் அவளின் வாசனையை வாங்கிக் கொண்டிருந்தான். யோகியின் மனம் முன்பே அவள் வசம்.. இப்போது உடலும் அவன் வசம் இல்லை.. அவளின் வயிற்றில் அழுத்தமாக கிள்ள.. பெண்ணவளும் நிலையிழந்து.. “யோகி “ என கத்த எண்ண.. குரல் என்னமோ வரவேயில்லை.

யோகி “எத்தனை வருஷம் ஆச்சு டா.. இந்த பெயரை உன் குரலில் கேட்டு.. இன்னும் கூப்பிடு.. “ என்றவனின் கைகள்.. தடமாற தொடங்கியது, அவனின் கட்டுப்பாடின்றி.

மிர்த்தி “யோகி.. என்ன இது..” என அவளின் உணர்வுக்கும்.. அதை கொடுப்பவனுக்கும் நடுவில் தோற்க தொடங்கினாள்.. குரல் எழுப்ப முடியாமல்.

அந்த நேரம் யோகியின் போன் ஒலித்தது. இயல்பாய் அவனின் சிந்தனை அருபட்டதன் நிலை அவனின் அசைவில் தெரிய பெண்ணவள் வெடுக்கென.. அவனை தள்ளினாள்.

யோகி, அவள் தள்ளியதில் சற்று.. தூரமாக தள்ளாடி நின்றவன்.. லேசாக நெற்றி வியர்வை துளிர்க்க பெண்ணவளை பார்த்தான்.. தீராத தாகம் அவன் கண்களில். அவளின் வெறித்த முகத்தை பார்த்தவன்.. சுதாரித்து தன் தலை கோதிக் கொண்டான். தன் போன் எடுத்து யாரென பார்த்தான்.. அவனின் மாமா சீனிவாசன்.

யோகிக்கு இப்போது ஏன் இவர் அழைக்கிறார் எனதான் தோன்றியது. யோகி அவள் தட்டில் பரிமாறி வைத்திருந்த உணவை எடுத்துக் கொண்டு.. மிர்த்தியின் கன்னத்தில் முத்தம் ஒன்று வைத்து.. ஹாலுக்கு சென்றான். இழுத்து நான்கு பெருமூச்சுக்கள் விட்டுக் கொண்டான்.

யோகி, தன் மாமாவிற்கு திரும்ப அழைத்தான் இப்போது.

அவர் எடுத்தும்.. யோகியிடம் “எங்க பா இருக்க..” என்றார்.

யோகி “மாமா பிரெண்ட்ஸ் பார்க்க வந்தேன் மாமா.. சொல்லுங்க” என்றான் இயல்புக்கு மீண்டிருந்தான் யோகி.

சீனிவாசன் வீட்டில் இருப்பதால் சாவகாசமாக பேசினார் “நிவி உன்மேல கம்ப்ளைன்ட்.. மாமா என்கூட பேசலை.. என்னை எங்கும் கூட்டி போகலைன்னு.. நானும் அதைதான் சொன்னேன் அவன் என்கிட்ட பேசியே பத்துநாள் ஆகுதுன்னு.. என்ன பா சேதி” என்றார்.

யோகி “அதெல்லாம் இல்லை மாமா.. நான் கிளம்பிட்டேன் வந்துடுவேன் மாமா.. நீங்க சாப்பிட்டு படுங்க.. காலையில் பேசிக்கலாம்” என்றான்.

சீனிவாசன் “இல்லையே நிவி என்னமோ நீ வீக் எண்டு ஆனால், இங்க இருப்பதே இல்லைன்னு சொல்றா..” என்றார். நிவேதித்தா தந்தையின் தோளிலிருந்து நிமிர்ந்து “ஆமாம் பா.. மாமா அவ்வளோ பிசி..” என்றாள்.

யோகி, புன்னகை முகமாக “மாமா அவள்தான் பிஸி. எப்போதும் பிரெண்ட்ஸ்.. பார்ட்டி.. மீட்டிங்தான்.. இந்த வாரம் மட்டும் நாலுநாள் அவுட்டிங் அவள். நீங்கதான் போக சொன்னீங்கன்னு என்கிட்டே சொல்லி.. கிளம்பிடுறா..” என இவனும் திரும்பி புகார் படித்தான் உண்டுக் கொண்டே.

மிர்த்திக்கா டிவியில் கவனம் இருந்தாலும்.. எதோ பெண் பற்றி பேசுவது புரிய.. ஓரகண்ணால் அவனை பார்த்துக் கொண்டே.. அவன் பேசுவதை

Advertisement