அலாதிநேசம்!

யோகி, மிர்த்தியின் வீட்டிலிருந்து வரும் போதே.. அவர்கள் இருவரின் போன் எண் வாங்கி வந்திருந்தான். ஆனால், பெண்ணவளை அழைத்து பேசுவதற்கு தயக்கமாக இருந்தது. அத்தோடு வேலை. 

வேலை என்றால்.. சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடியான வேலை. உச்ச நீதமன்ற வழக்கு. தமிழ்நாட்டின் பழைய அரசியல்வாதியின் வழக்கு. மனதிற்கு மாறாக மூளை தனது கட்சிக்காரர்களுக்கு.. ஞாயத்தையோ.. இல்லை, கட்சிக்காரர்கள் என்பதால்.. சட்டத்திற்கு எதிராக செயல்பட வேண்டியதையும் யோசிக்க வேண்டி இருக்கும் எப்போதும். 

யோகிக்கு, முன்பெல்லாம் பெரிதாக மிர்த்தியின் நினைவு தாக்காது. ஆனால், இப்போதெல்லாம் அடிக்கடி அவளின் நினைவு வந்து அவனுள் அமர்ந்துக் கொள்ளுகிறது ஒரு கேஸ்சாக. ‘எப்படி நடந்திருக்கும்.. என்னவெல்லாம் அவள் சங்கடப்பட்டிருப்பாள்.. எனதான் யோசனை ஓடுகிறது.. ‘சின்ன பெண்.. அய்யோ! எப்படி எல்லாம் செய்துட்டேன்.. படிச்சிகிட்டு இருந்தாள்.. அவங்க அப்பா எங்களை மிரட்டியதில் தவறே இல்லை.. அதிலிருந்துதான் இப்படி ஆகிட்டாளா..’ என அவனுள் நடுக்கம் எழுந்துவிடுகிறது அடிக்கடி.

அதன் பின், வேலையின் நினைவு வர.. அவளை கொஞ்சம் தனக்குளிருந்து தள்ளி வைத்து.. பின் விட்ட இடத்திலிருந்து குறிப்புகளை எடுப்பதற்கு.. அவனுக்கு சற்று அதிக நேரம் தேவையாய் இருந்தது. யோகியின் அனிச்சை நினைவுகள் இப்போது அவள்.

அதனால், ஊழல் என பத்தாண்டுக்கு முன் இருந்த  ஆட்சியில் நடந்ததை.. இப்போது மீண்டும்  விசாரிக்க தொடங்கவும். தொட்டு தொட்டு.. பழைய பேச்சுகள் அதை ஒட்டிய கணக்குகள். அதை குறிப்புகளாக முந்தைய கேஸ்சிலிருந்து சேகரிக்கவும் வேண்டி இருக்கிறது.. நிறைய ஆய்வுகளையும் பார்க்க வேண்டி இருந்தது. ஓய்வில்லாத வேலை.. தங்களின் வாதம் என அவன் குறிப்புகளாக எழுத எழுத.. நேரம்தான் கடந்தது. தேவையான முழு விவரங்களை எடுத்து சேகரித்து கொடுத்துவிட்டுதான் நிமிர்ந்தான், இருமாதம் கடந்திருந்தது.

முடிகூட வெட்டவில்லை.. அவனுக்கான கேஸ் ஏதுமில்லை, அதனால்.. கோர்ட்டு செல்லவில்லை. வீடு அலுவலகம்.. அப்படியே பேச்சு என்றாலும் அந்த கேஸ் குறித்து எனதான் இருந்தது. எனவே, தன்னை கூட சரியாக பராமரித்துக் கொள்ளவில்லை, யோகி.

ஒருவழியாக.. வேலைகள் முடிந்து.. முடி வெட்டிக் கொண்டு.. ஷேவ் செய்துக் கொண்டுதான் கண்ணாடியில் தன்னையே பார்த்தான். அந்த வழக்கின் நினைவுகள் அவனைவிட்டு அகலவே.. ஒருமாதிரி இரண்டு நாட்கள் ஆனது. அப்படி அதிலேயே மூழ்கியிருந்தான்.

யோகி, அடுத்த நாளில்தான் தன்னவளுக்கு அழைத்தான். இந்த இரண்டு மாதங்களும் அவளை அழைக்கவில்லை. அவனிடம் அவளின் எண் இருந்தது. அன்று ஜெகனிடம் கேட்டு வாங்கி வந்திருந்தான்.. மிர்த்தியின் எண்ணையும்.. ஜெகனின் எண்ணையும். ஆனாலும், யோகி.. பெண்ணவளுக்கு  அழைக்கவில்லை. அவனுக்கு அவளிடம் நேரில்தான் பேச வேண்டும் என எண்ணம். ஆனால், தயக்கமாகவும்..அவள்பட்ட துயரை.. அவள் மொழியில் கேட்பதற்கும்.. ஒரு பயம்.

ஒருவழியாக வேலை முடிந்தது இந்த நேரத்தில் அவளை பார்க்கலாமா வேண்டாமா என யோசனை அவனுக்கு. அவளை பார்த்தால்.. எப்படியாவது அவளிடமிருந்து.. அந்த சங்கடத்தை வாங்கிவிட வேண்டும்.. அவளை இயல்பாக்கிட வேண்டும் எனதான் அவனின் சிந்தனை சென்றுக் கொண்டிருந்தது இந்த நொடி.

ஒரு வேலைநாள். மாலையில் பெண்ணவள் வேலை விட்டு செல்லும் நேரத்தில் அவளின் எண்ணிற்கு அழைத்தான், யோகி. 

மிர்த்திக்காவிற்கு அந்த அழைப்பு பெயரில்லா அழைப்பு. பஸ்சில் வந்துக் கொண்டிருந்தாள். எனவே, யாரென தெரியாததால் அழைப்பை ஏற்க்கவில்லை.

யோகிக்கு, ஒருமாதிரி இருந்தது.. ‘என் நம்பர் இருக்காது.. ம்.. அதான் எடுக்கலை’ என தனக்குதானே சமாதானம் செய்துக் கொண்டான். மீண்டும்  அரைமணி நேரம் சென்று அழைத்தான். மிர்த்தி இப்போது வீட்டிற்கு வந்து விட்டிருந்தாள். அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

யோகி இங்கே, எடுப்பாளா மாட்டாளா என இருந்தவனுக்கு.. மென்மையான அவளின் குரல்.. இன்னிசையாய் தாக்கியது “ஹலோ.. யாருங்க” என்றது.

யோகிக்கு பழைய ஞாபகங்கள் சட்டென சிறகு விரித்தது.. “மிர்த்திம்மா, நான், க்கும்.. யோகி” என்றான் வறண்ட குரலில் கொஞ்சம் படபடப்பு கூட்டி.

மிர்த்திக்கு அவனின் அழைப்பு  தாக்கியது. என்ன செய்வது.. பேசுவதா.. இல்லை கட் செய்திடலாமா.. என இரண்டு நொடிகள் யோசித்தாள்.

யோகி அவள் அமைதியாக இருப்பதை உணர்ந்து “மிர்த்தி.. என்ன பண்ற.. எப்படி இருக்க” என்றான் இயல்பான குரலில்.

மிர்த்திக்கா “ம்.. என்ன திடீர்ன்னு” என்றாள் நேரடியாக.

யோகி “இப்படி கேட்டால்.. என்ன சொல்ல..” என அமைதியானான்.

பெண்ணவளும் அமைதியாகினால். இருவருக்கும் சங்கடமானது.

யோகிக்கு அழைப்பை துண்டித்து விடலாமா என தோன்றியது. ஆனாலும், இப்போது விட்டால் எப்படி பேச முடியும் அவளிடம்.. கஷ்ட்டபடுத்துவாள்தான், ஆனாலும் பேசணும் என எண்ணிக் கொண்டு “ம்.. உன்னை பார்க்கணும், நாளைக்கு ஆப்ட்டர்நூன் லஞ்ச்க்கு மீட் பண்ணலாமா..” என்றான், ரொம்ப போர்மல் குரலாகத்தான் இருந்தது இப்போது.

மிர்த்தி “இல்ல.. முடியாது. வொர்க் இருக்கு.. எனக்கு இன்னொரு கால் வருது.. ம்.. அப்புறம் பேசறேன்.. ம்..” என சொல்லி தப்பிக்க பார்க்க..

யோகி “ஹேய்.. ஹேய் இரு.. இன்னும் எத்தனைநாள் ஒடுவ.. நிறைய சாரி.. கொஞ்சம் கோவத்தை குறைச்சிக்கோ..” என அவன் யாசிக்கும் குரலில் பேச பேச..

மிர்த்திக்கா “கோவமா? எனக்கா? அதெல்லாம் இல்லைங்க..” என்றாள், சாதரணமாக பேச நினைத்தாலும்.. அவளின் குரல் விரக்த்தியில்தான் ஒலித்தது.

யோகி “ஏன் மிர்த்தி.. கஷ்ட்டமா இருக்கு” என்றான், குரல் யாசித்தது.

மிர்த்தி அமைதியாகினாள்.. கண்ணில் நீர்தான் வந்தது பெண்ணுக்கு.. ‘என் நம்பர் அவர்கிட்ட இருக்குன்னா.. ஏன் கூப்பிடல.. இத்தனைநாள். இப்போ எதுக்கு கூப்பிட்டார்.. ஏன் இப்போ பேசுகிறான்.. இவன் பேசினதும் நானும் பேசிடனும்.. உனக்கு மரியாதையே கிடையாது..’ என பல யோசனையோடு அமைதியாக இருந்தாள்.

யோகி “பார்க்கணும்.. மிர்த்தி” என்றான்.

மிர்த்திக்கா “முடியாது.. ப்ளீஸ், உங்க வேலையை பாருங்க” என்றவள் சொல்லாமல் கொள்ளாமல் அழைப்பை துண்டித்துவிட்டாள்.

திரும்ப திரும்ப அழைத்தான்.. யோகி. பெண்ணவள் எடுக்கவில்லை அவனின் அழைப்பை. யோகிக்கு என்னமோ தாங்கவே முடியவில்லை இதை.. இங்கும் அங்கும் அறையில் நடந்தான். மீண்டும் அழைத்தான்.. பெண்ணவள் எடுக்கவில்லை.  அவளை கண்களால் காணவேண்டும் என்றிருந்த பிடித்தம்.. அவளின் புறக்கணிப்பில் பிடிவாதமாக மாறியது. இல்லை என சும்மா இருந்தது வேறு.. இப்போது அவள் எட்டிவிடும் தூரத்தில் இருக்க.. எப்படி அவனால் அமைதியாக இருக்க முடியும்.

யோகி ‘என்ன இப்போ பேசினால் ஆகாதா..’ என எண்ணிக் கொண்டே  தன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு, தன் அறையிலிருந்து கிளம்பினான்.

நிவேதித்தா அப்போதுதான் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குள் வந்திருந்தாள். யோகியை பார்க்கவும் “மாம்ஸ்.. “ என அழைத்தாள்.

யோகி “அர்ஜென்ட்டா, வெளியே போறேன் டா.. அப்புறம் பேசலாமா” என்றான்.

நிவேதித்தா “மாம்ஸ்.. உங்களை பார்ப்பதே அதிசையமா இருக்கு.. எங்க ஓடுறீங்க.. நானும் வரேன்” என்றவள் யோகியின் பின்னாலேயே சென்றாள்.

யோகி வாசலில் நின்றுக் கொண்டு “அப்புறம் பார்க்கலாம்.. நான் முக்கியமான வேலையா போறேன்” என்றான்.

நிவேதித்தா “பொய்தானே சொல்றீங்க.. ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு.. எங்க முக்கியமா போறீங்க, பரவாயில்ல நானும் வரேன்” என அவனின் வண்டியில் ஏற எத்தனித்தாள்.

மணி அப்போதே இரவு  எட்டுக்கு மேல்..

யோகிக்கு இன்னும் கடுப்பாக இருந்தது.. நேரம் வேறு கடந்துகொண்டே இருக்கவும்.. என்ன செய்வது என யோசித்தவன்.. “அத்தைகிட்ட சொல்லிட்டு வா..” என்றான்.

நிவேதித்தா “நீங்க அதற்குள் கிளம்பிடுவீங்க” என்றாள் சிணுங்கலாக..

யோகி “நிவி படுத்தாத.. போ உள்ள” என்றவன் விருட்டென வண்டியை எடுத்துக் கொண்டு கிளபினான்.

நிவேதித்தா பார்த்துக் கொண்டே இருந்தாள்.. யோகி கோவமாக செல்லுவதை. எதோ போலிருந்தது அவனின் நடவடிக்கைகள்.. இப்போதெல்லாம் மாமா கண்ணில் படுவதேயில்லை.. என எண்ணிக் கொண்டே உள்ளே வந்தாள். அப்படியே அமர்ந்துக் கொண்டாள்.

சற்று நேரத்தில் சீனிவாசன், வீட்டிற்கு வந்தார். பொதுவாக அவர் வீடு வருவதில்லை, பதினைந்து நாட்களுக்கு ஒருமுறைதான் வருவது. இன்று எதோ கட்சி மீட்டிங் என சிட்டிக்கு வரவும்.. வந்தார் வீட்டிற்கு. நிறைய அரசியல் தொடர்புகள் உண்டு அவருக்கு. பெரிய நிலங்களை கைமாற்றி விடுவார். அதை தகுந்த ஆவணங்களோடு.. குடியிருப்பு இடமாக மாற்றி தருவார்.. இப்படி நிலம் தொடர்பான தேவைகளின்.. அரசியல் மற்றும் அரசு ஊழியர்கள் அடுத்து தொழிலதிபர்களுக்கு இடையில் இருப்பவர் சீனிவாசன். அடாவடி கிடையாது.. பணம் பணம் மட்டுமே.. அவரிடம் பேசும். அவரும் நிறைய கொடுத்து தன் காரியங்களை முடித்துக் கொள்வார்.

அதனால், வீடு தங்குவது இல்லை.. வீட்டிலிருந்து எப்போதும் தூரம்தான். அதிகம் நெருங்கமாட்டார். அதிகம்  குடும்பத்தோடு செல்ல மாட்டார். இதே வெளிநாடு என்றால்.. குடும்பமாக செல்லுவார்கள்.

இப்போது வீடு வந்தவர்.. மகள்.. தன்னை பார்த்தும் எப்போதும் ஆர்பாட்டமாக வந்து குதித்து பேசுபவள் இன்று அமைதியாக “சொல்லவே இல்லையே டாட்..” என சொல்லி அமைதியாக வந்து கட்டிக் கொண்டாள்.  பெண்ணின் அமைதி, ஒருமாதிரி இருந்தது சீனிவாசனுக்கு.

சீனிவாசன் “என்ன டா, என் பொண்ணு முகமே வாடி இருக்கு” என்றார் மகளை அருகில் அமர்த்திக் கொண்டு.

நிவேதித்தாவிற்கு.. தந்தை கேட்டதே போதுமானதாக இருக்க “அப்பா, மாமாவை பார்த்தே ரொம்ப நாளாச்சி. இன்னிக்கு மாமா கூட நான் வரேன்னு சொல்லியும் என்னை கூட்டிட்டு போகாமல் விட்டுட்டாங்க” என்றாள்.. கரகரத்த குரலில்.

தமிழரசி “என்னடி, வந்தததும் வராததுமாக இப்படி முகத்தை வைச்சிருக்க.. போ.. ட்ரெஸ் மாற்றிக் கொண்டு வா..” என அதட்டினார்.

நிவேதித்தா இன்னும் வாகாக தந்தையின் தோளில் சாய்ந்துக் கொண்டாள். சீனிவாசன் “எங்க யோகி.. எங்க போனான் உன்னை விட்டுட்டு..” என பெண்ணிடம் கேட்க தொடங்கினார். 

யோகி இங்கே இருப்பது அவருக்கு பெரிய துணையாக இருந்தது. அவனின் தந்தை இறந்த பிறகு.. அவனை இங்கே கூட்டி வந்துவிட்டனர். சொந்தமகன் போலவேதான் அவன், இங்கே. படிப்பு தொடங்கி அவனின் சுதந்திரமான வாழ்க்கை முறைக்கு தேவையான எல்லாம் சீனிவாசன் செய்தார்.. தனி பேங்க் அக்கௌன்ட்.. அவனுக்கென தனி வண்டி கார் எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டார். அதைத்தவிர, அவனின் தந்தை வாங்கி வைத்திருக்கும் ஒரு அப்பார்ட்மென்ட். அதில் வரும் வருமானம் எல்லாம் இவனின் அக்கௌண்டில் சேர்ந்து விடுகிறது. ஆனால், அதை எடுத்து செலவு செய்ய இவனுக்கு வாய்ப்புகள் அமையவில்லை. எல்லாம் சீனிவாசன் பார்த்துக் கொண்டார். அவன் விருப்பம் போலதான் இத்தனைநாள் அவன் இருக்கிறான். 

இப்போது பெண் நடந்தவைகளை சொல்லவும்.. சீனிவாசனுக்கு யோகி பற்றி யோசனை வந்தது. அந்த யோசனையை தள்ளி வைத்து.. பெண்ணோடு பொதுவாக பேச தொடங்கினார். ஆனால், அவளின் பேச்சு எல்லாம் மாமா மாமா.. எனதான் சென்றது.

யோகி, எரிச்சலோடு இருந்தான்.. வண்டியில் செல்ல செல்ல.. அவளிற்கு எப்படி புரியவைப்பது எனதான் யோசனை. ஒருமணி நேர பயணத்தில் மிர்த்திக்காவின் வீடு வந்து சேர்ந்துவிட்டான்.

காதில் வாங்கிக் கொண்டிருந்தாள் பெண்.