Advertisement

அலாதிநேசம்!

13

யோகிக்கு, மிர்த்திக்கா என்பவளே இப்போது முரணாக இருந்தது.. உணர்ந்தான். கல்யாணம் ஆகவில்லை.. என்னை பார்த்ததும் கண்ணில் ஆசையே இல்லை.. என்னை இப்போது அவளுக்கு பிடிக்கவில்லையோ..’ என ஓடிக் கொண்டே இருந்தது அவன் மனதில்.

யோகிக்கு, தன் சீனியரின் கேஸ்சிற்கு குறிப்பெடுக்கவே நேரம் சரியாக இருந்தது.. அந்த வேலையில் அவன் சென்ற பிறகு.. அவனுக்கு எல்லாம் மறந்து போகும்.. அதில் மிர்த்தியும் ஒருத்தி. 

அப்படிதான் அவன் அடுத்த இரண்டு வாரமும் மூன்று பெரிய கேஸ் விஷயமாக அலுவலகத்திலேயே இருந்துக் கொண்டான், அதிக நாட்கள். அந்த கேஸ்கள் ஐந்து வருடமாக நடந்துக் கொண்டிருக்கிறது. முடிவுக்கு வரும் நேரம்.. எனவே, உழைப்பு அதிகம் தேவைப்பட்டது.

மிர்த்திக்கா, மறுநாள் அலுவலகம் சென்றாள். அடுத்தடுத்து வந்த நாட்கள்.. அவளுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்திருந்தது, அன்பு மட்டுமே அவளிடம் இருக்க.. அது சரியா நியாமா என தெரியாமல் இருந்தவளுக்கு.. அவன் வந்து நின்றது.. தன் அன்பிற்கு அர்த்தம் என்பதாக உணர்ந்தாள்.

எனவே, அலுவலகத்தில் இறுக்கமின்றி எல்லோரிடமும் நன்றாக பழகினாள். வேலைகளும் பழகியிருக்க.. மிர்த்திக்கா கொஞ்சம் சந்தோஷமாகவே இருந்தாள். ஆனால், யோகியை சந்திக்கவோ பேசவோ விரும்பவில்லை பெண்.

ஜெகனுக்கு, அக்காவின் மாற்றம் நன்றாக கண்ணில் தெரிந்தது. காலை எழுந்ததிலிருந்து எதோ ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே சந்தோஷமாக சமைக்கிறாள். தனக்கு தினமும் லஞ்ச் கட்டி தந்து விடுகிறாள்.. மாலையில் சீக்கிரமாக வந்து, ஏதேனும் ஒரு புது வகை உணவினை இரவிற்காக தாயரித்து விடுகிறாள் என எண்ணிக் கொண்டே இந்த ஞாயிறு விடுமுறை தினத்தை கடத்தினான்.

மிர்த்திக்காவிற்கு, அவளின் பள்ளி தோழி இங்கே சென்னையில் இருப்பதால் அவளை பார்க்க இன்று மதியம் செல்லுகிறாள். அதனால் துணிகளை மிஷினில் போட்டுவிட்டு, குளித்து வந்தாள். ஜெனகன் இன்று வெளியே நண்பர்களோடு உண்டுக் கொள்ளுகிறேன் என்றதினால்.. மிர்த்திக்காவிற்கு வேலைகள் ஏதுமில்லை.. பொறுமையாக கிளம்பினாள்.

கிளம்பும் போது.. தன் தந்தைக்கு அழைத்தாள் மிர்த்திக்கா “அப்பா, என்ன செய்றீங்க.. சாப்பீட்டிங்களா” என்றாள்.

வாசு மகளிடம் அவளாக அழைத்தால் பேசுவார், தானாக பேசுவதில்லை. எனவே, மகள் கேட்கவும் பதில் சொன்னார் “இல்ல ம்மா, சுசீலா அக்காவுக்கு முடியலை.. அவங்களுக்கும் சேர்த்து.. சாப்பாடு வாங்கிட்டு வர சொல்லியிருக்கேன்.. நீங்க என்ன செய்யறீங்க” என்றார். இப்படியே பேசிக் கொண்டே தம்பியோடு.. பைக்கில் சென்றாள், மிர்த்திக்கா. 

சுசீலாம்மா, இரு பிள்ளைகளும் வேலைக்கு செல்லவும்.. தன் வீட்டிற்கே சென்றுவிட்டார் அவர். அவர்களின் வீட்டு மாடியில் தனியாக ஒரு அறை இருக்க.. அங்கே தங்கிக் கொண்டார். அவர்கள் மகன் வெளிநாட்டில் இருப்பதால்.. பணம் வந்துவிடும்.. மற்றபடி தன்னை தானேதான் பார்த்துக் கொள்கிறார்.

ஜெகன் தன் அக்காவை அவளின் தோழி.. நர்மதா வீட்டில் இறக்கிவிட்டான், நர்மதா “ஜெகன் உள்ள வந்துட்டு போ” என அழைக்கவும் வந்தான். இரண்டு நிமிடம் அங்கே இருந்துவிட்டு கிளம்பினான் நண்பர்களை பார்க்க.

நர்மதா, அவளின் கணவர் வெளியூர் சென்றிருந்தார். பிள்ளைகள் இரண்டு என நால்வர். மிர்த்திகா, பிள்ளைகளை பார்த்து குஷியாகிவிட்டாள். முதலில் பெண் பிள்ளை.. நான்கு வயது அக்ஷயா. அடுத்து ஒரு மகன் ஆரவ் இரண்டு வயது ஆகபோகிறது.. மிர்த்திக்கா இப்படி குழந்தைகளோடு இருந்ததேயில்லை.. அதனால், ஹாப்பி அவள். கல்லூரி படிக்கும் போதே.. அவசர அவசரமாக நர்மதாவிற்கு திருமணம்.. தாத்தாவின் விருப்பம் என. அதனால், அவளுக்கு குடும்ப பொறுப்பு சீக்கிரமாக வந்தவிட்டது.

பள்ளி தோழிகள் க்ரூப் வைத்திருப்பதால்.. இன்னமும் தொடர்பில் இருக்கின்றனர். நர்மதா  போல இன்னும் இரண்டு தோழிகள் இங்கே சென்னையில்தான் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் எல்லாம் சற்று தொலைவில் என்பதால்.. நர்மதாவை பார்க்க வந்திருந்தாள் மிர்த்தி.

மிர்த்திக்காவிற்கு நர்மதாவை பார்க்க பார்க்க.. சிரிப்பும் கிண்டலும்தான் அதிகமாக வந்தது.. “அய்யோ எப்படி இருந்த நமி இப்படி ஆகிட்டா” என கிண்டல் செய்துக் கொண்டே.. அவளுக்கு உதவினாள்.. பேசிக் கொண்டனர் இருவரும். பிள்ளைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டே உண்டனர். 

நர்மதாவின் கணவர் வீடு வந்தார் மாலையில். ஜெகனும் சரியான நேரத்திற்கு வந்து அக்காவை அழைத்துக் கொண்டான்.

ஜெகனுக்கு கிளென்ட் மீட்டிங் என்பதால்.. உடைகள் எடுத்துக் கொண்டு போகலாம் என்றான். அக்காவும் தம்பியும் மால் சென்றனர். 

பொறுமையாக உடைகளை எடுத்துக் கொண்டு.. ஏதேனும் கொறிக்கலாம் என அமர்ந்தனர். ஜெகன் பில் செய்யும் இடத்தில் யோகியை பார்த்தான்.. எதேச்சையாக. 

ஜெகனுக்கு சந்தேகம்தான் அது யோகியா என. யோகியையே பார்த்துக் கொண்டே.. பில் செய்து ஆர்டர் செய்த உணவுகளை வாங்க செல்லவும்.. அங்கேயும் யோகி வந்து நிற்க.. யோகியின் அருகில் சென்றான் ஜெகன். 

யோகியும் ஜெகனை கண்டுக் கொண்டு “ஜெகா..” என்றான் தன் தலையை கோதிக் கொண்டே.

ஜெகன் “அண்ணா.. அப்போவே எனக்கு டௌவுட்.. அதான் பார்த்துட்டே இருந்தேன்.. எப்படி இருக்கீங்க..” என்றான்.

யோகி ஜெகனை தோளோடு அணைத்துக் கொண்டு.. “ம்.. நீ எப்படி இருக்க.. டேய்.. ஆள் பார்க்க சூப்பரா இருக்கடா.. “ என்றவன் சுற்றும் முற்றும் பார்த்து.. “உன் அக்கா எங்க” என்றான்.

ஜெகன் “அஹ.. இன்னும் அவளை ஞாபம் வைச்சிருக்கீங்களா” என்றான்.. அவன் இயல்பாகத்தான் கேட்டான்.. யோகிக்குதான் வலித்தது. முயன்று சிரித்தான்.

ஜெகன் ஒருமாதிரியாக யோகியை பார்த்தான்.. ‘தெரியுமோ இவருக்கு.. அக்கா இங்க இருப்பது..’ என யோசித்தான் ஒரு நிமிடம்.

ஜெகன் பதில் சொல்லாமல் இருப்பதை பார்த்த யோகி “அவளை பார்த்தேனே” என்றான்.

ஜெகன் “அப்படியா சொல்லவேயில்லை மிர்த்தி என்கிட்டே..” என்றான். யோகிக்கு ஏதும் பேச முடியவில்லை. 

ஜெகன் “அங்கதான் இருக்கா.. வாங்க” என சட் வாங்கிக் கொண்டு.. 

யோகி “இரு பிரெண்ட்ஸ்கிட்ட சொல்லிட்டு வரேன்..” என்றவன் அங்கே சென்று துரையிடம் சொல்லிக் கொண்டு.. ஜெகனோடு சேர்ந்துக் கொண்டான்.

மிர்த்திக்கா, பார்த்துக் கொண்டே இருந்தாள் தம்பியும் யோகியும் வருவதை. ‘இவனையும் பார்த்துவிட்டானா யோகி.’ என எண்ணிக் கொண்டாள்.

ஜெகன் “அக்கா.. யோகி. உன்னை பார்த்தாராம்.. என்கிட்டே சொல்லவேயில்ல” என்றான் இயல்பாக.

மிர்த்திக்காவும் தடுமாறினாள். பின் “ம்..” என்றாள்.

யோகி “உன் அக்கா.. நிறைய மாறிட்டா. விடு, நீ என்ன பண்ற” என பேச்சை மாற்றினான்.

ஜெகனும் எங்கே வேலை செய்கிறேன் என பேசினான். இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.. மிர்த்திக்காவிற்கு உண்பதற்கே ஒருமாதிரி இருந்தது. வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.

ஜெகன் “அக்கா.. இரு மில்க்ஷேக் எடுத்துட்டு வரேன்” என எழுந்து சென்றான். அவனுக்கு இருவருக்கும் நடுவில் என்ன இருந்திருக்கும் என புரிகிறது. அதனால், ஏதும் அவர்கள் பற்றி கேட்டுக் கொள்ளாமல்.. இருவரும் பேசிக் கொள்ளட்டும் என எண்ணி சென்றான்.

யோகி பெண்ணவளையே பார்த்திருந்தான்.. மிர்த்திக்கா அவனை பார்க்கவேயில்லை. யோகி “மிர்த்தி, என்னை பாரு” என்றான், இயல்பான குரலில் சொன்னான்.

பெண்ணவளுக்கு.. அவன் குரலில் தன் பெயர் கேட்து ஒரு அதிர்வை தந்தது. திரும்பி பார்க்க தோன்றுகிறது ஆனாலும் பார்க்கவில்லை.. அமைதியாக அமர்ந்துக் கொண்டாள். யோகி விடாமல் அவளையே பார்த்தான். நான் சலனமாகவில்லை என காட்டிக் கொள்ளுகிறாள்தான்.. அவளின் கண்கள் கோர்த்திருந்த தன் விரல்களையே பார்த்திருந்தது.

யோகி, அவளின் விழிகளை நேருக்கு நேர் சந்தித்திட வேண்டும் என்ற ஆவலில்.. அவளின் கையருகே இருந்த பாவ்பஜ்ஜி ப்ளேட் எடுத்தான்.. பெண்ணவள் சட்டென நிமிர்ந்து வேடிக்கை பார்க்க தொடங்கினாள். யோகி, அவள் இப்போது நிமிர்ந்ததே போதுமென.. அவளுக்கு என இருந்த அந்த உணவினை உண்ணத் தொடங்கினான்.

அப்போதும் பெண்ணவள் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. யோகி, இப்போது அந்த பன் எடுத்து பெண்ணவளின் முகத்தருகே நீட்டினான் “ம்மிர்த்தி..” என்றான்.

மிர்த்திக்கா அவனின் கையை உணர்ந்ததும் எழுந்துக் கொண்டாள்.. நிற்க தோன்றவில்லை.. புட் கோர்ட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டாள். மனமெல்லாம் தவிர்க்கிறது.. தகிக்கிறது.. காதலும் உண்டு என. ஆனால், காட்டிக் கொள்ள முடியாத  கோவம்..  இயலாமையாக வந்து அவளுள் புகுந்துக் கொண்டது.

யோகிக்கு கோவம் வந்த அதே நேரம் யோசனையும் வந்தது.. ‘என்னமோ நடந்திருக்கு’ என இந்த ஷனம்தான் தோன்றியது. மனது நெருடியது.. அவள் கண்களில் காதல் இருக்கிறதே.. ஆனாலும், எதோ தடுக்கிறது என.. யோசித்தான், அவளிடம் செல்லாமல்.

அந்த வக்கீல் மூளைக்கு.. பட்டென நினைவு வந்துவிட்டது தங்களின் தவறு.. ஆனால், நம்பமுடியவில்லை.. எப்படி கேட்பது என தெரியவில்லை. அந்த பாவ்ப்ஜ்ஜியை உண்டான். எங்கிருந்து தொடங்க.. என மனது சிந்தித்துக் கொண்டே இருந்தது.

ஜெகன் வந்தான்.. கையில் ஜூஸ் எடுத்து கொண்டு “மிர்த்தி எங்க அண்ணா” என்றான் யோகியிடம்.

Advertisement