Advertisement

9

        நேற்றும் இன்றும் கதையாகக் கழிந்துவிட்டன., நாளை உதயமாவதை எதிர்பார்த்திருங்கள்.



           ஊருக்கு செல்ல வேண்டிய நாளும் வர.,  எப்போதும் போல் துணி எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளுக்கு மற்ற முறை செல்லும் போது இருக்கும் உற்சாகம் இந்த முறை இல்லை.,

       அதை உணர்ந்த ஏஞ்சல் தான் பேச்சை தொடங்கினாள்., “நீ ஏன் ஒரு மாதிரி இருக்கே“.,  என்று கேட்டாள்.

     “எனக்கென்ன நல்லா தான் இருக்கேன்“.,  என்று குரலில் உற்சாகமாக சொன்னாலும்., முகம் சாதாரணமாக இருந்தாலும் கண்ணில் ஒரு பதட்டமும் அலைபாய்தலும் இருந்தது.,

    அவளையே பார்த்துக் கொண்டிருந்தவளால் உணர முடிந்தது.,  சற்று நேரம் அமைதியாக இருந்த ஏஞ்சல்.,  பின்பு மெதுவாக நிஷாவை பிடித்து இழுத்து தன் அருகே அமர வைத்துக்கொண்டாள்.,

     அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டுஉன் மனசுல ஏதும் எண்ணம் இருந்தா சொல்லி விடுன்னு தான் சொல்லுறேன்., நீ அப்ப எல்லாம் எதுவுமே கிடையாது ங்கிற.,  யாரையும் விரும்புறீயா ன்னு கேட்டேன்., அதுவும் இல்லன்னு சொல்லிட்ட., அப்புறம் எதுக்கு பயப்படுற.,  இது நார்மல எல்லா வீட்லயும் பொண்ணுங்களுக்கு நடக்கிற ஒரு விஷயம் தான்., 

       ஏன் போன வாரம் உனக்கே தெரியும்.,  போன வாரம்  நான் லேட்டா எதுக்கு வந்தேன்., சொல்லிட்டு தானே போனேன்.,  காபி ஷாப்ல  வச்சு அம்மா அப்பா சொன்ன பையனை தானே மீட் பண்ண போயிருந்தேன்.,

            இரண்டு பேரும் பேசி பார்க்கும் போதே., ரெண்டு பேருக்கும் ஒத்துவரும் ன்னு தோனல., அதனால ரெண்டு பேருமே பய் பய் ன்னு முடிச்சுட்டு வந்துட்டோம்.,

             இப்பவும் அப்படித்தான்., எல்லா  அம்மா., அப்பாவும் ரொம்ப அன்டர்ஸ்டாண்டிங் சரியா.,  அந்த காலத்தை மாதிரி பார்த்தவுடனே இவனை தான் கல்யாணம் பண்ணிக்க அப்படின்னு கட்டாயப்படுத்த போறது கிடையாது.,

           உனக்கு பிடிக்காத எந்த ஒரு விஷயமும் நடக்காதுன்னு., உங்க அண்ணா சொல்லிட்டாங்க., உங்க அம்மாவும் அது தான் சொன்னாங்க.,   அப்புறம் எதுக்கு பயப்படுற நீ போ.,

        பார்க்கிற மாப்பிள உனக்கு ரொம்ப பிடிச்சவங்களா  கூட இருக்கலாம்., பார்த்த உடனே சிலரை.,  இவங்க நம்ம லைஃப் வந்தா நல்லா இருக்கும் அப்படின்னு நினைக்கிற மாதிரி கூட இருக்கலாம்.,

     அந்த மாதிரி ஒருத்தங்க வருவாங்க.,  சப்போஸ் அப்படி பிடிக்கலை அப்படின்னு தோணுச்சுனா., புடிக்கலைன்னு சொல்லிடு., அதுக்கு எதுக்கு இவ்வளவு யோசிக்கிற“., என்று சொன்னாள்.

        “இல்ல அப்படி எல்லாம் யோசனை இல்லை., ஆனாலும் கல்யாணம் அந்த மாதிரி யோசிக்கும் போது ஃபேமிலிய விட்டு போகனும்., யாருனே தெரியாத ஒருத்தரை கல்யாணம் பண்ணிட்டு அவருக்கேற்ற மாதிரி நம்மள மாத்திக்கனும்.,

        பெண்களுக்கான ஏதோ சாபம் தான் போல., நமக்காக யாரும் மாற மாட்டாங்க இல்ல.,  நம்ம தான் மத்தவங்களுக்காக மாறனும்“.,  என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

       “ஏஞ்சலோ அப்படிலாம் ஒன்னும் இல்ல.,  லைஃப் னா எல்லாம் இருக்கத்தான் செய்யும்.,  போகப்போக அவங்களே நமக்காக மாற தான் செய்வாங்க., கல்யாண வாழ்க்கையில் இப்ப வாழ்ந்துகிட்டு இருக்குறவங்க ட்ட போய் கேட்டு பாரு., 

       உங்க ஹஸ்பண்டு உங்களுக்கு ஏத்த மாதிரி மாறி இருக்காங்களானு.,கேட்டா இல்லைன்னு சொல்லுவாங்க., ஆனா அவங்களுக்கு தெரியும் தன் ஹஸ்பென்ட் கல்யாணம் முடிஞ்ச புதுசில எப்படி இருந்தார்., இப்ப எந்த அளவுக்கு தனக்காக சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து போறாரு அப்படின்னு.,

         எந்த ஒரு இடத்திலும் விட்டுக் கொடுத்து போகாம வாழ்க்கைல நிம்மதி கிடையவே கிடையாது., உனக்கு புடிச்சிருந்தா பாரு ஓகே சொல்லு., யாரை கல்யாணம் பண்ணினாலும்., நம்ம வந்து சில இடங்களில் விட்டுக்கொடுத்து போனா மட்டும் தான் லைப் நல்லாருக்கும்..,

          முகம் காட்டிட்டு.,  எடுத்து எறிஞ்சி பேசி னா கஷ்டப்படணும்., அதனால நிதானமா யோசி., எல்லாம் நல்லபடியா நடக்கும் சரியா பயந்துகிட்டே டென்ஷனை நீயும் ஏத்தி., எல்லோரையும் டென்ஷனாகாத.,

        உன் முகம் கொஞ்சம் வாடினால் கூட உங்க வீட்ல அம்மா அப்பா அண்ணன் எல்லாருமே பயந்துருவாங்க., சோ ஹாப்பியா ஃபீல் பண்ணு., ஹாப்பியா என்ஜாய் பண்ணிட்டு வா.,

     இப்படி கூட யோசிச்சிப் பாரேன் யாரோ ஒரு குடும்பமே வந்து.,  நம்ம வீட்ல பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுட்டு., நம்ம வீட்ல வந்து அரட்டை அடிச்சிட்டு போக போறாங்க.., ஒரு ஜாலியா ஃப்ரெண்ட்லியா பார்க்க கூட வராங்க..,   அப்படி கூட யோசிச்சிக்கோயேன்“.,  என்று சொன்னாள்.

       இவளும் திரும்பி அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே., “சோ பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட தான் வாரங்க ன்னு சொல்ற“., என்றாள்.

       பின்ன பொண்ணு பார்க்கவா வராங்க.,  எல்லாருமே பஜ்ஜி சொஜ்ஜிய  தான் முதலில் ஒரு கை  பார்ப்பாங்க.,  பஜ்ஜி சொஜ்ஜி நல்லா இருந்தா தான்., அதுக்கப்புறம் பொண்ணையே பாப்பாங்க., நீ வேணா வீட்ல போய் பாரேன்“., என்று சொல்லி சந்தோஷமாக சிரித்தபடி வழியனுப்பி வைத்தாள் ஏஞ்சல்.

      எப்போதும் போல ஆட்டோவில் வந்து இறங்கியவள்.,  பஸ் ஸ்டாண்டில் அவனை தேட துவங்க.,  சரியாக ரஞ்சித்தும் இவள் இறங்குவதை பார்த்துவிட்டு அங்கு வந்து விட்டான்.

          அந்த முறை ட்ரெயினில் டிக்கட் கிடைக்கவில்லை., அதனால் பஸ்ஸில் டிக்கெட் எடுத்திருந்தான்.,  இவளை பஸ்ஸ்டாண்ட் வந்துவிடு என்று சொல்லியிருந்தான்.,

      அவர்கள் செல்வதற்கான பஸ் வர இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது. அங்கிருந்த இருக்கையில் இருவரும் அமர்ந்தனர்., 

       “ஏதாவது குடிக்கிறீயா., ஏன் டல்லா இருக்க“., என்று ரஞ்சித் கேட்டான்.,

        ‘அப்படியா முகம் தெரியுதுஎன்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள்.,  அதெல்லாம் ஒன்னும் இல்ல இன்னைக்கு ஆபிஸ்ல கொஞ்சம் ஒர்க் டைட்டு.,

         அதுமட்டுமில்லாம நேத்து நைட்டு சரியா தூங்கலை.,  ஒர்க் டென்ஷன் ஜாஸ்தி., தூக்கம் சரியா வரல அதுவே பாதி டயர்டா இருக்கு.., இன்னைக்கு தூங்கிட்டேனா சரியா போயிடும்“.,  என்று சொல்லிவிட்டு அமைதியானாள்.

              அவனும் எழுந்து சென்றவன்.,  அவளுக்காக ஒரு ஜூஸ்., அவனுக்காக டீயும் வாங்கி கொண்டு வந்தான்.,

        அவள் கையில் ஜூஸை கொடுத்து விட்டு., அவள் அருகில் அமர்ந்து விட்டான்.,  அவள் அதை வைத்து பார்த்துக் கொண்டே இருக்க., அவன் தான்பார்த்துட்டே இருந்தா என்ன அர்த்தம் குடி“., என்று சொன்னான்.

         மெதுவாக அருந்த துவங்கினாள்.,  தொண்டைக் குழியில் ஒவ்வொரு துளியாய் ஜூஸ் இறங்க இறங்க..,

       ‘ தன் வாழ்க்கையில் விதி தனக்கென என்ன வைத்திருக்கிறது என்று தெரியவில்லை.., இந்த அன்பும்அருகாமையும்., பாதுகாப்பும் எனக்கு எத்தனை நாட்களுக்கு கிடைக்கும்‘., என்ற பயமும் அவள் அறியாமல் வந்து சென்றது.

        ‘இதே அளவு அன்பும் அனுசரணையுமாக  நண்பன் போல ஒருவன் கிடைப்பானா.,  ஏனெனில் ஒவ்வொரு திருமணத்திலும்.,  எத்தனையோ பிரச்சனைகள்.,  எத்தனையோ குளறுபடிகள்., எவ்வளவு தான் பழகியவர்கள்., தெரிந்தவர்கள்.,  சொந்தக்காரர்கள்.,என்று வந்தாலும்

      திருமணம் எனும் போது அங்கு பிரச்சினைகள் அதிகமாகவே இருக்கிறது.,  அப்படி இருக்கும் போது யார் என்றே தெரியாத ஒருவனை எப்படி திருமணம் செய்வதுஎன்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு.,

        ஆபீஸில் மற்றொரு தோழி சொன்னது நினைவுக்கு வந்தது.,  ‘ஒரு வேளை பார்த்து புடிச்சி., உனக்கு ஓகே ன்னு தோனிச்சுன்னா.,  போன் நம்பர் வாங்கிக்கோ., அப்புறம் பேசி பாருங்க.,  பேசி பார்க்கும் போது.,

        அவங்களுடைய குணம் உனக்கு தெரியும்., ஒருவேளை அவர் ஒர்க் பண்ற இடம் சென்னை னா.,  ஜஸ்ட் வெளியே  ரெண்டு பேரும் சேர்ந்து போய் பாருங்க.,  உங்களுக்குள்ள பிடித்த பிடிக்காத விஷயங்கள் நிறைய இருக்கும்..,

       கல்யாணத்துக்கு அவசரப்பட்டு பிக்ஸ் பண்ணாதீங்க“., என்று சொன்னாள்.

         “எனக்கு பார்த்து புடிச்சா தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிரு“., என்று சொன்னாள்.

            இவளோ., அந்த நேரத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள்.,

        பக்கத்திலிருந்த தோழியோ., “ஏன் வாழ்ந்து பார்த்துட்டு கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்ல சொல்லு.,  நல்லா ஐடியா கொடுக்குறா., எந்த காலத்தில் இருக்க., எந்த காலத்தில் இருந்தாலும்., வீட்டில் பொண்ணுங்கள அதுக்கு மட்டும் அலவ் பண்ண மாட்டாங்க., 

        என்ன இப்ப எல்லாம் போன்ல பேச விடுறாங்க., ரெண்டு பேரும் நல்ல ப்ரியா பேசிக்கலாம்., ஷாப்பிங் போய்க்கலாம்., அவளே பழகி பார்த்துட்டு தான்., கல்யாணம் பண்ணுவேன் சொல்லிட்டு இருக்கா.,  நீ  சொல்லுறத கேட்டா னா.,  அப்ப மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரும் போதே வாங்க பழகி பாக்கலாம்னு கூப்பிட சொல்லுவீயா“., என்று சொல்லி கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.

        அன்று சிரித்தபடி இருந்தவளுக்கு இன்று யோசனை தோன்றியது.,  அவன் தனக்காக காத்திருப்பதை புரிந்தவுடன் அவசரஅவசரமாக ஜூஸை குடித்துவிட்டு நிமிர்ந்தாள்.

           அவன் டம்ளரை வாங்கிக்கொண்டு போய் கடையில் கொடுத்து விட்டு வந்து அவளருகில் அமர்ந்தான்.,

          அதே நேரம் அவர்களுக்குரிய பஸ் வரவும்., இருவரும் ஏறி அமர்ந்தனர்.

      அவனோ அவளிடம்நீ எதுக்கு இப்படி இருக்க., முகமே வித்தியாசம் தெரியாது.,   உன்கிட்ட திரும்ப திரும்ப அதையே தான் சொல்றேன்.,  உன் இஷ்டம் இல்லாமல் எதுவும் நடக்காது.,  டென்ஷன் ஆகாமல் ரிலாக்சா இரு., நீ இப்படி ஒரு மாதிரி இருந்தாளே உங்க வீட்ல எல்லாரும் பயப்படுவாங்க., உனக்கு வேற எதுவும் லவ் இருக்கு ன்னு யோசிப்பாங்க“.,  என்று சொன்னான்.

      அவனை திரும்பி பார்த்து முறைக்க., “ஏன் முறைக்கிறாய்“., என்று கேட்டான்.

         “அப்படி எல்லாம் இருந்துச்சுன்னா.,  உங்களுக்கு தெரியாம இருக்குமா., அப்படி எல்லாம் எதுவும் இருந்தா நான் உன் கிட்ட தான் முதல்ல சொல்லி இருப்பேன்“.,  என்று சொன்னாள்.

       சிரித்துக்கொண்டேஅது எல்லாருக்கும் தெரியும்.,  நீ எல்லாம் லவ் பண்ண மாட்ட.,  ஆனாலும் நீ இப்படி இருப்பதைப் பார்த்தால் எல்லோரும் ஏன் இப்படி இருக்கான்னு.,  வேற வேற மாதிரி தான் யோசிப்பாங்க., அதனால நார்மலா இரு“., என்று சொன்னான்.

     அவளும் சிரித்துக் கொண்டே திரும்பி அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கத் துவங்கி இருந்தாள்.,

          ஏசி பஸ்ஸில் ஸ்கிரீன் போட்டு மறைத்திருக்க இவளோ ஸ்கிரீனை ஒதுக்கிவிட்டு கண்ணாடி ஜன்னலில் தலைசாய்த்துக் வெளியே இருந்த ட்ராபிக்கையும்., அதில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த வாகனங்களையும் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

          குறிப்பிட்ட தூரம் வரை டிராபிக்கை கடக்கும் முன்.,  இந்த பஸ் படும் பாட்டை நினைத்துக் கொண்டவளுக்கு சிரிப்பு தான் வந்தது.,

           ‘வாழ்க்கையும் அப்படித்தான்.,  முதலில் அதிக சிக்கலும்., தடங்களும் கடந்து சுமுகமான பாதைக்கு வரும் வரை வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கத் தான் செய்யும்., நிதானமாக கடந்து வந்து விட்டால் ஜெயித்துவிடலாம்என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் யோசனையோடு அப்படியே தலை சாய்த்து அமர்ந்திருந்தாள்.,

      அவள் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு ஏதோ யோசனையில் இருப்பதை பார்த்த ரஞ்சித்து தான்., ‘இவ எதையோ மறைக்கிறா‘.,  என்று யோசித்தான்., பின்புஇல்ல இருக்காது.,  அவள் சொன்ன மாதிரி., அவள் மனசுக்கு யாரையும் பிடிச்சிருந்தா கண்டிப்பா இதுக்குள்ள சொல்லி இருப்பா., மத்தவங்கட்ட சொல்றாளோ.,  இல்லையோ.,  கண்டிப்பா என்கிட்ட ஒளரி இருப்பா., அப்புறம் ஏன் கல்யாணம் னா இவ்வளவு பயப்படுறா‘., என்று நினைத்தவன்.

     ‘இல்ல அவள புரிஞ்சுகிட்டவன் வரணுமே என்ற பயமாக கூட இருக்கலாம்., அவளோட பயத்தையும்.,  அவளுடைய பயந்த சுபாவத்தையும் புரிஞ்ச ஆள் கிடைத்தா அவளுக்கு சரியாக இருக்கும்‘., நினைத்த பின்பு  அமைதியாகி விட்டான்.

       எல்லாம் நல்லபடியாக நடக்கும்  என்ற நம்பிக்கையோடு அமர்ந்திருந்தாலும்.,  அவனுக்கு ஏனோ தூக்கம் மட்டும் வரவில்லை.,

      அப்போது அவளை திரும்பிப் பார்க்க அவளும் ஜன்னலில் சாய்ந்தபடி வெளியே தெரிந்த விளக்கு ஒளியும்., நிலவொளியும் வெறித்துக் கொண்டிருந்தவளை., சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.

          அவளுக்கோஇனி தன் வாழ்க்கை எப்படி இருக்கும்., கல்யாணம் செய்து கொள்ளும் பெண்கள் எல்லோருக்கும் இது போன்று தான்  படபடப்பு இருக்கத்தான் செய்யுமா., யாரிடம் போய் கேட்பது‘., என்று தோன்றியது.

     ஏனெனில் சென்னையில் அவளோடு வேலை பார்க்கும் பெண்களுக்கு திருமணம் என்றால்., அவர்கள் எல்லாம் திருமணத்திற்கு முன்னரே நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு பார்ட்டி.,  ஊர் சுத்தல் என்று சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.,

         அதனால் அவர்களுக்கு  சாதாரணமாக இருக்கும்., ஆனால்முகம் தெரியாத ஒருவனை., அவன் குணம் தெரியாது., என்னைப் பற்றி அவனுக்கும்., அவனைப் பற்றி எனக்கும் எதுவும் தெரியாது.,எப்படி இருக்கும் இந்த வாழ்க்கை என்ற படபடப்போடு இதயம் அடித்துக்கொள்ள வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்று., பயமும் வலியும் சேர்ந்து இருந்தது.

    இது சுகமான அவஸ்தை இல்லை., இது மனதிற்குள் தோன்றும் பயத்தினால் வரும் அவஸ்தை என்பதை உணர்ந்து கொண்டவள்.,  அப்படியே வெளியே பார்த்துக் கொண்டே வந்தாள்.,

     இப்படியே இந்த நிமிடம் உறைந்து விட்டால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்.,  இந்த நாட்கள் வேண்டாம் என்றும் தோன்றியது.,  சில நேரம் கொஞ்சம் அப்படியே பின்னோக்கி பள்ளிப்பருவத்தில் சென்று விட்டால்., நல்லா இருக்குமே.,அப்படி என்றால் கல்யாணம் பேச மாட்டார்கள் அல்லவாஎன்று தோன்றிக் கொண்டிருந்தது.,

       நிச்சயமாக இன்று உறக்கம் வரும் என்று தோன்றியது.,  கன்னத்தை முழுவதுமாக ஜன்னலில் சாய்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.,

       அவ்வப்போது அவளை திரும்பிப் பார்ப்பதை வேலையாக வைத்திருந்த ரஞ்சித்.,  ‘இவ ரொம்ப பயப்படுகிறாள்என்று தோன்றியது.,’சரி பார்ப்போம் எப்படியும் மாப்பிள்ளை பேசி முடித்தாள்., யார் என்ன என்று தெரியும் அல்லவா.,  அப்போது அந்தப் மாப்பிள்ளைக்கு இவளுடைய குணத்தை பற்றி வீட்டில் சொல்வார்கள் அல்லவா., புரிந்து கொள்வான்.,இவளும் கொஞ்சம் அவரோடு பேசி பழகிவிட்டால் சாதாரணம் ஆகி விடுவாள்‘., என்று தோன்றியது.

        மனதில் ஏற்பட்ட சிறு வலியை மறைத்துக் கொண்டு., அவள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தவிர அவனுக்கு வேறு எதுவும் இல்லை..

      கண்ணை மூடுவதும் திறப்பதுமாக அமர்ந்திருந்தவளோ.,  ‘என்னை விட ஆறு வயது மூத்தவன்.,  அவனுக்கு கல்யாணம் பண்ணலை., அவங்க வீட்டுல அவனுக்கு 29 வயசு ஆகுது ன்னு.,  பொண்ணு பார்க்கவா ஆரம்பிச்சிட்டாங்க., ம்ஹீம்23 வயசு சின்ன பிள்ளை., எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க‘., என்று அவளுக்கு அவளை சொல்லிக் கொண்டாள்.

     அவள் அவனை திரும்பி பார்க்க., அவன் அப்போது தான் நன்றாக சாய்ந்து சீட்டில் அமர்ந்தான்., ‘பையனா பொறந்திருக்கலாம்., ஜாலியா இருந்திருக்கலாம்‘., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

      ‘என்னால ஏன் அவனை மாதிரி ப்ரண்ட் இருக்க முடியல‘.,  என்று தோன்றியது.,

         அப்போது தன் மனதில் ஏற்பட்ட சலனத்தையும் நினைத்து வருத்தப் பட்டாள்.  ‘அவன் நார்மல் பிரெண்டா தான் இருக்கான்., அதனால தான் அவனால சாதாரணமா இருக்க முடியுது.,

       நான் ஏன் இப்படி இருக்கேன்., இனியும் நான் அப்படி இருக்கக்கூடாது., நான் ஸ்டடியா இருக்கணும்என்று நினைத்துக்கொண்டு அவனை பார்த்துக் கொண்டிருந்தவள்.,  மீண்டும் திரும்பி அமர்ந்து ஜன்னல் வழியே வேடிக்கை துவங்கினாள்..

      எவ்வளவு நேரமானாலும் விடியல் வரக்கூடிய தானே.,  சரியாக மதுரையில் வந்து இறங்கும் போது விடிய துவங்கியிருந்தது.,

       வந்து சேர்ந்தவுடன்குளிச்சிட்டு வரேன் அம்மா‘., என்று சொல்லி அறைக்கு சென்றுவிட்டாள்.

    சற்று நேரம் படுத்து இருந்தவள். பின்பு உற்சாகமாக மாற்றிக் கொண்டு குளித்து உடைமாற்றி கீழே வந்தவள்., எப்போதும் போல அம்மாவுடனும்.,  அண்ணங்களுடனும் பேசிக்கொண்டிருந்தாள்.,

       அப்போது தான் அவளுடைய அப்பா வந்தவர்., “என்னடா எப்ப வந்த“., என்று விசாரித்துக் கொண்டிருந்தார்.

            ஏனெனில் காலை நேரத்திலேயே ஏதோ முக்கிய வேலை என்று அவள் அப்பா வெளியே சென்றிருந்தார்.

      அவள் அண்ணன் தான் போய் அழைத்து வந்திருந்தான்., கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ப்பா என்று சொல்லி விட்டு அவள் அம்மா சுட சுட செய்து கொடுத்த., கார பணியாரம் இனிப்பு பணியாரம் சாப்பிட்டு கொண்டு அமர்ந்திருந்தாள்.

     காலையில் அவசர அவசரமாக குளித்து வந்ததற்கு காரணமே தன் முகவாட்டம் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காகத்தான்.,

     முடிந்த அளவு தன்னை உற்சாகமாக காட்டிக் கொண்டவள்., தந்தை சொன்னதற்கு பதிலளித்த படி வாயில் அவளுக்கு பிடித்த காரப் பணியாரத்தை சட்னி தொட்டு திணிக்க.,

     அவள் அண்ணனோ., “சாப்பாடு எங்கேயும்  ஓடிப் போகாது., மெதுவா சாப்பிடு“.,என்று சொன்னான்.

     அவளோ. “அது ஓடாது., பக்கத்தில் நீ இருக்க இல்ல.,  எடுத்துட்டனா“.,  என்று வாய்க்குள் வைத்துக் கொண்டே சொன்னாள்.,

     “சாப்பாடை யாரும் பிடுங்கி சாப்பிடமாட்டோம்., நிதானமாக சாப்பிடுஎன்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

       அவளும் சிரித்துக்கொண்டே அதன்பிறகு சாப்பிட்டாள் அருகில் அமர்ந்த அவள் தந்தையோ.,

      “நிஷமா அப்பா மேல எதுவும் வருத்தமா“., என்று கேட்டார்.

      “எதுக்குப்பா“., என்றாள்.

      “இல்ல திடீர் ன்னு அப்பா கல்யாணம் வைக்கிறேன், அப்படின்னு சொல்லி உனக்கு ஏதும் வருத்தமா.. சின்ன அண்ணன் கிட்ட வேற கேட்டியாம்.,  இப்ப எதுக்கு அவசரமா கல்யாணம்“., என்று சொன்னவுடன் அவனை முறைத்து பார்த்தாள்.

     “அப்படி எல்லாம் இல்ல., அதுக்குள்ள எதுக்கு கல்யாணம் பண்ணனும்.,  அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி அண்ணியெல்லாம் வந்ததுக்கு அப்புறம்.,  கொஞ்ச நாள் ஜாலியா இருந்துட்டு.,  நானும் நாத்தனார் கெத்தெல்லாம் காமிச்சுட்டு., அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறேன்“.,  என்று சொன்னாள்.

      அப்பாவும் அம்மாவும் சிரித்தபடிநீ எப்ப வேணாலும் நாத்தனாரு கெத்தோட  இருக்கலாம்.,  ஆனால் நல்ல பையன் நல்ல குடும்பம் கிடைக்கும் போது கல்யாணத்தை பண்ணிக்கோ., அப்புறமா உனக்கு நல்ல அண்ணியும் பார்த்து ரெடி பண்ணிடலாம்“.,என்று சொன்னார்கள்.,

    “எப்படியோ பண்ணுங்க., உங்க இஷ்டம்“., என்று சொன்னாள்.,

      “நிஜமா உனக்கு பிடிக்காத லைஃபை நாங்கள் தேர்ந்தெடுக்க மாட்டோம்.,  கண்டிப்பா மாப்பிள்ளையை உனக்கு பிடிக்கும்னு எங்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கு“.,என்று சொன்னார்கள்.

       “பாக்கலாம் பாக்கலாம்“., என்று சொல்லி விட்டு எழவும்.,  அம்மா அவள்  கையில் காபியை கொண்டு வந்து கொடுத்து., “குடிச்சிட்டு போய் கொஞ்சம் தூங்கு“., என்று சொன்னார்.

     “ஆமாம்மா நானே சொல்ல நெனச்சேன்.,எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் போல இருக்கு ன்னு“., என்று சொன்னாள்.

      “நல்லா தூங்கி எந்திரிடா., மத்தியானம் உனக்கு புடிச்ச பிரியாணி செய்து வைக்கிறேன்“., என்று சொன்னவுடன்.,

       “அம்மா கல்யாணம் பண்ணி அனுப்பினா., வீட்டுக்கே வர கூடாதுன்னு சொல்லிருவீங்களா., இப்பவே பிரியாணி எனக்கு புடிச்ச பணியாரமும் செய்து கொடுக்குறீங்க“., என்று சொன்னாள்.

      “நீ எப்பவும் வரலாம் டா.,எப்பவும் உனக்குப் போகத்தான் மத்தது எல்லாருக்கும்“., என்று அவள் அண்ணன் சொன்னான்.

     மனதை திடப்படுத்திக் கொண்டுஎது நடந்தாலும் நடக்கட்டும்., வீட்டினர் பாசத்தின் முன் மற்றவை எல்லாம் தூசுதான்“., என்று நினைத்துக் கொண்டு அமைதியாகி விட்டாள்.

        சாப்பிட்டுவிட்டு தன் அறைக்குச் சென்றவள்., படுக்க சற்று நேரத்தில் எல்லாம் உறங்கி போனாள்..,

    அறைக்கு வந்து எட்டிப் பார்த்த அவள் அம்மா.,அவள் தூங்குவதை கண்டு விட்டு அவளுக்கு ஏற்றார் போல ரூமை சாத்தி வைத்துவிட்டு.,  வெளிச்சம் வராத அளவுக்கு ஜன்னலில் உள்ள ஸ்கிரீன் எல்லாம் எடுத்து போட்டவர்., தன் மகளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

      ‘ உனக்கு புடிக்காத மாதிரி எதுவுமே நடக்காது‘., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே கீழே வந்தவர்.

       அதையே தன் கணவரிடமும் சொல்ல அவரும்அதனால தான் இப்படி அலைன்ஸ் பார்க்க தொடங்கியதும்.,   நம்ம பிள்ளேயை நல்ல பார்க்கிற மாதிரி வேணும் தானே தேடி தேடிப் பார்த்தோம்.,  பாரு இந்த இடம் எவ்வளவு நல்லா அமைந்திருக்கு ன்னுநம்மளே எதிர்பார்க்கல.,  நம்ம புள்ளைக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்கும்னு., வேணா பாரேன் சந்தோஷமா இருப்பா“., என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.

           அண்ணன்கள் இருவரும் சிரித்துக்கொண்டேஎல்லாம் நல்லபடியா நடக்கும் நம்புவோம்., முதல்ல அவங்க நாளைக்கு வரட்டும்., இவ என்ன சொல்றான்னு பார்ப்போம்., அவங்களுக்கு பிடிக்கும்.,  இவளுக்கு பிடிக்குமா., ரெண்டு பேருக்கும் புடிச்சிருந்தா தான்., அதுக்கப்புறம் பேச போறோம்“., என்று சொல்லி பேசிக்கொண்டிருந்தனர்.

அந்த வீட்டிற்கு கல்யாணக்களை வந்ததாக உணர்ந்தார் நிஷாவின் தந்தை.

கை நீட்டும் தூரத்தில்
கனவுகள் இருந்தும்
சில நேரம் கனவுகள்
பலிப்பதில்லை., 

கைக்கெட்டாத தூரத்தில்
இருந்தாலும்.,
சிலவை நம்மை நோக்கி
வரும் போது அவற்றையே
தன் கனவுகளாக
மாற்றிக்கொள்வது
நம் கையில் தான்.,

Advertisement