Advertisement

8

மூளையில் பலம் இருப்பவன் மௌனமாக இருந்தால் விவரம் இருக்கும்.

        நிஷா ரஞ்சித்தை பொருத்தவரை மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டாலும்., அதன் பிறகு அதை கண்டு கொள்ளாதது போலவே இருவரும் இருந்து கொண்டனர்.

       ஆனாலும் அவ்வப்போது ஒருவரை ஒருவர் உற்று கவனிக்க தொடங்கியிருந்தனர்.,

      ‘உண்மையில் தங்களுக்குள் அந்தளவுக்கு புரிதல் இருக்கிறதா‘., என்ற எண்ணம் இருந்தது.

       ‘நிஜமாகவே இருவரும் புரிதலுடன் நடந்து கொள்கிறோமா‘., என்று கவனித்துக் கொண்டாலும்.,

          இருவர் மனதில் அதிகமாக கட்டுப்பாட்டோடு மாறத் தொடங்கியிருந்தனர்.,

           ‘எந்த  சூழ்நிலையிலும் தங்கள் மனதில் தவறான எண்ணம் வந்து விடுமோ, என்று பயம் இருந்தது‘., மற்றவர்கள் பேச்சினாலும் ஒரு சில நேரங்களில் அவர்கள் அறியாமல் மனதில் சிறு சிறு சலனங்கள் உண்டானாலும்., இருவரும் அதை அழகாக  மறைத்துக்கொள்ள தொடங்கியிருந்தனர்.

           ரஞ்சித் க்கு அவளுடைய நடவடிக்கைகளில் இருந்த புரிதல் புரிந்தது., இவளுக்கு மே புரிதல் தெரிந்தது.,

             தான் ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்று தோன்றினாலும்.,

     தன்னால் அவனிடம் அப்படித்தான் பழக முடிகிறது என்பதை உணர்ந்த பிறகு அவளுக்கு கொஞ்சம் பயம் கொடுக்கத்தான் செய்தது.,

             ‘நாம் ஏன் இந்த அளவிற்கு அவனுக்காக விட்டுக் கொடுக்கிறோம்.,  அவனுக்கு பிடித்தது பிடிக்காதது.,  என்று ஏன் உணர்கிறோம்‘., என்று அவள் யோசித்தாலும்.,

             அது போலவே அவனும் யோசித்திருந்தான்., அவனுக்கோ அவள் பஸ்ஸில் பார்த்ததிலிருந்து அவளை சிறுபிள்ளை என்று தான் நினைத்து வைத்திருந்தான்., 

      போகப்போக மனதில் மாற்றம் வந்து இருக்குமோ.., என்ற எண்ணம் வந்தாலும் நிச்சயமாக இதனால் குடும்பத்திற்குள் பிரச்சினை வரக்கூடாது.,  என்ற எண்ணத்தோடு

          எப்படியும் நம் மனதில் இருக்க ஆசை யாருக்கும் தெரியப்போவதில்லை.,  மனதில் வந்த சிறு சலனம் யாருக்கும் தெரியப் போவதில்லை.., அப்படி இருக்கும் போது ஏன் வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும்., இதை  அமைதியாக கடந்து விடுவோம்., என்று நினைத்திருந்தான்.,

           அது போலவே ஒரு நாள் அலுவலகம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவளுக்கு., அன்று ஏஞ்சல் சற்று தாமதமாக வருவேன் என்று சொன்னதால்.,  சரி என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தவள்.,

    கதவை அடைத்து விட்டு ரெப்பிரஷ் செய்து கொண்டு தனக்கான ஒரு டீயை மட்டும் போட்டு குடித்தவள்., அப்படியே படுத்து விட்டாள்.

           மனதில் அனைத்தையும் ஓட்டி பார்த்தபடி இருந்தாள்., ‘சரி சலனங்கள் ஏற்படுவது எல்லோருக்கும் இயற்கை தான்., ஏன் டீன்ஏஜ் பெண்களில் இருந்து.,  இப்போது பெரியவர்கள் வரை ஏதேதோ மனதில் சலனங்கள்  உள்ளது.,

         அனைவருக்கும்  தனக்கு பிடித்தவர் பிடிக்காதவர்., வயது வித்தியாசமின்றி பிடிக்கும் பிடிக்காது‘., என்று எத்தனையோ பேர் பேசிக் கொள்கிறார்கள்.

        ‘அப்படி கூட இருக்கலாம்., அது மட்டுமல்லாமல் ரஞ்சித் எனக்கு நல்ல நண்பன்., என்னை முழுதாக புரிந்து வைத்துக் கொண்டவன்., நானும் அவனை முழுதாக புரிந்து வைத்திருக்கிறேன்.,

       புரிதல் உடைய நண்பர்கள் கிடைக்க சிறுவயதில் இருந்து தான் நண்பனாக  இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.,

           நட்பு என்பது மனம் திறந்து பேசிக்கொள்வது. ஒருவருக்காக ஒருவர் விட்டு கொடுத்து செல்வது.., இதெல்லாம் நட்பில் இருக்கக்கூடாதா.,

             ஏன் காதல்., திருமணம் இதில் மட்டும் தான் ஒருவருக்காக ஒருவர் விட்டு கொடுக்க வேண்டுமா., ஒருவருக்காக ஒருவர் அன்பு செலுத்த வேண்டுமா., ஏன் நட்பில இருக்கக்கூடாது‘., என்று நினைத்துக்கொண்டாள்.

       ஆனாலும் மனதில் தோன்றிய சிறு சலனத்தை மறைக்க படாதபாடு பட்டு போனாள்.,  ‘இனி இதைப் பற்றி யோசிக்க கூடாதுஎன்று மனதிற்குள் தெளிவாக முடிவெடுத்து கொண்டாள்.

         இருவரும் அறியவில்லை ஒருவருக்கொருவர் ஏற்பட்ட சலனத்தையும்.., ஒருவருக்கொருவர் ஏற்பட்ட மாற்றங்களை மறைத்து கொண்டதை பற்றியும்.,

          இப்படியே நாட்கள் கடந்து இருக்க கிட்டத்தட்ட இரண்டு மூன்று மாதங்கள் கழிந்திருந்தது.

      நிஷாவிற்கு வீட்டிலிருந்து அழைப்பு வந்தது., “எப்போது ஊருக்கு வருவஎன்றனர்.

         இப்பொழுதெல்லாம் அடிக்கடி ஊருக்குப் போவது இல்லை.,  மூன்று மாதத்திற்கு ஒரு தடவையோ.,  நான்கு மாதங்களுக்கு ஒரு தடவையோ., விடுப்பை சேர்த்து வைத்துக்கொண்டு இருவருமே பிளான் செய்து கொள்வது தான்.,

      ரஞ்சித்தும் நிஷாவும் லீவு சேர்த்து வைத்து அதன்படி இருவரும் விடுப்பு எடுத்துக் கொண்டு செல்வார்கள்., இந்த முறையும் இன்னும் ஒரு வாரத்தில் கிளம்பலாம் என்று நினைக்கும் போது தான் வீட்டிலிருந்து போன் வந்தது.,

       “இவளும் ஒரு வாரத்தில் வருவோம் ன்னு.,  நினைக்கிறோம் ம்மா., டிக்கெட் போட்டுட்டாங்களா ன்னு  ரஞ்சித் ட்ட  கேட்டு தான் சொல்லணும்., போட்டுருப்பாங்க நினைக்கிறேன்“., என்றாள்.

       “அப்ப. வருந்துருவ தானே“., என்றார் அம்மா.

         “வந்துடுவேன் ம்மா“., என்று சொன்னாள்.

         அதன்பின்புஏன் நிஷா உனக்கு வேலை கண்டிப்பா பார்க்கணுமா“., என்று கேட்டார்.

       “ஏன்மா வேண்டாமா“., என்று கேட்டவள்.,  “கொஞ்ச நாளைக்கு பார்க்கிறேனே“., என்று கேட்டாள்.

        “நீ முன்னாடி வேலைக்குப் போற ன்னு  சொல்லும் போதே., கல்யாணம் வரை  வேலை பாக்குறேன்., அப்புறம் வேலை பார்க்கல அப்படின்னு சொன்ன இல்ல“., என்று கேட்டார்.

       “இப்பவும்  அதையே தான் சொல்றேன்.,  கல்யாணத்துக்கு அப்புறம் வேலை பார்க்கனுமா., இல்லையா., ன்னு கல்யாணத்துக்கு அப்புறம் என்ன கட்டிக்க போறவர் ட்ட., கேட்டுக்கிறேன்., சரினா  போறேன்., இல்லன்னா வீட்டில் இருக்கேன்.,  அவ்வளவுதான்“., என்று சொன்னாள்.

     “சரி சரி அதை அப்புறம் பார்ப்போம்., உனக்கு அப்பா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க., மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இந்த வார கடைசியில் வருவாங்க., நீ வருவேன் சொன்னியே அதே டைம்ல ஊருக்கு வந்துரு.,  ரஞ்சித் அப்பாட்ட பேசி சொன்னாங்க போல., அவரும் ரஞ்சித் ட்ட பேசிட்டு இருப்பாரு.,  அதனால ரஞ்சித் கண்டிப்பா உன்ன கூட்டிட்டு வந்திடுவாங்க“.,  என்று சொன்னார்.

        “என்னது கல்யாணமா“.,  என்றாள்.

        “நீ என்ன இவ்வளவு அதிர்ச்சி ஆகுற.,  கல்யாணமா ன்னு கேட்குற“.,  என்று கேட்டாள்.,

        “இல்லம்மா.,  இப்பவே வேண்டாமே“.,  என்றாள்.

         “என்ன வர வர வயசு குறைவு நினைப்பா., நீ என்ன சின்ன புள்ளையா.,  உன் வயசுல உள்ள பிள்ளைகளுக்கெல்லாம் கல்யாணம் ஆயிடுச்சு.,  உன் கூட படிச்ச ஒருத்தி  ஒரு பிள்ளையோட இருக்கா., என்ன பேசுற நீ“.,  என்று அதட்டலாக பேசினார்.

       “இல்லமா இன்னும் கொஞ்சம் நாள் ன்னு தான் சொன்னேன்., கல்யாணமே வேண்டாம்னு சொல்லலையே“., என்று சொன்னாள்.

     நிஷாவின் அம்மாவும்சரி ஊருக்கு வா பாப்போம்., உனக்கு மாப்பிள்ளை புடிச்சிருந்தா தான் பேசவே செய்வோம்., வந்துட்டு போ“., என்று சொன்னார்.

       “சரி மாஎன்றவள்., அதற்கு மேல் பேசவில்லை, போனை வைத்து விட்டாள்.

       ஆனால் அவள் முகம் வாடி இருப்பதை பார்த்த ஏஞ்சல் தான்.,

         “என்னடி ஆச்சு“., என்று கேட்டாள்.

            “இல்ல வீட்ல மாப்பிள்ளை பார்க்குற  தா.,  அம்மா சொல்றாங்க“., என்று சொன்னாள்.

         எல்லோரும் இவ வாயிலிருந்து வேறு எதுவும் வருமா என்று எதிர் பார்க்க..,

     அவளோஇல்ல புதுசா ஒருத்தங்களைப் பார்த்த உடனே எப்படி புடிச்சிருக்கு.,  பிடிக்கலைன்னு சொல்ல முடியும்.., இவங்க வேற அவசரப்படுறாங்களே“.,  என்று சொன்னவள்.

       “சரி அண்ணா கிட்ட பேசணும்.,  அவங்க பேசினாலே போதும்.,  உடனே எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது., எப்படியாது கல்யாணத்தை கொஞ்சம் தள்ளிப் போட சொல்லலாம்“.,  என்று அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

     “ஏஞ்சலோ நெஜமா தான் சொல்றியா“., என்று கேட்டாள்.

        “ஆமா வீட்ல அம்மா கிட்ட அப்பா சொல்லிட்டாங்க.,  என்னால பதில் சொல்ல முடியாது., நான் ஏற்கனவே எங்க வீட்ல சொல்லி இருந்தது தான்., அதனால அவங்க காட்டுற மாப்பிள்ளை நான் கல்யாணம் பண்ணித்தான் ஆகணும்“.,  என்று சொன்னாள்.

       மனதிற்குள் ஏற்பட்ட சிறு வலியை மறைத்துக் கொண்டு எப்போதும் போல இரவு ரஞ்சித் போன் செய்ய ரஞ்சித் வாயை திறந்து எதுவும் கேட்க வில்லை.,  ஏனென்றால் நிஷாவின் அப்பாவேதம்பி இந்த தடவை அவள கூட்டிட்டு வந்துடுங்க உங்களுக்கு ஏதும் வேலை இருக்கா“.,  என்று கேட்டிருந்தார்.

         “இல்ல அங்க ஏற்கனவே இந்த வாரம்  கிளம்புற தா இருந்துச்சு“., என்று சொன்னார்.

       ” இல்ல அவளுக்கு மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்கோம்., இந்த வாரம் ஒரு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணு பார்க்க வர்றதா இருக்காங்க“., என்று சொல்லவும்., இவனும் தான் என்ன சொல்லுவான்.,

     “ஒஒ., அவளுக்கு தெரியுமா“., என்றான்.

       “அவங்க அம்மா சொல்லி இருப்பாங்க“., என்று சொன்னார்.

      அதை யோசித்தபடியே இவளுக்கு அழைத்தவன்., “என்ன நிஷா., என்ன செய்ற சாப்பிட்டாச்சா., தூங்க போறியா.,  ஒர்க் இருக்கா“.,  என்று எப்போதும் கேட்கும் கேள்விகளை கேட்டான்.

          அவள் வாயிலிருந்து வரட்டும் என்று எதிர்பார்த்திருந்தான்.,

       அவளும் அது போலரஞ்சித் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்“., என்றாள்.,

     “என்ன சொல்லு“.,என்றான்.

      “இல்ல இன்னைக்கு அம்மா பேசினாங்க“., என்று சொல்லி விஷயத்தை சொன்னாள்.,

      “சரி அதுக்கு என்ன இப்போ“.,  என்று கேட்டான்.

     “இல்ல ஊருக்கு வர சொல்றாங்க., எனக்கு ஒரே டென்ஷனா இருக்கு., பட படப்பா இருக்கு., என்ன பண்ண ன்னு தெரியல.,

     எனக்கு கல்யாணம் அப்படிங்கறத வந்து நான் யோசிக்கல., இன்னும் அதுக்கான மைண்ட் செட் வரல.,  உங்களுக்கு புரியுதா நான் சொல்றது., அவங்க கிட்ட எப்படி பழகுவது., அப்படின்னு கூட எனக்கு தெரியாது., உடனே ஒருத்தங்களை பார்த்த உடனே எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது.,  அந்த காலத்துல உள்ளது  மாதிரியே பண்றாங்க.,

         நான் இன்னைக்கு அண்ணன் ட்ட பேசணும்னு நினைச்சிருக்கேன்., இப்போ உன்கிட்ட பேசிட்டு., அண்ணாட்ட பேசியே ஆகணும்“., என்று சொன்னாள்.

      “சரி நீ பேசு“., என்று சொன்னவன்சரி அதுக்கு எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற., ஒரு மாதிரி இப்படி படபடப்போட பேசுற., கொஞ்சம் நிதானமா பேசு.,  ஒன்னும் இல்ல ரிலாக்ஸ்டா இரு., உங்க வீட்ல யாரும் உன்னோட விருப்பத்துக்கு விரோதமாக உன்னை கட்டாயப்படுத்த போறது இல்ல., அப்புறம் எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற“., என்று சொன்னவன்.., அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு போனை வைத்தான்.

            மனதிற்குள் சிறு சுணக்கம் வந்தாலும்., ‘இல்லை இது தான் இறுதி முடிவு.,  இரண்டு குடும்பங்களுக்கான நல்ல நட்பு இதை கெடுக்கக் கூடாது., அது மட்டுமல்லாமல் அவளுடைய வாழ்க்கையை எப்படி அமைக்க வேண்டும் என்று அவளுடைய பெற்றோருக்கும் அவளுடைய உடன் பிறந்தவர்களுக்கும் கனவு இருக்கும்.,

        அதுமட்டுமல்லாமல் அவள் இதுவரை தன்னை பிடித்திருப்பதாக எப்போதும் சொல்லவில்லை., அப்படி இருக்கும் போது நானும் அவளிடம் எதுவும் சொல்லவில்லை., இருவரும் இதுவரை நட்பு என்ற இடத்தில் தான் இருக்கிறோம்.,  அதை தாண்ட வேண்டும் என்று நினைத்ததில்லை.., என் மனதில் சிறு சலனம் வந்தாலும் நான் அவளிடம் என் சலனத்தை காட்டிக் கொண்டதில்லை.,

        அவள் சாதாரணமாக இருக்கும் போது., நானும் சாதாரணமாக தானே இருக்க வேண்டும்‘., என்று நினைத்துக் கொண்டான்.

     அங்கு தன் அண்ணனிடம் பேச., அவள் அண்ணனும்அதெல்லாம் நீ வந்து பாரு.,  நீ பேசு உனக்கு புடிச்சி ஓகே சொன்னா தான் கல்யாணம்.,  பிடிக்கலைன்னா வேற மாப்பிள்ளை பார்ப்போம்.,  எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற.,

     வீட்ல பெரியவங்க ஜாதகம் பாக்குறாங்க., மத்ததெல்லாம் பார்த்தாலும் ஒன்னும் அப்படி எல்லாம் விட மாட்டோம் பயப்படாத சரியா.,  உனக்கு பிடிக்காத எதுவும் நடக்காது தைரியமா இரு“.,  என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

       ஏற்கனவேஅவள் மூத்த அண்ணனுக்கு இப்போது  திருமணத்திற்கு பார்க்கத் தொடங்கி விட்டனர்., அதற்கு முன் இவளுக்கு முடித்து விட்டு அதன் பிறகு மூத்த அண்ணனுக்கு முடிக்க வேண்டும் என்ற அப்பா அம்மாவின் நினைப்பிற்காக தான் இப்போது இந்தத் திருமணம்என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

     சின்ன அண்ணன் சொன்ன பிறகு., ‘சரி நம்மை மீறி நிச்சயமாக நடக்காதுஎன்ற எண்ணத்தோடு அமைதியாகி கொண்டாள்.

         ஆனாலும் மனதிற்குள்தன் சலனத்தை மறைத்துக் கொண்டவளுக்கு., தனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு சலனம் வந்தது.,  ரஞ்சித் நல்ல நட்போடு சாதாரணமாக தானே பழகுகிறார்., நான் மட்டும் ஏன் இப்படி மனதிற்குள் குழம்பி போனேன்என்று தன் மனதை தேற்றிக் கொண்டவள்.

         “இல்லை நான் என் சலனத்தை இதுவரை வெளியே யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை., என் தோழிகளிடம் கூட காட்டிக் கொள்ளவில்லை.,  இதை இப்படியே கடைசி வரை தொடர வேண்டும்., அது மட்டுமில்லாமல்  நான் என்ன டீன்ஏஜ் பிள்ளையை போல பார்த்ததும் பிடிச்சி இருக்கு ன்னு சொல்றதுக்கு., இவங்க என்னோட நல்ல பிரெண்ட்.,

       இந்த பிள்ளைங்க எல்லாம் சேர்ந்து இப்படியா அப்படியா என்று கேட்கப் போய் மனசுக்குள்ள சின்னதா மாற்றம் வந்திருக்கு., மத்தபடி ஒன்னும் இல்ல.,  நான் அப்படியே தான் இருக்கேன்.., என் மனசுகுள்ள எதுவும் தப்பான எண்ணம் இல்லை‘., என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு.,  தன் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை ஏற்க தயாராக இருந்தாள்.

        வாழ்க்கையில் பல எதிர்பாராத திருப்பங்கள் நமக்காக காத்திருக்கும்.,  ஆனால் திருப்பங்கள் சில நேரம் பரிசையும்.,  சில நேரம்  முட்களையும் பரிசளிக்க காத்திருக்கும்.,

       எது வந்தாலும் பக்குவமாக கையாள தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை வரம் தான்.,  இதை அவள் நிஷாவும் புரிந்து கொண்டாள்  வாழ்க்கை வளமாக அமையும்.

பாதுகாக்க நீ இருப்பாய்
என்றே எண்ணினேன்,
ஆனால் நட்பை நட்பாகவே
நீ தொடர.,
சலனத்தை மனதில்
விளைவித்த விதிக்கு
என்ன சொல்வது..,

Advertisement