Advertisement

7

        நீங்கள் நீங்களாக இருங்கள். முகமூடி அணியாதீர்கள்.

         ஊரிலிருந்து வந்த பிறகு எப்போதும் போல ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தாள்., வேலை., சாப்பாடு., உறக்கம்., நண்பர்களோடு சுற்றுவது என  இருந்தனர்.

      எப்போதும்  போல அந்த வீக் என்டில் நண்பர்கள் தோழிகளோடு அனைவரும் மாலுக்கு செல்ல முடிவெடுத்து இருந்தனர்.

        ஏற்கனவே வெளிவந்திருந்த ஒரு படத்திற்காக டிக்கெட் புக் செய்து இருந்தனர்.,  எனவே அனைவரும் படத்திற்கு சென்றனர். தோழிகளுக்கு அடுத்தாற் போல நிஷா அமர., நிஷாவிற்கு அடுத்து ரஞ்சித் அமர்ந்தான்., அதன் பிறகு அவனுடைய நண்பர்கள் இருவரும் அமர்ந்தனர்.,

            அனைவரும் பேசியபடி படத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்து மதிய உணவை உண்டு விட்டு கிளம்பலாம் எனும் போது..,

      அவள் ரஞ்சித் ன் காது அருகில் சென்று ஏதோ சொல்ல., அவள் கண் சுருக்கி கெஞ்ச.,

      அவனோஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க., இப்ப வந்துடுவோம்“., என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.,

     அவள் ஏதோ பொருள் வாங்க வேண்டும் என்று சொல்ல அதற்கு கூரிய கடைக்கு அழைத்துச் சென்றவன்., அவள் வாங்கும் வரை காத்திருந்து., அவளுக்கு பிடித்தது போல் செலக்ட் செய்ய உதவிக் கொண்டிருந்தான்.,

          ஒரு தோழியின் பிறந்த நாள் வருவதால் அதை அவனிடம் ஏற்கனவே சொல்லி இருந்தால்., அவளுக்கு நல்ல சிறப்பான பரிசு வாங்கி கொடுக்க வேண்டுமென்று சொல்லியிருந்தாள்.,

      அதுமட்டுமல்லாமல் ஒரு தோழிக்கு கல்யாணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.,  அவளோடு ஒரே டீம் ல் இருப்பவள்., இப்போது தான் ஒரு வாரத்திற்கு  முன்பு திருமணம் நிச்சயக்கப்பட்டு இருக்க அதற்காக அவளுக்கு ஒரு கிஃப்ட் வாங்க வேண்டும்., என்று சொல்லியிருந்தால் இதை தோழிகளோடு பகிர முடியாது அல்லவா.., அதனால் அவனை அழைத்துக்கொண்டு கடைக்கு சென்று அவர்களுக்கு தேவையானது எல்லாம் வாங்கிக் கொண்டிருந்தாள்.

           இங்கோ அவன் நண்பர்களும்.,  அவளுடைய தோழிகளும்., ஆளுக்கு ஒருபுறமாக அமர்ந்து இருந்தாலும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.,

        பின் சற்று நேரத்தில் அவனின் நண்பன் ஒருவன்கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே“.,  என்று அவள் தோழிகளிடம் கேட்டான்.,

        “என்ன விஷயம் கேளுங்க“., என்றனர் அவளின் தோழிகள்.,

       “தப்பா நினைக்க மாட்டீங்க இல்ல.,  இந்த விஷயம் என் மனசுல பட்டுச்சு.,  அதனால் தான் கேட்கிறேன்.., ஒருவேளை நான் கேக்குறது தப்பு அப்படின்னா என்ட்ட சொல்லிருங்க., ஆனா இத நீங்க ரஞ்சித் நிஷா ட்ட கேட்க கூடாது“.,  என்று சொன்னான்.

       “இல்ல நாங்க கேட்க மாட்டோம் .,  நீங்க சொல்லுங்க“., என்று தோழிகள் சேர்ந்தார் போல் சொன்னார்கள்.

         “இல்ல ரஞ்சித் நிஷாவும் லவ் பண்றாங்களா., இல்ல நிஜமாவே ஃப்ரண்ட் தானா“.,  என்று கேட்டவன்இல்ல சும்மா ஜஸ்ட் பார்த்தோம் பழகுறோம் அப்படிங்கற மாதிரி இருக்காங்களா., உங்களுக்கு என்ன தோணுது“.,  என்று கேட்டனர்.

         தோழிகள் மூவரும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள.., “என்னஎன்று மற்றொரு நண்பன் கேட்டான்.,

       ” அது உங்களுக்கு மட்டும் டவுட்டா இல்ல.,  உங்க ரெண்டு பேருக்கும் இந்த மாதிரி தோணுதா“., என்று தோழிகள் கேட்டனர்.

       “இல்ல எங்க ரெண்டு பேருக்கும் இது அடிக்கடி தோன்றுவது தான்.,ஆனா இத ரஞ்சித் ட்ட நாங்க கேட்டது இல்லை., ஒரு வேளை வெறும் ப்ரண்ட் மட்டும் தான் னா., அப்புறம் எங்கட்ட ரொம்ப கோபத்தை காட்டிருவான்.,  அதனால தான் நாங்க அவன் கிட்ட இது பத்தி பேசுறது கிடையாது..,

       உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா அதுக்கு தான் கேட்டேன்., என்ன பொண்ணுங்களுக்குள்ள பிரண்ட்ஷிப்   ஒளிவு மறைவு இல்லாம பேசுவீங்க அப்படின்னு சொல்லுவாங்க.., பசங்க வந்து எவ்வளவு தான் நல்ல ஃப்ரெண்ட்ஷிப் இருந்தாலும்.., சொல்ல வேண்டிய விஷயத்தை தான் சொல்லுவாங்க.., எல்லா விஷயத்தையும் சொல்ல மாட்டாங்க இல்லையா.,  அதனால தான்., என்று இருவரும் மாற்றி மாற்றி சொன்னார்கள்.

      தோழிகள் மூவரும் சேர்ந்து எங்களுக்கும் இதை டவுட்டு தான்., ஆனா நிஷா அதை பற்றி ஆனால் எங்க ட்ட இது வரைக்கும் எதுவும் பேசினது இல்லை., என்றனர்.

        “ஆனால் இரண்டு பேருக்கும் செம அன்டர்ஸ்டன்டிங் இல்ல“.,என்றனர் நண்பர்கள்.

      “அதனால தான் எங்களால இதை எல்லாம் வெளிப்படையா இதைப் பற்றி கேட்க கூட முடியல.,  ஏன்னா இவளுக்கு என்ன பிடிக்கும்னு ரஞ்சித் ண்ணாக்கு தெரியுது., ரஞ்சித் ண்ணாக்கு என்ன பிடிக்கும்., என்ன பிடிக்காது., இவ என்ன செஞ்சா கோபப்படுவாங்க என்ற வரைக்கும்  இவளுக்கு தெரியுது.,

         இவ என்ன பண்ணுவா என்னென்ன வேலையை எல்லாம் பார்ப்பா., எது எதுக்கெல்லாம் ரஞ்சித் ண்ணாவை  கூப்பிடுவா ன்னு., அவங்களுக்கு தெரியுது., ஆனா இவங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிறது பிரெண்ட்ஷிப் மட்டும் தானா அப்படி ன்னு., இப்ப வரைக்கும் தெரியல.,  இதுவரைக்கும் நாங்க  கேட்கல.,

    ஆனால் கேக்குறதுக்கு ஒரே யோசனையா இருக்கு., ஒருவேளை உண்மையிலேயே அவங்க பிரண்டா பழகிட்டு இருந்தாங்க னா., அவங்கள  நாம கேக்குற நாளுக்கு அப்புறம் அவங்க வந்து அவங்களோட மனசை மாத்திக்க கூடாதுன்னு..,

           இன்னொன்னு வந்து அவங்க ஃபேமிலி லேவே ரெண்டு பேமிலியுமே நல்லா க்ளோஸ் பழக  ஆரம்பிச்சிருக்காங்க.., 

        இந்த நேரத்துல போய் லவ் பண்ணி எதுவும் உண்மையிலேயே வந்து ., அவங்க ரெண்டு பேரும் வீட்டில் சொல்லி.,  வீட்டுக்குள்ள பிரச்சினையாகி.., இரண்டு ஃபேமிலிய பிரிச்ச மாதிரி ஆகிருமே அப்படிங்கறது ஒரு யோசனை தான்.,  வேற ஒன்னும் இல்ல“., என்று தோழிகள் சொன்னார்கள்.

          அவன் நண்பர்களும்ஆமா எங்க கிட்டயும் சொன்னான்., ஒவ்வொரு முறையும்  ஊருக்கு போகும் போது நிஷா வீட்டுக்கு போயிட்டு வருவான்., அவன் வீட்டுக்கு நிஷா போயிட்டு வருவதும் அவங்க அண்ணன் அல்லது அப்பா  நிஷாவை அங்க கூட்டிட்டு போறது எல்லாமே., அதே மாதிரி பஸ் ஸ்டாப்பில் கொண்டு வந்து இவங்கிட்ட ஒப்படைக்கிற வரைக்கும்., அவன் அப்பா அண்ணா யாராவது வருவாங்க.,

        அவங்க வீட்ல முழுசா நம்புறாங்க.,  இவங்களும் அந்த நம்பிக்கையைக் கெடுத்துக்க கூடாது ன்னு  நினைப்பாங்க.,

       அதே நேரத்தில் நாமளா அவங்க மனசுல  ஆசையைத் விதைச்சு விட்ட மாதிரி ஆகிற கூடாது.,  அதனால் தான் நாங்களும் கேட்குறோம்.,

         இரண்டு குடும்பமும் நல்ல பழகிட்டு இருக்க இடத்துல., இவங்களால  ஒரு பிரச்சினை வந்து எதுவும் குடும்பத்துக்குள்ள பிரச்சினைன்னா அதைவிட கில்ட்டி பீலிங் நமக்கு எதுவுமே இருக்காது.., அதனால் தான் நாங்களும் கேட்கிறது இல்லை“.,  என்று நண்பர்கள் இருவரும் சொன்னார்கள்.

         இவர்களும் அதை ஆமோதிப்பது போல தலையாட்டிக் கொண்டிருந்தனர்.,  அதே நேரம் இருவரும் ஷாப்பிங் முடித்து வர., ஐவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி,

       “இதோ பாருங்க.,  அவளுக்கு என்ன வேண்டுமோ அதை அவங்களை கூட்டிட்டு போய் தான் வாங்குவா.,  நாங்க இத்தனை பேரு இருக்கோம்.,  எங்கள கூப்பிடல சரி.,  எங்க கூட வேணாம்.,  உங்க கூட நல்ல அண்ணா அண்ணா ன்னு பழகுறா தானே., உங்களையும்  வாங்க போகலாம் அப்படி ன்னு கூப்பிடலை., ஏன் இவங்க இரண்டு பேரும் தனியா தான் போகனுமா., ஏன் எல்லாம் சேர்ந்து போன போய் வாங்க முடியாதா., இல்லை எங்களை சேர்த்து கூட்டிட்டு போனா வாங்க முடியாதா பாருங்க“., என்று சொன்னார்கள்.

     “ஆமா ஆமா எங்களுக்கும் சந்தேகம் இருக்கு., ஆனா இதை எப்படிக் கேட்கறதுன்னு தெரியல., சரி பார்ப்போம் என்னைக்காவது டைம் கிடைச்சா நீங்களும் மெதுவா கேட்டு பாருங்க..,  நானும் மெதுவா பிட்ட போட்டு பார்க்கிறோம்., ஒருவேளை இல்லைன்னு சொல்லிட்டாங்க னா அதற்கு மேல் அதைப்பற்றி பேச வேண்டாம்.,

         ஒருவேளை ஆமா ன்னு சொன்னாங்கன்னா., நாம தான் இறங்கி ஹெல்ப் பண்ணனும்.,  ஏன்னா இவங்க கூட சுத்திக்கிட்டு இருக்குறது நம்ம அஞ்சு பேர் தான்.,இருந்தாலும் நம்மளால முடிஞ்சது பார்ப்போம்., என்று சொன்னார்கள்.,

     தோழிகளும் சரி என்று சொல்லிக் கொண்டனர்., ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.

        கிப்ட் பேக் எல்லாம் எடுத்துக்கொண்டு தோழிகளோடு தங்கள் அறைக்கு சென்றாள் நிஷா.,  நாளை கொடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தவளிடம்.,

        ரஞ்சித் தான்இல்ல வீட்டுக்கு போன உடனே எல்லாத்தையும் கொடுத்துடு“.,  என்று சொன்னான்.

          அவளும் சரி என்று கேட்டுக் கொண்டாள்.,  இப்போது அனைவரும் சேர்ந்து வீட்டிற்கு வந்தனர்.,  எப்படியும் மற்ற இரண்டு தோழிகளும் அவர்கள் அறைக்கு செல்ல மாலை ஆகும் என்பதால் அவர்கள் கையில் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டாள்.,

          “உங்களுக்காக தாண்டி போனேன்“., என்று சொன்னாள்.

        தோழிகளோ.,  நமக்காக வாங்க  எப்படி நம்மள கூட்டிட்டு போவா“., என்று யோசித்து கொண்டனர்.,

     அவள் தன்னை ரெப்ரெஷ் செய்து கொள்ள பாத்ரூமுக்குள் சென்ற பிறகு தோழிகள் மூவரும்தப்பா நினைச்சிட்டோம்என்று பேசிக்கொண்டனர்.

      ஆனாலும் சில பல நடவடிக்கைகள் அவர்களுக்கு அதே சந்தேகத்தை திரும்பவும் விதைத்தது.,

         இவளிடம் என்றாவது கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டனர்.,

        இப்படியே ஒரு வாரம் சென்றிருக்க அந்த வாரம் வெளியே எங்கும் போகவில்லை., அவன் நண்பர்களோடு வெளியே சென்றிருந்தான்.,

       இவள் தோழிகளோடு வீட்டிலேயே இருந்தாள்., வேலை சற்று அதிகம் இருந்தததால் லேப்டாப்பில் முழ்கி போய் பார்த்துக் கொண்டிருந்தாள்.,

         நிஷா தான்ஒரு பிரேக் எடுத்துக்கலாம்., டீ குடிச்சிட்டு வந்து ஒர்க் ஆரம்பிப்போமாஎன்று சொன்னாள்.

        “சரி“., என்று சொல்லி எழுந்து சென்றனர்.

          டீ போட்டு அவர்களுக்கான டீ கப்பை எடுத்துக் கொண்டு வந்தனர்., மற்ற இரண்டு தோழிகளுக்கும் சேர்த்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.,

            அனைவரும் சென்று ஒன்றாய் அமர.,  வீட்டில் இருந்து கொண்டு வந்த முறுக்கை நொறுக்கியப் படி பேசிக் கொண்டிருந்தனர்.,

        அப்போது ஏஞ்சல் தான்உன்கிட்ட ஒன்னு கேட்பேன்., தப்பா நினைக்க மாட்டியே“., என்று கேட்டாள்.

       “இல்ல“., என்றாள்.

         “நாங்க நினைக்கிறது தப்பு னா சொல்லி இரு.,  தப்பு இல்லனா ஆமா னா ஒத்துக்கோ“., என்று சொன்னாள்.,

          “பீடிகை எல்லாம் பலமா இருக்கு., என்ன கேட்க போறீங்க“., என்றாள்.

      சற்று நேரம் அமைதியாக இருந்தவள்.,  “இல்ல ரஞ்சித் ண்ணாவும்.,  நீயும் நெஜமாவே பிரண்ட்சா தான் இருக்கீங்களா“.,  என்று கேட்டாள்.

        “ஏன் என்ன ஆச்சு., நாங்க எப்பவும் போல தான் இருக்கிறோம்என்று சொன்னாள்.

        “இல்ல உனக்கு ரஞ்சித் அண்ணா பத்தி தெளிவா தெரியுது., அவங்க எதுக்கு கோபப்படுவாங்க.,  எதுக்கு உன்னை இப்படித்தான் இருக்கணும் கட்டாயப்படுத்துவாங்க., அது எல்லாம் தெரியுது.,

      அதே மாதிரி ரஞ்சித் அண்ணாக்கும் நீ என்னென்ன கோல்மால் பண்ணுவ., எங்க எங்க பயப்படுவ., எங்க எங்க சண்டை போடுவா., எங்க எங்க பதிலுக்கு பதில் பேச்சு பேசுவ வரைக்கும் எல்லாம் தெரிஞ்சு இருக்கு..,

        அதே மாதிரி பாரேன் போனவாரம் எல்லாரும் சேர்ந்து தான் படத்துக்கு போயிருந்தோம்., ஏன் கரெக்டா நீ உட்கார்ந்த அப்புறம் ரஞ்சித் அண்ணா உன் பக்கமே  உட்கார்ந்தாங்க.,  ஏன் அலங்க பிரண்ட் யாராவது உட்கார்ந்து இருக்கலாமே., இல்லை னா   மாறி உட்கார சொல்லி இருக்கலாமே.,  ஏன்“..,  என்று கேட்டாள்.

         ” லூசாடி நீ எல்லாம்“., என்றவள் அவங்க கூட நான் பைக்ல  வெளியே போறேன் வர்றேன்.,  ஊருக்கு போனா ஒரே சீட்ல தான் உட்கார்ந்து போறோம்.,  டிரெயின்ல போனா மட்டும் தான் வேற வேற.. அதுவும் இந்த தடவை யெல்லாம் பஸ்ஸில் தான் போனோம் பக்கத்து பக்கத்து சீட்டுல உக்காந்து தான் போறோம்.,  எனக்கு அவங்க பக்கத்துல உட்கார்ந்து இருப்பது எதுவும் தோன்றாது.,  அதனால உட்கார்ந்தேன்., உங்களை உட்கார சொன்னா., நீங்க ஏதும் தப்பா நினைப்பீங்களோ ன்னு., உங்களுக்காக தான் நான் உட்கார்ந்தேன்.,  இதுல என்ன இருக்கு“.., என்று சாதாரணமாக கேட்டாள்.

      “இல்ல ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் எல்லா விஷயமும் புரிஞ்சு வச்சிருக்கீங்க.,  ஏன் உன்னோட படிப்பு விஷயம் ஆகட்டும்., நீ சமைக்கிறது ஆகட்டும்.,  நீ ஊர்ல போய் பேசுற பேச்சா ஆகட்டும்.., எல்லாமே ரஞ்சித் அண்ணாக்கு தெரிஞ்சிருக்கு., அதனால தான் நாங்க கேட்டோம்“.,என்று சொன்னாள்.

       “அப்படியா ரஞ்சித்துக்கு என்ன பத்தி எல்லாம் தெரியுமா“.,  என்று யோசனையோடு கேட்டுக் கொண்டிருந்தாள் நிஷா.

       ஏஞ்சலோஇல்லடி ஜஸ்ட் ஒரு சந்தேகத்தில் தான் கேட்டேன்., மத்தபடி அப்படி இல்லன்னா அது பத்தி ஒன்னும் இல்ல..,  அப்படி இருந்தாலும் எங்க கிட்ட சொல்லிரு“., என்று சொன்னாள்.

      அவர்களை பார்த்துக் கொண்டிருந்தவள்., “வேற வேலை இல்ல போங்க“., என்று சொல்லி விட்டு லேப்டாப்பில் தன் வேலையில் மூழ்க தொடங்கினாலும்., இடையிடையே அவள் மனமும்ரஞ்சித்துக்கு என்ன பத்தி எல்லாம் தெரியுமா.,  என்னை அந்தளவுக்கு புரிஞ்சு வச்சிருக்கீங்களா.,  நான் தான் அவங்களை புரிஞ்சுக்கலை போலஎன்று  மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.

      அவள் அவனுக்கு மேலாக அவனைப் பற்றிய விஷயங்களில் தெளிவாக இருந்தால் என்பது அவளுக்குப் புரியவில்லை.

         அதே நாளில் மாலில் வைத்து இதுபோலவே நண்பர்கள் கேட்டனர். ஒரு நிமிடம் திணறியவன்., “அது சின்ன பொண்ணுடா என்ன பேசுறீங்க.,அந்த பொண்ணு காதுல விழுந்துச்சி னா., அதுக்கு பின்ன என்கிட்ட பேச கூட செய்யாது.., அறிவு கெட்ட தனமாக பேசாதீங்க“., என்று அதட்டியவன்., “போங்கடா நீங்களும் உங்க கெஸ்ஸிங் கும்“., என்று சொல்லிக்கொண்டான்.

    ” இல்லடா அந்த பொண்ண பத்தி நீ அந்த அளவு புரிஞ்சு வச்சிருக்க., உன்னை பத்தி அவ நல்லா புரிஞ்சு வச்சிருக்கா.,  நீ  கோவமா பார்த்தாலே வந்து உன்னை சமாதான நிலைமைக்கு கொண்டு வர்ற மாதிரி பேசுவா..,  எப்ப கோபப்படுவ., நீ எப்ப நார்மலா இருப்ப..,  நீ எதை கேட்டா கோபப்படுவ.,  நீ எதை கேட்டா கோவப்பட மாட்ட., நீ எப்படி அவள பாத்துக்குற.,  உனக்கு என்னென்ன தெரியும்.., என்னென்ன தெரியாது அப்படிங்கற வரைக்கும்.,   அந்த பொண்ணுக்கு தெரியும்.,

       உன் கூடவே இருக்கிற பிரண்ட்ஸ் எங்களுக்கு தெரிவதை விட அந்த பொண்ணுக்கு அதிகம் தெரிஞ்சிருக்கு.,  அதனால தான் கேட்டோம்“., என்று சொன்னார்கள்.

       “டேய் உங்களுக்கு பொறாமை டா“., என்று சொன்னவன்., “போங்கடா நீங்களும் உங்கள் சந்தேகங்களும்“., என்று சொல்லி விட்டு ஆர்டர் செய்த உணவு வகைகளை சாப்பிட தொடங்கினான்.

         சாப்பாடு சாப்பாடாக இருந்தாலும் மனம் முழுவதும்அவளை நான் அந்த அளவு புரிந்து வைத்திருக்கிறேனா.,  அவளும் என்னைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறாளா‘., என்ற எண்ணம் தோன்றஅது சின்ன பொண்ணு‘., இவனுக  சொன்னா.,நானும் எப்படி  யோசிக்கிறேன் பாருஎன்று நினைத்தவன்.,

         ‘எவ்வளவு நல்ல குடும்ப நண்பர்களாக பழகி கொண்டிருக்கிறோம்., சிறிய ஒரு வார்த்தையோ.,செயலோ தங்கள் குடும்பத்தையே பிரித்து விடும்‘., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

அவனுக்கு தெரியவில்லை அவளுக்காக தான் எந்த அளவுக்கு மாறி இருக்கிறோம் என்று., தனக்காக அவள் எந்த அளவுக்கு தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறாள்  என்று., புரிந்து கொள்ளாத உறவுகளில் புதுமை என்பதே கிடையாது.

    நிஜங்கள் என்பது நிழல் போல       
    எப்போதாவது தான்
    கண்ணுக்குப் புலப்படும்.,
    நீயே நிஜமும் நிழலும்
    என மாறி மாறி தெரிய.,
    என்ன செய்வேன்..,

Advertisement