Advertisement

முகமெல்லாம் வாடி போய் இருந்தது., சற்று நேரத்தில் ஏஞ்சல் தான் அவள் முகம் வாடுவது பொறுக்காமல் ரஞ்சித்துக்கு அழைத்தவள்., அவளின் நிலையை சொன்னாள்.

அந்தப்புறம் சிரித்த ரஞ்சித் “அவளுக்கு வேற வேலையே இல்ல., நேத்து நான் உங்ககிட்ட பேசினத சும்மா லைட்டா கோடு போட்டு காட்டுங்க., ஃபுல்லா பேசினது எல்லாம் சொல்ல வேண்டாம்.,  சும்மா அவ போன் ஸ்விட்ச் ஆஃப் ல இருக்கு ன்னு சொல்லி.,உங்களுக்கு கூப்பிட்ட மாதிரி சொல்லுங்க.,  வேற எதுவும் சொல்லிடாதீங்க”., என்று சொன்னாள்.

அவளும் “சரி நான் சொல்லிக்கிறேன்” என்று சொல்லி விட்டு போனை வைத்தவள்.

“என்னடி வா., சாப்பிட போலாம்”., என்று சொன்னாள்.

“பசியே இல்லை”., என்று முகம் வாட கூறினாள்.

பார்த்தவுடன் சிரிப்பு தான் வந்தது.,  ‘இதுக்கு எதுக்கு நேத்து போனை ஆஃப் பண்ணி போடணும்., மூஞ்ச காட்டணும்., இன்னைக்கு கிடந்து இப்படி உட்காரனும்‘.,  என்று நினைத்துக் கொண்டவள்.

        ‘உண்மையிலேயே இது வெறும் பிரெண்ட்ஷிப் தானா., இல்ல வேற எதுவுமாஎன்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.,

          அங்கு அவன் நண்பனிடம்அவ இப்படி இருக்கலாம்“., என்று சொல்லி ஏஞ்சல் சொன்னதை சொல்ல., அவனும் நினைத்தது போலவே நினைத்துக் கொண்டான்.,

         ‘இரண்டும் உண்மையிலேயே பிரெண்டா தான் இருக்குதா இல்ல வேற எதுவும் போய்கிட்டு இருக்கா.,  தெரியலையே டா சாமி., இரண்டும் ஒன்றுக்கொன்று போன் பேச மாட்டேங்குது., சரி பார்ப்போம் வரும் போது வரட்டும்‘., என்று நினைத்துக் கொண்டான்.

       கட்டாயப்படுத்தி உணவு உண்ண அழைத்து சென்றவுடன்., உணவு உண்ணும் இடத்தில் வைத்து போனை எடுத்து ஆன் செய்து பார்த்து விட்டு வைத்தாள்.,

       சாப்பாட்டை கையில் எடுப்பதும் மீண்டும் போடுவதுமாக இருந்தவுடன்.,

        ஏஞ்சல் தான்ஏண்டி லூசு சாப்பிடு.,  சாப்பிட்டு முடி., என்ன போன் ஹேம் விளையாடுறீயா.,  எட்டி எட்டிப் பார்க்கிற“.,  என்று கேட்டாள்.,

       “இல்ல போன்ல விளையாடலை.,  என்று சொன்னாள்.

       ” ஆன்ல வச்சிருக்கியா., ன்னு பார்த்தேன்., ஏன்னா நேத்து நைட்டுல  உன் போன் சுவிட்ச் ஆஃப் இருக்கு ன்னு .,  சொல்லி ரஞ்சித் அண்ணா எனக்கு கால் பண்ணாங்க.,  நீ தூங்கிட்டேன்னு., சொன்னேன்ஒஒ அப்படியா ன்னு சொல்லி போனை வைத்து விட்டாங்க.,

        நீ போன் பண்ணினேயா., ஒருவேளை உன் போன் சுவிட்ச் ஆப்போ“., என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

       “அய்யோ என் போன் ரிப்பேர் “.,  என்று சொல்லி மீண்டும் ஆன் செய்து பார்த்தவள்.,

       “இல்ல உன் நம்பருக்கு கால் போகுதே“., என்று சொல்லிக் கொண்டு இருந்தாள்.

        “அப்புறம் என்னடி பேசாம சாப்பிடு“., என்று சொன்னாள்.

      ” நிஜமாவே நேத்து நைட்டு ரஞ்சித் பேசினாங்களா“., என்று கேட்டாள்.

    “ஆமா பேசினாங்க.,  நீ எங்க ன்னு கேட்டாங்க.,  தூங்குறே ன்னு சொன்னேன்“., என்றாள்.

         “என்னை எழுப்பி இருக்க வேண்டியது தானே“., என்றாள்.

       “ஆமா எழுப்பினா., மட்டும் எந்திரிச்சிட்டு  தான் மறுவேலை பார்ப்பேன்., அம்மா கிட்ட பேசின அப்புறம் தான் தூங்கிட்ட., அது தான் ரஞ்சித் அண்ணா கூப்பிடும் போது  தூங்குன பிள்ளைய எழுப்ப வேண்டாம் ன்னு விட்டு விட்டேன்“., என்று சொன்னாள்.

          ‘மனதிற்கு வருத்தமாக இருந்தது.,  தனக்கு போன் செய்யாமல் அவளுக்கு அழைத்து இருக்கிறானே‘., என்று நினைத்தவள்.,

        அதன் பிறகு தான்., தன் போனை சுவிட்ச் ஆஃப் பண்ணி போட்டதே நினைவுகூர்ந்தாள். ‘இப்போ நம்ம மேல தான் தப்பு இருக்குஎன்று நினைத்தவள் சற்று நேரத்தில் அவசர அவசரமாக உணவை வாயில் திணித்துக் கொண்டு ஓடினாள்.

        அதை பார்த்த தோழிகளுக்கு சிரிப்பு தான் வந்தது.,    அருகிலிருந்த இன்னொரு தோழியோ என்னவென்று கேட்டாள்.

      “இல்ல இப்ப போய் பாரு ரஞ்சித் அண்ணாக்கு போன் பண்ணி பேசு வா.,  அதுக்கு தான் இவ்வளவு அவசரமா உள்ள திணிச்சு ஓடுறா“.,  என்று சொன்னாள்.

       “நிஜமாவே அலங்க பிரண்டா தான் இருக்காங்களா“., என்று கேட்டாள்.

      “ஆமா அப்படித்தான் இருக்காங்க.,  ஆனா இவ ஓவர் பொஸசிவ்.,  அது மட்டும் இல்லாம அவங்க என்ன சொன்னாலும் கேட்டுப்பா..,  நீயே பார்த்து இருக்க இல்ல..,  ஆனா இப்ப தனியா ஊருக்கு போக சொன்னதற்கு முடியவே முடியாது நிற்கா., அதுக்கு தான் மிரட்டி இருக்காங்க.,  அதுக்குள்ள பிரச்சினை இவ வழிக்கு வருவான் பார்த்தாங்க..,  வர்ற மாதிரி இல்ல.., கடைசியா அந்த அண்ணா தான் இப்ப இறங்கி வந்து இருக்காங்க..,  இப்ப போய் பேச்சை பாரு“.,  என்று சொல்லி விட்டு அவர்கள் தோழிகளுக்கு உரிய அரட்டையோடு சாப்பிட்டு முடித்தனர்.

          வேகமாக சென்றவளோ தன் இடத்தில் அமர்ந்த பிறகு ரஞ்சித்துக்கு முதலில் வாட்ஸப்பில் சாரி மெசேஜ் போட்டு விட்டாள்.,

       அங்கு ப்ளூ டிக்  வரவும் பார்த்துக் கொண்டே இருந்தவள்., அவனிடமிருந்து அழைப்பும் எந்த மெசேஜ் ம் வரவில்லை என்றவுடன் இவளே  போனில் அழைத்தாள்.,

        “என்ன“.,என்று அவன் கேட்டான்.

            “சாரி.,  நெஜமாவே கோவமா இருக்கீங்களா“., என்று கேட்டாள்.,

    “பின்ன நீ பண்ற காரியத்துக்கு குளுகுளுன்னு இருப்பாங்களா., கோவமா தான் இருக்கேன் இப்ப என்ன“., என்று கேட்டான்.

          “இல்ல., என்னால தனியா போக முடியாது.,  ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க“., என்று சொன்னாள்.,

        “சரி இப்ப நான் துணைக்கு வரேன்.,  நாளைக்கு  யார் வருவா., இதுக்காகவே பாரு நான் பெங்களூர்க்கு மாறி போயிடுறேன்., அப்புறம் தனியா  டிராவல் பண்ணு“., என்று சொன்னான்.

     “ஐயோ பெங்களூர் மாற்றி போக போறீங்களா“.,  என்று கேட்டாள்.

    “ஏன் பெங்களூர் மாத்தி போய்ட்டா., என்ன செய்வ“., என்று கேட்டான்.

       “இல்ல பெங்களூர்ல மாத்தாதீங்க.,  அப்படி னா., எனக்கு உங்க கம்பெனில ஒரு வேலை பாருங்க“., என்று சொன்னாள்.

       அந்தபுறம் இருந்தவன்இவ தெரிஞ்சு சொல்றாளா., இல்ல தெரியாமல் சொல்றாளா.,  பக்கத்திலிருந்து யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க., ஐயோ கடவுளே இவளை என்ன செய்ய‘.,  என்று யோசித்தவன்

        “நான் பெங்களூருக்கு  போகலை தாயே.,  நான் இதே கம்பெனியிலேயே இருக்கிறேன்., நீ உன் கம்பெனியிலே வேலை பாரு.,  அதுதான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது.,  தேவையில்லாம வார்த்தைகள் எதையும் விட்றாத.,  பக்கத்தில் யாரும் இருக்கிறாங்களா“.,  என்று கேட்டான்.

       “ஒருத்தரும் இல்லையே., ஏன் கேட்கிறீங்க“., என்று கேட்டாள்.

        “ஒன்னும் இல்லம்மா., ஒன்னுமே இல்லைஎன்று சொன்னவன்.,

      அவளைசாப்பிட்டியா இல்லையாஎன்று கேட்டான்.

      “சாப்பிட்டேன் நீங்க“., என்றாள்.

     “ஆமா நேத்து நைட்டு எதுக்கு போன் ஆப்  பண்ண“., என்று கேட்டாள்.

      “கோவமா இருந்தேன்., அதனால ஆஃப் பண்ணினேன்“., என்றாள்.

       “கோபம் வந்தா போன் ஆப் பண்ணுவியா., ஏதோ அவசரத்துக்கு யாரும் போன் பண்ண கூட முடியாது., இது கூடவா உனக்கு தெரியல.,  எல்லாருக்கும் ஏஞ்சலோட நம்பர் தெரியுமா., இனி அப்படியெல்லாம் இருக்காத.,  இனி மேல் கோபம் வந்தாலும் நேரில் பேசித் தீர்த்துக்கோ.,  இப்படி பண்ணக்கூடாது., மூஞ்சி தூக்கக்கூடாது புரியுதா., என்று சொன்னான்.

        “சரி நீங்க சொன்னத கேட்பேன்., ஆனா நீங்க கூட வரணும்“., என்று சொன்னாள்.

      “வரேன் டிக்கெட்டை சேர்த்தே போடுறேன்“., என்று சொன்னான்.

        “நெஜமா தானே“., என்றாள்.

         “அம்மாடி கண்டிப்பா டிக்கெட் போட்டுட்டு.,  உனக்கு மெசேஜ் பண்றேன்., அதுவரைக்கும் அமைதியா இரு“.,  என்று சொன்னான்.

        “தேங்க்யூ ரஞ்சித்“.,  என்றாள்

       “லூசு நிஷாஎன்றான்.

       “லூசு சொல்லக் கூடாது., அப்படி சொன்னா  நான் உங்களை டா போட்டு பேசுவேன்“.,  என்று சொன்னாள்.

          ஒருவருக்கொருவர்  பதிலுக்கு பதில் பேசி.,  அவனோட விளையாடிக் கொண்டிருந்தாள்.,

          ரஞ்சித்ற்க்கும் நேற்று அவள் சுவிட்ச் ஆப் செய்தது.,  கோபமாக இருந்தது., அப்போது  வருத்ததில் இருந்தவன்.,  இப்போது அவள் பேசுவதை சந்தோஷமாக கேட்டுக் கொண்டிருந்தான்.,

         அவளுக்கும் அப்படித்தான்., ‘நேற்று கோபப்பட்டது தன் தவறு தான்., அது மட்டுமல்லாமல் போனை சுவிட்ச் ஆப் செய்து போட்டதும் தன் தவறு தான்என்பதை உணர்ந்து கொண்டவள்.,

       மீண்டும் ஒரு முறை அவனிடம்சாரி ரஞ்சித் இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்“., என்று சொல்லி விட்டு போனை வைத்தாள்.

நீயே போ என்றாலும்
போகாதோ
தேடாமல் கிடைத்த
சொந்தம் இது..
நீளும் நாட்களுக்கும்
நீயே துணையாக
இருந்தால் போதும்.,

Advertisement