Advertisement

6

அழகான நாள்கள் உங்களைத் தேடி வருவதில்லை. நீங்கள்தான் அவற்றை நோக்கி நகரவேண்டும்.

        ஊரில் இருந்து வந்த பிறகு நாட்கள் ஓடினாலும் அவ்வப்போது சந்தித்துக் கொள்வதை நிறுத்திக் கொள்ளவில்லை.,

     இப்பொழுதெல்லாம் மிகவும் சகஜமாக ரஞ்சித் இடம் எது வேண்டும் என்றாலும் கேட்பாள்.,  வேண்டும் என்பதை சொல்லவும் அவள் தயங்குவதே இல்லை., அந்த அளவிற்கு அவனோடு பழக தொடங்கியிருந்தாள்.

          மற்ற யாரிடமும் அதுபோல் கேட்க மாட்டாள்., என்பது ரஞ்சித்துக்கும் தெரியும் என்பதனால் அவனும் அவளை எப்போதும் போல் பாதுகாப்போடும் அரவணைப்போடும் வைத்துக்கொண்டான்.,

         இப்போதெல்லாம் அனைவரும் நண்பர்களோடு சேர்ந்து சுற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.,

      முடிந்த அளவு 15 நாட்களுக்கு ஒரு முறையாவது வெளியே சென்றுவிட்டு வருவார்கள்., அப்படி தான் அடிக்கடி இவள்  தோழிகளோடு போக.,  ரஞ்சித் ம் நண்பனோடு வந்து அவர்களோடு சேர்ந்து கொள்வான்.

    அதன்பின்பு நேரம் மிக வேகமாக கடப்பது போலவே இருக்கும்.,  சினிமாவிற்கு சென்றாலும் சரி., சாப்பாடு ஷாப்பிங் பீச் என எதையும் விட்டு வைப்பது கிடையாது., அவளும் எல்லா விஷயங்களிலும் ஓரளவுக்கு தனியாக செல்ல கற்றுக்கொண்டாள்.,

          பயம் உள்ளுக்குள் இருந்தாலும் வெளியே காட்டுவதில்லை., அந்த அளவுக்குத் தேறியிருந்தாள்.

     இதற்கிடையில் இன்னுமொரு முறை ஊருக்கு இவனோடு தான் சென்று வந்தாள்., வீட்டிலும் நல்ல நட்பு இருந்தது, ஒருமுறை மாலில் உள்ள புட்கோட் டில்அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது.,

அவரவருக்கான உணவை ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருக்க., ரஞ்சித் அருகில் அமர்ந்திருந்தவள்., அவளுடைய செல்லை எடுத்து பார்த்துக் கொண்டே இருந்தாள்.

      ரஞ்சித் தான் செல்லை அவளிடமிருந்து வாங்கியவன்பிரண்ட்ஸோட இருக்கும் போது செல்லை எடுக்காதே., எல்லாரும் சேர்ந்து பேசி இருக்கும் போது உனக்கு மட்டும் செல்லில் என்ன வேலை“., என்று கேட்டான்.,

        அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள்..

         “சும்மா சும்மா திட்டாதீங்க நான் சும்மா தான் பாத்துக்கிட்டு இருந்தேன்.,  ஜஸ்ட் மேலோட்டமா  ஒரு பார்வை தான் பார்த்தேன்.,  எதுவும் ஃபிரண்ட்ஸ் ட்ட இருந்து ஏதாவது முக்கியமான மெசேஜ்  இருந்தா பார்த்துக் கொள்ளலாமே என்ற எண்ணத்தோடு தான் பார்த்தேன்“.,  என்றாள்.

       “சரி தா“.,என்றபடி கையை நீட்ட போனை அவன் கையில் வைத்தாள்.

        அவனும்நீ கிளம்புற வரைக்கும் இங்கயே இருக்கட்டும்“., என்று சொல்லி தன்னோடு வைத்துக் கொண்டான்.

       உதட்டைச் சுழித்து அவனிடம் அழகு காட்டி விட்டு திரும்பி அமர்ந்து நண்பர்களோடு பேசத் தொடங்கினாள்.,

         அவளுடைய மாற்றம் அவள் தோழிகளுக்கு மட்டுமல்ல ரஞ்சித் க்கும் நன்றாகவே தெரிந்தது., ‘இவள் தான் எவ்வளவு மாறி இருக்கிறாள்என்று நினைத்துக்கொண்டான்.

    ரஞ்சித் சொல்வதை அப்படியே கேட்கும் குணமும் அவளுக்கு இருந்தது.,

     ‘ மற்றவர்கள் யாரும் ஏதேனும் சொன்னாலோ.,  இல்லை கட்டளை பிறப்பிப்பது போல பேசினாலோ.,  அவர்களிடம் நேருக்கு நேராக ஏன் நீ சொல்வதை நான் எதுக்கு செய்யனும்.,  போய் வேலையை பாரு‘., என்று சொல்லும் அளவிற்கு இருந்தவள்.,

அவனிடம் மட்டும் அவன் சொல்வதை அப்படியே கேட்டு நடப்பாள்., அவள் செய்வதை ரஞ்சித் நண்பன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்., அதுபோலவே  அவளது தோழிகளும் கவனித்துக் கொண்டு தான் இருந்தனர்.,

     ‘எப்போதும் ஏதாவது சொன்னால் நான் எதுக்கு உனக்கு செய்யணும்என்று கேட்பாள்., சற்று அதட்டி பேச தொடங்கினாள்., ‘என்ட்ட  இந்த மாதிரி யெல்லாம் வச்சுக்காத‘., என்று முகத்திற்கு நேராகவே சொல்வாள்.

        அப்படிப்பட்டவள் ரஞ்சித் சொல்வதை மட்டும் எப்படி இப்படி தலையாட்டி தலையாட்டி கேட்டுக் கொள்கிறாள் என்றே தோன்றியது.,  இருந்தாலும் யாரும் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை.,

       சரி அவர்கள் நண்பர்களாக பழகி கொண்டிருக்கிறார்கள்., நாமாக போய் குழப்பி விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டே இருந்தனர்..

       அதுபோல ஒருமுறை ரஞ்சித் ஏதோ சொன்னவன்., “கண்டிப்பாக செய்ய தான் வேண்டும்“., என்று சொன்னான்.

      “இவளும் இல்லை.,  இந்த விஷயத்தில் நான் தலையிட மாட்டேன்என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தாள்

     அந்த முறை அவளை தனியே ஊருக்கு அனுப்ப அவன் முயற்சி செய்து கொண்டிருந்தான்.,

         இவள் முடியவே முடியாது என்று அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

      அவனோஅப்படி யோசிக்காத நான் கூட வர்ற மாதிரி தான்., வேற பஸ்ல வர்றேன்., ஒரே பஸ்ல வந்தா நீ எப்படி மாறுவ“.,  என்று சொல்லும் போது

      முடியவே முடியாது என்று பிடிவாதம் பிடித்தாள்.,

       “இந்த முறை நான் ஊருக்கு வரமாட்டேன்“., என்று அவன் சொன்னான்.

       “அப்படினா நான் எங்க அப்பா வர சொல்லி போய்க்கிறேன்“., என்று சொல்லி அவனிடம் கோபப்பட்டாள்.

    அவனும் கோபத்தோடு., “நீ ஸ்கூல் போற பிள்ளை மாதிரி எப்பவும் யாரையாவது கூடவே கூட்டிட்டு சுத்து., நீயெல்லாம் மாறவே மாட்ட“., என்று சொல்லி விட்டு அங்கிருந்து விலகினான்.

       அதே கோபத்தோடு வீட்டுக்கு வந்தவள் அன்று முழுவதும் அவனோடு பேசாமல் இருந்து கொண்டாள்.

        அங்கு அவனோ., அவளை பற்றி தெரிந்தும் கோபம் காட்டியது தப்பு என்று எண்ணியவன் போன் செய்தான் அவள் எடுக்கவில்லை.,

           போனை ஆப் பண்ணி போட்டு விட்டு கோபத்தோடு படுத்துக்கொண்டாள்.

      அவன் தான் ஏஞ்சலுக்கு அழைத்தான்என்ன ஆச்சு., இன்னும் கோபம் போகலையா., இப்ப எப்படி இருக்கா“.,  என்று கேட்டான்.

         “என்ன ஆச்சு உங்க இரண்டு பேருக்கும்.,  என்ன பிரச்சனை“., என்று அவளும் கேட்டாள்.

      அப்போது தான் அவன்இல்ல இந்த தடவை தனியா பஸ்ல போ அப்படின்னு சொன்னதுக்கு கோவப்படுறா.,  சரி டிரெயின்ல போனா அடுத்து கம்பார்ட்மெண்டில் இருக்கிற மாதிரி டிக்கெட் போட்டுறேன்., நீ இந்த கம்பார்ட்மெண்டில் இருக்கிற மாதிரி ஏத்தி விடுறேன்., எதுவும்னா போன் பண்ணா அடுத்த கம்பார்ட்மெண்டில் இருந்து வந்துறப் போறேன் ன்னு., அதெல்லாம் முடியாது என் கூடவே இருக்கிற மாதிரி தான் டிக்கெட் போடனும் ங்கிறா., எப்படி சரியா வரும்., சொன்ன பேச்சைக் கேட்க மாட்டேங்றா“.,என்றவன்.

      “அதுக்கு தான் கோபப்பட்டேன்., நீ என்ன சின்ன பாப்பா வா.., இன்னும் ஒருத்தங்க கைய புடிச்சு தான் நடப்பியா.,  தனியா எப்ப தான் பழகுவ.,  தனியா போக வரத் தெரியனும்., தனியா செய்யப் பழகணும்., இங்க இருந்து மதுரைக்கு போயிட்டு வரமுடியாதா.,

       காலேஜ் படிக்கிற சின்ன பிள்ளைங்க கூட  ஊருக்கு தனியா தான் போயிட்டு வருது., நீ வேலைக்கு வந்துட்ட.,  இன்னும் பாப்பா ன்னு நினைப்பா அப்படின்னு கேட்டேன்., அதுக்கு தான் அம்மணிக்கு இவ்ளோ கோவம்“., என்று சொன்னான்.

          “பயங்கர டென்ஷன் இருந்தாகண் எல்லாம் லேசா கலங்கின மாதிரி தான் இருந்தது., போனை ஆப் பண்ணி போட்டுட்டு படுத்துட்டா., அவங்க அம்மாவும்  என் போனுக்கு தான் கூப்பிட்டாங்க., கேட்டதுக்கு என் போன்ல சார்ஜ் இல்ல மா., சுவிட்ச் ஆப் ஆயிடுச்சு அப்படின்னு சொல்லிட்டு., நாலு வார்த்தை பேசிட்டு வச்சிட்டா“.,  என்று ஏஞ்சல் சொன்னாள்.

             “எதுக்கெடுத்தாலும் இப்படி கோவப்பட்டா., நான் என்ன செய்ய“., என்று ரஞ்சித் சொன்னான்.

     “நீங்கள் ஏன் கோவ படுறீங்க.,  இவ்வளவு நாள் நீங்க தானே கூட்டிட்டு போயிட்டு., வந்துட்டு இருக்கீங்க.,  மத்ததெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பழகுனீங்க தானே., இதையும் மெதுவா பழக்கி விட வேண்டியது தானே“., என்று சொன்னாள்.

     “எனக்கு என்னவோ அவ அப்படி பழகுவா  நம்பிக்கை இல்லை பார்க்கலாம்., இல்லாட்டி வேற வழி இல்ல நான் தான் கூட்டிட்டு போகணும்., ஆனால் அவட்ட எதுவும் சொல்லாதீங்க.,  எப்ப பேசுறா ன்னு.,  நானும் பார்க்கட்டும்..,  எத்தனை நாள் மூஞ்சி தூக்குறா ன்னு பார்ப்போம்“., என்று சொல்லிக் கொண்டிருந்தான்.,

       ” நீங்களும் உங்க சண்டையும்“., என்று சொல்லி விட்டு ஏஞ்சல் போனை வைத்து விட்டாள்.

        இது அவனுடைய நண்பனுக்கும் தெரியும்., ஏஞ்சல் மூலமாக மற்ற தோழிகளுக்கும் தெரியும்..,

          ஆனால் மறுநாள் காலை வரை அமைதியாக இருந்தவள்., அலுவலகம் வந்த பின்பும் டென்ஷன் ஆக இருந்துக் கொண்டிருந்தாள்.

          அவ்வப்போது போனை வேறு எடுத்து எடுத்து பார்த்துக் கொண்டே இருந்தாள்., ஏஞ்சலுக்கு சிரிப்பு தான் வந்தது.,

       “நேற்று எல்லாம் மூஞ்சி தூக்கிட்டு சுத்துன.,  அம்மணி இன்னைக்கு மெசேஜ் வரல., போன் வரல ன்னு., போனை உத்து உத்து பார்க்குறத பாரு“., என்று சொல்லி தோழிகளும் சேர்ந்து சிரித்துக் கொண்டனர்.,

     இவளோ அவர்களைப் பார்த்துஏன் சிரிக்கிறீங்க., லூசாடி நீங்க எல்லாம்“.,  என்று கேட்டாள்.

       “இல்ல அம்மணி.,  நாங்க சும்மா தான் சிரிச்சிட்டு இருக்கோம்., நீ எதுக்கு இப்படி உருண்டுஞ்டு  வர்ற ன்னு“.  மற்றொரு தோழி கேட்டாள்.

      இவளோஒன்னும் இல்லையே.,  நான் நார்மலா தான் இருக்கேன்“., என்று சொல்லி அவளிடம் சமாளித்துக் கொண்டிருந்தாள்.

         ஆனால்மனம் முழுவதும் ரஞ்சித் போனே பண்ணல ஒரு மெசேஜ் கூட இல்லஎன்று யோசித்துக் கொண்டே இருந்தாள்.

         ‘அவ்வளவு தான்., இனிமேல் என்கூட பேச மாட்டாங்களா‘., என்று சற்று மனம் பதறினாளும்ஐயோ நான் தான்  கோபப்பட்டான்என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டாள்.

      ‘போன் பண்ணலாம்என்று போனை எடுப்பவள் மீண்டும்இல்ல நம்ம பேசினா இன்றும் திட்டி விடுவார்றோ., திருப்பி நீயே தனியா போ ன்னு சொன்னாங்கன்னா“., என்று குழப்பிக் கொண்டே இருந்தவள்., பயந்து போய் போனை எடுப்பதும் வைப்பதுமாக இருந்தாள்.

        

Advertisement