Advertisement

அவளுக்கு முகம் தூக்க கலக்கத்திற்கு செல்வதை கண்டவன்., “சரி நீ படுத்து தூங்கு.,  நான் அப்பர் பெர்த் இருக்கிறேன்“., என்று சொல்லி விட்டு அவளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து விட்டே அப்பர் பெர்த்தில் ஏறி படுத்தான்.

     இவளுக்கு எப்போது இருக்கும் பயம் கூட  இல்லாமல் நல்ல தூக்கம் வர அலாரம் வைத்துக் கொண்டே தூங்கிவிட்டாள்.,  சரியாக மதுரை வருவதற்கு முன்பே ரஞ்சித் போர்வையால் இழுத்து மூடி தூங்கியவளை மெதுவாக காலில் தட்டி எழுப்பி விடமுழித்து பார்த்தவள் என்ன என்று கேட்டாள்.

      “இன்னும் 10 மினிட்ஸ்ல வந்துரும்., எந்திரி“., என்று சொன்னான்.

      “இன்னும் அலாரம் அடிக்கலையேஎன்றாள்.,

      “அலாரம் அடிச்சிடும்., நீ வச்சது ஃபைவ் மினிட்ஸ் முன்னாடி தானே., இப்ப என்ன 10 மினிட்ஸ் அதுக்கு முன்னாடி எழுப்புறேன் எந்திரி“., என்று சொன்னான்.,

        இவளும் எழுந்து அவர்களுடைய திங்க்ஸ் எல்லாம் எடுத்து வைக்கவும் ஸ்டேஷன் வந்தது., அங்கு இறங்கும் போதே ரஞ்சித்தை அழைத்துச் செல்ல ரஞ்சித் அப்பா வந்திருந்தார்.,

       நிஷாவை அழைத்துச் செல்ல அவள் அண்ணனும் அப்பாவும் காத்திருந்தனர்.,

       ரஞ்சித் தான்என்னப்பா நான் என்ன சின்ன பையனா வந்துர  மாட்டேனா“.,  என்று சொன்னான்.

        “இல்லடா நான் சும்மா தான் வந்தேன்.,  நிஷா அப்பாவும் நானும்  நேத்திக்கி போன்ல பேசிட்டு இருந்தோம்.,  நிஷா அப்பா வாறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு., அதான் சரி நானும் வரேன் அப்படின்னு சொல்லிட்டு வந்தேன்.,

         நாங்களும் நேரில் பார்த்தது இல்லையா..,  அதனால தான் நாங்களும் ஸ்டேஷன்ல வந்து பார்த்துட்டோம்., இந்தா இவ்வளவு நேரம் நாங்க ஸ்டேஷன்ல தனியாவா  இருந்தோம்., அவங்க அப்பாவும் நானும் பேசிட்டு தான் இருந்தோம்.,  எங்களுக்கு ஒரு அறிமுகம் கிடைச்சிருச்சு இல்லையாடா.., இங்கே உங்கள வச்சு எங்களுக்கு போன்ல மட்டும் தான் பழக்கம்..,  இதோ இப்ப நேர்ல நாங்களும் பேசிக்கிட்டோம்  இல்ல“., என்று சொன்னவர்.

     “என்னம்மா நிஷா எப்படி இருக்க“., என்று ரஞ்சித்தின் அப்பா கேட்டார்.

      “நல்லா இருக்கேன் அங்கிள்“., என்று சிரித்தபடி பதில் சொன்னாலும் ரஞ்சித்தின் அருகில் தான் நின்று கொண்டிருந்தாள்.,

       பின்பு ரஞ்சித்துக்கு தன் அப்பாவையும் அண்ணனையும் அறிமுகப்படுத்தி வைக்க சம்பிரதாய பேச்சுக்கள் நிறைவுற்ற உடன் வீட்டிற்கு கிளம்பலாம் என்று வெளியே வந்தனர்.

          அப்போதும் ரஞ்சித்தும் நிஷாவின் அண்ணனும் பேசிக்கொண்டிருந்தனர்.,  நிஷா தான் ரஞ்சித் அப்பாவிடமும்., தன் அப்பாவிடம் பேசிக்கொண்டே முன்னால் சென்றாள்.

       அப்போது ரஞ்சித் தான்நீங்க இவ்வளவு பயந்து அவளை பொத்தி பொத்தி  வளர்த்திருக்க வேண்டாம்.,  கொஞ்சம் சொல்லிக் கொடுத்திருக்கலாம்.,  செல்லம்  எல்லா வீட்டிலும் பொண்ணுங்களுக்கு இருப்பது தான் ஆனால் இப்படி ரொம்ப பயந்த சுபாவமா இருந்தா., இப்படியே ஒரு இடத்தில் கல்யாணம் பண்ணி கொடுத்து இருந்தீங்கன்னா., அவ எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பா தெரியுமா.,

     இப்பவும் அட்லீஸ்ட் ஆட்டோ கார்   வர்றதுக்கு ஒரு அளவுக்கு பழகி இருக்கா..,  ஆனாலும் பயம் முழுசா போகல,   நீங்களும் வீட்டில் ரொம்ப செல்லம் கொடுக்காமல் பார்த்துக்கோங்க.,  உங்க அம்மாவும் சரி.,  அப்பாவும் சரி., இன்னொரு அண்ணா இருக்காங்களே அவங்கட்டையும்  சொல்லிடுங்க., அவ போற இடத்தில நல்லா இருக்கணும் நினைச்சீங்கன்னா.,  அவளை கொஞ்சம் தைரியசாலியா., மாத்த வீட்டிலுள்ள நீங்களும் ட்ரை பண்ணுங்க..,

      சென்னையில் இருக்கும் போது நான் இருக்கேன். அவ பிரண்டு ஏஞ்சல் இருக்கா.,  ஒரு அளவுக்கு பழக்கிட்டு இருக்கா.,   அவளை எதற்கெடுத்தாலும் கைக்குள்ள பொத்தி வைக்காதீங்க.,  அதனால இப்ப தான் தனியா டிராவல் பண்ண சரி அப்படின்னு சொல்ற லெவலுக்கு வந்து இருக்கா.,

     நான் வந்து இந்த விஷயத்தில் மட்டும் அவகிட்ட  கண்டிச்சி தான் நடந்துக்கிறேன்.,  மத்தபடி அவ ட்ட ஃப்ரெண்ட்லியா இருந்தாலும்., இந்த விஷயத்தில் அவ ட்ட பட் ன்னு தான் பேசுறேன்.,  அப்பனா தான் அவ கரெக்டா செய்றா., நீங்களும் அவளை கொஞ்சம் மோல்ட் பண்ண ஹெல்ப் பண்ணுங்க.,

     என்ன தான் அவ இன்னொரு வீட்டில் போய் வாழும் போது அவளோட சந்தோஷம்., அவளோட நிம்மதி மட்டும் இல்லாம., தைரியமா பேஸ் பண்ற குணமும் வரும்“.,  என்று சொன்னான்.

      நிஷாவின் அண்ணனுக்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது., தாங்கள் கூட இப்படி அவளைப் பற்றி யோசிக்கவில்லை என்ற எண்ணத்தோடு அவனிடம் கையை பிடித்தபடி சந்தோஷமாக விடை பெற்றான்.

     ” கண்டிப்பா வீட்டுக்கு வந்துட்டு தான் போகணும்“., என்று சொன்னான்

      “தங்கச்சி வீட்டுக்கு போக வேண்டியது இருக்கு., சில சின்ன வேலைகள் இருக்கு., முடிச்சிட்டு கண்டிப்பா வீட்டுக்கு வரேன்“., என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டு இரு குடும்பங்களும் பிரிந்து செல்லும் போது ரஞ்சித் தான் நிஷாவை பிடித்து வைத்து., “வெளியே போறதா இருந்தா தனியா போயிட்டு வர பழகணும்.., மதுர தானே நீ பிறந்து வளர்ந்த ஊர் தானே..,  தைரியமா போய் பழகு., எது கிடைத்தாலும் அப்பா அம்மா அண்ணன் யாரையாவது துணைக்கு கூப்பிட்ட ன்னு தெரிஞ்சது., போகும் போது தனியா தான் நீ போனும்.,  நான் துணைக்கு வர மாட்டேன்“., என்று சொன்னான்.

       “இல்ல இல்ல., நான் தனிய போறேன்.,  நானே போய் பழகுகிறேன்“., என்று அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

      அதுமட்டுமில்லாமல் அவன் சொல்லும் அட்வைஸ் எல்லாம் தலையை ஆட்டி பள்ளி மாணவி போல கேட்டுக் கொண்டிருப்பதை கண்ட குடும்பத்தினருக்கு தான் சிரிப்பு வந்தது.

    அவன் ஏற்கனவே சொல்லியிருப்பதால் வீட்டினருக்கு புரிந்துகொண்டனர்., அவன் அவளை மிரட்டி அனுப்புவதை பார்த்துக் கொண்டே இருந்தனர்.

       அதுபோலவே ரஞ்சித் தன் சொந்த வேலைகளை முடித்துக்கொண்டு., தங்கையை எல்லாம் பார்த்துவிட்டு தன் அம்மா அப்பாவோடு நிஷாவின் வீட்டிற்கு வந்திருந்தான்.,

     நிஷாவின் பெற்றோர்களும் உடன் பிறந்தவர்களும் அன்பாய் வரவேற்று குடும்பத்தினரை உபசரிக்க அங்கு இரண்டு குடும்பங்களும் நல்ல நண்பர்களாக மாற தொடங்கினர்.

     நிஷாவின் பயங்கள் சற்று குறைந்து இருப்பதை நினைத்து அவர்கள் பெற்றோர்களும் அண்ணனும் மகிழ்ச்சியோடு சொன்னார்கள்

     “அவள் இன்னும் பழகவேண்டும் தனியே செய்ய பழகிக் கொள்வது பெண்களுக்கு எல்லா விதத்திலும் நல்லது“. என்று சொல்லி ரஞ்சித்தும் பேசிக்கொண்டிருந்தான்.

    “நிச்சயமாக நான் உங்களிடம் கோபப்பட வேண்டும்., சண்டை போட வேண்டும்., என்ற நினைவோடு தான் வந்தேன். அவளை இந்த அளவிற்கு பயந்த சுபாவம் ஆக மாற்றியது உங்களின் அதிகபட்சமான அரவணைப்பு தான்., என்று எனக்கு தோன்றுகிறது.

      எப்போதும் பெண் பிள்ளைகளை தட்டிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்று தான் மற்றவர்கள் சொல்வார்கள்.,  எங்கள் வீட்டில் என் தங்கையை அப்படித்தான் வளர்த்தார்கள்., ஆனால் மற்றவற்றை அவள் தனியே செய்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதத்துடன் அம்மா வளர்த்தார்கள்.,

இவளிடமும் இனியாவது அப்படி நடந்து கொள்ளுங்கள்“., என்று சொன்னான்.

       அவனை பார்த்து முறைத்துக் கொண்டு நின்றாள் நிஷா.,

       “நீ முறைச்சி பார்த்துட்டே இரு.,நான் விட்டுட்டு போய் விடுவேன்“., என்றான்

   “உடனே இப்படியே சொல்லி மிரட்டாதீங்க.,  அப்புறம் என்ன யார் கூட்டிட்டு போ வா“.,  என்று கேட்டாள்.

        “தனியா போ“.,  என்று சொன்னான்.

      ” இல்லை இல்லைஎன்று சொன்னாள்.

அப்ப ஒழுங்கா சொன்ன பேச்சை கேளு., சொன்ன பேச்சு கேட்டா., நான் கூட்டிட்டு போறேன்“., என்று சொன்னாள்.,

     “அதெல்லாம் சொன்ன பேச்சு கேட்க தான் செய்யுறேன்., ஒழுங்கா கூட்டிட்டு போய்ருங்க“., என்று சொல்லி கொண்டிருந்தாள்.,

        வீட்டில் இருந்தவர்கள் அவளை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தனர்., ஆனால்  இப்போது அதிகமாகவே மாறி இருக்கிறாள் என்று வீட்டினரால் உணரமுடிந்தது., இரண்டு குடும்பமும் நல்ல நட்போடு அன்றைய நாளை கழித்துவிட்டு பிரிந்தனர்.

நிஷாவின் வீட்டிற்கும் ரஞ்சித்தின் வீட்டிற்கும்  பிள்ளைகள் ஒழிவு மறைவு இல்லாமல் தங்களையும் வைத்துக்கொண்டே நல்லபடியாக நட்போடு பழகினார்கள் என்ற எண்ணத்தோடு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

     உன்னை மட்டும் நம்பும்
     என் உள்ளத்திற்கு தான்
     என்னவாயிற்று.,

      என்னை பாதுகாக்க
      உன்னை விட சிறந்தவன்
      யாரும் இல்லை என்ற
      எண்ணத்தை விதைத்து
      கொண்டே இருக்கிறது.,

       உன்னுடைய செய்கைகள்
       ஒவ்வொன்றும்
       உயிர் தொட்டு திரும்புகிறதே.,

Advertisement