Advertisement

5

இன்றைய சாதனைகள் அனைத்தும் நேற்றைய சாத்திய மற்றவைகளாக இருந்தவையே.

      ஊருக்கு கிளம்பும் நாளும் வந்து சேர்ந்தது., வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டியவைகளை தன் பையில் வைத்து பேக் செய்து கொண்டிருந்தவளின் பின் வந்து நின்றாள் ஏஞ்சல்.,

          அவளை பார்த்துக் கொண்டே இருந்தாள் அவள் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்துக் கொண்டே இருந்தவள்., நிஷி  என்று அழைக்க.,  திரும்பியவள் முகம் முழுவதும் மகிழ்ச்சி வெளிப்படையாக தெரியும் அளவிற்கு நின்றாள்.

            மூணு மாசம் கழித்து ஊருக்கு போறதால சந்தோஷமா கிளம்புறீயா இல்ல.,   எப்பவும் ஊருக்கு போகும் போது இருக்கிற டென்ஷன் இந்த முறை இல்லை., என்கிற நிம்மதி போறியா“.,  என்று கேட்டாள்.

       அவளும் சிரித்தபடிநீ சொல்றது இரண்டுமே உண்மை தான்., மூன்று மாசம் கழிச்சு போய் வீட்டில் எல்லாரையும் பார்க்க போறோம் ன்ற சந்தோஷம் ஒரு பக்கம்.,  இன்னொரு பக்கம் எப்பவும் ஊருக்கு போகும் போது., ஒரு படபடப்பு ஒரு டென்ஷன் இருந்துகிட்டே இருக்கும்.,  ஒன்னு என்னை கூப்பிட்டு போவதற்காக மெனக்கெட்டு அப்பா வரணும்., இல்ல னா இங்கிருந்து யாரு போற அப்படி இப்படின்னு கேட்டு கெஞ்சி., அவங்க கூட டிக்கெட் போடணும்.,  ஆனா இந்த தடவ ரஞ்சித் வராங்க., ரஞ்சித் கூட போறேன், இதுதான் ரொம்ப ஹாப்பியா இருக்கு.,  எனக்கு ஹெல்ப் பண்ணுறத கூட பெருசா எடுத்துக்காம என்னை பத்திரமா கூட்டிட்டு போவாங்க., அப்படிங்கறதுல எனக்கு நம்பிக்கை இருக்கு.,

       அது மட்டும் இல்லாம அண்ணனுக்கு ரஞ்சித் பேசியிருக்காங்க., ரஞ்சித் நான் பாத்துக்குறேன்., நான் பாத்து கூட்டிட்டு வந்திருவேன்னு சொன்னாங்களாம்.,  அண்ணா இன்னைக்கு காலைல கூட எனக்கு போன்ல அது தான் சொன்னாங்க” ,  என்று மகிழ்வோடு விவரித்தாள்.

           “அப்பாடா இனிமேல் ஊருக்கு போறதுக்கு என்னை போட்டு பாடா படுத்த மாட்ட., தொந்தரவு பண்ணாம கிளம்பி போவ அப்படித்தானே“., என்று சொன்னாள்.

      சிறுபிள்ளையாக தலையை ஆட்டியவளை பார்த்துக் கொண்டிருந்த ஏஞ்சலுக்கு தான்இவள் எப்போதும் இப்படியே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்‘., என்று நினைத்துக்கொண்டாள்.

     அதே நேரம் நிஷாவின் போன் அடிக்க எடுத்துப் பார்த்தவள் ரஞ்சித்  எண்ணை பார்த்தவுடன்சொல்லுங்க கிளம்பிட்டீங்களா., வந்துட்டு இருக்கீங்களா“., என்று கேட்டாள்.

     அவனும்கரெக்டா ரயில்வே ஸ்டேஷன் வந்து விடுவேன்.,  நீ வந்து சேர்ந்துரு“., என்று சொன்னான்.

      இவ்வளோ ஷாக்கான குரலில்என்ன சொல்றீங்க., நீங்க வந்து என்னை கூட்டிட்டு போவீங்க ன்னு நினைச்சேன்“.,  என்று சொன்னாள்.

      “பாரு நிஷா நீ ஒன்னு சின்னப்பிள்ளை இல்ல., உனக்கு இப்போ ரெண்டு மூணு தடவை கேப் போக ஆட்டோல போக எல்லாம் ரெய்னிங் கொடுத்தது எதுக்கு ன்னு நினைக்க.,  நீ தனியா போய் பழகுவதற்கு தான்.,  உனக்கு இங்க இருந்து ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் கூட தனியா வர முடியாதா.,  அந்த அளவுக்கான பயந்தாங்கோலியா இருக்க., ஆபீஸ் போற ஆபீஸ்ல இருந்து  வீட்டுக்கு வர்ற.,  மத்தவங்க எல்லாம் ஆபீஸ் விஷயமா., ஒர்க் விஷயமா பேசும் போது எவ்வளவு ஸ்ட்ராங்கா பேசுற., அந்த மாதிரி உன்னால இருக்க முடியாதா., இப்ப  என்ன பண்ற ஒரு ஆட்டோ பிடிச்சு கெளம்பி வர்ற.,

      உங்க தெருவுல உள்ள அந்த ஸ்டன்ட் இருந்து ஒரு ஆட்டோ பிடிச்சுக்கோ., கிளம்பி வரும் போது நான் சொன்ன இன்ஸ்ட்ரக்சன் பாலோ பண்ணு.,  சரியா இருக்கும்., நான் உனக்காக ரயில்வே ஸ்டேஷனில் வெயிட் பண்றேன்., நைட் டிபன் நான் வாங்கிறன்.,தண்ணி நான் எடுத்துக்குறேன்., நீ உன்னோட லக்கேஜை மட்டும் எடுத்துட்டு வந்து சேரு போதும்“., என்று சிறு பிள்ளைக்கு சொல்வது போல சொன்னான்.

       இவளும் வேறு வழி இல்லை அவன் சொன்னால் சொன்னது தான்., அதை மீற முடியாது, என்பதை அவன் தனியே அனுப்பி வைக்க பயிற்சி கொடுத்த நேரங்களில் புரிந்து கொண்டாள். எனவே வேறு எதுவும் சொல்லாமல் ம்ம்ம் ம்ம்ம் என்று மட்டும் உம் கொட்டிக் கொண்டிருந்தாள்.

      அவள் பேசுவதிலேயே புரிந்து கொண்ட ஏஞ்சலோ சிரிப்பை அடக்கியபடிஇவளுக்கு நல்ல வேணும்., அந்த பிரதர் மட்டும் கரெக்டா ட்ரைனிங் கொடுக்கலைன்னா., இவ இந்நேரம் எல்லாரையும் படுத்தி எடுப்பாள்., போகட்டும் போகட்டும்‘., என்று நினைத்துக் கொண்டாள்

        அது என்னவோ உண்மைதான் இரண்டு மூன்று முறை அவளை கேப் தனியே அனுப்பும் போதும் சரி.,  ஆட்டோவில் அனுப்பும் போதும் சரி.,  ரஞ்சித்தின் பிடிவாதம் தான் ஜெயித்தது.,  எவ்வளவு தான் நிஷா ரஞ்சித்திடம் கெஞ்சினாலும்., ரஞ்சித் சிறிதும் இறங்கி வர மாட்டான்., “சொன்னா சொன்னது தான்  நான் சொல்றதை நீ கேட்டு நடந்தா.,  நான் உன்கூட ஊருக்கு வருவேன்., இல்லாட்டி வரமாட்டேன்“., என்று இந்த ஒரு வாரத்தில்  மட்டுமே தினமும் அவளை தனியே அனுப்பி அனுப்பி பழக்கி இருந்தான்.

           அதை நினைத்துக் கொண்டவள் ஏஞ்சல் இடம் விடைபெற ஏஞ்சலோசந்தோஷமா போடி., உனக்கு அழகா சொல்லிக் கொடுத்திருக்காங்க.,  இதுக்குமேல யார் சொல்லிக் கொடுப்பா ன்னு நினைக்கிற.,  போய் ரயில்வே ஸ்டேஷன்ல இறங்கின உடனே எனக்கு போன் பண்ணு“., என்று சொன்னாள்.

        அவளிடம் சம்மதமாக தலையை ஆட்டிவிட்டு தன் பேகை எடுத்துக் கொண்டு வந்தவள்., அதே தெருவில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் ஒரு ஆட்டோவை எடுத்துக் கொண்டு ரயில்வே ஸ்டேஷன் நோக்கி பயணம் செய்தாள்.,

         அவன் சொன்னது போலவே ஆட்டோவில் ஏறியதும் ஆட்டோ டிரைவரிடம் பேச்சுக் கொடுத்தபடி., அவர் பெயரைக் கேட்டு அறிந்து கொண்டவள்.,

         அவருடைய ஆட்டோ நம்பரையும் டிரைவர் சீட்டுக்கு பின் இருக்கும் அதிலிருந்து எடுத்து வேண்டுமென்றே அவனிடம் போனில் போய்க் கொண்டிருக்கும் போதே போனில் ரஞ்சித்துக்கு அழைத்தவள்.,

      ” நான் இந்த நம்பர் ஆட்டோல வந்துட்டு இருக்கேன்., நீங்க வெயிட் பண்ணுங்க அங்க பார்த்து என்ன பிக் பண்ணிக்கோங்க“.,  என்று சொல்வது போல சொல்லி விட்டு ஆட்டோ டிரைவரின் பெயரை சொல்லிஅந்த அண்ணா தான் கூட்டிட்டு வாறாங்க., நான் பத்திரமாக வந்து விடுவேன்“., என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

      அதை கேட்டதும் ரஞ்சித்துக்கு இவள் பிழைத்துக் கொள்வாள்., என்று நினைப்பு வந்தாலும் ஒருபுறம் சிரிப்பும் வந்தது.,  ‘இவளை தனியே அனுப்ப என்ன பாடு பட வேண்டியது இருக்கிறதுஎன்று.

      பத்திரமாக ஆட்டோவில் வந்து இறங்கியவள்., பேக்கை எடுத்து தோளில் போட்டபடி அவன் அருகில் நின்று கொண்டு ஒரு பெருமூச்சை எடுத்துவிட்டாள்.,

         அவனோபெரிய சாதனை செஞ்ச மாதிரி நெனப்பு., எவ்ளோ பெரிய பெருமூச்சு வா“., என்று சொன்னாள்.

         பேக் எடுத்துக் கொண்டு அவன் பின்னே நடந்தாள்., அவன் அவனுடைய பை.,  இவர்களுக்கான உணவு பை.,  வீட்டிற்கு எடுத்துச் செல்லும் மற்றொரு பை., என எடுத்துக்கொண்டு வர..,

      இவள் அவனிடமிருந்து உணவு பையை மட்டும் வாங்கிக் கொண்டாள்.,  பின்பு அவர்களுக்கான ரயில் பார்த்து ஏறி.,  அவர்களுடைய இருக்கையை தேடி அமர்ந்த பிறகு தான் இருவரும் உணவு எடுத்துக்கொண்டனர்.,

    அப்போது அவள் தான்எனக்கு ட்ரெயின்ல போனாலே ஒரே பயமா இருக்கும்., அப்பா இருந்தாங்க அப்படினாலுமே.,  எனக்கு காலையில கரெக்ட் டைமுக்கு எந்திரிக்கணுமே ன்னு தோணும்., சப்போஸ் மறந்து தூங்கிட்டா என்ன பண்ண அப்படின்னு தோணும்.,  அதனாலேயே ட்ரெயின்ல வரணும்னா அலாரம் வச்சுப்பேன்.,  எத்தனை மணிக்கு மதுரை போய் சேரும் ன்னு பார்த்துட்டு அலாரம் செட் பண்ணிப்பேன்.,

      அப்பா இருந்தாலுமே அப்படித்தான் ஏன்னா நம்ம போய் சேரும்  போது.,  கரெக்டா மூன்று அல்லது நாலு மணி இந்த மாதிரியா இருக்கும்., என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.,

     அவனோஅதெல்லாம் ஒன்னும் இல்ல கரெக்டா எந்திரிச்சுரலாம்., நீ என்ன பண்ற உங்க அண்ணனுக்கு போன் பண்ணி சொல்லிரு.,  உங்க அண்ணன் காலையில் வந்துடுவாங்க“.,என்று சொன்னான்.,

       “நா சொல்லிட்டேன்., அண்ணன் கரெக்டா வந்துடுவேன்னு சொல்லி இருக்காங்க., ஆனா அண்ணன் சப்போஸ் தூங்கிட்டா என்ன பண்ண“., என்று பயந்தபடி கேட்டாள்.,

      ” நான் கொண்டு போய் விட்டுட்டு போறேன்., உங்க வீட்ல என்னை தெரியாதா என்ன“., என்று கேட்டுக்கொண்டே அவரவர் இருக்கையில் அமர்ந்து கதை பேச தொடங்கினார்.

        இப்போதெல்லாம் அவனோடு உற்சாகமாக பேசினாலும்., மனதிற்குள் அவளை அறியாமல் அவனோடு இருக்கும் தருணங்களை ரசிக்க தொடங்கியிருந்தாள்.,

    எத்தனை பாதுகாப்பாக உணர்கிறோம் என்பதை உணர்ந்ததாலோ என்னவோ அவனுடன் இருக்கும் நேரங்கள் அவளுக்கு தனித்துவமாக இருக்க தொடங்கியது., அதுபோலவே நிஷாவின் சின்னச்சின்ன சேட்டைகளும்.,  அவளுடைய பயங்களும்., அதை அவள் வெளிப்படுத்தும் விதமும்., அவனுக்கு ஒருபுறம் சிரிப்பாக இருந்தாலும்.,

            ஒரு புறம் இப்போது இருக்கும் பெண்களுக்கு மத்தியில் இவள் தனிதான் என்று எண்ணத் தோன்றியது.,

     அவ்வளவு சீக்கிரத்தில் அவள் யாரையும் நம்பி விட மாட்டாள்.,  எத்தனை தான் நட்பாக பழகினாலும் அவர்களிடம் சற்று தள்ளி தான் நிற்பாள்.,  ஒவ்வொருவரையும் பற்றி அறிய ரஞ்சித்தின் துணையைத் தேடுவாள்.,

அவங்க எப்படி இப்படி பேசுறாங்கஅப்படின்னா எப்படி பழகணும் என்று கேட்பதில் இருந்து ஒவ்வொன்றும் அவனிடம் கேட்டு தெரிந்து கொள்ள  முனைவாள்.,  இவனால் மட்டும் தான் இவளுக்கு எல்லாவற்றையும் சொல்லி கொடுக்க முடியும்., ஒவ்வொன்றிலும் வந்து இப்படி கேட்கிறாளே என்று தோன்றும் ஆனால் நிச்சயமாக ஒருநாள் தானே எல்லாவற்றையும் புரிந்து கொள்வாள் என்ற எண்ணமும் அவனுக்கு இருந்தது..

        சிறிதுநேரம் இருவரும் அவர்களுடைய அலைபேசியை வைத்து தங்களது வாட்ஸ்அப் மெசேஜ் பார்ப்பது.,  நண்பர்களுக்கு அழைப்பு விடுப்பது என அவர்களுடைய வேலை முடித்துக் கொண்டு பின்பு ஒவ்வொருவராக ஏற ஏற இவர்களிருவரும் ஒரே இடத்தில் அமர்ந்து பேச தொடங்கினர்.,

     இருவருக்கும் ட்ரெயினில் சைடு அப்பர் சைட் லோயர் பெர்த் ஒதுக்கப்பட்டு இருந்ததால் இருவரும் அங்கு அமர்ந்து இருப்பது வசதியாக இருந்தது.

இவ்வளோ அவனிடம்எப்ப வீட்டுக்கு வருவீங்க“., என்று கேட்டாள்.,

         நாளைக்கு போய்ட்டு பார்த்தால் தான் என்ன ஒர்க் எல்லாம் இருக்கு ன்னு தெரியும்.,  தங்கச்சி வீட்டுக்கு போகணும் போயிட்டு ரெண்டு நாள் கழிச்சு வரேன் சரியா., நாளைக்கு எப்படியும் உங்க அப்பா அல்லது அண்ணன் யாராவது வருவாங்க இல்ல ஸ்டேஷனுக்கு.,  பாத்துட்டு தானே போக போறேன் அப்புறம் என்ன“., என்று சொல்லிக் கொண்டே இருந்தவன்.,

     

Advertisement