Advertisement

4

அச்சம், அதைக்கண்டுதான் நான் அஞ்சுகிறேன்.

        நாட்கள் வாரங்களாக., வாரங்கள் மாதங்களாக போகத் தொடங்கி இருந்தது.,

         இன்னும் ஒரு வாரத்தில் நிஷா ஊருக்கு செல்ல வேண்டியது இருந்தது.,  ஆனால்ரஞ்சித்திடம் கேட்கலாமா., வேண்டாமா‘., என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

       ஏற்கனவே வீட்டில்  உள்ளவர்களுக்கு ரஞ்சித் தனக்கு உதவியதும்., இவள் ரஞ்சித்தோடு பழகுவதும் தெரியும்.,  அவர்கள் வீட்டை பற்றி விசாரித்தும் தெரிந்து கொண்டிருந்தனர்.,  அது போலவே ரஞ்சித்தும் அவன் வீட்டில் சொல்லியிருந்தான்.

      அந்த வாரத்தின் இறுதி நாள் சனிக்கிழமை அலுவலகம் லீவு என்ற காரணத்தினால் இழுத்து மூடித் தூங்கிக் கொண்டிருந்தாள் நிஷா.,

         அதே நேரம் போன் அடிக்க 7 மணிக்கே தூக்கத்தை கெடுத்தது யார் என்று யோசனையோடு போனை எடுத்து  பார்த்தாள்., ரஞ்சித்தின் பேரைப் பார்த்ததும் தூக்க கலக்கத்தோடு ஹலோ சொன்னாள்.

          அவனும் அந்தப்புறம் தூக்க கலக்கத்தில் தான் பேசிக் கொண்டிருந்தான்.,

        அவனோ மெதுவான குரலில்இன்னுமா தூங்குறஎன தெரிந்து கொண்டே கேட்டான்.

       “என்ன மட்டும் சொல்றீங்க., நீங்களும் தூங்கிட்டு தான் இருக்கீங்க“., என்று கேட்டாள்.

         “இன்னைக்கு ஒரு இடத்துக்கு போயிட்டு வரலாமா., கிளம்பி இருக்கியா“., என்று கேட்டான்.

        ” என்ன திடீர்னு“.,  என்றாள்.

         ” நீ அன்னைக்கு பேசும் போது சொல்லிட்டு இருந்தயே அது எல்லாம் வாங்கிட்டியா“., என்று கேட்டான்.

        “இல்ல நாளைக்கு தான் பிரண்ட்ஸோட மாலுக்கு போலாம்னு நெனச்சிருந்தேன்“., என்று சொன்னாள்.

          “சரி நீ நாளைக்கு வாங்கு.,
இன்னைக்கு நீ வந்தா என் தங்கச்சிக்கு ஏதாவது வாங்கனும்னு நினைச்சேன்.,  அதுக்கு போகணும்., நீ கெளம்பி என்கூட வர்றீயா“., என்று கேட்டான்.

           “சரி வரேன்“., என்று யோசனைக்குப் பிறகு சொன்னவள்.,  “எத்தனை மணிக்கு வருவீங்க“., என்று நேரத்தை கேட்டு அறிந்து கொண்டாள்.

         அவன் நேரம் சொன்னவுடன்சரி கிளம்பி இருக்கிறேன்“., என்று சொன்னாள்.

                தயாராகி நேரத்தைப் பார்த்துக் கொண்டு காத்திருந்தாள். ‘மதிய உணவை ஏற்கனவே ஏஞ்சல் வெளியில் ஆர்டர் செய்து கொள்ளலாம்என்று சொல்லி இருந்தால்., அன்று இருவரும் சமைக்கும் எண்ணத்தில் இல்லை.,

       காலை உணவை மட்டும் இருவரும் சேர்ந்து செய்து உண்டு விட்டு.,  ஏஞ்சல் தன் அலுவலக வேலை பாக்கி வைத்திருப்பதால் அதை செய்ய தொடங்கினாள்.

             ரஞ்சித்தின் போன் வர வேகமாக கீழே இறங்கிச் சென்றாள்., ஏஞ்சலிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றாள்.

       அவனோபோலாமா“., என்று கேட்டான்.

         “ம்ம்., போலாமேஎன்று சொன்னபடி  அவன் வண்டி அருகில் சென்றாள்.,

      “நீ என்னோட வண்டியில வரல., அந்த கேப்ல வர்ற“., என்று சொல்லி அருகில் இருந்த காரை காட்டினான்.

         “இதெல்லாம் அநியாயம் பாத்துக்கோங்க., நான் வரமாட்டேன்என்றவள்.,  “நான் ரூமுக்கு போறேன்என்று திரும்பி போனவளை.,

        “ஒழுங்கா வந்து காரில் ஏறு“., என்றான்.

         “நீங்களும் வர்றீங்களா., இந்த வண்டிய விட்டுட்டு போகலாம்“., என்று சொன்னாள்.

     “இப்ப கார்ல ஏறனா.,  சேர்ந்து மதுரைக்கு போகலாம்., இல்லனா., நான் ஊருக்கு வர மாட்டேன்., எப்படி வசதி“., என்று கேட்டான்.

         அதிர்ந்து போய் பார்த்தவள்., ‘ஐயோ ஊர் வரைக்கும் தூரம் ஜாஸ்தி.,  தனியா போக முடியாதே‘.,  என்ற எண்ணத்தோடுநிஜமா கூட வர்றீங்களா“., என்று அவனிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தாள்.

        சிறுபிள்ளை போல கேட்பவளை பார்த்து சிரிப்பு வந்தாலும் உதட்டை அழுத்தமாக மூடியிருந்தவன் சிரிப்பை உள்ளுக்குள் மறைத்தான். “நிஜம் தான்“., என்று சொன்னான்.

           ” நீ முன்னாடியே போ., அப்புறம் எப்படி உன்னை தைரியமான பொண்ணா மாற்றுவது., நீ தைரியமா இரு., நான் மாலுக்கு சரியா வந்துடுவேன்“.,என்று சிலவற்றை சேர்த்து சொன்னான்.

        “சரி“., என்று பயந்து பயந்து காரில் ஏறியவுடன் அருகில் வந்து கதவை சாத்தி விட்டு குனிந்து அவளைப் பார்த்தவன்.,

         “பின்னாடி தான் வருவேன்“., என்று சொல்லி விட்டுநான் சொன்ன மாதிரி தைரியமா இரு“., என்று சொன்னான்.

        டிரைவரை பார்த்து…. “நீங்க முன்னாடி போங்க நான் வர்றேன்“.,என்று சொன்னான்.

         “சரிங்க தம்பி“., என்று சொல்லிவிட்டு அவர் வண்டியை ஸ்டார்ட் செய்யவும்., நிஷா கடவுள்களை எல்லாம் துணைக்கு அழைத்தாள்.

              கார் கிளம்பியதும் காரின் பின்னாலேயே அவன் வண்டியில் சென்றாலும்., அவளின் மனது படபடவென அடித்துக் கொண்டது. அவ்வப்போது திரும்பிப் பார்த்துக் கொள்வாள்.,

       சில இடங்களில் அவன் வண்டி காரை பின் தொடர்வது போல தெரியவில்லை என்றால்., அவளின் படபடப்பு கூடிவிடும்., காரில் ஏறும் போது அவனின் முதல் கண்டிஷன்கார் மாலில் போய் நிற்கும் வரை நீ எனக்கு போன் பண்ண கூடாது., நான் பின்னாடி தான் வந்துட்டு இருக்கேன்., பயந்து போய் போன் பண்ணுனா.,  ரிட்டர்ன் வரும் போது உனக்கு கார் தான்“., என்று சொன்னான்.

       ‘ரிட்டர்ன் வரும் போது எங்கே தனியே காரில் ஏற்றி அனுப்பி விடுவானோ.,  என்ற பயம் ஒரு புறம் இருந்தது., அது மட்டுமல்லாமல் ஊருக்கு அழைத்துச் செல்ல அவன் துணை வேண்டும்‘., என்ற எண்ணமும் இருந்ததால்., பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருந்து கொண்டாள்.

            தன்னை தைரியமாக காட்டிக்கொள்ள ஓரளவுக்கு பழகி இருந்ததால்., அது போலவே அமர்ந்து கொண்டாள். செல்லில் அவ்வப்போது எதுவோ செய்வதுபோல குனிந்து கொண்டே செல்லை பார்த்துக் கொண்டும்., வெளியே வேடிக்கை பார்ப்பது போல பார்த்து கொண்டே வந்தாள்.

        ஏற்கனவே அக் காரை அழைத்துக் கொண்டு வரும் போதே அவர் அவனுக்கு தெரிந்தவர்  தான்  இருந்தாலும்., டிரைவரிடம் சொல்லி வைத்திருந்தான்.

      “அவள் சற்று பயந்த சுபாவம் இதுவரை பயந்து போயி கேப் போகவே மறுத்திருக்கிறாள்., இப்போது நீங்கள் அவளிடம் பேசி நடந்து கொள்ளும் விதத்தில் தான்., இன்னும் அவள் கேப் ல் போவதைப்பற்றி யோசிக்க வேண்டும்., எனவே அவளுடைய நடவடிக்கை எப்படி இருக்கிறது, என்று பார்த்துக் கொள்ளுங்கள்“., என்று சொன்னான்.

     அதனால் டிரைவரும் அவ்வப்போது பார்த்துக் கொண்டார்., சாதாரணமாக இருப்பது போல காட்டிக்கொண்டாலும் அவளுக்குள் இருக்கும் பயம் அவருக்கு புரிந்தது., இருந்தாலும் இப்பெண்ணை அப்படி விடக்கூடாது என்ற எண்ணத்தோடு மெதுவாகப் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார்.

       “தம்பி சொன்னாப்ல மா நீங்க தம்பி ஊராமே“., என்று பேச்சை தொடங்கினார்.

          “ஆமா., அவங்களை நல்ல தெரியுமா“.,  என்றாள்.,

         அவரோநல்ல தெரியுமா., வெளியே எங்கேயும் போறதுனா தம்பி என்னை தான் கூப்பிடுவாங்க..   ஊரிலிருந்து யாரும் வரும் போதும் சரி., ஏதும்  அவசரம் ஆனாலும்  நான் தான் போய் கூட்டிட்டு வருவேன்.,  அப்படி  பழக்கம் தான்“., என்று சொன்னார்.

         அவளுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது போல இருந்தது., ‘சரி அப்போ அவனுக்கு தெரிந்தவர் தான்என்ற எண்ணத்தோடு பேச தொடங்கினாள்., அவர் சொல்வதற்கெல்லாம் ம்ம்ம் ம்ம்., என்று மட்டும் கேட்டுக் கொண்டு வந்தாள்..

       “அம்மாடி நீங்க பயப்படாதீங்க., தம்பி சொன்னாப்ல., ஆனா பொம்பள புள்ள இந்த காலத்தில பயந்த சுபாவமா இருக்கக்கூடாது ., எனக்கு நீங்க சாதாரணமா உட்கார்ந்திருக்க மாதிரி தான் தெரியுது., ஆனாலும் உங்க மனசுக்குள்ள இருக்க பயம் லேசாக அப்பப்போ உங்க செய்கையில் வெளியே தெரியுது.,

          நீங்க வந்து பொதுவா வேற கேப்ல ஏறுவதா  இருந்தா., கேப் நம்பர பாத்துக்கணும்., நம்பர பாத்துட்டு கார்ல ஏறும் போதே டிரைவர்  பேர் என்னன்னு கேட்டுக்கோங்க., கேட்டுட்டு அவங்க ஐடி கார்டு வச்சிருப்பாங்க.,  கம்பெனில ஐடி கார்டு கொடுக்குறாங்க இல்ல., அந்த மாதிரி இப்போ கேப்ல இருக்குற டிரைவர் ட்ட இருக்கும்., அந்த ஐடி கார்டை போட்டோ எடுத்துட்டு., கார் நம்பரையும் போட்டோ எடுத்து உங்களுக்கு வேண்டப்பட்டவங்களுக்கு அனுப்பி வைச்சிருங்க..,

        இந்த கார்ல நான் போறேன்., இந்த ட்ரைவர் இருக்காரு அப்படின்னு அனுப்பிட்டீங்க ன்னு வையுங்களேன்.,  நீங்க போய் இறங்கின துக்கு அப்புறம் எந்த  யாருக்கு நீங்க அனுப்பினீங்களோ., அவங்களுக்கு நீங்க போய் சேர்ந்துட்டீங்க அப்படிங்கற தகவல் கொடுக்கணும்., இந்த மாதிரி விஷயங்களை நீங்க கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா., பிரச்சினை எதுவும் வராது., எல்லாரும் தப்பு பண்றது கிடையாது., ஏதோ ஒரு சிலர் பண்ற தப்பு னால.,  இந்த மாதிரி நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது இருக்கு.,

      அதே மாதிரி தான் ஆட்டோ ஏறும்போதே யாரு எவரு எல்லாத்தையும் நோட் பண்ணிட்டு ஏறனும்., ஆட்டோ டிரைவர் சீட்டுக்கு பின்னாடியே தகவல்கள் ஒட்டியிருக்கும்., ஆட்டோ நம்பர்.,  டிரைவர் பேரு., ஓனர் பேரு., ன்னு.,  இப்பல்லாம் ஆர்டிஓ ஆபீஸ்ல இருந்து ஆட்டோ  டிரைவர் சீட்டுக்கு நேர் பின்னாடி ஒட்டிருவாங்க.,

       அதெல்லாம் போட்டோ எடுத்து யாராவது வேண்டியவங்களுக்கு அனுப்பி., இந்த ஆட்டோல வர்றேன் அப்படிங்கறத தெரிவிக்கலாம்., அதனால பயப்படாதீங்க.,  இப்பவும் உங்களுக்கு பாதுகாக்க நிறைய விஷயங்கள் இருக்கு., அதனால தைரியமா இருக்க பழக வேண்டும்“.,  என்று அரசு பேசிக்கொண்டே வர வர.,

        இவளோஇவ்வளவு விஷயங்கள் இதில் இருக்கிறதா‘., என்று யோசித்துக் கொண்டே வந்தாள்.,

        சற்று நேரத்தில் மால் வரவும் சரியாக இருந்தது., அவளை அங்கேயே இறக்கிவிட்டு., அவர் அந்த இடத்திலேயே நிற்க அவளும் சுத்தி முத்தி பார்த்துக் கொண்டிருந்தாள்.,

         அடுத்த ஐந்து நிமிடத்தில் ரஞ்சித் வந்து சேரவும் வேகமாக சென்று அவன் வண்டி அருகில் நின்று கொண்டாள்.,

              இவள் பணம் கொடுப்பதை கேப் டிரைவர் வாங்கமாட்டேன் என்று  சொல்லி இருந்ததால்.,

       அவன்சரி ண்ணா., நீங்க போங்கஎன்று சொல்லி அனுப்பினான்.

  “அவருக்கு பணம் கொடுக்கலையா“.,  என்று கேட்டாள்.

  “கொடுத்து தான் கூட்டிட்டு வந்தேன்“., என்று சொல்லி விட்டு வண்டியை பார்க்கிங்ல் விட்டு விட்டு அவளை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்றான்.

     அங்கும் அவளுக்கு தேவையானதை அவளையே தேர்ந்தெடுக்க வைத்தவன்.,  அவன் தங்கைக்கும் அவளை வைத்தே தேர்ந்தெடுத்தான்.,

         பின்புவா சாப்பிடலாம்“., என்று சொன்னான்.

      “இல்ல நான் வீட்டுக்கு போகிறேன்“.,  என்று சொன்னாள்.,

     “இவன் ஏன் என்கூட சாப்பிடக் கூடாதா“.,  என்று கேட்டான்.

        “அப்ப நீங்க பே பண்ணனுமா., இல்ல நான் பே பண்ணனுமா ன்னு சண்டை வரும்., அது எதற்கு“., என்று கேட்டாள்.

         “சரி நீயே பே பண்ணு., இப்ப வா சாப்பிட போகலாம்“., என்று சொன்னாள்.

       இவளும் போன் செய்து ஏஞ்சலுக்கு கேட்க., அவளும் தான் ஆர்டர் செய்து கொண்டதாக சொன்னாள்.,

        மாலில்  சுற்றும் போதும் அவளிடம் சில விஷயங்களை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான்., 

       எப்போதும் எப்படி இருக்க வேண்டும்.,  உள்ளுணர்வு பெண்களுக்கு பொதுவாக காட்டிக் கொடுக்கும்., அதை உன்னிப்பாக கவனித்தாலே போதும்., எப்போதும் ஒரு படபடப்பு பயம் என்ற நிலையில் நீ இருக்க கூடாது.., உன் மனதை அமைதிப்படுத்தி கொண்டால் மட்டுமே உன் உள்ளுணர்வு உனக்கு உணர்த்தும் விஷயத்தையும்.,

       ஆபத்து இருக்கிறதா இல்லையா.,  மற்றவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெளிவு படுத்த முடியும்“., என்று சொன்னான்.

     அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளைஎன்ன“., என்று கேட்டாள்.

         “இல்ல சாமியார் மாதிரி உள்ளுணர்வு பற்றி  பேசுறீங்களே., நீங்க உண்மையிலே ஐடில தான் ஒர்க் பண்றீங்களா., இல்ல எதுவும் சாமியார் ட்ட சிஷ்யனா சேர்ந்து இருக்கீங்களா“.,  என்று கேட்டாள்.

            “அது எப்படி என்கிட்ட மட்டும்  உனக்கு வாய் நீண்டு போகுது., பேச்சும் வருது“., என்று கேட்டான்.

         “அது ஏனோ., அப்படி தானா வருது“., என்று சொன்னாள்.

           “வரும்., வரும்“., என்று சொல்லி கிண்டல் செய்து கொண்டே இருந்தாலும்.,  அவளிடம் தனியே சில விஷயங்களை செய்ய எப்படி பழக வேண்டும் என்பதற்கு அரிச்சுவடி போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

         உணவை முடித்துக் கொண்டு திரும்பும் போது அவனோடு வண்டியில் வந்தவள்., இப்போதெல்லாம் அவன் தோளில் கை வைத்து அமர்வதை பெரிதாக எடுப்பதில்லை., அது போலவே அமர்ந்து வந்தவள் அவனிடம் பேசிக் கொண்டே வந்தவள்.,

          டிரைவர் சொன்னதை எல்லாம் சொன்னாள்.,

       அவளிடம்இதை தான் ப்ரண்ட்ஸ் ம் சொல்லி இருப்பாங்க., ஆனா உனக்கு புரியாது., அதனால தான் தெரிஞ்சவங்க கேப்   ஏற்றி விட்டேன்., இன்னும் ஒன்னு ஒன்னா கத்துக்கோ சரியா“.,  என்று சொன்னான்.

       “ஐயோ ஊருக்கும் என்னை இப்படி தான் ஏத்தி விடுவீங்களா“., என்று கேட்டாள்.

        “அதுக்கு இன்னும் கொஞ்ச நாள் இருக்கு., ஆமா டிக்கெட் நானே போட்டுருவேன் சரியாஎன்றான்.

          “அதுக்கு நானே பண்ணுறேன்என்று சொன்னாள்.

          “அம்மா தாயே., பணம் எல்லாம் கணக்கு பார்த்து வாங்கிடுவேன்.,  டிக்கெட்டு எல்லாம் போட்டு உன்னை கூட்டிட்டு போற அளவுக்கு., நான் ரொம்ப சம்பாதிக்கலை சரியா., ஓசில எல்லாம் கூட்டிட்டு போக முடியாது“., என்று சொன்னான்.

        அவனை பார்த்துஅவ்வளவு கஞ்சமா நீங்க“., என்று சொன்னாள்.

       இங்க இருந்து மதுரைக்கு போறதுக்கு ரிசர்வேஷன் எவ்வளவு தெரியும் இல்ல., பஸ் டிக்கெட் ம் சரி.,  ட்ரெயின் டிக்கெட் ம் சரி“., என்றவன்., “ஆமா ட்ரெயின்ல போவோமா., பஸ்ல போவமா“., என்று கேட்டான்.

       “எதுனாலும் ஓகே., நீங்க தான் கூட வர்றீங்க இல்ல“., என்று சொன்னாள்.

        அவனிடம் பேசிக் கொண்டிருக்க அவனும் வண்டியின் கண்ணாடியில் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.,

       ‘இந்த முறை ஊருக்கு செல்லும் போது நிச்சயமாக அவர்கள் பெற்றோரிடத்திலும்., அண்ணன்கள் இடத்திலும் கேட்கவேண்டும்என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.,

         அவளை அவர்கள் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட் வாசலில் இறக்கிவிட்டு கிளம்ப போனவனிடம்., “வந்து  காபியாவது குடிச்சிட்டு போலாம் இல்ல“., என்று சொன்னாள்.

           “மணி 2 ஆகுது., இது உனக்கு காபி குடிக்கிற டைமா“., என்றான்.

       “அப்ப ஜூஸ்“., என்று கேட்டாள்.

      “அடிக்கிற வெயிலுக்கு நான் வீடு போய் சேர பார்க்குகிறேன்“., என்று சொன்னான்.

       அவள் சிரித்தபடி அவனை பார்க்கவும்.,

    “என்ன நக்கலா சிரிக்கிற., ஏற்கனவே வெயிலில் காய்ந்த மாதிரிதான் இருக்கேன் நினைக்கிறாயோ“., என்று சொன்னான்.

         சேச் சே.,  அப்படி எல்லாம் நான் நினைக்கமாட்டேன்.,  எப்படி இருந்தா என்ன., நம்மளோட மக்கள் கலரே இதுதான்., சும்மா  இந்த மாதிரி அதிகமா பேசறது.,  நம்ம மக்கள் தான் பேசுறாங்க.,  இங்க எல்லாம் யாரும் ரொம்ப கண்டு கொள்ளவில்லை“., என்று சொன்னாள்.,

      “நீ தான் அடிக்கிற வெயிலுக்கு., நான் கருகிருவேன் ங்கிற மாதிரி பார்த்தியே.,  அதுதான் கேட்டேன்“., என்றான்.

           “அதெல்லாம் ஒன்னும் ஆகாது., கிளம்புங்க கிளம்புங்க“., என்று சொல்லி அவன் தங்கைக்காக எடுத்தவற்றை அவன் கையில் பத்திரமாக கொடுத்து அனுப்பினாள்.

      அவன் வண்டி அங்கிருந்து கடக்கும் வரை நின்று பார்த்துக் கொண்டே இருந்தாள்.

     உருவத்தில் இல்லை
     உன் மனதில்
     இருக்கிறது
     மொத்த அழகும்.,

Advertisement