Advertisement

என்னது பேச மாட்டியா“.,  என்று  கேட்டான்.

      பேசுவேன்., பேசுறதுனா  நார்மலா ஆபீஸ்ல ஹாய்னா., ஹாய்.., பாய்னா., பாய் அவ்வளவு தான்., மற்றபடி நான் எதுவும் தேவையில்லாமல் பேசிக்க மாட்டேன்“., என்று சொன்னாள்.

          “இந்த வாட்ஸ்அப்.,அந்த மாதிரிலாம்“., என்றான்.

       “இல்ல ஆபீஸ்க்கு மொத்தமாக ஒரு குரூப்.,  டீமுக்கு ஒரு குரூப்., இருக்கும் இல்ல அந்த குரூப்ல மட்டும் தான் பேசுவோம்.,  அதுவும்  ப்ராஜெக்ட் சமந்தமா அந்த குரூப்ல பேசுவேன் அவ்வளவு தான்“.,  என்று சொன்னாள்.

      அவனுக்குஇவள் நம்மிடம் மட்டும் தான் இப்படி இருக்கிறாள்‘., என்ற எண்ணம் தோன்றியது.

         பின்பு உணவு விடுதிக்கு அழைத்து சென்றான். அவளுக்கு தேவையானதை கேட்டு ஆர்டர் செய்து உணவை வாங்கிக் கொடுத்தான். இருவரும் உண்டு விட்டு எழவும்., இவள்நான் பே பண்றேன்என்று சொன்னாள்.

        “பிச்சுருவேன் பேசாம இரு“., என்று சொல்லிவிட்டு அவனே பே பண்ணவும் அவனை முறைத்து பார்த்துக்கொண்டே நின்றாள்.,

       “என்ன திடீர்னு முறைக்க எல்லாம் செய்ற“., என்று கேட்டான்.

         “அதெல்லாம் ஒன்னும் இல்ல., நான் பே பண்ணா என்ன“., என்றாள்.

        “ஏன் நான் பே பண்ணா என்ன“., என்று அவன் கேட்டான்.

          “ஒண்ணும் இல்லை“., என்று சொல்லிவிட்டு அமைதியாகவும்,

           அவனுக்கு சிரிப்பு தான் வந்தது., ‘பெருசா முறைக்க மட்டும் தெரியும்.,
பதில் கேட்டா வாயிலிருந்து வார்த்தை வர மாட்டேங்குது‘., என்று நினைத்துக் கொண்டான்.

         அவளை அழைத்து வீட்டில் விட்டு விட்டு., அதன் பிறகு அவன் வீடு நோக்கி சென்றான். அவனுக்கு அலைச்சல் தான் என்றாலும்., தன்னை மட்டும் எதிர்பார்க்கும் அவளை தனியே விட அவனுக்கு மனம் இருக்கவில்லை.

         வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த ரஞ்சித்திற்க்கும் சரி., வீட்டில் வந்து உடை மாற்றி அமர்ந்த நிஷாவிற்கும் சரி.,  இத்தனை நேர பயணத்தில் இருவரும் பேசிக் கொண்டதை மட்டுமே நினைத்துக் கொண்டனர்.,

           பார்ட்டி நடந்த ஹாலிலிருந்து கிளம்பும் போதே சற்று அமைதியாக வண்டியில் ஏறி உட்கார்ந்தவள்., அவன் வண்டியில் இருந்த கம்பியைப் பிடித்தபடி தனது அமர்ந்திருந்தாள்.,

         அவனோ திரும்பி பார்த்தபடிநல்ல உட்கார்ந்து இருக்கியாஎன்று கேட்டான்.

      ம்ம்ம்., ம்ம்ம்  என்று மட்டுமே பதில் சொன்னாள்.

      அவனும் வேறு எதுவும் சொல்லாமல் உணவருந்தும் இடத்திற்கு அழைத்து வந்த பிறகு தான்., சற்று சாதாரணமானாள்.,

      உணவருந்தும் இடத்தில் உணவுக்காக காத்திருந்த போதுஏன் உனக்கு இந்த மாதிரி பார்ட்டி எல்லாம் பிடிக்காதா“.,  என்று கேட்டான்.

         பிடிக்காது ன்னு இல்ல.,  இங்கே வந்த பிறகு இது மூணாவது பார்ட்டி., முதல் ரெண்டும் ஆபிஸில்., அதனால் ஒன்னும் தெரியலை., ஆனால் இது என்னவோ ஒரு அநிஸ்ஸியான ஃபீல்.,  ஏதோ அந்த இடத்துல எனக்கு பிடிக்காத ஒரு ஃபீல் இருந்துட்டே இருந்துச்சு., நானும் அஜெஸ்ட் பண்ணி பார்த்தேன்., என்னால முடியலை அது தான் சொன்னேன்“., என்றவள்.

      “அது தான் நான் இன்னைக்கு காலைல ஆபீஸ் போகும் போதே நல்லா கிளம்பி போனேன்., ஆனால் எனக்கு என்னவோ அந்த இடத்தில இருக்க பிடிக்கல“., என்று சொன்னாள்.

         “ஏன் பிடிக்கல“., என்று கேட்டான்.

    ” எனக்கு அது சரியா சொல்ல தெரியல.,  ஆனா எப்படி சொல்றதுன்னு புரியல., ஒரு மாதிரி ஒரு டிஃபரண்டான பீல்., எனக்கு இங்க வேண்டாம்., போயிடலாம் ங்கிற மாதிரி ஒரு பீல்., மத்தபடி எனக்கு ஒன்னும் தோனல“., என்றாள்.

           “ஏன் நீயும் கோஎஜ்ஜுகேஷன் தானே  படிச்சிருப்ப., பசங்க பொண்ணுங்க பிரண்ட்ஸா இருப்பது பிடிக்காதா“.,  என்று கேட்டான்.

     “எனக்கு நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க., என் ஸ்கூல்ல ஃப்ரெண்ட்ஸ்.,  காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் இருக்காங்க., ஆனா எனக்கு இந்த  பார்ட்டி ஹால்  வித்தியாசமாக பீல் பண்ணினேன்.,   பொதுவா நம்ம மிடில் கிளாஸ் ஃபேமிலி ., நார்மலா ஊர் பக்கம் இருந்து வந்தவங்களுக்கு  ஓவர் மார்டன் ஒத்துக்காது இல்ல., மே பி அந்த மாதிரி கூட இருக்கலாம்“., என்று சொன்னாள்.

        “உனக்கு அந்த மாதிரி எதுவும் இன் ஃப்யாரிட்ரி காம்ப்ளக்ஸ் இருக்கா நிஷா“., என்று ரஞ்சித் கேட்டான்.

        “நிச்சயமா இல்லை., நான் என்னைக்கும்  என்னைய குறைச்சி எடை போட்டது கிடையாது., நான் பயப்படுவேன் அது ஒன்னு தான் என்கிட்ட உள்ள ஒரு பெரிய குறை., மே பி எங்க வீட்ல எங்க அம்மா அப்பா என்னை வளர்த்த விதமா இருக்கலாம்“., என்று சொல்லி அவள் வீட்டில் அவளை எப்படிப் பாதுகாத்தார்கள்.

       எப்படி கல்லூரிக்கு கொண்டு விட்டு கூட்டி வந்தார்கள் என்பதை பற்றி சொல்லி கொண்டிருந்தாள்.,

          அதனால  தான் எனக்கு பயம் வந்தது அப்படிங்கிறது., எங்க வீட்டுல எல்லாருக்குமே தெரியும்., எனக்கும் தெரியும்.,  நான் எங்க போனாலும் அம்மா அப்பா அண்ணாவைத் தவிர வேற யார் கூடவும்  போனது கிடையாது.

    அதனால தான் எனக்கு யார் துணை இல்லாம  போனால்  பயம் இருந்துட்டே இருக்கும்., இப்ப பிரெண்ட்ஸ் கூட வெளியே போறேன் தான்., ஆனாலும் இந்த அல்ட்ரா மாடர்ன் வந்து எனக்கு ஒத்துவராது அப்படிங்கிறது என்னோட பீல்.,
என்ன எங்க  வீட்டில்  நான் வளர்ந்த விதம் அப்படி இருக்கலாம்., இப்படித்தான் இருக்கணும்., இப்படி தான் டிரஸ் பண்ணனும்., இப்படிதான் நடந்துக்கணும்னு., அப்படின்னு சொல்லி சொல்லி வளர்த்ததால., கூட எனக்கு வந்து அவங்களோடு ஒட்ட முடியாமல் போயிருக்கலாம்.,

     நான் அப்படித்தான் ஃபீல் பண்றேன்.,   அவங்களை இப்படி எல்லாம் எப்படி நடந்துக்க முடியுது அப்படின்னு எனக்குள் நானே கேட்டுகிட்டேன்., மத்தவங்கள தப்பா எடை போடுவது ரொம்ப ரொம்ப தப்பு., அதனால தான் அந்த இடத்தை விட்டு வெளியே வரணும்னு நினைச்சேன்.

    இப்பவும் பாத்தீங்கன்னா பார்ட்டில்ல  என் பிரண்ட்ஸ் இருக்காங்க., அவங்க வந்து அவங்களோட மாடன் லைஃபை என்ஜாய் பண்ணிட்டு இருப்பாங்க., அந்த நேரத்தில் என் மனசுல அவங்கள பத்தி ஒரு தப்பான அபிப்பிராயம் வந்துடக் கூடாது., அதை நான் விரும்பல அவங்க அவங்களா தான் இருக்கணும்.,

      நான் வந்து அவங்கள ஜட்ஜ் பண்ண கூடாது., அதனால தான் நான் கெளம்பனும் அப்படின்னு முடிவு பண்ணுனேன்., அந்த ஃபீல் தான் எனக்கு“..,  என்று சொன்னாள்.

         கேட்டவனோ., “யப்பா எவ்வளவு பெருசா பேசிட்ட இவ்ளோ பேசுவியா நீ“.,  என்று கேட்டான்.

   “ஏன் என்ன பார்த்தா உங்களுக்கு பேசாத மாதிரியா தெரியுது., அதெல்லாம் நல்லா பேசுவேன்“., என்று சொன்னாள்.
   
      “இல்ல, நீ இன்னைக்கு தான் என் கிட்ட இவ்வளவு பேசி இருக்க“., என்றான்.

     “இன்னைக்கு தான் நமக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு“., என்று சொல்லி அவனை பற்றி கேட்டுக் கொண்டிருந்தாள்.

         அவனும் தன் குடும்பத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டான்.

          அவன் வீட்டில் அப்பா அம்மா அவனுடைய தங்கை., இப்போது தான் திருமணம் ஆகியிருக்கிறது., வீட்டின் ஒரே பையன் அப்பா மத்திய அரசு உத்தியோகம்.,அம்மா இல்லத்தரசி என்று தன் குடும்பத்தைப் பற்றி சொல்லி விட்டு.,

     “நீ சொல்றது கரெக்டு தான்.,  யாரை பத்தியும் நாம தப்பா ஜட்ஜ் பண்ண கூடாது., ஒவ்வொருத்தர் வளர்ந்த விதம்.,  அவங்களோட பழக்க வழக்கங்களை கொண்டு வந்திருக்கும்.., நீ சொல்ற மாதிரி நம்ம ஊர்ல பார்த்தால் இப்படித்தான் இருக்கணும்னு சொல்லுவாங்க..,  பசங்க வந்து சீக்கிரமா அடாப்டட் ஆகிருவாங்க.,  யாரைப்பத்தியும் கண்டுக்க மாட்டாங்க..,  யாரோ எப்படியோ போட்டும் அப்படிங்கற மாதிரி யோசிச்சு இருப்பாங்க..,

       ஆனா பொண்ணுங்களோ.,  ஐயோ ஏன் இப்படி இருக்கிறாங்க ன்னு நினைப்பாங்க.,  தானும் அது போல மாறனும் அப்படிங்கற ஒரு பீல் எல்லாம் வர ஆரம்பிச்சிடும்.,  நீ சொன்னது கரெக்ட் தான்“., என்று சொன்னவன்.

        “சரி அப்புறம் தனியா டிராவல் பண்ணலாம்., எப்ப கத்துக்க போறஎன்று கேட்டான்.

         “திரு திருவென முழித்துக் கொண்டு மெதுவாக கத்துக்கிறேன்என்று சொன்னாள்.,

           “நம்ம நெக்ஸ்ட் மீட்டிங் மீட் பண்ணினோம்னா உன்னை கேப்ல தனியா அனுப்பி விடுறேன்“., என்று சொன்னான்.

        “கேப்   எல்லாம் அனுப்பாதீங்க“.,  என்று சொன்னவுடன்

      அவனோஇல்லை இல்லை நாம நெக்ஸ்ட் மீட்ல பிளான் பண்ணலாம்.,   முதல்ல உன் முகத்தில் பயத்தை காட்டாத., கண்ணை நேரா பாரு“., என்றான்.

     “நான் உங்களை நேரா தானே பார்க்கிறேன்“., என்று சொன்னாள்.

       “என்னை நேரா பார்க்கிறது வேற., யார் பேசினாலும் கண்ணை நேரா பார்த்து பேசு.,  கண்ண பாத்து பேசும் போதும் உன் கண்ணில் தைரியம் இருக்கணும்“., என்று சொன்னான்.

         அவனை பார்த்து முறைத்த படிபோதும் அட்வைஸ்“., என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே உணவு வர அருந்தி விட்டு கிளம்பினர்.,

      அங்கிருந்து கிளம்பும்போது அவனோடு சகஜமாகப் பேசியபடி வண்டியில் ஏறியவள் பேசிக்கொண்டே ஏறியதில் தோழியோடு ஸ்கூட்டியில் போகும் போது ஏறுவது போல ஏறி அமர்ந்து., அவள் கையை அவன் தோளில் வைத்து விட்டாள்.,

     பின்பு நினைவு வந்தவளாக கையை எடுத்துவிட்டுசாரி“., என்றாள்.

       “பரவால்ல புடிச்சுக்கோ., நான் ஏற்கனவே பயந்து தான் மெதுவா வந்தேன்.,  நீ எங்கே கீழே விழுந்துடுவீயோ ன்னு.,  ஸ்பீட் பிரேக்கர் எல்லாம் ஏறி இறங்கும் போது கொஞ்ச நேரம் கழித்து திரும்பிப் பார்ப்பேன்.,   வண்டியில் தான் உட்கார்ந்து இருக்கீயா., இல்ல எங்கேயாவது பல்டி அடிச்சியா ன்னு“., என்று சொன்னான்.

       “அதெல்லாம் ஒன்னும் பல்டி அடிக்க மாட்டேன்., நீங்க கிளம்புங்க வீட்டுக்கு போகலாம்“., என்று சொல்லி அவனோடு வீட்டுக்கு வந்து இறங்கிக் கொண்டாள்.,

      இதையெல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு.,   ‘நிச்சயமாக தான் கொஞ்சமாவது மாறுவோம்என்ற நம்பிக்கை வந்தது.

      அது போலவே அந்த நினைவுகளோடு அவனும்  தங்கியிருந்த இடம் வந்து சேர்ந்தான்.

           அவனுக்கும் அதே எண்ணம் தான்நிச்சயமாக அவள் மாறுவாள்.,  கொஞ்சமாவது அவளை மாற்றி விடலாம்என்ற எண்ணம் இருந்தது.

     ‘இப்ப உள்ள காலத்தில் ஒரு பெண்ணை இப்படியா வளர்த்து வைப்பாங்கஎன்று அவர்கள் மீதும்  அவனுக்கு கோபம் வந்தது.,

        இருவரின் எண்ணங்களும் ஒரே அலைவரிசையில் பயணித்தது.

அரவணைக்க கைகள்
வேண்டாம்.,
பார்வை போதும்

Advertisement