Advertisement

3

இன்றைய உங்கள் ஒரு சிறு முடிவு, நாளைய அனைத்தையும் மாற்ற முடியும்.

      நிஷாவிற்கு நாட்கள் அழகாக நகர்ந்தது போல தோன்றியது.,

        இப்பொழுதெல்லாம் இருவரும் வாட்ஸப்பில் சேட் செய்துக் கொண்டாலும்.,  அவர்கள் படித்ததையும் ரசிப்பதையும் பகிர்ந்து கொண்டார்கள்.

           குட் மார்னிங்., குட் நைட் என்பது அவர்களுக்குள் இருக்கவே இருக்காது.,  பிடித்த விஷயங்களை மட்டுமே இவள் பகிரவாள்.,  அதை போல் அவன் ரசித்த விஷயங்களும்., பிடித்த விஷயங்களும் அவனும் பகிர்ந்து கொண்டிருந்தான்.

         அவளை மெதுமெதுவாக தனியே இருக்க வேண்டும் என்று அவள் அறியாமலேயே அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மனதில் ஏற்றிக் கொண்டிருந்தான்.,

          அனைத்தையும் பழகிக்கொள்ள வேண்டும் என்று அவன் சொல்ல சொல்ல முதலில் யோசித்தாலும்., பின்பு பழகிக்கிறேன் பழகிக்கிறேன் என்று சொல்லத் தொடங்கியிருந்தாள்.,

       இவனும் சரி ஏதோ இந்த அளவுக்கு இறங்கி வருகிறாளே என்று நினைத்துக்கொண்டான்., இப்படியே நாட்கள் கடந்து சென்று கொண்டிருக்க.,

        நிஷாவின் அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் பெண்ணிற்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.,

     இன்னும் ஒரு மாதம் திருமணத்திற்கு இருக்கும் நிலையில்., அலுவலகத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் பார்ட்டி வைப்பதாக சொல்லி மாலை நேரம் அனைவரையும் வரச் சொல்லி இருந்தார்கள்.

        இவளோடு வேலை பார்ப்பவர்கள் வருவது போல., மாப்பிளையுடன் வேலை பார்ப்பவர்களும் அந்த பார்ட்டிக்கு வந்திருந்தனர்.

       ஏஞ்சல் மற்றும் சில தோழிகளுடன் அங்கு இருந்தாலும் ஏதோ ஒரு ஒட்டா தன்மை அவளை அங்கு இருக்க விடாமல் செய்தது., “ஏஞ்சல் எப்போது இது முடியும்.,எப்ப வீட்டுக்கு போலாம்“., என்றாள் நிஷா.

        “நீ என்ன சின்ன புள்ளையா., எங்க போனாலும் வீட்டுக்குபோவோம்.,  வீட்டுக்குபோவோம் ன்னு கேட்டுக்கிட்டிருக்க., வேலைக்கு வந்தா பத்தாது., இதெல்லாம் கலந்துக்க கற்றுக்கனும்., ஆபீஸ்ல பார்ட்டி வைத்தாலும் வந்து தான் ஆகணும்“., என்றாள்.

       பார்ட்டி கலைகட்டத் தொடங்கியது.,  பெண்ணின் தோழர் தோழிகள்., மாப்பிள்ளையும் தோழர் தோழிகள்., என ஒரு பட்டாளமே இருந்தது.,

        அனைவரும் சிறுசிறு வகையில் ஜூஸ்., மது என அருந்த தொடங்கினர். இவளுக்கு தான் அங்கு இருக்க பிடிக்காமல் முகம் மாறாமல் காத்திருந்தாள்., பெண்களும் இப்போதெல்லாம் ஒயின் அருந்துவதை தவறாக கருதாமல் எல்லோரும் எடுத்துக்கொண்டனர்.

       இவளோ வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டாள். ஜூஸ் என்று கொடுக்க அதை குடிக்கவும் அவளுக்கு பயம் வந்தது., அவள் அறியாமல் கேள்விப்படும் சில விஷயங்கள் அவளை பயமுறுத்த., மெதுவாக ஏஞ்சலிடம் சென்றவள்.,  “நான் வேணா கிளம்பட்டா“., என்று கேட்டாள்.

           ஏஞ்சலோ அவளை ஆச்சரியமாக பார்த்தாள்., “தனியா எப்படி போவ., டின்னர் முடிச்சிட்டு ஒரேடியா போலாம்., வெயிட் பண்ணு“.,என்றாள்.

         “எப்படியும் டின்னர் முடிந்து வீட்டுக்கு கிளம்புவதற்கு 10மணி ஆகுமா“., என்று நிஷா கேட்டாள்.

   “ஆமா பத்தரைக்குள்ள  வீட்டுக்கு போய் சேர்ந்திடலாம்“., என்று சொன்னாள்.

        அதுமட்டுமில்லாமல்., தோழிகள் அனைவருக்கும் மணப்பெண் வீட்டில் ஏற்பாடு செய்து கொடுக்கும் கேப்ல்  கூட சென்று இறங்கி கொள்ளலாம் என்று பேசிக் கொண்டிருந்தனர்.

        இவளுக்கு தான் மனம் கொள்ளாமல்.,  “இல்ல நான் வீட்டுக்கு போறேன்“., என்றாள்.

         “இப்பவே மணி எட்டரை ஆயிடுச்சு., இன்னும் கொஞ்சம் நேரம் இருஎன்று சொன்னாள்.

     சற்று நேரம் இருந்து பார்த்தாள்., அதற்கு மேல் இருக்க முடியாது என்ற சூழ்நிலையில் அதுவரை ரஞ்சித்திடம் போனில் அழைத்து பேசாதவள்.

        அன்று அழைத்து விட்டாள்., அவனும் இந்த நேரத்தில் எதற்கு அழைக்கிறாள் என்ற எண்ணத்தோடு டிராஃபிக்கில் இருந்தவன்., சற்று வண்டியை ஓரம் கட்டிவிட்டுசொல்லு நிஷா“., என்று கேட்டான்.

           “டிஸ்டர்ப் பண்ணிட்டேனா“., என்று கேட்டாள்.

             “அதெல்லாம் ஒன்னும் இல்ல., இப்ப வொர்க் முடிஞ்சி வீட்டுக்கு போய்ட்டு இருக்கேன்“., என்று சொன்னான்

          “நான் இங்க இருக்கேன்“., என்று சொல்லி தன் சூழ்நிலைகளை சொன்னாள்.

         “இதுல என்ன இருக்கு., ஃபிரண்ட்ஸோட சேர்ந்து பார்ட்டிய என்ஜாய் பண்ணிட்டு., சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போ“., என்று சொன்னான்.

          “இல்ல., எனக்கு இங்கிருக்கப் பிடிக்கல., வீட்டுக்கு போனும் போல இருக்கு., ப்ளீஸ்  என்னை பஸ் ஸ்டாப்ல வந்து ஷேர் ஆட்டோவில் மட்டும் ஏற்றி விட்டுருவீங்களா., நீங்க எங்க இருக்கீங்க ரொம்ப டிஸ்டன்ஸ் இருக்கீங்களா.,  சாரி டிஸ்டர்ப் பண்றேனா“., என்று கேட்டாள்.

       அவளிருந்த தொலைவிலிருந்து அவன் ஒரு கால் மணி நேர பயணத் தொலைவிலேயே நின்றிருந்தான்.,

        “நான் வரதுக்கு கால்மணி நேரமாகும்.,  அங்கேயே வெயிட் பண்ணு.,  மே பி டிராஃபிக் ல்ல கூட அஞ்சு நிமிஷம் பத்து நிமிஷம் கூட ஆகலாம் வந்திடறேன்“., என்று சொன்னான்.

         பிறகு அமைதியாக ஒரு ஓரமாக அமர்ந்து காத்திருக்கத் தொடங்கினாள்.,  அதேநேரம் இவள் பேசுவதை பார்த்து விட்டு ஏஞ்சல் வந்துஎன்ன ஆச்சுஎன்று கேட்டாள்.

             இவள் ரஞ்சித்தை அழைத்து சொன்னதை சொல்ல., அவளோமணி அந்தா இந்தா ன்னு ஒன்பதாக போகுதுஇப்ப அவரை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்க., இன்னும் கொஞ்ச நேரத்தில் முடிஞ்சிரும்., உன்னால அஜெஸ்ட் பண்ணி இருக்க முடியாதா., டின்னர் முடிச்சிட்டு போயிடலாம்“.,  என்று சொன்னாள்.

     மற்றவர்களுக்காக., சில விஷயங்களில் முகம் காட்டாமல் அமைதியாக ஒதுங்கி இருந்தாலும்.,  கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்தாலும்.,  இவளுக்கு என்னவோ அந்த சூழ்நிலை ஒவ்வாததாக இருந்தது.,

      ஆண் நண்பர்களும் பெண் நண்பர்களும் இருப்பதை எல்லாம் எப்போதும் தவறாக நினைப்பது கிடையாது., படிக்கும் போதே இருபாலர் சேர்ந்து படிக்கும் பள்ளி, கல்லூரியில் படித்ததால் அதெல்லாம் அவளுக்கு தவறாக தெரியாது., 

      ஆனால் ஊருக்குள்ளேயே இருந்ததால்.,இங்கு வந்து ஆண் பெண் பேதமின்றி மது அருந்துவதும்., நடனம் ஆடுவதும் இது எல்லாம் சினிமாவில் பார்ப்பது போல் அவளுக்கு தோன்றியது.,

        அதனாலேயே அவளுக்கு அவ்விடம் ஒவ்வாமல் இருப்பதாக தோன்றியது., வேறு வழியின்றி சொல்லிக்கொண்டு நகர்ந்து அமர்ந்திருந்தாலும்.,

     சற்று நேரம் அமர்ந்திருந்தவள் பின்தன் தோழி அலுவலக நண்பர்களோடு பார்ட்டியை என்ஜாய் செய்ய போக வேண்டாமா‘., என்ற எண்ணத்தோடு

       ஏஞ்சலை இவள் தான்என்னால் நீ எதற்கு உன்னுடைய சந்தோஷங்களை குழைக்கிறாய் போ.,  எனக்கு தான் பிடிக்கவில்லை.,  உனக்குமா பிடிக்காது போ“., என்று அனுப்பி விட்டு அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

       நேரம் போவது தெரியாமல் இருக்க.,   அவள் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்த ரஞ்சித்., வெளியிலிருந்து அவளுக்கு அழைக்க., போனை எடுத்தவள் பேசிவிட்டுஇதோ வெளியே வருகிறேன்என்று சொன்னாள்.

       இவள் எழும்புவதைப் பார்த்த ஏஞ்சல் ஏன் என்று வந்து கேட்டாள்.

      “ரஞ்சித் வந்துட்டாங்க., நான் போறேன்“.,  என்று சொல்லி விட்டு., வீட்டு சாவி மற்றும் அவள் கையில் இருப்பதை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

       “கல்யாண பொண்ணு கிட்ட சொல்லி விட்டு போ“., என்று சொன்னாள்.

            ஏஞ்சலோடு சென்று அவளிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தவள்., ரஞ்சித்தை பார்த்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.,

             அதுவரை இருந்த படபடப்பு மறைந்தது போல இருந்தது., அவளை இரஞ்சித்துடன் அனுப்புவதற்காக வெளியே வந்த ஏஞ்சல்சாப்பிட்டு போ ன்னு., சொல்றேன் கேக்குறியா, வீட்ல ஃப்ரிட்ஜில் தோசை மாவு இருக்கும்.,  எடுத்து தோசை விட்டு சாப்பிடு“., என்று சொன்னாள்.

        ரஞ்சித் தான்ஏன் என்ன ஆச்சுஎன்று கேட்டாள்.,

         இன்னும்  பார்ட்டி முடியல., ப்ரண்ட்ஸ் நிறைய இருப்பதால் டைம் இழுத்துட்டே போகுது.,  அதுக்குள்ள இவ போகணும்னு ஒரே பிடிவாதம் உள்ள இருக்க மாட்டேன்னு“.,  என்று சொன்னாள்.

            அவனோ அவளை திரும்பிப் பார்த்தான். அவன் பார்வையிலேயே இவள் பதில் சொல்லத் தொடங்கினாள்.

         “இல்ல எனக்கு இந்த அட்மாஸ்பியர் புதுசா இருக்கு., அது மட்டும் இல்லாம என்னால உடனே இதுக்கு அடாப்ட் ஆக முடியாது..,  இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் பழக இன்னும் நாளாகும்.,  உங்களுக்கு புரியும் நினைக்கிறேன்“.,  என்று சொன்னாள்.

        அவனும் வேறு எதுவும் சொல்லாமல்வண்டியில ஏறு“., என்று சொன்னாள்.

         அவனைப் பார்த்தவள்., “இல்லை நீங்க என்னை ஷேர் ஆட்டோல ஏத்தி விடுங்க“., என்று சொன்னாள்.

         அவளையே பார்த்தபடி அவன் நிற்கவும்.,

               “இல்ல.,  இங்க இருந்து பஸ் ஸ்டாப் வரைக்கும் போனாலும் போதும்“., என்றாள்.

       ” நீ இங்கே இருந்து நடந்து போயிருவ., நான் உனக்காக வண்டிய உருட்டிட்டு நடந்து வர முடியாது“.,  என்று சொன்னான்.

        ஏஞ்சலோ சிரித்துக்கொண்டே.,  “லூசாடி நீ வண்டியிலே போ., என்று சொன்னவள்., சாப்பிட்டு தூங்கு., சோம்பேறி பட்டாலும் படுவ., இன்னொரு சாவி என்ட்ட இருக்கு“.,  என்று சொன்னாள்.

      “ஒன்னும் வேண்டாம்., நானே ஆர்டர் போட்டுக்குவேன்“.,என்று சொன்னாள்.

       “எனக்கு தெரியாதா மாடியில் இருந்து கீழே இறங்கி வரமாட்ட“., என்று சொன்னாள்.

           ஏஞ்சலிடம்நான் அவள பாத்துக்குறேன்., டின்னர் முடித்து வீட்டில் கொண்டு விடுகிறேன்என்று சொல்லி அழைத்துக் கொண்டு சென்றான்.

          அவளோஎன்னை பஸ் ஸ்டாப்பில் விடுங்க போதும்“., என்று சொன்னாள்.

        “ஏன் வண்டியில் இருந்து குதிக்க போறியா“., என்றான்.

          “இல்லை நான்  எதுக்கு குதிக்கப் போறேன்.,  உங்க கூட தானே வர்றேன்“., என்று சொன்னாள்.

      அவனுக்குஇந்த பொண்ணு எப்பவுமே இப்படித்தானா., இல்லன்னா நம்ம மட்டும் தான் இப்படியா‘., என்று யோசித்தவன்.,

        “ஆமா உங்க ஆபீஸ் ஃப்ரெண்ட்ஸ் அத்தனை பேர் இருந்தாங்க இல்ல., யாரையாவது கூட்டிக்கொண்டு போய் பஸ் ஸ்டாப்பில் விடு அப்படின்னு சொல்லி இருக்க வேண்டியது தானே., என்னை எதுக்கு அவ்வளவு தூரத்திலிருந்து வர வெச்ச“., என்று சொன்னான்.,

        “ சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனாஎன்று டல்லான குரலில் கேட்டாள்.

        குரலை உணர்ந்தவன்.,  “இல்ல கேட்டேன்., தப்பா நினைக்காதே“., என்றான்.
      “இல்ல., இல்ல ஆபீஸ்ல பிரெண்ட்ஸ் எல்லாம் இருக்காங்க.,  ஆனா நான் யார் கூடவும் அப்படி பேசினது இல்லையே“.,  என்று சொன்னாள்.,

          

Advertisement