Advertisement

10

     காத்திருக்க தெரிந்தவனுக்கே அனைத்தும் கிட்டும்.

         மறுநாள் விடியலில் இருந்து வீடு களை கட்ட துவங்கியிருந்தது.,

        ஏற்கனவே முதல் நாளில் வீட்டை எல்லாம் பார்த்து பார்த்து சுத்தம் செய்து வைத்திருந்தார் அம்மா.,

        இன்று மீண்டும் வேலைக்கு ஆள் வரவும் மீண்டும் ஒரு முறை அனைத்தையும் துடைத்து வைக்க சொன்னவர்., தேவையானவற்றை லிஸ்ட் போட்டு கொடுத்துக் கொண்டிருந்தார்.,

     அண்ணனும்., அப்பாவும் தான்எதுக்கு இப்படி படபடப்பாகுற.,  நம்ம வீடு எப்பவும் போல நார்மலா இருந்தா கூட மாப்பிள்ளை வீட்ல யாரும் தப்பா எடுக்க மாட்டாங்க.,

          யாருனே தெரியாதவங்க னா தானே   தானே., நாம தயங்கனும்., என்ன நினைப்பாங்களோ., என்ன பண்ணுவாங்களோ ன்னு., இவங்க அப்படி எல்லாம் கிடையாது புரிஞ்சதா., நீ சாதாரணமா எல்லாம் ரெடி பண்ணு“.,  என்று சொல்லிக்கொண்டிருந்தார்.,

      ஈவினிங் அவர்கள் வரும் நேரத்திற்கு டிபன் செய்து கொள்ளலாம் என்று பேசிக்கொண்டிருந்தனர்., இவள் எதிலும் தலையிடாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

          அம்மாதான் முகத்தில் நிஷாவிடம்., முகத்தில் ஏதாவது கொஞ்சம் பூசி கழுவ வேண்டியது தானே“.,  என்ற சொன்னார்.

       அவளோநான் எப்பவும் போல தான் இருப்பேன்., அப்படியே இருக்கேன்“., என்று சொன்னாள்.

         “சரி சாயங்காலம் என்ன புடவை கட்ட போற“., என்று கேட்டார்.

       அம்மாவிடம்சாரி எல்லாம் கட்ட மாட்டேன் சுடிதார் தான்“., என்று சொன்னாள்.

        “சரி உன் இஷ்டம் போ“.,  என்று அம்மா  சொல்லிக் கொண்டு இருந்தாள்.,

        “அதுவும் சரிதான் இதில் எதுவுமில்லை“., என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

      மாலை நேரம் நெருங்கவும்., அம்மா தான் போய் முகத்தை கழுவிட்டு டிரஸ் பண்ணிரு., ரூமுக்கு போ“., என்று மாடிக்கு அனுப்பினார்.

           “ஆமா பெரிய இதுதான்“., என்று சொல்லிக் கொண்டே தன் அறைக்குச் சென்றவள்., சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள்.

     அப்போது தான் அவளுக்கு ஞாபகம் வந்தது., ‘இன்று முழுவதும்  ரஞ்சித்துக்கு அழைத்து பேசவே இல்லைஎன்று பின்பு.,  ‘இல்லை இல்லை இனிமேல் பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்‘., என்ற நினைவோடு எப்போதும் போல இரவு பேசிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு போனை எடுக்க போனவள்., வைத்து விட்டு அம்மா சொன்ன வேலையை செய்ய தொடங்கினாள்.

        அங்கு ரஞ்சித் வீட்டிலோ., “என்னடா பண்ணிட்டு இருக்க.,  இவ்வளவு நேரம் என்ன பண்ற.,  நான் எப்ப இருந்து உன்னை கிளம்பு கிளம்பு ன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்“., என்று கேட்டார் அவன் அம்மா.,

       “அவங்க வீட்ல நடக்கிற விஷயத்துக்கு நம்ம எல்லாம் எதுக்கு மா“., என்று கேட்டுக் கொண்டிருந்தான்., 

       “டேய் அறிவு கெட்ட தனமாக பேசாத.,  இது நிஷாவுக்கு தெரிஞ்சா எவ்ளோ வருத்தப்படுவா., கூடவே நல்ல ஃப்ரெண்ட் ன்னு பழகிட்டு சுத்துற இல்ல. இன்னைக்கு அவளுக்காக.,  இந்த விஷயத்திற்கு கூட வரலை னா., அவ என்ன நினைப்பா“., என்று அம்மா கேட்டார்.,

      “ஒன்று நினைக்க மாட்டா., பேசாம இருங்க“., என்று சொன்னவன்., 

          அது மட்டுமில்லாம வர்றவங்க  எப்படிப்பட்டவங்க என்று தெரியாது மா.,  அவள் நானும் பிரண்டா இருக்கலாம்.,  அதை உங்களால் சாதாரணமாக ஏதுக்க முடியும்., ஆனால் வர்றவங்களால அப்படி ஏத்துக்க முடியுமான்னு கூட தெரியல.,  நானே அதை யோசிச்சிட்டு இருக்கேன்.,

      நீங்க ஆளுக்கு முன்னாடி கிளம்பிட்டு இருக்கீங்க., சரி கிளம்பிட்டீங்க தானே., நீங்களும் அப்பாவும்  போயிட்டு வாங்க“., என்று சொன்னான்.

      பெற்றோர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டுஇங்க பாரு நீ கிளம்பி வர்ற அவ்வளவு தான்“., என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வீட்டுவாசலில் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்க எட்டிப் பார்த்தார் அவன் அம்மா.,

     ரஞ்சித் தங்கை வர.,  தங்கையை அழைத்துஎன்னடி இவ்வளவு நேரம்என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

     தங்கையும்., தங்கை மாப்பிள்ளையும் வரவும்., “என்ன சொல்லாமல் திடீர்னு வந்திருக்க“., என்று தங்கையிடம் மட்டும் தனியாக கேட்டான்.,

       “நான் வரக்கூடாதா., அம்மா வீட்டுக்கு ன்னு வந்தேன்.,  வந்தவளை வா ன்னு கூட கேட்காமல் எதுக்கு வந்த னா கேட்குற“., என்றவள்.

       காலையில் தான் அம்மா சொன்னாங்க., இன்னைக்கு நிஷாவை மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பார்க்க வராங்க., நாமளும் போய் பங்ஷன் ஜாயின் பண்ணனும்., நமக்கு வேண்டப்பட்டவங்க.,  நிஷா நல்ல புள்ள நம்ம செய்யலைன்னா எப்படி., நீ கிளம்பலையாஎன்று கேட்டபடி அம்மாவை தேடி போனாள்.,

      எல்லோரும் ஆளாளுக்கு கிளம்ப  சொல்லிவிட்டு அவர்கள் ரெடியாக., இவனுக்கு தான்இது என்ன குடும்பத்தோட போய் நின்னா.,  பாக்கறவங்க என்ன நினைப்பாங்க யோசிக்க மாட்டீர்களா., அம்மா அதெல்லாம் கல்யாணம் பேசி நிச்சயதார்த்தம் வைக்கும் போது எல்லாரும் சேர்ந்து போகலாம்“., என்று சொல்லி கொண்டே இருந்தான்.

       அவன் அம்மாவோஅப்படிலாம் இல்ல., இப்பவும் போனா ஒன்றும் தப்பு கிடையாது., வா வா“.,  என்று அவனை கிளம்ப வைத்து இழுத்துக் கொண்டு சென்றனர்..

    அவனோ வரும் வழியெல்லாம்பாருங்க யாராவது தப்பா நினைக்க போறாங்க.,  கொஞ்சம் கூட அதெல்லாம் யோசிக்காமல் வா வா ன்னு இழுத்திட்டு வர்றீங்க“.,  என்று சொல்ல.,

          அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்., அங்கு எல்லோரும் உள்ளே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.,

     இவனோ நிஷாவின் அண்ணனோடு வெளியவே அமர்ந்து பேச தொடங்கியிருந்தான்.,

          அப்போது தான் நிஷாவின் அண்ணனிடம்மாப்பிள்ளை என்ன செய்றாங்க.,  எங்க வொர்க் பண்றாங்க“.,  என்று மற்ற விவரங்களை விசாரித்தான்.

            இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டுஅதெல்லாம் சொல்றோம்., அப்புறம் சொல்லுங்க உங்க வொர்க் போகுது., தப்பா எடுத்துக்காதீங்க நீங்களே டைரக்டா பேசிவிட வேண்டியது தானே., அப்ப நீங்களே தெரிஞ்சுக்கோங்க“., என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

     ‘சரி ஒரு வேளை நம்ம ட்ட சொல்றதுக்கு இஷ்டம் இல்லை போலஎன்று நினைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் போதே.,

       நிஷாவும் மாடியில் படபடப்போடு அமர்ந்திருந்தாள்., இவர்கள் வீட்டினர் வந்திருக்கிறார்கள் என்பது ரஞ்சித்தின் தங்கை மாடிக்கு வந்த போது தான் தெரியும்., ரஞ்சித்தின் தங்கை அவளோடு சாதாரணமாக உரையாடிக் கொண்டிருந்தவள்.

      “என்ன ஆச்சு சுடிதாரோட உட்கார்ந்து இருக்க“.,  என்று கேட்டாள்.

        “இல்ல சேலை வேண்டாம்“., என்று சொன்னாள்.

       “அதுவும் சரிதான்., இப்ப என்ன புடவை கட்டினும் ன்னு கட்டாயமா என்ன“.,  என்று சொல்லி பேசிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

      பின்பு அனைவரும் உள்ளே வந்து அமரவும்., இரண்டு அப்பாக்களும்சரி பேசத் தொடங்கி விடுவோம்“., என்று சொன்னார்கள்.

          அப்போது தான் ரஞ்சித் சுற்றும் முற்றும் பார்க்க நிஷாவின் அண்ணன்கள் இருவரும்., “ஹலோ மாப்பிள்ளை என்ன பண்றாரு கேட்டீங்க இல்ல.,  இப்ப மாப்பிள்ளை என்ன பண்றாரு நீங்க தான் சொல்லணும்.,  சொல்லுங்க மாப்ள“., என்று கேட்டனர்.

      அவர்கள் தன்னை தான் இவ்வளவு நேரம் கிண்டல் செய்திருக்கிறார்கள் என்று புரிந்ததும்., வெட்கத்தோடு தலை குனிந்து கொண்டவன்., பட்டென்று தலைநிமிர்ந்த படி., இல்ல அவட்ட கேட்காம எதுவும் பேசாதீங்க., ப்ளீஸ் அப்படியே நிப்பாட்டுங்க., அவளுக்கு ஓகே வா ன்னு மட்டும் கேளுங்க“., என்றான்.

        நிஷாவின் அண்ணன்களும்அதை நீங்க தான் கேட்கணும்., நீங்க அவகிட்ட தனியா பேசணும்னா  பேசுங்க., அதை விட்டுட்டு அவளுக்கு இஷ்டமா கேளுங்கன்னு., சொன்னா எப்படி நாங்க போய் கேட்க முடியும்.,

       அவ எங்க கிட்ட சொல்லுறதை விட உங்க கிட்ட தான்., மறைக்காமல் சொல்லுவா.,  என்று சொல்லி கலாய்த்துக் கொண்டிருந்தனர்.

           அவனோஇது அப்படி இல்ல உங்களுக்கு புரியல.,  அவளுக்கு புடிக்கல அப்படின்னா., அந்த இடத்தில் இதை பத்தி பேசக்கூடாது., இது தேவையில்லாத பேச்சாக போயிடும்“.,  என்று சொன்னான்.,

          பெற்றவர்கள்சரிப்பா நாங்க எங்களுக்குள்ள நாங்க பேச வேண்டிய விஷயத்தை பேசுகிறோம்., எங்களுக்கு எல்லாருக்கும் மனசு ஒத்து போய் ரொம்ப பிடித்து போய் இருக்கு.,  நீங்க ரெண்டு பேரும் எந்த அளவுக்கு பிரண்டா பழகுறீங்க ன்னு., எங்களுக்கு தெரியாது., ஆனால்  நாங்க ரெண்டு குடும்பமும்., நீங்க இங்க இல்லாத போது கூட அவ்வளவு நல்ல பழகி ரெண்டு குடும்பமும் ஒன்னுக்குள்ள ஒன்னு ஆயிட்டோம்., எங்களுக்கு நிஷா  நம்ம வீட்டு மருமகளா வந்தா நல்லா இருக்கும்னு  நினைக்கிறோம்.,

         அதே மாதிரி நீ அவங்க வீட்டு மருமகனா.,  வந்தா அவங்களுக்கு நல்லா இருக்கும் நினைக்கிறாங்க.,  அது மட்டுமில்லாம நிஷாவை உன்னை விட புரிஞ்சிட்டு பாத்துக்க யாராலும் முடியாது.,  அதே மாதிரி உன்ன நிஷா மாதிரி யாராலும் புரிஞ்சுக்க முடியும் ன்னு எங்களுக்கு தெரியல.,

      உங்க ரெண்டு பேருக்கும் இருக்குற புரிஞ்சுக்கிற தன்மைப்படி நீங்க ஒத்துப்பீங்க ன்னு.,  நாங்க எதிர்பார்த்தோம்.,

      இப்போ என்ன., நீ போய் நிஷாட்ட கேளு“., என்று சொன்னார்.

           இவர்கள் பேச்சு அரையும் குறையுமாக., காதில் விழுந்தாலும் சற்று திகைத்து போய் அமர்ந்திருந்தாள்.,

             நிஷாவிற்கோ.,  என்ன சொல்வது.,  என்ன செய்வது., என்று படபடப்போடு., இருந்தாள்.,

     அதே நேரம் அவன் மாடிக்கு ஏறி வர.,  அவள் அறைக்கு சென்று பேச விரும்பாமல்., மொட்டை மாடியை நோக்கி சென்றான்.,

          கூடவே வந்த  ரஞ்சித்தின் தங்கை.,  “என்ன ண்ணா., உள்ள போயி பேசலாமே“.,  என்று கேட்டான்.

        “இல்ல., நிஷாவை அங்க வர சொல்லு நான் கேட்டுக்குறேன்., ஆனா அவளுக்கு இஷ்டம் இல்லைனா அந்த பேச்சு அத்தோட விட்டுறனும்“., என்று சொன்னான்.

       “அதெல்லாம் சரின்னு சொல்லுவாங்க., உனக்கு ஓகே தானே“.,  என்று கேட்டாள்.

         “முதலில் அவ கிட்ட., பேசணும்“.,  என்று சொன்னானே தவிர அவனுக்கு இஷ்டமா இஷ்டம் இல்லையா என்று சொல்லவில்லை.,

       ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு அவனுக்கு சம்மதம் தான் என்பது போல தோன்றியது.

           மொட்டை மாடியில் அவன் காத்திருக்க., அறைக்கு வந்த ரஞ்சித்தின் தங்கையோபோய் பேசிட்டு வாங்கஎன்று சொன்னாள்.,

       அவளோ அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்., “என்னைய பார்க்க சொல்லல., போய் பேசிட்டு வாங்க“., என்று சொன்னாள்.,

      அவளோ  மூச்சை இழுத்து விட்டாள்.,  சற்று நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு படபடப்பாக இருக்க.,  நிஷாவின் கையை அழுத்தமாக பற்றிக்கொண்ட ரஞ்சித்தின் தங்கை.,

     “இதுல பயப்படுவதற்கு ஒன்றுமில்லை., இவ்வளவு நாள் நீங்க ரெண்டு பேரும் நல்ல பிரண்ட்ஸ்.,  உங்க ரெண்டு பேர் அளவிற்கு அன்டர்ஸ்டன்டிங் ஆனாவங்களை பார்க்கவே முடியாது., இப்ப போய் நீங்க பேசுங்க உங்களுக்கு பிடிச்சிருக்கு ன்னு சொன்னா மட்டும் தான் கீழே மத்தத பேசணும்னு., சொல்லிட்டாங்க., நீங்க பேசிட்டு வாங்க“., என்று சொன்னாள்.

       அவளிடம் லேசாக தலையசைத்து விட்டு மொட்டை மாடிக்கு சென்றாள் நிஷா., அவள் வருவதையே பார்த்துக் கொண்டிருந்தவன்.

       அவள் படபடப்போடு வருவதை புரிந்து கொண்டவனாக., அவளை பார்க்காமல் தொலை தூரத்தில் தெரிந்த கோவில் கோபுரத்தை பார்த்த படி நின்றவனுக்கு., இது உண்மை தானா என்று ஒருபுறம் தோன்றினாலும்.,

      ‘ ஒருவேளை அவளுக்கு பிடிக்கவில்லைஎன்று சொல்லி விட்டால் என்ன செய்வது என்ற எண்ணமும் இருந்தது.,  ‘இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் கேட்டு விடுவோம் ஆனால் அவளுக்கு ஒரு வேளை பிடிக்கவில்லை என்றால்.,  இனி இந்த நட்பும் எந்த அளவிற்கு தொடரும் என்பதும் தெரியவில்லையேஎன்ற படபடப்போடு பார்வையைத் திருப்பி அவளை பார்க்க.,

      அவளும் அப்போது தான் அவனை பார்த்த படி வந்து கொண்டிருந்தாள்.,  இருவரும் ஒருவரை ஒருவர் ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே இருந்தனர்.

       அவன் தான்நிஷா இது எதுவுமே எனக்குத் தெரியாது., இங்க வந்தப்புறம் கூட எனக்கு எதுவும் தெரியாது., ஜஸ்ட் இப்ப தான் சொன்னாங்க., இப்ப நீ தான் பதில் சொல்லணும்., நீ சொன்னதுக்கு அப்புறம் தான் எதுனாலும்“., என்று சொன்னான்.

     அவளும் அவனையே பார்த்தபடிநீங்க என்ன சொல்றீங்க“., என்றாள். மனதில் பதட்டத்தோடு., ஏனெனில் அவளும் அது போன்ற ஒரு படபடப்போடு தான் இருந்தாள்.,

       ‘எனக்கு புடிக்கும் என்று எனக்கு தெரியும்., ஒரு வேளை அவங்களுக்கு புடிக்கலேன்னா., அதுக்கப்புறம் இந்த பிரண்ட்ஷிப் கூட இருக்காதேஎன்ற பயத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.,

         அவனோநான் உன்கிட்ட தான் கேட்டேன்., என்ன பத்தி இல்லை“.,  என்று சொன்னான்.,

       அவளும்நானும் உங்ககிட்ட தான் கேட்கிறேன்“., என்று சொன்னாள்.,

          இருவருக்கும் லேசாக சிரிப்பு எட்டிப்பார்த்தது.,  ‘ஒருவேளை இருவருக்குமே பிடித்திருக்கிறதோ.,  அதனால்  தான் மற்றவர்கள் மனம் அறிய கிடந்து தவிக்கிறதோ‘., என்ற நினைப்பு வரவும்.,

       ரஞ்சித் கையை விரித்து அவளை அருகில் அழைக்க வேகமாக அருகில் வந்தவள்., அவன் கையில் கை வைத்தாள்.,  பின்பு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.,

          அவளை தன்னோடு சேர்த்து பிடித்தவன்., அவள் தலையில் கன்னம் சாய்த்துதேங்க்ஸ்டாஎன்றான்.,

    அவன் தோளில் சாய்ந்து இருந்தவள் பின் பக்கமாக  சட்டையை  அழுத்திப் பிடித்தது., “இதை நான் தான் சொல்லணும்என்று சொல்லி அவன் தோளில் அழுத்தமாக தலை சாய்த்துக் கொண்டாள்.

        மாடி படியில் பேச்சு சத்தம் கேட்கவும் சற்று இருவரும் விலகி நிற்க.,  அண்ணன்கள் இருவரும் வந்தனர்.

       பெரிய அண்ணன நிஷாவை தன்னோடு சேர்த்து பிடித்தபடி., “என்னடா மாப்ள பிடிக்கலைனா சொல்லு., நம்ம வேற மாப்பிள்ளை பார்த்துக்கலாம்“., என்று சொன்னான்.

       சின்ன அண்ணனும்உங்களுக்கு பிடிக்கலைன்னா போங்க., நாங்களும் வேற பொண்ணு பார்ப்போம்“., என்று சொல்லி ரஞ்சித்தை தோளில் கைபோட்டு சேர்த்து பிடித்து இருந்தான்.

       நிஷா பெரியண்ணன் தோளில் சாய்ந்தபடி அண்ணனை பார்த்துபோனா போகுதுன்னு சரி ன்னு சொல்லுவோம் ண்ணா“., என்று சொன்னாள்.,

      அங்கு சந்தோஷத்தோடு சிரிப்பும் நிறைந்திருந்தது., ரஞ்சித் சிரித்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.,

       சின்னண்ணனோ.,  “மாப்பிள்ளை நான் உங்களுக்காக பேசிகிட்டு இருக்கேன்“., என்று சொன்னான்.,

       பெரியவனோநானும் நீயும்  பேசுறது வேஸ்டு டா“., என்று சொல்லி பேசிக்கொண்டிருந்தனர்.,

         அதேநேரம் குடும்பத்தில் உள்ளவர்களும் மாடிக்கு வர., “சரி அப்போ அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வைத்து விடுவோமாஎன்று பெரியவர்களும் சேர்ந்து பேசினர்.

                 மகிழ்வான நிறைவான சந்தோஷத்தோடு குடும்பத்தினர் சேர்ந்து நின்றனர்., அனைவரும் வளமோடு வாழ ஆண்டவனை பிரார்த்தித்து கொள்வோம்.

       மனம் விட்டு பேசிக் கொள்வதற்கும்.,  முகம் பார்த்து ஆறுதல் தருவதற்கும்.,  தோழமையோடு கூடிய வாழ்க்கைத் துணை கிடைப்பது என்பது மிகப்பெரிய வரம்., அப்படி  கிடைப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.,

      நிம்மதியான வாழ்க்கைக்கு., ஒருத்தருக்கு ஒருத்தர்  விட்டுக்கொடுக்கும் புரிதல் இதுதான் வாழ்க்கையின் அச்சாணி.,  அதை புரிந்து கொண்டவர்களின் வாழ்க்கை சுமுகமாக செல்லும்., சண்டையும் சச்சரவும் இல்லாத குடும்பங்களே கிடையாது.,

       ஆனால் ஒருவருக்கு ஒருவர் அதை அனுசரித்து போகும் போது., அங்கு இயல்பாய் குடும்ப சக்கரம் சுழல தொடங்குகிறது., இனி இவர்கள் வாழ்க்கையும் சுமுகமாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு விடை பெறலாம்.,

உடன் நடக்கும்
தோழமையாக
உன் பார்வையில்
பாதுகாப்பை உணர 

வைத்துக்கொண்டிருந்தாய்.,

இன்றோ உன் அணைப்புக்குள் 

மொத்தமாய் அடங்கி.,
உன்னுள் பாதியாகி
உன்னோடு என் நாட்கள்
கழிய போகிறது.,
இதைவிட வேறென்ன
வேண்டும்.,
இப்படியே இருந்து விட்டால்
போதும்
வாழ்க்கை வரம் தான்.,

Advertisement