Advertisement

                                   எனக்கென நீ போதுமே

1
       “மனிதன் சந்தர்ப்பங்களால் உருவாக்கப்படுபவன்.”


          தடக் தடக்.., தடக் தடக்.., என்று ரயிலை போல நெஞ்சின் படபடப்பு எகிறிக் கொண்டிருந்ததுநிஷாவிற்கு

          தனியே செல்லும் முதல் பயணம்எப்போதும்  தன் ஊரை சேர்ந்தவர்கள் தன்னுடன் வேலை செய்பவர்கள் யாராவது வர அவர்களோடு வந்து போவாள். இல்லை எனில் வீட்டினரோடு தான் அவளது பயணம் எல்லாம்.,

         இது தான் முதல் முறையாக தனி பயணம்., ரயில் வேண்டாம் என்று பஸ் டிக்கெட் போட்டு இன்று ஏற்றிவிட்டு விட்டார்கள் வீட்டினர்.

          இருக்கை மாற்றிக்கொள்ள வசதி இல்லாதபடி குடும்பத்தினரோடு சேர்ந்து இருந்தனர்முதல்முறையாக நிஷாவிற்கு பயம் வந்தது தன் அருகில் இருக்கும் இருக்கை இன்னும் வெற்றிடமாகவே இருக்க..,  பஸ் கிளம்பி சற்று நேரம் ஆன பிறகும் யாரும் வரவில்லை., அவளுக்கு பக்கவாட்டில் உள்ள இருக்கையில் இருப்பவர்கள் அவளைத் திரும்பிப் பார்ப்பதை கண்டும்.., அவர்களுக்குள் பேசுவதை கண்டும்.., அவள் அறியாமல் ஒரு பயம் எழுந்தது.., அவர்கள் எதற்காக பேசினார்கள் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் இப்பொழுது நடக்கும் சம்பவங்கள் கேள்விப்படும் விஷயங்கள் என அனைத்தும் அவளுக்கு பயமாகவே இருந்தது.

   பஸ் கிளம்பி அதிலிருந்து 20 நிமிட பயணத்தில் மற்றுமொரு இடத்தில் நிற்கும்.,  அங்கு சிலரை ஏற்றிக் கொண்டே பின் பஸ் தன் வேலை பார்க்கும் ஊரை நோக்கிக் கிளம்பும் என்பது அவள் அறிந்தது தான்.,

         முதல் முறையாக தனியே  பஸ்சுக்குள் அமர்ந்து கொண்டு ரயில் ஒட்டத்தின் சத்ததை தன் இதயத்துடிப்பில் உணரத் தொடங்கி இருந்தாள்.

             இரவு உணவை வீட்டிலேயே  உண்டுவிட்டு வந்தவளுக்கு தண்ணீர் வைத்திருந்தாலும்.,  இடையில் எங்காவது நிறுத்தி ரெஸ்ட் ரூம் போக வழி செய்வார்கள் என்பது தெரியும்தனியே வந்த சூழலில் யாரிடம் உதவி கேட்பது என்பது பயமாகவே இருந்தது.,

  100ல் 20 பேர் கெட்டவர்களாக இருக்கிறார்கள் என்று நாம் நினைத்தால்.., நாம் பார்க்கும் போது  இங்கு பாதிக்குப் பாதி கெடுதல் செய்பவர்கள் தான் இருக்கிறார்கள்.., அந்த சூழ்நிலையில் தான் நிஷாவின் முதல் பஸ் பயணம் தொடர்ந்தது.,

      அதற்கேற்றார் போல பஸ் கிளம்பிய அந்த பத்து நிமிடத்திற்குள் முன்புறம் சென்று ஓட்டுநரிடம் பேச செல்வது போல இரண்டு மூன்று நபர்கள் நகர்ந்து சென்று விட்டு திரும்பி வரும் போது அவளை பார்த்துக் கொண்டே செல்வதை அவள் கவனிக்க தான் செய்தாள். இருந்தும் கண்டு கொள்ளாமல் இருப்பது போல இருந்து கொண்டவளுக்கு மேலும் பதட்டம் அதிகரித்தது..

          அந்த நேரம் பார்த்து வீட்டிலிருந்து அழைப்பு வர சற்று நிம்மதியாக உணர்ந்தவள்., தந்தையிடம் கோபப்பட்டாள்.  “என்னை கொண்டு வந்து நீங்களே விட்டிருக்கலாம்., இப்படி தனியா என்னை போக விட்டுட்டீங்களே., பயமா இருக்கு“.,  என்று சொன்னாள்.,

         “அதெல்லாம் ஒன்னும் இல்ல., நான் டிரைவரிடமும்  கூட வர்ற ஹெல்ப்ர்ட்டையும் சொல்லிட்டு தான் வந்து இருக்கேன்.,  உன்னை பத்திரமா சென்னையில் இறக்கிவிட்டுருவாங்க பயப்படாதேஎன்று பெற்றவராக தைரியம் சொன்னார்.

       அவளறியாமல் படபடப்பு கூட தான் செய்தது.,  பார்ப்பவர்களின் பார்வையிலேயே ஓரளவு பெண்ணவளுக்கு கண்டுகொள்ள தெரிந்தது., ஏனெனில் அலுவலகத்தில் வேலை பார்ப்பவள் அனைவரோடும் பேசி பழக்கம் என்பதால்.,  அவர்கள் பார்வையிலேயே ஓரளவுக்கு கண்டு கொள்ள முடியும்..,

          சிலர் அன்பாக பார்ப்பதும் பேசுவதும் போல தெரிந்தாலும்.., அவர்களுடைய வக்கிரபுத்தி எப்படியும் ஒரு சில நேரம் பேச்சில் வெளிப்படத்தான் செய்கிறது. சிலர் பார்ப்பதற்கு கரடுமுரடாக இருந்தாலும் அவர்களிடம் நல்ல குணங்களும் நல்ல எண்ணங்களும் இருப்பதை அறியமுடிகிறது., அப்படித்தான் அவள் நிறைய உணர்ந்திருந்தாள்.

      ஆனால் பஸ் பயணத்தில் இப்பொழுது அவளை பார்த்துக்கொண்டு கடந்து சென்றவர்களில் நிச்சயமாக  நல்லவர் ஒருவரும் இல்லை என்பது போல தோன்றியதுமனம் கடவுளை பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தது.,  “ஐயோ கடவுளே கடவுளே.,  நான் நல்லபடியா நாளைக்கு ஊருக்கு போய் சேர்ந்துட்டேனா., உனக்கு தேங்காய் வாங்கி விடலை போடுறேன்“., என்று தன் ஆபீஸ் முன்னாடி இருக்கும் பிள்ளையாருக்கு  லஞ்சம் கொடுப்பதற்கு பேரம் பேசிக் கொண்டிருந்தாள்

         சரியாக இருபதாவது நிமிடம் அந்த பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றது., அங்கு  பஸ்ஸில் ஏற கூடியவர்கள் ஏற்றிய பின்பு நேராக ஊரில் போய் தான் நிற்கும்.,  இடைப்பட்ட இடங்களில் யாரும் அவசரமாக  நிறுத்தினால் தான் உண்டு.., மற்றபடி நேராக ஊருக்கு தான் சென்று நிற்கும். எனவே தன்னருகில் யார் வந்து அமர்வார்களோ., எப்போது  வருவார்களோ என்ற பயத்தோடு எட்டி எட்டி பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்

          ஏறிவர்கள் அனைவரும் ஆங்காங்கு இருந்த காலி இடங்களில் அமர்ந்த பிறகும் இவள் அருகில் யாரும் வரவில்லை என்ற எண்ணத்தோடு பார்க்கும் போது ஆஜானுபாகுவான தோற்றத்தோடு அதற்கேற்ற உடம்போடு., லேசாக ட்ரிம் செய்திருந்த தாடியுடன் பார்ப்பதற்கே வில்லன் போல இருந்த ஒருவன் வந்து பைகளை வைக்கும் இடத்தில்., அவனுடைய பையை வைத்து விட்டு., அவள் அருகில் அமர்ந்தான்.

       அவள் பயத்தோடு பார்ப்பதை கண்டவன்., சிரித்தபடி அமர்ந்துபயப்படாத ஊர் போய் சேர்ற வரைக்கும் நான் பக்கத்திலே தான் இருப்பேன் உட்காருஎன்று சொன்னான்.

       அவள் அமைதியாக இருக்கவும்.,  பயப்படாமல் இரு என்று சொன்னவன் சற்று நேரத்திலேயே அவனுடைய இருக்கையை சாய்த்து., அவன் இருக்கையில் வைத்திருந்த போர்வையை போட்டு முகத்தை மூடிக்கொண்டு படுத்து விட்டான்.,

     இவளுக்கு தான் என்ன செய்வது என்று தெரியாமல்., திரும்பிப் பார்ப்பதும் ஜன்னல் புறமாக வெளியே பார்ப்பதுமாக அமர்ந்திருந்தாள்., ஏற்கனவே இவள் தனியாக இருக்கும் போது அவ்விடத்தை கடந்து சென்று அவளைப் பார்த்து விட்டு சென்றவர்களில் ஒருவர் முன்புறம் சென்று விட்டு திரும்பி வருவது போல வரும் போது பார்த்துக் கொண்டே செல்ல முகத்தில் போட்டிருந்த போர்வையை விலக்கியவன் அவனை ஒருமுறை உறுத்து பார்ப்பது போல முறைத்து பார்க்க அவளை பார்த்துக் கொண்டே சென்றவன் அருகில் இருந்தவனின் தோற்றத்தில் பயந்து முழித்துக் கொண்டே சென்றான்.

      பின்பு மெதுவாக அவனை பார்த்து சிரிக்க முயற்சி செய்ய.,  இவனும்சீட் எங்கேஎன்று அவனிடம் கேட்டான்.

       அவனும் பதறிக் கொண்டேபின்னாடிஎன்று சொன்னான்.,
        ரொம்ப நேரம் உள்ளேயே நடந்துட்டே இருக்கீங்களே., இது இரண்டாவது தடவை இந்த பக்கம் வர்றது ., நான் இங்கே வந்து உட்காரும் போது ஒரு தடவை வந்தீங்க.,  இப்ப மறுபடி வர்றீங்கஎன்று சொன்னான்.

           இவள் தான்என்னது இது ரெண்டாவது தடவையா‘., என்று யோசித்தாள் ஏனெனில் அவள் கவனிக்கவில்லை ஆனால் இவன் கவனித்து இருந்திருக்கிறான்.,

      பின்பு மெதுவாக எழுந்தவன் அவனை அங்குமிங்கும் நகரவிடாமல் லேசாக கையை  பிடித்தபடிபொண்ணுங்க தனியா உட்கார்ந்து இருந்தா., அப்படித்தான் பார்ப்பீர்களா டா“., என்று பல்லைக் கடித்துக் கொண்டு பேசுவது அக்கம்பக்கம் சீட்டில் உட்கார்ந்து இருந்தவர்களுக்கும் கேட்கத்தான் செய்தது. “ஒழுங்கா ஊர் போய் சேர நினைத்தனா.,  ஊருக்கு போய் சேர்ற வரைக்கும் உட்கார்ந்த இடத்தை விட்டு நகர கூடாது., இன்னொரு முறை நடக்கிறத பார்த்தேன்.,  இல்ல இந்த பொண்ண பார்க்குறத பாத்தேன்., ஒழுங்கா ஊர் போய் சேர மாட்ட“., என்றான்.

         அவன் பதறியபடி நகர்ந்தான். அதன்பிறகு பக்கவாட்டில் உள்ள சீட்டில் உள்ளவர்களை திரும்பிப்பார்க்க அவர்களும் வேகவேகமாக திரும்பிக் கொண்டார்கள்..

      அதன் பிறகு நிதானமாக நிஷாவின் அருகில் அமர்ந்தவன்., “என் பெயர் ரஞ்சித்., நான் இந்த ஊரு தான் எனக்கு சொந்த ஊரு..,  நானும் வேலை பார்க்கிறது என்று இடத்தை சொல்லி.,   நீ அங்க தானே போறஎன்று கேட்டு பஸ் போகும் இடத்தை சொன்னான்.

      அவள் தலையாட்டினாள்  “தைரியமா நிம்மதியா டிராவல் பண்ணு., பயந்துட்டே ட்ராவல் பண்ண கூடாது.., பொம்பள பிள்ளைங்க எதுக்கு பயப்படனுமோ.,  அதுக்குதான் பயப்படனும்.., இந்த மாதிரி நேரத்துல எப்பவும் தைரியமா இருக்கணும்., நீ அவன பார்த்து  முறைச்சு இருந்தேனா., அதுக்கப்புறம் இந்த பக்கம் வந்து இருக்க மாட்டான்.,  ஏன் இப்படி பயப்படற.., உன் முகத்துல பயத்தை பார்த்தவுடனே தான்அவனுக்கு தைரியம் ஜாஸ்தியாகி இருக்கும் புரியுதா“., என்று சொன்னான்.

         வேகமாக தலையாட்டினாள்இப்பவும் பயப்படுற.,  பயப்படாத..,  என்னைய  உன் பிரண்டா நினைச்சுக்கோ.., எப்பவும் உன் பிரெண்ட்ஸ் கூட இருந்தா எப்படி சேஃப்பா பீல் பண்ணுவ இல்ல., அப்படி இரு.,  எதையும் தப்பா யோசிக்காதே., நல்லதே யோசிப்போம் நல்லதே நடக்கும்.., நம்புவோம்“., என்று சொன்னான்.

       “இல்ல எப்பவும் ஆபீஸ் ஃப்ரெண்ட்ஸ் யாராவது கூட வருவாங்க., அல்லது இந்த ஊர்ல உள்ளவங்க  என் கூட வருவாங்க.,  இல்லன்னா அப்பா வருவாங்க.., இந்த தடவை தான் முதன்முதலில் தனியா வந்திருக்கேன்.., அதுதான் கொஞ்சம் பயமா இருந்துச்சு“.., என்று சொன்னாள்.

       “அப்படி எல்லாம் யோசிக்க கூடாது பொண்ணுங்களுக்கு லைஃப்ல எவ்வளவோ இருக்கு  சந்திக்க வேண்டியது.,  எப்பவும் ஒன்னுபோல இருக்காது.,  வாழ்க்கையில எப்பவுமே யாரும்.,  யாருக்கும் துணையா வருவாங்கன்னு யாருமே சொல்ல முடியாது.., சில இடங்கள்ல தனியா சந்திக்க வேண்டிய பிரச்சினையை தனியா தான் பார்க்கனும்.,  அப்ப  யாரையும் துணைக்கு கூப்பிடுவியா., கூப்பிட முடியாது இல்ல.., அப்படி யோசிச்சப்பாரு.,  எப்பவும் தைரியமா  இருக்க பழகு“.,என்று  அறிவுரை சொல்லவும்சரிஎன்றாள்.

      ஆனாலும் அவள் குரலில் ஒரு நடுக்கம் இருப்பதை உணர்ந்தவன்., சிரித்தபடிஇப்ப நிம்மதியா தூங்கு., சென்னையில பத்திரமா இறங்கிக்கலாம்“., என்ற படி அவன் கையில் இருந்த தண்ணீரை குடித்து விட்டுஉன்னோட பாட்டில் எடுத்து குடிச்சுக்கோ., டிராவல் நேரத்தில் எதனாலும் நீ கொண்டு வந்திருப்பதை தான் சாப்பிடணும்., யார் கொடுப்பதையும் வாங்காதேஎன்று சொன்னான்.

       “அம்மா சொல்லி இருக்காங்கஎன்று சொன்னாள்.

      “சின்ன பிள்ளை மாதிரி இருக்கு.,  வெளிய ஒர்க் பண்ற நல்லா படிச்சு முடிச்சுட்டு.,  இன்னுமா பயப்படுவ“., என்று கேட்டான்.,

         தலை குனிந்தபடி அமர்ந்திருந்தாள். “காலேஜ்ல படிச்சது இதே ஊரில் படிச்சியாஎன்று கேட்டான்.

          “ஆமாஎன்று சொன்னாள்., 

       “அது தான் தப்பு., உங்க அப்பா அம்மா அந்த இடத்தில் தப்பு பண்ணிட்டாங்க.,  இவ்வளவு தூரம் வேலைக்கு போக  உன்னை ஹாஸ்டல்ல விட்டாங்க இல்ல.,  வேற ஊர்ல அனுப்பி படிக்க வச்சிருந்தா.,  நீ இப்போ இந்த அளவுக்கு பயப்பட மாட்ட“.,  என்று சொன்னான்.

       அவளும் தன் தோழமைகள் அதையே தன்னிடம் சொல்வதே உணர்ந்தாள்.,  சிரித்தபடி சாதாரணமாக இருந்தவளிடம்தண்ணியை குடிச்சிட்டு நிம்மதியா தூங்கு“.,  என்று சொல்லி ஆறுதலாக பேசினான்.

        முதல் முதலாக முகமறியாதவனுடன் பேசிய எண்ணம் வராமல் ஏதோ பல காலம் பழகிய ஒரு தோழமையுடன் பேசிய உணர்வை தந்தது., அவனது பேச்சு..,

          ” நீங்க எங்க ஒர்க் பண்றீங்கஎன்று கேட்டாள்.

       “நம்ம மக்கள் என்ன செய்வோம் அதைத்தான் நானும் செய்றேன்., தடுக்கி விழுந்தா இன்ஜினியரிங் காலேஜ்.., வேலை கிடைச்சு போனா  ஐடி கம்பெனி அப்படித்தான்“., என்று சொன்னான்.

            அதன்பிறகு அவர்கள் வேலை பார்க்கும் இடங்களை பற்றி பேசிக்கொண்டு சென்றனர்., சற்று நேரத்தில் அவன் பழையபடி அதே போல முகத்தை மூடிக்கொண்டு தூங்கிவிட இவள் போர்வையை சுற்றி கொண்டு சாய்ந்து ஜன்னலோரமாக தலை சாய்த்து தூங்க தொடங்கவும்

        முகத்தை மூடி இருந்த போர்வையை மெதுவாக விலக்கினான் நிலவொளியிலும் மின்கம்பங்களை  கடக்கும் போது தெரியும் மின்விளக்கின் ஒளியில் தெரியும் நிஷாவின் முகத்தை நன்றாக பார்த்துக் கொண்டான்., பின்பு அமைதியாக அதுபோலவே முகத்தை மூடி சாய்ந்து கொண்டவனுக்கு தோன்றியது., ‘சரியான பயந்தாங்கொள்ளி பொண்ணா இருக்கும் போலயேஎன்று நினைத்துக்கொண்டான்.

    இடையில் பஸ் டிரைவர் டீ குடிப்பதற்காக ஒரு இடத்தை பார்த்து நிறுத்த அங்கு ரெஸ்ட் ரூம் செல்வதற்காக எழுந்தவர்களை சென்று விட்டு  வருமாறு டிரைவர் சொன்னார்ஆண்களும் பெண்களும்  அவர்களுக்கென இருக்கும் கழிப்பிடத்தை நோக்கி சென்றனர்.

            அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை., அமைதியாக பார்த்து இருந்தவன்வா“., என்று அழைத்துக் கொண்டு சென்றான்.,

     “எங்கேஎன்று கேட்டாள். “ரெஸ்ட் ரூம் போகனும் னா  போயிட்டு வந்துருஎன்று சொன்னான்.

          அவள் கையில் இருந்த பையை அவனுடைய பொருட்களோடு தூக்கி வைத்துவிட்டு இறங்கு என்று சொன்னான்.

             அங்கிருந்த ஹெல்பரிடம்  “யாராவது பொண்ணுங்களோட இந்த பொண்ண அனுப்பி வைங்கஎன்று சொன்னான்.

        அங்கிருந்து சென்ற ஒரு வயதான பாட்டியோடு அவளை அனுப்பி வைத்தார். இவன் பஸ்ஸிலேயே காத்திருந்தான்., மறுபடி அவள் வந்து அமர்ந்த பிறகு இவன் இறங்கி சென்று விட்டு வந்தான்.

           அப்போதுதான் பஸ்சில் உள்ள ஒரு பெண்மணி அவன் சென்ற பிறகுதெரிஞ்சவங்கலாமாஎன்று கேட்டார்.

ஏன் கேட்கிறீங்கஎன்றாள்.,

    “இல்லம்மா பாக்குறதுக்கு முரட்டு பையன் மாதிரி தெரிஞ்சது., ஆனால் இந்த பயலுக அங்கிட்டும் இங்கிட்டும் நடப்பதை பார்த்தவுடன் நானும் பயந்துட்டேன்.,  நம்மளும் பொம்பளையா வந்திருக்கோம்.,  இந்த பிள்ளைக்கு உதவியும் செய்ய முடியாதே.,  நம்மளும் புள்ளைய கூட்டிட்டு வந்து இருக்கோமே., என்ன செய்ய ன்னு யோசித்தேன்., நல்லவேளை தம்பி நல்ல புள்ளையா இருக்கு.,  இப்பவும் பாரேன் எவ்வளவு பத்திரமா அந்த பாட்டி கூட அனுப்பி வைத்து விட்டு இங்கேயே நின்னுட்டு இருந்துச்சி.,  பை  எல்லாம் இருக்கு இல்ல.., இப்ப பாரு நீ இங்க வந்ததுக்கு அப்புறம்தான் தம்பி இறங்கிப் போய் இருக்கு., நல்ல புள்ளயா இருக்கு.,  இந்த காலத்துல ஆளைப் பார்த்து எடை போட முடியாது ங்கிறது சரியா தான் இருக்கு.., பாக்க டிப் டாப்பா இருக்கான்னுவ., கடைசி பார்த்தா பொறுக்கி பயலுவலா இருக்கான்.,

      பொண்ணுங்க எங்கடா கிடைப்பா பாத்துட்டு அலையுதானுங்க..,  ஆனால் பார்ப்பதற்கு முரட்டு பையன் மாதிரி இருக்கு..,  எம்புட்டு நல்ல பிள்ளையா இருக்கு“.., என்று அந்த பெண்மணி சிலாகித்து பேசுவதைக் கேட்கும் போது

      “கடவுள் ஏதோ தனக்கு உதவி செய்து இருக்கிறார்என்று எண்ண தோன்றியது.,

      அதேநேரம் மறந்துவிடாமல்நாளை காலை அலுவலகத்திற்கு செல்லும் போது தன் அலுவலக பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் லஞ்சமாக கொடுக்க வேண்டும்என்றும் நினைத்துக் கொண்டாள்.

      மறுபடியும் அதுபோலவே அவர்களுடைய பயணம் தொடங்கியது. அவள் இறங்க வேண்டிய இடத்தில் அவனும் இறங்கினான்.,

   அவளைபத்திரமாக போய் சேர்ந்து விடுவ இல்லஎன்று கேட்டவன்., அவனின் அலைபேசி எண்ணை கொடுத்து எதுவும் அவசரம் னா கூப்பிடு.,  என்று அனுப்பிவிட்டு தன் இருப்பிடம் நோக்கி சென்றான்.

        அறிமுகமற்ற அந்த பயணம் தான் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத பயணம் என்று நினைத்துக் கொண்டாள் நிஷா., ரஞ்சித் ம் அதே நினைப்போடு தான் இருந்தான்.,

    வாழ்க்கை எப்பொழுதும் அறிமுகமற்ற நபர்கள் மூலமாகவே பாடங்களை கற்றுக் கொடுக்கிறது., அது நல்லவையாக இருந்தாலும் சரி.,  கெட்டவையாக இருந்தாலும் சரி.,

          தோற்றத்தை வைத்து எடைபோட கூடாது. சாந்தமான சண்டாளனும் உண்டு. அரக்க தோற்றத்தில் அன்பானவனும் உண்டு.

     பயணங்கள் முடிவதில்லை., வாழ்க்கை பாதையில்.,


         “பாதுகாப்பை உணர
          வைத்த அருகாமை
         நினைக்கும் போதே
          அரவணைக்கிறது“.,
        

  

Advertisement