அத்தியாயம் 2

நட்சத்திரா வீட்டிற்குள் செல்ல, “நட்சு நில்லு” என்று சுபிதனும் மிருளாலினியும் அவள் பின் சென்றனர். அவள் பேசியதில் திகைத்து நின்றனர் அன்னமும் பரிதியும். சிம்மா வேகமாக வெளியே வந்தான்.

“ஸ்டார்” என்று அவன் அழைக்க, சிம்மா இப்ப ரொம்ப நேரமாகி விட்டது. இனி உன்னோட ஸ்டார் நினைத்தாலும் அவள் உனக்கு கிடைக்கமாட்டாள் என்று சீரியசாக மாறன் கூறினான்.

மாறா, “ஸ்டார் என்ன சொன்னான்னு பார்த்தேல்ல?” புன்னகை கலந்த வருத்தத்தில் கண்ணீருடன் சிம்மா கேட்டான்.

ஆமா சிம்மா, “அவளுக்கும் உன்னை பிடித்து தான் இருந்திருக்கு. நாம தான் அவளை புரிஞ்சுக்கலை” என்று முகேஷ் வருத்தப்பட்டான்.

வாய்யா, “உள்ள போகலாம்” என்று அன்னம் தன் மகனை வீட்டினுள் அழைத்து சென்றார். பரிதியும் நட்சத்திரா இருக்கும் வீட்டை பார்த்துக் கொண்டே உள்ளே சென்றார்.

பாட்டி, “அவள பார்த்துக்கோங்க” என்று முகேஷூம் மாறனும் சிம்மாவை பார்க்க சென்றனர்.

நட்சு, “என்ன சொல்லீட்டு இருக்க?” இது விபரீதமாக போகுது. சிம்மாவும் போலீஸாக தான் போறான்னு தெரிந்து, “எதுக்கு இப்படியொரு கதை கட்டின?” சுபிதன் சத்தமிட்டான்.

“என்னை என்ன செய்ய சொல்ற?” நான் செய்தது சரிதான். நீங்கள் இருவரும் யாரிடமும் வாயை திறக்கவே கூடாது.

நீயே பார்த்துக்கோ. எங்களை இழுக்காத. நாளையும் இருந்துட்டு போகணும். நான் அம்மாவிடம் பேசிட்டு வாரேன் என்று சுபிதன் சென்றான்.

“வாங்க பாட்டி” என்று சாப்பாடு எடுத்து வந்த பாட்டியை உள்ளே அழைத்தாள் மிருளாலினி. அறையினுள் இருந்த நட்சத்திரா, பாட்டி அருகே வந்து அமர்ந்தாள்.

நட்சு, நீங்க பேசிட்டு இருங்க. “நான் வாரேன்” என்று சுபியை தேடி வெளியே சென்றாள் மிருளாலினி. சிம்மனும் அவன் நண்பர்களும் வெளியே வந்து அமர்ந்தனர்.

சுபி வேண்டாம், “அத்தை திட்டப் போறாங்க?” நாம கிளம்பிடலாம் என்றாள் மிருளாலினி. சிம்மனது மற்ற நண்பர்களும் வந்திருப்பர். எல்லாரும் இருவரையும் பார்த்தனர்.

“அம்மாவை நான் பார்த்துக்கிறேன் மிரு” என்று அவன் போன் செய்தான்.

சொன்னா புரிஞ்சுக்கோடா. அவங்களுக்கு இங்க வந்ததே பிடிக்கலை. தங்கணுன்னு சொன்னா ரொம்ப கோபப்படுவாங்க என்றாள்.

“அதுக்காக இவளை அப்படியே விட்டு போக முடியுமா?”

“எல்லாமே முடிச்சிட்டோம்ல்ல?”

அவ இப்ப சும்மா இல்லை. “தனியா எப்படி விட்டுட்டு போறது?” அவன் கோபப்பட்டான். அவள் அமைதியாக உள்ளே சென்றாள்.

உச்..என்று போனை எடுத்து அவன் அம்மாவை அழைத்து விசயத்தை சொன்னான்.

“பொண்டாட்டி மயக்கத்துல்ல அவ பேச்ச கேட்டுட்டு ஆடுறியாடா?” சுபிதன் அம்மா அவனை திட்டினார்.

அம்மா, அவளே இப்ப கிளம்பலாம்னு தான் சொன்னா. “நட்சுவை யாரும் துணைக்கில்லாமல் விட்டு எப்படி வருவது?”

“என்னடா கல்யாணத்துக்கு பின்னாடியும் அவளை பற்றி அதிகமா யோசிக்கிற?”

அம்மா, அதிகமா பேசாத. இப்ப அப்படி எந்த எண்ணமும் இல்லை. உனக்கு பிடிக்கலைன்னாலும் மிரு மேல் காதல் எனக்கு இருப்பதால் தான் கல்யாணம் செய்து கொண்டேன்.

சரி, கிளம்பி வா..

அம்மா, இப்ப தான சொன்னேன்? என்னால முடியாது. அவளை பாதுகாப்பாக யாரிடமாவது விட்டு வாரோம். நாளைக்கு தான் வருவோம்.

அவன் அம்மா போனை வைத்து விட்டார். அம்மா..என்று அவன் அழைத்து போனை பார்த்து விட்டு வெளியே அமர்ந்தான்.

மாறனும் முகேஷூம் அவனிடம் வந்து அமர்ந்தனர். “மேரேஜ் ஆனலே இது பெரிய பிரச்சனைல்ல?” முகேஷ் கேட்க, அவன் அமைதியாக இருந்தான்.

கார்த்திக் அவனிடம் வந்து, “நீயும் நட்சத்திராவை காதலித்தாயா?” என்று கேட்டான்.

சுபிதன் சிம்மாவை பார்த்து, காதல்ன்னு சொல்ல முடியாது. “ஒரு இன்ட்ரஸ்ட் தான்”.

“உன் மனைவிக்கு தெரியுமா?” மாறன் கேட்டான்.

அவளுக்கும் தெரியும். ஆனால் நட்சுவிடம் நான் காட்டிக் கொண்டதில்லை.

“அப்புறம் எப்படி உன்னோட மனைவி அவளுடன் உன்னை பழக அனுமதிக்கிறாள்?”

நட்சு செய்த உதவிக்காக தான்.

உதவியா? சிம்மாவும் அவனிடம் வந்து அமர்ந்தான்.

எங்க கல்யாணம் நடக்க காரணமே நட்சு தான். நாங்கள் காதலித்தோம். அவள் அம்மா, அப்பாவை சம்மதிக்க வைக்க நட்சு தான் உதவினாள். ஆனால் என்னோட அம்மா சம்மதிக்கவில்லை. அவள் பேசியும் அவங்களுக்கு விருப்பமில்லை.

“அவங்களுக்கு பணக்கார பொண்ணு வேணுமாம்? நான் என்ன செய்வது?” மிருவை இவங்க கண்டபடி பேசினாங்க.

வேற வழியே இல்லைன்னு மிருவோட அம்மா, அப்பாவை வைத்து ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து வச்சாங்க. எங்க வீட்டுக்கு நாங்க போன அன்று மிரு ரொம்ப கஷ்டப்பட்டா. என்னாலும் அம்மா, அண்ணி பேசுவதை பார்த்து பொறுமையாக இருக்க முடியலை. அவளுக்கு துணைக்காக நட்சுவும் எங்க வீட்ல தங்கினாள். ஆனால் என் அண்ணன் பார்வை சரியில்லை. அதான் நட்சுவோட அம்மா, அப்பாவை பற்றி கேட்டேன். அவளும் போகலாம் என்று சொன்னதால் இங்கே அழைத்து வந்துட்டோம். எங்களுக்கு திருமணமாகி ஒரு வாரம் தான் ஆகுது. அதற்குள்ளே பிரச்சனை என்றான்.

“இப்படி தான் இருக்கும்?” ஒருவன் சொல்ல, ஆமா “நட்சத்திரா  எங்க தங்குவா?”

அவள் விடுதியில் தான் இருந்தாள். அவளோட கர்ப்பம் விசயம் தெரிந்து அவளை அனுப்பிட்டாங்க. வேறெங்கும் சேர்க்கவில்லை. அதனால் எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கும் சின்ன வீட்ல தான் தங்குவா என்றான்.

“அதான் அந்த போலீஸ் இருக்கானே?” கார்த்திக் கேட்டான்.

சுபிதன் தயங்கிக் கொண்டு, “அவர் வீட்ல தங்கினால் அவர் பெயர் கெட்டு விடும்” என்று இவள் தான் விலகி இருக்காள்.

“அதுக்காக அவன் அப்படியே இவளை விட்டுவானா?” மாறன் கேட்க, “அப்படியில்லை” என்று சுபிதன் தயக்கமுடன். அவரை பற்றி அறிந்து கொள்ள நீங்க அவளிடமே கேட்டுக்கோங்களேன். நாங்க அவள் விசயத்தினுள் செல்வது நன்றாக இருக்காது. என்னோட மிருவுக்கு பிடிக்காது என்று சமாளித்தான்.

சரி, இப்ப உங்க மனைவி அமைதியா போனாங்கலே? கோபமும் தெரிந்தது. எப்படி சமாளிப்பீங்க? முகேஷ் கேட்டான்.

வெளியே வந்த மிருளாலினி எல்லாரையும் பார்த்து விட்டு, சிம்மாவை பார்த்து “உள்ளே வந்து பேசலாமே?” என்றாள்.

“இல்லம்மா இருக்கட்டும்” என்றான் அவன்.

“சாப்பிட வாங்க” என்றாள்.

“நாங்க கிளம்பணும்” என்று அனைவரும் எழுந்தனர். சுபிதனும் எழுந்தான்.

“வாங்க சாப்பிடலாம்” என்று அவன் கையோடு கை கோர்த்தாள்.

“என் மேல கோபமா இருந்த மாதிரி தெரிந்தது?” சுபிதன் கேட்டான்.

கோபமா? இல்லையே! என்று அவன் கையை பிடித்து இழுத்து சென்றாள். அவளுடன் சென்ற சுபிதன் பின்னால் திரும்பி சிம்மாவையும் அவன் நண்பர்களையும் பார்த்து புன்னகைத்தான். அவர்கள் இருவர் காதலையும் மெச்சியவாறு பார்த்தனர்.

மாலை அனைவரும் தயாராகி கோவிலுக்கு வந்தனர். சற்று நேரம் கடைத்தெருவில் உலாவி விட்டு வந்து அமர்ந்தனர். நட்சத்திரா கையிலிருந்த சிலைஸ் பாட்டிலை திறக்க, ஓடி வந்த சிறுவன் ஒருவன் அக்கா, “அதை குடிங்க” என்று அவளிடமிருந்து பிடுங்கி அவள் கையில் மாதுளை ஜூஸ்ஸை கொடுத்தான்.

“யாருடா இதை கொடுத்தது?” மிருளாலினி கேட்டாள்.

“சிம்மா தான் கொடுக்க சொன்னான்” என்று அச்சிறுவன் கூற, நட்சத்திரா அவனை கண்களால் அலசினாள். அவள் அவனை பார்த்தாள். முதலில் அவன் அவளை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டான். அவள் அவனை பார்த்துக் கொண்டே குடித்தாள்.

நட்சு, “நீ எதுக்கு சென்னை வர்ற? இங்கேயே இருக்கலாமே?” மிருளாலினி சிம்மாவை பார்த்துக் கொண்டே கேட்டாள்.

அவள் கேட்பதன் அர்த்தத்தை புரிந்து கொண்டு, “எனக்கு அங்கே தான் சரியாக இருக்கும்” என்று இருவரும் பேசிக் கொண்டே ஜூஸ் குடித்தனர்.

நட்சத்திராவின் குடும்பம் கோவிலுக்கு நுழைய, பல பெரியவர்களும், பக்கத்து ஊர் பெரியவர்களும் உள்ளே சென்றனர். உதிரனும் அம்சவள்ளியும் நட்சத்திராவை பார்த்துக் கொண்டே சென்றனர்.

முதல் முறையாக குடும்பத்திலிருந்து தொலைந்த உணர்வு அவளுள் செல்ல, அழுகை பொத்துக் கொண்டு வந்தது. கட்டுப்படுத்தி கண்ணீருடன் எழுந்து நகர்ந்தாள். ஊரார் அனைவரும் அவளையும், செல்லும் அவள் குடும்பத்தையும் பார்த்தனர்.

புகழேந்திக்கு பரிவட்டம் கட்டி கோவிலில் பூஜை ஆரம்பிக்கப்பட்டது. அனைவரும் கடவுளை வழிபாடு செய்தனர். கூட்டம் குறைந்தவுடன் நட்சத்திரா, சுபிதன், மிருளாலினி கோவிலுக்குள் சென்றனர்.

“என்ன மனுசன்யா இவன்?”

“என்ன கோபமாக இருந்தாலும் வாயும் வயித்தும்மா இருக்கிற பிள்ளைய அநாதையா நிக்க வச்சிட்டான்” என்று புகழேந்தி பற்றி சிலரும், “இந்த பொண்ணுக்கு இது தேவை தான். போன வருடம் எல்லாருடனும் எப்படி வந்த பொண்ணு?” என்று நட்சத்திரா பற்றி சிலர் ஏளனமாகவும் பரிதாபமாகவும் பேசினர். ஆனால் அவளோ எதற்கும் செவி சாய்க்கவில்லை. “நான் கடவுளை வழிபட வந்தேன்” என்று அவள் வழிப்பாட்டை முடித்து வந்தாள். சுபிதனும் மிருளாலினியும் அவளை ஆச்சர்யமாக பார்த்தனர். கோவிலை சுற்றி வந்து ஓரிடத்தில் அமர்ந்தனர்.

“இவங்க பேசுறது உனக்கு கஷ்டமா இல்லையா?” சுபிதன் கேட்டான்.

“அதுக்கு என்னடா பண்றது?” அவங்க டைம் பாஸூக்கு என்னையும், என் குடும்பத்தையும் பயன்படுத்துறாங்க. வீட்டிற்கு சென்று அவர்கள் வேலையை பார்க்கவே நேரம் சரியாக இருக்கும். எங்க நினைப்பு அப்ப அவங்களுக்கு வராது. இதெல்லாம் நடக்கும்ன்னு தெரிந்து தான வந்தேன். இவங்களுக்கு “உண்மை தெரிய வந்தால் அதுக்கும் கமெண்டு தான் குடுப்பாங்க சுபி” என்றாள்.

“உண்மையா? என்ன உண்மை?” என்று கேட்டுக் கொண்டே சிம்மாவின் அப்பா பரிதி நட்சத்திரா அருகே வந்து அமர்ந்தார்.

ஏய், “இங்க பாரேன். இத்தனை வருடமாக பேசாதவர்கள் பேசுறாங்கடா” என்று ஒருவன் சொல்ல, “அதான் அந்த பொண்ணு அவங்க அப்பாவை தூக்கிப் போட்டாளே!” என்று ஒருவன் சொல்ல, “எதுவும் தெரியாம பேசாதீங்க? ஆளாலுக்கு ஏதாவது பேசுறீங்க?” மிருளாலினி சத்தமிட்டான்.

என்னம்மா, இந்த பொண்ணு செய்ததை தான சொன்னோம்.

“என்ன செய்தா? அவளுக்கு என்ன நடந்தது பார்த்தீர்களா?” என்று உளற வந்தவளை கோபப்பார்வை வீசினாள் நட்சத்திரா.

மிரு, “அமைதியா இரு” சுபிதன் சொல்ல, சும்மா கத்தாதம்மா. “நீயும் இவனை இழுத்துட்டு வந்திருக்கிறியா என்னவோ?” என்று ஒருவர் சொல்ல, மிருளாலினி கண்ணீருடன் நின்றாள்.

பேச வந்த சுபிதனை தடுத்த நட்சத்திரா, இங்க பாருங்க அங்கிள். நான் உங்க ஊரு பொண்ணு. பேசினீங்க? அவங்க நம்ம ஊருக்கு வந்திருக்கிற விருந்தாளி. என்னோட ப்ரெண்ட்ஸூம் கூட. அவங்கள பற்றி பேசினால் பெரிய பிரச்சனையாகும். நான் எதுவும் செய்ய தயங்க மாட்டேன்.

“அதான் தெரியுதேம்மா” என்றார் ஒருவர் ஏளனமாக.

ஆமா அங்கிள், நீங்க எங்களை பேசுவதை விட்டு உங்க குடும்பத்தை கவனிங்க. இல்லை உங்க மானமும் போயிடும்.

“என்னம்மா மிரட்டுறீயா?”

நான் மிரட்டலை அங்கிள். உங்க பொண்ணும், இந்த அங்கிளோட பையனும் என்ன செய்றாங்க? கொஞ்சம் கவனிச்சுக்கோங்க. இல்லை உங்க மரியாதை கெட்டுப் போயிரும்ல்ல. அதை சொன்னேன்.

“என் பொண்ணை பற்றி என்ன பேசுற?” அவர் கையை ஓங்க, “யோவ்..நிறுத்து” என்று சிம்மா அவர் கையை பிடித்தான். “உன்னோட பொண்ணு ஒன்றும் யோகிக்கியமில்லை” என்று முகேஷ் சத்தமிட்டான்.

“என்னோட பொண்ணை பத்தி நீங்க என்னடா சொல்றது?”

அட, ஆமா பெத்த அப்பன் எப்படி சொல்வான்? “மாமு இங்க பாரு” என்று கார்த்திக் அவன் கையிலிருந்த அலைபேசியை   காட்டினான். அவரின் பொண்ணு அருகே நிற்பவர் மகனுடன் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

“என்ன அங்கிள்? படம் நல்லா இருக்கா?” மாறன் கேட்க, தந்தை இருவருக்கும் சண்டை வந்தது.

பார்த்தேல்ல மிரு. இப்படி தான் நடக்கும். “இதுக்கு தான் யார் என்ன பேசினாலும் அமைதியா இருக்கணும்” என்றாள் நட்சத்திரா. எல்லாரும் அவளை பார்த்தாள்.

அம்மாடி, நீ ரொம்ப திமிறா நடந்துக்கிறன்னு பார்த்தா. பேஸ் பேஸ்..சரியா தெளிவா இருக்க? பரிதி தன் மகனை பார்த்துக் கொண்டே நட்சத்திராவை பாராட்டினார்.

அவள் சிம்மாவை பார்த்து விட்டு, மாமா நான் எதையும் திட்டம் போட்டு தான் செயல்படுவேன். “எந்த நேரத்தில் பேசணும்?” எப்பொழுது அமைதியாக இருக்கணும்ன்னு எல்லாம் என் திட்டத்தில் இருக்கும். திட்டமில்லாமல் நடந்த விளைவு தான் “இதோ” என்று அவள் வயிற்றை காட்டி புன்னகைத்தாள்.

“என்னம்மா? ஜோக் பண்ற மாதிரி சிரிக்கிற? இது வாழ்க்கைம்மா?”

ஆமா மாமா, “வாழ்க்கை தான். அதனால் தான் சிரிப்பு வருது” என்றாள். யாராலும் ஏதும் பேச முடியவில்லை.

“நீ உண்மையிலே எங்களுடன் படித்த நட்சத்திரா தானா?” கார்த்திக் கேட்டான்.

மாமா, “அவனது சந்தேகத்தை பார்த்தீர்களா?”

உன்னுடன் “ஏழாம் வகுப்பு” “சி” பிரிவில் படித்த அதே நட்சத்திரா தான்.

“இல்லையே? நீ இவ்வளவு அறிவா இருந்திருந்தா நானே உன்னை கல்யாணம் பண்ணி இருந்திருப்பேனே!” என்று அவளை பார்த்தான் கார்த்திக்.

அச்சோ, “ரொம்ப லேட் பண்ணீட்டியேப்பா?” “எனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கே” என்று சிம்மா கார்த்திக்கை முறைப்பதை பார்த்து சிரித்தாள் நட்சத்திரா.

சிம்மா, “சும்மா தான். இப்ப பாஸ் பண்ணிக்கலாம். இந்த வார்த்தைகள் உனக்காக வச்சுக்கோ” என்று கார்த்திக் சிம்மா கையை இழுத்து அவன் கையில் அடித்து விட்டு, “சிம்மாவுக்கு நீ என்ன சொல்லுவ?” அவன் கேட்க, பரிதி அமைதியாக நட்சத்திராவை பார்த்தார்.

ம்ம்..ஓ.கே தான். ஆனால் உங்க சிம்மா ரொம்ப லேட் பண்ணிட்டான். என்னோட மாமா கோவிச்சுப்பாறே? என்றாள்.

மாமாவா? சிம்மா கேட்க, ஆமா நான் கல்யாணம் செய்து கொள்பவனை மாமான்னு தானே அழைக்கணும் என்றாள் கிண்டலாக. சிம்மா கோபமுடன் நகர்ந்தான். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

நட்சு, நாம கிளம்பலாமா? சுபிதன் கேட்க, அவளுக்கு துணையா யாராவது இருக்க பார்க்கணும்ன்னு சொன்ன? மிருளாலினி கேட்க, அங்கிருந்த சாப்பாடு கொண்டு வந்த பாட்டியை அழைத்து வந்தான் சுபிதன்.

நட்சு, “இனி தங்கம்மா பாட்டி உன்னோட தான் ஒரு மாதம் தங்குவாங்க. அவங்க சொல்றத கேட்டு நடந்துக்கோ” என்றான் சுபிதன்.

“எதுக்குடா? அவங்களுக்கு ஏதாவது வேலை இருக்கும்ல்ல?”

இல்லம்மா, எனக்கு பேரன் மட்டும் தான். “ஒரு மாதம் தான அவன் இருந்துப்பான்” என்றார்.

பாட்டி சுபிதனை பார்த்து, “நீங்க நிம்மதியா இருக்கலாம். எங்க ஊரு பிள்ளைய நான் பார்த்துக்கிறேன்” என்றார்.

“இன்று மட்டும் பார்த்துக்கோங்க. நான் நாளை காலையிலே வந்திடுறேன்” என்று பாட்டி சென்றார்.

அன்னமும் அங்கே வந்து தன் கணவனை பார்த்தார்.

பாப்பா, “நீ கண்டிப்பாக இங்கே தான் இருக்கப் போறீயா?” பரிதி கேட்டார்.

ஆமா மாமா.

இல்லம்மா, “நீ தனியே கஷ்டப்படுவதை பார்த்தால் உன் அப்பா வருத்தப்படுவான்ல்ல?” அவர் கேட்க, நட்சத்திரா சிரித்தாள்.

அப்பொழுது குருக்களிடம் பேசிக் கொண்டு வந்தார் புகழேந்தி. அவருடன் உதிரனும் வந்தான்.

“எதுக்கும்மா சிரிக்கிற?”

மாமா, அவருக்கு சொந்தங்கள், மனிதர்களை விட அவரது கௌரவம் தான் முக்கியமாகி விட்டது. “நான் செத்த பின் வேண்டுமானால் வீட்டிற்குள் என்னை அழைத்து செல்லுங்கள்” என்று அம்மாவிடம் சொன்னது போது அம்மாவிடமிருந்த பதற்றம் அவரிடம் கொஞ்சமும் இல்லை. என்னை விடுங்கள். இத்தனை வருடங்களாக தங்கையை பிரிந்த வருத்தம் கூட அவரிடம் இல்லை.

ஏன் அத்தை, “சண்டை போட வர்றீங்க? உங்க அண்ணாவிடம் பேசணும்ன்னு நினைக்கலையா?” அவள் கேட்க, “பேசணுமா? நான் என்னடி பேசுறது? இவருக்கு மரியாதை இல்லாத இடத்தில் எனக்கென்ன வேலை?”

மாமா, “இப்ப என்ன சொல்றீங்க?” நானும் எனக்கானவனை யாரிடமும் விட்டுக் கொடுக்க முடியாது. என் அம்மாவும் என்னை நினைத்து அழுதாங்க. “அதுக்காக அவங்க புருசனை விட்டு வந்தாங்கல்லா? இல்லையே? நான் மட்டும் எதுக்கு அவரை விட்டுக் கொடுக்கணும்?”

மாமா, உங்க மகனும் போலீஸ் ஆகப் போறாங்க. “யாராவது உங்க மகனை மரியாதை குறைவா பேசுனா பார்த்துட்டு சும்மா இருப்பீங்களா?”

“அது எப்படி விடுவோம்?” அன்னம் கேட்டார்.

அதே போல் தான் அவர் மரியாதை எனக்கும் முக்கியம். அதனால் தான் வேண்டுமென்றே காரணம் வைத்து அவரை விட்டு வந்தேன். அவருக்கும் அதே நேரம் வேலை வந்தது சரியாகப் போனது. இங்கே வந்து அவர் அவமானப்பட்டால் அவருக்கு மட்டுமல்ல அவர் பதவிக்கு கிடைக்கப் போகும் அவமானம். இதுவரை ஒருநாள் கூட என்னை அவருடன் தங்க அனுமதிக்கவில்லை மாமா அவர்.

அவரே கல்யாண பேச்சை ஆரம்பித்தார். நான் தான் அவரை அவர் இன்னும் உயரணும்ன்னு விட்டிருக்கேன். அவருக்கு அவர் வேலையை அவ்வளவு பிடிக்கும். என்னால் அவர் மரியாதை மட்டுமல்ல அவர் கனவு நிறைவேறாமல் போயிரும். அதனால் தான் நான் கல்யாணத்திற்கு ஒத்துக்கலை.

நட்சத்திராம்மா, நீ யோசிப்பது சரிதான்ம்மா. ஆனால் நீ அருகே இல்லாத நேரம் வேற பொண்ணை பார்த்தால் என்ன செய்றது? அன்னம் கேட்டாள்.

இல்லத்தை, அவர் கண்டிப்பாக யாரையும் பார்க்கமாட்டார். எனக்கு அது உறுதி. அவர் வேற பொண்ணை கல்யாணமே செய்தாலும் அவரால் என்னை மறப்பது எளிதல்ல என்றாள்.

அப்படி யாரும்மா அவர்? பரிதி கேட்டார்.

அவரோட பெயர் நரசிம்மன். இதற்கு மேல் யாருக்கும் அவரை பற்றி இப்பொழுதைக்கு தெரிய வேண்டாம். அவர் கனவு எனக்கு முக்கியம்.

இதிலும் சிம்மா பெயர் சேர்ந்து வருதே? மாறன் கேட்க, “அது விதியாக கூட இருக்கலாம்” என்று அவள் சிம்மராஜனை பார்த்தாள். புகழேந்தியும் உதிரனும் திரும்பி அவனை பார்த்தனர். அவள் இப்பொழுது தன் அப்பாவை பார்த்தாள்.

மாமா, எனக்கு டயர்டா இருக்கு. நாங்க கிளம்புகிறோம். நீங்க வாங்க என்று எழுந்தாள். அவள் கால் வலிக்க நகர முடியாமல் நின்றாள்.

“என்னாச்சும்மா?” பரிதி கேட்க, திடீர்ன்னு கால் ரொம்ப பெயினா இருக்கு.

ரெஸ்ட் எடுக்காம இருந்தேல்லம்மா. அதனால இருக்கும். வெந்நீர் வைத்து காலில் ஊற்றினால் சரியாகி விடும். வா என்று அன்னம் நட்சத்திராவின் கையை தோளில் போட, இருக்கட்டும் அத்தை. நான் நடக்க முயற்சிக்கிறேன் என்றாள்.

சொல்ல நல்லா இருக்கும். ஆனால் வலி ரொம்ப இருக்கும். அமைதியா வா என்று அவரும் மிருவும் அவளை அழைத்து காரிடம் சென்றனர்.

அவளை காரில் ஏற்றிய அன்னம், “பார்த்துக் கூட்டிட்டு போப்பா” என்று அவர் சொல்ல, “அத்தை நீங்களும் வாங்க” என்று நட்சத்திரா அழைத்தாள்.

இல்லம்மா, உங்க மாமா தனியா தான் வரணும். சிம்மா பற்றி உனக்கே தெரியும். அவன் வர நேரமாகும். நான் அவருடன் சேர்ந்து வாரேன். நீங்க கிளம்புங்க. நான் பின்னாடியே வாரேன் என்று அவர் சென்றார். இவர்களும் வீட்டிற்கு கிளம்பினர்.

புகழேந்தி குருக்களையும் தன் மகனையும் பார்த்தார். இவ்வளவு நேரம் உடன் வந்த உதிரன் அவனாக முன்னே கோபமாக சென்றான். சிம்மா தன் தந்தை அருகே வந்து நின்று கொண்டான். புகழேந்தி பரிதியை முறைத்துக் கொண்டு நின்றார்.

சிம்மா, நீ இருந்து வா. நாங்க கிளம்புகிறோம் என்றார் பரிதி.

பரிதி, நில்லுங்கோ. “நீங்களும் வரலாமே?” குருக்களில் ஒருவர் கேட்டார்.

அதான் எனக்கு பதில் என் சிம்மா இருக்கானே? என்று அவர் சென்றார். புகழேந்தி சிம்மாவையும் முறைத்தார். “அவன் அதற்கெல்லாம் மசிபவனா?” “நான் முன்னே செல்கிறேன். நீங்க வாங்க” என்று சிம்மராஜன் குருக்களிடம் சொல்லி விட்டு முன் சென்றான்.

அன்றிரவு எண்ணெய் தயாரித்து அன்னம் பரிதியிடம், நட்சத்திராவிற்கு காலில் தேய்க்க கொடுத்து விட்டார். பரிதியும் வீட்டிற்கு வெளியேயிருந்து அழைத்தார். மிருளாலினி வந்தாள்.

“இதை பாப்பாவுக்கு காலில் தேய்த்து விடும்மா” என்று அவர் சொல்ல, “உள்ள வாங்க அங்கிள். அவளை பார்த்திட்டு போங்க” என்றாள் மிருளாலினி.

உன்னோட கணவன் எங்கம்மா?

அவர் தூங்குறாரு அங்கிள்.

சாரிம்மா, தொந்தரவு செய்துட்டேன். நீயும் தூங்கிக் கொண்டிருந்தாயாம்மா?

இல்ல அங்கிள், எனக்கு கதைகள் படிக்கும் பழக்கம் இருக்கு. நான் தூங்க நேரமாகும் அங்கிள் என்றாள்.

சரிம்மா, பாப்பா அறை எங்கிருக்கும்மா? அவர் கேட்க, கீழிருந்த அறையை அவள் காட்டினாள். இருவரும் அறை அருகே செல்ல, நட்சத்திராவின் பேச்சு சத்தம் கேட்டது.

இந்த நேரத்துல யார்கிட்ட பேசுறா? “இருங்க அங்கிள்” என்று ஒளிந்து பார்த்தாள் மிருளாலினி.

டேய், இந்த நேரத்துல்ல வந்திருக்க? “அப்பா பார்த்தாரு நீ செத்தடா” நட்சத்திரா சொல்ல, “அம்மா குடுத்து விட்டாங்க. காலை காட்டு” என்று நட்சத்திராவை அமர வைத்த நட்சத்திராவின் அண்ணன் உதிரன் அவள் காலில் தேய்த்து விட்டான்.

“நீ குடுத்துட்டு போ. நான் தேய்ச்சுக்கிறேன்” அவள் சொல்ல, யார் அவன்? கேட்டான்.

நான் சொன்னது உன் காலில் விழவில்லையா? அவள் கேட்க, எல்லார் போலும் என்னை நினைக்காதே! எனக்கு என்னோட செல்லம்மா பற்றி தெரியும் என்றான் உதிரன்.

அவன் அலைபேசி அழைக்க, அவன் கை எண்ணெயாக இருக்க,

அலைபேசியை எடுத்து அவன் காதில் வைத்தாள் நட்சத்திரா. உதிரன் பதட்டமானான்.

என்னாச்சுடா? “அப்பா என் அறைக்கு தான் போகப்போறாராம்” என்று “உன்னோட ப்ரெண்டை போட்டு விட சொல்லு” என்று எழுந்து அவன் வந்த ஜன்னல் வழியே வெளியே குதித்தான்.

“பார்த்து போடா” என்று நட்சத்திரா சத்தம் கொடுக்க, “உன்னோட ஹெல்த்தை பார்த்துக்கோ” என்று உதிரன் அவளை பார்த்துக் கொண்டே பின்னே செல்ல நேராக பைக் ஒன்றில் மோத சென்றான் உதிரன்.

அண்ணா..என்று சத்தமிட்டாள் நட்சத்திரா. பைக்கில் வந்த சிம்மராஜன் பிரேக்கை அழுத்தி சரட்டென  பைக்கை நகர்த்தினான்.

அவள் கத்தியதில் பயந்த உதிரன் வேகமாக மூச்சு விட்டு சிம்மாவை பார்த்து பெருமூச்சு விட்டு, “வண்டி துடைக்க துணி வச்சிருக்கியா?” பதட்டமாக கேட்டான். பயத்துடன் நின்ற நட்சத்திராவை பார்த்துக் கொண்டே ஒரு துணியை எடுத்துக் கொடுத்தான் சிம்மா.

உதிரன் கையை துடைத்து விட்டு, போனை காதில் வைத்து அம்மா, எப்படியாவது அப்பா என் அறைக்கு போகாமல் பார்த்துக்கோ..

“இல்லை. எனக்கு ஒன்றுமில்லை” என்று பின் தான் நட்சத்திராவை பார்த்தான். பயத்தில் உறைந்து நின்ற அவள் மயங்க சிம்மா பைக்கை நிறுத்தி, “நீங்க போங்க. நாங்க பார்த்துக்கிறோம்” என்றான்.

பதட்டமாக இருந்தாலும் அவளை பார்த்துக் கொண்டே கண்ணீருடன் ஓடினான் உதிரன்.

இவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பரிதியும் மிருளாலினியும் ஓடி வந்தனர். சிம்மாவும் உதிரன் சென்ற ஜன்னல் வழியே ஏறி குதித்தான்.

சிம்மா, “டாக்டரை அழைச்சிட்டு வா” என்றார் அவன் அப்பா பரிதி.

சிம்மா வெளியே வர, அவன் அம்மா அன்னம் பரிதியை தேடி வந்தார். அவன் விசயத்தை சொல்ல, “இருடா..நான் வாரேன்”. பார்க்கலாம். உங்கப்பா இப்படி தான் பயத்துல்ல டாக்டர் டாக்டர்னு மாத்திரைய வாங்கி கொடுப்பார். அதை சாப்பிட்டால் சாப்பாடு சாப்பிடவே முடியாது என்று அவரை திட்டிக் கொண்டே உள்ளே வந்து, “ஏம்மா தண்ணீர் எடுத்துட்டு வா” என்று மிருளாலினியிடம் நீரை வாங்கி நட்சத்திராவின் முகத்தில் தெளித்தார்.

அவள் மெதுவாக விழிக்க, பாருங்க பிள்ளை பயந்திருக்கு. அதான் மயக்கம். இதுக்கும் டாக்டரா? கொந்தளித்தார் அன்னம்.

“பயந்துட்டேன்ம்மா” என்றார் பரிதி.

அம்மாடி, “சூடா பால் எடுத்துட்டு வாடா” என்று அவர் சொல்ல, மிருளாலினி சமையலறைக்கு சென்று தயார் செய்தாள்.

எழுந்த நட்சத்திரா எல்லாரையும் பார்த்து விட்டு, சிம்மாவையும் ஜன்னலையும் பார்த்து, “அண்ணா” என்று எழ முயன்றாள்.

“உன்னோட அண்ணாவுக்கு ஒன்றுமில்லை. என் பைக்கில் தான் அடிபட்டிருப்பான். ஆனால் ஏதும் ஆகலை” என்று சிம்மா அவள் கையை பிடித்து சொன்னான். அவன் கையை கண்ணில் ஒற்றிக் கொண்டு “தேங்க்ஸ் மாமா” என்று சொல்லும் போதே அழுதாள்.

“எதுக்குடி அழுற?” அழாத அன்னம் சொல்ல, அவரை அணைத்துக் கொண்டு அழுதாள். சிம்மாவும் பரிதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.

சிம்மா, “இவளை தூக்கி படுக்கையில் போட்டு விட்டு நீயும் அப்பாவும் வீட்டுக்கு போங்க” என்று அன்னம் சொன்னார். அவனும் அவளை தூக்க சரியாக மிருளாலினியும் வந்து இருவரையும் பார்த்தாள். நட்சத்திராவும் சிம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அவன் அவளை பார்த்துக் கொண்டே அவளை படுக்க வைத்து விட்டு வெளியேறினான். பரிதியும் அவனுடன் சென்றார்.

அம்மாடி வெந்நீர் ஊற்றினாயா? அன்னம் கேட்க, “இல்லத்தை” என்றாள் நட்சத்திரா.

“இந்த பாலை குடி. அம்மாடி பொண்ண பார்த்துக்கோ. நான் வெந்நீர் எடுத்து வாரேன்” என்றார் அன்னம்.

“நீங்க இருங்க. நான் எடுத்துட்டு வாரேன்” என்றாள் மிருளாலினி.

இரும்மா, நாளைக்கு நீங்க கிளம்பிடுவீங்கல்ல? “கொஞ்ச நேரம் உடன் இரும்மா” என்று அன்னம் சமையலறைக்கு சென்றார்.

சாரிடி, எனக்கு இப்ப தான் புரியுது. நீ செய்றது தப்போன்னு தோணுச்சி. இப்ப தான் புரியுது என்று மிருளாலினி அவளை அணைத்து அழுதாள். நட்சத்திராவும் கண்ணீருடன் இருந்தாள்.

அன்னம் வெந்நீர் எடுத்து வந்தார்.

அத்தை நானே ஊத்திக்கிறேன்.

இல்லம்மா, “நீ எழ வேண்டாம். நான் ஒத்தடம் கொடுத்து விடுறேன்” என்றார் அன்னம்.

இருக்கட்டும் அத்தை. நான் பார்த்துக்கிறேன் என்று நட்சத்திரா தடுக்க, நட்சு சும்மா இரு. இந்த நிலையில் உன்னுடன் பெரியவங்க யாராவது இருந்தால் நன்றாக இருக்கும்ன்னு தோன்றியது. இதை தான் நான் எதிர்பார்த்தேன் என்றாள் மிருளாலினி.

மிரு..நட்சத்திரா கோபமாக பார்க்க, அன்னம் இருவரையும் பார்த்து சிந்தித்து விட்டு, நீ கவலைப்படாதம்மா. “நான் என்னோட மருமகள பார்த்துக்கிறேன்” என்றார் அன்னம்.

அத்தை, அதெல்லாம் வேண்டாம். பாட்டி உதவிக்கு உடன் இருப்பாங்கன்னு சுபி சொன்னான்.

“அதனால என்னம்மா?” நானும் உன்னை பார்த்துக்கிறேன்.

அத்தை, “அப்பாவுக்கு இதனால் உங்க மேல கோபம் கூடுமே?”

அவனுக்கு வேற வேலையில்லைம்மா. “அவனுடன் இப்ப என்ன பேசிட்டு இருக்கோம்?”

அதுக்கில்லை அத்தை..

“நீ எதுவும் பேச வேண்டாம்” என்று அன்னம் நட்சத்திராவிற்கு வெந்நீர் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

சென்ற சிம்மா அறைக்கு வர, அவன் அம்மா நட்சத்திராவிற்கு ஒத்தடம் கொடுப்பதை பார்த்து திரும்பி நின்றான்.

“சிம்மா வெளிய போ” என்றார் அன்னம்.

அம்மா, “உதி மச்சான் வீட்ல மாட்டலை” என்று திரும்பி கூட பாராது செல்ல, நட்சு இது என்னது கழுத்துல? மிருளாலினி கேட்க, அவன் வெளியே நின்றான்.

தெரியல மிரு.

எவ்வளவு நேரமா போட்டிருக்க? மிரு கேட்க, அன்னம் எழுந்து அதை பார்த்து, வில்வ இலையா? வாடாமல் இருக்கு? எனக் கேட்டார்.

ஆமா அத்தை, எனக்கும் புரியல. இது எப்ப என் கழுத்தில் வந்ததுன்னா..என்று நட்சத்திரா யோசிக்க, காரில் வரும் போது சிம்மாவை பார்த்த நொடி அவள் கழுத்தில் தோன்றியிருக்கும். ஆனால் அவளுக்கு அதுவும் தெரியவில்லை.

எவ்வளவு யோசித்தாலும் தெரியலை அத்த. இந்த செயினை கழற்றவும் முடியலை.

கழற்ற முடியலையா? என்று அன்னம் அதை தொட, அவரால் அதை தொட முடியவில்லை. “ஷாக் அடிக்குதுடி” என்று பின் நகர்ந்தார் அன்னம்.

“அம்மா” என்று சிம்மா உள்ளே வந்தான். அப்பொழுது தான் அவன் கழுத்தில் இருந்த ருத்ராட்சத்தை பார்த்தான்.

தேவதை வில்வ இலையை நட்சத்திராவின் தாலியில் கோர்த்த போது தான் கடந்த காலம் வந்திருப்பாள். கடந்த காலத்தில் அவள் வந்த நேரம் அவளுக்கு திருமணமாகாமல் இருந்த நேரம் என்பதால் அவள் அணிந்திருந்த செயினிலே இலை இணைந்து விட்டது.

அதே நேரம் நட்சத்திராவை பார்க்க ஓடி வந்த சிம்மாவின் கழுத்திலும் ருத்ராட்சம் உருவாகி இருக்கும். தேவதை இருவரையும் கவனிக்க ஆரம்பித்தார்.

சிம்மாவின் ருத்ராட்சமும் அவிழ்க்க முடியாதிருந்திருக்கும். அவன் யோசனையுடன் நட்சத்திராவை பார்த்துக் கொண்டு அன்னத்திடம் வந்தான்.

அம்மா, முடிஞ்சதா போகலாமா? கேட்டான்.

சிம்மா, இவளோட செயினை கழற்ற முடியலை. “ஷாக் அடிக்குது” என்றார். சிம்மா அச்செயினை தொட, “மாமா வேண்டாம்” என்று நகர்ந்தாள் நட்சத்திரா.

“அமைதியா இரு ஸ்டார்” என்று சிம்மா நட்சத்திராவின் செயினை தொட்டான். அவனுக்கு ஏதும் ஆகவில்லை. அவன் தொட வரும் போது கண்ணை மூடிய நட்சத்திரா கண்ணை திறந்து, மாமா உங்களுக்கு ஏதுமாகலையா? என்று கேட்டாள்.

ஆமா, உனக்கு மட்டும் ஏதும் ஆகலை. “இரு நானும் ட்ரை பண்றேன்” என்று மிருளாலினி தொட, நட்சத்திரா கண்ணை மூடினாள். ஷ்..ஆ…என்று சத்தம் கேட்டு கண்ணை திறந்த நட்சத்திரா,

“ஆர் யூ ஓ.கே மிரு? என்று நட்சத்திரா கேட்க, “அடியேய் என்ன நடக்குது? உன்னோட செயினில் வில்வ இலை எப்ப தான் வந்தது?” கொஞ்சமும் காயவில்லை என்று அவள் கேட்க, “விசித்திரமா இருக்கு” என்று சிம்மா அவன் அம்மாவை பார்த்தான்.

“சிம்மா உனக்கு மட்டும் ஏதும் ஆகலை?” என்று கேட்டார். இருங்கம்மா என்னன்னு பார்க்கலாம் என்று அவன் சிவன் கோவிலில் பூஜை செய்யும் பூசாரியை அழைத்து அவரிடம் சொன்னான்.

சிம்மா. உன்னோட கழுத்தில் எப்படி ருத்திராட்சம் வந்தது? அன்னம் கேட்க, நட்சத்திராவும் மிருளாலினியும் திகைப்புடன் அவனை பார்த்தனர்.

“எனக்கும் தெரியலம்மா” என்று அவனும் அதை தொட்டுப்பார்த்தான். அன்னம் அவனுடையதை தொட ஷாக் அடித்தது.

“அம்மா சும்மா இரு” என்று அவன் அம்மா கையை ஊதி விட்டான் சிம்மா. இருவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

வில்வஇலை, ருத்ராட்சத்திற்கான காரணத்தை இவர்கள் அறிவார்களா? நாளைய எபிசோடில் பார்க்கலாம்.