Advertisement

#uk2

விதுல்யாவை இந்த நேரத்தில் அதுவும் இப்படியொரு  கோலத்தில் எதிர்பார்த்திராத பிரணாவ்  ஆச்சரியத்தில்

“நீ என்ன இங்கு????? அதுவும் யாரோ ஒரு டாக்டரின் கோட்டை போட்டுக் கொண்டு நிற்கிறாய் ??????” என்றபடி எழுந்தே விட்டான் ..

” டேய் விது என்னவாக இருக்கிறாள் என்று கூட உனக்கு தெரியாதா????” உதிதா வினவ

“அப்படியென்றால் நிஜமாகவே நீ டாக்டரா?????”  என்றான் பிரணாவ் அதிசயமாய்.

 அவனின் ஆச்சரியத்தில் விதுல்யா

சிரித்துவிட

யுகனிடம் திரும்பிய பிரணாவ் “வடபழனி முருகன் கோவில் வெளியியே ஒரு ஜோசியக்காரன் உட்கார்ந்து இருப்பான்….. அவனைப் போய் முதலில் பார்த்துவிட்டு வந்து விடலாம் மாம்ஸ்” என்றான் சம்பந்தமில்லாமல்.

 யுகன் புரியாமல் பார்க்கவும் ” இல்லை….. அன்று உனக்கு டாக்டர் பெண் தான் மனைவியாக வருவாள் என்று சொன்னான்….. அதை நான் அப்போது நம்பவில்லை…. ஆனால் இப்போது உறுதியாகிவிட்டது!!!!! அப்படியே அந்த ஜோசியக்காரனிடம் வரப்போகும் பொண்டாட்டி எப்போது என்னிடம் வாய் திறந்து  பேசுவாள் என்றும் கேட்டுவிட்டு வந்துவிடலாமே!!!” என்றான் பிரணாவ்.

 அதை கேட்டதும் அந்திவான ஆதவனின் வண்ணத்தை அப்படியே அவள் கன்னத்தில் நிரப்பி கொண்டு அவ்விடம் விட்டு மறைந்திருந்தாள் விதுல்யா….

அப்படி மறைந்திருந்தவளை ஒரேடியாய் தன் வாழ்வை விட்டு மறைய செய்ய வேண்டுமாயின்????!!!!!!!

அடுத்த மாதமே யுகனிற்கு மும்பைக்கு பணி மாற்றுதல் ஏற்பட்டிருக்க உதிதாவும் கூட சென்று விட்டதால் பிரணாவால் அடிக்கடி விதுல்யாவை பார்க்க முடிந்திருக்கவில்லை….

இருமுறை உதிதா சென்னைக்கு வந்திருந்த சமயம் பிரணிதாவை அழைக்க சென்றிருந்த போதும் விதுல்யாவிடம் பிரணாவ்  எதுவும் பேசிவிடவில்லை…..

எங்கே போக போகிறாள் தன்னவள் தானே எனும் எண்ணமோ!!!???

ஆனால் இப்படி தானே இன்னொருத்திக்கு சொந்தமாக போகிறான் என்பதை கனவா கண்டான்??????

என்ன தான் சந்தர்ப்பத்தையும் சூழ்நிலையையும் அக்கா பாசத்தையும் முன் வைத்து தப்பிக்க நினைத்தாலும் விதுவிற்கு தான் செய்த இந்த துரோகத்தின் பலனை அனுபவித்து தானே தீர வேண்டும்….

அதிலும்

பெண் பாவம் பொல்லாது என்பார்களே!!!!!!

இனியும் அனைத்தும் விதி வசத்துடனே நடந்தேரட்டும்…..

ஒரு பெருமூச்சை வெளியிட்டவாறு  இனித்த நிகழ்வுகளிலிருந்து விடுபட்டு கண்களை திறந்தவனுக்கு வீட்டு வாசலில் வாடிய முகத்தோடும்  நம்ப முடியா மன வேதனையோடும்  குழுமியிருந்த பெற்றோரும் யசோம்மாவும் தென்பட்டனர்…….

முதலில் வண்டியை விட்டு இறங்கிய யுகன் பின் இருக்கையை திறந்துவிட்டு “இறங்குங்கள்……” என்றான்.

 ஆனால் அதற்குள் உதிதா தன் பெரியப்பா கதிரேசனிடம் விரைந்து “ஆரம்பத்திலிருந்து நடந்ததையெல்லாம் சொன்னால் உங்களுக்கு கண்டிப்பாக புரியும் பெரியப்பா ……. என் இடத்தில் நீங்கள் இருந்திருந்தாலும் இப்படி ஒரு முடிவை தான் எடுத்திருப்பீர்கள்” என்று கூறினாள்.

 கதிரேசனின் கண்கள் இரண்டும் பிரணாவிடம் நிலைகுத்தி நிற்க அதனை திசை திருப்பும் விதமாய் கத்தத் துவங்கினான் அவனருகில் உரிமையோடு மாலையும் கழுத்துமாக நின்றிருந்தவளின் செல்வ மகன்…….

 இப்படி ஒரு பேரதிர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத கதிரேசன்

 “அந்தக் குழந்தை ஒரு அயோக்கியன் ஏற்படுத்திய விபத்து பெரியப்பா!!!!!!

 அவனிடமிருந்து இவர்கள் இரண்டு

பேரையும் காப்பாற்றத்தான்………..”

 பேசிக் கொண்டு போன உதிதாவிடம்

”  பிரணாவிற்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாயாக்கும்!!!!!!!!!” என்று இடி போல கத்தினார்…..

 இந்த சத்தத்தையும் அதிரடி தாக்குதலையும்  சற்றும் எதிர்பாராத உதிதாக ஒரு அடி பின்னால் நகர

“சொல்லு உதி …… உன் பெரியப்பா கேட்கிறார் அல்லவா?????  அவர்கள் இரண்டு  பேரையும் காப்பாற்ற என் பையனை புதைகுழியில் தள்ளி விட்டாயா?????????”  காஞ்சனா விசும்பலோடு சின்ன மகளிடம் பாய்ந்தார்.

 அச்சொற்கள் உதிதாவை தாக்கியதோடு பன்மடங்கு அதிகமாக பிரணாவின் அருகில் நின்றவளை உயிரோடு புதைத்தது……

” என்ன பேசுறீங்க பெரியம்மா???????

 நம்மை நம்பி வந்திருக்கிறாள்…….. அவளை மனதார வாழ்த்தா விட்டாலும் தயவுசெய்து இப்படி வார்த்தைகளை விடாதீர்கள்!!!! ” உதிதா படபடக்க

“உன்னையே உலகம் என்று நம்பிக் கொண்டிருந்தவனைப் பற்றி கொஞ்சமாவது நீ நினைத்துப் பார்த்து இருந்தால் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க மாட்டாய்……. உன்னால் எப்படி உதி இப்படி ஒரு காரியத்தை செய்ய முடிந்தது?????” அதிர்ச்சியும் வருத்தமும் போட்டியிட்டு மென்மேலும் காஞ்சனாவை பேசவைக்க

அவரிடம் பதில் கூறாது தன் பெரியப்பாவிடம் எப்படியாவது பேசி புரிய வைத்துவிடலாம் என்று நம்பி அவரின் புறம் அவசரமாக திரும்பினாள் உதிதா .

“பெரியப்பா எனக்கு ஒரு பத்து நிமிடம்

டைம் கொடுங்கள்…….. நான் சொல்ல வருவதை கொஞ்சம் கேளுங்கள்……

 அதன்பின் நீங்களே புரிந்து கொள்வீர்கள்!!!!!”

 ஆனால் அவரோ “எங்களுக்கு நீ புரிய வைத்தது எல்லாம் போதும் ……..

எங்களுக்கு  செய்தது அனைத்தும் இந்த ஜென்மத்திற்கு போதும்……..

முதலில் இங்கிருந்து தயவுசெய்து நீ கிளம்பி விடு !!!!!!!!!!”

சின்ன மகளிடம் ஒரு கும்பிடு போட்டவர் அவசரமாக வீட்டினுள் சென்று விட்டார்.

 சத்தியமாக இப்படியொரு தாக்குதலை கனவில் கூட நினைத்துப்  பார்த்திராத உதிதா நிலை தடுமாறி விழப் போனாள்.

 அவளை வேகமாக ஓடிவந்து அணைத்த யுகன் “வா அம்மு போகலாம்……. இதற்குமேல் ஒரு நிமிடம் கூட உன்னை இங்கு நிற்க விடமாட்டேன்!!!!” என்றான்

அவன் பங்கிற்கு.

” அப்படி எல்லாம் வர முடியாது யுகி…… இந்த பொண்ணை நான் தான் கூட்டி வந்தேன்…. அவளை நல்லபடியாக இங்கு வாழ வைக்காமல் என்னால் எங்கும் வர முடியாது !!!!!”

உதிதாவை  கதிரேசன் வீட்டை விட்டு கிளம்ப  சொன்னதை கேட்டவுடன் யசோதா பதைபதைத்த போதும் ஒரு வார்த்தை தன் கணவனின் அண்ணனை மீறி பேசிவிடாது  அமைதியாக தான் நின்றார்…… உதிதாவின் தந்தை  ரகுராம் அங்கு இல்லை…… அவர் இருந்திருந்தாலும் மகளுக்கு ஆதரவாய் அண்ணனை எதிர்த்து பேசியிருக்க மாட்டார்…. அவள் செய்திருக்கும் காரியம் அத்தகைய வீறியத்தை சுமக்க தக்கது என்பதால்!!!!!!

 கன்னங்களை கண்ணீரால் நனைக்க விட்டு நின்று கொண்டிருந்த யசோதாவிடம்  திரும்பியவள் ” என்ன அம்மா????? பார்த்துக் கொண்டு நிற்கிறாய் !!!!! போய் ஆரத்தி தட்டை எடுத்து வா…..”  என்றாள்  உதிதா சிறு கட்டளையுடன்…….

 ஆனால் இவை அனைத்திற்கும் முன் பிரணாவ் வீட்டின் கதவருகில் பாய்ந்து சென்று

 “யாரும் என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கொள்ள செல்லவில்லை அப்பா…….

 நான் தான் இந்தப் பொண்ணை விரும்பினேன்!!!!!

உங்களுக்கு காதல் என்றால் பிடிக்காது என்று யுகன் மாமாவிடம் திருமணம் செய்து வைக்க கோரினேன்…….

 இதற்கும் உதிக்காவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ….. அவளை யாரும் எதுவும் சொல்ல வேண்டாம் ….. இது

அவளுடைய வீடு!!!!!  அவள் எங்கேயும் கிளம்ப மாட்டாள்” கிட்டத்தட்ட கத்தினான்  .

 “இல்லை  மாப்பு…… இவள் இப்போதைக்கு இங்கு இருப்பது நல்லது கிடையாது…..  நான் கூட்டிக் கொண்டு போகிறேன்!!!!”  யுகன் பிடிவாதமாக பிரணாவிடம் கூற

 அப்போது பிரணாவின் பேச்சைக் கேட்டு மீண்டும் வெளியே வந்த கதிரேசன்

” கதை பிரமாதம் பிரணாவ்…… அப்போது அந்த குழந்தைக்கு என்ன கதை வைத்திருக்கிறாய் ????? அதுவும் உன்னுடையது தானா?????”  கண்மண் தெரியாத கோபம் அவரை சூழ்ந்து கொண்டது…

 உடனே தன் மனைவியின் அருகே சென்று அவள் கையிலிருந்த குழந்தையை ” வா !!!!!” என்று அழைக்க

 அடுத்த நொடியே வாய் கொள்ளாச்

சிரிப்புடன் அது பிரணாவின்  கையில் புகுந்து கொண்டது….

 ஒரு கையில் குழந்தையை சுமந்தவன் மறுகையில் மனைவியின் கரத்தை பற்றியபடி தன் தந்தையின் முன்னே வந்து நின்று ” யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இவன் இனி என் பையன் தான்  …….. இவள் கழுத்தில் நான் தாலி கட்டி இருக்கிறேன்!!!!!  இனிமேல் இந்கு தான் இருப்பார்கள் ….. ஒருவேளை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் சொல்லுங்கள்……

 நாங்கள் இப்படியே கிளம்பி விடுகிறோம்!!!!!!!!”  என்றான் திடமாக.

‘ நான் உன்னை கிளம்ப சொன்னது பொறுக்கமாட்டாமல் எப்படி அவனே கிளம்புகிறேன் என்று சொல்கிறான் பார் !!!!!!!!!

 இந்த பந்தத்திற்கு நீ செய்து வைத்திருப்பது சரியா??????’

அத்தனை ஆவேசமும் உதிதா மீது பாய இருந்தும் அவள் கர்ப்ப நிலை கதிரேசனை அதற்குமேல்  பேச விடாது தடை செய்ததோடு

 “எல்லோரும் நல்லா இருங்கள்!!!!” என்று மட்டும் கூறிவிட்டு அவர் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்ள வழிவகுத்தது…..

”  யசோம்மா எவ்வளவு நேரம் இப்படியே நிற்க வைப்பாய் ??????? போய் ஆரத்தி தட்டை எடுத்து வருகிறாயா????? இல்லை நான் என் ஃபேமிலியோடு நம் வீட்டிற்குள் ஜம்ப் பண்ணி விடட்டுமா??????”  பிரணாவ் கேட்டதும்

இம்முறை காஞ்சனாவின் பதிலுக்கு காத்திராமல் உள்ளே ஓடிய யசோதா ஆரத்தி தட்டுடன் வந்து மகனையும்

மருமகளையும் கூடவே குட்டி பேரனையும் வரவேற்றார் .

“சரி மாப்பு நாங்கள் அப்படியே கிளம்புகிறோம்……”  வீட்டிற்குள் கூட வராமல் புறப்பட்ட யுகனிடம்

“அப்பா பேசியதை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள் மாம்ஸ்….. உள்ளே வாங்க!!!!”  பெரிய மனிதனாக அழைப்பு விடுத்தான்.

”  இவளோடு பெரிய மாமாவால் பேசாமல் அதிக நாள் எல்லாம்  தாக்குப் பிடிக்க முடியாது என்று எனக்கு தெரியும் மாப்பு……

 ஆனால் இப்போது  அவருக்கு கொஞ்சம் தனிமை தேவை!!!!

 எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதற்கு சிறு கால அவகாசமும்  தேவை…..

 இப்போது உதி இங்கு இருந்தாள் என்றால் இவர்கள் இரண்டு பேருக்கும்

கண்டிப்பாக வாக்குவாதம் தான் மிஞ்சும்……

 கொஞ்ச நாள் போகட்டும்….

 எல்லாம் சரியாகிவிடும்!!!!”  என்ற யுகன் பிரணாவை ஒரு தடவை கட்டியணைத்து

” பார்த்துக் கொள்……. எங்களால் உனக்கு பெரிய சிரமம்!!! சாரி மாப்பு” என்று மன்னிப்பு கேட்க

” அட என்ன மாம்ஸ் நீங்கள் ?????? நீங்கள் முதலில்  பார்த்துக் கொள்ளுங்கள் ” என்றவனின் விழிகள் தன் தமக்கையை தொட்டு மீண்டது…..

 கோபமாய் நின்றிருந்த காஞ்சனாவை “வாட் இஸ் திஸ் மை ஆங்கிரி பேர்ட் பெரியம்மா??????? பெரியப்பா கூடவே இருந்திருந்து உங்களுக்கும் இவ்வளவு கோபம் வருகிறது!!!!!  இதற்கு நாம் என்ன பண்ணலாம்???? நான் என்ன பண்ணினால் இந்த கோபம் தீரும்…. ”  ஒரு

ஓரமாய் இழுத்து சென்று சமாதானப்படுத்த முயன்ற மனைவியிடம்

” வா அம்மு போகலாம்” என்றான் யுகன் .

“என்னது??? போகலாமா ???? நான் வரவில்லை…. நீங்களும் போகக்கூடாது!!!!! வாங்க உள்ளே போகலாம்…..”

” இன்னொரு நாள் வரலாம்….. இப்போது வா நம் வீட்டிற்கு போகலாம்”

” நம் விடா????? இதுவும் நம் வீடு தான் யுகி….. எனக்கு பெரியப்பாவுடன் பேசாவிட்டால் இன்று தூக்கமே வராது….. நான் இப்போதே போய் பேசுகிறேன் ” என்று வீட்டினுள் சென்றவளை

“இந்த ஒரு தடவையாவது நான் சொல்வதை கேளு உதிதா…….. போய் வண்டியில் ஏறு !!!!!!” என்று கத்தி இருந்தான் யுகன் ….

அந்த சத்தத்தில் அங்கிருந்த அனைவருக்குமே ஒரு மாதிரி ஆகிவிட்டது…….

” நீங்கள் அம்மு!! அம்மு!! என்று கூப்பிடு எனக்கு என் பெயர் உதிதா என்பதே மறந்து போய்விட்டது யுகி” செல்லமாய்க்  குறைபடுபவள் இன்று அவன் விளித்த ‘உதிதா’வில் தன் கண்களை அகல விரித்து அதிர்ச்சியை வெளிபடுத்தி  பின் எதுவும் பேசாமல் காரின் பின் இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டாள்.

”  எங்களை மன்னித்து விடுங்கள் அத்தை….. முடிந்தால் விரைவிலேயே இவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள்!!!!!”  என்று காஞ்சனாவிடம் கூறிய யுகன்

 “டேக் கேர் மா….. உன்னை இப்படி விட்டுட்டு போவது தப்பு தான்…… ஆனால்

உதி இங்கு இருந்தாள் என்றால் மேற்கொண்டு உனக்கு ஏதாவது சிக்கல் ஏற்படுமோ என்று தான் எனக்கு பயமாக இருக்கிறது……. பிரணாவ் பார்த்துக்கொள்வான்!!!!!!” குழந்தையோடு நின்றவளிடத்தில் மொழிந்து விட்டு அவசரமாக புறப்பட்டு சென்று விட்டான் ………….

திடீரென மகனையும் மருமகளையும் கண்ட தேவகி “என்னடா?????  இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வந்துள்ளீர்கள்!!!!!!  உதிமா உன் உடம்பிற்கு நன்றாக தானே இருக்கிறது???????” மருமகளை ஆராய்ந்தவாறு  சற்றே படபடத்தார்.

” அத்தை  எனக்கு ஒன்றுமில்லை……. நீங்கள் வாங்க இப்படி!!!!!

இங்கே  உட்காருங்கள் ……

நீங்களே சொல்லுங்கள் நான் செய்தது

சரியா தவறா என்று !!!!!”

ஆரம்பத்திலிருந்து அப்பெண்ணிற்கு ஏற்பட்ட கொடுமைகளையும் இன்றைய அதிகாலை நிகழ்வையும் வீட்டில் நடந்த கலாட்டாவையும் கூறி முடித்தாள் உதிதா.

”  நீ செய்தது தப்பே இல்லை உதிமா….. ஆனால்  உன் வீட்டினருக்கு புரிய வைக்க சிறு அவகாசம் தேவைப்படும்……. உடனே ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதும் தப்புடாமா ….. கொஞ்ச நாள் போகட்டும்…..  எல்லாம் சரியாகிவிடும்” சமாதானப்படுத்தினார் மாமியார்.

” சொன்னால் கேட்டால் தானே!!!!!

 எல்லாவற்றிலும் அவசரம் ….. அப்படிப்பட்ட ஒரு அவசரம் தான் இன்றைய நிலைக்கான காரணமும் கூட!!!!!! அதையும் அவசரப்பட்டு உடனே சரி செய்ய வேண்டும் என்றால்?????? முடியுமா ??????” யுகன் முனுமுனுக்க

உதிதா  எழுந்து எதுவும் பேசாமல் மாடி ஏறினாள்.

“நில் அம்மு…. சாப்பிட்டுவிட்டு போகலாம் ” என தன்னை பின்தொடர்ந்த குரலை பொருட் படுத்தாமல் தங்கள் அறைக்குள் புகுந்து கொண்டாள் உதிதா….

” மாவு இருக்கிறதா அம்மா???? மதியமும் அவள் ஒழுங்காக சாப்பிட வில்லை…..” யுகன் சிறு வருத்தத்துடன் கூற

” அதெல்லாம் இருக்கிறது யுகா….. ஒரு ஐந்து நிமிடம் கொடு….. தோசை ஊற்றி தருகிறேன்…. எடுத்து போ ” என்றபடி அடுப்படிக்குள் நுழைந்தார் தேவகி.

அப்போது யுகனின் தந்தை கார்த்திகேயன் வரவும் அவரிடம் பிரணாவ் திருமணம் பற்றி சுருக்கமாக கூறியிருந்தான் யுகன்.

பின் அன்னை தோசை வார்த்து கொடுக்கவும் அதனை எடுத்து சென்றவனுக்கு

கட்டிலில் கண்களை திரையிட்டபடி படுத்திருந்தவளின் கண்ணீர் முத்துக்கள் அவள் பட்டு கன்னங்களில் பயணம் செய்யலாமா வேண்டாமா என்று யோசித்தபடி நிற்பது தென்பட

வேகமாக அவளருகில் சென்று அதனை துடைத்தெடுத்தான் அவள் கொடுங்கோல் ஆட்சியாளன்.

கணவனின் ஸ்பரிசத்தில் கண் விழித்தவள் அவன் கையை தட்டிவிட்டபடி அவசரமாக எழுந்து அமர்ந்தாள்.

Advertisement