Advertisement

உள்ளங்கவர்_கள்வனே(2)

கண்ணில் அன்பை சொல்வாளே…..

 யாரும் இல்லை இவள் போலே….

 துன்பம் என்னை தீண்டாமல்…..

 தாயாய் காப்பாள் மண் மேலே…..

காலர் டியூன் மெட்டுப் போட்டு பாடி முடிக்கும் தருவாயில் அத்தொடர்பை துண்டிக்காமல் ஏற்று “பிரணாவ் !!!!!!!!!” என்று உதிதா கூறிய மொழியில் அத்தனை பரிதவிப்பு அடங்கியிருந்தது…

” உதிக்கா எங்கே இருக்கிறாய் ???? வாய்ஸ் ஏன் ஒரு மாதிரி இருக்கு????” பிரணாவ் பதற எதிர்ப்பக்கம் ஒலித்த இரைச்சலில் உதிதா கூறியது எதுவும் அவனுக்கு கேட்கவில்லை.

” ஹாஸ்பிட்டலில் இருக்கிறாயா???? நான் இப்போது அங்கே வரவா???” கிட்டத்தட்ட கத்தினான் பிரணாவ் .

“இல்லைடா இங்கு வேறு பிரச்சனை……. நான் இப்போது கோல்டன் மஹாலில் இருக்கிறேன்….. அப்புறம் பேசுகிறேன்” சற்று மூச்சு வாங்க பேசிவிட்டு தொடர்பை அணைத்து விட்டிருந்தாள் உதிதா.

 உடனே ஒரு டாக்ஸியை பிடித்து அடுத்த 15 நிமிடங்களில் அந்த திருமண மண்டபத்தின் வாசலில் வந்து இறங்கினான் பிரணாவ்.

அங்கு கலாட்டா நடந்து முடிந்ததற்கு அறிகுறியாக நாற்காலிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீசப்பட்டு கிடக்க அங்கிருந்த ஜனங்கள் தங்களுக்குள் கசகசத்தபடி நின்றிருக்க மேடையின் அருகே உதிதா மற்றும் யுகன் யாருடனோ விவாதித்துக்

கொண்டிருந்தனர்.

 வண்ண வண்ண மலர்களால் கண்ணைக் கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்த மணவறையில் மணப்பெண் மட்டும் அமர்ந்திருக்க அருகில் மாப்பிள்ளையை காணவில்லை……

 இந்த பொண்ணு????!!!!!!

 மேடையில் தனித்து தலை குனிந்து  உட்கார்ந்திருந்தவள் யார் என்று  பிரணாவ் யோசிக்கையிலே ….. நியாபகம் வந்தவனாய்……

ஹான்…… இது அந்த ஸ்கூல் பொண்ணு!!!!!!

மனதிற்குள் சத்தமாய் கூறி கொண்டு

ஒருவேளை இந்த சைல்ட் மேரேஜை எதிர்த்து உதிக்காவும் யுகன் மாம்ஸும் பிரொட்டெஸ்ட் பண்றாங்களோ??????

 என்று யோசித்தபடியே அவர்கள் அருகில் விரைந்தான்.

 இதே பெண்ணை போன மாதம் தன் தமக்கை உதிதாவை பார்க்க மும்பைக்கு வந்திருந்தபோது பிரணாவ் சந்தித்திருந்தான்.

 ஆம்….. யுகனிற்கு ஏழு மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த அவசர பணி மாற்றுதலின் காரணமாக உதிதாகவும் மும்பையிலேயே தங்கி விட்டிருந்தாள்.

 மாதம் ஒருமுறை தவறாது வந்து தன் அக்கா உதிதாவை சந்தித்து விடும் பிரணாவ் போன மாதம் யுகனின் பணிச்சுமை காரணத்தால் மாமனை வீட்டில் பார்த்திருக்க முடியவில்லை.

 “மாம்ஸ் ஆபீசுக்கு போய் ஒரு ஹாய் அண்ட் ஒரு பை சொல்லிவிட்டே கிளம்புகிறேன்….  நீ இப்படி உம்முனு இருக்காதே உதிக்கா… டேக் கேர்” என்றபடி தன் தமக்கையிடம் விடை பெற்று மும்பை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றான் பிரணாவ்.

 அங்கு வெயிட்டிங் ஹாலில் ஒரு பெரிய புத்தகத்தை தன் மடியில் வைத்துக் கொண்டு நொடிக்கு ஒரு தரம் வாசலுக்குச் சென்று மீண்ட கண்களுடன் இதே பொண்ணு தான் உட்கார்ந்திருந்தாள்…..

 “கலெக்டர் சார் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருப்பதால் இங்கே வெயிட் பண்ணுங்க பிரணாவ் சார்” பியூன் வந்து  கூறிவிட்டுச் சென்றான்.

 சற்று நேரம் தன் மொபைலில் நேரத்தைப் போக்கிய பிரணாவின்  அருகில்

மறுபடியும்  பியூன் வரவும் இந்தப் பெண் வேகமாக எழுந்து எதையோ கேட்க

” இல்லம்மா மீட்டிங் முடிந்த உடனே சார் கிட்ட சொல்லி விடுகிறேன்” என்று அந்தப் பெண்ணிடம் கூறிய பியூன்

 ” காபி ஏதாவது சாப்பிடுகிறீர்களா சார்????”  என்று பிரணாவிடம் திரும்பி வினவினான் .

 ஏற்கனவே இரண்டு முறை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்திற்கு யுகனுடன் பிரணாவ்  வந்து இருந்தமையால் அங்கு பிரணாவ் சற்று பிரபலம்……. அதுமட்டுமில்லாது பியூன் தமிழ் காரனாக போய்விட நல்ல சினேகிதமாக பேசுவான் .

” நோ தேங்க்ஸ் அண்ணா……” பிரணாவ் மறுக்க ” வேறு ஏதாவது பப்ஸ் மாதிரி வாங்கி வரவா???”  என்று விடாது கேட்ட

பியூனிடம் சிரித்து ” நான் பார்த்துக்கிறேன் அண்ணா…. உங்களுக்கு வேறு வேலை இருக்கும் போய் பாருங்க ” என்று அனுப்பி வைத்தான். பின் தன்னருகில்

அலைக்கழித்த மனதை முகத்தில் வெளி காட்டியவாறு  அமர்ந்திருந்த அச் சின்ன பெண்ணிடம் பேச்சு கொடுத்தான் பிரணாவ்….

“ஹோய் ஸ்கூல் பொண்ணே!!!!!!

 என்ன படிக்கிறாய்????? டென்த்தா டுவெல்த்தா???? இது

 பிஃசிக்ஸ் புக்கா?????”   அவள் கையில் இருந்த புத்தகத்தை பார்த்தவாறு கேட்டு வைக்க

அவளோ பிரணாவை அலட்சியப்படுத்திவிட்டு மீண்டும் புத்தகத்திற்குள் மண்டையை திணித்துக்கொண்டாள்.

அப்பெண்ணின் செய்கையில் பிரணாவிற்கு கோபம் வரவில்லை…

மாறாக சிரிப்பு தான் வந்தது …

உஷார் பார்ட்டி தான் !!!! என்று  தன் மனதில் நினைத்தபடி

“தனியாக உட்கார்ந்திருக்கிறாய்!!!!  கூட யாரும் வரவில்லையா?????” என்றான் மீண்டும்.

 அவளிடமிருந்து பதில் எதுவும் வராது போகவும் அவனே தொடர்ந்தான்…

 ” ஒரு வேளை மேல் படிப்பிற்கு டொனேஷன் எதுவும் வாங்க வந்திருக்கிறாயா????” கேட்டவன் அவள் அணிந்திருக்கும் சற்றே மேல்தட்டு வகையான விலை உயர்ந்த பிராண்டட் உடையை நிமிடத்தில் கண்டு கொண்டு

” இல்லை ஏதாவது ஸ்கூல் ஃபர்ஸ்ட்… ஸ்டேட் ஃபர்ஸ்ட்… எடுத்து இருக்கிறாயா???? அதற்கு ஏதும் அவார்டு தருகிறார்களா ?????” என்றான்.

 பின் அவனே தன் மூளையை கசக்கி பிழிந்து “அவார்ட் பங்க்ஷன் என்றால் நிறைய பேர் வருவார்களே நீ மட்டும் வந்திருக்கிறாய் ????” என்றான் குழப்பத்துடன் .

“இல்லை இப்படி இருக்குமோ!!!! உன் ஸ்கூட்டி எங்காவது காணாமல் போய்விட்டதா???? கம்ப்ளைன்ட் கொடுக்க வந்திருக்கிறாயா??????? ஆனால் அதற்கு நீ போலீஸ் ஸ்டேஷன் தானே போக வேண்டும்??????” என்று நிறுத்தாத டேப் ரெக்கார்டர் ஆகிப் போனவனிடம்

திரும்பி கோபமாக அவள் பேச எத்தனிக்கையில் அங்கு யுகன் ஆயத்தமானான்.

” எக்ஸ்க்யூஸ் மி!!! ஒரு நிமிடம்”  என்று அந்த ஸ்கூல் பெண்ணிடம் அனுமதி கேட்டுக் கொண்டே பிரணாவிடம் விரைந்த  யுகன்

“சாரி பிரணாவ் கொஞ்சம் பிஸி…. உள்ளே போய் பேசலாம் வா” என்றான்.

” இட்ஸ் ஓகே மாம்ஸ் …. நான் கிளம்புகிறேன்…  உங்களை பார்த்துவிட்டு போகாவிட்டால் என் உதிக்கா மூஞ்சியை தூக்கி வைத்துக் கொள்வாள்….. நெக்ஸ்ட் மந்த் வரும்போது ஃப்ரீயாக பேசலாம்…. அண்ட் ஸ்டில் யூ ஆர் பிஸி…. கேரி ஆன் மாம்ஸ் ” மாவட்ட ஆட்சியாளனின் நிலைமையை புரிந்து வந்த வழியே திரும்பினான் பிரணாவ்.

 அந்நீண்ட ஹாலை விட்டு வெளியேறுகையில் நீல சட்டை அணிந்த  ஒருவன் வேகமாக ஓடி வந்து யுகன்

மற்றும் அந்தப் பெண்ணின் பேச்சில் கலந்து கொண்டான்.

 தூரத்தில் இருந்து பார்த்தபோது அவர்கள் பேச்சு எதுவும் சரியாக கேட்டிராத போதும் அந்தப் பொண்ணு எதையோ நிராகரித்து நோ!!! நோ!!! என்று சொல்வது மட்டும் புரிந்தது.

 அப்படி என்ன தான் பிரச்சனை ????அதுவும் இந்த ஸ்கூல் பெண்ணிற்கு????

 ஒரு மனம் கேள்வி கேட்க

மறுமனம் என்ன பிரச்சினையாக இருந்தால் உனக்கு என்ன????

 ராணி ரங்கம்மா!!!! சின்ன பிள்ளையாக இருக்கிறாளே பேச்சு கொடுக்கலாம் என்று பார்த்தால் ரொம்ப தான் பிகு பண்ணுகிறாள்!!!!!!

 அவளுக்கு எதிராக போர்க்கொடி தூக்க அதோடு அவளை முற்றிலும் மறந்து  தன்

வேலையை கவனிக்க சென்று விட்டான் பிரணாவ். 

இப்போது இப்படி மணவறையில் அவள் தனியாக அமர்ந்திருக்கும் கோலம் மனதை வருத்த “என்ன ஆச்சு மாம்ஸ்??? என்ன பிரச்சனை????” என்று பிரணாவ் யுகனிடம் கேட்டபோது யுகனிற்கு ஒரு வீடியோ கால் வந்தது.

” இவனை தானே கலெக்டர் சார் தேடிக் கொண்டு இருக்கிறாய் ….. வா வந்து அள்ளிட்டு போ!!!!!! ” எதிர்முனையில் பேசியவன் கொடூரமாய் சிரிக்க

கீழே அடிபட்டு விழுந்து கிடந்தவன் அன்று கலெக்டர் ஆபீஸில் தான்  விடைபெறும் சமயத்தில் உள்ளே வந்து பேசிய நீல சட்டைக்காரன் என்பதை பிரணாவ் கண்டுகொண்டான்.

    “டேய் நீ மட்டும் இப்போது என் கையில்

கிடைத்தால் அவ்வளவு தான்……” முகத்தில் கொலைவெறி தாண்டவம் ஆட கூறிய யுகனிடம்

” மண்டபத்திற்கு வெளியில் தான்டா நிற்கிறேன்….. என் ப்ராப்பர்ட்டியை என்னிடம் அனுப்பி வைத்துவிட்டு என் கையில் இருப்பவனை தூக்கிட்டு போய்விடு …. உனக்கு வேற எந்த ஆப்ஷனும் கிடையாது….. இன்னும் பத்து நிமிடத்தில் எனக்கு சேர வேண்டியதை நீயே வெளியில் அனுப்பி வைக்க வில்லை என்றால் உங்கள் மண்டபத்திற்கு வெளியே காவல் நிற்கும்  ஏசிபியே (அசிஸ்டன்ட் கமிஷனர்) இந்த பொறுக்கி மண்டையை பிளந்து உன் கையில் ஒப்படைப்பான்….  செய்து காட்டவா??? அதையும் பார்க்க ஆசைப்பட்டால் காத்திரு  ”  என்றபடி தொடர்பைத் துண்டித்தான்.

 அடுத்து என்ன செய்வது???? என்பதை

நிதானமாக யோசிக்கலாம் ….

ஆனால் மேடையில் அமர்ந்து இருப்பவளுக்கு இப்போது என்ன பதில் சொல்வது?????? என்று யுகன் ஒருவித கையாலாகாத தனத்துடன் பார்க்கும்போது

நான் கேட்டேனா?????

 இந்த கல்யாணம் எல்லாம் சரி வராது என்று எத்தனை தடவை சொன்னேன்!!!!!!

 நிம்மதியாக சாகவும் விடாமல் ……

 உருப்படியாக வாழவும் வழி வகுக்காமல்…….

 என்னை இந்த இக்கட்டில் நிற்க வைத்து விட்டீர்களே கலெக்டர் சார்!!!!!!!

 தன் இருவிழிப் பார்வையிலே அத்தனை கேள்வி கணைகளையும் வீசியவளிடம் சமாதானம் மொழிகள் இன்றி தடுமாறி நின்றான் யுகன்.

 கணவனின் இந்த இக்கட்டான  நிலையை பொறுக்கமாட்டாத உதிதா எதிர்பாராதவிதமாக தன் தம்பி பிரணாவை அங்கு காணவும்

” பிரணாவ் …..  போய் அந்த பொண்ணு கழுத்தில் தாலி கட்டு!!!!!”  என்றாள் அழுத்தமாக…..

ஆனால் நிலைமையின் தீவிரத்தை உணராத பிரணாவ் ” என்ன உதிக்கா காமெடி பண்றியா??????”  விளையாட்டுத் தனமாகவே கேட்க

தனயனின்  கரத்தை பற்றி அவசரமாக மேடைக்கு அழைத்து சென்றாள் உதிதா .

அவள் பின்னோடு சென்ற யுகன் ”  என் சுயநலத்திற்காக என்ன காரியம்

பண்ணுகிறாய்?????   நீ செய்யும் செயல்  உனக்கு புரிகிறதா இல்லையா????? 

 அவனை விடு அம்மு !!!!!!

 எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டிப்பாக இருக்கும்…… பார்த்துக்கலாம்” பிரணாவின் மற்றொரு கையை பிடித்து இழுக்க

தன் தமக்கையின் அழுத்த பிடியை உணர்ந்திருந்த பிரணாவால் அவ்விடத்தை விட்டு ஒரு அடி கூட நகர முடியவில்லை ….

” பிரணாவ் நீ வா!!!!!”  என்று யுகன் கூறியும் நகராது நின்ற பிரணாவிடம் பேசுவதை விட்டுவிட்டு

“அவசரத்தில் எடுக்கும் எந்த முடிவும் சரியாக வராது….. புரிந்துகொள் அம்மு” மனைவியிடம் தன்மையாகவே எடுத்துரைத்தான்.

” அன்று என் பெரியப்பா அவசரமாக எடுத்த முடிவினால் தான் இன்று நான் உங்களோடு ரொம்ப சந்தோஷமாக  இருக்கிறேன் ….. எது எப்படி என்றாலும் இன்றைய திருமணம் நடந்தே ஆக வேண்டும்!!!!!  அந்த அயோக்கியனை எதிர்த்து வேறு யாரும் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள்…… அதனால்…..”

” அதனால்….  பிரணாவிற்கு பிடிக்காத இந்த பந்தத்தில் அவனை கட்டாயப்படுத்தி ஆக வேண்டுமா???????”

 உதிதா ஊமையாகி போய்விட … இவளிடம் பேசுவது இனி வீண் என்றுணர்ந்த யுகன் பிரணாவின் புறம் திரும்பி

” நீ ஃபர்ஸ்ட் கிளம்பு பிரணாவ்….. எதுவானாலும்  அப்புறம் பேசிக் கொள்ளலாம்” என்றான்.

பிரணாவ்  உதிதாவின் முகம் பார்க்க அங்கு உணர்ச்சி புதைக்கப்பட்டிருந்த போதும் அதில் பொதிந்து கிடந்த செய்தியை அறிந்து கொண்டதால் யுகனின் கையை தன் கரத்திலிருந்து எடுத்துவிட்டு தன் தமக்கையை முறைத்தபடி மணமேடையை நோக்கி சென்றான்.

” பிரணாவ் நில்லு…..” யுகன் மனம் கேட்காமல் கத்த

“யுகி ப்ளீஸ்!!!” கணவனை கட்டுப்படுத்தும் மந்திர வார்த்தைகளை உபயோகப்படுத்தி இருந்தாள் உதிதா .

 தன் அருகில் வந்து அமர்ந்தவனை ஏறெடுத்தும் பாராமல் மௌன மொழி பேசி உர்ரென்று உட்கார்ந்திருந்தவளின் கழுத்தில் தாலி கட்டப் போகும் முன்

” என்னை மன்னித்து விடு விது !!!!!!!!”

தான் நேசித்தவளிடம் மனமார யாசிப்பு ஒன்றை  வேண்ட

” நாழியாரது சீக்கிரம்!!!!!!” ஐயர் அவசரப் படுத்தியதால் அதிவிரைவுடன் மூன்று முடிச்சுகளை போட்ட பிரணாவ்  அங்கு யார் முகத்திலும் விழிக்க பிடிக்காமல் குனிந்தபடி அமர்ந்துகொண்டான்.

 சில சம்பிரதாயத்திற்கு பின் “அம்மா அப்பா காலில் விழுந்து நமஸ்காரம் செய்யுங்கோ!!!” என்று ஐயர் கூற

 மணப்பெண் சற்றும் யோசிக்காமல் யுகன் தம்பதியினரின் காலில் விழப் போக பிரணாவ் யுகன் பக்கமாய் நகர்ந்து அவன் காலில் விழப் போனான் .

ஆனால் யுகன் அச்செய்கையை தடுத்து பிரணாவை தன்னோடு கட்டிக்கொண்டு “நல்லா இருக்கணும் பிரணாவ்…… நீங்க

ரெண்டு பேரும் ஒரு சந்தோஷமான வாழ்க்கையை வாழணும்!!!!” என்று வாழ்த்தினான்.

” உங்க பொண்டாட்டி ஏற்படுத்திக் கொடுத்த வாழ்க்கை இது !!!!! கண்டிப்பாக நாங்க நல்லா தான் இருப்போம் மாம்ஸ்” சிரிக்க முயன்று இறுகி போய் நின்றவனை ஒருவித இயலாமையுடன் நோக்கினாள் உதிதா.

 “இவள் என்னுடைய உதிக்கா மாம்ஸ்…… எனக்கு தான் முதலில் அக்காவானாள்… அதன்பிறகு தான் உங்களுக்கு பொண்டாட்டி!!!!  என்னிடம் பேசும்போது தயவுசெய்து அவளை ‘என் பொண்டாட்டி’ என்று கூறாது ‘உன் உதிக்கா’ என்றே குறிப்பிட்டு பேசுங்கள்” என்று மல்லுக்கு நிற்பவன் இன்று தன்னை வேற்றுமையோடு பிரித்து உறவாட

அதை காண சகிக்காது நின்றவளை

கவனமாக  பார்த்து விடாமல் தவிர்த்தான் தனயன் .

“பகுத் பகுத் தன்யவாத் சார்!!!! ஹம் சிந்தகி பார் ஆப்கா எஹ்சானந் ரக்கேங்ஹே”

(“ரொம்ப தேங்க்ஸ் சார்!!!! என் உயிர் உள்ளவரை உங்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் ” )

யுகனிடம்  இரு கை கூப்பி மணப்பெண் ஹிந்தியில் தன் நன்றியை செலுத்த

அதை பார்த்த பிரணாவின் இரு விழிகளும் வெளியே தெறித்து விழாமலிருந்ததே அதிசயம்தான்!!!

 “இனி அவரை அண்ணானு கூப்பிடு புரியுதா???????”  மணப்பெண்ணிற்கு உறவுமுறையை விளக்கிக் கொண்டிருந்த உதிதாவை மனதிற்குள்ளே முறைத்து

திட்டி தீர்த்தான் பிரணாவ்.

கிராதகி!!!!!!

 நீ ஹிந்தி பாட்டுக்கு நடனம் ஆடினால் அதை கூட நான் பார்க்க மாட்டேனேடி ஒடிதா!!!!

  அப்படிப்பட்ட எனக்கு இப்படி ஒரு பொண்ணை தேடி கட்டி வைத்திருக்கிறாய்!!!!!!

அப்போது …..

தம்பி ஷாக்கை குறைப்பா!!!!! என்பது போல் கூட்டத்தில் ஒரு கைக் குழந்தை வீறிட்டு கத்த

“ஹஜ்ஜ்ஜ்ஜ்ஜு!!!!! சோட்டு ரோன மத்….. ஆஜா இதர்…. மா கா பஸ்…… “

(“ஹஜ்ஜ்ஜ்ஜ்ஜு!!!! அழுகாதீங்க சோட்டு….. அம்மா இங்க தான்டா இருக்கேன்!!!! அம்மா கிட்ட வாங்க……” )

என்றபடி கைநீட்டி அக்குழந்தையை வாங்கிக் கொண்டாள் பிரணாவின்  மனைவி.

 தன்னருகில் நிற்பவள் கதைக்கும் தாய் மொழி புரியாத போதும் அவளது தாய்மை மொழி புரிந்து விட உச்சகட்ட அதிர்ச்சியின் விளிம்பில் மூச்சுவிட மறந்து நின்றான் பிரணாவ்…..

Advertisement