Advertisement

” அது நான் கேட்ட வேண்டிய கேள்வி மாம்ஸ்… நீங்க இங்கே என்ன பண்ணுகிறீர்கள்????”

” எல்லாம் கரெக்டா தானே அம்மு பண்ணினேன்????” கண்களை அகல

விரித்து நின்றவளிடத்தில் சில்மிஷமாக கேட்ட யுகன்

” ஆமாம் என் படத்திற்கு நீ மட்டும் தான் ஆடியன்ஸா??? இல்லை வேறு யாராவது இருக்கிறார்களா????” யாரும் இருக்க மாட்டார்கள் எனும் தைரியத்தில் யுகன் யதார்த்தமாக வினவ

” யசோம்மா இங்கே தான் மாம்ஸ் இருந்தது…. நீங்க அடித்த கிஸ்ஸில் எங்கோ எஸ்கேப் ஆகிவிட்டது !!!” என்று பிரணாவ் கூறியதில் தன் கையிலிருந்த போனை நழுவவிட்டு கேட்ச் பிடித்திருந்தான் யுகன்….

” ஏன் மாப்பு இப்படி என் மானத்தை வாங்குகிறாய் ????” என்று யுகன் தன் தலையில் அடித்து கொள்ள

” கூல் மாம்ஸ் ….. கவலைப்படாதீர்கள்!!! யாரும் யார் அடித்ததையும் பார்க்கவில்லை…. உங்க பாசமலர் நீங்க என்ட்ரி கொடுக்கவுமே என் கண்களை

பொத்தி விட்டாள் ” என்றவன்

 பஜாரி தன் கண்களை மூடிய நிமிடத்தில்  அவள் இதழ்களை இவன் மூடியிருந்ததை மறைத்திருந்தான்….

இப்போது நடப்பில், பிரணாவ் கையிலிருந்த சோட்டு இறங்கி இனியாளிடம் சென்று ” எனக்கு மச்சான் பிறந்துவிட்டான் பப்பு ” என்று கூற

” மாமு எனக்கு தான் அவன் முதலில் தம்பி …. அப்புறம் தான் உனக்கு மச்சான் ” சண்டைக்கோழியாய் திருப்ப அக்காட்சியை கண்டவர்களது இதழ்கள் தானாக மலர்ந்து…..

“இனியாளை பார்ப்பது அப்படியே பிரணாவை பார்ப்பது சமம்….”

கதிரேசன் காஞ்சனாவிடம் கூறியது பிரணாவிற்கும் கேட்க

நானும் தான் உதிக்கா மாதிரி ஒரு

பாப்பாவை கேட்கிறேன் … தருகிறாளா பார்??? என்றபடி தன்னருகில் வந்தவளை முறைத்தான் பிரணாவ்….

” இப்போது அடுத்து என்ன பிரணாவ் அத்தான்???” இளைய மகனோடு நின்றவளை

” நெக்ஸ்ட் அட்டெம்ப்ட்டிற்கு எப்போது அனுமதிப்பாய்டி பஜாரி????” என்றான் பிரணாவ்…. துருவன் பிறந்ததிலிருந்து ஓராயிரம் முறையாவது கேட்டிருப்பவன்!!!

” ஒரு பேபி போதும் என்று சொன்னவனை காணவில்லை ….

முடிந்தால் அவனை உனக்குள்ளே தேடி கண்டுபிடித்து கொண்டு வா பிரணாவ்அத்தான்… அட்டெம்ப்ட் பற்றி யோசிப்போம்!!!” உதடு சுளித்தவளை அது மருத்துவமனையாக மட்டும் இல்லாது போயிருந்தால் கண்டிப்பாக வேறு விதமாக தான் பைசல் செய்திருப்பான்…

அப்போதும் கட்டுபடுத்தமுடியாது உயர்ந்த பிரணாவின் கரம் அவள் போன் அடிக்கும் சத்தத்தில் தன்னிலை உணர்ந்து இறங்கியது…

” சொல்லு கல்யாணப் பொண்ணே….” மைத்ரேயி உற்சாகத்துடன் பேசவும் யார் அழைத்திருப்பார்கள் என்றும் அடுத்து என்ன பேச போகிறார்கள் என்றும் கணித்திருந்தான் பிரணாவ்…

” ஆமாம்….. குட்டி பையன் பிறந்திருக்கிறார்!!!!”

………..

” அட நாங்க இல்லாமலா??? கண்டிப்பாக வருவோம்!!!!! நீ போய் நித்திஷிற்கு பிடித்த அந்த புளூ கலர் லெஹங்காவை போட்டு ரெடி ஆகு….

இன்னும் அரைமணி நேரத்தில் மண்டபத்தில் இருப்பேன் “

வாக்குறுதி அளித்தவள்

” போகலாம் பிரணாவ்அத்தான்….

பசங்களை போய் ரெடி ஆக்க வேண்டும்!!

மிட்டுவிற்கு தேவையானதை எடுத்து கொள்ள வேண்டும்…

பப்புமாவை கூட்டி போகிறேன் என்று யுகி அண்ணனிடம் சொல்லி விட்டேன் ….

கிளம்பலாம் !!!”

என்று முன்னே நடந்தவளை கண்டுகொள்ளாமல் அங்கு ஒரு சேரில் போய் அமர்ந்தவனை வித்தியாசமாக பார்த்தவள்

” என்ன ஆச்சு பிரணாவ் அத்தான் ?????” குழப்பமாகவே கேட்டாள் அவன் பஜாரி…

பின்னே இந்த திருமணம் கைகூடியதற்கு முழு காரணமும் இவள் தானே….

அன்று மருத்துவமனையில் ” ஏன் அவர்கள் அழுது கொண்டே போகிறார்கள்??????” நித்திஷ் இருந்த நிலைமையிலும் விதுல்யாவிற்காக கேட்டது மைத்ரேயியின் மனம் குறிப்பெடுத்து கொண்டது ….

அதன்பின்னும் நித்திஷின் அப்பா மருத்துவமனையில் இருந்த வரையில் அடுத்த கட்டிடத்திற்கு சென்று  விதுல்யாவை நித்திஷ் சற்று தொலைவில் இருந்து பார்ப்பதையும் கண்டிருக்கிறாள்..

அப்படி ஒருநாள் ” விதுவை உங்களுக்கு பிடித்திருக்கிறதா சார் ????” தனக்கு பின்னால் கேட்ட குரலில் திடுக்கிட்டு நித்திஷ்  திரும்ப

அங்கு மைத்ரேயியை பார்த்து

” என்னை பற்றி தெரிந்தும், நான் இப்படி செய்வது உங்களுக்கு தப்பாக தான் இருக்கும் …. பட் சரியாக சொல்ல தெரியவில்லை!? அவர்கள் அன்று அழுது கொண்டே சென்றது மனதில் பதிந்து விட்டது….

 ஜஸ்ட் அவர்கள் நார்மலாக இருக்கிறார்களா என்று பார்த்து போக தான்!!! இப்படி தப்பென்று தெரிந்தும் இங்கு என்னை மீறி இங்கு வந்து

நிற்கிறேன் ” கூறி முடிக்க

” எனக்கு புரியவில்லை …. என்ன உங்களை பற்றி தெரிந்தும்??????” என்றிருந்தாள் பிரணாவின் பஜாரி,

கணவன் அவளுக்கு நித்திஷ் பற்றியும் அவன் தன் உதிக்காவை பற்றி காதலித்ததையும் சொல்லாது இருந்ததால்!!!!

பிரணாவ் வேண்டுமென்றே அவளுக்கு தெரியவே கூடாது என்று மறைக்கவில்லை…. ஆனால் கைகூடாத காதலை சொல்ல போய் தேவையில்லாத மனசங்கடத்திற்கு யாரும் ஆளாகி கூடாதே என்று தான் எதை பற்றியும் வாய் திறந்திருக்கவில்லை…

” ஓ!!! பிரணாவ் சொல்லவில்லையா???? “

என்ற நித்திஷ்

” நான் எப்போதுமே எல்லோருக்குமே வேண்டாதவன் என்பதை மறந்து போனேன்!!!” விரக்தியான சிரிப்பை

உதிர்த்து சொல்லிவிட்டான்….

” உதியை காதலித்தேன்!!!

என் மனதில் வேறு ஒருத்திக்கு இடம் இல்லை என்று தான் நினைத்திருந்தேன் …. விதுவை பார்க்கும் முன்பு வரை ….

எனக்கு தெரியும் இதுவும் நடக்க சாத்தியமில்லை என்று !!!

அதற்கு நான் தகுதியானவனும் இல்லை……

தப்பாக நினைத்து கொள்ளாதீர்கள் டாக்டர்…. யாரிடமாவது சொல்ல வேண்டும் போல இருந்தது” என்று திரும்பி சென்றவனை

” சாரி நித்திஷ் சார் .. எனக்கு தெரியாது… ஆனால் கண்டிப்பாக எனக்காக ஒரு ஹெல்ப் பண்ணியே ஆக வேண்டும் ” என்றாள் மைத்ரேயி இம்முறை சற்றே உரிமையாக….

” விதுவை மறந்து விட வேண்டுமா???” மனதில் தோன்றிய வலியை மறைக்க

ஏற்கனவே பயின்றவன் எளிதாக கேட்டுவிட

” விதுவை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்” அவள் கூறிய பதிலில் அதிர்ச்சிக்குள்ளானான்….

” என்ன??? என்ன சொன்னாய்?? சாரி சொன்னீர்கள்?????”

” உங்களுக்கு இளையவள் தானே … வா போ என்றே கூப்பிடுங்கள் சார்!! ” என்றவள்

” ஆனால் நான் கூற போவதையும் கேட்டுவிட்டு கல்யாணம் வேண்டாம் என்று மறுத்தீர்கள் எனில் நான் உங்களை வா போ என்று கூப்பிட்டு விடுவேன்……

ஏனெனில் இதில் விதுவின் மீது எந்த தவறும் இல்லை ….

எல்லாவற்றிற்கும் காரணம் நான் தான்!!” என்று பிரணாவ் விதுவின் காதலை பற்றி கூறலானாள் மைத்ரேயி….

” டேய் நித்திஷ் உன் ஐ.பி.எஸ்.. மரியாதையை காப்பாற்றி கொண்டாய்டா ” என்று மறைமுகமாக தன் சம்மதத்தை தெரிவிக்க

” அந்த பயம் நித்திஷ் சார்!!!” என்று சிரித்தவள் விடாது கருப்பு !!! ரீதியில் விது மனதை மாற்றியும் இருந்தாள்…..

அப்படி சிரமபட்டு ஒன்று சேர்த்த நண்பர்களின் கல்யாணத்திற்கு போவதற்கு பரபரத்தால் இவன் என்ன எனக்கென்ன என்று போய் உட்கார்ந்திருக்கிறான்????

” லேட் ஆகிவிடும் பிரணாவ்அத்தான்… எழுந்திரு!!!” மனைவியின் தவிப்பிற்கு விலை பேச ஆரம்பித்தான் அவள் கள்வன்….

” ரொம்ப லேட் ஆகிவிடும் அல்லவாடி பஜாரி????????

சரி சீக்கிரம் ‘சரி!!!!’ என்று மட்டும் சொல்லு இப்போதே போய்விடலாம் “

என்ன சரி ??? என்று யோசிக்க தேவையேயின்றி அவன் கண்கள் சிரிப்பதை கண்டு கொண்டவள்

” சோட்டு உன் அப்பாவிற்கு பை சொல்லு….

 பப்புமா உன் மாமா-மாவிற்கு பை சொல்லு ….

டேய் மிட்டு நீயும் கை ஆட்டுடா ” சின்னவனையும் பை சொல்ல வைத்துவிட்டு

” நீ இங்கே இருந்து உதிஅண்ணிக்கு தேவையானதை பார்த்து கொள் பிரணாவ்அத்தான்… நானே பகானியை டிரைவ் பண்ணி கொள்கிறேன் …. பை ” என்று கிளம்ப

அவளது மூத்த மகன் ” நானும் அப்பா கூட இருக்கிறேன் பஜ்ஜிமா… நீ கிளம்பு ” என்றிருந்தான் ….

கூடவே பப்புமாவும் ” நானும் மாமு கூட இருக்கிறேன் அத்தை ” என்று பின்வாங்க

” உன் கையில் படுத்திருப்பவனுக்கு இன்னும் பேச தெரியவில்லைடி பஜாரி!!!

இல்லாவிட்டால் அவன் தான் எங்கள் கட்சிக்கு தலைமையே தாங்கியிருப்பான்” என்றபடி பிரணாவ் கைநீட்ட

துருவனோ அவன் தந்தையிடம் தாவியிருந்தான்….

இப்போது தனி காட்டு ராணியாக இருப்பது புரிந்தும் விட்டு கொடுக்க மனமில்லாமல் திரும்பி செல்ல முயன்றும் முடியாமலும் தவித்து நின்றவளிடம்

” நீ சரி கூட சொல்ல வேண்டாம்!!!

தலையை மட்டுமாவது ஆட்டுடி பஜாரி !!!

அடுத்த மூன்றே வருடத்தில்  ஜாக்பாட்  அடித்து கொள்கிறேன்” யாசித்தான்….

” அப்போதும் பையன் பிறந்தால் உன்னால் தாங்கி கொள்ள முடியாதோ என்று தான் பிரணாவ்அத்தான் நான் யோசிப்பதே”  அவள் மனதை படித்தவன்

” இந்த டைம் மிஸ்ஸே ஆகாது… ஒரே ஒரு சான்ஸ் கொடுடி பஜாரி !!!” என்று அவள் கரம் பிடிக்க

” பழனியாண்டவா எனக்கு ஒரு பாப்பாவை, அதுவும் உதிஅண்ணி மாதிரியே ஒரு பாப்பாவை கொடுத்துவிடு…

என் பிரணாவ்அத்தானிற்கு மொட்டை போடுகிறேன்” என்ற வேண்டுதலை மேற்கொண்டவள்

” சரி லாஸ்ட் அண்ட் ஃபைனல் சான்ஸ்…

நீ பாப்பா பெற்றாலும் பெறாவிட்டாலும் இது தான் கடைசி ” கண்டிப்போடு கூறினாலும் ஒரு வெட்கம் அவள் முகத்தில் ஒட்டி கொள்ளவும்

அதை ரசித்து ” வாங்கடா பசங்களா…. நம்ம கல்யாணத்திற்கு போகலாம் ” என்றபடி எழுந்தான் பிரணாவ் ……

Advertisement