Advertisement

#epilogue

ஆப்பரேஷன் தியேட்டரின் முன் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்று கொண்டிருந்தான் பிரணாவ்….

அந்த வேகத்திற்கு ஈடுகொடுத்து தந்தையை பின்பற்றியவனாக, அவரது எதிர்பார்ப்பினைவிட சற்றே கூடுதலான ஆசையை, மனம் முழுவதிலும்  சுமந்து, ஐந்து வயது இமயனும்  உற்சாகமாக தனது ஜாகிங்கை மேற்கொண்டான்….

அவர்களை தனது காஞ்சனா பாட்டியின் அருகில் இருந்து பார்த்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்தாள் இனியாள்…..

இப்போது நாமும் சென்று மாமா-மா (பிரணாவை அவள் அப்படி தான் அழைப்பாள்….. பப்பு-மா என்று அவன்

கூப்பிடுவதற்கு முன்பே மாமா-மா என்று அவனிடம் தாவி விடுவாள்) வுடனும்

மாமு (சோட்டுவை அவள் அழைக்கும் முறை) வுடனும்

சென்று நடப்பதா? வேண்டாமா? என்று தீவிரமாக யோசித்து கொண்டிருக்கும் போதே

ஆப்பரேஷன் தியேட்டர் கதவு திறக்கப்படவும் அனைவரது கவனமும் திரும்பியதை போல் இனியாளும்

” என்ன பேபி????”

என்று பார்த்திருந்தாள்…..

ஒரு நர்ஸ் முதலில் வெளியே வருவதை கண்ட பிரணாவ் தன் மருமகள் கண்களில் தேக்கி வைத்திருந்த கேள்வியை கேட்கலானான்….

” என்ன பேபி????”

” பையன் பிறந்திருக்கிறான்!!!!” நர்ஸ் கூற கேட்டு அனைவரது முகத்திலும் பளிச் புன்னகை  …..

ஆனால் பிரணாவோ தன் சந்தோஷத்தை வெளிகாட்டாது அடுத்த கேள்வியை வீசினான்…

” உங்க டாக்டரம்மா எங்கே????”

” இதோ வருகிறார்கள்!!!! ” என்று தனக்கு பின்னால் வந்தவளை கைகாட்டிவிட்டு நர்ஸ் முன்னே செல்ல

தன்னிடம் இதழ்பிரியா சிரிப்பினை சிந்தி தன்னை கடந்து செல்ல முற்பட்டவளை

” நில்லுடி பஜாரி!!!” தடை செய்து நிறுத்தி வைத்தான் பிரணாவ்….

” என்னை விடு பிரணாவ் அத்தான்!!!!” கண்களால் செய்தி உரைத்து கிளம்ப எத்தனித்தவளிடம்

” என்ன பேபி ????”  என்றான் மீண்டும்….

” அதுதான் நர்ஸ் சொன்னார்களே!!!

உன் காதில் விழவில்லையா???”

வெடுக்கென்று மனைவி சொன்ன விதத்தில் கோபமானவன்

” விழுந்தது விழுந்தது ….

இங்கு எல்லோருக்கும் எல்லார் சொல்வதும் காதில் விழுகிறது  …..

மாம்ஸ் ஆசையாக பையன் வேண்டும் என்று  கேட்டது உதிக்கா காதில் விழுந்ததும் பெற்று கொடுத்து விட்டாள்!!!

நானும் ஒரு ஐந்து வருடமாக உன்னிடம் ஒன்று கேட்டு உன் பின்னாடியே திரிகிறேன்….

ஆனால் அது மட்டும் எப்படிடி பஜாரி உன் காதில் விழ மாட்டேன்கிறது??????”

கணவன் நொந்து கொள்ளவும் “

யசோத்தை!!!!!!” என்று கத்தியிருந்தாள் மைத்ரேயி….

” ஏய் எதற்காகடி பஜாரி ரெஃப்ரிமாவை கூப்பிடுகிறாய்?????”

ஆம் பிரணாவின் யசோம்மா இப்போது ரெஃப்ரிமா ஆகிவிட்டார்….. பிரணாவ் தம்பதியினரின் சண்டையை ஓய்ப்பதிலேயே யசோதாவிற்கு ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரமும் பறந்து விடுகிறது….

மருமகளின் குரல் கேட்டு ஓடி வந்தவர்

” என்ன பிரணாவ் பண்ணினாய்????? ” கேட்கவும்

” ஆமாம்……..எது என்றாலும் என்னையே முதலில் கேளு !!!!

உன் பையன் கேட்பதை ஒருத்தி மதிக்க கூட மாட்டேன்கிறாள்….. அவளை எதுவும் கேட்காதே யசோம்மா ” என்று திருப்பி கொண்டு நின்றான் பிரணாவ்….

” நீ எதையாவது ஏடாகூடமாக கேட்டிருப்பாய்…. அதுதான் அவள் மாட்டேன் என்றிருப்பாள்!!!” அப்போதும்  மருமகளின் பக்கம் யசோதா நிற்க

” இதென்ன யசோம்மா வம்பா போச்சு !!!!

எந்த ஒரு புருஷனும் கேட்க கூடிய ஒன்றை தான் இவளிடம் கேட்டேன் ….

மாம்ஸ் உதிக்காவிடம் கேட்டது போல்!!

ஏன் சித்தப்பா உன்னிடம் கேட்டது போல்!!

என் அப்பா என் அம்மாவிடம் கேட்டது போல்!!

பிரணிக்கா கூட கவின் மாமா கேட்டதை போன வருடம் நிறைவேற்றிவிட்டாள்!!!”

என்று புலம்ப ஆரம்பிக்கவுமே யசோதாவிற்கு மகன் என்ன சொல்ல போகிறான் என்று புரிந்து விட்டது…..

அப்படி பிரணாவ் கூறியது யசோதாவிற்கு

மட்டும் புரியாமல் அவர் கையில் படுத்திருந்த மிட்டுவிற்கும் சேர்த்து புரிந்து போக

” உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா அப்பா !!!!” என்பது போல் கத்த ஆரம்பித்திருந்தான், பிறந்து ஆறு மாதங்களான மைத்ரேயியின் இரண்டாவது புத்திரன்…..

துருவன்!!!!

என்று கதிரேசன் பெயர் சூட்டியிருந்த போதும் இமயன் எப்படி சோட்டு ஆகி போனானோ அப்படி இவன் ‘மிட்டு’வாகியிருந்தான்……

” அழுகாதீங்க மிட்டு பையா…. அம்மா கை கழுவிவிட்டு வந்து தூக்கி வைத்து கொள்கிறேன் !!! ” என்று கூறியபடி மைத்ரேயி நகர

சோட்டு அங்கு வந்து ” ஏன் யசோபாட்டி மிட்டு அழுகிறான்???? ” என்றிருந்தான்….

” வாடா என் பெரிய மவனே!!!” என்று இமயனை தூக்கிய பிரணாவ்

” நான் ஒன்னே ஒன்னு தான்டா கேட்டேன்… அதற்குதான் உன் ஆத்தாகாரியும் இந்த சின்ன மவனும் இப்படி அழுகிறார்கள்…

நீ சொல்லுடா சோட்டு பையா அப்பா கேட்டது உனக்கு ஓ.கே தானே ?????” என்று சீரியஸாக வினவ

அவன் கன்னத்தில் ஹவ்வா பதித்திருந்த சோட்டுவோ விசயமே புரியாமல் பெரிய மனிதனாக

” எனக்கு எப்பவும் ஓ.கே அப்பா… பஜ்ஜிமா விடம் நான் பேசுகிறேன்….” என்றான்….

இமயனின் சொற்களில் வீற்றிருந்த பாசமும் தந்தையை விட்டுகொடுக்காத தன்மையும் யசோதாவை நெகிழ செய்த போதும்

” நீ கொடுக்கிற செல்லத்தில் தான் சோட்டு

உன் அப்பா இந்த ஆட்டம் ஆடுகிறான் ” என்று போலியாக மிரட்டினார்….

அப்போது ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்த யுகனை காணவும் எதுவும் பேச முடியாதவராக ” மாப்பிள்ளை வருகிறார் பிரணாவ்” கூச்சத்தோடு சொல்லிவிட்டு நகர

” நீ எதற்காக யசோம்மா அநியாயத்திற்கு வெட்க படுகிறாய்???? மாம்ஸ் பண்ணுன கிஸ்ஸில் மெஸ்மெரைஸ் ஆகிவிட்டாயா????” என்று யுகனை பார்த்து கண்ணடித்தவாறு பிரணாவ் கேட்டு வைக்கவும்

” மானத்தை வாங்காதே மாப்பு ” என்று தன் தலையில் அடித்திருந்தான் யுகன்….

” நான் என்ன மாம்ஸ் செய்தேன்????? முத்தம் கொடுத்தது….. ” அதற்கு மேல் பிரணாவை பேச விடாது அவன் வாயை

பொத்தியிருந்த யுகனிற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு நடந்த நிகழ்வு மனதுள் விரிந்தது…

லேசாக பசியெடுத்ததும் அவளது அத்தையை கண்கள் தேட,

தேவகி இனியாளுக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருப்பது தெரிந்ததும், தனது ஒன்பது மாத வயிற்றை சுமந்து கொண்டு அடுப்படிக்குள் நுழைய எத்தனித்தாள் உதிதா….

அச்சமயம் அவளது போன் அடிக்கவும் அதில் தெரிந்த பெயரை பார்க்கவும் சிறு கோபம் துளிர் விட அதை மறையாது

” என்ன அம்மா எதற்காக இப்போது திரும்ப கூப்பிடுகிறாய்????” என்றாள் சுள்ளென்று….

” ஏன்டி இப்படி பேசுகிறாய்???? காலையில் நன்றாகதானே பேசினாய்??? என்ன ஆச்சு உதிமா ??? வலி ஆரம்பித்து விட்டதா???” என்று யசோதா பதற

” அவ்வளவு அக்கறை இருந்தா வந்து என்னை கவனித்து கொள்ளலாம் அல்லவா????

உனக்கு அந்த டாங்கி தானே எப்பவும் முக்கியமாக போய்விட்டான்!!!” இந்த மாதிரி சமயத்தில் அன்னை கூட இல்லையே என்ற ஏக்கத்தில் கொட்டி தீர்த்தாள் உதிதா…

உடனே தன் சிற்றன்னையிடமிருந்து போனை பறித்த பிரணாவ்

 “அந்த மங்கிக்கு அது புருஷன் முக்கியம் என்றுதானே இங்கு வராமல் இருக்கிறாள்!!!

அதே போல் உனக்கும் உன் பையன் தான் முக்கியம் என்று தைரியமாக சொல்லு யசோம்மா”  என்றிருந்தான் ….

மிட்டுவை பிரிந்து இருக்கமுடியாமல் யசோதா மகளிடம் செல்லாததால் வந்த குழப்பமே இது !!!

அப்போதும்

” நீ சும்மா இருடா பிரணாவ் …. வாயும் வயிறுமா இருக்கிறாள்!!!” மகனை அதட்டிய  யசோதா

” அப்படி இல்லை உதிமா  …. குழந்தை பிறந்ததும் அங்கு வந்துவிடுவேன் தானே….

அதுவரை பேரன்களிடம் இருந்துவிட்டு வருகிறேனே!!!” தன்மையாகவே எடுத்துரைக்கும் போதே துருவனின் அழுகுரல் கேட்டது…

” அவனுக ஆத்தாகாரி அங்கு ரூமில் தான் யசோம்மா இருக்கிறாள் …. நான் போய் பார்க்கிறேன்  … நீ உதிக்காவிடம் பேசு !!!”

என்ற பிரணாவ்

” உதிக்கா குரூப் வீடியோ கால் கனெக்ட் பண்ணு …. நானும் வருகிறேன் ” என்று சொன்னபடி தனது அறைக்கு சென்று தனது போனை இயக்கினான்….

இளைய மகனின் அழுகையை

ஓய்த்திருந்தவள் கணவன் கைபேசியில் உரையாடுவதை கேட்டு

 ” உதிஅண்ணியா????” என்று கேட்க

” ஆமாம்டி பஜாரி …. இரு வருகிறேன் ” என்றபடி தன் மனைவி மகனிடத்தில் சென்றான்….

மிட்டுவை பார்த்த உதிதா குட்டிமருமகனை செல்லம் கொஞ்சியவாறு போனை அப்படியே வைத்துவிட்டு ஹார்லிக்ஸ் கலக்க

” என்னடி கலக்குகிறாய்????” என்றார் யசோதா…

” இப்போதுதான் அம்மா சாப்பிட்டேன்…. அதற்குள் பசிக்கிறது….

லைனில் இரு, இதை கலந்துவிட்டு வந்து உட்கார்ந்து பேசுகிறேன் ” என்றவள் போனை இப்போது மேஜை மீது வைத்துவிட்டு ஹார்லிக்ஸை கலக்கும் வேளையில் மும்முரமாக ஈடுபட

இருநிமிடம் கழித்து வந்த யுகன் அடுப்படியில் தனித்து நின்ற மனைவியை பின்புறமாக அணைத்து

” இப்போதே கண்டு கொள்ள மாட்டேன்கிறாய் ……

இதில் என் பையனும் வந்து விட்டால் நான் யார் என்று நீ கேட்டாலும் கேட்பாய் அம்மு!!!! ஒரு ரொமான்ஸ் ஹீரோவை ஆக்ஷன் கிங்காக மாற்றி வைக்கிறாய்”

குற்ற பத்திரிக்கை வாசித்ததோடு

மனைவியை தன்புறம் திருப்பி அவள் ஏதோ சொல்ல முற்படுவதற்குள்

” இனி ஒன்லி ரொமான்டிக் ஆக்ஷன் தான்!!!!” என்பது போல் அவள் அதரங்களை வலுக்கட்டாயமாக முற்றுகையிட்டிருந்தான்…..

சில நிமிட போரிலும் மனையாளின் எதிர்பினை உணர்ந்து விடுவித்தவன்

” ஏன் அம்மு நன்றாக இல்லையா????”

என்று கேட்க

” செம்ம சூப்பர் மாம்ஸ்!!!!” என்றிருந்தான் பிரணாவ்….

உடனே மனைவியை விடுவித்த யுகன் அடுப்படியில் சுற்றும் முற்றும் தன் கண்களை அலைபாயவிட்டபடி துலாவ

” ஹலோ மாம்ஸ்…. நாங்க இங்கே இருக்கிறோம் !!!!” போனிற்குள் இருந்து கத்தினான் பிரணாவ்….

” நீ  இங்கே என்ன மாப்பு பண்ணுகிறாய்???? ” அசடு வழிந்த போதும் அதனை மறைத்து அழகாக சிரித்தபடி வினவினான் யுகன்..

Advertisement