Advertisement

அபே மூர்க்!!!!!

தேரே ஸே பாத் கர் ரஹி ஹூன்….

மு மெயின் கியா குசகே பைடா ஹை??????

(அறிவு கெட்டவனே !!!!

உன்னிடம் தானே பேசி கொண்டிருக்கிறேன்….

வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திருக்கிறாய்????)

மனைவியின் தாய் மொழியை கேட்டிருந்தவன்

அவளுக்கான பதிலை நேராக அதரங்களுள் செலுத்த விரும்பி அழுத்தமான கால் தடங்களை அவளை நோக்கி வைக்க

கணவன் செய்ய போகும் காரியம் உணர்ந்து

அது மனதிற்கு பிடித்த செயல் தான் எனும்

போதும்

அவன் நெஞ்சில் கை வைத்து தடுத்து

” அங்கேயே நில்லு பிரணாவ் அத்தான்!!!!” என்றாள்……

அப்படியே நின்றவன் இவ்வளவு நேரம் அவள் கொட்டி தீர்த்த காதலை

ஒற்றை பார்வை வீச்சில் சமன் செய்ய

அவனை தடை செய்திருந்த அவளது பிடி தானாக நழுவியதோடு பார்வையும் நாணத்தால் தாழ்ந்தது…….

அவளை நெருங்கியவன் தாடை பிடித்து நிமிர்த்தி, தரை தொட்ட அவள் பார்வையை தன்னுள் கலக்க செய்து

” பசிக்குதுடி பஜாரி!!!!” என்று கூற

அவளுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது….

காலை மதியம் இருவேளையும் சாப்பிட்டிராதவன் இப்போதும் சாப்பிடவில்லையா??????

” நான் போய் இட்லி எடுத்து கொண்டு வருகிறேன் பிரணாவ் அத்தான்….. ” என்று அவனை தாண்டி செல்ல முயன்றவளை

” எனக்கு இட்லி வேண்டாம்” என்று பின்னோடு அணைக்க

“சரி தோசை ஊற்றி எடுத்து வருகிறேன் !!!

” என்றபடி நெளிந்தாள் அவன் கைகள் பார்த்த வேலையின் மகிமையால்…..

” எனக்கு தோசையும் வேண்டாம்டி பஜாரி!!!!!” கணவன் கூற கேட்டு அவளது இடுப்பினில் கதை பேசிய அவன் விரல்களை சிறை செய்தவள்

” நாள் முழுவதும் பட்டினியா கிடப்பாய்????”

என்று சிறு அதட்டல் தொனியில் மொழிய

” யார் சொன்னார்கள் நான் பட்டினி கிடக்க போகிறேன் என்று??????

நான் தான்……..”

என்றபடி அவன் உதடுகள் சத்தமின்றி பேசிய பாஷையிலேயே அடுத்து மொழியவிருக்கும் அர்த்தம் புரிய

அவனுள் வாகாக ஒட்டி கொண்டாள்……

தன்னுள் புதைந்தவளை இறுக்கியவன் அவள் காது மடல்களில்

” மதியமே சோட்டுவை பக்கத்தில் வைத்து கொண்டு என்னால் என்னையே கட்டுபடுத்த முடியவில்லைடி பஜாரி …..

எதையாவது பேச ஆரம்பித்து மகனின் முன்னே வில்லனாகி விடுவேனோ என்று பயந்து போய் விலகி போனேன்!!!!!!!

எப்போதுடா அவனை தூங்க வைப்பாய் என்று காத்திருந்து ஓடி வந்தால்

அத்தானை வந்து இப்படி கட்டி பிடிக்காமல் ஓடவா பார்க்கிறாய்??????? “

 அவன் பேச்சு சத்தம் அப்படியே நின்று போனதோடு

அவர்கள் அறையில் கணவன் மனைவிக்கு உரியதான பாடம் கற்பிக்கும் ஓசை மெலிதான சங்கீதத்துடன் ஒலிக்க ஆரம்பித்தது…..

தடையின்றி முன்னேறிய தொடுகையில் சிலிர்த்த பெண்ணவள் விரும்பி தன் பெண்மையை உணர்ந்தவனிடத்திலேயே தன் பெண்மையை தொலைக்க

மழையினும் புனிதமானவளை

பூவினும் மென்மையானவள் என்று கண்டு கொண்டவனுக்கு நொடியும்  விலக மனமில்லாது போக

விடியும் வரையில்

 “பஜாரி!!!!”

எனும் அழைப்பினை மட்டும் திகட்ட திகட்ட பாய்ச்சி மீண்டும் மீண்டும் உயிர்த்தெழ

செய்திருந்தான்…….

உடலில் ஏற்பட்டிருந்த அசதியை

மனதுள் உண்டான உவகை வென்றிருக்க

அதிகாலையில் கணவனின் மார்பிலேயே துயில் கொள்ள ஆரம்பித்தவளை

” எழுந்திருடா பிரணாவு உனக்கு எல்லாம் அறிவே இல்லையாடா????” என்றபடி எழுப்பிவிட்டது அவனது அலார்ம் கிளாக்…..

மைத்ரேயிக்கு தன் தூக்கம் பறிபோன கவலையோடு கணவன் தான் இல்லாது போனதும் பழையபடி விதுல்யாவிற்காக அவன் பதிவு செய்திருந்த அலார்ம் டோனை மீண்டும் கேட்க ஆரம்பித்து விட்டானே என்பதும் வருத்த

தூங்கி கொண்டிருந்தவனின் தலையிலேயே அதை தூக்கி வீச போனாள்  ……

அப்போது அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த அலாரம் கிளாக் ” இப்படியே நீ தூங்கினால் பஜாரி வந்ததும் உன் மூஞ்சியில் ஒரு பக்கெட் தண்ணீரை ஊற்றி விடுவாள்!!!! இல்லாவிட்டால் அலார்ம்கிளாக் என்று கூட பாராமல் என்னை தூக்கி உன் மண்டையிலேயே  விட்டு எரிந்தாலும் எரிவாள்!!!!

அதற்காகவாவது எழுந்திருடா பிரணாவ் “

அடுத்த வாக்கியங்களை உறவாட

தன் செய்கையிலிருந்து பின் வாங்கியவள் தன் தூக்கத்தை தொலைத்து அடுத்த அரை மணி நேரத்திற்கு கணவன் தன்னை பற்றி  பதிவு செய்து வைத்திருந்த மொழிகளை உற்சாகத்தோடு கேட்கலாயினாள்……

பிறகு சோட்டுவிடம் அசைவு தெரியவும் அவசரமாக போய் குளித்து விட்டு வந்தவள் மகனின் நெற்றியில் முத்தமிட்டு

” இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இமயன் குட்டி !!!!!”

என்று வாழ்த்த

அப்போது கண்விழித்த பிரணாவும் மகனுக்கு

” ஹேப்பி பர்த்டே டா மவனே!!!!!!” தன் வாழ்த்தினை மகனுக்கு ஒரு முத்தமும் அருகில் அமர்ந்திருந்தவளுக்கும் அடுத்த முத்தத்தினையும் பதித்து பதிவு செய்தான்….

” போய் குளித்து விட்டு வா பிரணாவ்அத்தான்…. வீட்டில் எல்லோரும் கோவிலுக்கு போய்விட்டு வரலாம் ” என்றவளிடம்

” ம்ம்…. நீயும் ஒரு புடவை கட்டிக் கொள்டி பஜாரி !!!!!” என்றபடி எழுந்தான்….

” புடவை கட்டினால் நிறைய பின்……”

என்று கூறியவள் பாதியிலேயே தன் பேச்சை நிறுத்தி இதழ்களை மூடி கொள்ள

அதை ரசித்தவன் ” உன் அத்தானுக்கு எக்ஸ்பீரியன்ஸ் ஆகிவிட்டதுடி பஜாரி…..

எப்படி இருந்தது எஸ்டர்டே பெர்ஃபார்மன்ஸ்??????” என்று  கண்ணடித்து கேட்கவும் குங்குமமாக சிவந்த கன்னங்களுடனே மகனை தூக்கியவாறு கீழே இறங்கி ஓடியிருந்தாள் மைத்ரேயி….

தாத்தா பாட்டியரிடம் வாழ்த்துக்களையும் ஆசியையும் பெற்றிருந்த மகனை தூக்கியவன்

” லேட் ஆகிவிட்டது …. எல்லோரும் கிளம்புங்கள் போகலாம்….” எனவும்

அனைவரும் ஏதும் கேட்காது புறப்பட

அவன் பஜாரி மட்டும்

” எங்கே லேட் ஆனது பிரணாவ்

அத்தான்????” என்றிருந்தாள் அவன் கேட்டபடி ஒரு சேலையை கட்டி வந்து…..

” போய் பார்த்தால் தெரிய போகிறது!!!!” என்று புதிர் போட்டவன் ஒரு அரை மணி நேரம் செலுத்திய பகானியை நிறுத்தவும் பிரமித்தாள்……

ஏனெனில் அவளை வரவேற்ற இடம் அப்படி …..

” ரேயி குரூப்ஸ் ஆஃப் ஹார்ட் சென்டர்!!!!”

பெயர் பலகையையும் மருத்துவமனை கட்டிடத்தையும் கண்டவளுக்கு பேச்சு எழாமல் போக

” உன் அத்தானால் இப்போதிற்கு இது மட்டும் தான் முடிந்தது …… ஆனால் மாமா ஆசைப்படி இந்தியா முழுவதிலும் கூடிய சீக்கிரம் திறந்து விடுவோம் சரியா?????” என்றதும்

வெளியே அவள் கார் கதவினை திறக்க காத்து நிற்கும் வியானையும் அனன்யாவையும் பொருட்படுத்தாது

தன் புத்திரனின் முன்னே வில்லியாகி இருந்தாள் மைத்ரேயி…..

கணவனின் முகத்தை பற்றி முத்த மழை பொழிந்தவளை கண்டு

” பஜ்ஜிமா அப்பா ஹவ்வா சோத்து ஹவ்வா!!!!” என்று தன் பங்கிற்கு சோட்டுவும் தந்தைக்கு சந்தோசத்தினை முத்தப் பரிசாக வழங்கி வெளிபடுத்தலானான்…..

“நைட் கண்டின்யூ பண்ணி கொள்ளலாம்டி பஜாரி!!!! இப்போது எல்லோரும் வெயிட்டிங் ” என்றதும் சுய உணர்வு பெற்றவள் லேசான வெட்கத்தினை முகத்தில் பூசி கொண்டு இறங்க ,

விதுல்யா உட்பட அனைவரும் “ஹோ!!!!!!!” என்று கத்தி வரவேற்றனர்….

யுகன் சோட்டுவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் மைத்ரேயிக்கு மருத்துவமனை திறப்புவிழாவிற்கான வாழ்த்துக்களையும் தெரிவிக்க

” இதெல்லாம் தெரிந்தும்…. என்னிடம் நீங்கள் சொல்லவே இல்லை அண்ணா!!!” என்றிருந்தாள்….

மேலும் “உதிஅண்ணி யூ டூ புரூட்டஸ்!!!!” என்றபடி உதிதாவின் புறம் திரும்ப

” இந்த டாங்கி தான் சொல்லவே கூடாது என்று பிராமிஸ் வாங்கி விட்டான்…. சாரி மைத்தி” என்றுவிட்டு அவள் கையிலிருந்த பப்புமாவின் கரத்தினை இமயனின் கையில் சேர்த்து

” ஹாப்பி பர்த்டே மாமா!!!!” சோட்டுவிற்கான இனியாளின் பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்தாள்

உதிதா….

அதில் குஷியான சோட்டு ” பாப்பா பாப்பா ” என்று இனியாளை மெதுவாக தொட்டு பார்த்து சிரிக்க

” அப்படியே தூக்கி கொண்டு வந்துவிடுடா மவனே!!!!

 பப்புமாவை நம் வீட்டிற்கு இப்போதே தூக்கி போய்விடலாம்” என்று பிரணாவ் கூறிய விதத்தில் அங்கொரு சிரிப்பலை எழுந்தது…..

அப்போது அங்கு வந்த ஸ்ரீதீப் மைத்திக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு

பிரணாவை பார்க்க அவனே சோட்டுவை மனைவியிடத்திலிருந்து வாங்கி ஸ்ரீதீப்பிடம் ஒப்படைத்தான்….

முதன் முறையாக தூக்கியவன் லேசாக சிலிர்த்தபடி சோட்டுவிற்கு தன் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி தான் கொண்டு வந்திருந்த பொம்மையை

நீட்டினான்….

” சரி லேட் ஆகிறது ” ஓப்பனிங் செரிமனி ” தொடங்கி விடலாம்” என்று பிரணாவ் கூறவும் மைத்ரேயி தன் மாமனாரை திறந்து வைக்க கூப்பிட

பிரணாவோ ஸ்ரீதீப்பின் கரத்தில் கத்தரிக்கோலை நீட்டியிருந்தான்…

” வீட்டில் பெரியவர்கள் யாரிடமாவது கொடு பிரணாவ் ” ஸ்ரீதீப் தயங்க

பிரணாவின் செய்கையில் நெகிழ்ந்த வியான்

” பாஸ் எது செய்தாலும் கரெக்டா இருக்கும் நீ கட் பண்ணு மச்சி!!!!!” என்று

பிரணாவை வழக்கம்போல் கட்டிபிடிக்க

” கட்டிபிடிக்க ஒரு ஆள் கிடைத்தும் பிரணாவை நீ விட மாட்டாயா வியான்!!!!”

என்றிருந்தாள் மைத்ரேயி தன் நண்பனிடம் மெதுவாக…..

பின் கதிரேசனும் கூட ” மைத்தி நன்றாக இருக்க வேண்டும் என்று எங்களை விடவும் முதன்மையாக நினைக்க கூடியவன் நீ தான்….. நீயே அவளை வாழ்த்தி திறந்து வைப்பா!!!” என்று ஸ்ரீதீப்பிடம் கூற

மறுக்க வழியில்லாதவன் கத்தரிக்கோலை சோட்டுவின் கையில் திணித்து இரண்டு பேருமாக அங்கு கட்டியிருந்த ஊதா நிற ரிப்பனை கட் பண்ணி திறப்பு விழாவை சிறப்பாக நடத்தி கொடுத்தனர்…..

அங்கு வந்திருந்தவர் அனைவரும் மாலை சோட்டுவின் பிறந்த நாள் விழாவிற்கும் அழைக்கபட

பிரணாவின் மைந்தனுக்கு நாமும் நம் வாழ்த்தினை தெரிவித்து

விடைபெறுவோம்……

*****சுபம்*****

Advertisement