Advertisement

தன் கையில் திணிக்கப்பட்ட பத்திரத்தை பார்த்திராதவள்

” அப்புறம் படிக்கிறேன் பிரணாவ் அத்தான்….

இப்போது கொஞ்சம் வேலை இருக்கிறது!!!”

என்றபடி அடுப்படியை நோக்கி தன் அடிகளை எடுத்து வைத்திருந்தாள்….

பிரணாவை மருத்துவமனையில் கட்டிகொண்டு ‘அத்தான்’ என்று கூப்பிட்டிருந்தவள்

அதன் பின்  உரையாடும் போதெல்லாம் அவன் ஆசைபட்ட பிரத்யேக அழைப்பை தவறாமல் உயபோகப்படுத்தினாள் …..

ஆனால் அதை ரசித்து ஏற்று கொள்ளும்

மனநிலையில் பிரணாவ் தான் இல்லை….

மைத்ரேயியின் பத்தாயிரம் வார்த்தைகளுக்கு வெறும் தலையசைப்பு அல்லது அத்திபூத்தாற்போல் ஓரிரண்டு மொழிகள்!!!

கணவனுக்கு சோட்டுவின் பிறப்பை பற்றி மறைத்ததால் உண்டான  கோபம் இன்னும் மறையவில்லை போலும் என்று எண்ணியிருந்தவளுக்கு அவனது தலையசைப்பே தித்திக்க தான் செய்தது….

அப்படி பேசிராதவன் திடுதிப்பென ஒரு பேப்பரை நீட்டுகிறான் என்றால் அது கண்டிப்பாக ஏதோ முக்கியமானதாக இருக்கும் என்று நினைத்தவளுக்கு கனவிலும் அது விவாகரத்திற்கான பத்திரம் என்பது தெரியாது…

வீட்டிற்கு அழைத்தவனை வரவேற்றுவிட்டு படிக்கலாம் என்று நகர்ந்தவளிடம்

” இதை படித்து பார்த்தாயெனில் அந்த கிட்சனிற்குள் போக வேண்டிய அவசியமே இருக்காது!!!!”

கணவனின் அழுத்தமான சொற்களில் மைத்ரேயி திடுக்கிட ஸ்ரீதீப் துணுக்குற்றான்….

” பிரணாவ் நான் சொன்னதை சீரியஸாக எடுத்து கொள்ளாதே…..

மனதார சொல்கிறேன்  !!!

இந்த வீடும் உன் குடும்பமும் மைத்திக்கு கிடைத்திருப்பதில் அவளை விட எனக்கு நிறைவாக இருக்கிறது …..

ஒருவேளை அவள் என்னை கல்யாணம் செய்திருந்தால் அவள் சந்தோசமாக இருப்பாளோ இல்லையோ இப்படி பாதுகாப்பாக இருந்திருக்க முடியாது!!!!

சோட்டுவிற்கும் உனக்குமான பந்தத்தை நேரில் பார்த்து தெரிந்து கொண்டேன்….

சோட்டு மைத்தியை விட்டு கூட இருந்து விடுவான் ஆனால் உன்னை விட்டு சுத்தமாக அவனால் முடியாது!!!

இவை எல்லாவற்றையும் விட……

இதை என்னால் சொல்ல கூட முடியவில்லை….” வெளிவந்த விரக்தியான சிரிப்பை மறைத்த ஸ்ரீதீப் தொடர்ந்தான்…..

“வியான் தான் ஓட்டுவான்!!!

‘நீ என்ன ஃபாதர் தெரசா வா மச்சி?????

மைத்திக்கும் லவ்வுக்கும் செட் ஆகவில்லை என்றால் நாம் வேறு பெண் பார்ப்போம்டா’ என்பான்!!!!!

அப்படி என்னிடம் அவளுக்கு காண பெறாத காதல் உன்னை பார்க்கும் சமயமெல்லாம் அவள் கண்களில்

வழிந்தோடுகிறது!!!

தயவுசெய்து அவள் காதலுக்காகவாவது அவளை பிரிந்துவிடாதே பிரணாவ் ” தன் காதலியின் காதலுக்காக அவள் கணவனிடம் வேண்டினான் ஸ்ரீதீப்….

ஆனால் அதில் ஒரு சொல் கூட மைத்ரேயியின் செவிகளை எட்டிய பாடாக தெரியவில்லை ….

 சோட்டுவை பற்றி மறைத்ததற்காக பிரணாவ்  வழங்கிய பரிசினையே வெறித்து பார்த்திருந்தவளின் கரம் பற்றி

” மைத்தி என்றென்றும் உன்னுடையவள் பிரணாவ் …..

இவளை விலகிவிடு என்று கூறியது எவ்வளவு பெரிய மடத்தனம் என்று புரிந்து கொண்டேன்!!!

இரண்டு பேரும் என்னை மன்னித்து விடுங்கள் ” என்றபடி பிரணாவின் கரத்தோடு இணைக்க

தன் கரத்தினை வேகமாக உருவி கொண்டவள்

” ஸ்ரீதீப் சொன்னதற்காக தான் என்னை டிவோர்ஸ் செய்ய நினைத்தாயா பிரணாவ் அத்தான்??????????”

என்றாள் நம்பாத தொனியில்  …

இரண்டு வாரங்களாக கடைபிடித்த மௌன விரதத்தை பிரணாவ் தொடர

“சொல்லு பிரணாவ் அத்தான்….

 உன் பையனுக்காக என்னை வேண்டாம் என்று நினைத்தாயா??????

அன்று  நான் விளையாட்டிற்கு தான் கேட்டேன்…….

உனக்கு சோட்டுவை பிடிக்குமா இல்லை என்னை பிடிக்குமா என்று!!!!

ஆனால் அதற்கு பதிலாக சோட்டுவிற்கு

முன்னால் நீ எல்லாம் தூசு என்று விரட்டிவிட பார்க்கிறாய்….

அப்படிதானே ???????” குரலில் அப்பியிருந்த வேதனையை கண்டும் கல்லாகி சமைந்து போனான் பிரணாவ்….

நடப்பது அனைத்தும் குடும்பத்தினருக்கு குழப்பமும் புதிருமாக இருக்க

“என்ன பிரணாவ் இதெல்லாம் ?????”

கதிரேசன் கேட்டிருந்தார்…

” அப்பா நான் மைத்தியை கல்யாணம் செய்து கூட்டிவந்தபோது எப்படி அவளை உள்ளே அனுமதித்தீர்களோ அப்படியே இப்போதும் அவளை அனுப்புவதற்கு தடை நிற்காதீர்கள்!!!!”

” என்னடா பிரணாவ் பேசுகிறாய் ?????

புத்தி கெட்டு போனதா????

இப்போது

அவள் கையிலிருக்கும் பேப்பரை நீயே கிழித்து போடுகிறாயா இல்லை நான் போடட்டுமா??????”

காஞ்சனா ஆவேசத்துடன் பொறிய

” வேண்டாம் அத்தை …..

எனக்காக யாரும் இனி எதுவும் பேச வேண்டாம்!!!

நான் போகிறேன்” என்றாள் திடமாக…….

சோட்டுவை பிரணாவின் அறையில் படுக்க வைத்த யசோதா

கீழே கேட்ட இறைச்சலில் ஓடி வந்து

” என்ன மைத்தி பேசுகிறாய்????

இது உன் வீடு… சோட்டு ????

அவனை பற்றி நினைக்க மாட்டாயா???

இப்போது தான் கொஞ்சம் தேறி வருகிறான்….

பிரணாவ் செய்யும் பிழைக்கு அவனை தண்டித்து பிரித்துவிடாதே!!

பேசி கொள்ளலாம்டாமா…..

இவன் எதற்காக இப்படி பேசுகிறான் என்று !!!!

இங்கு இத்தனை பேர் இருக்கிறோம் உனக்காக…. அப்படியெல்லாம் எங்களை விட்டு நீ போய்விட முடியாது” மருமகளிடம் கடைசி வாக்கியத்தை சற்றே கடுமையாக கூற

அவர் கைபிடித்தவள் ” சோட்டுவை நான் கூட்டி போகவில்லை யசோத்தை…..

அவன் நான் இல்லாமல் கூட இருந்துவிடுவான்!! ஆனால் கண்டிப்பாக அவன் அப்பா இல்லாமல் முடியாது….

எங்கள் திருமணம் முடிந்ததும் சோட்டுவின் பாதுகாப்பு கருதி அவனை சட்டப்படி தத்தெடுத்திருந்தான் பிரணாவ்….

அதே பாதுகாப்பு வளையுள் சோட்டு பத்திரமாக இருக்கட்டும்….

நீங்கள் பிரணாவை வளர்த்தது போல் என்

பையனையும் வளர்த்து விடுங்கள்!!!”

என்று கூறி உப்பு நீரை கன்னத்தில் வழிந்தோட விட்டவாறு அவசரமாக வெளியேறினாள் மைத்ரேயி..

இவையனைத்தையும் பார்க்க விரும்பாது திரும்பி நின்றவனின் காதுகள் மனைவியின் மொழிகளை கேட்டிருந்த போதும் ஊமையாகி போக

” பிரணாவ்  ….. எனக்கு எப்படியோ இருக்கு … போய் அவளை கூட்டிவாடா!!!!” இதயம் துடிக்க பதறினார் காஞ்சனா….

அப்போதும் பிரணாவ் எதுவும் சொல்லாது போக தன்னை கட்டுபடுத்த முடியாமல்  மகனை அவர்

ஓங்கி ஓர் அறை விட

அந்த சத்தத்தில் மைத்ரேயியின் கால்கள் கூட தானாக நின்றிருந்தது….

” நீ என் பையனே இல்லை பிரணாவ்…… அவள் இல்லாத வீட்டில் உனக்கும் இடமில்லை ” என்று  காஞ்சனா ஆவேசப்பட

” நானும் என் பையனும் எங்கேயும் போக மாட்டோம் …..

இங்கு தான் இருப்போம் !!!! ” என்று கூறியபடி படிகட்டுகளில் தாவியிருந்தான்….

ஸ்ரீதீப் கெஞ்சியதையோ இல்லை மற்றவர்கள் கத்தியதையோ அவன் பொருட்படுத்தவில்லை…..

கணவனின் செய்கையால் தன் இதயத்திலுள்ள இரத்தவோட்டமே நின்றுவிட உணர்ந்தவளுக்கும்

 அங்குள்ளோர் எவர் தடுப்பதும் புரிபடாமல் போக

அங்கிருந்து ஓடிவிட துடித்த கால்கள்

முன்படிகட்டுகளில் இறங்கும் சமயம்

 யுகன் அங்கு வீட்டினுள் நுழைந்திருந்தான்…..

தமையனாக அவதரித்தவனை காணவும் மைத்ரேயியின் அழுகை பெருக

நடந்தவற்றை யூகித்திருந்தவனோ

 ” வா மைத்தி …. போகலாம்!!!!!!!”

என்று அவள் கரம்பிடித்து அழைத்து சென்றுவிட்டான்…

ஸ்ரீதீப்பிற்கு அங்கு நிற்க முடியாமல் உடனே கிளம்பிவிட அனைவரின் உள்ளத்திலுமே சஞ்சலம் குடி கொண்டது….

இவை அனைத்திற்கும் காரணமானவனோ தூங்கும் மகனின் காலிற்கு அடியில் அமர்ந்து சோட்டுவை தொந்தரவு படுத்தாத வகையில் தன் முகம் புதைத்து

” அப்பாவை மன்னித்துவிடுடா மவனே!!!!!

உன் ஆத்தாகாரியை இங்கிருந்து துரத்தி அனுப்பி இருக்கிறேன் …..

நான் போ என்றால் போய்விடுவாளா??????”

என்று தன் கன்னத்தில் உருண்ட பெரிய மணித்துளியை சுண்டிவிட்டவன்

“நீ கவலை படாதே சோட்டு … அப்பா உன்னை பார்த்து கொள்கிறேன்!!!!” என்றான் உறுதியாக…………

மைத்ரேயியை எதிர்பாராது கண்டதும் ” வாடாம்மா!!!” தேவகி வரவேற்க

அவள் முகவாட்டத்தை கண்டு ” என்ன ஆனது யுகி ?????” என்றாள் உதிதா பதற்றத்துடன்….

” மாப்பு பற்றி தான் உனக்கு

தெரியுமல்லவா????

சோட்டு பற்றி மறைத்ததற்காக மைத்தியின் மீது கோபமாக இருக்கிறான்!!!!

 அதனால்….”

“பொய்!!!!!” என்றிருந்தாள் மைத்ரேயி  ….

” என்ன பொய்???” யுகனுமே ஆச்சரிய விழிகளோடு நோக்க

” நீங்களும் பொய் சொல்லாதீர்கள் யுகி அண்ணா …..

பிரணாவிற்கு என் மீது கோபம் தான்…. அதற்காக என்னை விட்டு பிரிந்து அவனாலும் இருக்க முடியாது…

இதில் ஏதோ இருக்கிறது….

அது கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது!!!” என்று யோசித்தவள்

எதையோ நிமிடத்தில் யூகித்த வண்ணம்

” என்.கே சாரா???? ” என்றாள்….

இந்த இக்கட்டான நிலையில் கூட

‘வேண்டாம் போய்விடு!!’ என்று துரத்தியவனின் மீது துளி கோபம் கொள்ளாமல் அவன் தரப்பிலிருந்து சிந்தித்த மைத்ரேயியை மெச்சுதலாக பார்த்த யுகன்

எதுவும் சொல்லாமல் ” நீ ரெஸ்ட் எடு மைத்தி !!” என்று கூற

கோபம் கோபமாக வந்தது அவன் அம்முவிற்கு….

மைத்ரேயியின் நிலை அவள் உயிரை உருக செய்திருக்க கணவனிடம் எப்படி விசயத்தை வாங்க வேண்டும் என்று நன்கு அறிந்திருந்தவளோ  அங்கிருந்து புறப்பட்டவனை

” ப்ளீஸ் யுகி!!!!!!” என்று நிறுத்தவும்

மனைவியை ” விடமாட்டாயா அம்மு ?????” என்று செல்லமாக முறைத்தபடி மைத்ரேயியை பார்த்து

” அண்ணா சொன்னதை கேட்க மாட்டாயா???

ஒரு இரண்டு மாதத்திற்கு மட்டும் இங்கு உன் பிறந்த வீட்டில் ரெஸ்ட் எடுத்து கொள்…

அதன்பின்னும் என் மாப்பு வெளியே போக சொன்னால் அப்போது பார்த்து கொள்ளலாம்

மாமன் மச்சான் கச்சேரியை!!!”

என்று விட்டு நகர்ந்தான்…..

மறைக்க வேண்டும் என்று இல்லை …..

என்.கே.. இப்போது தீவிரமாக பிரதீப் விசயத்தில் தன் மூக்கை

நுழைத்திருக்கவும் பிரணாவை சற்று ஜாக்கிரதையாக இருக்கும்படி அத்விக் கேட்டு கொண்டான் …..

அதிலும் சம்பந்தமே இல்லாமல் ஸ்ரீதீப்பின் சிகிச்சை பற்றி தெரிய நேர்ந்தால் சர்ச்சை தான்!!!!

என்ன நடந்தாலும் ஸ்ரீதீப் பிரணாவிற்கு ஆதரவாக தான் இருப்பான் எனும் பட்சத்திலும்

 மைத்ரேயியை பற்றியும் அவள் மகனாக சோட்டுவை பற்றியும் என்.கே அறிய விழைந்தால் ஏற்படும் சிக்கலை முன்கூட்டியே தடுத்து கொள்ளலாமே????

பிரதீப் வழக்கு முடியும் வரையிலாவது ஜாக்கிரதையாக என்.கே விற்கு சிறு துருப்பு சீட்டையும் விட்டு வைக்காது

‘வருமுன் காப்பதே நலம்’

எனும் பழமொழிக்கு ஏற்ப நடந்து கொள்வது தான் புத்திசாலி தனம் என்று

எண்ணிய மாமனும் மச்சானும் சேர்ந்து முடிவெடுத்தது தான் இந்த இரண்டு மாத கால டிவோர்ஸ்!!!!!

வீட்டினருக்கு பிரதீப் பற்றி எதுவும் தெரியாத பட்சத்தில் அவர்களுக்கும் எந்த உண்மையும் விளக்கபடவில்லை…..

இரண்டு மாதகால பிரிவை பற்றி தன்மையாகவே எடுத்துரைத்திருக்கலாமே??????

மழையில் முளைத்த காளானாக தன்

கணவனின் வார்த்தைகளால் முளைத்த புதியதொரு கோபத்தினை சுமந்தபடி அந்த இரண்டு மாத கால பிரிவினை நெட்டி தள்ள தான் முடிவெடுத்திருந்தாள் பிரணாவின் பஜாரி…..

ஆனால் அவளால் அந்த இரவினை கூட அப்படி வெற்றிகரமாக போக்கியிருக்க முடியவில்லை …..

சோட்டு மருந்து குடித்தானா?????

அத்தையையும் யசோத்தையையும் டிரில் வாங்கு வானே????

பிரணாவ் அத்தான் எப்படி சமாளிப்பா……?????

நீ கோபமாக இருக்கிறாய்டி பஜாரி உன் அத்தானை பற்றி எண்ணி பார்க்காதே!!!!

என்று அதட்டிய மனசாட்சியை புறம் தள்ளியவள் அவன் நினைவுடனே அந்த இரவினை அரும்பாடுபட்டு கடத்தியிருந்தாள்…..

அடுத்த நாள் காலையில் தைராய்டு மாத்திரையோடு தன்னை எழுப்ப வந்தவளை கண்டதும்

” எனக்கு வேண்டாம் உதிஅண்ணி ….

யார் இதை உங்களிடம் கொடுக்க சொன்னானோ அவனே வந்து கொடுக்கும் வரை எனக்கு வேண்டாம்!!!!!” என்று கூறியபடி

கணவனின் பப்புமாவை தூக்கி

மைத்ரேயி கொஞ்ச

” அதுவரை உன் உடம்பு பத்திரமாக இருக்க வேண்டாமா ?????

ஒழுங்காக சாப்பிடு மைத்தி !!!!

உனக்கு அப்படி நான் கொடுப்பது பிடிக்கவில்லை எனில் பரவாயில்லை ….

கஷ்டபட்டாவது முழுங்கு!!!!”

என்று அவள் வாயில் மாத்திரையை திணித்து விட்டிருந்தாள் உதிதா….

” உதிஅண்ணி நான் அப்படி சொல்லவில்லை …..

நம் வீட்டில் ஒவ்வொருத்தருமே எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்…..

சுமி தான் தைராய்டு எனக்கு வந்ததிலிருந்து விடியற்காலையில் அவள் எழுந்ததும் என் வாயில் இதை திணித்து விட்டு செல்வாள்…..

அப்படி பாசத்தை கொட்டியவளுக்கு நான்

செய்த கைம்மாறு???????

பிரசவத்தில் கூட அவளை என்னால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே உதிஅண்ணி!!!!

அன்றே முடிவு செய்து விட்டேன்…. நான் ராசி இல்லாதவள் !!!! இனி எக்காரணம் கொண்டும் லேபர் வார்டு பக்கம் ஒரு டாக்டராக தலை வைத்து படுக்க கூடாது என்று !!!

ஆனால் உங்கள் பிரசவத்தினை  எதிர் கொள்ளும் வாய்ப்பு சூழ்நிலை காரணமாக அமைந்தது …..

 இதிலும் என் ராசி காரணமாக தோற்று விடுவோமா என்று அஞ்சி தயங்கினேன்…..

அப்போது தான் இதில் நமக்கு வெற்றி கிடைத்தால் என் சுமியையே மீட்டெடுப்பதாக ஒரு மாயை என்னுள் தோன்ற

நம் பப்புமா பத்திரமாக என் கையில் வந்து சேர்ந்தாள் ….

எனக்கு நீங்களும் சுமியும் வேறுவேறில்லை உதிஅண்ணி!!!!” என்று கூற சின்னவளை தன்னோடு அணைத்து கொண்டாள் உதிதா….

இரண்டு மாதங்களும் இரண்டு யுகங்களாக நகர மறுக்க, கடைசி மாத கையெழுத்தினை கமிஷனர் ஆஃபிஸில் போட்டு முடித்திருந்த பிரணாவ் யுகனை அழைத்திருந்தான்…..

தன்னருகில் அமர்ந்து தன் இனியவளோடு விளையாடி கொண்டிருந்தவளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே போனை உயிர்ப்பித்திருந்தான் யுகன்…

” சொல்லு மாப்பு….. “

…………

” எங்கே அடி பட்டது ????” லேசான

பதற்றத்துடன் யுகன் கேட்ட விதத்தில் எழுந்து விட்டாள் மைத்ரேயி ……

பிரணாவ் கூறிய பதிலில் சற்றே திருப்தியான குரலில் ” பார்த்து வா மாப்பு !!!” யுகன் மொழியவும்

” நான் கிளம்புகிறேன் அண்ணா…..

எனக்கு இப்போதே அவனை பார்த்தாக வேண்டும்!!!!” கண்களில் குளத்தை தேக்கி வைத்தபடி மைத்ரேயி வினவினாள்….

” மாப்புவிற்கு ஒன்றுமில்லை மைத்தி….  லேசாக ஸ்லிப் ஆகிவிட்டானாம்….. அதை தான் கூறினான். இப்போது ஃபிளைட் ஏற போகிறான் மா….

இன்னும் ஒரு மணி நேரத்தில் சென்னை வந்து விடுவான்!!!!

அவன் வந்ததும்……” என்ற யுகனின் வாக்கியத்தை முடிக்க கூட விடாமல்

” அது வரை என்னால் முடியாது அண்ணா….

என்னை கொண்டு போய் அங்கு வீட்டில்

விடுங்கள்!!!!

பிரணாவ் வந்த உடனேவாவது நான் பார்க்க வேண்டும்…..” என்றவளை மறுக்க முடியாமல் அவள் வீட்டிற்கு கூட்டி போயிருந்தான் யுகன்…..

இரண்டு மாதங்கள் கழித்து அன்னையை பார்த்திருந்த இமயன் பரவசத்தில்

” பஜ்ஜி மா!!!!!!!!!!!!!!!!!!!”

என்றபடி இரு அடி எடுத்து வைக்க

ஓடி சென்று மகனை தூக்கி முத்தமழை பொழிந்திருந்தாள் மைத்ரேயி……

அன்னையின் இரு கன்னங்களிலும் மாறி மாறி

 ‘ ஹவ்வா ‘ வைத்த மைந்தன் மீண்டும் அவள் கன்னம் பற்றி

” பஜ்ஜிமா!!!!!!!” என்றான்…..

” அவங்க அப்பா  கூப்பிடுற மாதிரியே கூப்பிடுகிறான் பாருங்கள் அக்கா!!!!” காஞ்சனாவின் காதில் கூறிய யசோதா

மருமகளை கட்டி அணைத்து வரவேற்று

“‘அம்மா’னு கூப்பிடுடா சோட்டு பையா!!!!” என்றார் பேரனிடம்  …..

” மாத்தேமாத்தே அசோபாட்டி!!!!” என்று மறுப்பாக தலையசைத்தபடி உறவாடிய மகனின் புதிய பாஷைகளில் லயித்தவள் தன் அத்தைகளோடு கணவனின் வருகைக்காக காத்திருந்து நேரத்தை போக்கலானாள்…..

மும்பையிலிருந்து நேராக யுகனின் வீட்டை அடைந்தவன்

 அங்கு தனது பஜாரி இல்லாது போனதும் ஏற்பட்ட ஏமாற்றத்தினை மறைத்து

தனது வீட்டிற்கு பகானியை செலுத்தினான்….

மகனுக்கு சாதம் ஊட்டி முடித்தவள் அவனை தூங்க வைக்க மாடி ஏற

 தங்கள் அறையை பார்த்து அப்படியே மலைத்து போய் அவளது அத்தானை வசியம் செய்யும் செவ்விதழ்களை சற்றே அகல விரித்தபடி நின்றாள்  …

Advertisement