Advertisement

அரை மணி நேரம் கண் விழிப்பதும் பின் மருந்தின் தாக்கத்தால் உறங்குவதுமாய் இருந்த மகனை பார்ப்பதற்கே மைத்ரேயியின் நெஞ்சு விட்டு விட்டு வெடித்தது….

அவள் ஏங்கியதை விடவும் பன்மடங்கான பாசத்தை பிழிந்தனர் பிரணாவின் குடும்பத்தினர் …..

போதாத குறைக்கு யுகன் ‘அண்ணன்’ எனும் பந்தத்தை முன்வைத்து அவளுக்கு அரணாகி நின்றான்….

ஆனால் இவை எதையுமே கொண்டாட முடியாத துர்பாக்கியசாலியாக போனவள் முக்கால் வாசி நேரம் தன் எண்ணங்களை மகனிடம் ஒப்படைத்திருக்க

எஞ்சியிருந்த கால் மணி நேரத்தை

கணவனின் பஜாரி!!! எனும் அழைப்பினுள்ளும் அவளுக்காக அவன் உதிர்த்த பேச்சுக்களிலும்

ஓட்டினுள் புகுந்த ஆமையாக தன்னை திணித்து கொண்டாள்….

விதுல்யாவும் அவளது டியூட்டிக்கு விடுப்பு எடுத்து கொண்டு அதே மருத்துவமனையில் உற்ற தோழியாய் மைத்ரேயியின் கரம் பற்றி  துணை நின்றாள்….

இவை அனைத்தையுமே நடை பிணமாக யாருக்கோ யாரோ கூறும் ஆறுதல் மொழிகளாக எதிர்கொண்டவள்

அடுத்த நாள் இரவு இவள் ஒருத்தி இருக்கிறாள் என்பதையே மறந்து மருத்துவரின் அறைக்குள் ஓடிய கணவனை காணவும் துணுக்குற்றாள்…..

உடனே எழுந்து அவன் பின்னோடு ஓடியவளுக்கு அங்கு பிரணாவ் பதறியபடி

டாக்டரிடம் கத்தியதை கேட்க நேர்ந்தது……

” குறைந்த பட்சம் ஒரு மாதமாவது ஆகும் என்று மேயோ கிளினிக்கில் கை விரித்து விட்டனர் டாக்டர்!!!!!

இப்போது நான் என்ன செய்வது ????

சொல்லுங்கள் டாக்டர்…. நான் என்ன செய்து என் பையனை மீட்க போகிறேன்?????”

”  சார்…. நீங்கள் இருவரும் பேபியின் பயோலாஜிக்கல் பேரண்ட்ஸ் என்று நினைத்து தான் உங்களையே போன் மேரோ டெஸ்ட்டையே எடுக்க சொன்னேன்!!!!

தாய் தந்தை கூட பிறந்தோர்களிலேயே அனைவரது எலும்பு மஜ்ஜையும் அனைவருக்கும் எளிதாக பொருந்திவிடாது  ….

அப்படியிருக்க நாம் கேட்டு தான் பார்க்க முடியும்…. எமர்ஜென்ஸி பெயரில் சோஷியல் மீடியாவில் டோனர் கிடைக்க

வாய்ப்புள்ளதா என்று ஆராயலாம்!!!”

டாக்டர் கூறியதற்கு ” சரி டாக்டர் அப்படியும் ஒரு வாரத்தில் டோனர் கிடைக்கவில்லை என்றால்????

மாற்று சிகிச்சைக்காக வழி ஏதாவது இருக்கிறதா??????” என்று கேட்க

இல்லை என்று கைவிரித்தார் மருத்துவர்…..

ஐயோ !!!!!! நான் இப்போது என்ன செய்ய போகிறேன்???????????

இதற்காக தான் என்னை புறக்கணித்தாயாடா மகனே??????

உனக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டதோ?????

முடிந்தால் என் உயிரை காப்பாற்றிவிட்டு என்னை நெருங்கு அப்பா!!! என்று சொல்லாமல் சொன்னாயாடா?????

உனக்கு உன் அப்பாவின் மீது அத்தனை நம்பிக்கையா????

கண்டிப்பாக என் உயிரை பணயம் வைத்தாவது உன்னை மீட்பேன்!!!!! என்றொரு சபதம் மேற்கொண்டவன்

ஆனால் எப்படி?????

குழம்பி தவித்தான்…..

ரத்த பந்தமான பஜாரியின் எலும்பு மஜ்ஜையே பொருந்தாத போது

இனி நான் என்ன செய்வேன்????? என்று பல விதமாக தன் சிந்தனையை அலைபாயவிட

தானாக வந்து விழுந்தான் ஸ்ரீதீப் பிரணாவின் எண்ணச் சுழலுள்!!!!

சடாரென எழுந்தவன்

அவ்வளவு நேரம் தயக்கமாக பார்த்திருந்துவிட்டு அப்போதுதான்

 ” என்னிடம் பேசு பிரணாவ்  …… ப்ளீஸ்!!!!

நீ பேசாமல் பைத்தியம் பிடிப்பது போல் இருக்கிறது!!!!” என்றொருத்தி புலம்பி தவிப்பதை கூட பொருட்படுத்தாது

சென்று விட்டான்….

நேராக என்.கே கட்சி அலுவலகத்திற்கு விரைந்தவன் ” ஸ்ரீதீப்பை பார்க்க வேண்டும்!!!!” என்று கேட்க

அங்கு நின்ற சில வெள்ளை வேட்டி மனிதர்கள்

” டேய் இவன் தான்டா இரண்டு நாட்களுக்கு முன்பு நம்ம சின்ன ஐயாவை ஏர்போர்ட்டில் தாக்கியவன்!!!!!”

என்று ஒன்று கூடி விட்டனர்…..

அவர்களுக்கு இன்னும் பிரதீப் வழக்கில் சம்பந்தப்பட்டவனும் இவன் தான் என்று தெரிந்திருக்கவில்லை…..

அது மட்டும் தெரிந்திருந்தால் அவனை அப்படியே தூக்கி என்.கே வின் முன் சுருள

விட்டிருப்பர்….

இப்போது சமீப காலமாக என்.கே தன் மூத்த மகனின் சாவிற்கு காரணமானவனை  கண்டுபிடித்து பழிக்கு பழி வாங்காமல் விட மாட்டேன் என்று கமிஷனர் அத்விக்கிடம் சூளுரைத்ததன் பேரில் அவர்கள் பிரணாவை தேடும் வேட்டையில் தான் ஈடுபட்டிருந்தனர்….

ஆனால் இப்போது அவர்கள் ஸ்ரீதீப்பிடம் பிரணாவ் நடந்து கொண்ட முறைக்கு

எகத்தாளமாக பதிலளித்து வேண்டுமென்றே வம்பை வளர்க்கும் சமயம்

ஸ்ரீதீப்பின் கார் அலுவலகத்தை வந்தடைந்தது…..

பிரணாவை அங்கு எதிர்பாராதவன் தன் கண்ணாடியை மட்டும் இறக்கி விட்டு

” என்ன பிரச்சனை ?????” என்று கேட்க

” உங்களை தான் சின்னய்யா பார்க்க

வேண்டும் என்று சொன்னான்!!!!!” என்றான் ஒரு வெள்ளை வேட்டிக்காரன்…..

புருவங்கள் முடிச்சிட்ட போதும் ” முடியாது என்று சொல்லி அனுப்பிவிடு!!!!” என்று கூறிய ஸ்ரீதீப் தன் காரை உள்ளே செலுத்த

அப்படியே பிரேக் போட்டு நிறுத்தவும்

” என்னங்கய்யா?????” என்றபடி ஓடி வந்திருந்தான் சற்று முன் பதிலளித்தவன்….

” என்ன நடந்தாலும் அவன் மேலே யாரும் கை வைக்க கூடாது !!!!” என்ற கட்டளையை பிறப்பித்தவாறு ஸ்ரீதீப் நகர

” தயவு செய்து நில்லு ஸ்ரீதீப் …..

உன்னிடம் ஒரு முக்கியமான……”

பிரணாவின் சொற்கள் முழுதாக அவன் செவிகளை சென்றடையும் முன்னே அலுவலகத்திற்குள் தன் வேக நடையை எடுத்து வைத்திருந்தான்….

” சின்னஐயா சொன்னதால் நீ தப்பித்தாய்…. இல்லாவிட்டால் நடக்கும் கதையே வேறு!!!

மரியாதையாக நீயே ஓடி போய்விடு “

தன்னிடம் எதிரொலித்த குரலில்

இது சரிபட்டுவராது என்று முடிவெடுத்த பிரணாவ் அடுத்த நொடியே வியானை அழைத்திருந்தான்…..

விசயத்தை கேட்டு பதறியவனாக பறந்து வந்திருந்த வியானை காணவும்

” எனக்கு ஹெல்ப் பண்ணு வியான்… ஸ்ரீதீப்பிடம் எப்படியாவது என்னை பேசுவதற்கு ஏற்பாடு செய்!!!”

முதன்முறையாக வியானை கட்டிகொண்டவனாக பிரணாவ் கேட்கவும்

ஒரு மாதிரி ஆகிவிட்டது வியானிற்கு …..

” என்ன பாஸ் இது ??????

சோட்டுவிற்கு ஒன்றும் ஆகாது!!!!” ஊக்கமளித்தவன்

அங்கிருந்தபடியே ஸ்ரீதீப்பை அழைத்தான்….

இவன் எதற்காக என்னை தேடி வர வேண்டும்?????????

அதுவும் அப்பா இவனை வலை போட்டு தேடி கொண்டிருக்கும் இந்த சமயத்தில்!!!!!

பிரணாவை ஸ்ரீதீப்பிற்கு பிடிக்காது எனும்போதும் பிரதீப் விசயத்தில் அவன் தன் தந்தையிடம் மாட்டி கொள்வதை அவன் விரும்பவில்லை  ……

பிரதீப் செய்திருந்த காரியத்திற்கு அவனை தன் கையால் கொன்று புதைத்திருக்க வேண்டும்…..

ஒருவேளை பிரதீப்  மைத்ரேயியை ஏதாவது செய்திருந்தால் கூட ஸ்ரீதீப் அவளை எப்படியாவது சந்தித்து அவள் மனதை மாற்ற முயன்றிருப்பானோ

என்னவோ?????

 அவள் அக்கா சுமித்ரேயியிடம் தமையன் நடந்து கொண்ட முறைக்கு அதுவும் தன்னால் தான் இப்படியானது என்று தனக்குள்ளேயே புழுங்கி மருகினான் ஸ்ரீதீப்….

அந்த தாழ்ப்புணர்ச்சி தான் மைத்ரேயியிடமிருந்து அவனை விலக செய்ததும் !!!!

ஆனால் ஏர்போர்ட்டில் பிரணாவை பார்த்ததுமே அவன் நடந்து கொண்ட முறைக்கு தான் எடுத்த முடிவு தவறோ????

என்ன நடந்திருந்தாலும் மைத்தியை தன் கைவளைவிற்குள் வைத்து பாதுகாத்திருக்க வேண்டுமோ ????

எனும் எண்ணம் தலை தூக்கி மனதை நெருடியது……

மைத்ரேயி சந்தோசமாக இல்லையோ ??????

அவளை இனி எப்படி மீட்பேன்????

என்று தவித்தவனுக்கு வியானின் அழைப்பை பார்க்கவும் புரிந்து விட்டது……

” அந்த பிரணாவ் பற்றி இருந்தால் தயவுசெய்து பேசாதே வியான்!!”

ஸ்ரீதீப் கத்தியபடி போனை வைக்க போகும் சமயத்தில்

” சோட்டு பற்றியதாக இருந்தால்??????”

வியானின் கேள்வியில்

” சோட்டு???? சோட்டுவிற்கு என்ன??? ” என்று பதறியபடி பிரணாவிடமே விரைந்து விட்டான் ஸ்ரீதீப்….

ஸ்ரீதீப்பை கண்டவன் மகனின் நிலையை எடுத்துரைத்து

” என் பையனின் உயிர் உன் கையில் தான் இருக்கிறது….

நீ என்ன கேட்டாலும் செய்கிறேன்!!!

உன் காலை பிடித்து ……”

காலில் விழ போக நகர்ந்து கொண்ட ஸ்ரீதீப் அவசரமாக தன் மூளையை கசக்கி

” காலில் எல்லாம் விழ வேண்டாம்…..

மைத்தியை விட்டு விலகி விடு !!! அதுபோதும் ” என்றான்….

வியான் இடைபுகுந்து “என்னடா உளறுகிறாய் ????

மைத்தி இதற்கு துளியும் சம்மதிக்க மாட்டாள்!!!!” என்று கத்த

” விடு வியான் ….. அது என் பொறுப்பு!!!

என் பையனை காப்பாற்றி கொடு” கையெடுத்து கும்பிட்டான் பிரணாவ்…..

” என்ன பாஸ் நீங்கள் இரண்டு அடி போட்டு இவனை இழுத்து செல்லாமல் இப்படி கெஞ்சுகிறீர்கள்?????”

ஆதங்கத்தோடு உரைத்த வியான்

நண்பனிடம் திரும்பி

” பாஸ்ஐ பற்றி நீ தப்பாக புரிந்து வைத்திருக்கிறாய் மச்சி ….

நான் சொல்வதை கொஞ்சம் கேளு!!!!” என்று பிரணாவை பற்றி எடுத்துரைக்க முயன்றான்…..

ஆனால் அதற்கு தயாராக இல்லாதவன்

” நாம் புறப்படலாம்!!!!” என்று கூற

மூவருமாக சென்னைக்கு பயணமாகினர்…..

ஸ்ரீதீப்பை நேரில் பார்க்கவும் தான் இவனது போன் மேரோ சோட்டுவிற்கு இணையாகுமே என்ற எண்ணமே தோன்றியது மைத்ரேயிக்கு…..

அப்படி மூளை மழுங்கடிக்க பட்டு நின்றவளின் கரத்தினை ஆதரவாக ஓடிவந்து பற்றி கொண்டான் வியான்…..

” பாஸ் சொன்னார்…. எல்லாம் சரியாகி விடும் மைத்தி !!!!” என்று வியான் கூற கேட்டு கணவனின் முகத்தை அவள் விழிகள் சுற்றி சுற்றி தேட

அவளை மறந்தவனோ ஸ்ரீதீப்புடன் மருத்துவர் அறையை அணுகியிருந்தான்…..

அரைமணி நேரத்தில் எடுத்த பரிசோதனையில் பொருத்தம் நூற்றிற்கு நூறு சதவீதமாக அமைந்து போக அடுத்த ஒரு மணி நேரத்தில் சிகிச்சைக்கான ஏற்பாட்டினை மேற்கொள்ளலாயினர் மருத்துவர்கள்……

அத்தனை உறவுகளும் மைத்ரேயியின் பக்கம் நிற்க அவளுக்கு ரொம்ப பிடித்தமான யசோத்தையின் தோளில் அவள் சாய்ந்திருந்த போதும்

சற்று தனியே இறுகி போய் நின்றவனிடத்திலேயே அவளது பார்வை தஞ்சமடைந்திருந்தது……….

நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நடந்தேறிய அறுவை சிகிச்சை முடிந்து டாக்டர் வெளியே வரவும்

அவர் கூற போகும் வார்த்தைக்காக நெஞ்சம் முழுவதும் பயத்தினை நிரப்பி மைத்ரேயி எழுந்து நிற்க

பிரணாவோ அவர் முன் ஓடி வந்து

 ” சோட்டு பிழைத்துவிட்டான் தானே ??????”

என்னும் கேள்வியை கண்களில் தேக்கி எதிர்கொள்ளவும்

அவன் தோள்பட்டையை தட்டி கொடுத்தவர் ” பேபி இஸ் அவுட் ஆஃப் டேஞ்சர் !!!!!” எனும் தகவலை  கூறி

அவன் உயிரில்லா உடம்பிற்கு ஜீவனளித்து துடிக்கச் செய்துவிட்டு அகன்றார்…..

அனைவர் மனதையும் விட்டு கலக்கம் பறந்தோடிய நிலையில் அவர்கள் மைத்ரேயிக்கு துணையாக அவள் தோள்தொட

அவளோ ஒருவரையும் உணராது தன்னை கட்டுப்படுத்த முடியாத வண்ணம் கணவனிடம் பாய்ந்து சென்று அவனை இறுக்க கட்டி கொண்டு அவன் மார்பை தன் வீடாக்கி வெடித்து அழலானாள்……..

மைத்ரேயியின் கேவல் அவள் குடும்பத்தினரை மட்டுமல்லாது அந்த தளத்தில் நின்றவர்களையே அசைத்து பார்க்க

பிரணாவோ தன்னவளின் திடீர் செய்கையில் அவளை விலக்க திராணியில்லாத போதும்

அவளை அணைக்கவும் விழையவில்லை…..

” நம்ம பையனுக்கு எல்லாம் சரி ஆகிடுச்சு பிரணாவ்அத்தான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!”

அவள் உதிர்த்த பந்த மொழியில் அவன்

கைகள் தானாக அவள் தலைகோத

அவளது உச்சந்தலையில் கன்னம் பதித்தவனோ

கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீரை மடை திறந்த வெள்ளமாக பாய்ச்சலானான்……

அதுவரை அவனது இறுக்கமான முகத்தை கண்டு அவன் அருகில் செல்ல தயங்கியவர் அனைவரும்

கணவன் மனைவியை சூழ்ந்து அவர்களுக்கு ஆதரவு அளிக்க……

அது எதையுமே உணரும் மனநிலையில் இருவரும் இல்லர்!!!!!!

அரை மணி நேரத்திற்கும் மேலாக தன்னவனின் கதகதப்பில் தன் உயிர் மூச்சினை சீராக்கி கொண்டவளின் அசைவு தெரிய

அவளை விட்டு விலகியவன்

மனைவியின் வற்றிய கண்ணீர் சுவடுகளை தாங்கியிருந்த கன்னத்தை

லேசாக தட்டி விட்டு எதுவும் பேசாமல் சென்று விட்டான்…..

கணவன் பேசாதது வருத்திய போதும்

நல்ல வேளை கட்டி பிடித்த போது அவன் தள்ளிவிடாது இருந்ததே அதிசயம் தன்னை தேற்றி கொண்டவள் மகனிடம் விரைந்து விட்டாள்…..

சோட்டுவையும் ஸ்ரீதீப்பையும் தனிஅறைக்கு மாற்றி இருந்தனர் மருத்துவர்கள்…..

அவசரமாக ஸ்ரீதீப்பிடம் விரைந்த பிரணாவ் அவன் கைபிடித்து

” ரொம்ப ரொம்ப நன்றி !!!!!

நீ இன்று எங்களுக்கு செய்த உதவிக்கான நன்றிக்கடனை நான் எப்படி உனக்கு திருப்பி செலுத்துவேன் என்று தெரியவில்லை!!!!!”

என்று அழுகை தெறிக்க கூறிய விதத்தில்

 ஸ்ரீதீப் தன் பேச்சை இழந்தான்…..

“விடுங்க பாஸ்…. ஸ்ரீ நம்ம பையன் தான்!!!!” அறையிலிருந்த வியான் தான் பிரணாவை அடக்க வேண்டியதாக போயிற்று….

அவனை தொடர்ந்து வந்த பிரணாவின் மொத்த குடும்பமும் ஸ்ரீதீப்பிடம் கைகூப்பி தன் நன்றியை செலுத்தி அவன் தலையில் ஆசி வழங்கிவிட்டு செல்ல

ஸ்ரீதீப்பிற்கு மைத்தியின் இன்றைய பாதுகாப்பான குடிலின் அருமைபெருமை விளங்கியது…..

கூடவே உறக்கத்திலிருந்த மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஸ்ரீதீப்பிடம் விரைந்த மைத்ரேயி அவள் பங்கிற்கு

” உன் நினைப்பே எனக்கு வரவில்லை ஸ்ரீ!!!!!

போன் மேரோவிற்கு அலைந்த வேளையில்

நல்ல வேளையாக பிரணாவ் யோசித்து செயல்பட்டான்….

இல்லாவிட்டால் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை!!! ” என்று தன் கணவனின் புகழாரத்தை சூடி தன் தரப்பினை மட்டும் விளக்கினாள்….

அவள் அவனுக்கு நன்றி உரைக்க வில்லை…..

அப்படி உரைத்து அவள் அவனிடம் பாகுபாட்டினை காட்டாது சோட்டுவிற்கும் அவனுக்குமான பந்தத்தை பங்கு போட விரும்பவில்லை!!!!

அதை உணர்ந்து கொண்டவன் ” சோட்டுவை பார்த்து கொள் மைத்தி !!!!!”

என்று மட்டும் கூற

” அது தான் பிரணாவ் இருக்கிறான் அல்லவா???? ” பெருமையாகவே கூறிவிட்டு நகர்ந்தாள்…..

இம்முறை அவளது பதிலில் மனநிறைவோடு ஒரு புன்னகையை

சிந்தியவன் அருகில் நின்ற தோழனிடம்

” நீ ஸ்டார்ட் பண்ணு மச்சி உன் பாஸ் புராணத்தை!!!!!”

என்றிருந்தான்…..

பின்னே ஸ்ரீதீப் பிரணாவிடம் மைத்தியை விட்டு விலக வேண்டும் என்று சொன்ன நொடியில் ஆரம்பித்த வியான் நிறுத்தாது அவன் காதில் பிரணாவ் பற்றிய சொற்பொழிவு வழங்க

மயக்க மருந்து கொடுத்த அந்த நான்கு மணி நேர அறுவை நேர சிகிச்சையின் போதும் கூட அதுவே எதிரொலித்தது…..

இப்போதும் தனியறைக்கு மாற்றிவிட்டதும் மீண்டும் தொடங்கியவன்

பிரணாவ் உள்ளே நுழையவும் தான் நிறுத்தியிருந்தான்…..

” இப்போது உனக்கே தெரிந்திருக்கும் மச்சி!!!!!” வியான் இன்முகமாக கூற

” பரவாயில்லை ….. நீ திரும்ப சொல்லு….

மைத்தி நன்றாக இருக்கிறாள் எனும் செய்தியை எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது!!!!” என்ற நண்பனை கட்டி கொண்டான் வியான்….

அறைவாசலில் நின்றிருந்தவனை பார்த்தவாறே தன் மகனிடம் சென்றவள் அவன் கண்விழிப்பதற்காக தவமிருக்க

அடுத்த பதினைந்து நிமிடங்களில் கண் விழித்திருந்த சோட்டு

கதவருகில் கைகட்டியபடி நின்ற தந்தையை பார்த்து பிஞ்சு கையை தூக்கி

” அப்ப்ப்ப்பா!!!!!!!!!!”

என்று கூற

அப்படியே மண்டியிட்டு சரிந்து விழுந்திருந்தான் பிரணாவ்…….

உடனே தன்னை நிலைப்படுத்தி கொண்டு மகனிடம் விரைய அவனோ மூன்று நாட்களுக்கு பிறகு தன் தந்தையின்

கன்னத்தில் பதித்து

” ஹவ்வா!!!!!” கொடுக்க

மகனின் முத்தத்திற்கு பல யுகங்களாக ஏங்கி தவித்தவன் போல் கண்ணீர் சிந்தி பெற்று கொண்ட பிரணாவ்

” தேங்ஸ்டா மவனே!!!!!” என்றிருந்தான்…..

இரண்டு வாரங்களாக  மருத்துவமனையில் உரிய மருத்துவம் மேற்கொண்டவர்கள் வீட்டிற்கு கிளம்பும் நாளில்

மைத்ரேயி வற்புறுத்தி ஸ்ரீதீப்பை தங்கள் வீட்டிற்கு அழைக்க

இத்தனை நாட்கள் ஒரே குடும்பமாக பழகிவிட்ட பிரணாவின் வீட்டினரும் கூப்பிட மறுக்க வழியின்றி அவர்கள் வீட்டை அடைந்திருந்தான் ஸ்ரீதீப்…..

சோட்டுவை தன் தோளில் சுமந்தபடி வந்த யசோதா அவனை படுக்க வைக்க

பிரணாவின் அறைக்கு செல்ல

” நீ உட்காரு ஸ்ரீதீப்… நான் குடிக்க ஏதாவது கொண்டு வருகிறேன்!!!” என்று அடுப்படியின்புறம் திரும்பியவளை தடுத்த பிரணாவ்

” இதை பிடி !!!!!” என்று அவள் கையில் விவாகரத்து பத்திரத்தை திணித்திருந்தான்…..

Advertisement